Thursday, June 11, 2026
முகப்பு பதிவு பக்கம் 9

நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்! மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!

பிப்ரவரி 2-ஆம் தேதி அமெரிக்காவுடன் மோடி அரசு மேற்கொண்ட ‘இரகசிய’ வர்த்தக ஒப்பந்தம், இந்திய மக்களின் நலனை ஏகாதிபத்தியத்தின் காலடியில் சமர்ப்பித்ததற்கான சாட்சியமே.

இதுகுறித்து தனது சமூக ஊடகப்பக்கத்தில் அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா தனது சந்தையை அமெரிக்கப் பொருட்களுக்குத் திறந்துவிட்டு, வரிகளை ‘பூஜ்ஜியம்’ அளவுக்குக் குறைக்கச் சம்மதித்துள்ளது என்றும், எரிசக்தி, நிலக்கரி மற்றும் விவசாயப் பொருட்கள் என 500 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்ய உறுதியளித்துள்ளது என்றும் குதூகலித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிகமாக எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் அறிவித்துள்ளார்.

இது இந்திய நாட்டு மக்களையும் விவசாயிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஏனெனில் டிரம்ப் அறிவித்துள்ள இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவின் மானிய விலை பால் மற்றும் விவசாயப் பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து, நம் நாட்டு பால் உற்பத்தியாளர்கள், ஏழை விவசாயிகள் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்துவிடும். அமெரிக்கப் பொருட்களை 500 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்வது இந்திய சந்தையை அமெரிக்காவின் குப்பைத் தொட்டியாக்கும். இது, ஏற்கெனவே பெருந்துயரத்தில் உள்ள உழைக்கும் மக்களையும், அமெரிக்க கார்ப்பரேட்டுகளுடன் போட்டியிட முடியாத சிறு-குறு வணிகர்களையும் ஒரேயடியாக நசுக்க அனுமதிக்கும் அயோக்கியத்தனமாகும்.

ஆனால், இந்திய விவசாயிகளின் நலனை காக்க என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக ஜம்பமடித்து வந்த மோடி, டிரம்பின் அறிவிப்புகள் குறித்து மூச்சுக் கூட விடவில்லை; “ஏற்றுமதி வரியை 50 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைத்ததற்கு டிரம்புக்கு நன்றி” என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

சங்கிக் கும்பலோ “குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பதைப் போல மோடிக்கு மாலை போட்டு பாராட்டு விழா நடத்தியுள்ளது. தற்போது வரி குறைந்துவிட்டது என கூப்பாடு போடும் சங்கிக் கும்பல், டிரம்பின் அடாவடித்தனமாக வரிவிதிப்பிற்கு முன்னர், இந்தியப் பொருட்களுக்கு வெறும் 2-3 சதவிகிதம் வரியே விதிக்கப்பட்டிருந்தது என்பதையும், சில பொருட்களுக்கு வரி பூஜ்ஜியமாக இருந்ததையும் சாதூரியமாக மறைக்கப் பார்க்கிறது. ‘பொருளாதார நிபுணர்’களோ மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவிற்கு குறைவான வரி என்று ஆறுதல் கூறுகின்றனர்.

ஆனால், இந்த வரிக்குறைப்புக் கூட எப்போது நடைமுறைக்கு வரும்? இது முழுமையான இருதரப்பு ஒப்பந்தமா அல்லது வரிகளை நீக்குவதற்கான குறுகிய ஒப்பந்தமா? இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடுமா? என எந்தக் கேள்விக்கும் அதிகாரப்பூர்வமாக மோடி அரசு பதில் அளிக்கவில்லை.

000

ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கிய போது, அமெரிக்காவின் உத்தரவையும் மீறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது. அப்போது, ‘எதற்கும் பணியாத அஞ்சாநெஞ்சன் மோடி’, ‘தேசபக்தன் மோடி’ என்றெல்லாம் சங்கிக் கும்பல் தம்பட்டம் அடித்தது. ஆனால், எப்போது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா இந்தியாவிற்கு 25 சதவிகித தண்டத்தொகை விதித்ததோ அப்போதே மோடியின் ‘தேசபக்தி’, ஆட்டம் கண்டுவிட்டது. ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள், கப்பல்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையடுத்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா சத்தமில்லாமல் குறைத்துக் கொண்டது.

குறிப்பாக, டிரம்பின் இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த அறிவிப்பு, அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி ஊழல் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியது, ஹெச்-1-பி விசா கட்டண உயர்வு என அடுத்தடுத்து மோடி கும்பலுக்கு டிரம்ப் அரசு நெருக்கடி கொடுத்து வந்தது.

இந்நிலையில், இந்நெருக்கடிகளை சமாளிப்பதற்காக ஜனவரி 27-ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்து, அதனை மாபெரும் சாதனை போலக் கொண்டாடியது மோடி அரசு. இது அமெரிக்காவை மேலும் எரிச்சலூட்டுவதாக அமைந்தது.

இதனையடுத்து, ஜனவரி 30-ஆம் தேதி “எப்ஸ்டீன் பாலியல் குற்றக்கோப்பு”களில் (Epstein Files) மோடியின் பெயர் இடம்பெற்றிருப்பது, மோடி சார்பாக அனில் அம்பானி எப்ஸ்டீனை சந்தித்திருப்பது தொடர்பான செய்திகள் வெளியாகி மோடி கும்பலுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது. இதற்குமேல் போனால் தனது ‘தூய பிரம்மச்சாரி’ பிம்பமும் சுக்குநூறாகிவிடுமோ என்ற அச்சத்தில் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை. மோடி ‘கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால்தான்’ (Modi’s Request) ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளதே இதற்கு சாட்சி.

இந்த ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கான முன்னேற்பாடாகவே, பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மின்னணுப் பொருட்கள், குறைக்கடத்திகள் (Semiconductor), மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.

இந்திய-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையில் மேற்குறிப்பிட்ட பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்றே அமெரிக்கா தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. அமெரிக்காவை திருப்திப்படுத்தும் இவ்வாறான ‘சலுகை’களை அளித்த பிறகே பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த ‘இரகசிய’ ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்தத்தில், ‘விஸ்வகுரு’, ‘தூய பிரம்மச்சாரி’ என இதுவரை கட்டமைத்துவந்த தனது பிம்பம் நொறுங்கிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்; அமெரிக்காவால் சூறையாடப்பட இருக்கும் வெனிசுலா எண்ணெய் அம்பானியின் இலாபத்திற்குத் தரப்போகும் உத்தரவாதம் மறுபக்கம் என ‘சமயோசிதமாக’ சிந்தித்த மோடி, உடனடியாகச் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை.

இதற்கு முன்பும் பல ஒப்பந்தங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் காட்டப்படாமலேயே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவை எல்லாவற்றையும் விஞ்சிவிட்டது ‘அஞ்சாநெஞ்சன்’, ‘தேசபக்தன்’ மோடியின் இந்த கேடுகெட்ட ‘இரகசிய’ அடிமைச் சாசனம்.

எனவே, இந்த அடிமைச் சாசனத்தால் இந்திய நாட்டு விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஏற்படப்போகும் பேரழிவை தடுத்துநிறுத்த – பெருந்திரளான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் உடனடி கடமையாகும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர், 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 12 | அக்டோபர், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: சோனியா-மன்மோகன்-ப.சிதம்பரம்-மாண்டேக் சிங்
      அமெரிக்காவின் கூலிப்படை!
    • “எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?”
      -முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-கருத்தரங்கம்-பொதுக்கூட்டம்
    • காவிரி: கர்நாடகத்தின் அடாவடி மைய அரசின் நழுவும் தீர்வு
    • கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி!
    • “சிங்கள இனவெறி பாசிஸ்ட் ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்காதே! ஈழத் தமிழினப் படுகொலைக்கு அங்கீகாரமளிக்காதே!”
      -புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்
    • இருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!
    • அரசு மருத்துவமனைகளின் அவலம்: எலிகள் ஒழிகின்றன! பெருச்சாளிகள் நுழைகின்றன!!
    • அம்பேத்கரியம் சாதித்தது என்ன?
    • அமெரிக்க டாலருக்காகப் பலியான உயிர்கள்
    • நரோடா பாட்டியா படுகொலை தீர்ப்பு: பத்துக்கு ஒன்பது பழுதில்லை!
    • 2ஜி – கோல்கேட்
      இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் இருவேறு அணுகுமுறைகள்
    • விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் ‘வளர்ச்சி’!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர், 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 11 | செப்டம்பர், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயற்சிக்கும் காங்கிரசு-பா.ஜ.க.வின் நரித்தனங்கள்
    • மாருதி தொழிலாளர்கள் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்
    • தமிழ்நாடு: மலைக்கள்ளன் அண்ட் கோ!
    • சென்னை பு.மா.இ.மு. தோழர்கள் மீது காக்கி ரவுடிகள் தாக்குதல்!
    • தென்னாப்பிரிக்கச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!
    • அரசுப் பள்ளிகள்: ஆங்கிலவழிக் கல்வி வந்தது முன்னே! தனியார்மயம் நுழையும் பின்னே!!
    • சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!
    • தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்திருத்தமா? புரட்சியா?
    • கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் அனுமதிக்காகச் செய்யப்பட்ட மோசடிகள்
    • கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்…
    • இலண்டன் கலகம்: 1,800 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 9 | ஜூலை, 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: அரசுத் தலைவராகிறார், ஒரு பார்ப்பன அரசியல் நரி!
    • “அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை அரசே வழங்கப் போராடுவோம்!”
      – மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் இணைந்து நடத்திய பேரணி மற்றும் மாநாடு
    • பீரங்கி ராஜீவ்… கேம்ஸ் கல்மாடி… டான்சி ராணி… சுரங்கம் ரெட்டி…
      கரி சிங் – தி கல்லுளிமங்கன்
    • தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!
    • சந்தி சிரிக்கும் சி.பி.எம்.-இன் கொலை புராணம்!
    • புதை மணலில் சிக்கியது இந்தியப் பொருளாதாரம்!
    • அரசு பயங்கரவாதத்தின் அரணாக உச்ச நீதிமன்றம்!
    • கல்விக் கட்டணக் கொள்ளைக்குப் பாதுகாப்பு! தட்டிக் கேட்பவர்கள் மீது அடக்குமுறை!!
      -பார்ப்பன ஜெயா அரசின் அட்டூழியம்
    • ஜெயா ஆட்சி: ஓராண்டில் நூறாண்டு வேதனை!
    • கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்…
    • தமிழ்த் தேசத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்
      சென்ற இதழின் தொடர்ச்சி…
    • “அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!”
      – ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 8 | ஜூன், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!
    • உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தனது இறுதிக்காலம்வரை அயராது உழைத்த
      தோழர் சீனிவாசனுக்கு வீரவணக்கம்!
    • நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை
    • நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது மதமா? சாதியா/ சொத்தா? சி.டி.யா?
    • புரட்சிகர அரசியலைப் பரப்பிக்கொண்ட மரணமடைந்த
      தோழர் செல்வராசுக்கு வீரவணக்கம்!
    • கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்…
      ஜனவரி 2012 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி
    • தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்
    • என்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்
    • வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!
    • மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு
    • நின்னா வரி… நடந்தா வரி… நெரிசல் வரி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



காதல் சரி என்றால் சாதி தப்பு | பெருமாள் முருகன்

30 செப்டம்பர் 2022 அன்று கல்லூரிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்றேன். அன்று வெள்ளிக்கிழமை. அவ்வாரத் திங்கள் கிழமையன்றுதான் உறுதியான தகவல் தெரிந்தது. மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை காலைக் கூடல் இருந்தது. ‘கல்லூரி முதல்வராக நான் பங்கேற்கும் கடைசி காலைக் கூடல் இது’ என்று தொடங்கிச் செய்தியை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவித்துச் சிறிது நேரம் உரையாற்றினேன். இன்னும் ஓரிரு மாதம் இருப்பேன் என்று நினைத்திருந்தனர். இன்றிலிருந்து நான்காவது நாள் ஓய்வு என்பது எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. உடனே ஒவ்வொரு துறையிலும் எனக்கு விடை கொடுக்கும் விதத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்று சொல்லி அழைத்துக் கொண்டேயிருந்தனர். செவ்வாய் அன்றே மூன்று நான்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். அடுத்தடுத்த நாளும் நிகழ்ச்சி அழைப்புகள். ஒவ்வொன்றுக்கும் நேரம் பார்த்து முடிந்தவரை ஒதுக்கினேன்.

புதன் காலை மாணவர் கூட்டம் ஒன்று முதல்வர் அறை நோக்கி வந்தது. ‘ஆசிரியர்கள் அழைத்தால்தான் செல்வீர்களா? மாணவர்கள் அழைத்தால் வர மாட்டீர்களா?’ என்று முன்னால் வந்த மாணவர் ஒருவர் கேட்டார். ‘அப்படியா? மாணவர்கள் யாரும் அழைத்து நான் வர மாட்டேன் என்று சொல்லவில்லையே?’ என்றேன். ‘சரி. நாங்கள் அழைக்கிறோம். எங்களுக்கும் நேரம் கொடுங்கள்’ என்றார் ஒருவர். ‘மாணவர்களுக்குத்தான் காலைக் கூடலில் பேசிவிட்டேனே, போதாதா?’ என்றேன். ‘மாணவர்கள் உங்களோடு பேச விரும்புகிறார்கள். ஒரு கலந்துரையாடல்’ என்றார் அவர். ‘அப்படியா? சரி, பேசலாமே’ என்றேன். மறுநாள் காலை பத்து மணி தொடங்கி பதினொன்று வரைக்கும் ஒருமணி நேரம் ஒதுக்கினேன். கல்லூரி தொடங்கும் நேரமான ஒன்பதரை மணிக்குக் கௌரவ விரிவுரையாளர்களைச் சந்திக்க ஒப்புதல் தெரிவித்திருந்தேன். அதனால் ‘நேரம் முக்கியம். எனக்குப் பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன’ என்று மாணவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுத்தேன்.

கல்லூரி அரங்கில் அதிகபட்சமாக முந்நூறு பேர் மட்டுமே அமர முடியும். அதற்கேற்ற வகையில் ஏற்பாடு செய்யுமாறு சொன்னேன். வரும் மாணவர்களுக்கு வடையும் தேநீரும் என் செலவு என்று சொல்லி அந்தப் பொறுப்பையும் அவர்களிடமே கொடுத்தேன். தேசிய மாணவர் படை மாணவர்கள் சிலர் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். தயக்கத்தோடு ஒருவர் சொன்னார், ‘ஆசிரியர்கள் யாரையும் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் ஐயா.’ சிரித்துக்கொண்டே ‘நிகழ்ச்சி உங்களுடையது. நீங்கள் விரும்பியவர்களை அழையுங்கள். நான் உங்கள் விருந்தினராக வருகிறேன்’ என்றேன். மகிழ்ச்சியோடு சென்றார்கள்.

பொறுப்பை எடுத்துக்கொண்டால் மாணவர்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றிவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை. பொதுவாக ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்றால் பொறுப்பாசிரியராக ஒருவரையோ சிலரையோ அமர்த்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்கு அப்படியில்லை. எல்லாமே மாணவர்கள்தான். தொடர் நிகழ்ச்சிகளிலும் கடைசிக்கட்டப் பணிகளிலும் அன்றைய நாள் ஓடிவிட்டது. ஓய்ந்திருந்த மாலை வேளையில் மாணவர்கள் வந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தனர். ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று கேட்டுக் கல்லூரி முதல்வரோடு உரையாட ஆர்வமுள்ள மாணவர்கள் பட்டியல் தயார் செய்திருந்தனர். காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் அரங்குக்கு வந்துவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அரங்குக்குள் நுழையும்போதே எல்லோருக்கும் தேநீர் வழங்கப்படும். வரவேற்புரை, தலைமையுரை, வாழ்த்துரை, நன்றியுரை உள்ளிட்ட சடங்குகள் ஏதுமில்லை. கால் மணி நேரம் தொடக்கவுரையாக என் பேச்சு. தொடர்ந்து மாணவர்கள் கேள்வி கேட்பர், நான் பதில் சொல்ல வேண்டும். ஒலிவாங்கி, மேடையமைப்பு எல்லாம் தயார். இத்தனை தெளிவுடன் ஏற்பாடு நடந்திருந்தது. மகிழ்ச்சி, காலையில் பார்க்கலாம் என்று அனுப்பிவைத்தேன்.

இப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று சில ஆசிரிய நண்பர்களிடம் சொன்னேன். ‘ஆசிரியர்கள் யாருமில்லீயா? பசங்க ஏதாச்சும் கலாட்டாப் பண்ணீரப் போறாங்க’ என்றனர். கலாட்டா செய்பவர்கள் மாணவர்கள்; கட்டுப்படுத்துவர்கள் ஆசிரியர்கள். சட்டம் ஒழுங்கைக் கையிலெடுத்துக்கொள்ளும் கலாச்சாரக் காவலர்கள் அல்லவா? அவர்களின் கவலையைப் போக்க ‘நிலைமை கட்டுக்கடங்காமல் போனால் உங்களை அழைக்கிறேன்’ என்று சொன்னேன். ஆசிரியர்களைத் தவிர்த்துவிட்டு மாணவர்கள் மட்டும் இருந்து அப்படி என்ன கேட்கப் போகிறார்கள் என்னும் ஆவல் எல்லோருக்கும் இருந்தது. எனக்குமே. ஆர்வமுள்ள மாணவர்கள்; ஆசிரியர்கள் அற்ற கூட்டம். கிட்டத்தட்ட முப்பதாண்டுக் கல்லூரி வாழ்வில் சந்திக்காத புதுமை.

மறுநாள் ஒன்பது இருபது மணிக்கு என் அறைக்கு வடையும் தேநீரும் வந்து சேர்ந்தன. கொடுத்த மாணவர் ‘ஐயா, எல்லாம் தயார். நீங்கள் சொன்னால் அரங்குக்குப் போலாங்கய்யா’ என்றார். நீங்கள் சொன்னபடி நேரத்தைப் பின்பற்றுகிறோம் என்பதை இதைவிட நயமாகச் சொல்ல முடியுமா? அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தேன். கௌரவ விரிவுரையாளர் நிகழ்ச்சியை உரிய நேரத்தில் முடித்துக்கொண்டு மாணவர் அரங்குக்குச் சென்றேன். தேசிய மாணவர் படை மாணவர்கள் நாற்புறமும் சூழ்ந்து வீரநடை போட்டனர். ‘வேண்டாம்’ என்றால் கேட்க மாட்டார்கள். ‘இது எங்கள் சம்பிரதாயம்’ என்பார்கள். அரங்கு நிறைந்த கூட்டம். முந்நூறு பேர்களில் கிட்டத்தட்ட எண்பது பேர் மாணவியர். மேடையில் நான் மட்டும். கீழிருந்து சிறுஅறிவிப்போடு நிகழ்ச்சி தொடங்கியது. ‘மாணவர்களை மையப்படுத்திய வகுப்பறை’ குறித்தும் கேள்விகள் கேட்பது பற்றியும் கால்மணி நேரம் பேசினேன். பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.

முதலில் ஒரு மாணவர் தொடங்கினார், ‘ஐயா, ஒரு வேலையைச் செய்யும்போது எனக்குப் பலவிதமான குழப்பம் வருது. மனப் பிரச்சினையாவே இருக்குது. இந்த வயசுல இப்படியெல்லாம் வருங்களா? என்னங்கய்யா செய்யறது?’ முதல் கேள்வி இப்படி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கொரானோ முடக்கக் காலம் இரண்டு கல்வியாண்டுகளைக் காலி செய்துவிட்டது. முடிந்து கல்லூரிக்கு மாணவர்கள் வந்ததும் பல்வேறு பிரச்சினைகள். அம்மாணவர்களைப் பரிவோடு அணுகும்படி ஆசிரியர்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன். அப்புறம் பார்த்தால் ஆசிரியர்களுக்கும் கலந்தாலோசனை தேவை எனப் பட்டது. மனநல மருத்துவர் ஒருவரை வர வைத்து ஆசிரியர்களுக்கு உரையாற்றச் செய்தோம். ‘எங்களுக்கு எதற்கு மனநல மருத்துவர்?’ என்று ஆசிரியர்கள் கேட்டனர். ஆசிரியர்களிடம் ஒன்றை ஏற்றுக்கொள்ளச் செய்வது சாதாரணமல்ல. எல்லா வயதினருக்கும் மனநல ஆலோசனை தேவை. ஒவ்வொரு வயதுக்கு ஏற்றபடி மனப்பிரச்சினை வரத்தான் செய்யும். வாராவாரம் மனநல மருத்துவர் ஒருவரை வர வைத்தோ சில ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தோ மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றொரு திட்டம் எனக்கிருந்தது. அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை. இதையெல்லாம் இணைத்து அம்மாணவருக்கு ஒருவாறு பதில் சொன்னேன்.

‘சமூக உணர்வுங்கறது என்னங்கய்யா? அது எல்லோருக்கும் இருக்கணுமா?’ என்று மாணவி ஒருவர் கேட்டார். கல்லூரிச் சூழலையே உதாரணமாக்கி அங்கே நாம் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகளைப் பற்றிய உணர்வைச் சொல்லி அவருக்கு விளக்கினேன். குப்பையை உரிய இடத்தில் போடுவது, உண்ட உணவுக் கழிவுகளை மறக்காமல் எடுப்பது, நட்ட செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, கழிப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வது என அன்றாட நடைமுறைகளில் கவனம் கொள்வதே சமூக உணர்வுதான் என்றேன். ‘நம்மைப் பற்றி மட்டும் யோசிக்காமல் மற்றவரைப் பற்றியும் யோசிப்பதுதான் சமூக உணர்வு’ என்று சொன்னேன். ‘உங்களுடைய மாணவர்களில் சிறந்த மாணவர் என்று யாரைச் சொல்வீர்கள்?’, ‘உங்களுக்குப் பிடித்த ஆசிரியர் யார்?’ என்பதான வினாக்கள் வந்தன.

‘நம்ம கல்லூரியைப் பற்றி வெளியில் நல்ல பெயர் இல்லையே. கரட்டுக் காலேஜ் என்கிறார்கள். அரசுக் கல்லூரி என்றாலே இழிவாகப் பார்க்கிறார்களே, ஏன் ஐயா?’ என்பது ஒரு மாணவியின் கேள்வி. நாமக்கல் கல்லூரியைக் ‘கரட்டுக் காலேஜ்’ என்றே மக்கள் குறிப்பிடுவார்கள். அது ஒரு அடையாளம். அருகில் ‘சந்நியாசி கரடு’ இருக்கிறது. அது வரலாற்றுத் தொன்மை வாய்ந்தது. சமணப் படுகைகள் உள்ளன; பாழியும் உண்டு. அதைப் பற்றித் தெரியாமல் எல்லோரும் ‘கரட்டுக் காலேஜ்’ என்றால் இழிவு என்றே கருதுவார்கள். வரலாற்றைச் சொன்னேன். இங்கிருந்து கற்று மிகச் சிறப்பான பணிகளில் இருப்பவர்கள், கல்லூரியில் உள்ள வசதிகள் ஆகியவற்றை ஆதாரங்களோடு சொல்லிக் கல்லூரியை நாம் உயர்வாக நினைக்க வேண்டும் என்றேன். இது இருபாலர் கல்லூரி; நாமக்கல்லில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் வெளியில் ஒரு கிராமத்தில் இருக்கிறது. கல்லூரி மாணவர்களாகிய ஆணும் பெண்ணும் சேர்ந்து செல்வதையும் பேசிச் சிரித்துக்கொண்டு போவதையும் ஏற்றுக்கொள்ள இயலாத மனோபாவம் கொண்டவர்கள் மக்கள். இந்தக் காரணங்களை எல்லாம் சொல்லி ‘நம் கல்லூரி நல்ல கல்லூரி. கரடு என்பது நம் அடையாளம். அதைக் குறிப்பிட்டுச் சொல்வதில் தவறில்லை. தவறாகச் சொல்பவர்கள் அறியாதவர்கள்; மன்னித்துவிடலாம்’ என்றேன்.

அடுத்தடுத்துக் கேள்விகள் வந்தவண்ணமிருந்தன. ‘மாதொருபாகன் பிரச்சினை ஏற்பட்டபோது உங்களுடன் பணியாற்றிக்கொண்டிருந்த சக ஆசிரியர்களின் எதிர்வினை எப்படி இருந்தது?’ என்றொரு மாணவர் கேட்டார். எழுத்தாளர்களின் எதிர்வினை, கட்சிகளின் எதிர்வினை பற்றியெல்லாம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். ஆனால் உடனிருப்போர் எதிர்வினை பற்றி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர் ஒருவரிடமிருந்து கேள்வி. நெகிழ்ந்து போனேன். அம்மாணவர் மாதொருபாகன் பிரச்சினை பற்றியெல்லாம் தேடி அறிந்து வந்திருக்கிறார். அதில் அவர் யோசிக்கும் கோணம் வியப்பானது. மாதொருபாகன் பிரச்சினையின்போது சக ஆசிரியர்கள் பலவிதமாக நடந்துகொண்டார்கள். உண்மையில் சக ஆசிரியர்கள் ஆதரவு காட்டியிருந்தால் நான் ஊரை விட்டு வெளியேறியிருக்க நேர்ந்திருக்காது. ஆதரவு காட்டியவர்களும் இருந்தார்கள். விரிவாக விளக்காமல் மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் சிலவற்றை மட்டும் சொன்னேன். மாதொருபாகன் பிரச்சினையின் பரிமாணங்களைப் பேச இன்னும் தயக்கமாகவே இருக்கிறது. அது தெரியாதவாறு சமாளித்து மாணவர்களுக்குப் பதில் சொன்னேன்.

கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு மட்டும் சிமிட்டி அட்டை போட்ட பழைய வகுப்பறைகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மின்விசிறிகள் குறைவு; அவற்றிலும் சில ஓடுவதில்லை. இதைக் குறித்து ‘முதலாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஏனிந்த பாரபட்சம்?’ என்றொரு கேள்வி. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இக்கல்லூரியின் மொத்த மாணவர் எண்ணிக்கையே அறுநூறுதான். இப்போது ஐந்து மடங்கு கூடி மூவாயிரம் ஆகியிருக்கிறது. அப்போது சில துறைகளின் எல்லா வகுப்புகளுமே சிமிட்டி அட்டை போட்ட வகுப்பறைகளில்தான் நடைபெறும். மின்னிணைப்பு கிடையாது. இன்று பல கட்டடங்கள் வந்துவிட்டன. முதலாண்டு மாணவர்கள் மட்டுமே அந்த வகுப்பறைகளில் உள்ளார்கள். புதிதாகச் சில கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முதலாண்டு மாணவர்களுக்கும் நல்ல வசதியான வகுப்பறைகள் கிடைத்துவிடும். தனியார் கல்லூரி வகுப்பறைகளில் ஆசிரியர் இருப்பிடத்திற்கு நேராக மட்டும் மின்விசிறி இருக்கும். மாணவர்களுக்கு மின்விசிறி இருக்காது. அரசுக் கல்லூரியில் மாணவர்களுக்கும் மின்விசிறி இருக்கும். இதுதான் தனியாருக்கும் அரசுக்கும் உள்ள வேறுபாடு. அரசு என்பது எல்லோரையும் உள்ளடக்கியது. தனியார் என்பது சுயலாபத்தையே மையமிட்டது. அரசிடம் நாம் கேட்டுப் பெற முடியும். தனியாரிடம் அவர்கள் கொடுப்பதை மட்டுமே வாங்கிக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் அம்மாணவருக்குப் பதில் சொன்னேன்.

அரசு நிறுவனங்களில் கட்டணம் இல்லை. சுதந்திரம் இருக்கிறது. இவ்வளவு இருந்தாலும் அரசு நிறுவனங்களை மோசம் என்று சொல்லும் பார்வை எப்படி வருகிறது? இதை உருவாக்குவோர் யார்? பரப்புவோர் எவர்? நாமும் இந்தக் கருத்துக்கு ஆளாவது எதனால்? சொந்தமாகச் சிந்திக்க வேண்டாமா? என்றபடி மாணவர்களிடம் நான் கேள்வி கேட்டு முடித்தேன். இப்படியே மாணவர்கள் மாறிமாறிக் கேட்டுக்கொண்டேயிருந்தனர். கேள்விகள் முடிவனவாக இல்லை. ஒருமணி நேரத்தைக் கடந்து வெகுநேரம் ஆகியிருந்தது. அடுத்துத் துறைத்தலைவர்கள் எல்லோரும் பங்கேற்கும் ஆட்சிக்குழுக் கூட்டம் இருந்தது. மாணவர் அரங்கில் என்ன நடக்கிறது என்பதை அறிய அரங்கின் முற்றத்தில் சில தலைகள் தென்பட்டன. மாணவர்களின் கேள்விகள் என் உற்சாகத்தை அதிகரித்தன. என்னாலும் முடிக்க இயலவில்லை. சரி, எப்படியாவது முடித்துத்தானே ஆக வேண்டும்? கடைசியாக ஒரு கேள்வி என்று அறிவித்தேன்.

கணினி அறிவியல் படிக்கும் மாணவர் ஒருவர் தயக்கத்துடன் எழுந்தார். அவர் முகத்தில் சிரிப்பும் வெட்கமும் இருந்தன. வார்த்தை வரவில்லை. ‘என்னப்பா, கேளு’ என்றேன். என் தூண்டுதலால் உந்தப் பெற்றுத் ‘தப்பா இருந்தா மன்னிச்சுருங்கய்யா’ என்றார். ‘எந்தக் கேள்வியும் தப்புக் கெடையாதுப்பா. எதுவாக இருந்தாலும் கேட்பது நல்லது. எனக்குத் தெரிஞ்சதச் சொல்றன், கேளு’ என்றேன். அவர் கேட்டார், ‘காதல்னு சொன்னாலே பெற்றோரும் திட்டறாங்க, ஆசிரியர்களும் திட்டறாங்க. காதலிக்கறது தப்பாங்கய்யா?’ அரங்கில் பெருத்த சலசலப்பு. அந்த மாணவர் சட்டென்று உட்கார்ந்துகொண்டார். ‘இந்தக் கேள்வியில என்ன தப்பு இருக்குது? ரொம்பச் சரியான கேள்வி இது. இப்படி ஒரு கேள்வியக் கேட்ட இந்த மாணவருக்குக் கைத்தட்டல் கொடுங்கப்பா’ என்றேன். அம்மாணவர் எழுந்து நின்று அரங்கைப் பார்த்தார். கைத்தட்டல் அதிர்ந்தது. என் பதிலை நேரடியாகத் தொடங்கினேன். என்ன சொல்லப் போகிறேன் என்று கேட்க அரங்கம் அமைதி காத்தது. ‘காதலிக்கறது தப்பில்ல. காதல் என்பது மனிதருக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் உரிய அடிப்படை உணர்வு. அதைத் தப்புன்னு யார் சொல்ல முடியும்? அது தப்புன்னா உலகம் எப்படி இயங்கும்?’ என்றேன்.

சிறுஇடைவெளி விட்டு ‘நான் காதல் திருமணம் செய்து கொண்டவன்’ என்றதும் அமைதி குலைந்தது. அவர்களில் ஒருவனாக நானாகிவிட்டேன். மாணவர்கள் முகத்தில் சிரிப்பைக் கண்டேன்; ஆரவாரத்தைக் கேட்டேன். ‘என்னுடையது காதல் திருமணம் மட்டுமல்ல, சாதி மறுப்புத் திருமணமும்கூட’ என்றதும் மாணவர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள். என் சொந்த விஷயத்தைப் பெரும்பாலும் மாணவர்களிடம் சொல்வதில்லை. இதை நோக்கத்தோடே சொன்னேன். கிராமப்புற மாணவர்களிடம் சாதி எதிர்ப்புணர்வை எந்தெந்த வழிகளில் எல்லாம் உருவாக்க முடியுமோ அவற்றை எல்லாம் தவறவிட மாட்டேன்.

காதல், சாதி மறுப்பு ஆகியவை அவர்களின் மனநிலையோடு முழுமையாக ஒத்துப் போயிற்று. அவர்களுக்கும் எனக்கும் வயது, பதவி, அதிகாரம் ஆகியவற்றால் ஏற்பட்டிருந்த இடைவெளி முற்றிலுமாக அழிந்தது. இளைஞர்கள் சாதிக்கு ஆதரவானவர்கள் அல்ல. அவர்களைக் கல்வி நிறுவனங்களும் முற்போக்குக் கட்சிகளும் கைவிட்டு விடுவதால் ஏதோ சந்தர்ப்பத்தில் சாதியோடு கைகோக்கச் சென்றுவிடுகிறார்கள் என்பது என் எண்ணம். அது இத்தருணத்திலும் உறுதியாயிற்று. ஆண், பெண் எல்லோரும் காதல் திருமணத்திற்கு ஆதரவான மனநிலை உள்ளவர்களே. காதலை ஆதரிப்போர் சாதியை ஆதரிக்க முடியுமா? இயல்பாகவே சாதிக்கும் எதிரானவர்கள் ஆகிவிடுகிறார்கள். இந்த மனநிலையை மேலெடுத்துச் செல்ல நம்மிடம் வழிகள் இல்லை. இருந்தால் சாதி விரைவில் ஒழிந்துவிடும். மாணவர்களை அந்த இடத்தில் வைத்து அமைதிப்படுத்தி என் பதிலை விரிவாகச் சொன்னேன்.

காதல் தப்பு என்னும் கருத்து எங்கிருந்து வருகிறது என்பதை விளக்கிச் சிற்றுரை ஆற்றினேன். நகர வாழ்வில் ‘இணைந்து வாழ்தல்’ நடைமுறைகள் எல்லாம் சாதாரணமாகிவிட்டன. நிர்ப்பந்தம் என்றால்தான் திருமணம். என் மாணவர்கள் கிராமத்திலிருந்து வருபவர்கள். அங்கே காதல் தப்புத்தான். காதல் சரி என்றால் சாதி தப்பு. சாதி சரி என்றால் காதல் தப்பு. இதுதானே ரகசியம். காதலுக்கும் சாதிக்கும் அப்படி ஒரு பிணைப்பு. அந்தப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு இப்போதும் ‘காதலிக்கலாமா?’ என்பதே ஐயமாக இருக்கிறது. ‘காதலிக்கலாம்’ என்பதே என் பதில். விளக்கமாகச் சொல்லி விடைபெற்றேன். காதலிக்க அனுமதி கிடைத்த உற்சாகத்தில் என்னை வழியனுப்பிவைத்தனர். என் கல்லூரி வாழ்வின் கடைசியில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு நிகராக வேறெதையும் சொல்ல முடியாது. என் மாணவர்களுக்கு இடம் கொடுத்தால் அவர்கள் எப்படியெல்லாம் சிந்திப்பார்கள் என்பதைப் பற்றி நான் கொண்டிருந்த நம்பிக்கை வலுப்பட்டது. கல்லூரி முதல்வரிடம் இதையெல்லாம் கேட்கலாமா என்னும் தயக்கத்தைக் களைந்து உரையாட அவர்கள் முன்வந்தார்கள் என்பது என் கல்வி வாழ்வை நிறைவாக்கியது.

மாணவர்களுக்கு அதிக இடம் கொடுக்கிறேன், அதீத செல்லம் தருகிறேன், மிகுந்த நம்பிக்கை வைக்கிறேன் என்று என் மேல் குறைபட்டுக்கொள்ளும் ஆசிரியர்களுண்டு. அவையெல்லாம் உண்மைதான் என்பது உறுதிப்பட்ட தருணம் அது.

– பெருமாள் முருகன்

  • உயிர்மை, பிப்ரவரி 2023.

நன்றி: பெருமாள் முருகன் & காலச்சுவடு பதிப்பகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 7 | மே, 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: வாடகைதாரர்களின் விவரம் திரட்டும் சென்னை போலீசின் உத்தரவுக்கு நீதிமன்றத் தடை! குடிமக்களை கிரிமினல்களாக நடத்தும் பாசிசத்தை முறியடிப்போம்!
    • அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா?
      நெல்லை, இடிந்தகரை, கூட்டப்புளியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கூட்டங்கள்
    • மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன்
      கடத்தல் தவறா?
    • சத்தீஸ்கர்: கழிப்பறைக் காகிதமானது சட்டத்தின் ஆட்சி!
    • ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!
      மார்ச் 2012 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி
    • “மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”
      – தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சார இயக்கம்
    • கூடங்குளம்: அனுபவங்களும் படிப்பினைகளும்
    • “தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க, மறுகாலனியாக்கத்தை மாய்க்க, நக்சல்பாரியே ஒரே மாற்று!” – புரட்சிகர அமைப்புகளின் மே தினச் சூளுரை
    • சி.பி.எம். மாநாடு: வெங்காயம் என்பதா? வெண்டைக்காய் என்பதா?
    • வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!
    • தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு!
    • பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!
    • ஐ.நா.தீர்மானத்துக்குப் பிந்தைய
      இலங்கை-இந்தியாவின் புதிய நாடகம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பல்கலைக்கழகத்தில் சாதிவெறி – நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு | தோழர் மருது

பல்கலைக்கழகத்தில் சாதிவெறி –
நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு | தோழர் மருது

காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 6 | ஏப்ரல், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: அணு உலைகளை விட ஆபத்தானவை!
    • அணு உலை அல்லது சிறை!
    • ஐ.நா.தீர்மானம்: சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்திய நரி!
    • அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிசமயமாகும் அரசு!
    • தமிழ்த்தேசத்தின் பெயரால் பாசிச இனவெறி!
    • பட்ஜெட்: செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!
    • வர்க்க ஒற்றுமையுடன் முன்னேறும் ஓசூர் தொழிலாளர் போராட்டம்
    • மின்சார சந்தையை வட்டமிடும் பணந்தின்னிகள்
    • மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!
    • கொத்தடிமைத் தொழிலாளர் அவலம்: வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!
    • அணு உலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை!
    • தண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!
    • விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 5 | மார்ச், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய – மாநில அரசுகளின் சதி!
    • “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – புரட்சிகர அமைப்புகளின் நெல்லை மற்றும் கூடங்குளத்தில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி
    • மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
    • குஜராத் – இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
    • ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!
    • ‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
    • காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி
    • தீண்டாமையின் புதிய அவதாரம்
    • மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம் இந்தியாவின் அடிமைத்தனம்
    • டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?
    • புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்
    • ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 4 | பிப்ரவரி, 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: 2ஜி அலைக்கற்றை ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?
    • “மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” “முல்லைப் பெரியாறு அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத் தடை போடு!”
      – தமிழகம் தழுவிய புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
    • காமராஜ் மெட்ரிக் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தூள்தூளாக்கிய பெற்றோர்களின் போராட்டம்!
    • ஜெயா – சசி – சோ: அதிகாரச் சூதாட்டம்!
    • கூடங்குளம்: இந்து முன்னணியின் காலித்தனம்
    • மாமி – மாட்டுக் கறி – நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!
    • தேய்ந்துபோன செருப்பும் முதலாளித்துவ சமூக நீதியும்
    • கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன – மேல்சாதிக் கும்பல்
    • இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!
    • டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்
    • உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011)
      தீராத தலைவலி!
    • ஆலயத் தீண்டாமைக்கு எதிராகச் சிவனடியார்களின் போராட்டம்!
      ஒடுங்கியது பார்ப்பன சிவனச்சாரியார்களின் கொட்டம்!!
    • தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி, 2012 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 3 | ஜனவரி, 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல்: பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி!
    • முல்லைப் பெரியாறு: “இரட்டை வேடம் போடும் ‘தேசிய’க் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!”
      -தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் – மறியல் போராட்டங்கள்
    • முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!
    • தமிழக மீனவர் பிரச்சினை: நெஞ்சில் சுடுகிறான் சிங்களன் முதுகில் குத்துகிறது இந்திய அரசு
    • புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
    • கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்…
    • ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!
    • கருத்துரிமைக்குக் கல்லறை!
    • சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: இந்து மதவெறிக் கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!
    • விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம்
    • குஜராத்: மோடியின் கொலைக்களம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா: உயர்கல்வியின் மறுகாலனியாக்க சவக்குழி!

“வளர்ந்த இந்தியாவுக்கான கல்வி ஆணைய மசோதாவுக்கு” (Viksit Bharat Shiksha Adhishthan Bill) சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “வளர்ந்த இந்தியா” (விக்சித் பாரத்) என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தின் போர்வையில், இந்திய உயர்கல்வித் துறையை முற்றிலுமாகச் சிதைத்து, அதனை ஆர்.எஸ்.எஸ்-பாஜக; அம்பானி-அதானி கும்பல் மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றத் துடிக்கிறது மோடி அரசு.

பல்கலைக்கழக மானியக் குழுவை (UGC) ஒழித்துவிட்டு “இந்திய உயர்கல்வி ஆணையம்” எனும் எதேச்சதிகார அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், 2018-ஆம் ஆண்டிலேயே இம்மசோதாவை “உயர்கல்வி ஆணைய மசோதா” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது மோடி அரசு. அதற்கெதிராக, நாடு முழுவதும் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் முன்னெடுத்த தீவிரப் போராட்டங்களின் விளைவாக, ஒன்றிய அரசு பின்வாங்கியது. இன்று, அந்தப் பழைய நஞ்சை “விக்சித் பாரத்” என்ற புதிய குப்பியில் அடைத்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் துடிக்கிறது.

இம்மசோதாவானது நடைமுறையிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் (AICTE) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கழகம் (NCTE) ஆகிய உயர்கல்விக்கான தன்னாட்சி அமைப்புகளை எதேச்சதிகாரமாக கலைக்கிறது; உயர்கல்வித்துறையை தேசிய உயர்கல்வி ஆணையம் எனும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருகிறது.

மேலும், “விக்சித் பாரத் சிக்‌ஷா வினியமன் பரிஷத்” எனும் ஒழுங்குமுறை குழு, “விக்சித் பாரத் சிக்‌ஷா குணவத்தா பரிஷத் விக்சித்” எனும் அங்கீகாரக் குழு மற்றும் “பாரத் சிக்ஷா மானக் பரிஷத்” எனும் தரநிலை குழு ஆகிய மூன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட குழுக்களை உருவாக்குகிறது. இக்குழுக்களிலும் உயர்கல்வி ஆணையத்திலும் அதிகார வர்க்கத்தினர், காவி-கார்ப்பரேட் கைக்கூலிகளை நிரப்புவதன் மூலம் ஒட்டுமொத்த உயர்கல்வித்துறையையும் பாசிச கும்பலின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுசெல்கிறது. இது உயர்கல்வியில் பார்ப்பனியத் திணிப்பையும், கார்ப்பரேட் கொள்ளையையும் சட்டப்பூர்வமாக்கும் முயற்சியாகும்.

சட்டத்திற்கு முன்பே தொடங்கிய சதி

மோடி அரசானது இந்த கல்வி ஆணைய மசோதாவைக் கொண்டுவருவதற்கு முன்பாகவே, கடந்த 2025 ஜனவரியில் “யூ.ஜி.சி. வரைவு அறிவிப்பு 2025”-ஐ வெளியிட்டு, தமது நோக்கங்களை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டது. யூ.ஜி.சி-யைக் கொண்டே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றும் நோக்கில் அந்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், மாநில அரசுகளின் எதிர்ப்பால், வரைவு அறிக்கையை இறுதியாக்கி வெளியிடவில்லை. இந்தச் சூழலில்தான், புதிய சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் ஒட்டுமொத்த உயர்கல்வியையும் கபளீகரம் செய்யும் சதியில் இறங்கியுள்ளது.

மானியம் எனும் உரிமை, ‘பிச்சை’யாக மாற்றப்படுதல்

கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயிப்பதும், அதற்குத் தேவையான நிதியை வழங்குவதும் யூ.ஜி.சி-யின் பணியாக உள்ளது. ஆனால், புதிய மசோதா யூ.ஜி.சி-யை கலைப்பதன் மூலம் தரக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை உயர்கல்வி ஆணையத்திடம் கொண்டு செல்கிறது; நிதி அதிகாரத்தை நேரடியாக மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கைகளுக்கோ அல்லது அரசால் நியமிக்கப்படும் ஒரு சிறப்பு அமைப்பிற்கோ கொண்டு செல்கிறது.

இதன் நோக்கம் மிக மிக ஆபத்தானது. உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது அத்தியாவசிய செயல்பாட்டுக்கான நிதியைப் பெறுவதற்குக் கூட டெல்லியில் உள்ள ‘எஜமானர்களின்’ காலில் விழ வேண்டும். தேசிய கல்வி கொள்கையின் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தை ஏற்காத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பள்ளிக்கல்வி நிதியை முடக்கியதைப் போல, மோடி அரசின் கல்வி கொள்கை, கார்ப்பரேட்மயத் திட்டங்களை ஏற்காத கல்வி நிறுவனங்களுக்கான நிதியும் முடக்கப்படும். “எங்கள் கொள்கையை ஏற்றால் நிதி, இல்லையெனில் மூடுவிழா” என்பதே மோடி கும்பல் இதிலிருந்து விடுக்கும் மறைமுகச் செய்தி.

இவ்வாறு, பல்கலைக்கழக மானியக் குழுவை ஒழித்து, உயர்கல்வி நிறுவனங்களின் கழுத்தை நெரிக்கும் கயிறாக நிதி அதிகாரம் மாற்றப்படுகிறது.

கல்வியைக் கடனாக்கும் வணிகச் சதி

மோடி அரசு 2018 – உயர்கல்வி ஆணைய மசோதாவை பின்வாங்கினாலும், அதில் அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய அம்சமான “உயர்கல்வி நிதி முகமை” (HEFA – Higher Education Financing Agency) எனும் அமைப்பை நடைமுறையில் உருவாக்கி இயக்கி வருகிறது.

அரசுப் பல்கலைக்கழகங்களுக்குக் கட்டடங்கள் கட்டவோ, ஆய்வகங்கள் அமைக்கவோ இதுவரை கொடுக்கப்பட்டு வந்த மானியத்தைக் குறைத்து, இம்முகமையின் மூலம் கடன்களை வழங்கி வருகிறது. ஒரு பல்கலைக்கழகம் தனது தேவைக்காக இம்முகமையிடம் கடன் வாங்கினால், வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். இதன் மூலம், கல்வி என்பது சேவை, லாப நோக்கற்றது என்ற நிலையை மாற்றி, மானிய முறையை ஒழித்து, ‘கடன்’ முறையைப் புகுத்துகிறது.

இம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், யூ.ஜி.சி. ஒழித்துக்கட்டப்பட்டு, அவ்விடத்தை உயர்கல்வி நிதி முகமை எனும் இந்தக் கடன் முகமை முற்றுமுழுதாக கைப்பற்றிக்கொள்ளும்.

பல்கலைக்கழகத்திற்கான ஒரே வருமானம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே என்பதால், கடனை அடைக்கப் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தும் நிலைக்கு பல்கலைக்கழகங்கள் தள்ளப்படும். கட்டணத்தை உயர்த்தினால்தான் மேற்கொண்டு கடன் தரமுடியுமென்று இந்தக் கடன் முகமை கட்டாயப்படுத்தும். இதன் விளைவாக, மாணவர்கள் இதுவரை ரூ.5,000 செலுத்தி படித்துவந்த ஒரு பட்டப்படிப்புக்கு ரூ.50,000 கொடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நிதி வசூலிக்க வேண்டிய கட்டாயமும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்படும். அவ்வாறு நிதி வசூலிக்க முடியாத – கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபமளிக்காத – துறைகள் கைவிடப்படும். இதனால், பெரும்பாலும் ஏழை – எளிய மாணவர்கள் பயின்றுவரும் கலை & அறிவியல், பிராந்திய மொழிகள் உள்ளிட்ட துறைகள் ஒழித்துக்கட்டப்படும்.

அதாவது, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை ஏழை நாடுகளுக்குக் கடன் கொடுக்கும் போர்வையில், பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு வழி செய்து கொடுப்பதற்கு நிகரானதே இந்தக் கடன் முகமையின் நோக்கமும் செயல்பாடும் ஆகும்.

இதனால் கல்வி அடிப்படை ‘உரிமை’ என்ற இடத்திலிருந்து, சந்தையில் விற்கப்படும் ‘சரக்கு’  என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது. இது ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களை உயர்கல்வியிலிருந்தே விரட்டியடிக்கும் ஒரு பொருளாதாரத் தாக்குதல். காசில்லாதவனுக்குக் கல்வியில்லை என்னும் புதிய ‘மனுநீதி’.

சமூக நீதியின் மீதான நேரடி யுத்தம்

இந்தியாவில் உயர்கல்வி என்பது சமூக நீதிக்கான ஒரு கருவி. பொதுப் பல்கலைக்கழகங்களே ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்புக்கான புகலிடமாக இருந்து வருகின்றன. ஆனால், இம்மசோதா அந்த அடித்தளத்தையே தகர்க்கிறது.

தனியார் – கார்ப்பரேட் மயத்தை ஊக்குவிப்பதும், பொது நிறுவனங்களைத் தன்னாட்சி என்ற பெயரில் சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றுவதுமே இத்திட்டத்தின் நோக்கம்.

“நாங்கள் அரசிடம் பணம் வாங்கவில்லை, நாங்களே நிதியைத் திரட்டுகிறோம்” என்று பல்கலைக்கழகங்கள் சொல்லத் தொடங்கும்போது, “எங்களால் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற முடியாது” என்ற வாதத்தை முன்வைப்பார்கள். ஏற்கெனவே, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்-களில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படாத நிலையில், இம்மசோதா அதை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தும்.

கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் மற்றும் பெண்கள், கல்விக் கட்டண உயர்வாலும், இட ஒதுக்கீடு ஒழிப்பாலும் உயர்கல்வியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அந்தவகையில், இது நவீன குலக்கல்வித் திட்டமே அன்றி வேறில்லை. இதுநாள் வரையிலும் இந்திய அரசியல் அமைப்பு – சமூக நீதி என்று சொல்லிக்கொள்ளப்பட்ட அனைத்து ‘ஜனநாயக’ அம்சங்களின் மீதான இறுதித் தாக்குதலாக இது அமையும்.

“ஒற்றை அதிகார மையம்”: காவிமயமாக்கலின் நுழைவாயில்

இம்மசோதா யூ.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., என்.சி.டி.இ. ஆகியவற்றை கலைத்துவிட்டு, உயர்கல்வியை, உயர்கல்வி ஆணையம் என்ற ஒற்றை அமைப்பிற்கு கீழ் கொண்டு வருகிறது. இது நிர்வாக ரீதியிலான எளிமைப்படுத்தலை போலத் தோன்றலாம்.

ஆனால், மோடி ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் அமைச்சரவையின் அதிகாரங்களை பறித்துவிட்டு, ஆணையங்களை உருவாக்கி அத்துறையில் பாசிச கும்பலாட்சியை நிலைநாட்டி வருவதன் தொடர்ச்சியாகவே உயர்கல்வி ஆணையத்தையும் அமைக்கத் துடிக்கிறது.

கல்வி நிறுவனங்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்குதல், கட்டண விதிமுறைகள் என பல்கலைக்கழகங்கள் தொடர்பான ஒவ்வொரு அம்சத்திலும் இந்த ஆணையம் தலையிடுகிறது. இதன் மூலம் உயர்கல்வித் துறையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில அரசுகளிடம் இருந்த மிச்சமீதி அதிகாரங்களையும் பறித்து அவற்றை மோடி அரசின் கரங்களில் குவிக்கிறது

மேலும், உயர்கல்வி ஆணையத்தின் 12 உறுப்பினர்களில், மாநில அரசுகளின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராசிரியர்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு மட்டுமே. இது தவிர்த்து சிறந்த நிபுணர்கள் என்ற பெயரில் ஐந்து பேர் நியமிக்கப்படுவர். மீதமுள்ளவர்கள் மத்திய அரசின் செயலாளர்கள்  மற்றும் அதிகார வர்க்கத்தினர் ஆவர். இதில் மாநில அரசுப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாக மட்டுமே இருப்பார்கள். அதிகார வர்க்கத்தினர் மட்டுமே முழுநேர உறுப்பினர்கள், தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்கள். அதாவது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் கார்ப்பரேட் கும்பல்களின் அடியாள் படையைக் கொண்டே இந்த ஆணையம் முழுமையாக நிரப்பப்படும் என்பதே இதன் சாராம்சம்.

சூடு சொரணைக்குத் தண்டனை: இதுதான் பாசிசம்

இம்மசோதாவின் பிரிவு 33, “விக்சித் பாரத் சிக்‌ஷா வினியமன் பரிஷத்” எனும் ஒழுங்குமுறை குழு ‘விதிமுறைகளை’ மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முன்மொழிந்துள்ளது. அதன்படி, விதிமுறைகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை தண்டத்தொகை விதித்தல்; பொறுப்பிலுள்ளவர்களை பணிநீக்கம் செய்தல்; கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை இரத்து செய்தல்; மானியங்களை நிறுத்தி வைத்தல்; பட்டங்களை வழங்கும் அதிகாரத்தை பறித்தல் என உயர்கல்வி நிறுவனங்களின் மீது இரத்தவெறி கொண்ட மிருகம் போல பாய்ந்து குதற காத்திருக்கிறது.

இதன் மூலம், தனது காவி – கார்ப்பரேட் நலன்கள், கொள்கைகள், விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்களைத் தண்டனைக் குற்றவாளிகளைப் போலத்தான் கையாள்வோம் என மோடி அரசு வெளிப்படையாகவே மிரட்டுகிறது.

அரசின் காவி சித்தாந்தத்தை ஏற்காத பல்கலைக்கழகங்களை மூடவும், துணைவேந்தர்களைச் சிறையில் அடைக்கவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாசிச கும்பலின் ஆட்சியில், அறிவார்ந்து சிந்திப்பதும் கூட தண்டனைக்குரிய குற்றம்தான் அல்லவா!

பிரிவு 45 & 47 – சர்வாதிகாரத்தின் சாசனம்

மசோதாவின் 45 மற்றும் 47-வது பிரிவுகள், “ஆணையம் மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டது”, கருத்து வேறுபாடு ஏற்பட்டால் “அரசின் முடிவே இறுதியானது” என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றன.

இதன் மூலம், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசின் சித்தாந்தத் திட்டங்கள் எந்தவித எதிர்ப்புமின்றிப் பாடத்திட்டங்களில் திணிக்கப்படும். இந்திய அறிவு மரபு என்ற பெயரில் அறிவியல் பாடங்களில் புராணங்கள் புகுத்தப்படும். வரலாற்றுப் பாடங்களில் திரிபுகள் சட்டப்பூர்வமாக்கப்படும். இதை எதிர்க்கும் பேராசிரியர்கள் அல்லது துணைவேந்தர்கள் ஆணையத்தின் அதிகாரத்தால் நசுக்கப்படுவார்கள். சொந்த புத்தியும், சூடு சொரணையும் உள்ள உயர்கல்வி நிறுவன நிர்வாகங்கள், நிதி மற்றும் தண்டனை என்னும் ஆயுதங்கள் கொண்டு மிரட்டிப் பணிய வைக்கப்படும்.

முடிவுக்கு வரும் ‘கூட்டாட்சி’ முழக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் கல்வி இருந்தாலும், இந்த மசோதா மாநில அரசுகளை, அதிகாரமற்ற வெறும் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக மாற்றுகிறது. ஏற்கெனவே தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, நடைமுறைப்படுத்தக் கட்டாயப்படுத்தி வருவதன்  மூலம், பொதுப்பட்டியல் – மாநில அரசின் உரிமை ஆகியவற்றை ஒழித்துக்கட்டி வருகிறது மோடி அரசு.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், தங்களுக்கெனத் தனித்துவமான கல்விக் கொள்கையையும், உயர்கல்வி கட்டமைப்பையும் வைத்துள்ளதாக சொல்லிக் கொண்டாலும், “ஒரே நாடு, ஒரே கல்வி” திட்டம், மாநிலங்களின் தனித்துவத்தை அழித்து, டெல்லியின் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கும். மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம், பாடத்திட்டம், நிதி ஒதுக்கீடு என அனைத்திலும் மத்திய அரசின் தலையீடு தீவிரமாகும். மாநில அரசுகள் தங்களுக்கான கல்விக் கொள்கைகளை உருவாக்கினாலும், அவற்றை நடைமுறைக்குக் கொண்டு செல்ல முடியாதவாறு முட்டுக்கட்டைகளை மோடி அரசு போடும், பெயரளவிலான கூட்டாட்சிக்கும் சவக்குழி பறிக்கும்.

பெயர்சூட்டலில் பார்ப்பனத் திமிர்: பண்பாட்டுப் படையெடுப்பு

சட்டத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, அதன் பெயர்களிலேயே நஞ்சை விதைத்துள்ளது மோடி அரசு. “விக்சித் பாரத் சிக்‌ஷா அதிஷ்டான்”, “வினியமன் பரிஷத்”, “குணவத்தா பரிஷத்” என மசோதாவின் ஒவ்வொரு அங்கத்திற்கும் இந்தி – சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டியிருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம். இந்த மசோதாவில் மட்டுமல்லாது இதர ஒன்றியத் திட்டங்கள், ரயில்களின் பெயர்கள் அனைத்திலும் இந்த அயோக்கியத்தனத்தைக் கையாண்டு வருகிறது பாசிச மோடி அரசு.

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியம் என்பதைத் துளியும் மதிக்காமல், தனது பார்ப்பனிய – பாசிச மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் ‘இந்துராஷ்டிர’ வெறியே இதில் வெளிப்படுகிறது. இது வெறும் பெயர் மாற்றம் அல்ல; தமிழ் உள்ளிட்ட தொன்மையான மொழிகளின் அடையாளத்தை அழித்து, இந்தி – சமஸ்கிருதத்தை அரியணையில் ஏற்றும் பண்பாட்டுப் படையெடுப்பு. பிற தேசிய இனங்களின் மொழியுணர்வைக் காலில் போட்டு மிதிக்கும் இந்த ஆணவப்போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

உயர்கல்வியிலும் அம்பானி – அதானி மயம்!

புதிய மசோதா முன்மொழியும் விக்சித் பாரத் சிக்ஷா மானக் பரிஷத் எனும் தரநிலை குழு, “இந்திய அறிவு மரபுகளை (Bharatiya knowledge systems) உலகத் தரங்களுடன் இணைத்தல்” என்று குறிப்பிடுகிறது.

ஆனால், ஏற்கெனவே அதானி குழுமம் நடத்திவரும் கல்வி நிறுவனங்கள், ‘இந்திய அறிவு மரபு’ சார்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்க முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு பல கோடி ரூபாய்களை ஒதுக்கி வருகிறது. மேலும், “பாரத அறிவு வரைபடத்தை உருவாக்குவதற்கும், இந்த இந்தியவியல் பணிக்கு பங்களிக்கும் அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் ரூ.100 கோடி ஆரம்ப நிதியுதவியை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இது ஒரு நாகரிகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதாகும்” என்று கடந்த நவம்பர் மாதத்தில் அதானி அறிவித்துள்ளார்.

இன்னொரு பக்கத்தில், அம்பானி குழுமம் ஜியோ கல்வி நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறைக்கு போதிய நிதி ஒதுக்காத மோடி அரசு, இன்னும் ஆரம்பிக்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு 2018-ஆம் ஆண்டிலேயே “மேன்மைமிகு நிறுவன” அங்கீகாரமும் ரூ.1,000 கோடி நிதி உதவியும் அளித்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பின்னணியில் இம்மசோதாவைப் பார்க்கும் போதுதான், மோடி அரசு ஏன் இவ்வளவு தீவிரமான தாக்குதல்களைத் தொடுக்கிறது என்பதையும், உயர்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்-பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பலின் கோரப்பிடியையும் நம்மால் உணர முடியும்.

என்ன செய்யப் போகிறோம்?

இந்த ‘விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா’, 2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் நிர்வாக வடிவமே ஆகும். தேசியக் கல்விக் கொள்கை  சித்தாந்த ரீதியாகக் கல்வியைச் சீரழித்தது. உயர்கல்வி ஆணைய மசோதா 2025 அதைச் சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அங்கீகரித்து, சுருக்குக் கயிறாக மாற்றுகிறது. ஒட்டுமொத்தமாக பாசிச கும்பலின் ஆட்சியில், உயர்கல்வி மீதான மறுகாலனியாக்கத்தின் இறுதித் தாக்குதலே இது.

நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இக்குழுவுக்கு அனுப்பப்பட்ட எந்த மசோதாவிலும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை ஏற்று மோடி அரசு மாற்றம் செய்ததில்லை. எனவே, இம்மசோதாவை அப்படியே சட்டமாக்கும் முயற்சியில்தான் ஈடுபடும் என்பது திண்ணம்.

எனவே, இது கல்வியாளர்களின் – மாணவர் அமைப்புகளின் பிரச்சினை மட்டுமல்ல; தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெற்றோரின் பிரச்சினை. சமூக நீதியை விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் பிரச்சினை. மாநில உரிமைகளை மதிக்கும் ஒவ்வொருவரின் பிரச்சினை.

2018-இல் மோடி அரசு உயர்கல்வி ஆணைய மசோதாவை சட்டமாக்க முயன்றபோது எழுந்த போராட்டங்களை காட்டிலும் பன்மடங்கு வீரியமான மாணவர் – ஆசிரியர் – மக்கள் போராட்டத்தால் மட்டுமே இந்த மசோதாவைத் தடுத்து நிறுத்த முடியும். இல்லையேல், வருங்காலத் தலைமுறைக்குக் கல்வி என்பது எட்டாக்கனியாகவும், பல்கலைக்கழகங்கள் என்பவை ஆளும் வர்க்கத்தின் அடிமைக் கூடங்களாகவும் மாறிவிடும்.

ஆகவே, “கல்வி விற்பனைக்கு அல்ல; அது நமது அடிப்படை உரிமை!”, “ஆர்.எஸ்.எஸ்-பாஜக; அம்பானி-அதானி பாசிச கும்பலின் பிடியிலிருந்து கல்வித்துறையை விடுவிப்போம்” என்ற முழக்கத்தை முன்னெடுத்து, இந்த மறுகாலனியாக்கத் தாக்குதலை முறியடிக்க அணிதிரள்வோம்.


தமிழ்ச்சுடர்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர், 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 2 | டிசம்பர், 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: கருநாகத்தின் படையெடுப்பு!
    • முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!
      -புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை
    • பால் விலை – பேருந்துக் கட்டண உயர்வு: பாசிச ஜெயாவின் வழிப்பறிக் கொள்ளை!
    • அணுஉலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்
    • “கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம்
    • தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்!
    • மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம்: அனுபவமும் படிப்பினையும்
    • தி.நகர் ரங்கநாதன் தெரு” அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு…?
    • எஃப்-1 கார் பந்தயம்: புதுப் பணக்காரக் கும்பலின் களிவெறியாட்டம்!
    • லிபிய ஆக்கிரமிப்பு: மறுகாலனியாதிக்கத்தின் புதிய சோதனைச்சாலை!
    • பார்ப்பன ஊடகங்கள்: ரத்தத்தின் ரத்தங்களை விஞ்சிய விசுவாசிகள்!
    • அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: நுனி முதல் அடி வரை மோசடி
    • மூளைக் காய்ச்சலுக்கு பலியாகும் குழந்தைகள்: பட்டினி போட்டது அரசு கொன்று போட்டது தொற்றுநோய்
    • பால், பேருந்து, மின்சாரக் கட்டண உயர்வு! பாசிச ஜெயா கும்பலின் வழிப்பறிக் கொள்ளையை முறியடிப்போம்!
      -தமிழகமெங்கும் ம.க.இ.க.; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2011 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 1 | நவம்பர், 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!
    • வால் ஸ்டிரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி
    • ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் செந்திலுக்கு வீர வணக்கம்!
    • மாதம் இரண்டு லாக்-அப் கொலை: ‘பச்சை’யான போலீசு ஆட்சி!
    • சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றங்களைத் திணறடித்த ஜெயாவின் வாய்தா புரட்சி!
    • உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்
    • மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்
    • மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!
    • மனித உரிமை வேடதாரி மக்கள் கண்கானிப்பகம் ஜென்றி டிபேன் கும்பலின் ரவுடித்தனம்!
    • “பொறுக்கித் தின்னப் போட்டிபோடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!”
      -புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்
    • ஏர் – இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்
    • ஈமு கோழி வளர்ப்பு: கவர்ச்சிகரமான மோசடி!
    • ஆப்கான் – இந்தியா – பாகிஸ்தான்: அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாக இந்தியா!
    • சங்கப் பரிவாரம் வழங்கும் “இதுதாண்டா ராமாயணம்!”

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram