privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்முன்னோடிகள்நாங்கள் மார்க்சின் வாரிசுகள் - பென்னாகரத்தில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

நாங்கள் மார்க்சின் வாரிசுகள் – பென்னாகரத்தில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

-

நவம்பர் 7 ரஷ்ய சோசலிசப் புரட்சியின்  100 -வது ஆண்டு தொடக்க விழா !
காரல் மார்க்ஸ் 200-வது  பிறந்தநாள்  விழா!
நக்சல்பாரி  பேரெழுச்சியின் 50-வது ஆண்டு துவக்கவிழா!
சீன கலாச்சார புரட்சியின்  50-ஆண்டு நிறைவு விழா!
கம்யூனிச  அகிலத்தின் 150-துவக்க விழா!

பென்னாகரம்  அரங்குகூட்டம்.

வம்பர் 7 ரஷ்ய  புரட்சிநாளை ஒவ்வொரு ஆண்டும் பென்னாகரம் பகுதி விவிமு, புமாஇமு தோழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.  இவ்வாண்டு ஐம்பெரும் விழாக்கள் என்பதால் இன்னும் அதிகமாக சிறப்புச்செய்யும் வகையில் தோழர்கள் திட்டமிட்டு  அரங்குகூட்டமாக நிகழ்ச்சி நடத்தினர்.

04aஇசைச்சித்திரம்இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாவட்டம் முழுவதும் இந்நாளை கொண்டாட  வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் பார்க்கும் இடமெல்லாம் சுவரொட்டியும் பென்னாகரம் வட்டாரத்தின் பல பகுதிகளில் தோரணங்களும் கட்டப்பட்டு காட்சி அளித்தது. பரவலாக துண்டு பிரசுரமும் வினியோகித்தனர். இதனைத் தொடர்ந்து, 8 கிளைப்பகுதிகளில் கொடியேற்றினர்.  பின்னர்,   இறுதியாக பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டெம்போ ஸ்டேண்டில் முழக்கமிட்டு கொடியேற்றிய பிறகு அனைவரும் பேரணியாக அரங்குகூட்டம் நடக்கும் இடத்தை சென்றடைந்தனர்.

இதற்கு முன்னதாக, தோழர்களின் வீடுகளில் புத்தாடை அணிந்து அந்த அந்த கிராமங்களில் இனிப்புகளை வழங்கியும் நவம்பர் 7  உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய நாள் என்கிற உழைக்க மக்களும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் 07.11.2016  அன்று  குடும்பம்  குடும்பமாக  நவம்பர் 7 விழா அரங்கு கூட்டத்தில்  நூற்றுக்கணக்கான  உழைக்கும்  மக்களும் பல்வேறு புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் கலந்து  கொண்டனர்.

இந்த அரங்கு கூட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை  முன்னணி வட்டார செயலாளர் தோழர் கோபிநாத்  தலைமை  தாங்கினார். அடுத்ததாக மக்கள் அதிகாரம்   மண்டல ஒருங்கினைப்பாளர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் ஆர்.எஸ்.எஸ்  பி.ஜே.பியும் விழா எடுக்கிறான். நம் மூதாதையர்களை  அழித்துவிட்டு நம்மை விழா எடுக்க வைக்கிறார்கள்..  இதை மக்களும் விழாவாக கொண்டாடுகிறார்கள் இப்படி  எதிரியார், நண்பன் யார் என தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.  இந்த  குழப்பத்தை போக்கி எதிரியார் நண்பன் யார் என்பதை புரிய வைப்பதும் இன்றைய அரசியல் சூழலில் வெகு சீக்கிரமே புரட்சியை சாதிக்க விரைந்து செயல்படவேண்டும் என்பதே  இந்த  விழாக்களின்  நோக்கம் என்றார்.

05bபார்வையாளர்கள்மாமேதை  கார்ல் மார்க்சு தியாகத்தை பற்றிப்பேசிய முத்துக்குமார்,   நாம்  செத்தாலும்  பரவாயில்லை, நம்  பிள்ளைகளாவது நல்லாயிருக்கட்டும் என்றுதான் நாமெல்லாம்  நினைப்போம். பிள்ளைகள் பட்டினி கிடந்து  சாவதை பார்த்துக்கொண்டு நம்மால் வாழ முடியாது ஆனால் நான்கு பிள்ளைகள் செத்து போன பிறகும்  மார்க்ஸ் மக்களுக்காக வாழ்ந்தார், போராடினார். எந்த  நிலையிலும் போராட்டத்தை கைவிடவில்லை மனித  குலத்தையே தனது குடும்பமாக கருதினார். தனது உறவாக கருதினார்.  இதற்கான போராட்டத்தில்   பல்வேறு துன்பங்களையே மகிழ்ச்சியாக கருதினார்.  இதற்கு நேர் எதிராக இருக்கும் முதலாளித்தும் தான்  ஒருவனுடைய சுய நலத்திற்காக மனித குலத்தை பற்றி  துளியும் அக்கறையின்றி இயற்கையை அழிக்கின்றனர்.   இன்றைக்கு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதற்கு முதலாளியின் இலாபவெறிதான் காரணம்  முதலாளி இயற்கையை அழிக்கிறான். ஆக ஒருபுறம் மனித குலத்தை அழிக்கும் முதலாளித்துவ கொள்ளைக்கூட்டம் மறுபுறம் இதற்கு எதிராக போராடும்  மனித குலத்தை காக்கும் கார்ல் மார்க்ஸ்சின் வாரிசுகளாக புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் கூட்டம். இதில் ஒவ்வொருவரும் யார் பக்கம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இந்த முடிவை 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எடுத்தார்கள் ரஷ்ய மக்கள். மனித குலத்தை காக்கும்  கம்யூனிஸ்ட் இயக்கம்தான் தனக்கானது என முடிவு செய்தார்கள். மாமேதை தோழர் லெனின் தலைமையில்   அணி திரண்டு ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து ஒரு பொன்னுலகத்தை படைத்தனர். ரஷ்ய  மக்கள் அதன் பிறகு  கல்வி, மருத்துவம், குடியிருப்பு, போக்குவரத்து, மின்சாரம், பெண் விடுதலை என அனைத்தையும் பெற்று ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தனர். அது போன்று  நம் நாட்டிலும் படைக்க வேண்டும். இன்றைக்கு மும்பையில் அம்பானி கட்டியிருக்கும் வீட்டின் மதிப்பு  ஒரு ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல். ஆனால் லட்சகணக்கான மக்கள் வசிக்க வீடு இல்லை, இப்படி மலைக்கும் மடுவுக்குமான  ஏற்றதாழ்வு இந்தியாவில் உள்ளது. மேலும் ஏழைகளுக்குள்ளே ஏற்றத்தாழ்வு உள்ளது. சாதிமாறி காதலித்தால் இங்கே உயிர் இருக்காது. கல்வி கடைசரக்காகிவிட்டது, படித்தாலும் வேலை இல்லை. பெண்கள் வாழவே முடியாத சமூகமாக, சமூகம் மாறிவிட்டது. அனைத்திலும் பகற்கொள்ளை நடக்கிறது. ஆனால் நல்லாட்சி தருவதாக கூறி ஆட்சி நடத்தும் இந்த அரசு கட்டமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதற்கு தீர்வு, 1967 ஆம் ஆண்டு மே மாதம் வெடித்த நக்சல்பாரி எழுச்சிதான் என்றும் இதுதான் உண்மையான மக்கள் அதிகாரம், ஜனநாயகம் என்றார்.

இதை சாதிக்க வேண்டும் என்றால் நாம் அமைப்பாக திரள்வது மட்டுமின்றி, அந்த அமைப்பு கலாச்சார ரீதியாகவும் வலுவான அமைப்பாக இருக்கவேண்டும். இதை 1966 ல் சீனத்தில் மாவோ கலாச்சார புரட்சின் அவசியத்தை நடத்தும் வகையில் உணர்த்தினார். புரட்சிக்கு பிறகு தான் கலாச்சார புரட்சி செய்யவேண்டும் என்பது அல்ல. இப்போதே நிலபிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய பிற்போக்கு கலாச்சாரத்திற்கு எதிராக சமரசமின்றி போராடவேண்டும், அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும் என்றார்.

பின்னர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை பு.ஜ.தொ.மு மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் வழங்கினார்.  இதன்பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனியின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடந்தது. இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் முடிந்த அரங்கு கூட்டம் முடிந்தது. பின்னர் அந்த மண்டபத்திலேயே  அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இவ்வாறு நடந்து முடிந்த இந்த விழா ஒரு மக்கள் விழாவாக மாறிவருகிறது என்றால் இது மிகையல்ல.

தகவல்:
விவசாயிகள்  விடுதலை  முன்னணி.
புரட்சிகர  மாணவர்  இளைஞர்  முன்னணி.
தருமபுரி.
தொடர்புக்கு: 99433 12467

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க