11.02.2026

பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள
மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலை முறியடிப்போம்!

பத்திரிகைச் செய்தி

பாசிச மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பிப்ரவரி 12ஆம் தேதி, மத்திய தொழிற்சங்கங்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதனை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது.

மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான எஸ்.கே.எம் அமைப்புடன் இணைந்து மேற்கொள்கிறது. நவம்பர் மாதம் 29 அன்று தொழிலாளர் சட்டங்கள் சுருக்கப்பட்டு வெறும் நான்காக மாற்றப்பட்டது.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான நிரந்தர வேலை, பணப் பயன்கள், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை,பேரம் பேசும் உரிமை இப்படி தொழிலாளி வர்க்கம் இது நாள் வரை போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பாசிச மோடி அரசு பறித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக நாட்டில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து மக்களின் உரிமைகளையும் பறித்து இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாடி அம்பானி, அதானி பாசிச கும்பலுக்கு படையலிடுவதே மோடி அரசின் ஒற்றை லட்சியமாக இருக்கிறது. அதுவே இந்துராஷ்டிரத்தின் அடிப்படைத் தேவையாகவும் இருக்கிறது.

ஆக, பாசிச மோடி அரசுக்கு எதிரான மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது. அகில இந்திய வேலை நிறுத்தத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்றும் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க