நாம் பேச வேண்டிய நேரமிது !
அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதுவும் பேசவில்லை ஏனெனில், நான் ஒரு யூதன் இல்லை !
அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் அமைதியாக இருந்தேன்
ஏனெனில், நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல!
அவர்கள் தொழிற்சங்கத்தினரைத் தேடி வந்தார்கள்
அப்போதும் நான் எதுவும் பேசவில்லை
ஏனெனில் நான் எந்த ஒரு தொழிற்சங்கத்திலும் இல்லை !
கடைசியாக, அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
இப்போது
எனக்காகப் பேச யாருமே இல்லை !
– மார்ட்டின் நீமோலர்