privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக்கை மூடு... தமிழகமெங்கும் தொடரும் போராட்டங்கள் !

டாஸ்மாக்கை மூடு… தமிழகமெங்கும் தொடரும் போராட்டங்கள் !

-

1. கரூரில் பு.மா.இ.மு தோழர்கள் கைது!

karur 1மிழகமெங்கும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பல்வேறு போராட்டங்கள் தொடர்கின்றது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக்கை மூடக் கோரி பு.மா.இ.மு தலைமையில் நடத்திய போராட்டம் நாடே அறிந்தது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை கைது செய்து காவல் நிலையத்திலும், சிறையிலும் தாக்குதல் நடத்திய காக்கிச் சட்டை ரவுடிகளின் ஜெயா அரசை கண்டித்து 7.8.2015 சுவரொட்டி ஒட்டிய பு.மா.இ.மு மாவட்ட செயலாளர் இரா. பாக்கியராஜ் உட்பட 6 தோழர்களை கரூர் டவுன் போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர்.

சுவரொட்டி ஒட்டுவது எங்கள் கருத்துரிமை என்று எதிர்த்து கேட்ட தோழர்களை மிரட்டும் வகையில் காக்கிச் சட்டை போலீஸ் ரவுடிகள் இங்கு அதெல்லாம் பேசக்கூடாது என்று பலவந்தமாக கைது செய்தனர்.டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவதற்கு சதித் திட்டம் தீட்டியதாக தோழர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

சுவரொட்டி முழக்கங்கள்:

  • ஜெ அரசே..! உன் அடக்கு முறைக்கு பணிய மாட்டார்கள் மாணவர்கள் டாஸ்மாக்கை மூடக் கோரி போராட்டம் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல்!

மாணவர்களே!

  • டாஸ்மாக்கை மூடுவோம் !

வகுப்பகளை புறக்கணிப்போம் ! வீதிக்கு வாருங்கள் !

karur 2

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்.

____________________________________________________

2. காங்கயம் டாஸ்மாக் முற்றுகை

காங்கயம் பேருந்த நிலையத்தின் பரபரப்பை விட அருகாமையில் இருக்கும் டாஸ்மாக் கடையின் பரபரப்பு அதிகம். இந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர், காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள். “டாஸ்மாக்கை மூடு, பச்சையப்பா மாணவர்களை விடுதலை செய்” என்ற முழக்கம் காங்கயம் நகர மக்களை சென்றடைந்தது. ஓடி வந்த போலீசு டாஸ்மாக் விற்பனைக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்ற கடமை உணர்வோடு மாணவர்களை கைது செய்து கொண்டு சென்றது.

kangeyam (1)

____________________________________________________________________

3. கடலூர் ஆர்ப்பாட்டம்

Jpeg

____________________________________________________

4. நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி நகரில் டாஸ்மாக்கை மூடுமாறு போராட்டம்

Exif_JPEG_420

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும், டாஸ்மாக்கை மூடுமாறும் ஜெயா அரசைக் கண்டித்தும் கோத்தகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் 07.08.2015 அன்று நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெருந்திரளான தொழிலாளிகள், பெண்கள், மக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் தோழர் விஜயன் பேசும் போது போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் நோக்கில் அரசே சாராயம் விற்கிறது, அதனை மக்கள் வீதியில் இறங்கி முறியடிக்க வேண்டும் என்றார்.

சிறப்புரையாற்றிய தோழர் பாலன் பேசும் போது குடிக்கு எதிராக மாணவர்களும், மக்களும் தோற்றுவித்திருக்கும் எழுச்சியை அடக்க முடியாது என்று குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் உணர்ச்சியுடன் குடியின் கொடுமைகளை குறிப்பிட்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டார்.

தகவல்: நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம், கோத்தகிரி
தொடர்புக்கு: 9047 453204

________________________________________________