privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்குமுதம் ரிப்போர்ட்டரின் அவதூறு - வி.வி.மு கண்டனம் !

குமுதம் ரிப்போர்ட்டரின் அவதூறு – வி.வி.மு கண்டனம் !

-

விவசாயிகள் விடுதலை முன்னணி
பென்னாகரம் வட்டம்
தொடர்புக்கு: கரியம்பட்டி, எஸ்.என்.புரம் அஞ்சல், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்.
செல்: 9943312467

பெறுதல்:

ஆசிரியர் மற்றும் இணை ஆசிரியர்,
குமுதம் ரிப்போர்ட்டர்.

ஐயா,

பொருள்: விவசாயிகள் விடுதலை முன்னணி குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதற்கு எமது கண்டனத்தைத் தெரிவித்தல் மற்றும் மறுப்பு செய்தி வெளியிடக் கோருதல்

வணக்கம்.

உங்களது குமுதம் ரிப்போர்ட்டர் 27.05.2016 இதழில் ”பென்னாகரம் உணர்த்தும் உண்மை என்ன” என்ற தலைப்பில் வை.கதிரவன் என்பவர் எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளீர்கள். இதில் பா.ம.க. அன்புமணி ராமதாஸ் தேர்தல் தோல்வி குறித்து பல விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் சற்றும் தொடர்பில்லாமல், “பா.ம.க. ஜெயித்தால் தங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கருதிய தலித்துகளிடம் விவசாய விடுதலை முன்னணி போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டது பா.ம.க.வுக்கு பலத்த அடி.” என்று எழுதியுள்ளீர்கள். இந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகவும் எங்களது அமைப்பை அவதூறு செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு எழுதியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

குமுதம் ரிப்போர்ட்டர்எமது அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி என்பது எந்த ஓட்டுக் கட்சிகளையும் ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமைப்பல்ல. விவசாயிகளை இந்தத் போலி ஜனநாயகத் தேர்தல் அரசியலுக்கு வெளியே அணிதிரட்டிப் போராடும் புரட்சிகர அமைப்பு; நக்சல்பாரி அரசியலை ஆதரித்து, பிரச்சாரம் செய்யும் அமைப்பு. “தேர்தல் பாதை திருடர் பாதை”, “ஓட்டுப் போடாதே, புரட்சி செய்”, என்பது எங்களது கொள்கை. இன்று இந்தத் தேர்தல் பாதை என்பது தற்கொலைப் பாதையாகவும் மாறியுள்ளது. இந்தத் தேர்தல் கட்டமைப்பிலிருந்து உழைக்கும் மக்கள் தங்களது எந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்ற நிலைமையும் உருவாகியுள்ளது. இது மக்களுக்கு வழங்குவதாக சொன்ன ஜனநாயகத்தை வழங்க முடியாமல் தோற்றுப்போய் மக்களுக்கே எதிரானதாக மாறியுள்ளது. அதனால், இந்தத் தேர்தலிலும் எங்களது அமைப்பின் சார்பாக பென்னாகரத்தில் பல ஊர்களில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரங்களை வீச்சாகக் கொண்டு சென்றுள்ளோம்.

மேலும், மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து தேர்தல் புறக்கணிப்பு, டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் எமது அமைப்பு பங்கேற்றி வந்துள்ளது. தேர்தலின் மூலம் டாஸ்மாக்கை மூடுவது சாத்தியமில்லை, அதற்காக காத்திருக்க வேண்டியதும் இல்லை, மக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மே 5-ம் தேதி மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டத்தில் எமது தோழர்கள் பங்கேற்றும் இதற்காக சிறையும் சென்றுள்ளனர். இவை எல்லாம், தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்களைத் திரட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி மேற்கொண்ட போரட்டங்கள், பிரச்சாரங்கள். தருமபுரி மாவட்டத்தில் எமது அமைப்பு தேர்தல் புறக்கணிப்புக்காக மக்களிடம் பிரபலமான அமைப்பு என்பதை அரசியல் தெரிந்த அனைவரும் அறிவர்.

ஆனால், அரசியல் பற்றியோ பென்னாகரம் பற்றியோ தெரியாத ஒருவர் அறையில் உட்கார்ந்து தனக்கு தோன்றிய கருத்துக்களை எழுதியிருப்பதாகவே நீங்கள் வெளியிட்டுள்ள கட்டுரை உள்ளது. இவ்வாறு எமது அமைப்பு பற்றி அவதூறாக எழுதியுள்ளதற்கு வருத்தம் தெரிவித்து மறுப்பு வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு நீங்கள் மறுப்பு வெளியிடாத பட்சத்தில், எமது அமைப்பின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியிட்டதற்காக உங்களது பத்திரிகை மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், உங்களது பத்திரிகையின் அவதூறு செய்தியை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

P. கோபிநாத்
(வட்டாரச் செயலாளர்)
நாள்: 27.05.2016

குமுதம் ரிப்போர்ட்டர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு எமது கண்டனத்தைத் தெரிவிக்க முயற்சித்தோம்.

மே 26-ம் தேதி தொடர்பு கொண்ட போது, “அலுவலக நேரம் முடிந்துவிட்டது” எனத் தெரிவித்தார் செக்யூரிட்டி என்று தன்னை கூறிக்கொண்டவர். மறுநாள் காலையில் தொடர்பு கொண்டு பேசிய போது, “அனைவரும் விடுமுறையில் உள்ளனர், தற்போது யாரும் இல்லை. பத்தரை மணிக்குதான் ரிப்போர்ட்டர்கள் வருவார்கள். 10 நிமிடம் தான் இருப்பார்கள். அப்போதுதான் நாங்கள் தெரிவிக்க முடியும். செய்தியாளர்களின் ஃபோன் எண்ணைக் கொடுக்கமாட்டார்கள். இதுதான் எங்களது நிர்வாக முறை’’ என்று தெரிவித்தார். “சனி, ஞாயிறு விடுமுறை. திங்கட்கிழமை (30-ம் தேதி) காலை 10.30 மணிக்கு தொடர்பு கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார். “ஆசிரியரையும் தொடர்பு கொள்ளமுடியாது. அவரது எண்ணும் எங்களிடம் இல்லை” என்று தெரிவித்தார்.

ரிப்போர்ட்டர் பத்திரிகை நிர்வாக முறையின் யோக்கியதை இதுதான். பொய்யையே மூலதனமாக வைத்துக்கொண்டு, அதிகாரத்துவ முறையில் அமைக்கப்பட்டுள்ள முதலாளித்துவ ஊடங்கங்கள் மக்களிடம் பரப்பரப்பான செய்திகளைப் பரப்பி பலகோடி இலாபம் சம்பாதிக்கின்றன.

மக்களிடம் செல்லாமலேயே, அறையில் உட்கார்ந்து கொண்டு, தனக்கு விருப்பமான பிரமுகர்களிடம் காசு வாங்கிக்கொண்டு, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப கற்பனைக் கதைகளைப் புனைந்து, அரைகுறையான தகவல்களைக் கொண்டு இட்டுக்கட்டி செய்திகளை உற்பத்தி செய்து தள்ளுவது; இதனைக் கண்டிக்க நினைப்பவர்களை தொடர்பு கொள்ள முடியாத வகையில் பத்திரிக்கைக் கட்டமைப்பை அமைத்துக் கொள்வது என்பதுதான் குமுதம் ரிப்போர்ட்டரின் ‘பத்திரிகை தர்மம்’!

விடா முயற்சிசெய்து தொடர்பு கொண்ட போது யாரோ இணைய ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் பேசினார். அவரும் நிர்வாகத்திடம் பேசுவதாக சமாளித்தார்.

பிறகு இந்த அவதூறு செய்தியினை எழுதிய கதிரவன் அவர்களை தொலைபேசியில் பிடித்து பேசிய போது முதலில் சமாளித்தவர் ஒரு மாதிரி மன்னிப்பெல்லாம் கேட்டார். ஆனால் 31.5.2016 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டரில் எமது மறுப்பு செய்தி வெளிவரவில்லை. ஏனென்று கேட்டால் எவரும் பதில் சொல்லவில்லை. மீண்டும் கதிரவனிடம் பல முறை போன் செய்தால் அவர் எடுக்கவில்லை. வேறு ஒரு தொலைபேசி எண்ணில் பேசிய போது எடுத்தார். நடப்பு இதழில் மறுப்பு வரவில்லை என்றதும் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றார். பொய்யை நீங்கள்தானே எழுதினீர்கள் என்று கேட்டால் வெளியானதுக்கு ஆசிரியர்தான் பொறுப்பு அவரிடம் பேசுங்கள் என்றார். பொய்யை எழுதியது நீங்கள்தானே அன்றால் “ஜர்னலிசம் எத்திக்ஸ்” தெரியுமா என்றார். உங்களுக்கு தெரியுமென்றால் எங்களைப் பற்றி அவதூறு எழுதியதற்கு பதில் சொல்லுங்கள் என்றால் விளக்கமளிக்க மறுக்கிறார். குமுதம் ரிப்போர்ட்டர் எனும் பத்திரிகை பாசிச ஜெயாவின் காலை நக்கி பிழைக்கும் மானங்கெட்ட பத்திரிகை என்பது உலகறிந்த உண்மை. அதில் வேலை செய்பவர்களும் இப்படித்தான் என்பது இந்த புரோக்கர் கதிரவனது செயலைப் பார்க்கும் போது தெரிகிறது.

விவசாயிகள் விடுதலை முன்னணி இயக்கம் போராட்டத்தில் வளர்ந்த இயக்கம். பென்னாகரத்தில் மற்ற கட்சிகளை விட மக்களிடம் நம்பிக்கையும், நேர்மையையும் பெற்ற இயக்கம். ஒரு மலிவான தரகனைப் போல பத்திரிகை நடத்தும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு இது தெரியாது. தெரிய வைப்போம்.

விவசாயிகள் விடுதலை முன்னணி
பென்னாகரம் வட்டம்
தொடர்புக்கு: 9943312467