மாடக்கோட்டை ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கு!

நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கவில்லையென்றால் தொடர் போராட்டம் நடத்த மாடக்கோட்டை மக்கள், மக்கள் அதிகாரக் கழகம், ஆதிதிராவிட நலச் சங்கம் மற்றும் பிற ஜனநாயக சக்திகள் தயாராகி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் நாடாமங்கலம் பஞ்சாயத்தைச் சேர்ந்த மாடக்கோட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறையின் சார்பாக 101 ஆதி திராவிட குடும்பங்களுக்கு இரண்டு சென்ட் அளவுள்ள இலவச வீட்டுமனை நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 10 பேருக்கு மட்டும் அரசு நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்பட்டது.

மீதமுள்ள 91 குடும்பங்களுக்கும் 20 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கை பயன்படுத்தி ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த கும்பல் ஒன்று ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஆனாலும் மாவட்ட அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைப்பில் ஆதிதிராவிட நல சங்கம் மற்றும் மாடக்கோட்டை பொதுமக்கள் இணைந்து கடந்த 02.02.2026 அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 23.02.2026 அன்று சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரிடம் மீண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகும் நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கவில்லையென்றால் தொடர் போராட்டம் நடத்த மாடக்கோட்டை மக்கள், மக்கள் அதிகாரக் கழகம், ஆதிதிராவிட நலச் சங்கம் மற்றும் பிற ஜனநாயக சக்திகள் தயாராகி வருகின்றனர்.

தகவல்
மதுரை கிழக்கு மாவட்டம்,
மக்கள் அதிகாரக் கழகம்.
8438631587

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க