Tuesday, August 19, 2025
Home Books Puthiya Kalacharam போர்னோ : இருளில் சிக்கும் இளமை ! அச்சுநூல்

போர்னோ : இருளில் சிக்கும் இளமை ! அச்சுநூல்

20.00

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2017 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.

Out of stock

Description

ணையத்தில் உலவுவோரை திட்டமிட்டு ஈர்க்கும் போர்னோ தளங்கள், அதில் சிலரையாவது அடிமைப்படுத்துகின்றன. பிறகு ஆபாசபடங்கள் பார்ப்பது, பெண்களை இரகசியமாக ஆபாசப் படம் பிடிப்பது, சொந்த வாழ்க்கை உறவுகளை ரணப்படுத்திக்கொள்வது, எதிர்க்க இயலாத பெண்களை குதறுவது என, அதன் பரிமாணங்கள் விரிவடைகின்றன.

ஆண்டைகளுக்கு காமசூத்ராவை இலக்கியமாக்கிய பார்ப்பனியம், அடிமைகளுக்கு ஆண் பெண் உறவில் ஆயிரத்தெட்டு தடைகளை வைத்திருக்கிறது. இந்த சூழலில் இணையமானது, இந்தியர்கள் கொண்டிருக்கும் காமக்கூச்சத்தை போக்கி இரகசியமாய் ‘இன்பங்களை’ காட்டுகின்றது.

காந்தப்படுக்கை, எழுச்சி மாத்திரைகள், நீடித்த இன்பம் எல்லாம் சேலம் சித்த வைத்திய சாலையிலிருந்து இணையத்தின் ஆன்லைன் விற்பனைகளில் வந்து விட்டன. கள்ள உறவுகளுக்கும், விதவிதமான விபச்சார ‘சேவைகளுக்கும்’ இணையம் ஒரு மாபெரும் சந்தை. எனினும் அச்சுறுத்தும் இந்த பாலியல் விவகாரங்களை விட வாழ்க்கை விடுக்கின்ற அச்சுறுத்தல்கள் பெரியவை.

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • மனித உரிமை ஜெனிவாவில் செக்ஸ் மணங்கமிழும் காஃபி கிளப் !
  • செப்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம்!
  • லென்ஸ், புரியாத புதிர் – திரை விமர்சனம் : அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது எப்படி?
  • யார் விபச்சாரி? ‘சோவியத் சுந்தரிகளா’, இந்தியா டுடேவா?
  • போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்
  • ஷெல்லி லூபென் – ஒரு முன்னாள் போர்னோ நடிகையின் வாக்குமூலம்!
  • போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள்!
  • விபச்சாரத்தை ஏன் அங்கீகரிக்கக் கூடாது? – கேள்வி பதில்!
  • 8MM (1999) – திரை விமர்சனம் பாலியல் வக்கிரம் : அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை !

ஒன்பது கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்

You may also like…