இன்குலாப்
மதுரை: தி.மு.க அரசை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள தூய்மைப் பணியாளர்கள்!
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை (ஆகஸ்ட் 18 ) முதல் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஒடிசா: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச பயங்கரவாதம்!
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 அன்று பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் மீது பஜ்ரங் தள காவி குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது.
குஜராத் பாடப்புத்தகத்தில் பகவத் கீதை திணிப்பு
தேசிய கல்விக் கொள்கையின்படி ’பண்டைய அறிவியலை’ கல்வியுடன் இணைப்பது என்ற பெயரில் புராணக் குப்பைகளையும் போலி அறிவியலையும் பாடப்புத்தகங்களில் திணித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.
தூய்மைப் பணியாளர்களின் வயிற்றில் அடிக்கும் தி.மு.க. அரசு!
போராடும் தொழிலாளர்கள் தார்பாய் கூடாரங்களை அமைத்து, இரவு-பகல் பாராமல், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், ஒரு வாரத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
மத்தியப்பிரதேசம்: ஒன்றரை ஆண்டில் 23,000 பெண்கள்-சிறுமிகள் மாயம்
ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரையிலான ஒன்றரை ஆண்டில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தமாக 23,129 பெண்கள் ம.பி-யில் காணாமல் போயுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சேதுபந்த வித்வான் யோஜனா திட்டம்: உயர்கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் சதி!
தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
டெல்லி: பாலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்!
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சேற்றை வீசியும், “இஸ்ரேல் ஜிந்தாபாத், பாலஸ்தீனம் முர்தாபாத்” போன்ற கோஷங்களை எழுப்பியும் சங்கிகள் தாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் கூடி, “ஜெய் ஸ்ரீராம்”, “ஹரஹர மகாதேவ்” மற்றும் “வந்தேமாதரம்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
ஒடிசா: தொடரும் பெண்களின் மீதான பாலியல் கொடூரங்கள்!
ஒடிசாவில் கடந்த 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
8 புதிய துறைமுகங்கள்: தமிழ்நாட்டைக் கூறுபோடும் தி.மு.க அரசு!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துறைமுகங்கள் 30 ஆண்டு முதல் 99 ஆண்டுகள் வரை நீண்ட குத்தகைக்கு விடப்படும் என்றும் அதற்கு ஏற்றார் போல் ”நெகிழ்வான துறைமுக கொள்கை” உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாம்: பா.ஜ.க-வின் பசு மாட்டு ஊழல்!
இந்த ஊழலானது பாசிச பா.ஜ.க கும்பல் பேசும் ‘பசு பாதுகாப்பு’ அரசியலின் யோக்கியதையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
ஒடிசா மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் – பா.ஜ.க அரசின் படுகொலை!
ஜூலை 1 அன்றே பாலசோர் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்துள்ளார். அதேபோல், பாலசோர் தொகுதியின் பா.ஜ.க எம்.பி பிரதாப் சாரங்கியையும் மாணவி அணுகியுள்ளார். ஆனால், மாணவியின் புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்
தனியார்மயம்-தாராளமயம்-உலகமய கொள்கை வலியுறுத்தும் “ஊழியர்கள் இல்லாத பணிமுறை” என்ற டிஜிட்டல்மயமாக்கத்தின் ஒரு அங்கமாகவே ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்.
மீண்டும் பால விபத்து: நாறுகிறது குஜராத் மாடல்!
பழுதடைந்துள்ள பாலத்தை மூடாமல் தொடர்ந்து மக்கள் பாலத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பணையம் வைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து நடப்பதற்கு அரசே வழியமைத்துக் கொடுத்திருக்கிறது.
தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள்: அரசே குற்றவாளி!
பட்டாசு ஆலைகளில் பணி புரியும் தொழிலாளிக்கு பணி பலன்கள் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அவனுடைய உடல் கருகிய பின்பு இழப்பீடு என்கிற பெயரில் சிறிய தொகையை அளித்து அரசு தன்னுடைய படுகொலையை மறைத்துக் கொள்கிறது.
ஒடிசா ரதயாத்திரை படுகொலை: பா.ஜ.க ஆட்சியின் அவலங்கள்
ரத யாத்திரையின் முதல் நாளிலேயே கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்த போதும், அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மயக்கமடைந்த போதும், ஒடிசாவை ஆளும் பா.ஜ.க. அரசு மக்களைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளாததே இப்படுகொலை நிகழ்ந்ததற்கான காரணமாகும்.