privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 21/04/2014

தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 21/04/2014

-

செய்தி: இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவை, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பாரிவேந்தருக்கு சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

நீதி: பிளாக் டிக்கெட்டில் சூப்பர ஸ்டார் ஆனவர், பிளாக்கில் நன்கொடை வாங்கி கல்லூரி-கட்சி-ஊடகம் ஆரம்பித்தவரை ஆதரிப்பதுதாண்டா ஜனநாயகம்!
_________

செய்தி: காங்கிரசுக்கு ஆதரவாக நடிகை மும்தாஜ் பிரச்சார பீரங்கியாக களம் இறங்கியுள்ளார்.

நீதி: கதர் வேட்டிகளின் வரலாறு காணாத தோல்வியை, இனி கவர்ச்சி கலந்த வரலாற்றுத் தோல்வி என்று அழைக்கலாமோ?
_________

செய்தி: நீலகிரி மாவட்ட தேமுதிக செயலர் சாந்தி ராமு, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைத்து கொண்டார்.

நீதி: உதகை பாஜக வேட்பாளர் போட்டியிடாமல் போனது திமுகவிற்காக என்றால் தேமுதிக செயலர் அதிமுகவில் சேர்வதுதானே பாஜக கூட்டணி தர்மம்?
_________

செய்தி: தமிழக பாராளுமன்ற தேர்தல் களத்தில் போட்டியிடும் 844 வேட்பாளர்களில், 103 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்; 178 பேர் கோடிஸ்வரர்கள்.

நீதி: ரவுடிகளும், பணக்காரர்களும் இல்லையேல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது என்றால் அது என்ன ஜனநாயகம்?
_________

செய்தி: தமிழக கிரிமினல் வேட்பாளர்களில் காங்கிரசார் 23 சதவீதம், பா .ஜ கட்சியினர் 22 சதவீதத்தினர்.

நீதி: 40 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரசுக் கட்சியிலும் வேட்பாளர்களில் கால் பங்கு கிரிமினல்கள், 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் பாஜகவிலும் கால் பங்கு என்றால்? காங்கிரசும், பா.ஜ.கவும் ஒண்ணு என்று புரியுதா?
_______

செய்தி: தமிழகத்தில் காங்கிரசுக் கட்சியில் 85%, பாஜக 67%, அதிமுக 80%, திமுக 97%, தேமுதிக 86%, ஆம் ஆத்மி 52% வேட்பாளர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கோடிஸ்வர வேட்பாளர்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

நீதி: புதிதாக வந்த சாமானியர்கள் கட்சியான ஆம் ஆத்மியிலேயே பாதிக்கும் மேற்பட்டோர் கோடிஸ்வரர்கள் என்றால் இங்கிருப்பது சாமானியர்களுக்கான ஜனநாயகமா, கோடிஸ்வரர்களுக்கான பணநாயகமா?
________

செய்தி: “தேசபக்தியையும், தெய்வபக்தியையும் ஒருங்கே கொண்டிருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அதிமுக கட்சிக்கே பிராமண சமூகம் வாக்களிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீதி:  புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது; பார்ப்பனர்கள் பாசிசமே ஆளுமென்றாலும் பூணுலைத்தான் ஆதரிப்பார்கள். இதுதாண்டா அவாள் ஜனநாயகம்!
________

செய்தி: தேர்தல் திருவிழாவிற்கு அனைத்துக் கட்சிகளும் தொண்டர்களுக்கு பிரியாணி கொடுத்து வேலை செய்ய வைப்பதால் பிரியாணி செய்யும் மாஸ்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நீதி: பிரியாணி கேட்பது தொண்டர்களது உரிமை, அதில் லெக் பீஸ் கொடுப்பது கட்சிகளின் கடமை. பிரியாணியை ஜனநாயகமென்று ஏமாறுவது மக்களின் மடமை!
_________

செய்தி: குஜராத் ஆமதாபாத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பா.ஜ., பிரமுகர் ஒருவரின் காரில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீதி: ஊழல் ‘இல்லாத’ குஜராத்தை உருவாக்கிய பாஜகவின் சாதனை!
__________

செய்தி:  உ . பி. மாநிலம் ஹார்வோஸ்சில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பா.ஜ. பிரதமர் வேட்பாளர் மோடி பேசுகையில், காங். துணைத்தலைவர் ராகுல் பிறக்கும்போது தங்க கரண்டியுடன் பிறந்துள்ளார். அவருக்கு ஏழைகள் குறித்து எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டார்.

நீதி: மோடியும் பிச்சுவா கத்தியுடன் பிறந்திருப்பதால், அவருக்கும் இசுலாமியர்கள் மனிதர்கள்தான் என்பதே தெரியாது.
___________

செய்தி:  தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை; ஜெயலலிதா அலைதான் வீசுகிறது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.

நீதி: மோடி அலையோ, லேடி அலையோ இல்லையென்றாலும் தமிழகத்தில் அடிமைகள் அலை மட்டும் நிச்சயம் இருக்கிறது.
___________

செய்தி: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்று பிரகாஷ் காரத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நீதி: தாங்கள் அம்மணப்பட்டு நிற்பதை மூன்றாவது அணியே ஒத்துக் கொண்டாலும், ‘காம்ரேடுகள்’ அணி ஒத்துக் கொள்வதில்லை. சந்தர்ப்பவாதத்தின் சர்வைவல்!