1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 11 | செப்டம்பர், 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இன்று தொடங்கி நடைபெற்றுவரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் அரசியலமைப்பின் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை குறித்து இரண்டு மசோதாக்கள் என மொத்தம் மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்கள், மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரான இந்த தொகுதி மறுவரையறை குறித்து புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2025 இதழில் வெளியாகி ஏப்ரல் 12, 2025 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்ட இக்கட்டுரையைத் தற்போது மீள்பதிவு செய்கிறோம்.
***
இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள்
பாசிச பா.ஜ.க. கும்பலானது வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு போன்ற தேர்தல் முறைகளைப் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான கருவிகளாக மாற்றியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறையை அதன் அடுத்த இலக்கில் வைத்துள்ளது.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டம்; தென்மாநில ஆட்சியாளர்கள், கட்சியினரைக் கொண்டு நடத்தப்பட்ட “கூட்டு நடவடிக்கைக் குழு” கூட்டம்; தமிழ்நாட்டு எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை தொகுதி மறுவரையறை விவகாரத்தை இந்திய அளவில் விவாதப் பொருளாக்கியுள்ளது. நீண்ட காலத்திற்குப் பின்னர் எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிநிரல் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், இதனை மென்மேலும் தீவிரப்படுத்திவிடக் கூடாது என்ற பீதியில் ஆரம்பத்திலிருந்தே இவ்விவகாரத்தைத் தற்காப்பு நிலையிலிருந்தே அணுகி வருகிறது பா.ஜ.க. கும்பல்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தென்மாநில ஆட்சியாளர்கள், கட்சியினரைக் கொண்டு நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம்
தொகுதி மறுவரையறை: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?
தொகுதி மறுவரையறை என்பது குறிப்பிட்ட காலத்தில் மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மறுநிர்ணயம் செய்யும் நடவடிக்கையாகும்.
இந்நடவடிக்கையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்படும் “ஒரு வாக்கு ஒரு மதிப்பு” என்ற கருதுகோளின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதாவது, இந்தியா முழுவதுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தவரைச் சம எண்ணிக்கையிலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் (60 லட்சத்திற்குக் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களுக்கு இது பொருந்தாது); அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம எண்ணிக்கையிலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இவற்றின் மூலமே இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்கிற்கும் சமமான மதிப்பை வழங்க முடியும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. இதனை ஈடேற்றும் வகையிலேயே தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அந்தவகையில், ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பின்பும் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.
1952, 1963, 1973, 2002 ஆகிய ஆண்டுகளில் இதுவரை நான்குமுறை எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று முறையும் அதற்கு முன்பு கணக்கிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் எல்லைகள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டன. 1971-இல் கணக்கிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் 1973-இல் நிர்ணயிக்கப்பட்ட 543 மக்களவை தொகுதிகளே தற்போதுவரை நீடிக்கின்றன.
ஏனெனில், அச்சமயத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் தொகுதி மறுவரையறையால் அது பாதிக்கப்படக் கூடாது அல்லது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவரும் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்ற சிக்கல் எழுந்தது. இதன் காரணமாக, 1976-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அரசாங்கமானது 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு வரையிலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைத்தது.
இதே காரணத்தின் பேரில், 2002-ஆம் ஆண்டில் வாஜ்பாய் அரசாங்கமும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பு வரையில் மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைத்தது. இருப்பினும், 2002-இல் அமைக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் மூலம் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படாமல் அதன் எல்லைகள் மட்டும் மறுநிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகும் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சமநிலையை அடையவில்லை. 2023-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 1971-இல் 4.11 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள்தொகையானது 2023-இல் 7.68 கோடியாக அதிகரித்திருக்கிறது; ஆனால், 8.38 கோடியாக இருந்த உத்தரப்பிரதேசத்தின் மக்கள்தொகை 23.56 கோடியாக அதிகரித்திருக்கிறது. இவ்வாறு தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்கள், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கும் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இந்தி வளைய மாநிலங்களுக்கும் இடையில் மக்கள்தொகை வளர்ச்சியில் பாரிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்போது தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவதானது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களை வஞ்சிப்பதாகவே அமையும். சான்றாக, தற்போதைய 543 தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே நீடிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாடு எட்டு மக்களவை தொகுதிகளை இழக்கும்; தொகுதிகளின் எண்ணிக்கையை 848-ஆக உயர்த்தி மேற்கொள்ளப்பட்டால் தற்போதைய விகிதத்தின்படி தமிழ்நாட்டிற்குக் கிடைக்கப்பட வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.
ஆனால், மோடி அரசோ தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் தன்னை எதிர்க்கும் மாநிலங்களை வஞ்சித்து ஒடுக்குவதில் தீவிரமாக உள்ளது. 2023-ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, 543 பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவையில் 888 இருக்கைகளும், 250 பிரதிநிதிகளைக் கொண்ட மாநிலங்களவையில் 384 இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தது பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக திட்டத்தை அம்பலப்படுத்தியது.
ஏற்கெனவே, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான அளவுகோலில் 1971 மக்கள்தொகைக்குப் பதிலாக 2011 மக்கள்தொகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை வஞ்சித்துவரும் மோடி அரசானது, தொகுதி மறுவரையறையிலும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆயுதமாகப் பயன்படுத்தி தனது பாசிச சர்வாதிகாரத்திற்கு அடிபணியாத மாநிலங்களை ஒடுக்கப் பார்க்கிறது. இதன் காரணமாகவே, 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.
அசாமின் அனுபவம் உணர்த்துவதென்ன?
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மார்ச் 5 அன்று தமிழ்நாடு தி.மு.க அரசால் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையை 2056-ஆம் ஆண்டு வரை 30 ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்து சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 7.18 என்ற விகிதத்திலேயே தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட அடிப்படையில், தென்மாநில எம்.பி-க்களை கொண்ட “கூட்டு நடவடிக்கைக் குழு” (JAC)-விற்கான கூட்டம் மார்ச் 22 அன்று நடத்தப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தொகுதி மறுவரையறைக்கு முன்னர் அனைத்து மாநிலங்களிடமுள்ள கட்சிகள், ஆளும் அரசுகள், பிற அமைப்பினருடன் ஜனநாயகமாக விவாதிக்க வேண்டும்; 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையைத் தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு ஜனநாயக சக்திகளும் பத்திரிகையாளர்களும் கூட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறையை நடத்த வேண்டும் என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமலும், அல்லது எதிர்க்கட்சிகள் கோரும் விழுக்காட்டின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி தொகுதி மறுவரையறையை நடைமுறைப்படுத்தினாலும், அது பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமாகவே அமையும். இதற்கு பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ஜம்மு & காஷ்மீரிலும், அசாமிலும் மேற்கொள்ளப்பட்ட சட்டமன்றத் தொகுதி மறுவரையறையே சாட்சி.
ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட பின்னர், 2022-இல் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நடத்தப்பட்டு, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 83-லிருந்து 90-ஆக உயர்த்தப்பட்டது. அப்போது இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ஒரு தொகுதி மட்டுமே அதிகரிக்கப்பட்ட நிலையில், காஷ்மீரைக் காட்டிலும் குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட, இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஜம்முவிற்கு ஆறு தொகுதிகள் அதிகரிக்கப்பட்டன. 2024 செப்டம்பரில் நடத்தப்பட்ட ஜம்மு&காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் ஜம்முவில் புதியதாக இணைக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் ஐந்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2023-இல் அசாமில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது, 14 நாடாளுமன்ற மற்றும் 126 சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால், தொகுதிகளின் எல்லைகள் பா.ஜ.க. கும்பலுக்குச் சாதகமான வகையில் மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள 10 தொகுதிகள் உடைக்கப்பட்டு அவை இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன; பல தொகுதிகள் இந்துக்கள் பெரும்பான்மையாகவும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாகவும் இருக்கும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டன; இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகள் பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான தொகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன.
மேலும், எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பார்பேட்டாவில் ஆறு முதல் ஏழு தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றுவந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு அவற்றில் பெரும்பான்மை தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. இவ்வாறு மக்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்பையும் இந்துமுனைவாக்கத்தையும் தீவிரப்படுத்தும் வகையில், வாக்குவங்கியைக் காவிமயமாக்கி தொகுதி மறுவரையறை மேற்கொண்டிருப்பதன் மூலம் இனி அசாமில் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க-வால் எளிமையாக வெற்றிபெற முடியும் என்ற நிலைமையைப் பாசிச கும்பல் உருவாக்கியுள்ளது. அதாவது, தொகுதி மறுவரையறை என்பது பாசிச கும்பல் தனக்கான மக்கள் அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கேற்ப தொகுதிகளைச் செப்பனிடும் பணியே ஆகும்.
பாசிசமயமாகும்தொகுதிகள்
நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச கும்பலின் நோக்கமாகும்.
ஆகவே, தொகுதி மறுவரையறையால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பதைக் கடந்து தொகுதிகள் பாசிசமயப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே பா.ஜ.க. பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளால் வெற்றிபெற முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதி மறுவரையறையின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் அவற்றிடமிருந்து பறிக்கப்படும். இது இந்தியாவில் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பாசிச பா.ஜ.க. கும்பலின் கனவை நனவாக்குவதற்கான துலக்கமான நடவடிக்கையாகும்.
ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்தை பாசிஸ்டுகளின் செல்லப்பிராணியாக மாற்றிக்கொண்டு, பல்வேறு பாசிச சட்டத்திருத்தங்கள், தேர்தல் முறைகேடுகளை அமல்படுத்துவதன் மூலம், சொல்லிக்கொள்ளப்படுகின்ற ‘தேர்தல் ஜனநாயகத்தை’ ஒழித்துக்கட்டி பா.ஜ.க. மட்டுமே வெற்றிபெறும் வகையில் தேர்தலை முற்றிலுமாக பாசிசமயமாக்கி வருகிறது. இதன் உச்சக்கட்ட நடவடிக்கையாகவே ஒரே நாடு ஒரே தேர்தலையும் தொகுதிகள் மறுவரையறையையும் பா.ஜ.க. கும்பல் கையிலெடுத்துள்ளது. எனவே தொகுதி மறுவரையறை என்பது பாசிச கும்பலின் கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான அடிக்கட்டுமான நடவடிக்கையாகும்.
மேலும், பாசிச பா.ஜ.க. கும்பல் தொகுதி மறுவரையறை செய்வதானது தென்மாநிலங்களுக்குரிய பிரச்சினை மட்டுமல்ல. இது இந்தியா முழுவதுமுள்ள பலதரப்பட்ட மக்களின் குரல்வளையை நசுக்குகின்ற பாசிச நடவடிக்கையாகும்.
அதேபோல், வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புல்டோசர் ராஜ்ஜியம், மசூதிகள் அபகரிப்பு போன்றவற்றின் மூலம் இஸ்லாமிய மக்களின் பொருளாதாரத்தை சூறையாடிவருகிறது பா.ஜ.க. கும்பல். தற்போது, தொகுதி மறுவரையறையின் மூலம் இஸ்லாமிய தொகுதிகள் என்ற ஒன்றையே இல்லாமல் செய்து அதன்மூலம் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்துவது என்ற நடைமுறையை ஒழித்துக்கட்ட எத்தனிக்கிறது. இதன் மூலம், இஸ்லாமிய மக்களுக்கு மிச்ச மீதமிருக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் ஒழித்துக்கட்டி அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கிறது.
தற்போது, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கும் பா.ஜ.க. கும்பலானது பிற்காலத்தில் அவற்றையும் ஒழித்துக்கட்டி அம்மக்களையும் இந்துராஷ்டிரத்தின் இரண்டாந்தர குடிமக்களாக்கும். இந்த ஒடுக்குமுறையானது கிறித்தவ சிறுபான்மை மக்களுக்கும் பாசிச கும்பலுக்கு அடிபணியாத பிரிவினருக்கும் நடந்தேறும்.
அதேபோல், தொகுதி மறுவரையறையின் மூலம் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்படுவதென்பது நேரடியாக அம்மாநிலங்களில் வாழும் தேசிய இன மக்களின் குரல்வளையை ஒடுக்கும் செயலாகும்.
ஆனால், இதுகுறித்தெல்லாம் வாய்திறக்காத எதிர்க்கட்சிகள், தங்களுக்கு ஜனநாயகம் வழங்கியும் தாங்கள் பாதிக்கப்படாத வகையிலும் தொகுதி மறுவரையறையை நடத்த வேண்டுமென பா.ஜ.க-விடம் கோரிக்கை வைக்கின்றன. இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானமாக அமையக்கூடிய தொகுதி மறுவரையறையைப் பாசிச பா.ஜ.க. நடத்தக்கூடாது என்று அறைகூவி நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்குப் பதிலாக, அப்பட்டமாக பா.ஜ.க. கும்பலின் பாசிச சதித்திட்டத்திற்கு மக்களைப் பலியாக்குகிறார்கள்.
தேசிய இனங்களின் கூட்டாட்சிகுடியரசுக்காகப்போராடுவோம்!
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலரும் தற்போது பாசிச கும்பல் இதனை நடத்துவதில் உள்ள அபாயம் குறித்துப் பேசுவதுடன் நிறுத்திகொள்கின்றனர். ஆனால், இந்தியாவில் 1947-இல் அதிகாரமாற்றம் நடந்ததிலிருந்து இதுநாள் வரையிலும் நடத்தப்பட்ட தொகுதி மறுவரையறைகளும் அதன்மூலம் வழங்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தை மறுப்பதாகவே இருந்து வந்துள்ளது என்பதே உண்மை.
ஏனெனில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டமானது, மக்கள்தொகையை மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான ஒற்றை அளவுகோலாக நிர்ணயித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான ஒரு நாட்டில் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அளவுகோளாக மக்கள்தொகையை மட்டுமே தீர்மானிப்பதென்பது அப்பட்டமாகச் சிறிய தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தையும் அதன்மூலம் அந்த தேசிய இனங்களின் குரல்வளையை ஒடுக்கும் செயலாகும். அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநில மக்கள் இத்தகைய ஒடுக்குமுறையை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வருகின்றனர். அதனால்தான், இந்தியாவைத் தேசிய இனங்களின் சிறைச்சாலை என்கிறார்கள்.
இதுகுறித்து நாம் பேசுகையில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள “இந்தியா முழுவதுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தவரை சம எண்ணிக்கையிலான மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்” என்ற விதியிலிருந்து 60 லட்சத்திற்குக் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதைச் சிலர் சுட்டிக்காட்டலாம். ஆனால், இவையெல்லாம் அம்மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை மறைப்பதற்கும் அவர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கையாகும். மாறாக, அளவு ஏற்றத்தாழ்வின்றி அனைத்து தேசிய இனங்களும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம், மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லப்படுகின்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில் கூட அனைத்து மாநில மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடையாது. அதிலும் மக்கள்தொகை எண்ணிக்கையையே அளவுகோலாக நிர்ணயித்து பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களுக்கு தலா ஒரு சீட்டு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் எத்துணை ‘மேன்மை’யானது என்பதைப் பறைசாற்றுகிறது.
ஏனெனில், இந்தியா என்பது தேசிய இனங்களுக்கும் மாநிலங்களுக்கும் அதிகாரம் வழங்குகின்ற உண்மையான கூட்டாட்சி நாடல்ல. இந்தியா ஒரு அரை-கூட்டாட்சி நாடு என்பதே அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமாகும். பாசிச கும்பல் அதிகாரத்திற்கு வந்தப் பிறகு தேசிய இனங்களுக்கான பெயரளவிலான ஜனநாயக உரிமைகளையும் படிப்படியாகச் சிதைத்து வருகிறது. இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில் தேசிய இனங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் படிப்படியாகப் பறித்து மாநிலங்களை இந்துராஷ்டிரத்திற்கு கப்பம் கட்டும் காலனிகளாக மாற்றி வருகிறது.
ஆகவே, இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் நின்றுக்கொண்டு தேசிய இனங்களின் உரிமைகளை நம்மால் நிலைநாட்டிவிட முடியாது.
மாறாக, அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தையும் உண்மையான அதிகாரத்தையும், பிரிந்து போகும் அதிகாரம் கொண்ட தேசிய சுயநிர்ணய உரிமையையும் வழங்கக்கூடிய தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசாக விளங்கக் கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசிற்காக போராடுவதன் மூலமே தேசிய இனங்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 10 | ஆகஸ்ட், 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா மற்றும் காசியாபாத் இந்தியாவின் முக்கியமான தொழில்துறை மையங்களாகும். இங்கு மாருதி கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் முதல் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில் உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் மட்டுமன்றி பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலத் தொழிலாளர்களும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
12 மணிநேரத்திற்கும் மேலாக தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி வேலை வாங்கிக்கொண்டு குறைந்தபட்ச சம்பளமாக 11,313 ரூபாய் மட்டுமே நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவ்வளவு குறைவான வருமானத்தில் குழந்தைகளுக்கான கல்விச் செலவு, மருத்துவச் செலவு என அனைத்தையும் சமாளிக்க முடியாமல் வேதனையில் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தின், கிளை நிறுவனம் ஹரியானாவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி குறைந்தபட்ச மாத ஊதியத்தை 14,000 ரூபாயிலிருந்து 19,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது 35 விழுக்காடு அதிகமாகும். ஆனால் நொய்டாவில் உள்ள நிறுவனத்தில் ஊதியம் உயர்த்தப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். இவர்களில் பல தொழிலாளர்கள் ரிச்சா குளோபல் (Richa Global), சமவர்தனா மதர்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd) மற்றும் பாரமவுண்ட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Paramount Products Pvt Ltd.) போன்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலான பேர் ஹோசியரி காம்ப்ளெக்ஸில் பேஸ்-2 இல் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொழிலாளர்களின் போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டுப் பல தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40,000 – 45,000 தொழிலாளர்கள் தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இணைந்தனர். இப்போராட்டம் அருகில் உள்ள காசியாபாத்திற்கும் பரவியது. இது வெறும் சம்பள உயர்வுக்கான போராட்டம் மட்டுமல்ல, இது தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்று அவர்கள் முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொழிலாளர்களின் அடிப்படையான கோரிக்கைகள்:
ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலை
குறைந்தபட்ச மாதச் சம்பளமாக 20,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும்
கூடுதல் நேரம் (Over time) வேலை பார்த்தால் இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
போனஸ் மற்றும் பணியிடப் பாதுகாப்பு வேண்டும்.
அமைதியான தங்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காததால் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளின் பொருட்களைச் சேதப்படுத்தியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பின்னர் போலீஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கலைத்துள்ளது. 300 தொழிலாளர்களைக் கைது செய்துள்ளது.
தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் ஊதியத்தை 21 சதவீதம் உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் தொழில்நுட்பத் திறன் இல்லாத தொழிலாளர்களுக்கு ரூ.13,690, பகுதி அளவில் தொழில்நுட்பத் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ரூ.15,059 மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ரூ.16,868 என இடைக்கால ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை ஏப்ரல் 1 ஆம் தேதி முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட குழுவையும் அரசு அமைத்துள்ளது. இக்குழு தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை, மிகைநேர (ஓவர் டைம்) ஊதியம் போன்றவற்றை ஆராய்ந்து அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் கேட்டதை விடக் குறைந்த அளவிலேயே ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளில் உறுதியாக நின்று போராடி வருகின்றனர். குறிப்பாக, “நாங்கள் இயந்திரமல்ல; நாங்களும் மனிதர்கள்தான். எனவே குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்” என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தற்போதைய விலைவாசி உயர்வில் தங்களால் குடும்பத்தை நடத்தவே முடியவில்லை என்றும், வாங்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கும் உணவுக்குமே சரியாகப் போய்விடுவதாகவும் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். காலை முதல் மாலை வரை ரத்தம் சிந்தி உழைத்தாலும், கையில் கிடைக்கும் சொற்ப ஊதியம் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடப் போதுமானதாக இல்லை என்பதே இப்போராட்டத்தின் மையமாக உள்ளது.
தொழிலாளரான அனுராக், “சம்பள உயர்வால் உண்மையில் எந்தப் பலனும் இல்லை. நாங்கள் ரூ. 250–300 உயர்வு பெறுகிறோம், ஆனால் ஜனவரியில் எப்போதும் வீட்டு உரிமையாளர் வாடகையை அதிகரித்து விடுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவருடைய இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தோறும் சுமார் ரூ. 3,500 கல்விக் கட்டணமாகவும், ரூ. 5,000 வாடகையாகவும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இந்த சேர்க்கை காலம் மட்டுமே அவருக்கு ரூ. 9,000 செலவாகியுள்ளது. அதனையும் கடன் வாங்கித்தான் சமாளித்துள்ளார். குடும்பத்திற்குத் தேவையான உணவிற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ரிச்சா குளோபலில் வேலை செய்யும் சங்கீதா, “நாங்கள் ஒரு வினாடி தாமதமாக வந்தால் கூட, எங்கள் ஓவர்டைம் பணம் கழிக்கப்படுகிறது. எங்களுக்கு எந்த சலுகை நேரமும் (கிரேஸ் பீரியட்) கொடுக்கப்படுவதில்லை. எப்போதும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். எப்போதும் அவசரத்தில் இருக்க வேண்டும். புரொடக்ஷன் இலக்குகள் (உற்பத்தி இலக்கு) காரணமாக தண்ணீர் குடிப்பதற்கோ, கழிப்பறைக்குச் செல்வதற்கோ கூட மிகவும் கடினமாக இருக்கிறது. அவர்கள் எங்களை இயந்திரங்களிலிருந்து ஒரு வினாடி கூட விலக அனுமதிப்பதில்லை,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் ரம்பா தேவி, தான் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதால் தன் சம்பளம் குறைக்கப்பட்டதாகக் கூறுகிறார். அவரது பே சிலிப் (சம்பளச் சீட்டு) 21,757 ரூபாய் (ஓவர்டைம் உட்பட) காட்டினாலும், அவரது வங்கியில் 19,018 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 2,739 ரூபாய் தண்டத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.
ஓவர்டைம் பதிவுகளிலும் முரண்பாடுகள் இருப்பதாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். ரம்பா, தான் 115 மணி நேரம் ஓவர்டைம் வேலை செய்ததாகக் கூறுகிறார். ஆனால் அவரது பே சிலிப் 21 மணி நேரம் மட்டுமே காட்டுகிறது. சங்கீதா 80 மணி நேரம் வேலை செய்ததாகக் கூறுகிறார். ஆனால் வெறும் 13 மணி நேரம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் 12 மணி நேரம் வேலை வாங்குவதுடன், தங்களின் தேவைகளுக்காகக் கூடுதல் நேரம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டிக் கொளுத்துக் கொண்டிருக்கின்றன.
தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில் “நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றன. ஆனால் அந்த லாபத்தை உருவாக்குவதற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை” என்று தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் தொடர்ந்து இடைவிடாது வேலை செய்வதால் மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அதற்கான மருத்துவச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலையில்தான் தொழிலாளர்களின் நிலை உள்ளது. அவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகக் குறைவாகவே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊதியம் வழங்குகின்றன. தொழிலாளர் சட்டங்களையும் முறையாகப் பின்பற்றுவதில்லை. கேள்வி கேட்கும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தொழிலாளர் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி அதில் நொய்டாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை க்யூ.ஆர் (QR) குறியீடு மூலம் ஒன்றிணைத்துள்ளனர்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாசிச கும்பல் தொழிலாளர்களின் போராட்டம் நக்சலைட்டுகளின் சதி என்றும் இதற்குப் பின்னால் பாகிஸ்தான் உள்ளது என்றும் பொய்யாகச் சித்தரித்து உள்ளது. அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுபவர்களை நக்சல்கள் என்று முத்திரை குத்துவதை பாசிச கும்பல் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே பாசிச மோடி அரசு தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களாக மாற்றியுள்ளது. இதன்மூலம் போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது. எனவே குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டுப் போராடுகின்ற தொழிலாளர்கள், தங்களின் நலன்களுக்கு விரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் போராட வேண்டும். இப்போராட்டத்திற்கு அனைத்து தொழிலாளர் சங்கங்களும் ஆதரவளிக்க வேண்டும். இதன் மூலமே எட்டு மணிநேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றைப் பெறுவதுடன் தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 09 | ஜூலை, 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 08 | ஜூன், 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 07 | மே, 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 06 | ஏப்ரல், 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 05 | மார்ச், 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 04 | பிப்ரவரி, 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
ஆந்திராவைச் சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி, போதகர் ஆன நிலையில் 2021-ஆம் ஆண்டில் தன்னை சாதி ரீதியாகத் துன்புறுத்திய ராமிரெட்டி என்பவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். ஆந்திர உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, மன்மோகன் அடங்கிய அமர்வு இந்து, சீக்கியம், பௌத்தம் தவிர பிற மதத்தினர் பட்டியலின அந்தஸ்து கோர முடியாது; வேறு மதத்திற்கு மாறும் போது அதுவரை அனுபவித்து வந்த பட்டியல் சாதி அந்தஸ்தை அவர்கள் உடனடியாக இழப்பர்; இது பட்டியல் சாதியினர் தொடர்பான “அரசியலமைப்பு (பட்டியல் சாதி) ஆணை, 1950”-இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என கடந்த மார்ச் 24 அன்று தீர்ப்பு வழங்கியது.
உச்சிக் குடுமி மன்றமானது, ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ தனது தீர்ப்பால், மீண்டும் ஒருமுறை இந்திய அரசியல் சாசனத்தின் வழியாக இந்து மதம்தான் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
மேலும், தனது தீர்ப்பில், பிற மதத்திற்கு மாறியவர்கள் மீண்டும் திரும்பி பட்டியலின அந்தஸ்து பெற வேண்டுமெனில், மூன்று ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என விளக்கியுள்ளது.
“இந்து, சீக்கியர், பௌத்த மதத்திற்கு மீண்டும் மாறிவரும் நபர் துவக்கத்தில், அதாவது 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியல் சாதி) ஆணையின்கீழ் அறிவிக்கப்பட்ட சாதியில்தான் பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்”.
நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால், கிறிஸ்தவர் அல்லது இஸ்லாமிய மதத்திலிருந்து மீண்டும் தாய்மதத்திற்கு திரும்பும் ஒரு பட்டியல் சாதியினர் 75 ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையோ, தாத்தாவோ பட்டியல் சாதி பிரிவைச் சேர்ந்தவராகத்தான் இருந்தார் என சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்கிறது. இது சாத்தியமா?
இந்த விளக்கத்தின் மூலம் இந்து மதத்திலிருந்து எவரொருவரும் வெளியேறினால் அவர்கள் உரிமைகளை இழப்பார்கள் என மிரட்டுகிறது உச்சிக் குடுமி மன்றம்.
“மாறிய மதத்தை முழுதாக துறந்துவிட்டு மீண்டும் தாய் மதம் திரும்பியதற்கான நம்பகமான சான்றுகள் இருக்க வேண்டும்.”
அதாவது மாற்று மதத்தைத் துடைத்தெறிந்துவிட்டு வந்துவிட வேண்டும், இனி எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது, திரும்பிக் கூட பார்க்கக் கூடாது என்கிறது.
“அவர் தன் பழைய சாதியின் சடங்குகள், பழக்கவழக்கங்கள், வழிபாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். தாய் மதம் திரும்பியது தொடர்பான, சமூகத்தினர் ஏற்றுக் கொண்டதற்கான சான்று இருக்க வேண்டும். சுயமாக அறிவித்துக் கொண்டால் மட்டும் போதாது, அசல் சமூக மக்கள் அவரை தங்களது சமூகத்தைச் சேர்ந்தவராக அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது.”
இதில் நீதிமன்றம் சொல்ல வருவது என்ன?
பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் தன் பழைய சாதியின் சடங்குகள், பழக்கவழக்கங்கள், வழிபாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்கிறது தீர்ப்பு. அதாவது, தனது வீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்து மதம் சொல்லி வைத்திருக்கின்ற சாதி கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுத்தான் செய்ய வேண்டும். கோவிலுக்கு வெளியே நின்றுதான் சாமி கும்பிட வேண்டும்; உள்ளே செல்ல உரிமை கேட்கக் கூடாது. செத்த மாட்டின் தோலை உரிக்க வேண்டும். குலத்தொழில் செய்ய வேண்டும். சுருக்கமாக, பார்ப்பனியத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும். இந்த இழிவுகள் அனைத்தையும் கடைப்பிடிக்கப்படுவதை அவர் சார்ந்த ஒட்டு மொத்த சமுதாய மக்களும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது. இது தீண்டாமையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து நடைமுறைப்படுத்துவதற்குச் சமமாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட மூன்றில் ஒரு ஆதாரத்தைச் சமர்ப்பிக்கத் தவறினாலும், மீண்டும் பட்டியல் சாதி அந்தஸ்தை அந்த நபரால் பெற முடியாது என்று விளக்கியுள்ளது இத்தீர்ப்பு.
மேலும், ஒருவர் இந்து பட்டியல் சாதி என பதிவு செய்து கொண்டு கிறிஸ்தவ வழிபாட்டை கடைப்பிடிப்பதைத் தீவிரமாக உற்று நோக்குகிறது சட்டம். ஒருவரின் வழிபாட்டு உரிமையைச் செல்லாது என சட்டப்படி மறுப்பதென்பது, மக்களின் மத நல்லிணக்க மரபை இல்லாது ஒழிக்கும் இந்துத்துவ பாசிசப் போக்கு ஆகும். இந்துவாக இருக்கும் ஒருவர் வேளாங்கண்ணி கோவிலுக்குப் போகிறார்; இஸ்லாமிய கந்தூரி விழாவிலும் பங்கேற்கிறார். இதையெல்லாம் எச்சரித்து தடை செய்கிறது. மேலும் அவர்களை இந்து சாதிய கட்டமைப்பிலேயே அடக்கத் துடிக்கும் சாதி இந்துவின் மனநிலையை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது இத்தீர்ப்பு.
எந்த ஒரு மதத்தையும் பின்பற்றுவதென்பது ஒருவரது அடிப்படை ஜனநாயக உரிமை. பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களுக்கு மாறினாலும் சாதிய தீண்டாமை துரத்துகிறது. இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.
மதம் மாறுவதாலேயே சாதிய அடையாளம் நீங்கி விடுவதாகச் சட்டம் கருதினால் சாதியத்தின் பிறப்பிடமே இந்து மதம்தான் என்ற உண்மையைச் சட்டம் ஒப்புக்கொள்வதாகப் பொருள். அப்படியெனில் தடை செய்யப்பட வேண்டியது சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்து மதம்தானே தவிர, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள் அல்ல.
அரசியலமைப்பு உறுப்பு 341-இன் படியான எஸ்.சி. பட்டியலின் நோக்கம் என்பது மதத்தின்படி மக்களை வகைப்படுத்துவதல்ல. சமூக ரீதியில், கல்வி ரீதியில் தாழ்த்தப்பட்ட மக்களை இனங்கண்டு அறிவித்து அவர்களுக்கான பாதுகாப்பு உரிமைகளை அங்கீகரிப்பதே.
பழங்குடியினர் விவகாரத்தைப் பொறுத்தவரை மதமாற்றம் என்பது பெரிய தடையாக இல்லை. அதாவது அவர் மாற்று மதத்திற்கு மாறினாலும், பழங்குடியின அந்தஸ்தை உடனடியாக இழக்க மாட்டார் என்கிறது சட்டம். பரவாயில்லையே இந்திய நாட்டுச் சட்டம் இந்நாட்டுப் பழங்குடியினருக்கு ஜனநாயகத்தை வழங்குகிறது என நினைத்தால் நம் முகத்தில் மீண்டும் கரியைப் பூசுகிறது நீதிமன்றம்.
பழங்குடியினராக இருந்தாலும் மதம் மாறியவர்கள் பழங்குடியின மரபுகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சார வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனரா என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும் பழங்குடியின சமூகத்தவரால் ஏற்கப்பட்டவராக இருக்க வேண்டும் என இரு நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
பழங்குடியின பிரிவைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐந்து வேளை தொழுகை நடத்த அனுமதி உண்டா என்றால் அதற்குத் தடை. அதுதான் சட்டம் சொல்கிறதே, பழங்குடியின மரபுகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சார வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனரா என்பதை நிரூபிக்க வேண்டும் என்று. ஆக இதுவும் ஒரு ஏமாற்று வேலை.
ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான வனவாசி கல்யாண், பழங்குடியின மக்கள் மத்தியில் வேலை செய்து “கர்வாப்சி” எனும் “தாய் மதம் திரும்புதல்” என்ற பெயரில் இந்து மதத்தை அவர்கள் மத்தியில் திணித்து வருகிறது.
மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிச கும்பல் அதிகாரத்திற்கு வந்த பின், இந்தியா முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதிலும் கிறித்தவ, இஸ்லாமிய உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
வனவாசி கல்யாணும், ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி கும்பல்களும் கலவரங்கள் மற்றும் சதித்தனங்கள் மூலம் இந்து மதத்திற்குச் செய்கின்ற சேவையைத்தான் இந்திய அரசியல் சட்டமும், இந்திய நீதிமன்றங்களும் சட்டத்தின் பெயரால் செய்து வருகின்றன.
இந்த தீர்ப்பு வந்தவுடன் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத், வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 44 தனித் தொகுதிகளில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களில், 90 சதவிகிதம் கிறிஸ்தவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவின் மூலம், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்புமனுக்களைத் தீவிரமாகப் பரிசீலித்து, தகுதியற்ற வேட்பாளர்களை நிராகரிக்க உத்தரவிட வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய பொய்யைப் பரப்பி கிறிஸ்தவ தலித் மக்கள் மீது பாசிஸ்டுகள் தாக்குதல் நடத்துவதற்கான அடிப்படையையும் இத்தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
மேலும், மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்குப் பட்டியலின அந்தஸ்து வழங்கப்படக் கூடாது என்ற சங்கப் பரிவார கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு இத்தீர்ப்பு அப்பட்டமாகத் துணைபோகிறது.
இன்று பாசிச கும்பல் இந்திய ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து கண்டு, அனைத்து உறுப்புகளையும் பாசிசமயமாக்கி வருகிறது. இந்த நாட்டை இந்துராஷ்டிரமாக மாற்றுவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீதிமன்றங்களும் சட்டத்துறையும் விதிவிலக்கல்ல. பாசிச கும்பலின் ஆட்சியில் இப்படியான தீர்ப்புகள் வருவதில் எந்த விதமான ஆச்சரியமும் இல்லை. இந்த பாசிச கும்பலை வீழ்த்தி மாற்றுக் கட்டமைப்பு – அரசியல் சாசனத்தைப் படைக்காமல், தலித் கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் வாழும் கோடான கோடி உழைக்கும் மக்களுக்கும் நம்மால் விடுதலை பெற்றுத்தர முடியாது.
உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவோம். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல்களை வீழ்த்தி, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்கக் களமிறங்குவோம்.
பதிவு மக்கள் அதிகாரக் கழகம், நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள், 9385353605
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 03 | ஜனவரி, 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய