அன்பார்ந்த உழைக்கும் மக்களே

மெரினா கரையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கின்றனர். இருப்பினும் போலீசாரின் ஒடுக்குமுறையை மீறி மாணவர்கள் கடலுக்குள் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெரினா ராஜிவ் காந்தி சாலையில் 1000 போலீசார் குவிக்கப்பட்டு அந்த பகுதி முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்நிலையை மீறி பட்டினப்பாக்கம் கடல் வழியாக மாணவகளை காக்க மக்கள் நூற்றுக்கணக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். எனவே இச்செய்தியை பார்க்கும் சென்னை மக்கள் எவ்வளவு நபர்களை திரட்ட முடியுமோ திரட்டிக்கொண்டு மெரினாவுக்கு விரைந்து வாருங்கள்.

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இதே போன்று வன்முறையாக கலைப்பாதாக செய்திகள் வருகின்றன. கோவை, மதுரையிலும் போலிசார் இதே போன்று வன்முறையை அரங்கேற்றி மாணவர்களை கலைத்தனர். அதை மீறி அங்கேயும் மக்களும் மாணவர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  அங்கேயும் இதே போன்று திரண்டால் மாணவர் போராட்டத்தை காக்க முடியும்.

வேடிக்கை பார்க்கும் தமிழகமே வீதிக்கு விரைந்து வா!

-வினவு

இது தொடர்பாக மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள போராட்ட முழக்கம்

  • இனி இது ஜல்லிக்கட்டு மட்டுல்ல – டில்லிக்கட்டு!
  • மோடி பன்னீர் கூட்டு சதி!
  • தமிழக மக்கள் மீது மோடி அரசின் பயங்கரவாத தாக்குதல்!
  • டில்லிக்கு தமிழகம் அடிமையல்ல!
  • போராட்டத்தைத் தொடர்வோம்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. 99623 66321.

 

வினவு January 24, 201711:29 am

இந்த நேரலை பதிவில் மொத்தம் 114 பதிவுகள் உள்ளன. மாணவர் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கிய தமிழக அரசின் ஒடுக்குமுறைக்கு இந்த தொகுப்பு ஒரு ஆவணமாக இருக்குமென்று நம்புகிறோம். இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.. நன்றி

வினவு January 23, 20179:23 pm

மதுரை தமுக்கத்தில் தடியடியை ஆரம்பித்தது போலீஸ். மாணவருக்கு கால் உடைப்பு.

– தமுக்கத்தில் இருந்து வினவு செய்தியாளர்

வினவு January 23, 20179:19 pm

குடிசையை கொளுத்தும் போலீஸ். பாருங்கள். பகிருங்கள்.

வினவு January 23, 20179:06 pm

யார் வன்முறையாளர்கள். பாருங்கள். பகிருங்கள்?

வினவு January 23, 20179:05 pm

யார் வன்முறையாளர்கள். பாருங்கள். பகிருங்கள்?

வினவு January 23, 20178:41 pm

இன்றிரவு மெரினா கடற்கரையில் தங்குவதாக மாணவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் இருக்கும் மாணவர்களை இயக்குநர் கவுதமன் சந்தித்துவிட்டு சென்றார். மாணவர்களைப் பொறுத்தவரை இன்றிரவு தங்குவது என்றே முடிவு செய்திருக்கின்றனர். போராடும் மாணவர்களை தாக்க கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி வாய்வழி உத்தரவு கொடுத்திருக்கிறார். போலிசார் கடலோரம் இருக்கும் மாணவர்களின் இடத்தில் விளக்குகளை அமைத்திருக்கின்றனர். தற்போது மாணவர்களை பார்ப்பதற்கு கெடுபிடிகள் இல்லை என்றாலும் பொதுமக்கள் யாரும் வரவிடாதபடி இன்றைய பகல் முழுவதும் போலிசார் பெரும் வன்முறைகளை தமிழகமெங்கும் நடத்தியிருக்கின்றனர்.

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20178:36 pm

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் காலை முதலே போராடினார்கள். மாலையில் வியாசர்பாடி கணேசபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களை தாக்கிய போலிசைக் கண்டித்து முழக்கமிட்டார்கள்.

வினவு January 23, 20178:31 pm

சென்னை நூறடி சாலையில் இருக்கும் லஷ்மண் சுருதி கடை மற்றும் காவலர் பயிற்சிக் கல்லூரி அருகே சில இளைஞர்கள் நின்று கொண்டு நான்கைந்து பேருந்துகளில் கல்லெறிந்து கண்ணாடிகளை உடைக்கிறார்கள். இதை பல பத்து போலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதற்கு போலிசே திட்டமிட்டு வன்முறைகளை அரங்கேற்றகின்றது என்பதற்கு மற்றுமொரு சான்று!

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20178:28 pm

மெரினாவில் நடந்தது என்ன? பங்கேற்ற மாணவர் ஒருவரின் வாக்கு மூலம்

வினவு January 23, 20177:55 pm

மெரினாவில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸ் (வீடியோ)

வினவு January 23, 20177:12 pm

பெண்களை தாக்கும் போலீஸ்

வினவு January 23, 20177:10 pm

வாகனங்களை எரிக்கும் போலீஸ் – ஆதாரங்கள்

வினவு January 23, 20177:00 pm

ட்டோவை தீவைத்து எரிக்கும் போலீஸ் (வீடியோ)

தமிழகத்தில் நடந்துவரும் தீவைப்பு சம்பவங்களுக்கு யார் குற்றவாளி என்பதை பாருங்கள். அவர்களே தீ வைத்து விட்டு மாணவர்கள் போராட்டத்தில் அரசியல் நுழைந்துவிட்டது, தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்கள் என்று காரண்ம் கூறு தங்கள் வன்முறையை நியாயப்படுத்துவதான் போலீசின் திட்டம். பாருங்கள். பகிருங்கள்.

வினவு January 23, 20176:45 pm

போராடும் மாணவர்களுக்கு இந்த நிமிடம் வரை போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிற எவருமே போலீஸ் தடியடியை மருந்துக்குக் கூட கண்டிக்கவில்லை. இவர்கள்தான் இப்போராட்டத்தின் முன்னரங்கில் நின்றவர்கள்.

துவக்கத்தில் இருந்தே பண்பாட்டு ரீதியான இந்தக் கோரிக்கையை போலீஸை வைத்து கையாண்டது தமிழக அரசு, சமூக நலத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து மாணவர்களை அணுகியிருந்தால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்காது. அனைத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே பார்க்கும். மன நிலையில் வெளிப்பாடுதான் இன்றைய அதிகாலை தடியடி. மொத்த பிரச்சனைகளுக்கும் அதுதான் காரணம்.

சில இங்குள்ள இயக்கங்கள் மீது பழி போடுவது அயோக்கியத்தனம். இயக்கங்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார்கள் இயக்கங்கள் இல்லாத மாநிலம் எது?

இந்த இயக்கங்கள்தான் நமது உரிமைகளுக்காக ஓரளவுக்கேனும் போராடுகிறவர்கள். போலீசையும் அரசையும் வைத்து ரஜினியும்,கமலும்தான் காரியம் சாதிக்க முடியும். எளிய மக்களுக்கு எதிரி அது. எளிய மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் சரியோ தவறோ வருவது அவர்கள் மட்டுமே! நேரம் பார்த்து அவர்கள் மீது ஆசிட் வீசாதீர்கள்!

– பேஸ்புக்கில் Arul Ezhilan

வினவு January 23, 20176:42 pm

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் குறித்து முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் மெரினாவில் போராடிய இளைஞர்களிடையே பேசியது முக்கியமானது.

சட்டம் குறித்து தெளிவுபடுத்தியவர், சட்ட நகலை போராட்டக்குழுவினரிடம் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து போராட்டத்தை சிதைக்க நினைத்ததும், போராட்டக்காரர்களை அகற்ற நினைத்ததும் தமிழக அரசின் தவறு என்றும், ஏன் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளை அரசு எடுக்கவில்லை எனத் தெரியவில்லை என அழுத்தமாகவேச் சொன்னார்.

ஆக இன்றைய மொத்த அரசு வன்முறைக்கும், மாணவர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாய் இருந்த பொதுமக்கள் மீதும் தொடுத்த காட்டுமிராண்டித் தாக்குதலுக்கும் யார் பொறுப்பு என்பது மிகத் தெளிவாகிறது.

மாபெரும் சக்தியாய் திரண்ட மாணவர்களின் எழுச்சி இதுபோல் எதிர்காலத்தில் இருக்கக் கூடாது, ஒரு பயத்தை விதைக்க வேண்டும் என்னும் மத்திய மாநில அரசுகளின் அதிகாரக்குரல் இதில் இருக்கிறது.

போராட்டத்தை கொண்டாட்டமாய், மக்களின் திருவிழாவாய் நடத்தியவர்கள் அதன் வெற்றியை இரத்தம் சிந்தியக் காயங்களோடும், ஆற்றமுடியாத வலியோடும், பெரும் துயரத்தோடும் அனுபவிக்கட்டும் என்னும் வன்மமும், வக்கிரமும் இதில் அடங்கி இருக்கிறது.

– பேஸ்புக்கில் Mathava Raj

வினவு January 23, 20176:39 pm

மெரினா கடற்கரையில் தங்கி போராடும் மாணவர் ஒருவருடன் தொலைபேசியில் நடத்திய நேர்காணலில் இருந்து…..

“இங்கு சுமார் 5000 பேர் இருக்கிறோம். இதில் 3000 பேர் மாணவர்கள் அதில் 30% பெண்கள். 2000 மீனவர்கள் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். மீனவர்கள் உணவு குடிநீருக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெண்களுக்கான கழிப்பறைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.”

அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் சட்டம் என்னெவேன்றே தெரியாமல் எப்படி போராட்டத்தை முடித்துகொள்வது என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அதாவது அரசு கொண்டு வரும் சட்டம் நிரந்தரமா என்பது அவர்களது கேள்வி. அதனால்தான் இன்று காலையில் 2 மணி நேரத்தில் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த மாணவர்களும் போலீசின் அடக்குமுறை அதிகமாக அதிகமாக போராட்டத்தை தொடரவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

“எங்களுடன் பேசுவதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வந்திருந்தார். போராட்டத்தில் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டதாகவும் அதனால் முடித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். எங்களிடத்தில் எந்த தீவிரவாதிகளும் நுழையவில்லை
என்று பதிலளித்தோம். போராட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று லாரன்ஸ் அறிவித்திருப்பதாலேயே மாணவர்கள் அவரது அடிமைஇல்லை என்று தெரிவித்தோம். அவர் ஒரு 20 பேரை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

பின்னர் சீமான் வந்தார். போராட்டத்திற்கு தலைமை இல்லாமல் இருக்கிறது என்றும் தான் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் பொதுவாக பேசினார். மறைமுகமாக தலைமையை தன்னிடம் ஒப்படைக்க கோரியது போல் இருந்தது. மாணவர்களோ அரசியல்வாதிகள் யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை. உங்கள் ஆதவுக்கு நன்றி என்று கூறி அவரை அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் தன்னுடன் ஒரு நாற்பது பேரை சேர்த்துக்கொண்டு ஒரு 500 அடி தூரத்தில் உட்கார்ந்திருக்கிறார்.”

பின்னர் ஆர்.ஜே.பாலாஜி வந்து பேசினார். ஆனால் சட்டத்தில் என்ன இருக்கிறது என்று உறுதியாக தெரியாதவரை போராட்டத்தை முடித்துக்கொள்வதில்லை என்று மாணவர்கள் தெரிவித்து விட்டனர்.

தற்போது உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி ஹரிபரந்தாமன் மற்றும் பல்வேறு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடற்கரையில் இருக்கும் மாணவர்களிடம் பேசி வருகின்றனர். ஹரிபரந்தாமன் பேசும் போது தற்போது தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் கொண்டு வந்தால் தான் பாதுகாப்பானது என்று தெரிவித்திருக்கிறார். அவர் வெளியே வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தால்தான் மாணவர்களின் முடிவு என்ன என்பது தெரியவரும்.

– வினவு செய்தியாளர்கள்.

வினவு January 23, 20175:36 pm

சென்னை ஸ்கைவாக் – அண்ணா மேம்பாலத்தில் சாலை மறியல்

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20175:35 pm

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல்

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20175:32 pm

சென்னை அமைந்த கரை ஸ்கைவாக் அருகில் சாலை மறியல்.

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20175:30 pm

சென்னை அமைந்தகரை என்.எச் ரோட்டில் சாலை மறியல்

– வினவு செய்தியாளர்

வினவு January 23, 20175:18 pm

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் போராட்டம்.

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20175:13 pm

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை காசிமேட்டில் காலை முதல் பொதுமக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சாலை மறியலில் பெண்கள்

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20175:07 pm

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை அமைந்தகரையில் பெண்கள் குழந்தைகள் போராட்டம்.

வினவு January 23, 20175:02 pm

ண்டியிட்டு வணங்குகிறேன்

ஜல்லிக்கட்டல்ல, மாடு வளர்ப்புது கூட
மீனவ மக்களுக்கு அவசியமற்றது. காரணம் புற்கள் அற்ற கடற்கரையில் மாடு
வளர்ப்பு சாத்தியப்படாது. கால்நடை வளர்ப்பு விவசாயத்தோடு தொடர்புடையது.

ஆனாலும், மாணவர்களை எல்லோரும் விட்டு ஓடியபோது, தன்னை நம்பி தங்களுக்குச்
சொந்தமான இடத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதோடு அவர்களின்
போரட்ட முறையையும் அங்கீகரித்து அவர்களைப் பாதுக்காக்க வேண்டியது நம் கடமை
என்ற உணர்வோடு,

மாவீரர்களாக வந்து மாணவர்களுக்கு அரணாக நிற்கிற எம் மீனவ பெண்களையும் ஆண்களையும் மண்டியிட்டு வணங்குகிறேன்.

உழைக்கும் மக்கள் மகத்தானவர்கள் எப்போதுமே அவர்கள் தான் நமக்கு கற்றுத் தருகிறார்கள். ஈடு இணையற்ற போராளிகளாகவும் இருக்கிறார்கள்.

– முகநூலில் Mathimaran V Mathi

வினவு January 23, 20174:51 pm
டலில் இறங்கி போராடியவர்களுக்கு படகுகள் மூலம் உணவு வழங்கப்பட்டது.

– நன்றி நக்கீரன்

வினவு January 23, 20174:47 pm

ரு பிரச்சினையை தீர்க்க பெரிய பிரச்சினையை உருவாக்கு.. – மோடி பன்னீருக்கு சொல்லி அனுப்பியது.
போலீஸ் நிலையம் தீவைப்பு, மருத்துவமனைகளில் அனுமதி, போலீஸ் வாகனங்கள்
எரிப்பு. இதெல்லாம் மக்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்குவதற்காக
போலீசே செய்த சதி..

– முகநூலில் Karpagavinayagam Subbiah

வினவு January 23, 20174:44 pm

சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் இளைஞர்கள் போராட்டம்

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20174:41 pm

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் மக்கள் சாலை மறியல்

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20174:40 pm

சென்னை மெரினா கடற்கரையில் போராடும் மாணவர்களுடன் நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் தமிழ் தேசிய கட்சியின் தியாகு ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு செல்கின்றனர்.

வினவு January 23, 20174:29 pm

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராடிக்கொண்டிருக்கும் சென்னை எழும்பூர் சந்தோஷ் நகர் மக்கள் சுற்றி வளைப்பு. எந்நேரமும் தடியடி நடத்தப்படலாம்.

வினவு January 23, 20174:21 pm

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் போராட்டம்.

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20174:20 pm

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் போராட்டம்.

– வினவு செய்தியாளர்

வினவு January 23, 20174:12 pm

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிறுவர்கள் போராட்டம்.

– வினவு செய்தியாளர்

வினவு January 23, 20174:09 pm

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் சிக்னலில் சாலை மறியல்.

– வினவு செய்தியாளர்

வினவு January 23, 20174:07 pm

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராடிவருவதால் வெறிச்சோடி காணப்படும் சென்னை வாலஜா சாலை.

வினவு January 23, 20174:05 pm

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை கோடம்பாக்கம் எம்.ஜி.ஆர் சாலை அருகில் பெண்கள் போராட்டம்.

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20174:02 pm

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் இளைஞர்கள் போராட்டம்.

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20174:01 pm

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை ஜெமினி அருகில் இளைஞர்கள் போராட்டம்.

வினவு January 23, 20173:57 pm

EA மால் அருகில்

-வினவு செய்தியாளர்

வினவு January 23, 20173:56 pm

கலவரங்களுக்கு காரணம் யார்?

சேனாதிபதி, ஆதி, ராஜசேகர் போன்றோர் பன்னீர்
செல்வத்தை சந்தித்து விட்டு வந்து போராட்டத்தை முடித்துக்கொள்வதாக
அறிவித்தது, மெரினாவில் போராடும் மாணவர்களுக்கு அதிருப்தியை உருவாக்கியது.

மெரினாவில் வெவ்வேறு குழுக்கள் அரசியல் இயக்கங்கள் தனித் தனிகுழுக்களாக
மேடை அமைத்த போதிலும் இக்கருத்துகள் எதையும் போராடும் மாணவர்கள் ஏற்றுக்
கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.

இன்று காலை 10 மணிக்கு
ஊடகங்களை அழைத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்கிறோம் என்று
அறிவிக்க இருந்தார்கள். ஆனால் நேற்று இரவே இரண்டு ஊட்கங்கள் சென்று
மாணவர்களை கலைந்து செல்லுங்கள் என்று மாணவர்களை
நிர்பந்தித்திருக்கிறார்கள்.

அதிகாலை மூன்று மணியளவில் ஒரு தொலைக்காட்சி
லைவ் வேனுக்குள் டெலிகாஸ்டுக்காக தயராக மாணவர்கள் சந்தேகம் அடைந்து
அவர்களிடம் கேட்க அவர்களோ மழுப்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லைவுக்கு
ரெடியான கொஞ்சம் நேரத்தில் போலீஸ் வந்து கலைந்து போகுமாறு சொல்ல அவர்கள்
அரை நாள் நேரம், குறைந்த பட்சம் பத்து மணிவரை நேரம் கொடுங்கள் முடிவை
அறிவிக்கிறோம் என்று சொல்ல எதற்கும் சம்மதிக்காத போலீஸ் அவர்களில் பலரை
அடித்து இழுக்க, அதில் பலரும் காயமடைந்திருக்கிறார்கள். அப்பகுதி
மீனவர்கள் உதவிக்கு வர அவர்கள் குடியிருப்புகளை போலீசர் தாக்க அதுவே
கலவரமாக மாறியுள்ளது.

அதிமுக அரசின் அணுகுமுறை பிழையானது. நம்மை
மண்டியிட வைத்து விட்டார்களே என்ற கோபத்தில் திட்டமிட்டு வேண்டுமென்றே இந்த
தாக்குதலை மோடியின் உத்தரவில் நிறைவேறுகிறார் பன்னீர்.

– முகநூலில் Arul Ezhilan

வினவு January 23, 20173:53 pm

“பரப்பரப்பு நிலவுவதால் உங்கள் குழந்தைகளை உடனே அழைத்துச் செல்லுங்கள்” என்று பள்ளியிலிருந்து குறுஞ்செய்தி வருகிறது.

சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் இவ்வாறான குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஏன்….எதனால் என்று தெரியவில்லை? ஆளும் அரசு, போராட்டத்திற்கு எதிராக ஏதாவது திட்டம் தீட்டுகிறதா? ???

– ஃபேஸ்புக்கில் Mahesh Babu Padmanabhan

வினவு January 23, 20173:50 pm

தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களே. ஊடக அறம் பதிவுசெய்து வைத்த காட்சிகளை நேரலை
என்பது துவங்கி காவல்துறையின் அடக்குமுறையைப் பதிவு செய்யாமல், காவல்
மீசைகளின் பொய்களை கேட்டு ஒளிபரப்பி தொடர்கிறது.

நாளை முதல் ஊழல், அரசியல் பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடுவீர்கள் கொஞ்சமும் வெட்கமில்லாமல். அதை நினைக்க அருவருப்பாக இருக்கிறது.

ஃபேஸ்புக்கில் Thiru Yo

வினவு January 23, 20173:46 pm

தமிழ்நாட்டை குஜராத் ஆக்க முடியாது!

நீலாங்கரையில் இருந்து பாலவாக்கம் வரை நடந்து போய் அதற்கும் மேல்
நகரத்துக்குள் நுழைய ஆட்டோ, கால்டாக்சி எதுவமில்லாததால் அந்த பகுதியிலேயே
சில மணி நேரமாக நடந்து சுற்றி வருகிறேன்,

மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்கிற செய்தி அறிந்ததும், ஈசிஆர் முழுவதும் வந்து
சாலையில் அமர்ந்த மக்கள், கண்டிப்பாக மெரினாவில் கூடிய ரகமில்லை,

ஈசிஆர் முழுவதும் இருக்கும் குப்பத்து, சேரி மக்கள் தான் என்பது கண்கூடு,
இந்த பிரச்சனைகள் எல்லாம் எங்கோ ஆட்டுவிக்க பட்டாலும், மக்கள் இதை சூழலாக
எடுத்து கொண்டு கடைகளை சூறையாடவோ, மக்களின் மீது வன்முறையோ எதுவில்லாமல்
அமைதியாக இருக்கிறார்கள், பெரு உணவகங்கள் மூடி விட்டு கிளம்ப, சிறு
கடைகளுக்கு போராட்டக்காரர்கள் வந்து பஸ்ஸில் மாட்டி கொண்டவர்களுக்கு பொட்டல
சாப்பாட்டுக்கு தயார் செய்ய சொல்லி சோறு வடித்து கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு பரோட்டோ சாப்பிட்டுட்டு, மொபைலும் சார்ஜ் பண்ணிட்டு, அங்கிருந்து
கிளம்பினேன், அப்போ ஒருவர் உள்ளே வந்து, “லோக்கல் ஆளுங்களுக்கு சாப்பாடு
கொடுத்தாச்சு, இனி பஸ்ஸுல இருக்கிறவங்களுக்கு கொடுனே, எவனா பொட்டலம் கேட்டா
கொடுக்காதே”ன்னு சொல்லிட்டு, நெஞ்சை புடைச்சிட்டு போறார்,

எளிய மக்கள் வாழ்க்கை உன்னதம், தனக்கான உரிமையவே சரியா கேக்க தெரியாத
அப்புராணிங்க இதுங்க. எங்கையோ, யாரையோ அடிக்க, ரோட்டுல கவலையில்லாம
உக்காந்துட்டு இருக்குங்க,

இங்க இருந்த சிலமணி நேரம் எனக்கு ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது, எவ்ளோ முயற்சி பண்ணாலும், தமிழ்நாட்டை குஜராத் ஆக்க முடியாது.

ஃபேஸ்புக்கில் வாசுகி பாஸ்கர்

வினவு January 23, 20173:36 pm

ஜல்லிக்காட்டு ஆதரவாக நாகர்கோவிலில் போராடிய மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது போலீஸ்.

வினவு January 23, 20173:32 pm

மெரினா கடற்கரையில் ஏராளமான அதிரடிப்படையினர் குவிப்பு

வினவு January 23, 20173:29 pm

சைதாப்பேட்டையில் மக்கள் நான்கு மணி நேரமாக சாலை மறியல்

வினவு January 23, 20173:23 pm

ழும்பூர் சந்தோஷ் நகர் பகுதி மக்கள் சாலை மறியல்

வினவு January 23, 20173:23 pm

ழும்பூர் சந்தோஷ் நகர் பகுதி மக்கள் சாலை மறியல்

வினவு January 23, 20173:12 pm

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் போராட்டம். போலீஸ் தடியடி

வினவு January 23, 20173:09 pm

ன்னும் ஒரு மணி நேரத்தில் கலைந்து செல்லவில்லை என்றால் தடியடி நடத்தப்படும் மதுரை தமுக்கத்தில் போலீஸ் அறிவிப்பு.

மதுரை பாண்டி கோவிலில் 300 பேர் சாலை மறியல்.

புதுக்கோட்டை எஸ்.பி.என் கல்லூரியில் மாணவர்கள் சாலை மறியல்

– மதுரை தமுக்கத்திலிருந்து வினவு செய்தியாளர்.

வினவு January 23, 20172:55 pm

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சாலை மறியல்.

வினவு January 23, 20172:42 pm

சென்னை பல்கலைகழகம் அருகில் மாணவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டு போராடிவரும் மக்கள் மீது கண்ணீர் புகை வீச்சு.

வினவு January 23, 20172:42 pm

போராடும் மாணவர்கள் ஒரு மணி நேரத்தில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவிருப்பதாகவும் DCP சங்கர் மாணவர்களை மிரட்டி வருகிறார். மாணவர்கள் அஞ்சாது போராட்டத்தை தொடருகிறார்கள்.

வினவு January 23, 20172:39 pm

போராட்டத்தை கைவிடும்படி நடிகர் ராகவா லாரன்ஸ் கடலில் நின்று போராடும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவர்கள் இதை ஏற்கவில்லை.

அரசு கொண்டு வரும் சட்டத்தில் என்ன இருக்கிறது. அதன் சாதக பாதக அம்சங்களை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ, அரி பரந்தாமன் உள்ளிட்ட 7 நீதிபதிகள் கொண்ட குழு தங்களுக்கு விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மாணவர்கள் போராட்டத்தை தொடருகிறார்கள்.

– வினவு செய்தியாளர்கள்

வினவு January 23, 20172:33 pm

கடற்கரையில் நிற்கும் வீர இளைஞர்களே !

தமிழகமே உங்கள் பின்னால் நிற்கிறது.
லாரன்சுக்கு பயமாக இருந்தால் அவர் போகட்டும்.
நீங்கள் அவருக்குப் பின்னால் போய்விடாதீர்கள்.
தமிழகத்தின் மானம் உங்கள் கையில் !
போராடும் வீரத்தமிழகம்.

வினவு January 23, 20172:08 pm

மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் ராதாகிருஷ்ணன் சாலைவழியாக மெரினாவில் போராடும் இளைஞர்களைச் சந்திக்கச் சென்றனர். காவல்துறை தடுத்ததால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

வினவு January 23, 20171:59 pm

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தேனியில் சாலை மறியல் போராட்டம்.

வினவு January 23, 20171:58 pm

னைத்து ஊடகங்களிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் வாபஸ் என போலீசாரின் பொய் செய்தியை ஒளிபரப்புகிறார்கள்

வினவு January 23, 20171:53 pm

கொண்டாடவேண்டிய நேரம் என போராடும் மாணவர்களிடம் நடிகர் லாரன்ஸ் பேச்சு. என்ன வெற்றியடைந்துவிட்டோம் என மாணவர்கள் கேள்வி.

வினவு January 23, 20171:45 pm

நடிகர் ராகவா லாரன்ஸ் மாணவர்களிடம் போராட்டத்தை கைவிட சொல்லி பேசிக்கொண்டிருக்கிறார். மாணவர்கள் அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.

வினவு January 23, 20171:40 pm

சேல்ம் திருவள்ளுவர் சிலை அருகில் தேசிய கீதம் பாடி அற வழியில் போராடிய மக்கள் மீது போலீஸ் தாக்குதல். மக்களை விரட்டியடித்தனர்.

வினவு January 23, 20171:39 pm

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வடபழநியில் மக்கள் சாலை மறியல் போராட்டம்

வினவு January 23, 20171:26 pm

ஈரோட்டு பேருந்து நிலையம் மீது போராடிய மக்கள் மீது தடியடி. கொடூரமாக தாக்கிக்கொண்டிருக்கிறது போலீஸ்.

வினவு January 23, 20171:26 pm

சென்னை இராயப்பேட்டை மருத்துவமனை அருகில் போராடிய மக்கள் மீது போலீஸ் கண்ணீர்புகை வீச்சு.

வினவு January 23, 20171:24 pm

மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து வேளச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

– தமிழ் இந்து செய்தி

வினவு January 23, 20171:24 pm

மெரினாவில் பெண்கள் மீது போலீஸ் தாக்குதல்.

வினவு January 23, 20171:23 pm

மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம்.

வினவு January 23, 20171:22 pm

வசர சட்டத்துக்கு பீட்டா தடை வாங்கினால் எம்.எல்.ஏ-க்கள் இராஜினாம செய்வோம் என்று எழுதி தருவார்களா? மக்கள் கேள்வி

வினவு January 23, 20171:15 pm

தமிழகம் முழுக்க அரசு கேபிள் டி.வி நிறுத்த தமிழக அரசு உத்தரவு.

– நக்கீரன் செய்தி

வினவு January 23, 20171:14 pm

சென்னை நகரம் முழுக்க பேருந்துகள் நிறுத்தம்.

வினவு January 23, 20171:14 pm

மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதி மக்கள் மீது போலீஸ் தாக்குதல். தெருத்தெருவாக புகுந்து அடிக்கிறது போலீஸ்.

இதற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேசன் அருகே பார்த்த சாரதி கோவில் வாயிலில் திரண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரே நூற்றுக்கணக்கான போலீஸ் ஆயுதபாணியாக நிற்கிறார்கள்.

வினவு January 23, 20171:07 pm

துரை காளவசலில் கே.எஃ.சி முற்றுகை
சிம்மக்கல்லில் பெண்கள் சாலை மறியல்
பெரியாரில் பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம்

– மதுரை தமுக்கம் மைதான போராட்டத்தில் மேற்கண்ட செய்திகள் அறிவிக்கப்பட்டன.

வினவு January 23, 201712:42 pm

மெரினா கடற்கரையில் தமிழக போலிசால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குடிநீரும், உணவும் கொண்டு செல்ல முடியாமல் பல நூறு போலிசார் தடுப்புச் சுவர் போல நிற்கின்றனர். மீறி கொண்டு வருவோரிடமிருந்து உணவுப் பொருட்களை பிடுங்கிக் கொண்டு துரத்துகின்றனர். மாணவர்களை பட்டினி போட்டு வலுவிழக்கச் செய்து அடித்தோ கைதோ செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்றனர்.

– வினவு செய்தியாளர், மெரினா கடற்கரை

வினவு January 23, 201712:36 pm

மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு.

– நன்றி நக்கீரன்

வினவு January 23, 201712:32 pm

மதுரை தமுக்கம் குலுங்குகிறது.

வினவு January 23, 201712:27 pm

விவேகானந்தர் இல்லம் அருகில் இருக்கும் குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கில் அணிதிரண்டு போலீஸ் தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு மாணவர்களை காப்பாற்ற விரைகிறார்கள்.

சின்ன சாமி ஸ்டேடியம் மற்றும் சென்னை பல்கலைகழக அருகே உள்ள இரண்டு தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு மாணவர்கள் மெரினா நோக்கி விரைகிறார்கள்.

அனைவரும் மெரினா நோக்கி விரையுங்கள்.

– வினவு செய்தியாளர்

வினவு January 23, 201712:20 pm

சென்னை பூந்தமல்லி சாலையில் மாணவர்கள் ஊர்வலம் போராட்டம்

– வினவு செய்தியாளர்

வினவு January 23, 201712:10 pm

தமிழக போலீஸ் நடத்திய அலங்கா நல்லூர் தாக்குதலில் ஒரு முதியவர் படுகாயம். உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

வேடிக்கை பார்க்காமல் வீதிக்கு விரைந்து வாருங்கள்!

வினவு January 23, 201712:09 pm

மிழ் மக்களே,

நேற்று வரை மெரினாவுக்கு
வந்தீர்களே,
இன்று வாருங்கள்.
இப்போது வாருங்கள்.
நம் மாணவச் செல்வங்களை
மீட்பதற்கு!

நம் மாணவக் கண்மணிகள்,
வங்கக் கடலோரத்தில்
மரணத்துக்கு அஞ்சாமல் போராடுகிறார்கள்.
மாணவர்களுக்குத்
துணையாக போராடுகிறார்கள் மீனவர்கள்.

மீனவர்கள் மீது
கண்ணீர் புகை குண்டு, தடியடி.
மாணவர்களுக்கு
கடல்வழியாக உணவு கொண்டுவந்த மீனவர்கள் சுற்றி வளைக்கப்படுகிறார்கள்.

உணவைப் பறித்து
தின்கிறது போலீசு.
ரத்தம் சொட்ட சொட்ட
தாக்கப்படுகிறார்கள் மக்கள்.

அமைதி வழிப்போராட்டத்துக்கு
இதுதான் அரசு அளிக்கும் பரிசு
கிளம்புங்கள் உடனே
மெரினாவுக்கு!

மக்கள் அதிகாரம்

வினவு January 23, 201712:07 pm

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம், ஊர்வலம்

வினவு January 23, 201712:06 pm

நண்பர்களே அவசரச் செய்தி! கொடூரமான செய்தியும் கூட!

அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களை கடுமையான தடியடி மூலம் அப்புறப்படுத்தி வருகிறது. சன் நியூஸ நேரலையில் ஒரு காட்சி! ஒரு இளைஞரை சுற்றி ஆறுக்கும் மேற்பட்ட போலிஸ் மிருகங்கள் விறகு வெட்டுவது போல லத்தியை வைத்து அடிக்கின்றன. அந்த இளைஞர் கத்துவதற்கு கூட சக்தியின்றி முனகுகிறார்.

இன்னும் என்ன தயக்கம்? அலுவலகங்கள், வீடுகளில் இருந்து வெளியேறுங்கள்! மக்களைச் சேர்த்துக் கொண்டு உடன் மறியல் செய்யுங்கள்! தொலைக்காட்சிகளில் நேரலையில் வரும் செய்திகள், காட்சிகள் நெஞ்சை அறுக்கின்றன.

வினவு January 23, 201712:05 pm

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

வினவு January 23, 201711:55 am

செயின் தாம்ஸ் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றவர்களை அலைக்கழிக்கிறது போலீஸ். மெரினாவுக்கு செல்ல அனுமதி மறுக்கிறது.

– வினவு செய்தியாளர்

வினவு January 23, 201711:53 am

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் பேரணி. போராடும் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என அறிவிப்பு.

– வினவு செய்தியாளர்

வினவு January 23, 201711:51 am

மெரினாவை நோக்கி சென்ற செயின்ட் தாமஸ் கல்லூரி மாணவர்களை வழிமறித்துள்ளது தமிழக போலீஸ்

– வினவு செய்தியாளர்

வினவு January 23, 201711:50 am

மெரினா கடற்கரையிலிருந்து மாணவர்கள் வேண்டுகோள் – ஆடியோ. பரப்புங்கள்

http://www.vinavu.com/wp-content/uploads/2017/01/AUD-20170123-WA0004.mp3

வினவு January 23, 201711:42 am

மாணவர் போராட்டத்தை திசை திருப்பும் சினிமாக்காரன் ஆதி!!!!???? அடுத்து யார் லாரன்சா?????

பிஜேபி ஏஜெண்ட் ஹிப் ஹாப் ஆதி , காவிரி பிரச்சனைகளை பேசக்கூடாதாம்!!! மோடி எதிர்ப்பு பேசக்கூடாதம் அடப்பாவி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்த கூடாது என்று சொல்லும் மோடியை எதிர்க்காமல் வேறு யாரை எதிர்ப்பது ??? அடேய் வெறும் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் கூடின கூட்டம் இல்லையடா இது தொடர்ந்து மறுக்கப்பட்ட காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர் உரிமைகளை பெற வேண்டி பொங்கலுக்கு விடுமுறை இல்லை என்றதை அறிந்து கொதித்து எழுந்தவர்கள் தாம் ஜல்லிக்கட்டு என்ற புள்ளியில் இனைந்தார்கள் … உனக்கு காவிரி வந்தா என்ன??? வரலைனா என்ன ??? அது யாரோ ஹிந்தி நடிகை என நினைக்கும் சினிமாக்காரன் தானே நீ!!!!!

நடிகர்களை அனுமதித்து சமுதாய இயக்கங்களை கூட அனுமதிக்காத மாணவர்களுக்கு நல்ல பாடம் புகட்டிவிட்டார் ஹிப் ஹாப் ஆதி……

– ஃபேஸ்புக்கில் Durai Arun

வினவு January 23, 201711:37 am

மீனவனும்- மாணவனும்
மெரினா மாணவர்களுக்கு ஆதரவாக 5 மீனவ கிராம மக்கள் மெரினா வருகை

– ஃபேஸ்புக்கில் குறிஞ்சி நாதன்

வினவு January 23, 201711:36 am

சூப்பர்..
பின்றாங்க தமிழ்நாடு போலீஸ்.. கல்லெடுத்து எறியும் ரவுடிகளாகவும் தங்களைக்
காட்டிக் கொள்வதற்கு எந்த வெட்கமும் படவில்லை இவர்கள்.

சீருடைப்
பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவுடன் இவர்களுக்குச் சொல்லிக்
கொடுக்கப்படும் முதல் பாடமே.. மேலதிகாரிகளுக்கு கீழ்ப்படிதல் மட்டு்ம்தான்.
நில் என்றால் நிக்கணும். ஓடு என்றால் ஓடணும்.. படு என்றால் படுக்கணும்.
சுடு என்றால் சுடணும். அடி என்றால் அடிக்கணு்ம். இதுதான் இவர்களது தாரக
மந்திரம். இதைத்தான் செவ்வனே செய்து வருகிறார்கள்..

ஐயா போலீஸாரே.
இந்த மாணவர்கள் உங்களுககாகவும், உங்களது வாரிசுகளுக்கும் சேர்த்துதான்
போராடினார்கள். போராடிக் கொண்டிருக்கிறார்கள். இ்பபோது உங்களுக்கு
கிடைக்கும் சம்பளத்திற்காக நீங்கள் இவர்களை கொலை செய்ய முயல்கிறீர்கள்..
உங்களது அடுத்தத் தலைமுறை இதன் பலனை நிச்சயம் அனுபவிக்கும்..!

ஃபேஸ்புக்கில் Saravanan Savadamuthu

வினவு January 23, 201711:30 am

ன்று பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்களுக்கு போலீஸ் தாக்குதல் குறித்த செய்தி தெரியவில்லை. உடனடியாக போலீஸ் தாக்குதல் குறித்த செய்திகளை வாட்ஸ் அப், சமூக வலைதளங்களில் பரப்புங்கள்.

கல்லூரியை புறக்கணித்து வீதிக்கு வாருங்கள். சாலைகளை மறியுங்கள்.

– மக்கள் அதிகாரம்

வினவு January 23, 201711:26 am

மெரினாவில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் 500 பேர் ஊர்வலமாக மெரினாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

– வினவு செய்தியாளர்

வினவு January 23, 201711:23 am

ன்று காலை மதுரை தமுக்கம் மைதானத்தில் போலீஸ் அடக்குமுறை ஆரம்பிக்கும் போது 700 பேர் தான் இருந்தனர். தற்போது 6000-த்திற்கு மேற்பட்டோர் குவிந்துவிட்டனர்.

இன்னும் சட்டக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் அலை அலையாக திரண்டு வந்துகொண்டிருப்பதாக தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

– மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து வினவு செய்தியாளர்.

வினவு January 23, 201711:14 am

சென்னை மெரினாவில் கடலோர காவற்படையின் அதிவேக படகும் வானிலிருந்து கண்காணிப்பதற்கு ஹெலிகாப்டரும் இறக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களை ஒழிக்க மோடி அரசின் கப்பற்படை வந்து விட்டது!

தமிழக மக்களே தெருவுக்கு வாருங்கள்! மோடி – ஓபிஎஸ் அரசுகளின் தாக்குதலிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றுங்கள்

வினவு January 23, 201711:11 am
அயோக்கிய
சத்தியம் டிவி, போராட்டக்காரர்கள் கல்லெறிந்தார்களாம். அதனால் காவல்துறை
திருப்பி கல்லெறிந்ததாம்…என்று அடித்து சொல்கிறான். இதையேதான் தந்தி டிவிகாரனும் சொல்ரான். ஏன்டா நேத்துவரை
அகிம்சை அகிம்சைனு கூவுனிங்க..இன்னைக்கு எப்படிடா டக்குனு அரசுக்கு
கொடிபிடிக்கிறிங்க….???

– ஃபேஸ்புக்கில் Bharathi Raja

வினவு January 23, 201711:11 am

மிழகமெங்கும் பற்றி படரும் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்களும்,

முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை
புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வினவு January 23, 201711:10 am

விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடற்கரைக்கு உணவு எடுத்து சென்றதை போலீசார் பறித்துவிட்டனர்.

– மெரினாவிலிருந்து வினவு செய்தியாளர்

வினவு January 23, 201711:07 am

வினவு January 23, 201711:04 am

அரசியல் ரீதியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைக்கு அடக்குமுறையை கையெலெடுத்திருக்கிறது அரசு. மோடி அரசும், ஓபிஎஸ அரசும் கூட்டுச் சேர்ந்து மாணவர்களை தாக்குகிறது. தமிழகம் முழவதும் உள்ள மக்கள் வாய்ப்பிருக்கும் இடங்களிலெல்லாம் மறியலை ஆரம்பியுங்கள்! தமிழகத்தின் மீது மோடி அரசு தொடுத்திருக்கும் தாக்குதலை முறியடிப்போம்!

– மக்கள் அதிகாரம்

வினவு January 23, 201710:59 am

போர்க்களமாக
தமிழகம் மாறி இருக்கும் சூழலில், மத்திய அமைச்சர் மேனகா காந்தி
ஜல்லிக்கட்டை தடை செய்ய உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய ஆலோசனை
செய்கிறாராம். நியூஸ் 18 சேனல் சொல்கிறது.

எரிகிற தீயில் எண்ணெயை ஒருபுறத்தில் ஊற்றிக்கொண்டே இருக்கிறது மோடியின் அரசு!

– ஃபேஸ்புக்கில் Mathava Raj

வினவு January 23, 201710:57 am

மாணவர்களுக்கு ஆதரவாக திரண்டு வரும் மக்களை தடுக்கும் போலீஸ்

– நன்றி நக்கீரன்

வினவு January 23, 201710:56 am

மெரினாவிலிருந்து

– நன்றி நக்கீரன்

வினவு January 23, 201710:52 am

சென்னை ஐஸ் ஹவுஸ் அருகே டாக்டர் பெசன்ட் சாலையில் மறியல் செய்த மக்கள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் குண்டு வீச்சு! தெருவில் இருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல்! ஒரு பெண் பலத்த காயமடைந்தார். அடித்த போலீசைப் பார்க்கையில் அவர்கள் அதிரடிப்படை வடநாட்டு போலீஸ் போல இருக்கிறார்கள் என்கிறார்கள் மக்கள்!

வினவு January 23, 201710:34 am

சேப்பாக்கம்- பீச் சாலையில் போலீஸ் தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்.

வினவு January 23, 201710:32 am

மெரினாவில் தடியடி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். போலீசார் மாணவர்கள் விரட்டிக்கொண்டு ஓடுகிறார்கள்.

– மெரினாவிலிருந்து வினவு செய்தியாளர்.

வினவு January 23, 201710:32 am

சின்னம்மாவிடமும் டெல்லியிடமும் குனிந்து நடக்கும் அடிமை பன்னீரே உன் வீரத்தை மாணவர்களிடம் காட்டாதே!

ஃபேஸ்புக்கில் Arul Ezhilan

வினவு January 23, 201710:29 am

சென்னை மெரினா கடலில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கு ஆதரவாக வந்த மக்களும் கடலில் இறங்கியிருக்கிறார்கள். மனித சங்கிலி அமைத்து கடலில் இருப்பவர்களை மாணவர்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு 50 அடி தூரத்தில் சிறிய அளவில் போலீசார் இருக்கிறார்கள்.

கடலில் இறங்கி போராடிய ஒரு மாணவர் அம்புலன்சின் எடுத்து செல்லப்பட்டிருக்கிறார்.

– மெரினாவிலிருந்து வினவு செய்தியாளர்

வினவு January 23, 201710:27 am

மாணவர்களுக்கான குடிநீர், உணவுப்ப பொருட்களை தடை செய்யும் போலீசு!

மீனவர்கள் நாட்டுபடகில் உணவும் குடிநீரும் எடுத்து வருகிறார்கள். கடலில் மோடி அரசின் கடலோர காவற்படை படகு அவர்களை துரத்துகிறது. மோடி படகை ஏமாற்றிவிட்டு கரைக்கு வரும் மீனவர்கள் உணவுப் பொருட்களை தூக்கி வருகிறார்கள். கரையில் இருக்கும் ஓபிஎஸ் சின்னம்மா போலீசு குடிநீர் கேன்களையும், உணவு பொட்டலங்களையும் பிடுங்குகிறது. மாணவர்களை பட்டினி போட்டே வங்கக்கடலில் சமாதியாக்கும் திட்டமா?

இரண்டிலொன்று பார்க்க அனைவரும் மெரினாவக்கு விரையுங்கள்!

வினவு January 23, 201710:24 am

சென்னை திருவல்லிக்கேணியில் சாலை மறியல் செய்த பொது மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்துகிறது. தெருவுக்கு தெரு சாலை மறியல் நடக்கட்டும். இன்னும் எத்தனை போலீஸ் வரும் பார்ப்போம்!

வினவு January 23, 201710:17 am

மாணவர்களை பாதுகாக்கும் மீனவர்கள் வாழும் குடியிருப்புகள் மீது போலீசார் தாக்குதல். திமுக வரலாற்று பிழை செய்கிறது. சட்டமன்றத்தை புறக்கணிப்பதல்ல. இப்போதே அனைத்துக் கட்சிகளும் தெருவுக்கு வாருங்கள். மாணவர்களையும் மக்களையும் காப்பாற்றுங்கள்

ஃபேஸ்புக்கில் Arul Ezhilan

வினவு January 23, 201710:16 am

துரை தமுக்கம் மைதானத்தை சுற்றியுள்ள மூன்று பிரதான வழிகளையும் அடைத்துவிட்டார்கள். கூட்டத்திற்குள் நுழைய முயன்ற போலீசாரின் முயற்சி முறியடிப்பு. அருகில் இருக்கும் சந்துகளிலிருந்து பெண்கள் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக திரண்டு வருகிறார்கள்.

– தமுக்கம் மைதானத்திலிருந்து வினவு செய்தியாளர்

வினவு January 23, 201710:12 am

போலீஸ் அடக்குமுறை

வினவு January 23, 201710:11 am

மெரினா போராட்டத்தில் தங்கியிருந்த மாணவர்களை தாக்கி விரட்டிய போலீசு அவர்கள் வைத்திருந்த குடிநீர், உணவுப்பொட்டலங்களையும் தூக்கிச் சென்றுவிட்டது. அதனாலென்ன? மீனவ மக்கள் பட்டினப்பாக்கம் கடற்கரை வழியாக தண்ணி கேன்களையும், உணவுப் பொட்டலங்களையும் எடுத்துச் சென்று மாணவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

வினவு January 23, 201710:09 am

வங்கக் கடலில் கருப்புக்கொடியுடன் போராட்டம் தொடர்கிறது!

மெரினா கடற்கரையில் இருந்து மாணவர்கள் கடலை நோக்கி சென்று அணிதிரண்டு விட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் கடலில் கருப்புக் கொடியுடன் நாட்டுப்படகுகளில் வலம் வருகின்றனர். மீனவ மக்களோ பட்டினப்பாக்கம் வழியாக நூற்றுக்கணக்கில் திரண்டு மாணவர்களை பாதுகாத்து வருகின்றனர்.

வினவு January 23, 201710:07 am

சென்னை மெரினாவில் கடலுக்குள் இறங்கி போராடி வரும் மாணவர்கள் கடலில் இருந்து வெளியேற மறுப்பு.

வினவு January 23, 201710:01 am

துரை தமுக்கம் மைதானத்தில் காலை 4 மணிக்கே வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்ல கூறி மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே அதிரடிப்படை, சிறப்பு அதிரடிப்படை என ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்து மிரட்டிவருகிறார்கள்

பள்ளி வாகனங்களில் போலீசார் வந்தனர்

தற்போது சென்னையில் மாணவர்களை கலைக்கும் செய்தி பரவவே அதே போன்று மதுரையில் அனுமதித்துவிடக்கூடாது என தமுக்கத்தில் மாணவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

– தமுக்கத்திலிருந்து வினவு செய்தியாளர்