privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நீலகிரியில் கரடி தாக்கி பெண் சாவு - மக்கள் போராட்டம்

நீலகிரியில் கரடி தாக்கி பெண் சாவு – மக்கள் போராட்டம்

-

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கேர்பன் கிராமம் அருகேயுள்ள தொத்தமுக்கு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தேயிலைப் பறித்த தோட்ட தொழிலாளிகள் மூன்று பேரை கரடி கடித்து குதறியது. இதில் மாதி (வயது 50) என்ற பெண் கோரமாக கரடியினால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது முகம், மார்பு, வயிறு, பின்பகுதி என கடித்துக் குதறி இழுத்து சென்றது. அவரை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் ஹாலன் (வயது 52) அவரது மகன் தினகரன் உறவினர் குமார் ஆகியோர் காயமடைந்தனர்.

neelamalai-bear-attack-1அருகில் வேலை செய்த தொழிலாளிகள் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்து போன பெண்ணை கரடி இழுத்துச் சென்றதால் மீட்க முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டார். பின்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, வள்ளுவர்நகர், குண்டூர்நகர், காத்துக்குளி, இருப்புக்கல், கேர்பன், குமரன்நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.

அரசு மற்றும் வனத்துறையினரை கண்டித்து மக்கள் கோசமிட்டனர். நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தினர் திரண்டு மக்களுக்கு வழிகாட்டினர்.

உயிரிழந்தவருக்கு 10 லட்சம் இழப்பீடு, அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை, காயமடைந்தவருக்கு மருத்துவ உதவி, கரடியை உயிருடனோ சுட்டோ உடனே பிடிக்க வேண்டும். கரடி போன்ற விலங்குகள் ஊருக்கு வருவதற்கான காரணமான காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உடனே மீட்டு அரசுடைமையாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதற்குள் தி,மு.க., பா.ஜ.க. கட்சிகள் தங்கள் அதிகாரங்களை நிலை நாட்டவும் அ.தி.மு.க. தங்கள் அரசுக்கு களங்கம் ஏற்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தனித்தனியாக பேச முயற்சித்தனர். அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க போன்றவர்களை மக்கள் புறக்கணித்தனர்.

இருப்பினும் அ.தி.மு.க.வை சேர்த்த பிரமுகர் சாந்திராமு என்பவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு உறவினர் என்பதால் அவர் தனது ஆளுமையை நிலைநாட்டவும் அரசின் அவப்பெயரை போக்கும் வண்ணம், “நான் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்பு” என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம், “போஸ்ட்மார்ட்டம் செய்து காலை 7 மணிக்குள் மக்கள் வருவதற்குள் கொடுத்து விடுங்கள். போராட்டம் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூற தி.மு.க மாவட்ட செயலர், மாவட்ட ஆட்சியரிடம் பேசி, “இழப்பீடு உடனே அறிவிக்க வேண்டும்” என்று கோரினார்.

கோத்தகிரி ஊராட்சி மன்றத் தலைவர் அ.தி.மு.க. பிரமுகர், “இழப்பை அறிவிக்க முடியாது. அதிகாரம் இவர்களுக்கு இல்லை, ஆனால் செய்வார்கள்” என்று கூறினார்.

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆனந்தராஜ் குறிக்கிட்டு, “அதிகாரம் இல்லை என்றால் இங்கு ஏன் வந்தார்கள். கூடலூரில் புலி கடித்த போது எப்படி இழப்பீடு மக்கள் முன் அளித்தார்கள். அதை அறிவித்தது நீங்கள் தானே” என்றார். அதற்கு முடியாது என்று பிடிவாதம் செய்தனர்.

தோழர் ஆனந்தராஜ் மக்கள் முன் வந்து “மாவட்ட ஆட்சியர் மக்கள் முன் கோரிக்கை குறித்து பேச மாட்டாராம். நாம் உறுதியாக இருந்து மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு நாம் வைத்து கோரிக்கையை மக்கள் முன் அறிவிக்க ஒன்றாக இணையுங்கள். கோசம் போடுங்கள்” என்றார். உடனே மக்கள் கோசம் போட்டனர். மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்.

வேறு வழி இல்லாமல் மக்கள் மத்தியில் பேச முன்வந்தனர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள். நீலமலை அனைத்துத் தொழிலாளர்சங்கத் தலைவர், “மக்கள் கோரிக்கையை முதலில் கேளுங்கள், அடுத்து நீங்கள் பேசுங்கள்” என்று கூறி கோரிக்கையை முன் வைத்தார். தொடர்ந்து அதிகாரிகள் நிவாரணம் அறிவித்தனர்.

மக்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். சிலர், “நாளை பந்த் நடத்த வேண்டும், அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்” என்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் “நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத் தலைமையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்” என்றனர்.  “ஊர்வலமாக சென்று கோரிக்கையை முன்வைத்து பேரணி செல்லலாம்” என்று ஊர் மைக்கில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதை ஏற்று ஊர்மக்கள் அனைவரும் திரண்டு கோத்தகிரி நோக்கி வந்தனர்.

அதற்குள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் 8 மணிக்குள் போஸ்மார்ட்டம் முடித்து சடலத்தை ஊருக்கு எடுத்து சென்று விட்டனர். அதனால் ஊர்மக்கள் கோபம் அடைந்து குழுகுழுவாக பிரிந்து கோத்தகிரிக்கு கொஞ்சம்பேர், கரடி கடித்த ஊருக்கு கொஞ்சம் பேர் சென்று விட்டனர்.

அதற்குள் கரடி பிடிப்பதாக வனத்துறை கரடிதேடும் பணியில் ஈடுபட்டனர். கரடியை ஊசிபோட்டுதான் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மயக்க ஊசி போடப்பட்டது. மயக்க ஊசி போட்டு 10 நிமிடம் ஆகியே மயக்கம் அடையும். ஆனால் வனத்துறையினர் அதன் அருகில் செல்ல இரண்டு நபரை கடித்தது, அவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி மட்டுமே அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளை மக்கள் புறந்தள்ளியிருக்கின்றனர். அவர்கள் டி.வி.யில் பேட்டி அளித்தார்களே தவிர அதிகாரிகளிடம் பேச மக்கள் அனுமதிக்கவில்லை.

தற்போது ஒரு கரடி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. கரடி தாக்கியதில் ஒரு பெண் இறந்து பொதுமக்கள் வனத்துறை என நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். பெண்ணின் கணவர் ஹாலனும் மார்ச் 25 அன்று உயிரிழந்தார்.

அரசு முறையாக வளங்களை பராமரிக்காவிட்டால் இன்னும் நிறைய இழக்க நேரிடும் அதனை முறியடிக்க மக்களுக்கான பாதுகாப்பு அதிகார அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும்.

தகவல்
நீலமலை அனைத்துத் தொழிலாளர் நல சங்கம்,
கோத்தகிரி