privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஐ.ஐ.டி தடை நீக்கம் - தந்தை பெரியாருக்கு மரியாதை

ஐ.ஐ.டி தடை நீக்கம் – தந்தை பெரியாருக்கு மரியாதை

-

சென்னை ஐ..டி. –யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடையைத் தகர்த்தது மாணவர்களின் போராட்டம்!

சென்னை ஐ.ஐ.டியில் இயங்கி வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி – வகுத்த விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கூறி கடந்த 29-05-2015 அன்று தடைவிதித்தது ஐ.ஐ.டி. நிர்வாகம்.

தடைவிதித்த நாள் முதல் சென்னை ஐ.ஐ.டி. வளாகம் ஆரம்பித்து தமிழகம் முதல் மும்பை ஐ.ஐ.டி வரை பல்வேறு மாணவர் அமைப்புக்கள், கட்சிகள், என தமிழகத்தைப் போர்க்களமாக மாற்றிய போராட்டங்களின் விளைவாக 07-06-2015 அன்று அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடையை நீக்கி அம்பேத்கர் பெரியாரிடம் பணிந்துள்ளது ஐ.ஐ.டி நிர்வாகம்.

1. சென்னை, பு.மா.இ.மு

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடை நீக்கம்! பார்ப்பனியத்திற்கு கிடைத்த செருப்படி!

APSC தடை நீக்கம்
“இது தந்தை பெரியார் வாழ்ந்த மண். பார்ப்பனிய எதிர்ப்பை சுவாசமாய்க் கொண்ட மண்.”

ம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை நீக்கம் என்ற செய்தியை கேள்விப் பட்டவுடனே இது உண்மைதானா? இல்லை பார்ப்பன சூழ்ச்சி ஏதேனும் இருக்கிறதா? என்ற சந்தேகம் தூங்க விடவில்லை.

காலையில் முழுச் செய்தியையும் அறிந்த பிறகு இது உண்மைதான் என்பதை உணர்ந்தோம். ஒருவாரம் கைது ஆர்ப்பாட்டம், போலீசுடன் மோதல் என ஐ.ஐ.டி.யை போர்க்களமாக்கி கிடைத்த வெற்றிதான் இது. ஆம் இந்த வெற்றிக்கு காரணங்கள் பல, அவற்றுள் ஒன்று இது தந்தை பெரியார் வாழ்ந்த மண். சாதி ரீதியான ஏற்றத்தாழ்வை கொண்ட பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியாகவே எதிர்ப்பு தெரிவிக்கும் வீரஞ்செறிந்த மண்.

APSC தடை நீக்கம்
இது “அம்பேத்காரையும் பெரியாரையும் பற்றி பேசக்கூடாது” என்ற இந்த இந்துத்துவ பாசிசத்துக்கு பெரியாரின், அம்பேத்காரின் வாரிசுகள் கொடுத்த செருப்படி.

“அம்பேத்காரையும் பெரியாரையும் பற்றி பேசக்கூடாது” என்ற இந்த இந்துத்துவ பாசிசத்துக்கு பெரியாரின் – அம்பேத்காரின் உண்மையான வாரிசுகள் கொடுத்த செருப்படி, இது. மன்னிப்புக் கூட கேட்காமல் திமிராக இருக்கும் ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மீது நமது விழிப்புணர்வை நீக்க கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கும் அம்பேத்கரின் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

APSC தடை நீக்கம்
சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலை சிக்னலில் சிவப்பு விளக்காக “பார்ப்பன பாசிஸ்ட்களுக்கு, முகத்தில் விழுந்த செருப்படி” என்று முழக்கங்கள் சீறின

நாற்புறமும் வாகனங்கள் சீறிப்பாய, பரபரப்பான சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலை சிக்னலில் சிவப்பு விளக்காக “பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்ட்களுக்கு, முகத்தில் விழுந்த செருப்படி” என்று முழக்கங்கள் சீறின.

APSC தடை நீக்கம்
கையில் பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பனியத்திற்கு கல்லறை எழுப்புவோம் என பதாகைகள் ஏந்தி இருந்தனர்.

செஞ்சட்டை அணிந்து கொண்டு கையில் அம்பேத்கர் படத்துடன், பு.மா.இ.மு என்ற பதாகையுடன் பேரணியாக சென்று சுமார் 12 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில் தோழர்கள் அணிதிரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கையில் பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பனியத்திற்கு கல்லறை எழுப்புவோம் என பதாகைகள் ஏந்தி இருந்தனர்.

APSC தடை நீக்கம்
இது மாணவர்கள், ஜனநாயக சக்திகளின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் முதல் படி

தோழர் கணேசன் பேசுகையில், “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடை நீக்கம் என்பது மாணவர்கள், ஜனநாயக சக்திகளின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் முதல் படி. இது பெரியார் பிறந்த மண் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. இங்கு இந்துத்வா சக்திகள் தலையெடுக்க முடியாது. இதேபோல் மாணவர்கள் மீதான ஜனநாயக உரிமை, கருத்துரிமை தாக்குதல் எங்கு நடந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என அறைகூவி அழைத்தார்.

APSC தடை நீக்கம்
சென்னை ஐ.ஐ.டி.யின் கருத்துரிமை மீதான தாக்குதலுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு கல்லூரிதோறும் மாணவர்கள் அமைப்பாக அணி திரள வேண்டும்.

தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் ஜனநாயக உரிமைகள் என்ற பேச்சே கிடையாது. மாணவர் தேர்தல்கள் பெயருக்கு கூட நடப்பதில்லை. மாணவர்களை சமூகத்தை விட்டு விலக்கி வைக்கும் நிகழ்வுதான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யின் கருத்துரிமை மீதான தாக்குதலுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு கல்லூரிதோறும் மாணவர்கள் அமைப்பாக அணி திரள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

-புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை.

2. புதுச்சேரி, பு.ஜ.தொ.மு

APSC தடை நீக்கம்
புதுச்சேரி, சாரம் பகுதியில் உள்ள பெரியாரின் சிலக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து இந்த வெற்றி கொண்டாடப்பட்டது.

து பார்ப்பனியத்தின் மீது விழுந்த அடி என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பெரியாரின் ம்ண்ணில் பார்ப்பனியத்திற்கு கல்லறை கட்டுவோம் என உறுதியேற்று, புதுச்சேரி, சாரம் பகுதியில் உள்ள பெரியாரின் சிலக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து இந்த வெற்றி கொண்டாடப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 9597789801

3. திருச்சி

 

க்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயக் தொழிலாளர் முன்னணி தோழர்கள் 08-06-2015 அன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, வெடி வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

apsc-ban-lifted-trichy-4

  • இவ்வெற்றிக்கு காரணமான மாணவர்களின் போராட்டம் வாழ்க! 
  • மாணவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் மோடி அரசின் பார்பன பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்களுக்கு ஆதரவாக துணை நிற்போம்

என மக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை