privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்இது காதலா, கள்ளக்காதலா?

இது காதலா, கள்ளக்காதலா?

-

தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.

அப்படியானால் படிப்பவர்களிடமும் வாழ்க்கை என்பது சலித்துப் போய் வேறு உறவுகளுக்கு ஏங்குகிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா? விதிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை உறவு எந்த அளவுக்கு கசக்கிறதோ அந்த அளவுக்கு கள்ள உறவு வாசகருக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. கூடவே ஒரு ஆணின் தடையற்ற பாலுறவுப் பசி அல்லது வெறி இந்தச் செய்தியினூடாக வெளிப்படுகிறது. இருப்பினும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை கள்ளகாதல் என்பது கணநேர மகிழ்ச்சி. இறுதியில் கொலையில் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்படுகிறது.

இதுவும் செப்டம்பர் 24 இல் நக்கீரனில் வெளிவந்த ஒரு செய்திதான். சேலம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் தனது கணவன் ஆறுமுகத்தைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விடுகிறாள்.

இதைப்பற்றி ஊர் என்ன சொல்கிறது? ” அவளுக்கு 38 வயசுனு சொன்னா யாராலும் நம்ப முடியாது. வயசுப் பொண்ணு போலத்தான் வாளிப்பா போவா, வருவா. அவளோட சுண்டியிழுக்கிற கண்ணுக்கு சொக்கிப் போய் சுத்துற பசங்க…. 18 வயசுலயும் கூட இருக்கானுங்கன்னா பார்த்துக்கங்களேன். இவ்ளோ அழகிருந்து என்ன பிரயசோனம்? புருஷன் மகா குடிகாரன். அதுவே ஆறுமுகத்தோட உயிரை எடுத்துடுச்சி. இப்ப இவளையும் போலீசு பிடிச்சுட்டு போயிடுச்சி”.

38 வயதில் மற்றவர்கள் ரசிக்கும் வண்ணம் பொன்னம்மாள் மினுக்கியவாறு இருந்ததை ஊர் வெளிப்படையாக ரசிக்கவில்லை. ஒரு கிராமத்துப் பெண் அழகிப்போட்டிக்கு தேவையான ஒப்பனை எதுவும் செய்வதில்லை. இருப்பினும் அவளது சாதாரண அலங்காரமும் அழகும் ஊரின் கண்களை சுண்டி இழுக்கிறது. ஒரு பெண் நடத்தை சரியில்லை என்பதைத் தெரிவிப்பதற்கு ஊர் பயன்படுத்தும் முதல் வாதம் அவள் அழகாக சிங்காரித்துக் கொள்கிறாள் என்பதுதான். மேலும் அந்த அழகை ‘ஊர்’ உள்ளுக்குள் இரசிப்பதும், வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்வதும், முடியாத போது புரணி பேசி ஆதங்கத்தை தீர்த்துக் கொள்வதும் வழக்கம்.

பொன்னம்மாளைக் கைது செய்த இன்ஸ்பெக்டர் உத்ரபதியின் வாக்குமூலம் இது: “என் புருஷன் குடிச்சுட்டு வந்து தானே கழுத்தைத் துண்டால் இறுக்கி தற்கொலை பண்ணிக்கிட்டாருனு சொல்லி அழுதாள். எங்களுக்கு இது சந்தேகம் தர விசாரிச்சப்போதான் நாராயணனோட இருந்த கள்ளக் காதல் உறவு தெரிய வந்தது. இவளுக்கு மகன் ஒண்ணு, மகள் ஒண்ணு இருந்து இருவருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சப்புறமும் இவள் கள்ளக்காதலை விடலை. இதை அவள் புருஷன் தட்டிக்கேட்கவும் கொன்னுருக்காள்”.

போலீசுக்கு வழக்கு முடிந்த நிம்மதி. குற்றவாளியைக் கண்டுபிடித்து, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குப் போட்டு தண்டனை வாங்கிக் கொடுத்தால் அவர்களின் பணிப் பதிவேட்டில் மதிப்புப்புள்ளிகள் ஏறும். பதவி உயர்வுக்குப் பயன்படும். மற்றபடி ஒரு பெண்ணின் வாழ்க்கை அத்துடன் முடிந்து விட்டது என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அடக்குமுறை எந்திரங்களின் ஈரமற்ற இதயங்களில் உயிருள்ள வாழ்க்கையின் வலியும், அது தோற்றுவிக்கும் அவலமும் கடுகளவு கூட இறங்குவதில்லை.

நெடுங்காலம் தன்னை சித்திரவதை செய்த பிரச்சனையிலிருந்து விடுதலையையும் ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பதறியாத இறுக்கமும் கலந்த வெளிறிப் போன முகத்துடனும் காவல் நிலையத்தில் இருக்கும் பொன்னம்மாள் தனது கருத்தை நிருபரிடம் கூறுகிறாள்.

அவளது முதல் கேள்வியே ” ஊரே கள்ளக்காதல்னு சொல்லி திட்டுறாங்க. காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன? ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா? ”
பதினைந்து வயதில் ஆறுமுகத்தை திருமணம் செய்த பொன்னம்மாவுக்கு இன்று ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உண்டு. முப்பத்தி எட்டு வயதில் பாட்டி ஸ்தானத்தை அடைந்து வட்ட பொன்னம்மா இத்தனையாண்டுகளாக தனது குடிகார கணவனால் தினமும் கொடுமைகளேயே சந்தித்திருக்கிறாள். மரம் ஏறி பிழைக்கும் ஆறுமுகம் 50 ரூபாய் கிடைத்தாலும், 500 ரூபாய் கிடைத்தாலும் குடித்தே அழித்து விடுவான். குடித்து விட்டு வீட்டுக்குவரும் அவன் பொன்னம்மாளை நிர்வாணமாக்கி கண்ட இடங்களில் அடிப்பதும், மிருகம் போல வல்லுறவு வைத்துக்கொள்வதும் தினசரி வாடிக்கை. பேரன், பேத்தி எடுத்த பிறகும் இந்தக் கொடுமை தொடர்ந்தது. இந்த விஷச்சூழலில் மாட்டிக்கொண்ட பொன்னம்மா அன்புக்கும், பாசமான தாம்பத்திய உறவுக்கும் ஏங்கினாள். வயது குறைந்தவளென்றாலும், மற்ற ஆண்கள் பார்வையை வசீகரிக்கும் அழகுள்ளவள் என்றாலும் நெடுங்காலம் ஒழுக்கமாகத்தான் வாழ்ந்து வந்தாள்.

ஆறுமுகத்தின் தொடர் சித்திரவதை இந்த ஒழுக்கவேலியை தாண்டுமாறு தூண்டியது. தற்செயலாக நாராயணன் என்பவனது நட்பு கிடைத்தது. அவனுக்கும் குடும்ப வாழ்வில் நிம்மதியில்லை என்பதால் இந்த நட்பு பரஸ்பரம் தங்களது துன்பத்தை பரிமாறிக் கொண்டு தேவையான இன்பத்தையும் பகிர்ந்து கொண்டது. இளம்வயதில் தாயாகி, பாட்டியாகி, கணவனின் வெறிக்கும், அடிக்கும் வாக்கப்பட்ட பொன்னம்மாள் இந்தக் ‘கள்ள’ உறவில்தான் அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டிருக்கிறாள். நீண்ட காலம் புரையோடிப் போயிருந்த புண்ணுக்கு அது மருந்து. திருட்டுத்தனமான மருந்தென்றாலும் ஆறுதலைத் தரும் மருந்து.

ஒரு நேரம் நாராயணனுடன் ஓடிப்போகலாம் என்று திட்டமிட்டு இருபது நாட்கள் அசலூரில் வாழ்ந்தாள். இருப்பினும் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை மனதில் கொண்டு இனி ஒழுக்கமாக வாழ்வோமென ஊருக்குத் திரும்பினாள். எல்லா சுகமும் இருபது நாட்களோடு போகட்டுமென முடிவெடுத்து வாழத் துவங்கினாள். ஆனால் ஆறுமுகம் திருந்துவதாயில்லை. பிள்ளைகள், மருகப்பிள்ளைகள் முன்பே அவளை அடிப்பதும், உறவுக்கு அழைப்பதும் என வாடிக்கையை தொடர்ந்தான். பொன்னம்மாளின் கள்ள உறவைப் பற்றி ஊர் பேசத்துவங்கியதும் ஆறுமுகத்தின் கொடுமைகள் அதிகரித்தன. தன் மனைவி இன்னொருவனுடன் உறவு வைத்திருக்கிறாள் என்ற அதிர்ச்சியெல்லாம் ஆறுமுகத்திடம் ஏற்படவில்லை. அவனைப் பொறுத்தவரை அடிப்பதற்கு ஒரு முகாந்திரம் கூடுதலாகக் கிடைத்தது அவ்வளவுதான். பொன்னம்மாளும் தனது கணவனுக்கு தெரிந்து விட்டது குறித்து கவலை கொள்ளவில்லை. அன்புக்குப் பதில் வன்மத்தையும், வெறுப்பையும் கொட்டி வந்த அவனை அவள் எப்போதோ தன் மனதிலிருந்து அகற்றிவிட்டாள்.

“போன செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணியிருக்கும். குடிச்சிபுட்டு வாயை பொளந்து தூங்கிக்கிட்டு இருக்கான். எனக்கும் தூக்கம் வராம அவனையே வெறிச்சி பார்த்தேன். ஏதோ வெறி வந்துடுச்சு. மெல்ல கட்டிலருகே போயி அவன் கழுத்துல இருக்கிற துண்டை இறுக்கினேன். துடியா துடிச்சான். அவன் என்னை படுத்துன கொடுமைக்கு முன்னாடி அவன் துடிப்பு பெரிசா தெரியலை. ரெண்டு கையாலேயே இறுக்கி கொன்னேன். என் இத்தனை வருஷ தாகம் நாராயணனோட சேர்ந்தப்ப தீர்ந்தது. இத்தனை வருட வெறி ஆறுமுகத்தோட கழுத்தை இறுக்கி கொன்னப்போ தீர்ந்தது. 23 வருஷ சிறையில இருந்து மீண்டுட்டேன். இனி தனியா படுத்தாலும் நிம்மதியா படுப்பேன்” நிம்மதிப் பெருமூச்சோடு நிருபரிடம் பகிர்ந்து கொண்ட பொன்னம்மா சிறைச்சாலை நோக்கி பயணமாவதற்குக் காத்திருக்கிறாள்.

நடந்த கொலையை அவளே ஒத்துக்கொண்டிருப்பதால் வழக்கு விசாரணை வேகமாக நடந்து அவளுக்கு அநேகமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். அப்படி விதிக்கப்பட்டால் குறைந்தது பதினைந்து வருடம் சிறையில் இருக்கவேண்டும். 53 வயதில் விடுதலையடைவாள்.

ஆறுமுகத்தை பொன்னம்மாள் கொலை செய்தாளா, அல்லது தண்டனை கொடுத்தாளா? பொன்னம்மாள் இப்போது விடுதலை அடைந்து விட்டாளா, அல்லது சிறைக்கு செல்கிறாளா? இப்போது அவளுக்கு ஆயுள் தண்டனை முடிந்து விட்டதா, அல்லது தொடங்க்கப் போகிறதா? இறுதியாக…. இது காதலா, கள்ளக்காதலா?

 

 

  1. கணவன் இருக்கும்போது மாற்ற ஆண்களுடம் உறவு கொள்வது கள்ளக்காதலே. கணவன் சரியில்லை என்றால் விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை மணம் முடிப்பதே நல்லது.

    • Robi , விவாகரத்து என்கிற விடயம் இருப்பதென்பதே இன்னும் பல கிராமங்களுக்கு தெரியாது. படித்த பண்டிதர்களே வகை வகையாய் தவறு செய்யும் போது, பாவம் கிரமத்து மக்கள் என்ன செய்வார்கள்? தங்கள் மன அழுத்தத்தை குறைக்க disco, golf, steam bath, masaage ஒன்றும் இல்லையே.

  2. கணவன் குடிக்கிறான் என்று தெரிந்தும் அவனுடன் இருபது ஆண்டகளுக்கு மேல் வாழ்ந்திருப்பவள் அதற்க்கு பிறகு ஏன் இன்னொருவனிடம் தொடர்பு கொள்ள வேண்டும்? இவ்வளவு செய்ய துணிந்தவள் விவாகரத்து செய்து துணிந்து இருக்கலாமே? அதற்க்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து இருக்கலாம். இப்போ ஒருத்தனை கொலை செய்து தண்டனை அனுபவித்து இருக்க வேண்டி இருக்காது. சரியான நேரத்துக்கு முடிவெடுக்காமல் இருந்ததற்கு கிடைத்த தண்டனை. அவ்வளவு தான்.

    • விவாகரத்து என்பது என்னவோ, இன்று கேட்டு நாளை கிடைத்து விடுவது போல சொல்கிறீர்களே? இந்த சமூகத்தை குறைவாக மதிப்பிடுகிறீர்கள். தினம் தினம் நொந்து சாபவனை கண்டுகொள்ளாமல், தன் மேலாளரை தாக்கிய தொழிலாளியிடம் பெருங்குற்றம் காணும் குருட்டு உலகம்.

  3. வணக்கம்

    \\காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன?\\

    அவர்கள் சரியாகத்தான் கேட்டிருக்கின்றார்கள்

    விவாகரத்து செய்ய முடியாத போதுதான் இந்த மாதிரியான பிரட்சினைகள் வருகின்றன
    பொன்னம்மாளின் கணவனை அவர்களால் விவாகரத்து செய்ய முடிந்திருந்தால் (இந்த சமூகம் அனுமதித்து இருந்தால் பொன்னம்மாளின் வாழ்வு இப்படி இருந்து இருக்காது

    நன்றி

  4. இன்னமும் நம்ம நாட்டில் காதலா கள்ளகாதலானு பட்டி மண்டபம் வைக்க தான் ஆளுங்க இருக்காங்க. பிரச்சனையோட முலம் என்னனு யாரும் பாக்கலை.

    இப்பொது நாளெடுகளில் வரும் செய்திகளை பார்க்கும் போது நம்ம நாட்டில் மனநல வாரியம் கண்டிப்பாக வேண்டும்.

  5. Robin and Venkat are high class people who can see divorce so easily. If you consider Ponnamma it seems she struggled to put her case in front of her children. None of the children cared for her. If they could have supported her may be her husband would have changed,

  6. ponnamma could not have gone for divorce. a legal separation would be meaningless in her millieu. but, it is a big road block for her. she cannot return to live in peace even at the age of 60. she would have to lose the children and grand children anyway.it is unfortunate she had no one, not even her jparamor to guide. but this is the case of many women in india. they struggle to retain what is an illusion.

  7. நல்ல பதிவு தோழர்.. இங்கு மறுமொழியில் சிலர்.. விவாகரத்து செய்து இருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.. ஆனால் நமது நாட்டில் ஒரு பெண் திருமண வயதில் தனது வாழ்கை துணையை தானே தேர்ந்து எடுக்கும் உரிமையே இல்லாது இருக்கும் போது … 38 வயது பெண் விவாகரத்து செய்த பின் சுதந்திரமாக வாழ இந்த சமுகம் அனுமதிக்குமா என்ன? அதுவும் ஒரு கிராமத்தில்.. அப்படியே செய்து இருந்தாலும் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாவும், உறவுகளின் ரீதியாகவும் இந்த பெண் தனிமை படுத்தப்பட்டு இருப்பாள்..
    பெண்ணை நுகர்வு பொருளாக மாற்றும் இந்த சமுக அமைப்பை மாற்றி அவளுக்கு தன் துணையை தானே தேர்ந்து எடுக்கும் மற்றும் விலக்கும் உரிமையை அளிப்போம்.. அப்பொழுது தான் காதலும், கள்ளக் காதலும் வேறுபடும்.. அதுவரை.. பல இயற்கைக்கு மாறான உறவுகள் தோன்றிக்கொண்டே இருக்கும்…

    — பகத்

  8. நல்ல பதிவு. இவைபோன்ற செய்திகள் கட்டாயம் நிறைய வெளிவர வேண்டும்.

    எனது எண்ணம்:
    பொண்ணம்மாளோ, பொண்ணப்பனோ யாராயிருந்தாலும், உடலாலும், மனதாலும் நிறைவில்லாத வாழ்க்கை துணை அமையுமேயானால் ஒரு நாராயணன்/நாராயணியின் வருகை நிறைய சந்தர்ப்பங்களில் தேவையாயும், நிறைவாயும் இருக்கிறது. இதை திருமனம் எனும் வேளி போட்டு தடுக்க நிணைப்பது முட்டால் தனம். சம்பந்தப்பட்ட இருவரும் தெளிவாயிருந்தால், பெரிய காயங்கள் இல்லாமல் இருவரும் விலகி வேறு வாழ்க்கை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நகரங்களிளேயே இந்த தெளிவு என்பது அரிது. இதை சரிசெய்யும் விதத்தில் சட்டமும் பரிணாம வளர்ச்சி அடையவில்லை. இதில் ஆண்கள் என்றுமே குற்றவாளியாக்கப்படுவதில்லை என்பது ஆண்மைக்குதான் இழிவு. பெண்மையை குற்றம் சுமத்துவது கோழைத்தனம்.

    பொண்ணம்மாளின் சூழ்நிலையில், அவள் நாயாயணனோடு கொண்டது காதல், அறுமுகத்தோடு கொண்டது சமுதாயம் செய்யச்சொன்ன கள்ளக்காதல்.

  9. பொன்னம்மாளுக்கு கூலிக்கு வேலை செய்து பிழைக்கும் எண்ணமிருந்திருந்தால் விவாகரத்துப் பெற்று இன்னொருவரை திருமணம் செய்திருப்பாள். அவளுக்குத்தானே இருக்க வீடும் சாப்பாடும் கிடைக்கிறது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதுபோல் கள்ளக்காதல் தேவையா?. தேவை என்றால் தனியே போகவேண்டியதுதானே! எதற்கு புருசனின் வீடும் உணவும்? கள்ளக்காதலனால் வழங்க முடியவில்லையோ?

    • Ponnammal took a decision very late . People never seen her side truth. Women always sacrificing their lives.  Sometime they took  wrong decision. She should have continued her life even after 20 days with Narayanan.  The only evidence “Thali”.  She must  throw it  Arumugam Face.  Nothing wrong.  With Thali she passed 23 years without happiness.  Without Thali she had wonderful life 20 days.    

  10. She would have been educated by the social organizations. Education is only solution for all these problems. How ever our politicians and not worried about educating them but rather they are worried about giving free things and cheat them for the vote.

    I urge all the parties who ever is having the interest on the poor people to go to them and explain them the rights they have and make them understand.

    There should be separate government organizations created for these purpose.

  11. Kalla Kaadhal is against Tamil Culture. When Kushboo expressed her views about the immoral/illegal sex life in Tamilnadu, what happened ? We have Tamil cultural police here…. So Kalla Kaadhal is not allowed…..

  12. //Kalla Kaadhal is against Tamil Culture. When Kushboo expressed her views about the immoral/illegal sex life in Tamilnadu, what happened ? We have Tamil cultural police here…. So Kalla Kaadhal is not allowed…..//

    ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்

  13. இது காதலா, கள்ளக்காதலா?…

    தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்த…

  14. முறையற்ற காதல், இது செய்தி மஞ்சள் பத்திரிக்கைகளுக்கு வியபாரம், சமூக விழிப்புணர்வுக்கு ரஜேஸ் கூறியது போல் வாரியம் தேவைபடுமோ.,,,,, இது படிக்காதவர்களிடம் மட்டுமா,,,,,,,,,,,,,, நன்கு படித்த நகர்புற மக்களிடமும் ஏன் இந்த நிலைபாடு எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது,,,,,,,,,,, என்ன எதிர்பார்ப்பு,,,,,, நிறைவேறவே முடியாததா,,,,, இவை மட்டுமா…… இல்லை உடனடி முடிவுகள்./தீர்வுகள் எதிர்பார்த்து,,,,,,,, தற்போதைய ஊடகங்கள் காட்டும் கலாச்சாரத்தை எட்டி பிடிக்க ஏமாந்து வாழ்க்கையை தொலைப்பவர்கள்…………. இந்த முறையற்ற காதல் சமூகத்தில் தொடர்கதையாக. தீர்வு விவாகரத்து- வாழ்க்கையின் வயோதிக்த்தில்தான் கிடைக்கும் இன்றைய வழக்காடு முறைபடி, கிராமங்களில் நடைபெறும் அறுத்துகட்டும் நிலைபாடு. ஆணதிக்கம் ஆண் சார்ந்து தீர்ப்பு தருகிறதே? இது ஒரு அன்பு தேடல்- கனவுகளை நிறைவேற்ற ஏக்கம் கொள்ளும் மனது. நடைமுறைக்கு ஒவ்வாத கனவுகளும் இதில் அடக்கம். ஆனால், ஏமாறுவது எப்போதும் பெண்.

    வேறேதேனும் தீர்வு பிடித்தவனோடு வாழ்வது அல்லது பிடிக்காதவனோடு காலம் முழுக்க வாழ்வது. பிடித்தவனோடு வாழ்வது இந்த நுற்றாண்டில் அதிகரித்துள்ளது. இருபதாம் நுற்றாண்டின் கட்டுபெட்டிதனம் மறைகிறது. ஆனால் தவறுகள் நிகழ்கிறது. ஆம் கொலை செய்யும் நிலைபாடு. மாற்றம் தவறுகளோடு நிகழ்கிறது. வருங்காலம் தவறை சரி செய்யும்.

  15. Many of you had expressed divorce but many of you are not aware that this lady is not an educated one nor divorce is practically possible in villages even these days.

    I don’t want to support her illegal relationship or the murder she committed but I want the readers to consider her illiteracy and lack of exposure to law to take refuge in it.

    • பெண் சுதந்திரம் என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே சமுதாயத்தில் இன்று பெண்களை பொறுத்தவரை அது பொருளாதார   உரிமையகட்டும் அல்லது உணர்வுக்கலகடும் எந்த நிலையிலும் அவர்கள் கொலு பொம்மைகள்தான் .இதைத்தான் இஸ்லாம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சீர்படுத்தி பெண்களுக்கு சொத்தில் உரிமை , வணிகம் செய்ய உரிமை முதலியவற்றை  அவர்களின் பாதுகாப்பு அரணாக சில வரைமுறைகளின் படி அளித்தது . ஆனால் இன்று வரை உலக மாந்தர் உணராமல் மடமைஇன்பால் தட்டி கழிக்கின்றனர் .

      • //////

        இஸ்லாம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சீர்படுத்தி பெண்களுக்கு சொத்தில் உரிமை , வணிகம் செய்ய உரிமை முதலியவற்றை அவர்களின் பாதுகாப்பு அரணாக சில வரைமுறைகளின் படி அளித்தது

        //////

        Idhu yenna pudhu kootha irukku…
        islam la pennukku sudhandhiram nu sonna
        yevanum Namba matan…..

        Yellaraiyum vida Islam than Pengalai romba adimai thanam paduthureenga

        1. Dress
        2. Marriage (oru aanukku yethanai manavigal vendumanalum irukalam)

        ippadiye innum neraiya sollalam
        but ippadi adipadiyana sudhandhiram kuda kudukala idhuku mela yenna pesi yenna aaga pogudhu???

  16. இன்றும் ஒரு செய்தி, ஆந்திராவில் இரண்டாம் மனைவி மேல்சாதி கொல்லப்பட்டது ரெட்டியார் பெண்ணும் தலித் இளைஞனும். சாதி மாறி காதல் என்றாலே மனிதம் மரணப்படுத்தப் படுகிறது  

  17. பொன்னம்மாள் கொலை செய்யாமல் புது மனிதனுடன் வாழப் போயிருந்திருக்கலாம். ஓடிப்போதல் இக்காலத்தில் மிகச்சாதாரணமாக காணப்படும் ஒரு விஷயம். அவரின் வாழ்க்கையும் நிம்மதியாய்ப் போயிருக்கும்.
    ஓடிப் போய் வாழ்வதற்கான நம்பிக்கையை அவரது காதலன் கொடுத்திருக்கும் பட்சத்தில் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது. இப்படிப்பட்ட கொடூரமான கணவனை குடும்பத்தில் மற்ற அனைவரும் ஏன் சகித்துக்கொண்டேயிருந்தார்கள் என்பது இன்னொரு கேள்வி. இல்லை கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று சுயநலமாய் இருந்துவிட்டார்களா ? யாராவது ஒரு குடும்ப உறுப்பினர் பொன்னம்மாளுக்கு ஆதரவாக நின்று அவள் கணவனை அவ்வப்போது நாலு உதை கொடுத்திருந்தால் அவனே ஒரு வழிக்கு வந்திருக்கக்கூடும்.

    காதலில் கள்ளக்காதல் உண்டுதான். ஆனால் பொன்னம்மாள் அவரது கணவனுடன் மனத்தால் என்றுமே பிணைக்கப்பட்டிருக்க வில்லை என்று அவர் கூற்று வெளிப்படுத்துகிறது. கணவன் என்கிற பெயரில் அவன் தினமும் அவரை வல்லுறவு கொண்டிருந்திருக்கிறான். அவருடைய துன்பமான வாழ்வை சுற்றியுள்ளவர்கள் நன்கு தெரிந்திருந்தே யிருந்திருக்கிறார்கள். அதனாலேயே அவர் பின்னால் சுற்றியவர்களும் இருந்திருக்கக் கூடும். அழகாய் இருக்கும் பொன்னம்மா குரூரமான, வெறியனுடனான குடும்ப வாழ்வின் மன அழுத்தத்தை நன்கு அலங்கரித்து, உடையணிந்து ‘தன்’னை ஈடுகட்டியிருந்திருக்கிறார். இது தனது அடிப்படையான உணர்வு பூர்த்தியடையாத யாருக்கும் உண்டாகும் இயல்பான வெளிப்பாடே.

    இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள அளவு ஆணாதிக்கம் மற்றும் சமூகம் பேசும் ‘புரணி’ போன்ற விஷயங்கள் இன்றும் தலைவிரித்து ஆடுகிறதா என்பது ஒரு கேள்வி. தடையற்ற பாலுறுவு வெறி என்பது இன்றைய நுகர்வுக் கலாச்சார உலகில் ஆணோடு, பெண்ணையும் பாரபட்சமின்றி கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் விஷயம். தடையற்ற பாலுறுவு ஆசை என்பது இயற்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான உணர்வே. கட்டற்ற காமம் சமூகத்தையே சீர்குலைக்கும் என்பதை உணர்ந்து அதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைத்துக் கொண்டதுதான் தாலி போன்ற சமூகக் கட்டுக்கள். தற்போதைய சமூகமே சீரழிந்த நுகர்வு மனோபாவத்தில் அலையும் போது அது வைத்துள்ள கட்டுக்களும் மூச்சைப் பிடித்துக் கொல்லும் கொடுமையாய் மாறிப்போய்விட, இக்கட்டுகளை ‘உடைப்பது மட்டுமே’ இப்போது புரட்சி என்று பார்க்கப்படுகிறது.
    பேரன், பேத்தி எடுத்திருந்தாலும் கொடுமைக்கார கணவனை தூக்கி எறிந்துவிட்டு புதுவாழ்க்கையை நோக்கி பொன்னம்மா பயணப்பட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

  18. விவாகரத்து என்பதைப் பற்றி வேண்டுமானால், கிராமத்து பெண்களுக்கு தெரியாமல் இருக்கலாம்! ஆனால், அறுத்து விடுவது,அறுத்து கட்டுவது என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் போக நியாயமில்லை!

    கொலையை விட அறுத்துக் கட்டுவதோ, ஓடிப் போவதோ கொடுமையான செயலுமில்லை! கேவலமுமில்லை!

    சமூகத்திற்கும்,குடும்பத்திற்கும்,தனிநபர்களுக்கும் கட்டுப்பாடுகளும், சட்டதிட்டங்களும் உள்ளன! பல கட்டங்களையும், பல சோதனைகளையும், கடந்து தான் இவை நடைமுறையில் உள்ளன! தனிநபர்கள் பலர் சேர்ந்ததுதான் சமூகம்! தனிநபர்கள் செய்யும் செயல்கள் தான் சமூகநிலையை தீர்மானிக்கும்! தனிநபர் ஒழுக்கம் மேம்படின், சமூகம் தலை நிமிரும்!

  19. என்னை பொருத்தவரை காதலை தரம்பிரிக்க முடியது ஒரு ஆனும் பென்னும் அன்பை பரிமரிக்கொல்வதே காதல் இதில் நல்ல காதல் கல்லகாதல் என்ருதரம்ப்ரிக்க இயலது காதல் என்பது ஒரு உனர்வு இந்த உனர்வை தாலிகட்டிவிட்டால் கட்டுபடித்திகொல்ல வென்டும் என்ரு எநிர்பந்தம் வைக்கும் நமது சமுதயம் நமது உனர்வுகலுக்கு மதிப்பலிப்பது இல்லை . மனதுக்கு பிடிக்காத ஒருவனுடன் கொடுமைகலை அனுபவித்துகொன்டு வாலும்பொதும் நமது சமுதயம் கன்டுகொல்வதில்லை.கொடுமைகலை அனுபவிக்கும் ஒருவருக்கு அதரவு தரும் அன்பை நாம் எவ்வாரு கல்லகாதல் என்ருசொல்ல முடியிம்

  20. உடல் அறிப்பெடுத்தவள் பேசாமல் விபச்சார விடுதிக்கு போயிருக்க வேண்டியது தானே. அங்கே அவள் பல விதங்களில் தனது அரிப்பை அடக்கியிருக்கலாம். ஒரு தேசத்தின் அடிப்படை அலகு குடும்ப அமைப்பு தான். அந்த குடும்ப அமைப்பின் ஆதார மையம் பெண்கள். இவளை போன்ற பெண்களால் பண்பான பெண்களும் சந்தேகத்திற்கு உள்ளாவதும், குடும்ப அமைப்புகள் சீரளிவதும் நடந்தேறி வருகிறது.

  21. ஆம்பிளைக்கு ஆசை வந்தால் ஆண்மை, பொண்ணுக்கு வந்தால் அரிப்பு. இதுதான் நம் சமூகம்!

    • ஆண் தவறு செய்தாலும் அவனை நிச்சயம் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். அப்பொழுது தான் சமூகத்தில் தவறுகள் குறையும். அதை விடுத்து தவறு செய்யும் பெண்களை ஊக்கப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். இதன் மூலம் தவறு செய்யும் வக்கிர ஆண்கள் தங்களுக்கு மறைமுகமாக அங்கீகாரம் தேடப்பார்க்கிறார்கள் என்பது தான் உண்மை. நாடு வெளங்கனமாதிரிதான்.

  22. காதல், பாலுறவு என்பது தொடர்புடைய ஆண் மற்றும் பெண் சம்பந்தப்பட்ட விசயம். இதில் சமூகம் ஒழுக்கத்தை புகுத்துவது என்பது தோல்வியில் தான் முடிந்திருக்கின்றது. எனவே, மேற்கூறப்பட்டவர்களின் கணவனானாலும், மனைவியானாலும் ஒதுங்கிக்கொள்வது மட்டுமே பண்பாடாக இருக்க முடியும். வலிய காதலையும், பாலுறவையும் செலுத்தும் உரிமை கணவனுக்கோ மனைவிக்கோ யாருக்கும் (சமூகத்திற்கும்) கிடையாது. சமூக ஒழுங்கிற்காகவும், சுகாதாரத்திற்காகவும் சுயமாக கட்டுப்பாடு விதித்துக்கொள்ளும் பண்பாடு வரும் வரை சமூகம் கட்டுப்படுத்துவது என்பது வல்லுறவை புகுத்துவதற்குச் சமம். எனவே கள்ளக்காதல், ஒழுக்கம், நல்ல காதல் என்பது எல்லாம் அவ்வச்சமூகத்தின் ஆதிக்க சக்திகள் நிர்ணயிக்கும் விதிகள். இவைகள் மீறப்படும்.

  23. @ கணபதி //உடல் அறிப்பெடுத்தவள் பேசாமல் விபச்சார விடுதிக்கு போயிருக்க வேண்டியது தானே. அங்கே அவள் பல விதங்களில் தனது அரிப்பை அடக்கியிருக்கலாம்// சேம் ஆன் யூ!……… எ உமன் கெனாட் பிகம் எ பிராஸ்டிட்யூட், ஆல் பை கெர்செல்செல்ஃப், பார் பிகமிங் எ பிராஸ்டிட்யூட், எ உமன் ரிக்வர்ஸ் தி கோவாப்பரேசன் ஆஃப் செவரல் மென். திஸ் சொஸைட்டி கிரியேட்ஸ் எ பிராஸ்டிட்யூட், அண்ட் தென் கண்டெம்ஸ் இட்ஸ் ஓன் கிரியேஸன்….(நன்றி- “யாருக்கும் வெக்கம் இல்லை” – சோ).
    வாய்ப்பு கிடைக்காத வரை இங்கு அனைவரும் நல்லவர்களே! பெரும்பாலானோர் வாய்ப்புக் கிடைகாததாலேயே நல்லவர் என்ற முகமூடியை வெற்றிகரமாக அனிந்து கொண்டுள்ளோம்.

    @கார்த்திக் //ஆம்பிளைக்கு ஆசை வந்தால் ஆண்மை, பொண்ணுக்கு வந்தால் அரிப்பு. இதுதான் நம் சமூகம்!// வெல் ஸெட்!

  24. வினவு…. முதற் படத்திற்கும் கட்டுரைக்கும் என்ன சம்மந்தம்?

  25. Kallakadhalum illa nalla kadhalum illa eklan oru unarvu. Valkaila ovvuru manusanam manasiyum yedho oru smayathil kallakadhalukku alldhu nalla kadhalukku aatpadukirargal. idharkku yaarum vidhi vilakkalla. Idhaithan inner instinct enru solluvargal. Oru pennai manadhil ninaithu rasikkira anumum oru anani manadhil ninathu rasikkira pennum yedhavadhu oru vidhathil edhu oru kadhalukku ullakirargal. Indha smaugam than atharkku kallakadhal thagatha uravukadhal enru peyar kudukkirarkal. Ulagail irukkira ahthani ambali pumbalai elleame oru vidhathil matravaral eerkkapattavargale. So yarudaya ennamum sutham kidayadhu appadi irrukku enru yaaravathu sonnal avan/aval mudhal tharamana vibachari/vinbacharan

  26. காதலே களவு என்றுதான் நமது பண்பாடு அழைக்கிறது. பொன்னம்மாளை போன்றவர்களைக் குற்றப்படுத்திப் பேச நமக்கு அதிகாரமில்லை. அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம் என்பது போன்றவை நம் வாழ்க்கையில் கடைபிடிக்க முடிந்தவையா. இந்த சமூகம் கட்டாயமாகக் குற்றவாளி. அதாவது நாமே. திருமணம் என்பது ஒரு சடங்காகி விட்டது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒருவர் திருமணம் செய்தே ஆகவேண்டும். சாமியாராய் போக, பிரம்மச்சாரியாய் இருக்க சமூகம் அனுமதிப்பதில்லை. உடல் ஆசைகள் அற்றவர்கள் அரிது என்பதால்.
    நடக்கிற திருமணம் உரியவர்களுக்கிடையில் நடக்கிறதா என்று உறுதிப்படுத்துவதற்காக நமது சமுதாயம் ஏற்படுத்தியிருந்த அளவுகோல்கள் – குலம், ஜாதகம், கோத்திரம், உறவில் திருமணம், ஜாதி, மதம்… -பத்தாம்பசலித்தானமானவையாக அறிவுஜீவிகளால் எள்ளி நகையாடப்படுகின்றன. இவற்றை மீறி தவறுகள் நேரும்போது கற்பு போன்ற ஒழுக்கக் கோட்பாடுகள் சகித்து வாழ வைத்தன. குடிகாரர்கள், கூத்தி வைத்திருப்பவர்கள் சமூகத்தால் சரிசெய்யப்படவில்லை என்றால் அப்பாவிப் பெண் என்ன செய்ய முடியும். கற்பு நெறி ஒழுக்கம்கெட்ட கணவனையும், ஒழுக்கம் கெட்ட மனைவியையும் மனைவியும் கணவனும் சகிக்க வைத்தன.
    சரியில்லாத கணவனை, மனைவியை சரி செய்ய சமூகம் என்ன தீர்வு வைத்திருக்கிறது. ஆறுமுகம் சரி செய்யப்பட்டிருந்தால் பொன்னம்மாள் இந்த முடிவுக்குப் போயிருக்கமாட்டாள். அரசாங்கம் மது விற்பனைக்குத் தடை இட்டிருந்தால் ஆறுமுகம் குடித்திருக்க மாட்டார். குடிக்கு எதிராக சமூகம் செய்வதற்கு நிறைய இருக்கிறது. இதற்குமேல் கணவனிடம் அன்பும் அரவணைப்பும் கிட்டவில்லை என்பதற்காக இன்னொருவரிடம் அதைத் தேடியதும் நியாயப் படுத்த முடியாததே. உடல்பசி அதாவது காமத்தை வெல்வதற்கான பயிற்சி நமது சமூகத்திற்கு இன்றைய சூழலில் மிகவும் தேவை. முறையாக மட்டுமே காமத்தைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற மனஉறுதி சமூகத்துக்கு வழங்கப்படவேண்டும். சரிஇல்லாத கணவனை சரிசெய்ய பெண்களுக்கும், சரி இல்லாத மனைவியை சரிசெய்ய ஆண்களுக்கும் பயிற்சி வேண்டும்…. இந்த திசையில் நாம் சிந்தித்தோமானால் கண்டிப்பாக இத்தகைய சம்பவங்களைக் குறைக்கமுடியும். விபச்சாரிகளான நடிகைகளுக்கும், தொட்டிகளான நடிகர்களுக்கும் பின்னால் போகும் தமிழகத்தில் அதை விரைவில் எதிர்பார்க்க முடியாவிட்டாலும் கூட. யாரும் எந்தத் தவறையும் நியாயப் படுத்தமுடியும், வறுமை, மதப்பற்று, ஜாதிப்பற்று, சோஷலிஸம் என்று ஏதாவது காரணம் சொல்லி. ஆனால் எந்த சூழலிலும் கணவனை விடாத பெண்கள் வழிபடப்படுகிறார்கள். எந்த சூழலிலும் அறத்தைக் கைவிடாதவர்கள் வழிபடப்படுகிறார்கள். அப்படி வாழ நாம் ஒவ்வொருவரும் முயன்றால்… நாம் தானே சமூகம்.

  27. To refer the lady பொன்னம்மாள் u use the word அவளுக்கு !!!
    To refer the lady குஷ்பு u use the word குஷ்பு கருத்துச் சொல்ல மாட்டார்;

    why did u give different type of respect to பொன்னம்மாள் and குஷ்பு!!!

  28. Yesterday, while I was at work, my sister stole my apple ipad
    and tested to see if it can survive a 40 foot
    drop, just so she can be a youtube sensation.
    My apple ipad is now destroyed and she has 83 views. I know this is entirely
    off topic but I had to share it with someone!

  29. இதில் யார் தவறு செய்தது. பொன்னம்மாள் தான்.

    பெரும்பாலும் பெண்கள் திருமனமானால் போதும் எனறு பெற்றோர் சொல்லும் ஆணை திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணம் முடிதந்ததும் இவன் தனக்கு ஏற்ற துணை இல்லை என்று நினைக்கிறாள் ஒரு சாதாரண குறைந்த அழகுல்ல் பெண்ணும். இதில் சில ஆண்களும் சில பெண்களும் உரம் இட்டு இந்த என்னத்தை வளர்த்து விடுகிறார்கள்.

    அடுத்த கட்டம்: பெண் தன் கணவனுடன் இன்பத்தை குறைதுகொள்கிறாள். இங்கு இருந்து ஒரு ஆணின் நடவடிக்கை அதிகமாகிறது. சிலர் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள். சிலர் வன்மத்தை பயன்படுத்துகிறார்கள்

    இங்கு ஊரே அழகான பெண் என்று சொல்லும் பொன்னம்மாள் தன் அழகுக்கு இவன் சரியானவனில்லை என்ற அவனிடம் சரியாக நடக்கவில்லை. அவன் வன்மத்தை உபயோகபடுத்தினான். குடிப்பதும் அதிகமானது. வீட்டுக்குள் இருந்த பிரச்சினை ஊருக்கு தெரிந்தது. இதனால் ஊரில் உள்ளவனும் பொன்னம்மாள் பின் சுற்றினான்.

    இதனால் கணவனின் கொடுங்கோல் அதிகமானது. கள்ளகாதல் உருவானது. கணவனை விட்டு செல்ல முடிவெடுத்தாள். ஆனால் திருட்டுத்தனமாக அடுத்தவன் மனைவி உடன் படுத்தவன் வாழ்க்கை கொடுக்கவில்லை. இவள் வாழ மீண்டும் கணவனிடம் வருகிறாள். அவள் ஒன்றும் குடும்பத்தை நினைத்து திரும்ப வரவில்லை. நினைத்து இருந்தால் சென்று இருக்கமாட்டாள்

    எல்லாம் தெரிந்த கணவன் சும்மா இருப்பானா.கொன்றுவிட்டாள்.

    இங்கு கணவன் குடிப்பதற்கு காரணம் சொல்லப்படவில்லை. திருமணம் ஆனவுடன் குடித்துவிட்டு அடிக்கவில்லை. மனைவிதான் காரணம்- ஆண் காரணம் இல்லாமல் சமூகத்தில் கெட்ட பெயர் எடுக்க விரும்பாதவன்

    கணவன் அடுத்தவளிடம் சென்றுவிட்டு இவளை அடிக்கவில்லை. இவள்தான் அடுத்தவனிடம் சென்றாள்

    ஊரே அழகென்று சொன்னவள் தன் அழகை பயன்படுத்தி கணவனை நல்ல வழிக்கு மாற்றி இருக்கலாம்- செய்யவில்லை

    எல்லாம் தெரிந்த உறவும் கணவனை தண்டிக்கவில்லை- எனவே தவுறு கணவனது இல்லை.

    பிடிக்கவில்லை என்றால் பிரிந்து இருக்கலாம்- செய்யவில்லை. சம்பாரித்து போட ஆண் வேண்டும்.

    ஆயிரம் ரூபாய் திருடியவனை தண்டிக்க சட்டமுண்டு. ஆனால் அடுத்தவன் மனைவியிடம் படுத்தவனையோ சென்றவளையோ தண்டிக்க சட்டம் இல்லை.

    அடுத்தவனிடம் பெற்ற பிள்ளைக்கு கணவன் என்பிள்ளை என்று சீராட்டி காலம் முழுவதும் சம்பாதித்து போடவேண்டும். சேர்த்து வைத்த சொத்தை கொடுக்க வேண்டும்- காரணம் மனைவியின் கள்ளகாதல்.

    மக்களே உண்மை பேசுங்கள். தொடர்ந்து பொய் பேசினால் பிரச்சனை வளர்ந்து கொண்டே இருக்கும். முடிவு வராது.

Leave a Reply to rudhran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க