25.07.2025
டெல்லியில் தொடரும் இயக்கத் தலைவர்கள் மீதான
சட்டவிரோத கைது – சித்திரவதை – பாலியல் துன்புறுத்தல் மிரட்டல்!
கண்டன அறிக்கை
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய செயல்பாட்டாளர்கள் எத்மாம் மற்றும் பாதல், மாணவர்கள் குர்கிராத், கௌரவ் மற்றும் கௌராங் (பகத் சிங் சத்ரா ஏக்தா மன்ச்), வலரிகா (நசாரியா பத்திரிகை) மற்றும் சமூக ஆர்வலர் சாம்ராட் சிங் ஆகியோர் நியூ பிரண்ட்ஸ் காலனி போலீசால் வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளனர் . அவர்கள் தன் குடும்பத்தினரை சந்திக்கவும் வழக்கறிஞரை சந்திக்கவும் இருக்கக்கூடிய அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு நீதிபதியின் முன் நேர் நிறுத்தப்படாமலும் இருந்துள்ளனர்.
மேலும் அவர்கள் காவலில் இருந்தபோது அரசியல் கைதிகளாக நடத்தப்படாமல் நிர்வாணப்படுத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டும் இருக்கிறது. மேலும் அவர்கள் தொடர்ந்து போலீசால் இழிவுபடுத்தி கைது செய்யப்பட்டவர்களின் தலைகளை கழிவறைக் கிண்ணத்தில் மோதி உடைக்கவும் செய்துள்ளது போலீசு. கைது செய்யப்பட்ட பெண்கள் மீது இரும்புத் தடிகள் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டலையும் ஏவியுள்ளது டெல்லி போலீஸ்.
இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் சமூக செயல்பாட்டாளர்கள் போராளிகளுக்கு இதுதான் கதி என்று மிரட்டுகிறது பாசிச மோடி அரசு.
மாணவர்களின், மக்களின் தொடர் போராட்டங்களின் காரணமாக பாசிச மோடி அரசு அம்பலமாகி புழுத்து நாறிக்கொண்டிருக்கிறது. எத்தனை பேரை சிறையில் அடைத்தாலும் எத்தனை பேரை சித்திரவதைக்கு உள்ளாக்கினாலும் போராட்டங்கள் மீண்டும் எழும். பகத்சிங்கின் வாரிசுகளாய் மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தொடங்கும். போராட்டக் கனலில் பாசிச மோடி அரசின் அராஜகங்கள் பற்றி எரியும்.
சமூக செயல்பாட்டாளர்கள் மீதான பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் சமூக செயல்பாட்டாளர்கள் மீது சித்திரவதை நடவடிக்கைகளையும் பாலியல் துன்புறுத்தல் மிரட்டல்களையும் மேற்கொண்ட போலீஸ் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram