கம்யூனிசம் பழகு | சிறுநூல் தொகுப்பு – 1 | சிறப்பு விலை ரூ. 80

இந்நூல் தொகுப்புகள் சமூக மாற்றத்தை விரும்பும் சக்திகளிடையே கம்யூனிசம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்துவதாக அமையும். மேலும், கம்யூனிச லட்சியத்தை ஏந்தி செயல்பட்டு கொண்டிருக்கும் தோழர்களுக்கு, தங்களை சிறந்த ஊழியராகவும் தலைவராகவும் வளர்த்துக் கொள்வதற்கான பண்புகளை வரித்துக்கொள்வதற்கான கையேடாக அமையும்.

அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே!

பெரியாரியம், அம்பேத்கரியம், கம்யூனிசம் போன்ற முற்போக்கு சிந்தனை முளைவிடும் நிலையில் இருக்கும் இளம் வாசகர்கள் அதிகம் நாடும் இடமாக புதிய ஜனநாயகம் பதிப்பகம் திகழ்கிறது. தங்கள் தேவையைக் கருதி, இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, மார்க்சிய ஆசான்கள், தலைவர்களின் கட்டுரைகளைத் தனித்தனி சிறு நூல்களாக தரமான தாளில் அச்சிட்டு, சிறப்பு விலையில் கொடுக்கும் வகையில், தொகுப்புகளாக உருவாக்கியுள்ளோம். மேலும், மக்கள் பதிப்பு என்ற வகையில், குறைவான பராமரிப்புத் தொகையை மட்டும் எடுத்துக் கொண்டு, சில நூல்களைத் தொகுப்புகளாகக் கொண்டுவருகிறோம்.

இந்நூல் தொகுப்புகள் சமூக மாற்றத்தை விரும்பும் சக்திகளிடையே கம்யூனிசம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்துவதாக அமையும். மேலும், கம்யூனிச லட்சியத்தை ஏந்தி செயல்பட்டு கொண்டிருக்கும் தோழர்களுக்கு, தங்களை சிறந்த ஊழியராகவும் தலைவராகவும் வளர்த்துக் கொள்வதற்கான பண்புகளை வரித்துக்கொள்வதற்கான கையேடாக அமையும்.

அந்தவகையில், கம்யூனிசம் பழகு என்ற தலைப்பில் இத்தொகுப்புகளைக் கொண்டுவருகிறோம்.

தொகுப்பு 1-இல் இடம்பெறும் நூல்கள்:

  1. ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பது எப்படி? மற்றும் இரண்டு கட்டுரைகள் – சென் யுன்”

***

2. புகழ்பெற்ற இரண்டு நூல்கள் (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும், கோதா வேலைத்திட்டத்தின் மீதான விமர்சனம்)

***

3. அதிகாரத்துவம் குறித்து – மாவோ, சௌ என் லாய்

***

4. மீண்டும் ஒருமுறை நமது கட்சியிலுள்ள சமூக ஜனநாயகத் திசைவிலகல் பற்றி: கட்சி நெருக்கடியும் நமது கடமைகளும் – ஸ்டாலின்

***

5. சிறந்த தலைவராவது எப்படி? மற்றும் மூன்று கட்டுரைகள் – சௌ என் லாய்

***

தொகுப்பு 1 சிறப்பு விலைத் தொகுப்பாகும். இத்தொகுப்பின் விலை ரூ.125, சிறப்பு விலையாக ரூ.80-க்கு எமது பதிப்பகத்தில் கிடைக்கும்.

இத்தொகுப்புகள், ஜனவரி 08, 2026 அன்று தொடங்கியுள்ள 49-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் அரங்கில் (அரங்கு எண்: 277) கிடைக்கும். வாசகர்களும் கம்யூனிசத்தை நேசிக்கும் சக்திகளும் இந்நூல் தொகுப்பை வாங்கிப் படிக்குமாறும், தங்களது நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

வெளியிடுவோர்:

புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049.

தொடர்புக்கு: 9791559223

மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

அச்சாக்கம்: எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24

விலை:               ரூ.125                   ரூ.80

தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க