privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஓ.என்.ஜி.சிக்கு எதிராக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

-

  • டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க வரும் மீத்தேன் திட்டத்தை ரத்துசெய்!
  • காவிரி மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்குமுறை குழுவையும் உடனடியாக அமைத்திடு!
  • விளைநிலங்களை மலடாக்கி, மக்களின் உயிரிக்கு உலை வைக்கும் ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துரப்பண பணிகளை கைவிடு!

என்ற முழக்கங்களை முன் வைத்து செப்டம்பர் 1, 2014 காலை 10 மணியளவில் திருவாரூர் கொரடாச்சேரி வெட்டாற்றுப் பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் புரட்சிகர பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு,  காவிரி சமவெளிப் படுகை மாவட்டங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு மாரிமுத்து தலைமை வகித்தார்.

தமிழ்நாடு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு, திருவாரூர் மாவட்ட செயலாளர் திரு கோ உதயக்குமார்,
கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் திரு M மாலழகன், கூட்டமைப்பின் ஒன்றியப் பொருளாளர் திரு M மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திரு பெ சின்னதுரை,  வலங்கைமான் ஒன்றிய அமைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக்குழு,
திரு லெனின், தலைமை ஒருங்கிணைப்பாளர், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம், டெல்டா மாவட்டங்கள்
திரு G வரதராஜன், நகர் மன்ற உறுப்பினர், திருவாரூர்

ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணை பொதுச்செயலாளர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினார்.

தோழர் காளியப்பன் தனது உரையில், “30,40 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஏறத்தாழ இரண்டாயிரம், மூவாயிரம் அடிகள் வரை துரப்பண குழாய்களின் மூலம், எண்ணெய், எரிவாயுவை தொடர்ச்சியாக எடுத்ததின் விளைவாக, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் முழுவதும் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு போய்விட்டது. இதன் விளைவாக, ஏழை எளிய கூலித் தொழிலாளர்களின் சாதாரண வீடுகள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களின் வீடுகளும் விரிசல் அடைந்து விழும் நிலையில் பல இடங்களில் உள்ளன.

இந்நிலையில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் கம்பெனிக்கு, மீத்தேன், நிலக்கரி எடுக்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒட்டு மொத்த காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது, காவிரி டெல்டாவில் இருந்து குடிநீர் திட்டங்கள் மூலம் பயன் பெறும், சென்னை, இராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் மக்களும் குடிக்க நீரின்றி உண்ண உணவின்றி நாடோடிகளாக புலம் பெயர்ந்து, அலைந்து திரிய வேண்டிய அவல நிலைக்கு ஆளாக நேரிடும். காவிரி டெல்டாவின் இதயம் போன்ற பகுதியான வலங்கைமானில் இன்று கூடியுள்ள பொதுமக்கள், மீத்தேன் திட்டத்த டெல்டா மாவட்டங்களை விட்டு வெளியேற்றும் வரை உறுதியாக போராடுவதற்கு முன்வர வேண்டும்” என்று சிறப்புரையாற்றினார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலை குழுவினரின் புரட்சிகர பாடல்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.  மீத்தேன் திட்டத்தின் பேராபத்தை பற்றியும் தஞ்சையின் பாரம்பரிய விவசாயிகளின் வாழ்க்கையை விளக்கியும் அமைந்த பாடல்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

தகவல்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு,
கொரடாச்சேரி ஒன்றியம்,
திருவாரூர்,
தொடர்புக்கு : 7502607819