Description
ரஜினி : வரமா – சாபமா ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- எந்திரன் : படமா ? படையெடுப்பா?
- ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி !
- ரஜினி பாபாவும் பக்தகேடிகளும் – ஒரு நேருக்குநேர் !
- பாட்ஷா பாபாவான கதை!
- ரஜினி ரசிகர்கள்: விடலைகளா ? விபரீதங்களா?
- ஃபியூஸ் போன ரஜினிக்கு சொம்படிக்கும் குமுதம்!
- மோடி – ரஜினி சந்திப்பு : பில்டிங் மட்டுமல்ல பேஸ்மெண்டும் வீக்குதான்
- குமுதம் மடத்தில் ரஜினி சுட்ட வடை !
- கோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !
- போயஸ் ரஜினியும் போயஸ் ராணியும் ஊழலில் ஓரணி !
- சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு
- கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?
- ரஜினி அரசியல் : மக்கள் என்ன கருதுகிறார்கள் ? – 2018 பொங்கல் மெகா சர்வே!
ரஜினி : வரமா – சாபமா ? – அவரது திரைப்படங்களின் கள்ள வருமானம், ஜெயா, மோடி போன்றவர்களை பயந்தும், விரும்பியும் ஆதரிக்கும் சந்தர்ப்பவாதம், முக்கியமான பிரச்சினைகளின் போது மக்கள் விரோத நிலையை எடுத்ததும்தான் அந்த வரலாறு.
இருப்பினும் ரஜினியின் சினிமா செல்வாக்கால் அஞ்சும் ஓட்டுக் கட்சிகள், அவரை அம்பலப்படுத்தி கருத்து ரீதியாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய விரும்புவதில்லை.
விழிப்புணர்வு பெற்று வரும் தமிழகத்தை பின்னுக்கிழுக்கும் முயற்சியாக ரஜினியின் பிரவேசம் இருப்பதை எச்சரிக்கின்றது இந்த புதிய கலாச்சாரம் தொகுப்பு.
பதின்மூன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்