
16.11.2025
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! தோழமைகளே!
சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம் என்ற முழக்கத்தோடு, நவம்பர் 29ஆம் தேதி நடக்க இருந்த தோழர் ரவி (எ) செல்வகணேஷ், தோழர் ராதிகா மண ஏற்பு விழா ஒத்தி வைக்கப்படுகிறது. நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அமைப்பின் முதுபெரும் தோழர் இறந்துவிட்ட காரணத்தினால் மண ஏற்பு விழாவினை ஒத்தி வைக்கிறோம். திருமணம் நடத்துவதற்கான குறிப்பான தேதியை விரைவில் அறிவிக்கிறோம்.
மண ஏற்பு விழாவிற்கு தங்களின் நேரத்தை ஒதுக்கி தலைவர்களும் ஜனநாயக சக்திகளும் வருகை தர இருந்தார்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், மாற்று தேதியில் ஒத்திவைக்கப்படும் இந்த மண ஏற்பு விழாவிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகை தரும்படி கேட்டுக்கொள்கிறோம். சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான புரட்சிகரப் பண்பாட்டை உயர்த்திப்பிடிப்போம்.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram




