Description
மோடி பிரதமரான 2014-ம் ஆண்டில் ”வளர்ச்சியை வைத்து மையப் பிரச்சாரம் என்றால் மாநில அளவில் சாதி-மதவெறிதான் தீர்மானித்தது. உ.பியில் கலவரம் செய்து புகழ் பெற்ற யோகி ஆதித்யநாத் தற்போதைய முதலமைச்சர்.
தற்போது பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி மூலம் மக்களிடம் கெட்ட பெயரை ஈட்டியிருக்கும் மோடி அரசு, மீண்டும் இந்துமதவெறியை கையில் எடுத்திருக்கிறது.
உலகமயத்தின் சுரண்டலுக்கு பார்ப்பனியமே பாதுகாப்பு என்பதாக சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. பார்ப்பனிய பாசிசம் இந்த நாட்டிற்கு எத்தகைய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை நினைவுபடுத்துகிறது இந்தத் தொகுப்பு!
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் ! – எஸ்.என்.எம். அப்தி, பத்திரிகையாளர்.
- இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதிய ஜனதாவின் அழைப்பு!
- பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!
- அயோத்தி: முசுலீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க! – தலைமை பூசாரி பேட்டி
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானந்தாவின் ஆதாரம்!!
- பாகிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!
- இந்துமதவெறியின் பிடியிலிருந்து குமரியை மீட்பது எப்போது?
- உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
- உ.பி. கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்
- ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்!
- தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்!
- கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்
- விசுவ இந்து பரிசத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !
பதிமூன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்