27.07.2025
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி
ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின்
தொடர் ஜனநாயக விரோதப் போக்குகள்
முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்!
பத்திரிகை செய்தி
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கு விசாரணைகளின் போதும் பொதுவெளியிலும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வந்திருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த போதும் கூட, பல்கலைக் கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு துணைவேந்தரை நியமிக்கும் வழக்கில், வேண்டுமென்றே தன் வரம்பை மீறி தடை விதித்த நீதிபதிகளுள் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களும் ஒருவரே.
அவருடைய செயல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அனுப்பிய புகார் மனுவானது திட்டமிட்டு கசிய விடப்பட்டுள்ளது. தன் மீது புகார் அளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனை, தொடர்பு இல்லாத ஒரு வழக்கில் அழைத்து மிரட்டியும் அவமதித்தும் உள்ளார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.
மேலும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
தன் மீதான வழக்கை தானே நீதிபதியாக இருந்து விசாரிக்க கூடாது என்ற குறைந்தபட்ச ஜனநாயக மாண்பு இல்லாத நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் மேற்கண்ட செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும், நடுவர்களும் நீதிபதிகளும் வழக்குரைஞர்களை தொடர்ந்து அவமதிப்பது, மிரட்டுவது போன்ற செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram