Wednesday, February 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by இன்குலாப்

இன்குலாப்

இன்குலாப்
71 பதிவுகள் 0 மறுமொழிகள்

கார்ப்பரேட் கும்பலின் கனிமவள வேட்டைக்காடாக மாற்றப்படும் ஆரவல்லி!

0
புதிய வரையறைகளால் வட இந்தியாவின் நுரையீரலாக உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வெப்பமயமாதல் தீவிரமடையும், குளிர்ச்சியான பகுதிகள் வறண்டுபோகும்.

கரூர்: சாதி வெறியால் அரசுப் பள்ளி சமையலர் பணிநீக்கம் செய்யப்பட்ட கொடூரம்!

0
“பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைதான் வழங்கப்படுகிறது. அதனையும் சாதிக்கு ஏற்றாற்போல் வழங்க வேண்டியதுதானே? அருந்ததியர் சமூகத்தில் பிறந்தது தீண்டாமையா?” என்று பணிநீக்கம் செய்யப்பட்ட நிரோஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர்: பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி – தி.மு.க அரசே குற்றவாளி!

0
பள்ளிக் கட்டடங்கள் நல்ல நிலையில்தான் உள்ளனவா என்பது முறையாகச் சோதிக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் சேதமடைந்த கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. முன்பே ஆய்வு செய்து இவற்றை புனரமைத்திருந்தால், மாணவனின் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும்.

போராடிய ஒப்பந்த செவிலியர்களைக் கைது செய்த தி.மு.க அரசு! வேண்டும் ஜனநாயகம்!

0
கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவிலியர்களின் சட்டையைப் பிடித்து இழுத்தும், பெண் செவிலியர்களை வலுக்கட்டாயமாக இழுத்தும் மனிதாபிமானமற்ற முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீசைக் கொண்டு கைது செய்து அடாவடித்தனமாக வாகனங்களில் ஏற்றிச்சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு, அங்கிருந்து ஊருக்கு போகும்படி தெரிவித்துள்ளது.

சாதி, மதம் கடந்து திருமணம்: பெண் குடும்பத்தினர் கொலைவெறித் தாக்குதல்

0
15 பேருடன் வந்த பெண்ணின் உறவினர்கள், விடுதிக்குள் புகுந்து கொலைவெறியுடன் ராகுலை வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது அம்மா, அப்பா, மாமா ஆகியோரரையும் கொடூரமாக வெட்டிவிட்டு, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பஞ்சாப்: கார்ப்பரேட் ஆதரவு வரைவு மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

2
டிசம்பர் 8- ஆம் தேதியன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் மின்சார வாரியத்தின் (PSPCL) ஊழியர்களும் விவசாயிகளுடன் இணைந்து வரைவுகளின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்குவங்கம்: தெருவோர இஸ்லாமிய வியாபாரிகளை தாக்கிய ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இறைச்சி கடைகள், உணவு விற்பனை செய்யும் இஸ்லாமிய மக்கள் மீது காவி குண்டர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்துவதும், படுகொலை செய்வதும் தொடர்ந்து வருகிறது.

இண்டிகோ நிறுவனத்திடம் அடிபணிந்த மோடி அரசு!

0
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுக்கு மக்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்பது இவற்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்படுவதன் கோர விளைவுகளையும் இந்நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகம்: ஆசிரியர்களின் கருத்துரிமையைப் பறிக்கும் புதிய விதிகள்!

0
பல்கலை. நிர்வாகம், ஆசிரியர்கள் பாசிச கும்பலுக்கு எதிராகவும், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் காவிமயமாக்கல் குறித்தும் பேசிவிடக்கூடாது என்பதற்காக, அனுமதி கோரும் போதே அதனைத் தணிக்கை செய்து முன்பே நிராகரித்துவிடும். இது கல்வியைக் கட்டுப்படுத்துவதுடன் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற நடவடிக்கை என்று பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாழ்வாதாரத்துக்காகப் போராடிய ஆசிரியர்களைப் பழிவாங்கும் தி.மு.க அரசு!

1
ஆசிரியர்கள் அறிவித்தபடி, நவம்பர் 18 அன்று , தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தினால் ஆத்திரமடைந்த தி.மு.க அரசு அன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டு ஆசிரியர்களைப் பழிவாங்கியுள்ளது.

நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிர்கள் – கண்ணீரில் மிதக்கும் விவசாயிகள்!

0
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது....

உ.பி. குழந்தையின் வெட்டுக் காயத்திற்கு ஃபெவி-குவிக் தடவிய கொடூரம்!

0
மருத்துவர் குழந்தையின் காயத்தைச் சுத்தம் செய்து தையல் போடுவதற்குப் பதிலாக, வலியில் துடித்துக் கொண்டிருந்த குழந்தையின் காயத்தில் ஃபெபி-குவிக்கை வைத்துத் தடவியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டதற்கு உடனடியாக வலியும், பதற்றமும் குறைந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டமும் கார்ப்பரேட்மயமாகும் மருத்துவக் கட்டமைப்பும்!

0
நவம்பர் 14-ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே ஊதிய உயர்வுக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

குஜராத்தில் ‘பசுவதை’க்கு ஆயுள் தண்டனை: இதுதான் இந்துராஷ்டிர நீதி!

0
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிப்பதென்பது இதுவே முதன்முறை. இத்தீர்ப்பு மனிதநேயமற்ற இரத்தவெறிப்பிடித்த மிருகங்களின் மதவெறியைத்தான் பிரதிபலிக்கின்றது.

அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் காத்திருப்புப் போராட்டம் வெல்லட்டும்!

1
அரசு உதவிபெறும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கி சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் முன்பாக மூன்று நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.