Wednesday, September 27, 2023
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது !

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது !

-

அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம்.

………………………………………………

அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.

கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.

தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.

ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.

அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.

எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். “ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக” ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது.

“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது.

திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் ‘மக்கள் பிரதிநிதிகள்’ ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.

அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். “தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா..” என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். “குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!” என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள். வால் ஸ்ட்ரீட் வங்கிகளின் நெடிதுயர்ந்த கட்டிடங்களில் அமெரிக்க மக்களின் முழக்கம் மோதி எதிரொலிக்கின்றது ‘முதலாளித்துவம் ஒழிக!’

•••

இத்துனை அமெரிக்க வங்கிகளை ஒரே நேரத்தில் திவாலாக்கி, உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்த நிதி நெருக்கடியைத் தோற்றுவித்தது யார்? அமெரிக்காவின் ஏழைகள்! அவர்கள்தான் உலகத்தைக் கவிழ்த்து விட்டார்களாம். பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான கேள்விக்கு, இரண்டே சொற்களில் பதிலளித்துவிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். “கடன் பெறவே தகுதியில்லாதவர்கள், திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் என்று வந்தவர் போனவருக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தன. வீடுகட்டக் கடன் கொடுத்ததில் தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்குக் கொடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்…” (நாணயம் விகடன், அக்15)

எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! இதே உண்மையைத்தான் எல்லா பொருளாதாரக் கொலம்பஸ்களும் வேறு வேறு வார்த்தைகளில் கூறுயிருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தை இவ்வளவு எளிதாக ஏழைகளால் ஏமாற்ற முடியுமா? நண்பர்களுக்கு 50, 100 கடன் கொடுப்பதென்றால் கூட நாமே யோசிக்கின்றோமே, வந்தவன் போனவனுக்கெல்லாம் இலட்சக்கணக்கில் வாரிக்கொடுத்திருக்கும் அமெரிக்க முதலாளிகளை வள்ளல்கள் என்பதா, முட்டாள்கள் என்பதா? இரண்டுமே இல்லை. அவர்கள் கிரிமினல்கள்.

அமெரிக்காவின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்கள், சிறு முதலீட்டாளர்கள், வங்கிகள் .. அனைத்துக்கும் மேலாக சக நிதிமூலதனச் சூதாடிகள் எல்லோரையும் ஏமாற்றிச் சூறையாடியிருக்கும் இந்த மோசடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஆயிரம், இரண்டாயிரம் போயிருந்தால் அது திருட்டு. இலட்சக் கணக்கில் போயிருந்தால் கொள்ளை என்று கூறலாம். பறிபோயிருப்பது பல இலட்சம் கோடி. அதனால்தான் மிகவும் கவுரவமாக இதனை ‘நெருக்கடி’ என்று கூறுகின்றது முதலாளித்துவம்.

வந்தவன் போனவனுக்கெல்லாம் வாரிக் கொடுத்ததனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘அமெரிக்காவின் சப் பிரைம் நெருக்கடி’ தோன்றிய கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தயக்கமில்லாமல் கடன் வாங்குவதற்கும், நுகர்பொருட்களை வாங்குவதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதற்கும் மக்களை நெடுங்காலமாகவே பயிற்றுவித்து பொம்மைகளைப் போல அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது அமெரிக்க முதலாளி வர்க்கம். சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 10 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு. அங்கே வட்டி விகிதத்துக்கு உச்சவரம்பு இல்லை என்பதால் கடன் அட்டைக்கு 800% வட்டி கூட உண்டு. சராசரியாக ஒரு அமெரிக்கன் தனது மாதச்சம்பளத்தில் 40% தொகையைக் கடன் அடைக்க ஒதுக்குகின்றான். ஒரு கல்லூரி மாணவனின் சராசரி கல்விக்கடன் 10 இலட்சம் ரூபாய். 2003 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் வங்கிக் கடன்களின் சரிபாதி அடமானக்

இதற்கு மேலும் கடன் வாங்கிச் செலவு செய்யும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதால், நுகர்பொருள் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களிலும் சந்தை தேங்கியது. கடன் வாங்க ஆளில்லாததால் வட்டி வருவாய் இல்லாமல், வங்கித் தொழிலும் தேங்கியது. கடனுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இந்தத் தருணத்தில்தான் தங்கள் லாபப் பசிக்கு புதிதாக ஒரு இரையைக் கண்டுபிடித்தார்கள் வங்கி முதலாளிகள்.

“வேலை இல்லாத, வருமானமும் இல்லாத ஏழைகளிடம் அடகு வைக்க எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நேர்மையாகக் கடனை அடைப்பார்கள். அடைத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை உயர்த்தினாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இவர்களைக் குறி வைப்போம்” என்று முடிவு செய்தார்கள்.

ஒருவேளை பணம் வரவில்லையென்றால்? அந்த அபாயத்திலிருந்து (risk) தப்பிப்பதற்கு வால் ஸ்ட்ரீட்டின் நிதி மூலதனச் சூதாட்டக் கும்பல் வழி சொல்லிக் கொடுத்தது. 10 இலட்சம் ரூபாய் வீட்டுக் கடன், அந்தக் கடன் ஈட்டக் கூடிய வட்டித் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுக்கும் வங்கி, கடன் வாங்குபவருடைய அடமானப் பத்திரத்தை உடனே நிதிச் சந்தையில் 10.5 இலட்சத்துக்கு விற்றுவிடும். இப்படியாக கொடுத்த கடன்தொகை உடனே கைக்கு வந்து விடுவதால், பத்திரத்தை விற்க விற்க கடன் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். கொடுத்தார்கள்.

நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் (FIRE) கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள். ‘ஒரு டாலர் கூடக் கொடுக்க வேண்டாம். வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். தயங்கியவர்களிடம், ‘10 ஆண்டுகளில் நீங்கள் கட்டப்போகும் தொகை இவ்வளவுதான். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்களது வீட்டின் விலை 10 மடங்கு கூட உயர்ந்திருக்கும்’ என்று ஆசை காட்டினார்கள். ‘வட்டியை மட்டும் கட்டுங்கள். அசலை அப்புறம் பார்த்துக் கொள்வோம்’ என்று வலையில் வீழ்த்தினார்கள். ‘அதுவும் கஷ்டம்’ என்று மறுத்தால், ‘பாதி வட்டி மட்டும் கட்டுங்கள். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்’ என்றார்கள். வீழ்த்தப்பட்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் கறுப்பின மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர். மற்றவர்கள் வெள்ளையர்கள்.

இந்த மக்கள் யாரும் வீடு வாங்கக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது. நம் ஊரில் ‘கடன் வேண்டுமா?’ என்று தொலைபேசியில் கேட்டு நச்சரிப்பதைப் போல ‘வீடு வேண்டுமா?’ என்று நச்சரித்தார்கள். 2006 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வாங்கிய 64% பேரைத் தரகர்கள்தான் வலைவீசிப் பிடித்து வந்தனர். 20% பேர் சில்லறை வணிகக் கடைகளின் மூலம் மடக்கப்பட்டனர். இவர்கள் வாங்கும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் (appraisers) வேண்டுமென்றே வீட்டின் மதிப்பை ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டி மதிப்பிட்டுக் கடன் தொகையை அதிகமாக்கினர். வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு அறிவித்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்கப்படுத்தியது அரசு.

ரியல் எஸ்டேட் விலைகள் மேலும் ஏறத் தொடங்கின. 2004 இல் பத்து இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் சந்தை மதிப்பு, 2005 இல் 20 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்தவுடன், இன்றைய சந்தை மதிப்பை அடிப்படயாகக் கொண்டு மேலும் 7,8 இலட்சம் கடன் அவர்கள் சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது. ‘விலைகள் ஏறியபடியேதான் இருக்கும்’ என்று மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.

ஆனால் வாங்கிய கடனைக் கட்டவேண்டியவர்கள் மக்களல்லவா? வட்டியோ மீட்டர் வட்டி! அமெரிக்காவிலோ வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. உணவு, பெட்ரோல் விலை உயர்வு வேறு. மாதம் 1000 டாலர் கொடுத்து வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீட்டுக்கு 3000 டாலர் தவணை கட்ட வேண்டியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு 10, 20 மாதங்கள் கட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகள், குடும்பச் சண்டைகள், மணவிலக்குகள்.. என குடும்பங்கள் சித்திரவதைப் பட்டன. ‘ஜப்திக்கு எப்போது ஆள் வருமோ’ என்று நடுங்கினார்கள். போலீசு வரும்வரை காத்திருக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். சென்ற ஆண்டில் மட்டும் 22 இலட்சம் வீடுகள் இப்படிக் காலியாகின.

விளைவு ரியல் எஸ்டேட் சூதாடிகள் ஊதி உருவாக்கிய பலூன் வெடித்து விட்டது. 5 இலட்சம் டாலருக்கு வாங்கிய வீடு ஒரு இலட்சத்துக்கு விழுந்து விட்டது. எனினும் 5 இலட்சத்துக்கு உரிய தவணையைத்தான் கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால், தவணை கட்டிக் கொண்டிருந்தவர்களும் ‘வீடு வேண்டாம்’ என்று முடிவு செய்து வெளியேறத் தொடங்கினார்கள். சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்தது.

•••

இந்தக் கொடுக்கல் வாங்கலில், மக்கள் யாரை ஏமாற்றினார்கள்? அவர்கள் மாதத்தவணை கட்டியிருக்கின்றார்கள். முடியாத போது வீட்டைத் திருடிக் கொண்டு ஓடவில்லை. திருப்பி ஒப்படைத்து விட்டார்கள். வீடு இருக்கின்றது. ஆனால் மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ரியல் எஸ்டேட்டின் சந்தை விலையை அவர்களா நிர்ணயித்தார்கள்? சந்தை எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் அவர்களா பொறுப்பு?

ஒரு வீட்டின் உண்மையான மதிப்பை எப்படி நிர்ணயிப்பது? அந்த வீடு எந்தப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தப் பொருட்களை உருவாக்குவதற்கும், அப்பொருட்களை இணைத்து அந்த வீட்டை உருவாக்குவதற்கும் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் மதிப்புதான் அந்த வீட்டின் மதிப்பு என்கிறார் மார்க்ஸ். ஒரு மாபெரும் முதலாளித்துவ மோசடியில் வாங்கிய அடி, மார்க்சியத்தின் வாயிற்கதவுக்கு அமெரிக்க மக்களை இழுத்து வந்திருக்கின்றது.

எனினும் முதலாளித்துவச் சந்தையின் விதி இதை ஒப்புக்கொள்வதில்லையே! 10 இலட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி, ஒரு இலட்சம் தவணை கட்டி விட்டு, மீதியைக் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடம் ஒப்படைத்தால் (foreclosure), வங்கி அந்த வீட்டை ஏலம் விடும். தற்போது வீடு 2 இலட்சத்துக்கு ஏலம் போகின்றது என்று வைத்துக் கொண்டால், மீதி 7 இலட்சம் பாக்கியை கடன் வாங்கியவன் கட்டியாகவேண்டும். அதாவது இல்லாத வீட்டுக்கு தவணை கட்டவேண்டும். இதுதான் முதலாளித்துவ சந்தை வழங்கும் நீதி. அது மட்டுமல்ல, இவ்வாறு தவணை கட்டத் தவறுபவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும் கடன் வாங்கவோ கடன் அட்டையைப் பயன்படுத்தவோ முடியாது. சுருங்கக் கூறின் வாழவே முடியாது. இதுதான் அமெரிக்கச் சட்டம். “இந்தச் சட்டத்தைத் தளர்த்தி நிவாரணம் வழங்கு” என்று கோருகின்றார்கள் மக்கள்.

திவாலான மக்களுக்கு நிவாரணம் தர மறுக்கும் அமெரிக்க அரசு மதிப்பிழந்து போன குப்பைப் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்க 35 இலட்சம் கோடி ரூபாய் வழங்குகின்றது.

ஏன், மக்களுடைய அந்த வரிப்பணத்தை மக்களுக்கே நிவாரணமாகக் கொடுத்தால்? அப்படிக் கொடுத்தால், உலக முதலாளித்துவமே வெடித்துச் சிதறிவிடும். ஏனென்றால் அந்த வீட்டு அடமானக் கடன் பத்திரங்களில் பெரும்பகுதி இப்போது உலகத்தின் தலை மீது இறங்கிவிட்டது.

பொதுவாக, கடன் என்பது ‘கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையிலான ஒப்பந்தம்’ மட்டுமே. ஆனால் நிதி மூலதனத்தின் உலகமயமாக்கல் இந்தக் கடன் பத்திரங்களையும் உலகமயமாக்கியிருக்கின்றது.

இத்தகைய கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு சான்றிதழ் கொடுக்கும் பிரபல நிறுவனங்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த வாராக் கடன்களுக்கு ‘மிக நம்பகமான கடன்கள்’ என்று பொய் சர்டிபிகேட் கொடுத்தன. இந்த பொய் சர்டிபிகேட்டைக் காட்டி 11.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது இலட்சம் கோடி) மதிப்புள்ள ஒரு கோடி கடன் பத்திரங்களை அமெரிக்கச் சூதாடிகள் உலக நிதிச்சந்தையில் விற்று விட்டார்கள்.

பிறகு அந்தப் பத்திரங்களின் மீதும் சூதாட்டம் தொடங்கியது! ‘இந்தக் கடன் வசூலாகாவிட்டால் இழப்பீடு தருவதாக’ச் சொன்ன இன்சூரன்சு கம்பெனிகளின் காப்பீட்டுப் பத்திரங்கள், ‘ஒவ்வொரு கடனும் வருமா, வராதா என்று அவற்றின் மீது பந்தயம் கட்டிச் சூதாடிய’ டெரிவேட்டிவ்கள்.. என தலையைச் சுற்றும் அளவுக்கு விதம் விதமான சூதாட்ட உத்திகளை உருவாக்கி, ஒரு கோடி கடன்பத்திரங்களின் மீது 1000 கோடி பரிவர்த்தனைகளை (transactions) நடத்திவிட்டார்கள் வால்ஸ்ட்ரீட் சூதாடிகள்!

பறவைக் காய்ச்சலை விடவும் பரவலாக, பருவக்காற்றை விடவும் வேகமாக உலகெங்கும் பரவி யார் யார் தலையிலோ இறங்கி விட்டது இந்தக் கடன். இவற்றை முதலீடுகளாகக் கருதி வாங்கிய பிறநாட்டு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பென்சன் ஃபண்டுகள் அனைத்தும் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றன. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்காவின் திவால்!

•••

நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது! உலக முதலாளித்துவத்தின் காவலன், சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை உலகுக்கே கற்றுக்கொடுத்த பேராசிரியன், ஐ.எம்.எஃப்., உலக வங்கி முதலான நிறுவனங்களின் மூலம் ஏழை நாடுகளின் மீது ஒழுங்கை நிலைநாட்டிய வாத்தியார், ஒரு மூணுசீட்டுக்காரனை விடவும் இழிந்த போர்ஜரிப் பேர்வழி என்ற உண்மை ‘டர்ர்ர்’ என்று கிழிந்து விட்டது. ஆயினும் இது உலக முதலாளித்துவம் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பதால் கிழிசலை கோட்டுக்குள் மறைக்க முயல்கின்றது உலக முதலாளி வர்க்கம்.

35 இலட்சம் கோடி ‘மொய்’ப் பணத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கும் இந்த ‘சூதாடிகள் நல்வாழ்வுத் திட்டத்’துக்குப் பெயர், பிரச்சினைக்குரிய சொத்துக்கள் மீட்புத் திட்டடுமாம்! (Troubled Assets Recovery Programme). ஓ ‘அமெரிக்க ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கக் காசில்லை’ என்று கூறிய புஷ், சூதாட்டத்துக்கு காப்பீடு வழங்கியிருக்கின்றார். மக்களின் ஆரோக்கியத்தை விட முதலாளித்துவத்தின் ஆரோக்கியம் மேன்மையானதல்லவா?

அமெரிக்க நிதிநிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, ‘சோசலிச ரசியாவாக மாறுகின்றது அமெரிக்கா!’ என்று அச்செய்திக்கு விசமத்தனமாகத் தலைப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் நடந்திருப்பது என்ன? முதலாளிகளின் கடன்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. பொதுச்சொத்தான மக்களுடைய வரிப்பணமோ தனியார்மயமாக்கப் பட்டிருக்கின்றது. இல்லாத வீட்டுக்கு அமெரிக்க மக்கள் கடன் கட்டவேண்டும். அது நேரடிக் கொள்ளை. அப்படிக் கொள்ளையடித்தவனுக்கு அரசு கொடுக்கும் 70,000 கோடி டாலரையும் மக்கள் இனி வரியாகக் கட்டவேண்டும். இது மறைமுகக் கொள்ளை! இதைவிடப் பட்டவர்த்தனமான ஒரு பகற்கொள்ளையை யாரேனும் நடத்த முடியுமா?

முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக் கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன என்று கேட்டார் மார்க்ஸ். ‘கல்வி, மருத்துவம், போன்ற எதையும் அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கக்கூடாது’ என்ற கொள்கையை அமெரிக்காவில் அமல்படுத்தி வரும் அமெரிக்க அரசு, எழுபதாயிரம் கோடி டாலரை அமெரிக்க முதலாளிகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றதே, இது மார்க்ஸின் கூற்றுக்கு நிரூபணமே அன்றி வேறென்ன?

“தொழில், வணிகம், நிதித்துறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்தால், நாங்கள் அப்படியே அறுத்துக் கத்தை கட்டிவிடுவோம்” என்று பேசிவந்த முதலாளி வர்க்கம், இதோ வெட்கம் மானமின்றி மக்கள் சொத்தைக் கேட்டுப் பகிரங்கமாகப் பிச்சையெடுக்கின்றது. முதலாளித்துவப் பத்திரிகைகள் எனும் நாலுகால் பிராணிகள், “அரசாங்கம் தலையிட்டு மக்களது வரிப்பணத்தைக் கொடுத்து இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்” என்று சூடு சொரணையில்லாமல் எழுதுகின்றன.

யாருடைய தயவில் யார் வாழ்கின்றார்கள்? முதலாளி வர்க்கத்தின் தயவில் உழைக்கும் வர்க்கம் வாழ்ந்து வருவதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமை உங்களது கண் முன்னே நொறுங்குவது தெரியவில்லையா? தெருக்கூட்டுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள், மேசை துடைப்பவர்கள் என்று கடையரிலும் கடையராய்த் தள்ளப்பட்ட அமெரிக்கத் தொழிலாளிகள், தமது வியர்வைக் காசில் வீசியெறிந்த வரிப்பணத்தைப் பொறுக்குவதற்கு முண்டியடிப்பவர்கள் யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அட! இவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் உலகப் பணக்காரர்கள் அல்லவா?

•••

தாங்கள் அதிமேதாவிகள் என்றும், நிதிச் சந்தையின் அபாயகரமான வளைவுகளில் நிறுவனத்தைச் செலுத்தும் வல்லமை பெற்ற திறமைசாலிகள் என்றும் அதனால்தான் தாங்கள் ஆண்டுக்கு 400 கோடி, 500 கோடி சம்பளம் வாங்குவதாகவும் பீற்றிக் கொண்டிருந்தார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள். இந்த வெள்ளைக்காலர் கண்ணியவான்கள், ‘போர்ஜரி வேலை கள்ளக் கணக்கு பொய் சர்டிபிகேட் தயாரிக்கும் தொழிலில்’ ஈடுபட்டிருந்த நாலாந்தரக் கிரிமினல்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவில்லையா?

பணம், பணத்தைக் குட்டி போடுவது போலவும், அப்படித்தான் இவர்கள் உலகக் கோடீசுவரர்கள் ஆகி, உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதாகவும் இவர்கள் உலகத்துக்குச் சொல்லி வந்தார்கள். அமெரிக்க மக்களையும் அவ்வாறே நம்ப வைத்தார்கள். “ரியல் எஸ்டேட்டில் பணம் போடு, ஒன்று போட்டால் நூறு ஆகும். பங்குச் சந்தையில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம்” என்று போதையூட்டினார்கள். “எல்லோரும் உட்கார்ந்து தின்றால் உழைப்பது யார், எல்லாரும் வட்டியில் வாழ வேண்டுமென்றால், வட்டி கட்டுவது யார்?” என்ற எளிய கேள்வி கூட அந்தப் போதை மயக்கத்தில் அமெரிக்க மக்களுக்கு உறைக்கவில்லை. இன்று? இல்லாத வீட்டுக்குத் தவணை கட்டும் ஏமாளிகளாக, தனது ஆயுட்கால உழைப்பு முழுவதையும் அடகு வைத்துச் சூதாடிய தருமனாகத் தெருவில் நிற்கின்றார்கள் அமெரிக்க மக்கள்.

உற்பத்தி மென்மேலும் சமூகமயமாகி வருகின்றது, உலகமயமாகி வருகின்றது. ஒரு காரின் பல்வேறு பாகங்கள் பத்து நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் பூட்டப்படுகின்றன. ஒரு ஆயத்த ஆடையை ஒரு தையல்காரர் தைப்பதில்லை. அதுகூட 50 கைகள் மாறுகின்றது. இந்த உற்பத்தியினால் கிடைக்கும் ஆதாயமோ, ஒரு சிலர் கையில் மட்டும் குவிகின்றது. உழைப்பாளிகளின் கையில் காசில்லை. அவர்களுடைய நிகழ்கால உழைப்பை ஒட்டச் சுரண்டிவிட்டதால், கட்டப்பட்ட வீடுகளை, உற்பத்தியான பொருட்களைத் விற்பதற்காக மக்களின் எதிர்கால உழைப்பையும் இன்றைக்கே சுரண்டிவிடத் திட்டம் தீட்டி கடன் தவணை என்ற வலையில் அவர்களை வீழ்த்துகின்றது முதலாளித்துவம். ரோமானிய அடிமைகள் ஒரு ஆண்டைக்கு மட்டுமே வாழ்நாள் அடிமையாக இருந்தார்கள். அமெரிக்க மக்களோ முதலாளி வர்க்கத்துக்கே வாழ்நாள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

புதிய வீடுகளைக் கட்டினால் வாங்க ஆள் கிடையாதென்பதால் பழைய வீடுகளின் ‘மதிப்பை’ ஒன்றுக்குப் பத்தாக உயர்த்துவதன் மூலம், இரும்புப் பெட்டியில் தூங்கும் பணத்தை (மூலதனத்தை) வட்டிக்கு விட்டு சம்பாதிக்க முனைந்தார்கள் அமெரிக்க முதலாளிகள். இதுதான் உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் ‘பொருளாதார வளர்ச்சி’. இது வளர்ச்சி என்றால் லாட்டரிக் குலுக்கலும், மூணு சீட்டும், நாடா குத்துவதும் கூடப் பொருளாதார வளர்ச்சிதான். இதுதான் பங்குச்சந்தை! இந்த சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!

“இந்த நிதிச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையெல்லாம் அகற்றி இந்திய வங்கிகளையும், காப்பீட்டுக் கழகத்தையும், நிதி நிறுவனங்களையும் சுதந்திரமாகச் சூதாட அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உட்பட இந்திய மக்கள் அனைவரின் தாலியையும் அறுத்து, அடகு வைத்து சூதாடும் சுதந்திரம் முதலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என்ற கொள்கையைத்தான் நமது ஹார்வர்டு நிதி அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!

எந்தச் சூதாட்டத்திலும் எல்லோரும் வெற்றிபெற முடியாது. சூதாட்டத்தின் ஒழுக்கவிதிகளை மீறுவதிலிருந்து சூதாடிகளைத் தடுக்கவும் முடியாது. போலிப் பத்திரங்களைத் தயாரித்து சக சூதாடிகளுக்கே அல்வா கொடுத்து விட்டார்கள் அமெரிக்கச் சூதாடிகள். ‘உலக சூதாடிகள் மனமகிழ் மன்றத்தையே’ மூடும் நிலை வந்துவிடுமோ என்று அஞ்சித்தான் உலகநாடுகளின் அதிபர்கள் தவிக்கின்றார்கள். “வங்கிகள் திவாலானால் அரசாங்கம் பணம் தரும்” என்று அவசரம் அவசரமாக ஆஜராகின்றார்கள்.

•••

புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த ‘அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி’யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்போது வந்திருப்பது மாரடைப்பு!

அமெரிக்காவுக்கு மாரடைப்பு என்றவுடன் அகில உலகத்துக்கும் வேர்க்கின்றது. உலக முதலாளித்துவத்தின் இதயமல்லவா? இந்த இதயம் இயங்குவதற்குத் தேவையான இரத்தமாகத் தமது நிதி மூலதனத்தை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எல்லா நாடுகளும் நடுங்குகின்றன. செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அமெரிக்க அரசால் அரசுடைமை ஆக்கப்பட்ட ஃபான்னி, ஃபிரெட்டி ஆகிய இரு நிறுவனங்களில் மட்டும் சீனா, ஜப்பான், ரசியா, பெல்ஜியம், பிரிட்டன், மற்றும் வளைகுடா நாட்டு முதலாளிகள் போட்டிருக்கும் தொகை 1,50,000 கோடி டாலர். அமெரிக்க நிறுவனங்களில் பிற நாடுகள் பெருமளவில் முதலீடு செய்திருப்பது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பி சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் இயங்கி வருவதால், ‘பெரியண்ணன் சாய்ந்தால் உலகப் பொருளாதாரமே சீட்டுக்கட்டு போலச் சரிந்து விடும்’ என்று கலங்குகின்றது முதலாளித்துவ உலகம்.

‘புலியாக மாற வேண்டுமானால், புலிவாலைப் பிடிக்க வேண்டும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் வாலைப் பிடித்து வல்லரசாகி விடக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கும் கை கால்கள் நடுங்குகின்றன. மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கிப் பாய்கின்றது. திவாலான அமெரிக்க இன்சூரன்சு கம்பெனியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றது டாடாவின் இன்சூரன்சு நிறுவனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ, கவிழ்ந்து விடாமல் இருக்க சர்க்கஸ் வேலை செய்கின்றது. திருப்பூரின் பனியன் ஜட்டி ஏற்றுமதியாளர்கள் முதல், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகளின் இறக்குமதியாளர்கள் வரை அனைவரும் அமெரிக்கா நலம்பெற ஆண்டவனுக்கு நெய்விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

‘அமெரிக்க நெருக்கடிகள் இந்தியாவில் பிரதிபலிக்காது என்று எண்ணுவது முட்டாள்தனம்’ என்கிறார் பொருளாதார அறிஞர் அலுவாலியா. ‘உலகப் பொருளாதாரமே ஒரு இழையில் பின்னப்பட்டிருப்பதால், அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்’ என்று சர்வதேசிய உணர்வுடன் பேசுகின்றார் மன்மோகன் சிங். ‘மகாராட்டிரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் இந்தியர்களே’ என்ற தேசிய உணர்வை அவரிடம் வரவழைக்க ஒரு இலட்சம் விவசாயிகள் தமது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்!

அமெரிக்க வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் சரியத் தொடங்கியவுடனே, ‘அரசாங்கம் முட்டுக் கொடுத்து நிறுத்தும்’ என்று அறிவித்தார் ப. சிதம்பரம். அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கி இந்திய முதலாளிகள் நட்டமடைந்திருந்தாலோ, இந்திய வங்கிகள் கவிழ்ந்தாலோ நம்முடைய வரிப்பணத்திலிருந்து நிதியமைச்சர் அதனை ஈடுகட்டுவாராம்! அமெரிக்க முதலாளிகளின் உண்டியலில் இந்திய மக்களின் வரிப்பணமும் காணிக்கையாகச் செலுத்தப்படுமாம்!

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையால் அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென் கொரியா போன்ற பல நாடுகள் திவாலாக்கப் பட்டிருக்கின்றன. இப்போது அமெரிக்காவின் டவுசரே கிழிந்து விட்டது. ‘எசமானின் மானத்தைக் காப்பாற்ற உங்களுடைய வேட்டியை உருவித் தருவதாக’ உங்களால் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கின்றார்.

இதோ, கம்யூனிசத்தைத் தோற்கடித்த முதலாளித்துவம் வெற்றி உலா வந்து கொண்டிருக்கின்றது! மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்!

__________________________________

புதிய கலாச்சாரம், அக்’08
__________________________________

 

 1. ம் என்னத்தைச் சொல்வது,

  சேமிப்பில் போடும் பணமாவது கிடைக்குமா என்ற நிலையை அடையப் போவதாகத் தெரிகிறது.

  உலக அழிவு நெருங்குவதை இதுபோன்று நடப்பவைகள் தான் மறைமுக மாகக் காட்டுகிறது !
  🙁

 2. அமேரிக்கா என்ன இந்தியாவிலேயே நகரங்களில் வீடுகளின் வாடகையும் விளையும் ஏறிக்கொண்டே போவதைப்பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு எந்த கொள்கையை பின்பற்றினாலும் அழிவுதான்.

 3. Dear A very good analysis. Due to american and europian market collapse every where there will be big problems. When the share prices are increasing in India like anything I thought that this will go down one day and so many will become poor. It started now and the Finance Minister is saying nothing to panic. It is not panic for the politicians but too much panic for us. Given a chance I want to cast 5 Votes for this article in Tamilsh. Raghavan, Nigeria

 4. மிகவும் பயனுள்ளதாக இருந்தது சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் இனியும் நாடகமாடாமல் தேசத்திற்கு நலம் செய்ய வேண்டாம், தீங்கு செய்யாமல் இருந்தால் போதும்.

 5. மிகவும் ஆழ்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரை. எச்சரிக்கை மணி என்று கூட சொல்லலாம். வலைப்பூக்களில் இது போன்ற கட்டுரைகள் வருவதில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். இக்கட்டுரை தீர்த்து வைத்துவிட்டது.

 6. மிக நன்றாக இருந்தது. ஆனால் இன்னமும் நம்முடைய அதிபுத்திசாலிகள் (அதாங்க ஜ்.டி மகாஜனம்) இதை பற்றி எல்லாம் கவலை படாமல் நம் நாட்டின் பணவீக்கத்தை ( குறிப்பாக வீட்டுமனை வர்த்தகம்) கூட்டிக்கிட்டே போறாங்க.

  அமெரிக்காவின் இந்த நிலை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி. நாம் இன்னும் விழிக்காவிட்டால் நாமும் திவால் ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

 7. நம்ம லோக்கல் பிக்பாக்கெட் மணி , பிளேடு பக்கிரி எல்லாம் பேசாம இவனுங்ககிட்ட தொழில் கத்துக்கலாம் ,

 8. மிகவும் பயனுள்ள பதிவு. இதுவரை முதலாளித்துவம் சரி என்று வாதிட்டவர்களும் இன்று வாயடைத்து நிற்கின்றனர்..
  இன்னொரு செய்தியை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
  ஆலன் பிஷர்மன் வாஷிங்க்டன் மியுச்சுவல் (Washingon Mutual — WaMu) என்ற நிதி நிறுவனத்தில் தலைமை நிறுவன அதிகாரியாக (CEO) பணியாற்றியவர்.. இவர் அந்த நிறுவனத்தில் பொறுப்பேற்று வெறும் 17 நாட்களே வேலை செய்தார், சரியாக 18 வது நாள் அந்த நிதி நிறுவனம் திவால் ஆனது. ஆனால் அந்த 17 நாட்கள் வேலை செய்ததற்காக அவருக்கு கொடுக்கப் பட்ட சம்பளம் 20 மில்லியன் டாலர்கள், இதில் அவரின் போனசும் அடக்கம்.. ! இது ஏதோ ஒருவருக்கும் மட்டும் கிடைத்த லாட்டரி பரிசு அல்ல , இவரை போன்று பல நிதி நிறுவன அதிபர்களும் இந்த நெருக்கடி நிலையில் பல மில்லியன் டாலரை சம்பளமாக பெற்று உள்ளனர். வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பு பணத்திற்கு உத்திரவாதம் இல்லை ஆனால் அந்த வங்கி தலைமை அதிகாரிகளுக்கு போனசுடன் சம்பளம்..

 9. hi,

  Idhu enga poi mudiyumo theriyavillai.

  Oru kalathil idhu pondra nilamai nam Indiayavil varamal

  parthu kondu athai ulakuukkum solli kodukka vendum.

  Housing loan mathiri, intha Credit card pazhakkam nam indiyavilum athiham parava arampithu ullathu.

  Idhanal earpadum vali ennavendru puriyavillai ivarkalukku.

  Oru matha sambalam 30,000/-

  Selavu poha meethi 10,000/- semikkamal C.Card cheque kku ubayoha paduthukirarkal.

  Sambalam 30,000/ – aha irukkum selavu 45000/- ithu than credit card in lakshanam

 10. நல்ல பதிவு தோழர்,

  இங்கு (தம்மாம் சௌதி) இன்னும் புதிய ஜனநாயகம் கிடைக்கவில்லை. உங்கள் பதிவை படியெடுத்து இங்குள்ள தமிழர்களிடம் கொடுத்துவருகிறேன்.

  தோழமையுடன்,
  செங்கொடி

 11. அற்புதமான பதிவு!.எங்களைப் போன்ற விபரம் குறைந்தவர்களுக்கும் தெளிவாகப் புரியும் படி எழுதியுள்ளீர்கள்!.நன்றி!

 12. அற்புதமான பதிவு!.எங்களைப் போன்ற விபரம் குறைந்தவர்களுக்கும் தெளிவாகப் புரியும் படி எழுதியுள்ளீர்கள்!.நன்றி!

 13. மி்க மிக பயனுள்ள பதிவு.. என்னைப் போன்ற முழு விவரம் பெறத் துடித்தவர்களுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறீர்கள்..

  நன்றி.. நன்றி.. நன்றி.

  வாழ்க வளமுடன்

 14. கனதியான பதிவு . இந்த விடயத்தில் முழுமையாக என்ன நடந்தது என்பதை தெளிவாக பொருளாதார அறிவு முக்கியம் என்ற நிபந்தனையின்றி புரியும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள்.
  நன்றி

 15. ஏதோ முதல் முறையாக அமெரிக்காவில் பங்குச் சந்தை
  விழுந்து விட்டதாகவும், அமெரிக்காவே திவால் ஆகி
  விட்டதாகவும் எழுதப் பட்டுள்ளது இந்தப் பதிவு.
  இதை விட மோசமான பங்குச் சந்தை வீழ்ச்சிகளையும்,
  வீட்டு விலைச் சரிவுகளையும் 1929/1930 களிலும்,
  1980 களிலும் பார்த்திருக்கிறது. இந்த முறை உலகம்
  பரவிய இணையத் தொடர்பால், எல்லோருக்கும்
  தெரிகிற மாதிரி நடக்கிறது அல்லது நடப்பது
  எல்லோருக்கும் தெரிகிறது.
  இன்று அரசுடமையான பேனி மே, ப்ரடி மேக்
  போன்றவை 1930ல் நிகழ்ந்த பங்குச் சந்தை
  வீழ்ச்சியில் உருவானவை.
  எந்த ஒரு இஸமும் நீண்ட நாள் நிலைப்பதில்லை.
  கம்யூனிஸம் கொஞ்சம் சீக்கிரமாக விழுந்தது.
  இன்று முதலாளியிஸம் விழத் தொடங்கியுள்ளது.
  ஆனால், அன்றும், இன்றும், என்றும் திறமை
  படைத்தவர்கள் என்றும் பணம் பண்ணுவார்கள்.
  இத்தனை வீழ்ச்சியிலும், ஏராளமாகப் பணம்
  பண்ணியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான்
  தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், பங்குகளை
  ஷார்ட் செய்தவர்கள். நாம் எந்தக் காலத்திலும்
  பிழைப்பவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டுமே
  தவிர்த்து பங்குச் சந்தை விழுந்து விட்டது, அமெரிக்காவின்
  டவுசர் கிழிந்து விட்டது என்று பதிவு போடலாமே தவிர,
  நமது டவுசர் கிழிவது தெரியாமலே போய்விடும்.
  என்ன செய்வது, நாம் எல்லோரும் சினிமா பார்த்து,
  கார்ட்டூன் பார்த்து மகிழத்தான் லாயக்கு என்பதை
  விகடன் நாணயமும், புதிய கலாச்சாரமும் மீண்டும்
  நிரூபிக்கின்றன.

 16. Superb Article,

  But I fear the days are not far off when India will face the same fate due to

  a) People’s greediness and consumerism
  b)cunningness of the Industrialists and politicians to amass wealth with utter disregard for common man’s living rights.

  And the days are not far off when only the rich will have access to education and health in the country.

 17. மிகச்சிறந்தப் பதிவு. இந்த நிலையிலும், நிவாரணத்தை அறிவித்த அமெரிக்க அதிபரின் உரையை the last day திரைப்படத்தோடு ஒப்பிட்டு மெச்சிகிறார்கள், எங்கள் IT company அமெரிக்க தாசர்கள்.

  அறிவுடைநம்பி.
  arivudai.nambi.k@gmail.com
  http://purachikavi.blogspot.com

 18. ரங்குடு ,
  ஏராளமாகப் பணம்
  பண்ணியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான்
  தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், பங்குகளை
  ஷார்ட் செய்தவர்கள். நாம் எந்தக் காலத்திலும்
  பிழைப்பவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டுமே
  தவிர்த்து பங்குச் சந்தை விழுந்து விட்டது, அமெரிக்காவின்
  டவுசர் கிழிந்து விட்டது என்று பதிவு போடலாமே தவிர,
  நமது டவுசர் கிழிவது தெரியாமலே போய்விடும்.
  என்ன செய்வது, நாம் எல்லோரும் சினிமா பார்த்து,
  கார்ட்டூன் பார்த்து மகிழத்தான் லாயக்கு என்பதை
  விகடன் நாணயமும், புதிய கலாச்சாரமும் மீண்டும்
  நிரூபிக்கின்றன.நன்றி.

 19. மிகச் சிறந்த ஆய்வுடன் கூடிய பதிவு.

  பாராட்டுகள்!

  Suicides from financial crisis cause concern

  By KELLI KENNEDY, Associated Press Writer Tue Oct 14, 9:00 AM ET

  An out-of-work money manager in California loses a fortune and wipes out his family in a murder-suicide. A 90-year-old Ohio widow shoots herself in the chest as authorities arrive to evict her from the modest house she called home for 38 years.

  In Massachusetts, a housewife who had hidden her family’s mounting financial crisis from her husband sends a note to the mortgage company warning: “By the time you foreclose on my house, I’ll be dead.”

  Then Carlene Balderrama shot herself to death, leaving an insurance policy and a suicide note on a table.

  Across the country, authorities are becoming concerned that the nation’s financial woes could turn increasingly violent, and they are urging people to get help. In some places, mental-health hot lines are jammed, counseling services are in high demand and domestic-violence shelters are full.

  “I’ve had a number of people say that this is the thing most reminiscent of 9/11 that’s happened here since then,” said the Rev. Canon Ann Malonee, vicar at Trinity Church in the heart of New York’s financial district. “It’s that sense of having the rug pulled out from under them.”

  With nowhere else to turn, many people are calling suicide-prevention hot lines. The Samaritans of New York have seen calls rise more than 16 percent in the past year, many of them money-related. The Switchboard of Miami has recorded more than 500 foreclosure-related calls this year.

  “A lot of people are telling us they are losing everything. They’re losing their homes, they’re going into foreclosure, they’ve lost their jobs,” said Virginia Cervasio, executive director of a suicide resource enter in southwest Florida’s Lee County.

  But tragedies keep mounting:

  • In Los Angeles last week, a former money manager fatally shot his wife, three sons and his mother-in-law before killing himself.

  Karthik Rajaram, 45, left a suicide note saying he was in financial trouble and contemplated killing just himself. But he said he decided to kill his entire family because that was more honorable, police said.

  Rajaram once worked for a major accounting firm and for Sony Pictures, and he had been part-owner of a financial holding company. But he had been out of work for several months, police said.

  After the murder-suicide, police and mental-health officials in Los Angeles took the unusual step of urging people to seek help for themselves or loved ones if they feel overwhelmed by grim financial news. They said they were specifically afraid of the “copycat phenomenon.”

  “This is a perfect American family behind me that has absolutely been destroyed, apparently because of a man who just got stuck in a rabbit hole, if you will, of absolute despair,” Deputy Police Chief Michel Moore said. “It is critical to step up and recognize we are in some pretty troubled times.”

  • In Tennessee, a woman fatally shot herself last week as sheriff’s deputies went to evict her from her foreclosed home.

  Pamela Ross, 57, and her husband were fighting foreclosure on their home when sheriff’s deputies in Sevierville came to serve an eviction notice. They were across the street when they heard a gunshot and found Ross dead from a wound to the chest. The case was even more tragic because the couple had recently been granted an extra 10 days to appeal.

  • In Akron, Ohio, the 90-year-old widow who shot herself on Oct. 1 is recovering. A congressman told Addie Polk’s story on the House floor before lawmakers voted to approve a $700 billion financial rescue package. Mortgage finance company Fannie Mae dropped the foreclosure, forgave her mortgage and said she could remain in the home.

  • In Ocala, Fla., Roland Gore shot his wife and dog in March and then set fire to the couple’s home, which had been in foreclosure, before killing himself. His case was one of several in which people killed spouses or pets, destroyed property or attacked police before taking their own lives.

  “The financial stress builds up to the point the person feels they can’t go on, and the person believes their family is better off dead than left without a financial support,” said Kristen Rand, legislative director of the Washington D.C.-based Violence Policy Center.

  Dr. Edward Charlesworth, a clinical psychologist in Houston, said the current crisis is breeding a sense of chronic anxiety among people who feel helpless and panic-stricken, as well as angry that their government has let them down.

  “They feel like in this great society that we live in we should have more protection for the individuals rather than just the corporation,” he said.

  It’s not yet clear there is a statistical link between suicides and the financial downturn since there is generally a two-year lag in national suicide figures. But historically, suicides increase in times of economic hardship. And the current financial crisis is already being called the worst since the Great Depression.

  Rising mortgage defaults and falling home values are at the heart of it. More than 4 million Americans were at least one month behind on their mortgages at the end of June, according to the Mortgage Bankers Association.

  A record 500,000 had entered the foreclosure process. And that trend is expected to continue through next year, despite the current programs from the government and the lending industry to refinance delinquent homeowners into more affordable loans.

  Counselors at Catholic Charities USA report seeing a “significant increase” in the need for housing counseling.

  One counselor said half of her clients were on some form of antidepressant or anti-anxiety medication. The agency has seen a decrease in overall funding, but it has expanded foreclosure counseling and received nearly $2 million for such services in late 2007.

  Adding to financially tense households is an air of secrecy. Experts said it’s common for one spouse to blame the other for their financial mess or to hide it entirely, as Balderrama did.

  After falling 3 1/2 years behind in payments, the Taunton, Mass., housewife had been intercepting letters from the mortgage company and shredding them before her husband saw them. She tried to refinance but was declined.

  In July, on the day the house was to be auctioned, she faxed the note to the mortgage company. Then the 52-year-old walked outside, shot her three beloved cats and then herself with her husband’s rifle.

  Notes left on the table revealed months of planning. She’d picked out her funeral home, laid out the insurance policy and left a note saying, “pay off the house with the insurance money.”

  “She put in her suicide note that it got overwhelming for her,” said her husband, John Balderrama. “Apparently she didn’t have anyone to talk to. She didn’t come to me. I don’t know why. There’s gotta be some help out there for people that are hurting, (something better) than to see somebody lose a life over a stupid house.”

  http://news.yahoo.com/s/ap/20081014/ap_on_re_us/financial_crisis_violence

  ___

  Associated Press Writers P. Solomon Banda in Denver, Joann Loviglio in Philadelphia, Juanita Cousins in Atlanta, Samantha Gross in New York and John Rogers in Los Angeles contributed to this report.

 20. //சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 100 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு.//

  ROTFL :)))

  அடிச்சு விடறதுக்கும் ஒரு அளவில்லையா?

  கட்டுரை புதிய கலாச்சாரம் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எழுதியவர் யாரோ?

 21. அமெரிக்கா ஆட்டம் கண்டிருக்கிறது. அது மீண்டுவிடும். டவுசர் கிழிந்து காணமல் போனது உங்களின் புரட்சிகர தத்துவம்தான். மாவோவின் சீனம் பெயரளவில் சோசலிசம் நடைமுறையில் முதலாளித்துவம் என்று இருந்தால், நேபாளத்தில் உள்ள புதிய அரசோ
  விப்ரோவையும், இன்போஸிசையும் வருக
  முதலீடு செய்க என்று அழைக்கிறது.
  உலக வங்கி, ஐரோப்பாவுடன் பேசி உதவி
  கோருகிறது. நீங்கள் இந்திய அரசை வெறுத்தி
  வசை பாடினாலும் நேபாள அரசு இந்திய அரசை மிக்க நட்புடன் உறவு கொண்டாடுகிறது.அங்கென்ன சோசலிச பொருளாதாரமா வரப் போகிறது. உலக வங்கி கடனுடன் பிரசந்தா பொருளாதார சீரமைப்பு
  செய்வார். அப்போது புஜ/புக வில் என்ன
  எழுதுவீர்கள்?.
  மருதையன்கள் போகாத ஊருக்கு
  வழி சொல்ல பத்திரிகை நடத்துகிறார்கள்.
  புஜ/புக முன் அட்டையில் தொடங்கி
  பின் அட்டையில் முடிந்துவிடும் இவர்களின்
  புரட்சி. இவர்கள் அமெரிக்கா திவால்
  என்று எழுதுகிறார்கள். டவுசர் கிழிஞ்சு
  தொங்கறவன் வேட்டி கட்டிருப்பவனைப்
  பார்த்து வேட்டியை ஏன் தலையில கட்டலைன்னு, இடுப்பில வேட்டை கட்டாதே மடையான்னு கேட்டா எப்படி
  இருக்கும். அப்படித்தான் இருக்கு
  வினவு எழுதறதும். அவர் எடுத்து
  போடற கட்டுரைகளும்.

 22. areader
  தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

  //சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 100 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு//
  என்பது தவறு.
  அது 10 என இருக்க வேண்டும்.

  திருத்தப்பட்டது
  நன்றி

  வினவு

 23. ரங்குடு ,
  /நாம் எந்தக் காலத்திலும்
  பிழைப்பவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டுமே/
  பிழைப்பவர்கள் என்பது ரங்குடுவின் அகராதியில் ஏமாற்றுபவர்களை குறிக்கும்.

  periyar critic,
  பெரியார் பெயர் வைத்துக் கொண்டால் பத்தாது. நேபாளத்தில் என்ன வகையான அரசு இருக்கிறது. சோசலிசம் என்றால் என்ன ? படிக்கனும். சரியா. போ கண்ணு போய் படிச்சுட்டு வா
  …..
  வரலாறு எப்போதும் முன்னேறித்தான் செல்லும்,அப்பொழுது தெரியும், டவுசர் கிழிந்து காணமல் போனது யாருக்கு என்று

 24. All the bankers, software engineers, share holders, employees who worked in bankrupted banks are fraud. What a statement?- Typical communist.

  U r saying about the bankrupted countries(Even though its false statement), wht about your own communist country russia? It had bankrupted because of the so called communism.

  So many capitalism countries in Europe, America and even USA r doing far good if compared with bankrupted russia in 1990.

  The cruel statement in your article is making the false fear in indian investors by saying “ICICI is doing circus for survival” and “Tata AIG is going bankruptcy”. The RBI declare it with every facts. But you make these kind of statements without proper facts.I think u intelligent bloggers can have a source above the RBI governor. (u know ICICI has filed a case against the persons who make rumors about icici. I think i found the culprit 🙂 ).

 25. ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000

  I have liquid cash of 800K, I want to buy some houses ….Please let me know few 2 bedrom houses…..I am challanging you….

  Otherwise accept you are fool…

 26. இன்னாபா ”யூ.எஸ் ரெஸிடென்டு”
  அமெரிக்கா கப்பு ஊரே நாறுதே உனக்கு உரைக்கல?
  எப்படி உரைக்கும் நீதான் அந்த டவுசருக்குள்ளாரவே மூக்க வச்சுகிணு இருந்த ஆளாச்சே…
  உனக்கெல்லாம் புரோக்கர் வேல பாக்க முடியாது
  ஏரியாவ சொல்றேன் நீயே அங்க்குற இஸ்திரி கடேலயோ, அண்ணாச்சி கடேலயோ விசாரிச்சு தெரிஞ்சுக

  இந்தா புடி லிங்கு…

  http://www.guardian.co.uk/business/2008/sep/26/useconomy.usa

  http://www.hindu.com/2008/09/27/stories/2008092756002200.htm

  இத்தையும் புட்சுகோ

  http://www.msnbc.msn.com/id/26988571/

  இப்போ உன் டவுசர் கீஞ்சுதா…
  உன் வேல காலியாவும் போது இந்த கீஞ்ச டவுசர போட்டுகினு நம்மூர் பக்கம் வந்துராத
  நாய் பாத்தா உடாது.

 27. மிஸ்டர் அனதர் ரீடர்,

  இந்த கட்டுரைய படிச்சு பயத்துல உன் டவுசர் அவுந்த்த புரிஞ்சுக்க முடியுது.

  // திவாலான அமெரிக்க இன்சூரன்சு கம்பெனியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றது டாடாவின் இன்சூரன்சு நிறுவனம்.
  ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ, கவிழ்ந்து விடாமல் இருக்க சர்க்கஸ் வேலை செய்கின்றது. //

  இது நிஜம்மா நீ வேணுண்ணா ரதன் டாடாவுக்கோ இல்ல அவுங்க தாத்தாவுக்கோ போன் பண்ணி பாரேன்…லைன் கிடைக்கலன்னா
  இந்த லிங்க பாரு
  http://www.tata-aig-life.com/
  http://www.icicibank.com/
  …அதுல இவனுங்க டர்ரியலாயி நான் திவாலாவுல,
  அது அந்த ரிசர்வு பேங்கு மாரியாத்தா மேல சத்தியம்னு பினாத்தியிருக்கானுங்க.

  உனக்கு பயமாயிருந்தா கண்ண மூடிக்க…
  நீ கண்ண மூடினாலும் ஒலகம் இருளாது

 28. பெரியார் கிர்ர்ர்ரிடிக்கு

  ரசியாவுல, சீனாவுலெல்லாம் கம்யூனிசம் கவுந்த்து நிசம்தான். அத நிமுத்துற கவல உணக்கு வேணாம். நாங்க பாத்துக்கறோம்

  உங்க மேட்டர பேசுங்க…
  ஏதோ நீங்க கவுந்தீங்க நஸ்டமாச்சு கடன உடன வாங்கி சமாளிச்சா ஏன் உங்கள பத்தி எழுதனும்.

  ஆட்டம் கண்டிருச்சாம் அது மீண்டுருமாம்
  எப்படி மீண்டு வரும்….அத பத்தி நீங்க பேச மாட்டீங்க…

  பிச்ச எடுத்து அதுவும் உழைக்குற மக்கள் வரிப்பணத்துல பிச்ச எடுத்து மீண்டு வர வேண்டிய நெலமையில் இருக்குற உங்களுக்கு இவ்வளவு சவடாலா?

  கந்து வட்டிக்கு கடன வாங்குன எங்க விவசாயி பூச்சி மருந்த குடிச்சுட்டு சாவரான்…அடுத்தவன் காச பொறுக்கி தின்னுட்டு தினாவெட்டா பேச உணக்கு வெக்கமா இல்ல

  கட்டுரையில எழுதியிருக்குற விசயத்துக்கு பதில சொல்லு. முடியலன்ன முன்னாடியும் பின்னாடியும் பொத்திகிட்டு போ.

  இப்படி அறிவு நாணயம் இல்லாம பதிவுல போடாத விசயத்த பத்தி வாந்தி எடுத்துட்டு ஒளிஞ்சுக்க வேண்டியது

  த்தூ. .இதுவும ஒரு பொழப்பா

 29. //அமெரிக்க நிதியமைச்சர் பால்சன்.//

  Henry Paulson is not finance minister. He is the Secretary of the Treasury

 30. Communism failed. China is not communist anymore. It is a totalitarian country (as with any communist state that existed before).

  Socialism is failing because it was surviving due to Captialism (as you can see in Europe).

  Let the experiment continue to find a new “ism”. But, do not forget that Socialism or Communism is not a solution for failed Capitalism.

  Capitalism, Communism or Socialism are good in theory but not fit for implementation because they have not factored human behaviour in their systems.

  Fundamental flaw is “Centralised Federalism”. A new “ism” to be useful must take this and human behaviour into account.