25.12.2025

நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள்
– தேவாலயங்களில் அத்துமீறல்கள்!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் ஒழிக!

கண்டன அறிக்கை

கிறிஸ்தவர்களின் புனித நாளான கிறிஸ்துமஸ்ஸை சீர்குலைத்துள்ளன ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி மற்றும் சங்கப் பரிவார பாசிச கும்பல்கள்.

டெல்லியில் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த கிறிஸ்தவர்களை “மதமாற்றம் செய்கிறார்கள்” என்று கூறி தடுத்து நிறுத்தி மத போதகர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்துள்ளன இந்து மதவெறி பாசிச சக்திகள். ஒரிசாவில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை விற்கும் தெருவோர வியாபாரிகளை மிரட்டி, இந்தியா ஒரு “இந்து ராஷ்டிரா” என்று கூறி அச்சுறுத்தியுள்ளனர். ஹரியானா குருஷேத்ராவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தடுத்து அவற்றைச் சீர்குலைத்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் தேவாலயத்திலிருந்த பார்வைக் குறைபாடுடைய ஒரு பெண்ணை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளது இந்து மதவெறி பாசிச கும்பல். உத்தரப்பிரதேசத்தில் திருப்பலி முடித்துவிட்டு வந்த கிறிஸ்தவர்கள் வெளியேறா வண்ணம் தடுத்து நிறுத்தி அனுமன் சாலிசா பாடுவது என்ற கலவரத்திலும் ஈடுபட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச சங்கப் பரிவாரங்கள் முதலில் இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கின. அடுத்ததாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளன. இனி ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் போது இப்படிப்பட்ட தாக்குதல்களை இந்து மதவெறி சக்திகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இதையெல்லாம் மூடி மறைக்கும் விதமாக, டெல்லியில் ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்வில் மோடி கலந்து கொண்டார் என்பது பெரிதுபடுத்தப்படுகிறது.

தேர்தல் ஆணையம், விசாரணை அமைப்புகள், அமலாக்கத்துறை, நிர்வாகத்துறை நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் படிப்படியாக பாசிச சக்திகள் கைப்பற்றிக் கொண்டிருக்கும் இந்த சூழலில்தான் இப்படிப்பட்ட திட்டமிட்ட கலவரங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனை மக்கள் அதிகார கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் இந்து மதவெறி பாசிச கும்பலின் எதிர்ப்புத் தளமாக தமிழ்நாட்டினை மாற்றிக் காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் இந்து மதவெறி பாசிச கும்பலுக்கு இடமில்லை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். வட இந்தியாவில் கலவரம் செய்த அவர்கள் இப்பொழுது கேரளாவிலும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டனர்.

ஆகவே ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிரான மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான தேவையை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram