privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

-

மார்ச் -23 : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
மாணவர்கள், இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல் !

ன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே!

மார்ச்-23, 1931. மாவீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நாட்டின் விடுதலைக்காக தங்கள் மரணத்தையே செயல்திட்டமாக்கி தூக்குக்கயிற்றை முத்தமிட்ட நாள். இவர்கள்தான் நம்முடைய உண்மையான ஹீரோக்கள்.

நம்நாட்டை அடிமைப்படுத்தி இருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு போர்க்குனமிக்க போராட்டங்களால் குலைநடுக்கத்தை ஏற்படுத்தியவர் பகத்சிங். இருட்டில் தவித்த நம் நாட்டிற்கு இவர் ஒரு விடிவெள்ளி. ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது, 11 வயதே நிரம்பிய பகத்சிங் தியாகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணைப் பார்த்து தன்னை உணர்வூட்டிக் கொண்டார். நாட்டு விடுதலையை லட்சியமாக வரித்துக் கொண்டார். அன்றிலிருந்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியானார் பகத்சிங்.

புரட்சியை நேசித்தவர்களை ஒன்றிணைக்க லாகூரிலிருந்து கல்கத்தா வரை பகத்சிங்கின் கால்படாத கல்லூரிகளோ, விடுதிகளோ இல்லை. இந்த வேலையின் போது, பல நாள் பட்டினி கிடக்க வேண்டி வந்தது. ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காக துன்பங்களைத் தாங்கிக் கொண்டார். பகத்சிங்கின் அயராத உழைப்பால், 1928-ல் இந்துஸ்தான் சோசலிச குடியரசு ராணுவம் என்ற புரட்சிகர கட்சி உருவாக்கப்படது.

இன்று கார்ப்பரேட் முதலாளிகள் நம் நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையைப்போல் குமுறிக்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒருகோடி வேலைவாய்ப்பைப் உருவாக்குவேன் என்று வாய்ச்சவடால் அடித்த மோடி இன்று வேலையில்லா இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்கிறார். தென்னிந்தியாவின் நெற்களஞ்சியமான தமிழகத்தின் டெல்டாவை பாலைவனமாக்க காவிரி உரிமை பறிப்பு, மீத்தேன், ஷேல் கேஸ், சாகர்மாலா என பல நாசகாரத்திட்டங்கள்.

ஆனால், இதற்கெதிராக மாணவர்கள் போராட்டக்களத்திற்கு வரக்கூடாது என்பதில் அரசு குறியாக இருக்கிறது. நாட்டுப்பற்று, சமூகப்பற்று, மொழிப்பற்று இல்லாமல் ரோபோக்களைப் போல் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆபாச சீரழிவுகளிலும், கஞ்சா, டாஸ்மாக் போதைகளிலும், ஆடம்பர – நுகர்வுவெறி மோகத்திலும் சிக்க வைக்கப்படுகிறார்கள். சுயநலமாக – ஜாலியாக வாழ எவ்வளவு பெரிய குற்றங்களையும் செய்யலாம் என சினிமாக்கள் கற்றுக்கொடுக்கின்றன. நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி கவலைப்படாமல், கற்பனை உலகத்தில் மிதக்க வைக்கப்படுகிறார்கள்.

கம்யூனிச – பெரியாரிய கொள்கைகளை பேசுபவர்களை தேசத்துரோகி என்கிறான் பார்ப்பன பொறுக்கி எச்ச. ராஜா. யார் தேசத்துரோகி? ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டது பாரதிய ஜன சங்கம். சியாம பிரசாத் முகர்ஜி என்பவன் தான் இதை உருவாக்கினான். நாட்டின் விடுதலைக்காக போராடிய மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த காலனிய அரசின் அமைச்சனாக இருந்தவன். வெள்ளை நாய்கள் மக்களை வேட்டையாட துணை நின்றவன். இவன் உருவாக்கிய கட்சியின் இன்றைய பெயர் தான் பாரதிய ஜனதா கட்சி. இக்கட்சியின் புனித ஆத்மாவாக புகழப்படும் வாஜ்பேயி, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் காட்டிக் கொடுத்தவன். இந்த காட்டிக் கொடுக்கும் வம்சத்தில் வந்தவர்தான் மோடி. இதனால்தான் இவரால் எந்த மன உறுத்தலும் இல்லாமல் நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கும், அமெரிக்க கழுகிற்கும் இரையாக்க முடிகிறது.  இவர்கள்தான் தேசதுரோகிகள்.

விடுதலைப் போராட்ட விடிவெள்ளி பகத்சிங்கிற்கு வழிகாட்டிய கம்யூனிசத்தை, அவர் உளமார ஏற்றுக் கொண்டத் தத்துவத்தை அந்நியத் தத்துவம் என முத்திரைக் குத்தி அழிக்கப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி மோடி கும்பல். திரிபுராவில் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் உலக பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் சிலையை இடிக்கிறது.

இந்த நேரத்தில் பகத்சிங் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பார்? வெள்ளையனின் காலை நக்கிப் பிழைத்த ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கும்பலை நடுத்தெருவில் விட்டு ஓடஓட விரட்டியிருப்பார். ஆலைகளில் பிழியப்படும் தொழிலாளிகள், விவசாயத்தை விட்டு விரட்டப்படும் விவசாயிகள், கடலை விட்டு விரட்டப்படும் மீனவர்கள், காடுகளை விட்டு விரட்டப்படும் பழங்குடி மக்கள் ஆகியோருடன் ரத்தமும் சதையுமாக இணைந்திருக்கும் தத்துவம் கம்யூனிசம் என பார்ப்பன பாரதிய ஜனதாவின் முகத்தில் அறைந்திருப்பார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் தத்துவம் கம்யூனிசம். அப்படி இருக்கும் போது இந்தியாவிற்கு மட்டும் அது எப்படி வேறுபடும்? அதை அந்நியத் தத்துவம் என ஊளையிடும் ஆரிய பார்ப்பன கும்பல்தான் வந்தேறிக் கூட்டம்.

தூக்கிலிடுவதற்கு முன்பு வரை பகத்சிங் படித்துக் கொண்டிருந்த புத்தகம் லெனின் எழுதிய அரசும் புரட்சியும். லெனினை பகத்சிங் உயிரினும் மேலாக நேசித்தார். ஏனெனில், அவர் நம்மைப் போன்ற அடிமை நாடுகளின் விடுதலைக்கு அனைத்து உதவிகளையும் செய்தவர். லெனினுக்கு ஏன் நம் நாட்டில் சிலை என கேட்பவர்களின் செவுளில் அறைந்து சொல்லியிருப்பார், அவர் உலகின் அனைத்து ஒடுக்கப்படும் நாட்டு மக்களின் நெஞ்சுக்கினிய தலைவர் என்று.

லெனின் சிலையை இடிப்பது சித்தாந்தப் போராட்டமாம். மோடி சொல்கிறார். ஆம், சித்தாந்தப் போராட்டம்தான். முதலாளி சித்தாந்தத்திற்கும், தொழிலாளி சித்தாந்தத்திற்குமான போராட்டம். ஆம், இவனுடைய சித்தாந்தம் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களின் எடுபிடி சித்தாந்தம். பகத்சிங் நேசித்த கம்யூனிச சித்தாந்தமோ ஏகாதிபத்தியங்களுக்கு சிம்ம சொப்பனம்.

மாணவ நண்பர்களே! இப்போது சொல்லுங்கள், நாம் நிற்க வேண்டிய இடம் எது? பகத்சிங் விதைத்த கம்யூனிசத்தின் பக்கம் தானே? ஏனெனில் அதுதான் உழைப்பாளிகளுக்கானது. அதுதான் நமக்கானது. வாருங்கள்! அவரது கம்யூனிசக் கனவை நனவாக்குவோம்.

பகத்சிங்கின் கனவை நிறைவேற்ற அறிவியல் பூர்வமான அமைப்பு வேண்டும். கம்யூனிச சித்தாந்தத்தை ஏந்தியிருக்கும், புரட்சிக்கான சரியான திட்டத்துடன் செயல்படும் அமைப்பு வேண்டும். அப்படிப்பட்ட அமைப்புதான் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

“இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை.எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்றார் பகத் சிங்.

வாருங்கள், அவர் தொடங்கிய போரை நமது வாழ்நாளில் முடித்து வைப்போம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

தமிழ்நாடு.
எண்.41, பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை. பேச : 94451 12675.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க