ஆசாத்
மகாராஷ்டிரா: கந்துவட்டிக் கொடுமையால் கிட்னியை விற்ற விவசாயி
ரோஷனிடம் தினமும் ₹10,000 வட்டி என்ற மனிதாபிமானமற்ற முறையில் கொள்ளையடித்து வந்துள்ளனர் கந்துவட்டி கொள்ளையர்கள். வாங்கிய ஒரு லட்சம் ரூபாய்க்கு அநியாய வட்டி போட்டு 74 லட்சம் கட்ட வேண்டும் என்று கந்துவட்டிக் கும்பல் ரோஷனை மிரட்டி வந்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம் – வஞ்சிக்கும் தி.மு.க. அரசு
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், ஆளும் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.
வேண்டாம் தனியார்மயம்!: நூறு நாட்களைக் கடந்து தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையிலிருந்து வெளியிடப்பட்டது போன்ற பிம்பத்தை மூன்று வேளை உணவு உள்ளிட்ட அறிவிப்புகள் ஏற்படுத்தினாலும், போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுமே அவற்றின் உண்மை நோக்கமாகும்.
கோவை அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
இருப்பிட மருத்துவ அதிகாரி சரவண பிரியா, பணிச் சுமையை அதிகப்படுத்துவது, விடுமுறை எடுத்தால் பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டுவது, போலீசில் புகார் அளித்து கைது செய்துவிடுவேன் என்று அச்சுறுத்துவது தூய்மைப் பணியாளர்களிடம் அடாவடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கர்நாடகா: கொலைகார சாமியாரும், நீதிக்காகப் போராடும் மக்களும்
ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்த முக்கியக் குற்றவாளியான சாலூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி, உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகக் கூறி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தான். இதனால் மனமுடைந்து போன கர்நாடக உயர்நீதிமன்றம் ‘பிரசாதத்தில்’ நஞ்சு கலந்து 17 பேரைக் கொன்ற கொலைகாரனுக்கு கருணையுடன் சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
ம.பி. விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. தலைவர்
பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.
மயிலாடுதுறை: ஆதிக்கச் சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட தலித் இளைஞர்!
தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படம் ஒட்டியிருப்பதைப் பார்த்த அக்கும்பல் அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக வசைபாடியுள்ளது. இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கொண்டு தமிழரசனின் முதுகில் கிழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளது.
மேற்குவங்கத்தில் மீண்டுமொரு மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்டு தண்டனைகளைக் கடுமையாக்கும் சிறப்புச் சட்டத்தை மம்தா அரசு நிறைவேற்றியது. ஆனால், அதன் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்கதை ஆகியிருப்பதானது, அரசின் திசைதிருப்பல் நாடகங்களை திரை கிழிக்கிறது.
உ.பி-யில் தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கொடூரம்!
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் அக்டோபர் 1-ஆம் தேதியன்று தலித் இளைஞரை ஆதிக்க சாதிவெறி கும்பல் அடித்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா: கழிவுநீர் தொட்டியில் விசவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி!
கேரள மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று தொழிலாளர்கள், விசவாயு தாக்கி பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உ.பி: இஸ்லாமியப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மறுத்த சங்கி மருத்துவர்
ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30 அன்று காலை இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக இந்து மதவெறி பிடித்த பெண் மருத்துவர், கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க மறுத்துள்ளார்.
மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் தி.மு.க. அரசு
வாக்குறுதி 153-இல் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யப்போவதாக தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மின்வாரியத்தில் 13 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தற்போது வரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வருகிறது.
வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்
பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.
உத்தரப்பிரதேசம்: தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய அடக்குமுறைகள்!
பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காகவும், பொதுசாலையில் ஆடு அசுத்தம் செய்ததற்காகவும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இயற்கைப் பேரிடர், அமெரிக்க பொருளாதாரத் தடை – இருமுனைத் தாக்குதலில் ஆப்கான்
குனார் மாகாணத்தில் நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,205 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,640 பேர் படுகாயமடைந்துள்ளனர்.















