Thursday, June 11, 2026
முகப்பு பதிவு பக்கம் 6

மனிதனின் புறச்சூழல் மனிதப் பண்புடையதாக்கப்பட வேண்டும் | மார்க்ஸ் 143

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் காரல் மார்க்சின் 143-வது நினைவு நாளையொட்டி மார்க்ஸ் – எங்கெல்ஸ் எழுதிய “புனிதக் குடும்பம்” என்ற நூலின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.

***

தொடக்க காலத்தில் மனிதனின் நற்பண்புகள், எல்லா மனிதர்களுக்கும் சம அளவில் கொடுக்கப்பட்ட அறிவு, அனுபவம், பழக்கவழக்கம், கல்வியின் சர்வவல்லமை, புறச் சூழல் மனிதன் மீது செலுத்துகிற தாக்கம், தொழிலின் மாபெரும் முக்கியத்துவம், ஆனந்தமாக இருப்பதை நியாயப்படுத்துதல் இதரவை பற்றிய பொருள்முதல்வாதத்தின் போதனைகளிலிருந்து, அது கம்யூனிசத்தோடும் சோஷலிசத்தோடும் எவ்வாறு கட்டாயமாக இணைக்கப் பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு மிகச் சிறந்த நுண்ணறிவு தேவைப்படாது.

மனிதன் தன்னுடைய அறிவு, புலனுணர்வு இதரவை அனைத்தையும் புலன்களின் உலகத்திலிருந்தும் அதிலிருந்து பெறப்பட்ட அனுபவத்திலிருந்தும் அடைகிறானென்றால் இனி செய்ய வேண்டியது என்னவென்றால் அனுபவ உலகத்தை -அதில் உண்மையிலேயே மனிதப் பண்புடையவற்றை மனிதன் அனுபவிப்பதற்கும் அதனுடன் நெருக்கமேற்படுத்திக் கொள்வதற்கும், அவன் தன்னை மனிதனாக உணர்ந்து கொள்ளக் கூடிய வகையிலும் – மாற்றியமைக்க வேண்டும். சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட்டால் நலன்களே எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் இலட்சியம் என்பதால், மனிதனின் தனிப்பட்ட நலன் மனித குலத்தின் நலனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.

பொருள்முதல்வாதக் கருத்தின் படி மனிதன் சுதந்திரம் இல்லாதவன் என்றால் – அதாவது ஏதாவது ஒன்றை ஒதுக்குகிற எதிர்மறைச் சக்தியின் மூலமாக இன்றி, தனது உண்மையான தனித்தன்மையை உறுதியாகக் காட்டுகின்ற நேரடியான சக்தியின் மூலமாகவே மனிதன் சுதந்திரம் உடையவனாகக் கருதப்படுகிறான் – குற்றங்களுக்காக, தனி மனிதனை தண்டிக்கக் கூடாது; குற்றங்களின் சமூக-விரோதப் பிறப்பிடங்கள் அழிக்கப்பட வேண்டும்; ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உயிராற்றலின் இன்றியமையாத வெளிப்பாட்டுக்குரிய சமூக வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும். மனிதன் புறச்சூழலால் உருவாக்கப்படுகிறான் என்றால் அந்தப் புறச்சூழல் மனிதப் பண்புடையதாக்கப்பட வேண்டும். மனிதன் இயற்கையாகவே கூடி வாழ்பவன் என்றால் அவன் தன்னுடைய உண்மையான இயல்பை சமூகத்தில் மட்டுமே வளர்த்துக்கொள்ள முடியும்; அந்த இயல்பின் சக்தியை தனிப்பட்ட தனிநபரின் சக்தியால் அளக்கக் கூடாது; சமூகத்தின் சக்தியினால் அளக்க வேண்டும்.

(1844 செப்டம்பர் – நவம்பரில் எழுதப்பட்டது)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2015 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 9 | ஜூலை , 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சர்வதேச யோகா தினம் : “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா!
  • மூடு டாஸ்மாக்கை! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31!
  • சின்ன மோடி, பெரிய மோடி
  • மேகி நூடுல்ஸ், பால வித்யா மந்திர் போராட்டம், செம்மரக் கடத்தலில் டி.எஸ்.பி
    மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை!
  • “பிணந்தின்னிகள்”
  • அறிவுத்துறையினரை வதைக்கும் அரசு பயங்கரவாதம்!
  • மியான்மரில் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் : சுயதம்பட்ட மோடியின் இன்னுமொரு ஆக் ஷன் சினிமா!
  • “தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக் கட்டு” – இதுதான் மோடி பிராண்டு “வளர்ச்சி”!
  • பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி
  • “ஆகா அரசுப் பள்ளி! ஐயோ… தனியார் பள்ளி!”
    – கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்கக் கோரும் கல்வியுருமை மாநாட்டின் அறைகூவல்!
  • “நம்ம கை உசரணும், முதலாளி கை கீழே போகணும்!”
    குட்டக் குட்ட குனிந்து கொண்டிருந்த கோவை – சி.ஆர்.ஐ தொழிலாளர்களின் வர்க்கச் சீற்றம்
  • அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
  • எல்லை மீறுவதுதான் தீண்டாமைக் கொடுமையா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2015 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 8 | ஜூன் , 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மீண்டும் முதல்வராக ஜெயா:
    கோலோச்சுகிறது பார்ப்பன மனுநீதி!
  • பெரம்பலூர் கண் பறிப்பு வழக்கு தரும் பாடம் :
    கோர்ட்டு படியேறாதே! தண்டனையை அங்கேயே நிறைவேற்று!!
  • ஜெயா விடுதலை :
    மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு
  • 4+3=8
    விடுதலை!
  • ஊரறிந்த கொள்ளைக் கும்பலுக்கு உத்தமவேடம் கட்டும் ஊடகங்கள்
  • “மேடம் 45 பர்சென்ட்!”
  • நீதியே உன் விலை என்ன?
  • “தனியார் பள்ளி தாலி அறுக்குது, அரசுப் பள்ளி அனைத்தும் வழங்குது!”
    அரசுப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கக் கோரி பு.மா.இ.மு.வின் பிரச்சாரம்
  • அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத் தடையை எதிர்த்து பரவும் போராட்டம் :
    பார்ப்பனத் திமிருக்கு விழுந்த செருப்படி!
  • மோடியின் ஓராண்டு ஆட்சி :
    ஒப்பனை கலைந்தது!
  • அரசு :
    அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
  • செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் :
    பாலியல் வக்கிரக் கூடங்கள்
  • ஜெயா நிரபராதியா?
    பார்ப்பனியத்துக்கும் பணத்துக்கும் கைப்பாவையே நீதிமன்றம்!
    நீதியை நிலைநாட்ட ஒரே வழி மக்கள் அதிகாரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலை: குற்றவாளி போலீசு அதிகாரிகளைக் கொலை வழக்கில் கைது செய்!

12.03.2026

மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலை!

குற்றவாளி போலீசு அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்!

மானாமதுரை மக்கள் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகைச் செய்தி

டந்த 08.03.2026 அன்று ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞர் மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டார போலீசால் அடித்து கால் உடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன் ஆகியோர் தலைமையிலான போலீசு படைப்பிரிவினர் ஆகாஷை படுகொலை செய்துள்ளனர்.

இது வரை இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யாததற்கு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக வன்மையான கண்டனங்கள்.

“இளைஞர்களுக்கு இடையிலான மோதலுக்காக ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரைக் கைது செய்துள்ளோம். தப்பி ஓடும் போது பாலத்திலிருந்து ஆகாஷ் கீழே விழுந்ததில் கால் உடைந்தது. அதன் பிறகு மூச்சுத்தினறி இறந்து விட்டார்” என்று போலீசு சொல்கிறது. ஆனால் போலீசிடம் பிடிபட்ட ஆகாஷை அதே வழக்கில் பிடிபட்டதாகச் சொல்லப்படும் மற்ற நண்பர்கள் பார்க்கும் போது அவரது கால்கள் உடைபடவில்லை. ஆகாஷை போலீசு நிலையத்தில் சந்தித்த அவரது அம்மாவிடம் “எங்கள் அகமுடையார் சாதிக்காரனை அடிப்பாயா; உனக்கு அவ்வளவு திமிரா” எனச் சொல்லி காலில் இரும்புக்கம்பியை வைத்து அடித்து ஆகாஷின் காலை உடைத்ததாக அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும் ஆகாஷ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது கொடுத்த வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் போலீசுகாரர்கள் காலுக்கு இடையில் கல்லை வைத்து ஈரச் சாக்கை சுற்றி இரும்பு கம்பியால் அடித்தனர் என்றும், பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் கால் உடைந்தது என்று பொய் சொல்லச் சொல்லியும் தாக்கியுள்ளனர் என்பதைப் பதிவு செய்துள்ளார்.

“ஆகாஷை சட்டப்படி விசாரித்து நீதிமன்றத்தில் நிறுத்தாமல் கால்களை உடைத்து படுகொலை செய்துள்ளது போலீசு. எங்களுக்கு நீதி வேண்டும்” என ஆகாஷின் அம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உடற்கூராய்வு அறிக்கையிலும் போலீசு தாக்கியது அம்பலமாகியுள்ளது.

திருப்புவனம் அஜித்குமார் லாக்கப் படுகொலையில் போலீசு சிறப்புப்படை குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டது போல், ஆகாஷும் போலீசு சிறப்புப்படை குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் மானாமதுரை அருகில் இடைக்காட்டூரில் அகமுடையார் சாதி வெறியர்கள் ஆயுதங்களுடன் தேவேந்திர குல மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களையும் இதே போலீசுதான் கைது செய்துள்ளது. அவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை.

ஆதலால் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ஐந்தாவது நாளாகப் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது.

ஆனால் இந்தப் போராட்டத்திற்கு எதிராக ஆதிக்கச் சாதி வெறி பிடித்த கும்பல் மானாமதுரை வளநாடு பகுதியிலும் மானாமதுரை நகரத்திலும் சில போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதை அனைத்து ஜனநாயக சக்திகளும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஜனநாயகமற்ற இந்த ஆதிக்கச் சாதிக் கும்பலை தமிழ்நாடு அரசு ஒடுக்க வேண்டும்.

சாதி வெறியைத் தூண்டும் ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களை, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2015 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 7 | மே , 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அரசு ஒப்பந்த வேலைகள் (OUTSOURCING) மக்கள் பணத்தைக் கொள்ளையிடும் குறுக்கு வழிகள்
  • ஆற்றுமணல் கொள்ளையர்களை விரட்டியடித்த வீரம் செறிந்த போராட்டம்
  • உச்சநீதி மன்றம் : மனுவின் மறுஅவதாரம்
    – சொத்துக்குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள்
  • ‘தத்து இருக்க பயமேன்!’
  • “தோழர் லெனின் காட்டிய வழியில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் அறைகூவல்
  • செம்மரக் கடத்தல் : ஆந்திர அரசின் இரட்டை வேடம்!
  • முத்ரா வங்கித் திட்டம் : கந்துவட்டிக் கும்பலுக்குச் சிவப்புக் கம்பளம்!
  • குறுந்தொழிலுக்குச் சாவுமணி!
  • மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களைக் கொன்ற கரங்கள் நீதியையும் கொல்கின்றன!
  • குஜராத் : அரசமைப்பையே குற்றக்கும்பலாக்கும் சட்டம்!
  • “பகத் சிங், ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிசப் புரட்சியாளனே தவிர, தீவிர தேசியவாதி அல்ல!” – பேராசிரியர் சமன்லால் பேட்டி
  • அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
  • மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி
  • “வனவிலங்கு சரணாலயத் திட்டதைத் தடுத்து நிறுத்துவோம்!” – கொடைக்கானல் வட்டார மக்களின் போர்க்கோலம்!
  • “ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்!
    மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!!”
    மே நாள் சூளுரை!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2015 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 6 | ஏப்ரல் , 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அரசு அதிகாரி டி.கே.ரவி மர்மச் சாவு : இந்த வளர்ச்சிப் பாதையில் நேர்மைக்கு இடமில்லை!
  • கல்விக் கொள்ளையர்களின் அம்மா!
  • சகாயம் : அதிகார வர்க்க சட்டவாதப் போலி போர்வீரன்!
  • முத்துக்குமாரசாமி தற்கொலை: ஏ-1 யார்? அம்மாவா? அக்ரியா?
  • மாட்டுக்கறி தடைச் சட்டம் : வலக்கரத்தில் கோமியம், இடக்கரத்தில் ஹாம்பர்கர்!
  • உ.பி. மாநிலம் : பார்ப்பன – பனியா அக்கிரகாரம்!
  • ஆர்.எஸ்.எஸ்-இன் சோதனைக் கூடமாகிறதா தமிழகம்?
  • ஹாசிம்புரா படுகொலை தீர்ப்பு : முதுகில் குத்திய துரோகம்!
  • “சர்வதேச மகளிர் தினத்தைக் கொச்சைப்படுத்தாதே!” – பெண்கள் விடுதலை முன்னணியின் அறைகூவல்
  • பட்ஜெட் : இந்தியாவைக் கொள்ளையடிப்போம்!
  • மோடி – அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை!
  • கார்ப்பரேட் ‘சமூக’ப் பாதுகாப்புத் திட்டங்கள்
  • தனியார்மயம், கார்ப்பரேட் மயம் – மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!
  • வளர்ச்சியா, பேரழிவா?
  • பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைப் பூஜைப் பொருளாக்க அனுமதியோம்!
  • காக்கி விசப்பூச்சிகள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2015 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 5 | மார்ச், 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி!
  • செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு :  மக்களின் போர்க்கோலம்!
  • ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி :  மாற்றா? ஏமாற்றா?
  • மோடி ஆட்சியில்.. யாருக்கு நல்ல காலம்! யாருக்கு கேடுகாலம்!!
  • தெருக்களில் இந்து பயங்கரவாதிகள்! பதவிகளில் அரசு பயங்கரவாதிகள்!!
  • சிறீரங்கம் : தமிழகத்தின் அவமானச் சின்னம்
  • அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்
  • போபால் முதல் இராணிப்பேட்டை வரைமுதலாளி வர்க்கத்தின் ஆதாயக் கொலைகள்!
  • சுண்டைக்காய் கால்பணம்! சுமைகூலி முக்கால் பணம்!!
  • சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றங்களின் கள்ள ஆட்டம்
  • தனியார்மயம், கார்ப்பரேட்மயம்மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!
  • ஊருக்கும் வெட்கமில்லை
    இந்த உலகுக்கும் வெட்கமில்லை
    யாருக்கும் வெட்கமில்லை
    இதிலே அவளுக்கு வெட்கமென்ன?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் மார்ச் 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: ஈரான் மீதான போர்:
    மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!
  2. யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை: தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்!
  3. செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2026: டிஜிட்டல் காலனியாகும் இந்தியா
  4. கிக் தொழிலாளர்களின் போராட்டம்:
    அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!
  5. தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும்
    நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்!
  6. “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!”
    இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
  7. குஜராத் மாடல் போலிகளின் மாடல்!
  8. கிழிந்த கார்ப்பரேட் முகமூடி: எப்ஸ்டீன் கோப்புகளில் நாறும் ஏகாதிபத்தியம்!
  9. ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2026:
    மக்களின் உரிமைகள் பறிப்பு
    அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மார்ச் 8: ஆட்சியிலும் அதிகாரத்திலும் பெண்களுக்குச் சம உரிமை எப்போது?

லக பெண்கள் தினத்தை ஊடகங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பெண்களின் நிலைமை முன்னேறியிருக்கிறதா இல்லையா என்று பட்டிமன்றங்களை நடத்தி, டி.ஆர்.பி-யை உயர்த்திக் கொள்வதற்கேற்ப தீர்ப்புகளை வழங்குகின்றன. இந்தியாவில் பெண்களின் நிலையைவிட, தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பெண்களின் நிலை உயர்ந்திருப்பதாகக் காட்டப்படுகிறது. சினிமா சீரழிவின் உச்சமான நடிகர் விஜய் பெண்கள் தினத்தில் பேசிய விசயங்கள் பெரும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த அக்கப்போர் ஒருபுறம் இருக்க, பெண்களின் உண்மை நிலைமை என்ன?

சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்கள், சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் அதே அளவிற்கு அல்லது, அதற்கு நெருக்கமான ஒரு விகிதத்தில் பங்கேற்கிறார்களா? இந்த அடிப்படையான கேள்வி ஒன்றே, பெண்களின் நிலைமை என்னவென்று தெரிவித்துவிடுகிறது.

பெண்களுக்கு சம உரிமையைப் பற்றிப் பேசுவதாகின், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சரி விகிதத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் எந்த அளவிற்கு சரி விகிதத்திற்கு நெருக்கமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேச வேண்டும்.

முக்கியமாக, அரசியலில் பெண்கள் சரி விகிதத்தில் பங்கேற்பது முக்கியமான விசயமாகும். அவ்வாறு பங்கேற்கிறார்கள் என்றால், சமூகம் உரிமைக்கான போராட்டத்தில் முன்னேறி வந்திருக்கிறது என்று சொல்லலாம்.

சில சூழ்நிலைமைகளில் சிறிது காலம், பெண்கள் சிலர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பதைக் காட்டி, பெண்கள் முன்னேறி வந்திருப்பதாகக் கூறுகின்றனர். இந்த நிலைமை எந்த வகையிலும் பெண்களுக்கோ சம உரிமைக்கான போராட்டத்திற்கோ நம்பிக்கைக்குரியது அல்ல. ஒவ்வொரு நாட்டின் குறிப்பான சூழ்நிலைமைகளின் தன்மையைப் பொறுத்துத்தான் அது தீர்மானிக்கப்படுகிறதே அன்றி, பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் அதிகாரத்திலோ அல்லது ஆட்சியிலோ அந்த பங்கேற்பு இருப்பதில்லை; நாம் அறிந்தவரை, நிலவுகின்ற முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பில் மிக விதிவிலக்காகவே, பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனரே அன்றி, பொதுவில் ராஜா குட்டி போட்டால் ராஜா குட்டி என்ற வகையில்தான், அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கேற்பதற்குப் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி போன்ற சில பெண்கள் ஆட்சியில் பங்கேற்றதைப் பெரிதாகப் பேசுகின்றனர். தங்களது கட்சியில் எத்தனை பெண்கள் இருக்கின்றனர் என்று சொல்லி சில நேரங்களில் சங்கிகளும் சீமான்களும் உளறுகின்றனர். ஆனால், அவர்கள் பெண்களின் உரிமைக்காகக் கொடுத்த குரல் என்ன; பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் என்ன என்பதிலிருந்துதான் அவர்கள் கட்சியில் குறிப்பிட்ட அளவு பங்கேற்றிருப்பதைப் பரிசீலிக்க முடியும். மாறாக, சீமானும், விஜய்யும் பெண்கள் குறித்து இழிவாகவும் ஆபாசமாகவும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அப்பெண்களைப் பெண்களின் பிரதிநிதிகளாகக் கருத முடியுமா?

சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சம விகிதத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், ஒரு நாட்டின் பொருளாதாரம் அதற்கான வாய்ப்புகளையும் போராட்டத்தையும் முதன்மையானதாகக் கொண்டிருக்க வேண்டும்.

தி.மு.க. மற்றும் திராவிட இயக்க ஆதரவாளர்கள் பலரும் தமிழ்நாடு பெண் கல்வியில், பெண்களுக்கான ஆரோக்கியம், சுகாதாரம், வாழ்விடம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். பல துறைகளில் பெண் ஆளுமைகள் வளர்ந்திருப்பதாக எடுத்துக்காட்டுகின்றனர். தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்தும் இந்தியாவின் தேசிய சராசரி அளவிலிருந்தும் முன்னேறி இருப்பதாகக் கூறுகின்றனர்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை; பெண்களின் சமூக நிலைமை, சமூக விழிப்புணர்வு கீழ்மட்டங்களில் வளர்ந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இவர்கள் பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவதைப் பற்றிப் பேசுகிறனரே தவிர, ஆட்சியிலும் அரசியல் அதிகாரத்திலும் பெண்களின் நிலைமை என்ன என்பது குறித்துப் பேசுவதில்லை.

ஏனெனில், உற்பத்தியில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதானது முதலாளித்துவ சுரண்டலுக்கு அவசியமான தேவைகளில் ஒன்றாகும். குறைந்த கூலிக்கு பணியமர்த்தப் படுவதாலும் அதீத ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு உரிமைக்கான குரல் கொடுப்பதற்கு வாய்ப்பின்றி இருப்பதாலும், அவர்களை உற்பத்தியிலும் சமூகத்திலும் கீழ் நிலையில் அமர்த்துவது, முதலாளித்துவ சுரண்டலின் கைதேர்ந்த, நுட்பமான அணுகுமுறையாகும். ஃபாக்ஸ்கான் மாதிரியான தொழிற்சாலையில் கழிவறை பயன்படுத்துவதற்குக் கூட இடைவேளையின்றி வலி நிவாரணி கொடுக்கப்பட்டு அற்ப கூலிக்கு பெண்கள் கசக்கிப் பிழியப்படுவதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

மறுபுறம், பாசிச பா.ஜ.க. கும்பலோ பெண்கள் மீதான இந்த உழைப்பு சுரண்டலை உச்சத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வால் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு பெண்களை சுரங்கம் உள்ளிட்ட ஆபத்து நிறைந்த துறைகளில் இரவு நேரங்களில் (இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை) வேலைகளில் ஈடுபடுவதற்கு வழி செய்துள்ளது. இவையெல்லாம் பெண்கள் மீதான ஈவிரக்கமற்ற, மிருகத்தனமான உழைப்புச் சுரண்டலையும் பாலியல் வன்கொடுமைகளையும் மேலும் தீவிரப்படுத்துவதுடன் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக அவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும்.

அதேபோல், சனாதனவாதிகள் பெண்களுக்கு எந்தவித உரிமைகளும் வழங்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்; அவர்களை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்வதற்காக அனைத்து சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பக்தியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக இல்லாத கதைகளையெல்லாம் அவிழ்த்து விடுகிறனர். உத்தரப்பிரதேசத்தில் போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு குறைந்தது 121 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் இவர்களது வரலாறாகும். இவர்கள் ஆளும் மாநிலங்களில் பெண்களின் நிலைமை நாளுக்கு நாள் பின்னடைவு அடைந்தது வருவது, இதற்குச் சான்றாகும்.

தமிழ்நாட்டில், அடிமை அ.தி.மு.க. – பாசிச பா.ஜ.க. கும்பலின் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் பரப்பப்பட்ட முக்கியமான பரப்புரைகளைப் பார்ப்போம். அத்திவரதர் என்ற ஒரு கதையைக் கட்டிவிட்டு நடந்த புதுப் பிரச்சாரம்; ஆறுகளை எல்லாம் ஆக்கிரமித்து புஷ்பரகரணம் என்று கதைவிட்டு அரசே அதற்குப் பரப்புரை செய்த விவகாரம் போன்றவை எல்லாம், அறிவு பெற்று முன்னேறிவரும் சமூகத்தைப் பின்னுக்கு இழுப்பது மட்டுமல்ல, பெண்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்துவது, பெண்கள் தங்களது உரிமைகள் குறித்துச் சிந்திப்பதிலிருந்து திசைதிருப்பி, அவர்களை பக்தியில் ஆழ்த்துவது என்ற கேடான நடவடிக்கைகளாகும். இதுபோல, இன்னும் பல விசயங்களை நாம் குறிப்பிட முடியும்.

இத்தகைய சூழலில், எந்த கட்சியும் பெண்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் சரி விகிதத்தில் ஈடுபடுத்தப்படுவது குறித்து வாய்திறப்பதில்லை. இது குறித்து நாம் கேள்வி எழுப்புகையில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பெண்கள் சரிவிகிதத்தில் பங்கேற்பது என்ற எண்ணிக்கை வந்துவிட்டால் பெண்களுக்கு சம உரிமை கிடைத்துவிடுமா என்று சிலர் கேட்கலாம். இது, ஏதோ எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை என்று சுருக்குவதாகச் சிலர் சொல்லலாம். ஆனால், அவ்வாறு சொல்பவர்கள், அந்த எண்ணிக்கையை ஏன் எந்த கட்சியும் கொள்கையாக ஏற்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.

எனவே, இந்த பார்ப்பனிய – ஆணாதிக்க கட்டமைப்பானது அதன் இயல்பிலேயே பெண்களுக்கு விரோதமானதாக உள்ளது என்பதைப் பரிசீலிக்க வேண்டும். பெண்கள் இந்நாட்டில் அடிப்படை உரிமைகளைக் கூட போராடிப் பெறும் நிலையே உள்ளது. அவ்வாறு பெறப்படும் உரிமைகளை நடைமுறைப்படுத்த வைப்பதற்கும் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த 11 ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் போராடிப் பெற்ற சிறு உரிமைகளும் நடைமுறையில் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்களை வீட்டிலேயே இருத்துவதற்கான கருவியாக பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் போன்றவை பாசிச கும்பலால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, இக்கட்டமைப்பிற்குள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பெண்களுக்குச் சம உரிமை கோரிக்கையை வென்றெடுப்பது சாத்தியமற்றது என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. பெண்களுக்கு உண்மையான அதிகாரம் கிடைப்பதற்கான பாதையானது பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டத்திலேயே அடங்கியுள்ளது.

அந்த வகையில், இப்போராட்டத்தின் முதல் படியாக பெண்கள் அமைப்பாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூகக் குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணமான விளம்பரங்கள், திரைப்படங்கள், காணொளிகள், புராணக் கதைகள், சமூக ஊடகப் பக்கங்கள், இதழ்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இவை இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க மனநிலையை உடைக்க முடியாது. இத்துடன், பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகள் அதிகரிப்பதற்குக் காரணமான, போதைக் கலாச்சாரமும் ஒழிக்கப்பட வேண்டும்.

இதற்கான போராட்டத்தை பெண்களுக்கு உண்மையான அதிகாரம், உரிமை அளிக்கின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டியுள்ளது.


தங்கம், சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2015 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 4 | பிப்ரவரி, 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: … ஆதலினால் தேசத் துரோகம் செய்வீர்!
  • “அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்து! அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு!!”– புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் முற்றுகைப் போராட்டங்கள்
  • நாடும், நாட்டின் வளங்களும் பார்ப்பன – பனியாக்களின் கோரப்பிடியில்…
  • பத்ரிபால் போலிமோதல் கொலை தீர்ப்பு : கொலைகாரர்களை நீதிபதிகளானால்…
  • தேசம், தேசபக்தி, அதிகாரவர்க்க அயோக்கியர்களின் புகலிடம்!
  • நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால்
  • தில்லைக் கோயில் தீர்ப்பு : பார்ப்பன “காப்” பஞ்சாயத்து
  • நம்மாழ்வார் : ஒரு இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி!
  • முசாஃபர் நகர் அகதிகள் முகாம் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம்!
  • எதிர்கொள்வோம்!
  • தமிழக போலீசின் அட்டூழியங்கள்: சமூகத்தின் மனசாட்சிக்கு விடப்படும் சவால்!
  • தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டு உரிமை மறுப்பு: அரசு-ஆதிக்க சாதிவெறியர்களின் கூட்டுச் சதி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் மார்ச் 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: ஈரான் மீதான போர்:
    மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!
  2. யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை: தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்!
  3. செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2026: டிஜிட்டல் காலனியாகும் இந்தியா
  4. கிக் தொழிலாளர்களின் போராட்டம்:
    அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!
  5. தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும்
    நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்!
  6. “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!”
    இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
  7. குஜராத் மாடல் போலிகளின் மாடல்!
  8. கிழிந்த கார்ப்பரேட் முகமூடி: எப்ஸ்டீன் கோப்புகளில் நாறும் ஏகாதிபத்தியம்!
  9. ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2026:
    மக்களின் உரிமைகள் பறிப்பு
    அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி, 2015 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 3 | ஜனவரி, 2015 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்
    புஸ்வாணமாகிப் போனது மோடி அலை! நிரந்தரமானது சாதி-மத பிளவு நிலை!!
  • கழுத்தை இறுக்குது இலாபவெறி! தொழிலாளி வர்க்கமே கொதித்தெழு!!
  • பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகள் எரிப்புப் போராட்டம்!
  • ஆற்று மணல் கொள்ளை : தமிழகத்தைக் கவ்வியிருக்கும் பயங்கரவாதம்!
  • ஆற்று மணல் கொள்ளை : கொல்லப்படுவது நதிகள் மட்டும்தானா?
  • கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூடு! ஆசைக்கும் அச்சுறுத்தலுக்கும் பணியாத மக்கள்திரள் போராட்டம்!
  • மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு! அதிகாரத்தைக் கையிலெடு!!
  • தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராசனைப் பாதுகாப்பது யார்?
  • மறுகாலனியத் தாக்குதலும் இந்துவெறியர்களின் கொட்டங்களும் : ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
  • ஜெயா பிணை மனு : உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியின் அதீத அக்கறை – அவசரம்
  • முல்லைப் பெரியாறு : அணையைப் பாதுகாக்க அணிதிரள்வோம்!
  • குற்றவாளி ஆளும் தமிழகம்! நீதிமன்றத்தின் முகத்தில் மலம்!!
  • சி.ஐ.ஏ.: பயங்கரவாதத்தின் பிதாமகன்!
  • நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்!
  • சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர், 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 2 | டிசம்பர், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அதிகார வர்க்கத்தின் அலட்சித்திற்குப் பலியான மழலைச் செல்வங்கள்!
  • புரட்சிக்கு ஏங்குது நாடு! இதுதான் தருணம் போராடு!!– புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் அறைகூவல்
  • மோடி அரசு : அதானி குழுமத்தின் ஏஜென்சி!
  • எம்.ஜி.ஆர் கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தை தள்ளியபாசிசக் கோமாளி!
  • எட்டப்பன் போனார்! தொண்டைமான் வந்தார்!
  • 2ஜி ஊழல் : பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!
  • கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாபத்துக்காகவே மின்வாரியத்தின் நட்டம்!
  • இலக்கு வைத்த அரசே நடத்தும் கொலைகளும் கொள்ளைகளும்!
  • தமிழ் முகமூடி அணிந்துவரும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக…
  • மீனவர் தூக்கு ரத்து : இது நரேந்திர மோசடி!
  • தோழர் சிவா விடுதலை : அறிவும் மானமும் இல்லாத அதிகார வர்க்கம்!
  • “வாத்தியாரைப் போடு” பா.ஜ.க அரசைப் பணியவைத்த பள்ளி மாணவிகளின் போராட்டம்!
  • கம்யூனிச அகிலத்தின் 150-வது ஆண்டு நிறைவு: மூலதனத்தின் சர்வதேசியத்திற்கு முறிவு மருந்து பாட்டாளி வர்க்க சர்வதேசியமே!
  • அமெரிக்க ஏகாதிபத்தியம் எபோலா வைரசை விடக் கொடியது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஈரான் மீதான போர்: மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!

ரிந்துவரும் அமெரிக்க நிதி மூலதன ஆதிக்கத்தையும், உலக மேலாதிக்கத்தையும் எப்பாடு பட்டாவது தக்கவைப்பதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் பிராந்திய அடியாளான யூதவெறி பிடித்த இசுரேலும் இணைந்து, மேற்காசியாவில் ஒரு மாபெரும் பேரழிவுப் போரைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

இரத்த வெறிபிடித்த அமெரிக்கா-இசுரேலின் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியைக் குறிவைத்து இசுரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் 165 அப்பாவி பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரத்தம் தொய்ந்த அக்குழந்தைகளின் புத்தகங்களும், புத்தகப் பைகளும் அக்கோரத் தாக்குதலின் இரத்தச் சாட்சியங்களாக இருக்கின்றன. மார்ச் 3 நிலவரப்படி, 787 ஈரானிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த இரத்தக்களரியை இன்னும் ஐந்து வாரங்களுக்கு நீட்டிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கொக்கரிப்பது ஏகாதிபத்தியத்தின் உச்சக்கட்டத் திமிரைக் காட்டுகிறது.

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை நாடகம்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்ற பொய்யான குற்றச்சாட்டை சாக்காக வைத்துதான் ஈரான் மீது “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ளது.

ஆனால், இத்தாக்குதலுக்கு முன்பாக ஓமன் மற்றும் ஜெனிவாவில் ஈரானுடன் அமெரிக்கா நடத்திய மறைமுக ‘அமைதிப் பேச்சுவார்த்தைகள்’ என்பவை, ஈரானின் விழிப்புணர்வையும் இராணுவத் தயார்நிலையையும் மட்டுப்படுத்துவதற்காக அரங்கேற்றப்பட்ட அப்பட்டமான நாடகமாகும்.

பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்ற டிரம்பின் மருமகன் ஜெரார்ட் குஷ்னரும், வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதரான ஸ்டீவ் விட்காஃபும் அடிப்படையில் இசுரேலிய ஆதரவாளர்கள் மட்டுமின்றி, ஈரானுக்கு எதிரான தீவிரப் போர்வெறி மனநிலை கொண்டவர்கள் ஆவர். பேச்சுவார்த்தைக்கு இத்தகையோரை அமெரிக்கா அனுப்பியதே அப்பட்டமான சதியாகும். அதனால்தான், அவர்கள் தொடர்ந்து அதிருப்தியைக் காட்டியதுடன், தாக்குதலை உடனே நடத்த வேண்டுமென்றும் திரைமறைவில் காய்களை நகர்த்தினர். மறுபக்கத்தில், ஈரான் சார்பில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியோ, ஏகாதிபத்தியத்தின் இந்தச் சதியைப் புரிந்துகொள்ளாமல், “பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கிறது, விரைவில் நல்ல முடிவை எட்டுவோம்” என்று கூறிவந்தார்.

இந்நிலையில், பல நாட்களாகப் பாதுகாப்பான இடத்தில் தலைமறைவாக இருந்த ஈரான் உச்சத்தலைவர் அலி கமேனி, சிறப்புக் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியே வந்தார். இதனை எதிர்பார்த்திருந்த அமெரிக்கா, பேச்சுவார்த்தை குறித்து முடிவு கூறும் முன்பே பிப்ரவரி 27 அன்று ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. பிப்ரவரி 28 அன்று காலையில் ஒரே தாக்குதலில் கமேனி உட்பட 48 தலைவர்களையும் கமேனியின் குடும்பத்தினரையும் மொத்தமாக படுகொலை செய்தது.

உண்மையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை என்பதே ஈரானைத் தாக்குவதற்கான அமெரிக்காவின் ‘தயாரிப்புக் காலகட்டம்’ மட்டுமேயாகும். பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஈரானை உளவியல் ரீதியாக நிராயுதபாணியாக்கிவிட்டு, அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி வளைகுடாவில் தனது போர்க் கப்பல்களையும் ஏவுகணைகளையும் குவித்துத் தாக்குதலுக்கு முழுமையாகத் தயாராகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது.

“அமைதி ஒப்பந்தம் நமது கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. ஆனால், இந்தத் தீவிரமான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சீர்குலைக்கப்பட்டுள்ளன” என்று இப்பேச்சுவார்த்தையின் முக்கிய மத்தியஸ்தரான ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அல்-புசைதி வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். ஏகாதிபத்தியவாதிகளின் எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னாலும் ஒரு பேரழிவுக்கான சதி ஒளிந்திருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

அதேசமயம், ஈரானியத் தலைமையின் இந்த வீழ்ச்சியானது, அதன் அரசியல் பலவீனத்தை மட்டுமல்ல, ஈரானிய உளவுத்துறையின் மாபெரும் தோல்வியையும் அப்பட்டமாகக் காட்டுகிறது.

உண்மையான “மொசாட்” உளவாளிகள் தங்களின் இராணுவ மற்றும் அரசியல் உயர்மட்டக் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவித் தங்கள் உயர்மட்டத் தலைவர்களையே படுகொலை செய்வதைத் தடுக்கத் தவறிய இதே ஈரானிய அரசுதான், தங்களுக்கு எதிராகப் போராடிய நூற்றுக்கணக்கான தொழிற்சங்கத் தலைவர்களையும் ஜனநாயகச் செயற்பாட்டாளர்களையும் “மொசாட் உளவாளிகள்” என்று முத்திரை குத்தி ஈவிரக்கமின்றித் தூக்கிலிட்டது என்பது மாபெரும் வரலாற்று முரண்பாடாகும்.

அரபு நாடுகளின் அப்பட்டமான துரோகமும்
நிதியியல் ஆயுதமும்

போருக்கு முன்பு, “அமெரிக்கத் தாக்குதலுக்கு எங்கள் வான் பரப்பையோ, இராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்று அரபு நாடுகள் (சவூதி, அமீரகம்) நாடகமாடின. ஈரானின் பதிலடிக்கு அஞ்சியும், தங்கள் நாட்டு மக்களின் கிளர்ச்சிக்கு அஞ்சியுமே இந்த நாடகத்தை அரங்கேற்றின.

ஆனால், போர் தொடங்கிய சில நாட்களிலேயே, இந்த அரபு மன்னர்களின் அப்பட்டமான ஏகாதிபத்திய விசுவாசமும் துரோகமும் முழுமையாக அம்பலமாகிவிட்டன. ஈரானை ஆயுதங்களால் வீழ்த்துவதற்கு இணையாக, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அமெரிக்காவின் உத்தரவுப்படி ஈரானுக்கு எதிராக ஒரு “நிதியியல் அணு ஆயுதத்தை” கையில் எடுத்துள்ளது.

சர்வதேசப் பொருளாதாரத் தடைகளால் உலகச் சந்தையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஈரான், வேறு வழியின்றித் தனது அத்தியாவசிய வணிகங்களுக்காகவும் டாலர் பரிமாற்றங்களுக்காகவும் கடந்த பல ஆண்டுகளாகத் துபாயையே ஒரு நிழல் நிதியியல் மையமாகச் சார்ந்திருந்தது. இந்த நிர்பந்தமான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அமீரகம் தற்போது ஈரானின் கழுத்தை அறுக்கும் சதியில் இறங்கியுள்ளது.

மார்ச் 2 நிலவரப்படி, துபாய் மற்றும் அபுதாபி பங்குச் சந்தைகளைத் தற்காலிகமாக மூடியுள்ள அமீரகம், ஈரானிய நிறுவனங்களின் நிதிப் பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஈரானின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அமீரகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியாதாரங்களையும், டாலர் விநியோகத்தையும் முற்றிலுமாக முடக்கும் நடவடிக்கையில் அமீரகம் இறங்கியுள்ளது.

இது ஏகாதிபத்தியம் தொடுத்துள்ள அப்பட்டமான பினாமி போராகும். நேருக்கு நேர் மோதாமல், தனது அடியாள் படையான அமீரகத்தைக் கொண்டு ஈரானியப் பொருளாதாரத்தை வேரறுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ஈரானின் பொருளாதாரம் ஏற்கெனவே அமெரிக்கத் தடைகளால் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், அமீரகத்தின் இந்த அதிரடித் தடையால் ஈரானிய நாணயமான “ரியால்” வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்கும். இதன் கொடூரமான விளைவாக உருவாகும் பணவீக்கம், விலையேற்றம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் ஒட்டுமொத்தச் சுமையும் ஈரானிய உழைக்கும் மக்களின் முதுகில்தான் வந்திறங்கும்.

“அரபு நாடுகளின் பாதுகாப்பு” என்ற பெயரில் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தங்கள் மண்ணில் தொடர்ந்து அனுமதித்தது மட்டுமின்றி, இப்போது ஈரானிய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிதியியல் சூழ்ச்சிகளையும் அரங்கேற்றும் அமீரகத்தின் இந்தத் துரோகம், ஏகாதிபத்தியத்தின் இரத்தவெறிக்குத் துணைபோகும் அப்பட்டமான அடிமைத்தனமாகும். அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் அரபு அடிமை அரசுகளின் இந்த வரலாற்றுத் துரோகத்தை மேற்காசிய உழைக்கும் வர்க்கம் ஒருபோதும் மன்னிக்காது.

உலகப் பொருளாதார முடக்கமும்
அம்பலமான ரஷ்ய – சீன ஏகாதிபத்தியங்களும்

இந்தப் போர் வெறுமனே இராணுவத் தளங்களோடு நிற்கவில்லை; உலகப் பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளின் மீதும் நீண்டுள்ளது.

“ஸ்கை லைட்” என்ற எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 150-க்கும் மேற்பட்ட பிரம்மாண்டக் கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையில் (Strait of Hormuz) முடங்கியுள்ளன. சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா (அராம்கோ) சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமேசான் தரவு மையம் தாக்கப்பட்டதால் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் கிளவுட் சேவைகளும் (Cloud services) முடங்கியுள்ளன. இவற்றின் விளைவாக கச்சா எண்ணெய் விலை 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல; இந்த விலை உயர்வு மாபெரும் பணவீக்கமாக மாறி, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வின் மீதே கொடூரமான பொருளாதாரச் சுமையாக வந்திறங்கும் என்பதே உண்மை.

ஒருபுறம் உலகளாவிய பொருளாதார முடக்கமும், போர்ச் சூழலும் உழைக்கும் மக்களைக் காவு வாங்கும் அதே வேளையில், மறுபுறம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சீனா, ரஷ்யா ஆகிய ஏகாதிபத்தியங்கள், இந்த நெருக்கடியைத் தங்களின் சொந்த முதலாளித்துவ நலன்களுக்கான கண்ணாடியின் வழியாக மட்டுமே பார்க்கின்றன.

மத்திய கிழக்கில் சீனாவின் “பட்டுச் சாலைத் திட்டத்தின்” (Belt and Road Initiative – BRR) கீழ் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் குவிந்துள்ளன. மேலும், சீனாவின் மாபெரும் உற்பத்திப் பொருளாதாரத்திற்குத் தேவையான கச்சா எண்ணெயில் கணிசமான பகுதி வளைகுடாவிலிருந்தே வருகிறது. அதனால், அமெரிக்க-இசுரேலிய குண்டுவீச்சுகளால் தங்களின் விநியோகச் சங்கிலியும் வர்த்தக முதலீடுகளும் பாதிக்கப்படுமோ என்ற முதலாளித்துவ நலனிலிருந்தே சீனா தவிக்கிறது. அதனால்தான் களத்தில் ஈரானுக்கு எந்தவொரு இராணுவ உதவியும் செய்யாமல், ஐ.நா. சபையில் “இரு தரப்பினரும் நிதானம் காக்க வேண்டும்” என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறது. அத்துமீறித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், தாக்கப்படும் ஈரானையும் தராசின் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் சீனாவின் சந்தர்ப்பவாதம் இதன் மூலம் அம்பலமாகிறது.

ரஷ்யாவோ ஈரானை வெறும் அரசியல் பகடைக்காயாக மட்டுமே பயன்படுத்துகிறது. உக்ரைன் போரில் தனக்கு அமெரிக்கா கொடுக்கும் இராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பதிலடி கொடுக்கவும், உலக அரங்கில் அமெரிக்காவின் பிம்பத்தைச் சிதைக்கவும் ஈரானின் அழிவை ரஷ்யா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. ஐ.நா. சபையிலும் தங்கள் நாட்டு ஊடகங்களிலும் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சிக்கும் ரஷ்யா, களத்தில் ஈரானுக்குத் தேவையான எஸ்-400 போன்ற அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்காமல் ஈரானை நடுத்தெருவில் கைவிட்டுவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஹார்மூஸ் நீரிணை முடக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டுவது, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரஷ்யப் பொருளாதாரத்திற்குப் பெரும் லாபமே ஆகும். ஆக, ஏகாதிபத்தியப் போரில் உழைக்கும் மக்கள் சிந்தும் இரத்தத்தில் ரஷ்யா குளிர் காய்கிறது என்பதே அப்பட்டமான உண்மையாகும்.

அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வீழ்த்தித் தங்களைக் காப்பாற்ற இவர்கள் வருவார்கள் என்று ஒடுக்கப்பட்ட நாடுகள் நம்புவது எவ்வளவு பெரிய அரசியல் மாயை என்பதை இவர்களின் அப்பட்டமான சுயநலம் முழுமையாகத் தோலுரித்துக் காட்டுகிறது.

மோடி அரசின் பாசிசக் கூட்டு

அமெரிக்கா மற்றும் இசுரேலுடன் கொஞ்சிக் குலாவி வரும் பாசிச மோடி அரசும் தனது அப்பட்டமான ஏகாதிபத்திய விசுவாசத்தை இந்தப் போரில் காட்டியுள்ளது. ஈரானின் சாபஹார் கடற்படைத் தளம் தாக்கப்பட்டாலும், தங்களால் நிர்வகிக்கப்படும் வணிக முனையம் பாதுகாப்பாக உள்ளதே என இந்திய ஆளும் வர்க்கம் சுயநலத்தோடு நிம்மதியடைகிறது. இசுரேலியப் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் ஆலோசனைகளை மேற்கொள்ளும் மோடி அரசு, ஈரானில் நடக்கும் படுகொலைகளைக் கண்டிக்காமல் வெட்கக்கேடான மவுனம் சாதிக்கிறது. மேலும், கமேனியின் படுகொலையை கண்டிக்க வக்கற்ற அமெரிக்க அடிமை மோடி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத், பஹ்ரைன் நாடுகளில் உள்ள அமெரிக்க ஆயுத தளங்கள் மீதான ஈரானின் பதில் தாக்குதலை மட்டும் கண்டித்துள்ளார்.

அதேபோல், அமெரிக்க-இசுரேலின் போர்வெறியைக் கண்டித்து இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களும், சிறுபான்மையினரும் வீதிக்கு வந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில், அனைத்து மாநில அரசுகளுக்கும் ‘சட்டம்-ஒழுங்கு’ எச்சரிக்கையை விடுத்துத் தனது பாசிச முகத்தைக் காட்டுகிறது மோடி அரசு.

உழைக்கும் வர்க்கத்தின்
தனிப்பெரும் வரலாற்றுக் கடமை

ஈரானிய மக்களை மதவாத சர்வாதிகாரத்தில் இருந்து விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா நடத்தும் இந்தத் தாக்குதலின் உண்மையான நோக்கம் ஈரானில் அமெரிக்க ஆதரவு ஆட்சி மாற்றத்தை நடத்துவதே ஆகும். மறுபுறம், கமேனியின் மரணத்தால் ஈரானுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொள்ள, 1979-இல் ஈரானிய மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அமெரிக்கக் கைக்கூலியான மன்னர் ஷாவின் வாரிசு ரேசா பஹ்லவியும் முயற்சித்து வருகிறார்.

ஆனால், எத்தனை தலைவர்களை அமெரிக்கா வான்வழியாகப் படுகொலை செய்தாலும், சொந்த நாட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் தாங்கள் விரும்பும் ஒரு கைப்பாவை ஆட்சியை அங்கு நிலைநிறுத்த முடியாது.

ஈரானிய மதவாத ஒடுக்குமுறை அரசை வீழ்த்த வேண்டியது அமெரிக்காவின் குண்டுகளோ, இசுரேலின் ஏவுகணைகளோ அல்ல, அது ஈரானிய உழைக்கும் வர்க்கத்தின் தனிப்பெரும் வரலாற்றுக் கடமை என்பதை உணர்ந்துள்ள மக்கள், அமெரிக்காவை நாட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியடிக்க வேண்டும் என்பதையும் நன்குணர்ந்துள்ளனர்.

எனவே, அமெரிக்க மற்றும் இசுரேலின் இந்தப் பாசிசப் போர்வெறி நடவடிக்கைகளுக்கும், அதற்குத் துணைபோகும் அரபு மன்னர்களுக்கும் எதிராக உலகம் முழுவதும் உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் வீதிக்கு வந்து போராட வேண்டும். உழைக்கும் மக்களின் சமரசமற்ற வர்க்கப் போராட்டங்கள் மட்டுமே ஏகாதிபத்தியத்தையும் போர்வெறியர்களையும் நிரந்தரமாக வீழ்த்தி உண்மையான விடுதலையைப் பெற்றுத்தரும்!


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 1 | நவம்பர், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: செயல்படும் அரசும் செயல்படாத எதிர்க்கட்சிகளும்
  • பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் தோழர் சிவா குண்டர் சட்டத்தில் கைது:
    பன்னாட்டு முதலாளிகளுக்கு வாலாட்டும் தமிழக போலீசு!
  • பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்கும் சதிகாரி!
  • குற்றவாளி ஜெயாவிற்கு “விரைவு” பிணை : பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!
  • உச்சநீதி மன்றம் : ஜெயாவின் தலையாட்டி பொம்மை!
  • ஜெயா நிரபராதி ! – ஊடகஙகள் எழுதிய விநோத தீர்ப்பு!
  • அரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் : மோடி அலை என்ற வெங்காயம்!
  • தூய்மை இந்தியா : துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி!
  • மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!
  • கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
  • தீவிரமடையும் வன்கொடுமைகள் : ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
  • சையது முகமது கொலை : துப்பாக்கியின் ஆட்சி!
  • மோ(ச)டி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram