09.10.2025
பாலஸ்தீனத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்:
மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பு!
பத்திரிகைச் செய்தி
பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராக இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் நடைபெற்ற போராட்டங்கள், அந்தந்த நாடுகளை பாலஸ்தீனத்திற்கு ஆதரவு கொடுக்கவும் பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையைத் தடுக்கவும் அந்தந்த நாடுகளின் அரசை நிர்ப்பந்திக்கின்றன.
அந்தவகையில், தமிழ்நாட்டில் திமுக அரசு, பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்திருப்பதானது இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும். இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்ய முன்வராத முன்னுதாரணமிக்க நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்கிறது.
அதேவேளையில், பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஹமாஸ் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாகவும் இனப்படுகொலையைக் கண்டிப்பதாகவும் மேற்கத்திய நாடுகள் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன. இது, பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தைத் திசைதிருப்பும் சூழ்ச்சியாகும்.
ஆகவே, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற இருக்கும் தீர்மானமானது, ஹமாஸ் தலைமையிலான பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கவும், இஸ்ரேலை இனப்படுகொலை நாடு என அறிவித்து, அதன் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க இந்திய அரசை நிர்ப்பந்தித்தும், நெதன்யாகுவை போர்க்குற்றவாளி என இந்திய அரசு அறிவிக்கவுமான வகையில் நிறைவேற்ற வேண்டுமென்றும் மக்கள் அதிகாரக் கழகம் தமிழ்நாட்டு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
மேலும், சென்னையில் நடைபெறும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டிலிருந்து இஸ்ரேல் நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டுமென்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram