Description
இதயத்தை மீட்பது எப்படி ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?
- சினிமா விமரிசனம்: காதலில் சொதப்புவது எப்படி
- சீதை
- பிள்ளை வளர்ப்பு : ஒரு குடும்ப வன்முறை!
- சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!
- சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!
- மற்றுமொரு ஐடி காதல் கதை…
- ‘ஐயர்’ பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?
- ஆணி இறங்காத சுவர் – ஒரு அனுபவம்!
- அழகு – சில குறிப்புக்கள் !
- உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?
- கெளரவம்
சினிமாவும், தொலைக்காட்சிகளும், விளம்பரங்களும் ஒரு மாய உலகைக் காட்டிக் கொண்டே நம்மை தூண்டில் போட்டு பிடிக்கின்றன. வீடு, பொருட்கள், இன்னும் பிற வசதிகளை நோக்கி ஓடும் நம் மக்களுக்கு அது முடிவே இல்லாத ஒரு மாய ஓட்டம் என்பது புரிவதே இல்லை.
உலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்தில் நமது வதைபடும் இதயத்தை மீட்பது எப்படி? முயற்சி செய்கிறது இந்த புதிய கலாச்சார தொகுப்பு!
பன்னிரண்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்