Description
பேரிடர் : புயலா – அரசா ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- உத்தரகாண்ட் : ஆன்மீக சுற்றுலாக்களால் கொல்லப்பட்ட பக்தர்கள்!
- செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் பாசிச ஜெயா அரசின் குற்றம்!
- கடலூர் பேரழிவு – நேரடி ரிப்போர்ட்
- சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா?
- எது வீரம்? யார் வீரர்கள்?
- தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு!
- வெயிலில் மரணம் : ஏ.சி அறையில் எச்சரிக்கை!
- காஷ்மீர் வெள்ளம் : ஆர்.எஸ்.எஸ். மகிழ்ச்சி!
- பீகார் வெள்ளம் : வடக்கிலும் ஒரு செம்பரம்பாக்கம்!
- தானே புயல் பேரழிவு : தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!
- மீனவர் துயரம் : உறங்காதே தமிழகமே, போராடு!
- வெள்ளத்தில் தமிழகம் : நகரமயமாக்கத்தின் பயங்கரவாதம்!
- நேபாளம் : எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள்!
பேரிடர் : புயலா – அரசா ? – ஆழ்கடல் ஏற்கெனவே பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. அவற்றுடன் போட்டி போட்டு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை ஒக்கி புயலுக்கு காவு கொடுத்திருக்கிறது அரசு.
மழை, புயல், சுனாமி முதலான இயற்கைச் சீற்றங்களால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை விட, அரசாலும் அதன் மறுகாலனியாக்க திட்டங்களாலும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இதனை ஆவணப்படுத்துகிறது இந்த புதிய கலாச்சாரம் தொகுப்பு.
பதின்மூன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்