கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மக்கள் பதிப்பு ரூ.10: உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்!

வழக்கமான நூல்களைப் போலவே, இந்நூல்களையும் தரமான தாள்களில் கொண்டுவர இருக்கிறோம். அதனால், இந்நூல்களைக் கொண்டு வருவதற்கு சமூக ஆர்வமுள்ளவர்கள் தங்களால் இயன்ற நன்கொடை கொடுத்து உதவுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.

கம்யூனிசம் பழகு – தொகுப்பு 3 மக்கள் பதிப்பில்!

அன்பார்ந்த வாசகர்களே!

எமது பதிப்பகத்திற்கு இளம் வாசகர்கள் பலரும் ஆர்வமாக வருகைப் புரிவதை தாங்கள் அறிவீர்கள். அந்த இளம் வாசகர்களுக்கு, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய நூல்களைக் கொண்டுச் சென்று சேர்க்கும் வகையில், மக்கள் பதிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.

49-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி கம்யூனிசம் பழகு என்ற தலைப்பில் மார்க்சியம் சார்ந்த நூல்களை சிறப்பு விலையில் தொகுப்புகளாக வெளியிட்டு வருகிறோம். இதன் மூன்றாவது தொகுப்பாக இந்த மக்கள் பதிப்பு அமைந்துள்ளது.

அதன் முதல் கட்டமாக, கம்யூனிச ஆசான்கள் காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ்-இன் கீழ்க்காணும் மூன்று நூல்களைக் கொண்டுவர இருக்கிறோம்.

மேலும், இந்நூல்களின் மொழிப்பெயர்ப்பை செழுமைப்படுத்தியும் அட்டைப்படங்களைப் புதிதாக வடிவமைத்தும் கொண்டு வருகிறோம்.

அத்துடன், வழக்கமான நூல்களைப் போலவே, இந்நூல்களையும் தரமான தாள்களில் கொண்டுவர இருக்கிறோம். அதனால், இந்நூல்களைக் கொண்டு வருவதற்கு சமூக ஆர்வமுள்ளவர்கள் தங்களால் இயன்ற நன்கொடை கொடுத்து உதவுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நூல்கள் வருகின்ற ஜனவரி 17 (சனிக்கிழமை) முதல் சென்னைப் புத்தகக் கண்காட்சி, கடை எண் 277-இல் உள்ள எமது பதிப்பகத்தில் கிடைக்கும். புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் இவற்றை நேரில் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சலில் இந்நூல்களைப் பெறவிரும் வாசகர்கள், இந்த நூல்களுக்கான விலையுடன், பார்சல் மற்றும் அஞ்சல் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

அதைப்போலவே, இந்த நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு எமது அலுவலக எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் பதிப்பு – கம்யூனிசம் பழகு – தொகுப்பு 3

  1. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – மார்க்ஸ், எங்கெல்ஸ் ரூ.10
  2. கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – எங்கெல்ஸ் ரூ.5
  3. மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் – எங்கெல்ஸ் ரூ.5

தொகுப்பின் விலை: ரூ.20

முன்பதிவு செய்யத் தொடர்புகொள்ளவும்: 9791559223

நிதியளிக்க தொடர்புகொள்ளவும்: 9791559223

ஸ்கேன் செய்யவும்

மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

தோழமையுடன்
ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க