04.08.2025

இராஜஸ்தான், டெல்லி, அசாம், அரியானா உள்ளிட்ட
பாசிச பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில்
குறிவைக்கப்படும் மேற்கு வங்க இசுலாமியர்கள்!

கண்டன அறிக்கை

ராஜஸ்தான், டெல்லி, அசாம் உள்ளிட்ட பாசிச பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களில் அண்மைக்காலமாக வங்காள மொழி பேசும் இசுலாமியர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்து வருகின்றது.

அசாமில் உள்ள வங்காள மொழி பேசும் இசுலாமியர்கள் மீது பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

வங்காள மொழி பேசும் இசுலாமிய மக்களை மியா முஸ்லிம்கள் என்று இழிவுபடுத்தி ஒடுக்குகின்ற பணியை அசாம் மாநில பா.ஜ.க முதல்வரே மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் புலம்பெயர்ந்து பணியாற்றும் வங்காள மொழி பேசும் இசுலாமியர்கள் மீது அம்மாநில போலீசு தொடர்ந்து அடக்குமுறை செலுத்தி வருகின்றது. அம்மாநிலத்தில் வங்காள மொழி பேசும் இசுலாமியர்கள் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இதைப் போலவே பா.ஜ.க ஆளுகின்ற பல்வேறு மாநிலங்களிலும் மேற்கு வங்க இசுலாமியர்கள் குறி வைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

அமெரிக்காவில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான இந்திய ஊழியர்களை கை, கால்களில் விலங்கிட்டு விலங்குகளைப் போல துரத்தி அடித்தது அமெரிக்க அரசு. அதைக் கேள்வி கேட்கவோ கண்டனம் தெரிவிக்கவோ துப்பில்லாத பாசிச மோடி அரசு, வங்க மொழி பேசும் இசுலாமியர்களை திட்டமிட்டு வேண்டுமென்றே சட்டவிரோதமாக வங்கதேசத்துக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி உள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள், வங்க மொழி பேசியதாலேயே பழிவாங்கப்பட்டனர் என்பதை மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் வங்க மொழி பேசும் இசுலாமியர்கள் மீதான அடக்குமுறை உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக நாடு தழுவிய அளவில் உழைக்கும் மக்கள் மாபெரும் போராட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க