தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீக அன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும். கட்டுரை குறித்த கருத்துக்களையும் மறவாமல் தெரிவிக்கவும். நன்றியுடன் வினவு.
கடவுள் பிடிபட்டார்
நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை ‘வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு’ என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.
இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் ‘கடவுளை’ அப்புறப்படுத்த முடியவில்லை.
எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. “நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!” “என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?” ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.
புறவய உலகத்தின் ‘தோற்றம்’ குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் ‘உணர்வு’ குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் ‘கண்டு’, பிறகு அதனை ‘விண்டு’ உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
•••
முதலில் ‘படைப்பு ரகசியம்’ பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hadron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.
“இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்” என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், “உலகம் அழியுமா, அழியாதா?” என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் ‘அழியாது’ என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big Bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (Mass and Weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.
புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் ‘ஹிக்ஸ் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (Mass) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை ‘கடவுள் துகள்’ (God Particle) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.
களிமண்ணை உருட்டினால் கடவுள்!
கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!
‘ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே’ என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (Collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் ‘கடவுள் துகளை’த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், “இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?” என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது ‘பிரம்ம ரகசியத்தை’க் கண்டறிந்து விட முடியும்.
ஒருவேளை தோற்றுவிட்டால்? “40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!” என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.
“எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்” என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், ‘அவிசுவாசிகள்’ உருவாக்கிய கணினியின் வழியே, ‘தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி’யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?
வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் ‘காட்சி’ தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் ‘இறங்குகிறார்’ ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.
“மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ‘ஆன்மீக அனுபவங்கள்’ ஏற்படுகின்றன” என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.
இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, ‘தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக’க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் ‘கண்ட’ காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் ‘அனுபவத்தை’ ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.
“செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் ‘ஏசு அவர் முன் ‘தோன்றத்’ தொடங்கினார்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய ‘இறையருள்’ கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய ‘உள்காயம்’ ஏற்படக்கூடும்.
“இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.
“ஒருவேளை மூளையில் கடவுள் ‘குடியிருக்கும்’ இந்தப் பகுதியை (God Spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?” என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. “கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?” என்று அவர்களை ‘சமாதானப்படுத்தினார்’ ராமச்சந்திரன். அப்படியொரு ‘ஆன்மீக ஆன்டனா’வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.
கோவில் கனெக்சன் இல்லாமலேயே
கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!
காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் ‘கவச’ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.
டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI Scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், ‘அந்நிய பாஷை’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.
தியானத்தில் ஈடுபடும்போது, ‘தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற ‘பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.
இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் ‘அமானுஷ்யமானவை’ என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட ‘ஆன்மீக அனுபவங்களை’த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.
மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று ‘ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், ‘இறை நரம்பியல்’ (Neuro Theology) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.
எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. “மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத ‘பரவச உணர்வுகளோ’, வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது” என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.
ஏசு இறங்கினாரா?
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!
மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.
பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, “ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.
பொருளும் சிந்தனையும்:
புரட்சி எனும் ஹைட்ரான் கொலைடர்!
இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து ‘கடவுளை’ அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் ‘சோதனையும்’ ஒப்பீட்டளவில் கடினமானவை.
உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.
எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், ‘கல்விச் சுதந்திரம்’ என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.
‘டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்’ என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.
பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).
விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். “குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?” என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.
“அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.
புதிய கலாச்சாரம், அக்’08 இதழிலிருந்து (அனுமதியுடன்)
temporal lobe dysfuntion will cause delusions and hallucinations. that is true. but god is more an abstraction than an experience, a convenient form to contemplate.
டெம்பரல் லோப் எனும் மூளையின் ஒரு பகுதி தான் ஹாலூசினேஷன் எனும் புலன்குழப்பங்களுக்கு ஆதாரம் என்பது பல ஆண்டுகளாகத் தெரிந்த செய்தி, ராமக்ரிஷ்ணர் மட்டுமல்ல ஜோன் ஆஃப் ஆர்க் கூட இப்படிப்பட்ட மிதவலிப்பு நோயினால் தான் காட்சிகளைக் கண்டார்கள் என்றும் பலர் கூறியுள்ளனர். இங்கே பிரச்சினை கடவுல் என்பதைப் பரிசீலிப்பதே பாவம் என்ற முரட்டுப்பிடிவாதம் தான்.
கடவுல் அனுபவம் என்ரறால் அது மூளையின் செயல்பாடு தான். அதுவே அரூப கோட்பாடாக இருந்தால் அஹ்டு கற்றுக்கொண்ட செய்தியின் பதிவாகவே மூளையில் இருக்கும். கற்றவை காலப்போக்கில் மாறுவதும் உண்டு.
நல்ல பதிவு, இது குறித்து நிறைய பேர் பேச வேண்டும், இதற்காகவே தமிலிஷ் மூலம் இதைப் ப்திவு செய்கிறேன்.
அருமையான பதிவு. நிறைய அறிவியல் விவரங்களை தெரிந்து கொண்டேன். புரட்சிகர வாழ்த்துக்கள்.
நக்கலும்,நையாண்டியுமாக பட்டையைக்கிளப்புகிறது கட்டுரை.
//பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது//
சீனா போன்ற நாடுகள் இவர்கள் இடத்தைப் பிடிக்கும் போது இவர்கள் வேறொரு இடத்தை நாடுகின்றனர்.அது வீழ்ச்சியின் ஆரம்ப இடமாக இருக்கலாம்.இன்னும் சில பத்து வருடங்களில் இங்கிலாந்துக்கு மார்க்சியம் தேவைப்படலாம்.
அருமையான கட்டுரை. இந்த கட்டுரை மதவாதிகளின் முகத் திரையை கிழித்து எரிகிறது.
இன்றைய அறிவியல் உலகிலும் கண்ணுக்கு தெரியாத எதோ ஒரு சக்தி இருப்பதாக நம்பிக் கொண்டு இருக்கும் நபர்களை கூட நாம் அறியாமையில் செய்கிறார்கள் என்று ஒதுக்கி விடலாம்.. ஆனால் போலியான , மிகவும் மலிவான தந்திரங்களை செய்யும் சாய் பாபா போன்ற வில்லன்களை நம்பும் கூட்டத்தை என்ன சொல்வதென்று தெரியவில்லை.. அதை விட சிறந்த தந்திர வித்தைகளை பல பகுத்தறிவாளிகள் செய்து காட்டிய பின்பும்.. தன்னை கடவுள் என்று அழைக்கும் இந்த போலிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும்..
ஒவ்வொரு முறை புதிய கலாசாரம், புதிய ஜனநாயகத்தை படிக்கும் பொழுது, மிக தெளிவான அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கற்றுக் கொள்கிறோம்.. என்னை போன்ற வெளி நாட்டில் வசிக்கும் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த கட்டுரைகள் மிக மிக உதவியாய் உள்ளன. உங்கள் உழைப்பிற்கு எங்களது நன்றிகள் பல.
நல்ல பதிவு தோழர்,
கடவுள் உண்டா இல்லையா என்பதில் ஐயமே இல்லை. ஆனால் மக்கள் கடவுளை பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறார்களா இல்லையா? என்பதே பிரச்சனை. கடவுளை பரிசீலனை செய்ய இந்த முதலாளித்துவ சமூகம் தடையாக இருப்பதுடன் கடவுளின் இருப்பை ஏற்பதற்கு ஊக்கப்படுத்தவும் செய்கிறது. புரட்சியின் மூலம் சமூக மற்றம் ஏற்படும் போது, காயத்தில் இருக்கும் காய்ந்த தோலைப்போல கடவுளும் மதங்களும் உதிர்ந்து விடும் என்பது நிச்சயம்.
தோழர் பகத் அவர்களுக்கு,
நானும் வெளிநாட்டில் தான் இருக்கிறேன். எந்த நாட்டில் எந்த இடத்தில் என்பன போன்ற விபரங்களுடன் மின்னஞ்சல் செய்யுங்களேன். இயன்றால் பேசிக்கொள்வோம். என்னுடைய மின்னஞ்சல் முகவரி இது. உங்களிடமிருந்து மின்னஞ்சலை எதிர்பார்க்கிறேன், அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள்.
senkodithamizhan@gmail.com
தோழமையுடன்,
செங்கொடி
வினவு அவர்களுக்கு,
எனக்கு ஒரு சந்தேகம்..
வினவு என்பது யார்? ஒரு ஆணா.. பெண்ணா.. ஒரு தனி மனிதனா?? இளைஞரா?? இல்லை அனுபவமிக்க முதியவர் அவர்களா?? இல்லையெனில் ஒரு குழுவா?? இது எதுவுமே எனக்கு தெரியாது… நான் இந்த பதிவுதளங்களுக்கு புதியவன்….
தமிழ் எழுத்துகளுடன் வரும் மின்னஞ்சல்கள்.. இணைய தளங்கள் …இவைகளை பார்க்கும் போது ஒரு சந்தோஷம் மனத்தில் தோன்றும்.. அதன் விளைவாக தான் நான் இந்த வினவு தளத்தையும் பார்க்க நேர்ந்தது… ஆகவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பொழுது போக்காக சில பதிவுகளை படித்திருக்கிறேன்….
ஆரம்பம் முதலே தங்களின் தமிழ்எழுத்து ஆளுமையால் கவரப்பட்டவனும் கூட…
வினவு யாராக இருந்தாலும் எனது கருத்துகளுக்கு விளக்கம் கேட்க விழைகிறேன்..
நீங்கள் எழுதும் உள்ளூர் அரசியல்.. இந்திய அரசியல்.. உலக அரசியல்.. இவற்றிற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்று ஆராய நான் முற்படவில்லை… அதில் எனக்கு அனுபவாமோ.. அதிக நாட்டாமோ இல்லை… அரசியல் பற்றிய தங்களது கருத்துகள் உண்மை என்றே நான் நம்புகிறேன்…
ஆயினும், அநேகமாக எல்லா பதிவுகளிலும்.. இவர்கள் இப்படி இருக்கிறார்கள்.. அவர்கள் அப்படி இருக்கிறார்கள்.. அது இப்படி.. இது அப்படி… என்று எல்லாவற்றிலும் குற்றம் / குறை மட்டும் தான் சொல்கிறீர்களே தவிர.. இதை சரி செய்ய / மாற்ற (மக்களாகிய) நாம் எல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று இது வரை எதிலும் சொல்லவே இல்லை…
நீங்கள் பக்கம் பக்கமாக கூறிய எல்லாவற்றையும் பாமரன் கூட சொல்லுவான் ஒரே வரியில்…
“ஊரில் / நாட்டில் / உலகில் எதுவும் சரியில்லை”….
நான் என்ன சொல்ல வர்றேன்னா… தவறுகள் நடப்பது எல்லோருக்கும் தெரிந்ததே..
நமக்கு தெரிய வேண்டியது எல்லாம்.. அந்த தவறுகளை எவ்வாறு தட்டி கேட்பது, நிறுத்துவது.. எவ்வாறு சரி செய்வது என்பதே..
அதற்கு, சினிமாததனமில்லாத, நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வழிமுறைகள் இருந்தால் இணையதள வாசகர்களுக்கு எடுத்து கூறலாம்.
அதை விடுத்து, சும்மா கண்ணில் கண்டதை எல்லாம் குறை கூறினாள் மட்டும் போதாது.. யாருக்கும் எந்த பயனும் இல்லை..
அடுத்ததாக…
வினவு அவர்களின் கடவுள் / மத சம்பந்தமான சில பதிவுகளையும் படிக்க நேர்ந்தது. கடவுள் இருக்கிறாரா.. இல்லையா என விளக்க கட்டுரை எல்லாம் எழுதி இருந்தீர்கள். அதில், கடவுள் இல்லை.. இருக்கவும் கூடாது என்ற உங்கள் எண்ணம் தெளிவாக பிரதிபலித்தது.
கடவுள் பெயரை சொல்லி ஊரை ஏய்ய்க்கும் ஆட்கள் இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் அதற்காக கடவுளே இல்லை என்பது உங்களது எத்தனையாவது அறிவில் உதித்தது??
ஏசுநாதர் அற்புதங்களே செய்யவில்லை என்றும்… அன்னை தெரஸா முதல் ஆள்போன்சா வரை யாருமே புனிதர்களாக தகுதியானவர்கள் அல்ல என்றும், அதிலும் முதலாளித்துவ ஆதிக்க அரசியல் இருப்பதாகவும் சொல்கிறீர்கள்… அதே போல் கோவில் கருவறையில் இருப்பது வெறும் கல் தான் என்றும், அது பூஜை செய்பவர்களுக்கும் தெரியும் என்றும் கூறுகிறீர்கள்…
உங்கள் கூற்று படி, இதையெல்லாம் அப்படியே நம்பாமல் நன்கு ஆராய வேண்டும் என்றும் சொன்னீர்கள்…
எனக்கு தெரிய வேண்டியது என்னவென்றால்… நீங்கள் யார்?? உங்கள் தாய் தந்தை யார்? இன்னார் தான் உங்கள் தந்தை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? ஒரு வேலை, உங்கள் அன்னை இன்னார் தான் தந்தை என்று உங்களுக்கு அடையாளம் காட்டினாலும், நீங்கள் எப்படி நம்பலாம்? அதற்கு ஏதாவது ஆதாரம் கேட்டீர்களா உங்கள் தாயிடம்?
உங்கள் தாயும் தந்தையும் நீங்கள் உருவாக காரணமாக இருந்த நிகழ்வுக்கு ஏதேனும் ஆதாரம் இருந்ததா என்று என்றாவது நீங்கள் ஆராய்ந்ததுண்டா??
எந்த ஒரு பிள்ளைக்கும் இது தேவை இல்லை.. அதற்கு காரணம் “நம்பிக்கை”. நீங்கள் உங்கள் பெற்றோர் மேல் கொண்ட நம்பிக்கை…( இது தவறு எனில், நீங்கள் உங்கள் பிறப்பிற்கான ஆதாரம் வைத்திருந்தால் உங்கள் வாசகர்களுக்கு வெளியிடலாம்.)
அதேபோல் தான்.. எல்லா மதத்தினறுக்கும், அவரவர் மதம், தெய்வம் மேல் உள்ள நம்பிக்கை…. உங்களது திறமையான எழுத்துகள் அந்த நம்பிக்கையை பொய்யக்கவோ, அவர்கள் மனம் புண்படும் படி கருத்து கூறுவதோ முற்றிலும் தவறு.. உங்களுக்கு தகுதியும் இல்லை… அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு !! அவரவர் கடவுள் அவரவர்க்கு !!!
உளவியல் அறிவியல் ரீதியாக பார்த்தாலும், “எனக்கு நம்பிக்கை இருக்கு, இன்னார் இன்னார் துணை எனக்கு இருக்கு, என்னால் முடியும்” என்று நினைக்கும் ஒருவனால் அந்த காரியத்தை செய்து முடிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.. அந்த நம்பிக்கையை, அந்த மூன்றாவது ஆளை நீங்கள் ஏன் தெய்வ சக்தி என்று எடுத்து கொள்ள கூடாது?? அது ஏன் அல்லா, சிவன், முருகன், ஏசுநாதர், புத்தர், இவர்களில் ஒருவராக இருக்க கூடாது??
ஆக, கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வீண் பேச்சை விடுத்து, கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் கயவர்களை களைய வழி காணுங்கள்.
எதற்கெடுத்தாலும் மக்களை குறை சொல்வதை விடுத்து, மக்கள் என்ன செய்தால் நாடு நலம் பெரும் என்று சிந்தித்து எழுதுங்கள்.
இதை பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னொட்டம் என்று சப்பைகட்டு கட்டி தப்பிக்காமல், தவறாமல் இந்த கருத்துகளையும் உங்கள் வலையில் வெளியிட்டு பதிலளிக்கவும்.
இந்த கருத்துகள் உங்களை புண்படுத்துவதற்காக அல்ல.. உங்கள் எழுத்துகள் மற்றவர் மனத்தை புண்படுத்த கூடாது என்பதற்காக !!
பாராட்டுதலுக்குறிய உங்கள் கண்ணியமான எழுத்து பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.
வாழ்க தமிழ் !!
JP
வினாவில் எதுவும் சரியில்லை என்பதை விட ஏன் சரியில்லை என்பது அழுத்தம் திருத்தமாக சுட்டி காட்டப்படுகிறது. தவறு எதனால் என்பதே தவறை நிவர்த்தி செய்ய வழி வகுக்கும்.
///நீங்கள் யார்?? உங்கள் தாய் தந்தை யார்? இன்னார் தான் உங்கள் தந்தை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? ஒரு வேலை, உங்கள் அன்னை இன்னார் தான் தந்தை என்று உங்களுக்கு அடையாளம் காட்டினாலும், நீங்கள் எப்படி நம்பலாம்? அதற்கு ஏதாவது ஆதாரம் கேட்டீர்களா உங்கள் தாயிடம்?///
இந்த வாதத்தை முன்பே கேட்டுள்ளேன். இதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சமந்தம். சமந்தம் உண்டு என்றால் அப்பன் பெயர் தெரியாதவர் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாக வேண்டுமா?
உங்கள் கேள்விக்காக சொல்கிறேன் : நான் என் தாயிடம் ஆதாரம் கேட்கவில்லை. என் தந்தை என் மீது செலுத்திய அன்பினால் தெரிந்து கொண்டேன். அவர் என் ‘biological’ தந்தை இல்லை என்றாலும் கவலையில்லை.
மீண்டும் கேட்கிறேன் அப்பன் பேருக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் என்னப்பா லிங்க்.
//ஆக, கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வீண் பேச்சை விடுத்து, கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் கயவர்களை களைய வழி காணுங்கள்.//
கடவுளே இல்லை என்றாகிவிட்டால் அந்த கயவர்கள் ஒழிந்து விடுவார்கள் அல்லவா? ஏமாறவன் உஷார் ஆயிட்டா எமத்றவன் இருக்க மாட்டான் பாருங்க. வேற எதுவும் இல்லை வினவோ இல்ல மற்றும் பலரோ கடவுள் இல்லை என்று சொல்வதற்கு.
நம்மை மீறி ஒரு சக்தி இருக்கு என்ற நினைவு எப்பொழுது எழுகிறது:
இக்கனத்தில் மழைப் பெய்யும் என்று விவாசாயிக்குத் தெரிந்தால்…அவன் ஏன் சூரியனுக்கும் காக்கைக்கும் எறுதுக்கும் கடா வெட்டி பொங்க வெக்க போறான்
தொழில் செய்யும் சிறு தொழிலாளர்களுக்கு சொன்ன வார்த்தைக் காப்பாற்றினால்…அவன் ஏன் எண் ஜோசியம் பாக்கப் போறான்.
இன்று வண்டியில் செல்லும் பாதையில் அடி படாமல் செல்லுவோமா…அவன் இன்றைய ராசி பலன படிக்கப் போறான்.
மருத்துவர் ஆப்பரேஷன் செய்தாலும் உயிர் பிழைப்பானா…அவள் ஏன் ஒத்த ரூவாய முடிஞ்சுக்கப் போறா
இது மூட நம்பிக்கையா இல்லை நம்பிக்கையா ?
murali all the actions that you mention are based on fear. fear and love cannot co-exist. religion is supposed to be love of god.
Dr. Rudhran –
You see it as fear, I see it as probability (which is maths). I believe probability of hope is directly proportional to fear.
Also a rational action like driving on road by following all the rules still does not guarantee a 100% safe drive because our life depends on whether the signal works, the bridge safety, the care shown by fellow drivers etc…
My problem is science cannot arrest faith or god as the title suggests. I would be more than happy if the world was that simple enough. I need not question myself each time “Is (s)he there or not?”
Science cannot be applied to free will and it is in long way to cross that bridge. So, arresting god or faith or belief or hope is out of question.
What we talk as superstition today will slowly be eliminated by the society but what we think is belief today can slowly become superstition tomorrow. I’m pretty sure LHC will raise more questions than find answers.
I cannot understand why fear and love cannot go together. Is fear of god called Bakthi which is also called love of god.
Unless we live in a utopian world I would not say religion is only love of god. I would say religion/faith/belief/ is a way of life and hope, when your rational actions have little rational output like the examples I showed in my previous comment.
What should be in question: Are symbols or images or certain practices followed by a belief system is causing harm to another person? If yes, then eliminate it.
Trying to show an “intellectual approach” on belief system shows how little history people (esp. blog author) are willing to dig in.
I hope, I’m trying to make the context of my response clear.
murali, i am not sure whether i can continue a discussion with you in somebody else’s blog, but i feel i have to answer you.
so what is the probability of failure- the fear that is exploited by half-baked astrology or a statistical significance? regarding statistics, i suggest you read a book by TALEB titled THE BLACK SWAN.
in love you will afraid of something that affects love never of love itself. that is you can fear an theist proving your god an illusion but you can never be afraid `of` god. that’s why love=bhakthi cannot co-exist with fear
religion is not a way of life. it is an unconditional acceptance of a set of rules prescribed to follow a belief.this is not the way of free will.
if god cannot withstand intellectual scrutiny, then it cannot be omnipotent.
and what i gather from the article is that it says emotional experiences ascribed to divine interactions are embedded reactions in the brain. this is a fact. all experiences are embedded in the brain and formulated through the learnt language as feelings. this way one can identify the reason why i feel nice about a certain figure and get irritated about another. a rational examination would not only make me an atheist but may also turn me into an even more staunch believer.
Good One.
Dr Rudhran –
I guess vinavu does not have issues for us to have a discussion here. We have had much longer discussions in this blog.
Though I’m not going to answer or refute point by point, I would like to take the gist of your comment as: It is important to question the omni-present god.
On reading the first 2 paragraphs of the blog, it is beyond questioning and the title clearly suggests that science can be the answer to god. All I’m saying is science has enough holes and gaps and it cannot be an alternative to “mei gnyanam” or hope and belief of an higher power.
If you say astrology as half baked, what about science? There are enough things in science that cannot be answer today. And the answers that are found tomorrow [by science] will raise even more questions.
Since the statistical chances of science is more a patient prefers surgery while probability of deterministic hope is higher in religion hence they end up praying.
Praying is done in addition to science and that cannot be called superstition. What is wrong in getting that feeling of being safe? Which the blog author has clearly refuted in the very first paragraph.
//…கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!//
On thoughts about seeing god – I know it is not true and I agree that it is the brain that makes a person feel that way.
I do agree questioning again and again about god might make the rational examiner become a more staunch believer or an atheist, depending on the answer they want to look at.
P.S.
1. Free will applies to religion as omni-present divine. Though free will in religion does not apply to individual.
2. The readings I have done about religion says that is it a way of life and not just as a set of rules.
i do not take people for granted . so vinavu has to allow me to have a discussion with you. i wish the difference between religion and religousness is understood. whatever is half-baked- athe the given point of question in time is not science. and science subjects itself to scrutiny. scientific reasoning is the only way to approach things…after all the brahmasutra was supposed to be a scientific document of its times!
i shall not continue this discussion here murali…but am willing to debate the issue anytime.
கடவுள் பற்றிய கட்டுரை அபாரம். புரோட்டான்களை மோதவிட்டு பிரபஞசத்தேற்றத்தை அறிய முயலும்போது ஒரு குட்டிப் பிரபஞ்சத்தையே மனிதன் ஆக்கி விட்டாலும் ஆச்ரியப் படுவதற்கில்லை. முடிவில் மனிதன் குட்டிப் பிரபஞசத்தை ஆக்கியமாதிரி இந்தப் பெரிய பிரபஞசத்தையும் தோற்றுவிக் ஏதோ ஒரு சக்தி முனைப்புக் கொண்டிருக்கவேண்டுமென்னும் முடிவுக்கு வந்துவிடவேண்டியேற்பட்டுவிடுமோவென்று கவலையாயிருக்கிறது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பiதை ஆய்வு செய்வதைவிட அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்படியாவது அவரை இல்லாமற் செய்துவிடவேண்டுமென்னும் அவர்மீதுள்ள கோபமே கட்டுரையில் அதிகம் தெரிகிறது.
பெரும்பாலும் இல்லாத அல்லது இருக்கும் கடவுள்மீதுள்ள இந்தக் கோபம்தான் பலரை இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்துகிறது. மனித மூளையை ஆய்வு செய்யும்போது இத்தகைய ஆய்வுகளில் ஈடுபடுவோருடைய மூளையின் எந்தப்பாகம் செயலிழக்கிறது அல்லது அதீதமாகச் செயல்ப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தல் வேண்டும். சில வேளை சில ஜீன்கள் இத்தகைய கடவுள் மறுப்புக்கும் அல்லது ஏற்புக்கும் காரணமாக இருக்கலாம். அதுவும் ஆராய்ச்சிக்குரியது.
A great orticle. Continue ur job…………………….
Does god exist? – This has been a very very very old question in the world and no one has answered yet to understand. This is enough to prove that the non-existence of God.
I think, we have had discussed enough about the existence of God. Let us go further in deep about God in discussion. The answer for the below question will take us to one step further about understanding God.
“Why God?”
God is not a living thing. God is not really existing.
God is a CONCEPT.
We can not see the concept in your eyes. We can not either smell or hear or touch.
It is a concept created by human to help himself in many way.
hai sir
iam read super meassage sir.
supper meassage sir
hai sir supper
supper
When one writes some thing in a nice believeable way there is always a pile of Idiots to believe it.
Thats what happened when one said “There is GOD”.
Now the same thing is is happening here when a person say “There is NO GOD”.
I am Nither saying there is GOD or NO GOD.
Science & Religion are 2 different things Right?
Science => Calculated & proved
Religion => Based on Believes
Now in the name of science there is a religion going based upon believes & Many IDIOTS belives its Science.
Just one example:
Darwin’s theory:
Man came from Monkey………
Since the development of science have we ever seen a man developed from a monkey?
If the idiots say it only happens once then there it goes like a religion which says Once god did this or that.
In science it should happen EVERY TIME
In the name of science there is two religions are running
one is evolution & the other is creation of universe.
One simple news for the people to get a clear Idea of God & No GOD:
Even today once a person is dead; Science could make all his body parts to work. BUTCOULDN’T ABLE TO BRING THE LIFE BACK.
Thats Y the leading scientist country (the US) in this world has this STATEMENT in each of their currency note which used all over the world:
“IN GOD WE TRUST”
As said by S. Karunanandarajah(Yugasarathi) :
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பiதை ஆய்வு செய்வதைவிட அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்படியாவது அவரை இல்லாமற் செய்துவிடவேண்டுமென்னும் அவர்மீதுள்ள கோபமே கட்டுரையில் அதிகம் தெரிகிறது.
கடவுள் இருந்தால் எனக்கு அவரை உணர சந்தர்ப்பம் அமையும். எல்லாம் வல்ல இறைவன் இலங்கையில் அப்பாவிகளுக்கு உதவ தயங்குவது ஏன்?
Such a fantastic Article with respect to depth of subject and flow of article. Fine
கடவுள் நம்பிக்கைக்கு மக்களின் அறியாமையை விட, இல்லாமையே பெரும் காரணமாக இருக்கிறது என நினைக்கிறேன். தனக்கு தேவையென்று வரும் பொழுதோ அல்லது துன்பம் என்று வரும்பொழுதுதான் அவர்கள் கடவுளை தேடி ஓடுகின்றனர். மக்களின் இல்லாமையை அகற்ற முயன்றாலே கடவுள் நம்பிக்கை மெல்ல மெல்ல அகன்று விடும்.( இல்லாமை என்பது உணவு,உறைவிடம்,நிலையான வருமானம் போன்ற அடிப்படை தேவைகள் கூட இல்லாதிருத்தல். )
Let me ask you this.
Can a scientist create a peanut from scratch? What I mean by “from scratch” is without using any materials provided by nature or God. Man can not even create a peanut. we can claim I created this and that. from what? from where? man needs a base product to create anything.
I always believe Creator is always few notches greater than what is being created. In simple way, I can not create something far greater than me. Anything I create is lower than me. Same thing applies to every aspect of life. If human being is a super talented thing in the universe, then its creator is also much greater than human. You and I can call that as God or some Super Natural Power. We can not deny the existence of that. Period.
மக்களின் இல்லாமையை அகற்றினால் கடவுள் நம்பிக்கை அகன்று விடும்.
ellaam sari.. “near death experience” enbadhai patri kelvi pattu irukireergalaa? oruvar uyir piriyum velaiyil than udambai maruthuvar parisodhipadhai “top view”vil paarthadhaaga oru chinna detail kooda miss aagaamal ninaivu thirumbiya pin silar sonnadhaaga aadhaarapoorva seidhigal ullana.. andha “NDE” endra experiencein kaaranam enna endru ariviyalaal koora mudiyuma? adhu “aathma”va? illai endraal veru enna?
மிகச் சிறந்த கட்டுரை !! சமூகத்தின் உடனடித் தேவையும் இது போன்ற தேர்ந்த ஆராய்ச்சிகளைப் பற்றிய கட்டுரைகளே!! முற்றிலும் வரவேற்கத் தக்க கட்டுரை !!
its not 17Km its 27 km Circular path.
[…] கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்! […]
[…] கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்! […]
அருமையான பதிவு ! நாம் பலரும் நினைப்பது போல் ஆன்மிகமும் விஞனமும்
வேறு வேறு அல்ல. இந்த பதிவில் கூற பட்டுலத்தை போல் “God’s Particle” என்பது “சுத்தவெளி ” . அதைதான் வேதங்களும் , மதங்களும் கடவுள் என்று கூறுகின்றன.அந்த ‘சுத்தவெளி’ ஆனது என்றுமே ஒரு sophisticated scientific instrument கொண்டு அறிய இயலாது .காரணம் மிகவும் எளிமையானது . அணைத்து வின்ன்யநிகளும் விண்ணை (atom ) கொண்டுதான் ஆராய்கிறார்கள் .இது அதனினும் நுண்ணிய மூல பொருள்.இதற்கு ஒரு கருவி உண்டென்று சொன்னால் அதுதான் மனம். அதைத்தான் வள்ளுவர் “நுன்மான்னுளைபுலன்’ என்று கூறுகிறார். அதை அறிகின்ற அறிவுதான் கடவுள் என்றும் தன் திருக்குறளை ஆரம்பிக்கின்றார்.
2 ) “Philosophy without science is blind and Science without philosophy is Lame -Einstein”
Philosophy kum science kum ulla gap இங்குதான் வருகின்றது.கீழ்க்கண்ட url பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=27L11z28v8s
3 ) பதிவில் கூறப்படுள்ளதுபோல் இது வெறும் மன பிரம்மைகள் அல்ல ,அது சத்ய அனுபவம் என்று ரமணர் தன் கேள்வி பதிலில் தெரிவித்து இருக்கிறார்.
4 ) வேதாத்ரி மகரிஷி யின் இறை நிலை விளக்கத்தை புரிந்து கொண்டு , திருக்குறள், பகவத் கீதை , வேதம், பைபிள், குரான் ,புத்திசம், ராம கிருஷ்ணா பரமஹம்சர், விவேகனந்தர்,ரமணர், , சித்தர் பாடல்கள் என எதை படித்தாலும் அதன் உள்ளர்த்தம் நன்றாக விளங்கும்.
எல்லோருமே ஒரே விசையதைதன் சொல்லுகிரர்கள் என்பதும் எங்குமே முரண் இல்லை என்பதும் அழகாக விளங்கும்.
.
நன்றி
கட்டுரை நன்றாகவே உள்ளது. ஆனால் சில சந்தேகம். தாங்கள் போற்றும் அறிவியல் உருவாக்கிய பொருள் ஏதேனும் உன்டா? அதாவது கண்டு பிடிக்காத முற்றிலும் புதிதாக உருவாக்கிய பொருள் ஏதேனும் உன்டா? கடவுளை ஆராயும் நீங்கள் என்றாவது அறிவியலை ஆராய்ந்தது உண்டா? ஆன்மீகவாதிகள் மட்டும் தான் தவறு செய்கிறார்களா? அறிவியல் மேதைகள் தவறு செய்வது இல்லையா? அறிவியல் மேதைகள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக அறிவியல் வேண்டாம் என்று சொல்லுவது பகுத்தறிவு வாதமா?
இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்
http://www.tntj.net/2703.html
ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
தற்போதைய தேவை கருதி, இந்தக் கட்டுரையை வினவு மீள்பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்!!
ஆயிரம் ஆயிரம் விஞ்ஞானிகள் அளப்பரிய தியாகங்களை செய்து God Particle எனப்படும் Higgs Boson’s particle-ஐக் கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவர்கள் கண்டுபிடித்தது கடவுள் துகள்தான என்பதை உறுதி செய்ய இன்னும் மூன்று ஆண்டுகள் வரை பிடிக்குமாம்!
வாழ்க விஞ்ஞானிகளின் தியாகங்கள்! வெல்க அறிவியல்!!
ஹிக்ஸ் போசான் ஐ கண்டுபிடித்திருப்பது துகள் இயற்பியலில் புதிய பரிணாமங்களை காண உதவும்தான். ஆனால் இதனை கடவுளின் துகள் என்று சொல்வது சரியல்ல• பொருட்களின் நிறைக்கு புரோட்டான் காரணம் என்று சொன்னது இன்று அதனினும் சிறிய போசான் ஆக மாறி இருக்கிறது. இனி ஹிக்ஸ் போசானைக் கொண்டும் அதன் உடன் இருக்க கூடிய குவார்க், க்ளூவான்ஸ், லெப்டான் மற்றும் போட்டான்களால் ஸ்டேண்டர்டு மாடல் ஒன்றை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள். போசானுக்கு நிறைதான் அதிகமே (புரோட்டான் போல 133 மடங்கு) தவிர மின்சுமை யோ சுழற்சியோ கிடையாது. ஆனால் அதன் ஆயுட்காலம் மிகவும் குறைவு. ஹேட்ரான்களாகவும் எலக்ட்ரான்களாகவும் உடனடியாக மாறி விடுகிறது. உலகம் தோன்றியதாக கருதப்படும் பெருவெடிப்பின் மினியேச்சரை ஜெனிவா செர்ன் துகள் இயற்பியல் ஆய்வு மையம் செயற்கையாக உருவாக்கும் போது இரு புரோட்டான்களின் மோதலின் போது 125 GeV/c^2 ல் நமக்கு ஹிக்ஸ் போசான் கிடைக்கிறது. அதில் சி என்பது ஒளியின் திசைவேகம்.
தேவை கருதி, வினவு இந்தக்கட்டுரையை மீள்பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்!!
[…] கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் ! […]
கடவுள் இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்.எனக்கு அவர் தேவைஇல்லை.எந்த மதமும் எனக்கு தேவை இல்லை.இது முதல் படி.கடவுள் இல்லை என்பது அடுத்த படி.கடவுள் நம்பிக்கையாளர்கள் முதல் படியில் காலை வைக்க வைக்க வேண்டும்.
A man went to a barbershop to have his hair cut and his beard trimmed.
As the barber began to work, they began to have a good conversation. They talked about so many things and various subjects.
When they eventually touched on the subject of God, the barber said:
“I don’t believe that God exists.”
“Why do you say that?” asked the customer.
“Well, you just have to go out in the street to realize that God doesn’t exist.
Tell me, if God exists, would there be so many sick people?
Would there be abandoned children? If God existed, there would be neither suffering nor pain. I can’t imagine a loving a God who would allow all of these things.”
The customer thought for a moment, but didn’t respond because he didn’t want to start an argument.
The barber finished his job and the customer left the shop. Just after he left the barbershop, he saw a man in the street with long, stringy, dirty hair and an untrimmed beard. He looked dirty and unkempt.
The customer turned back and entered the barber shop again and he said to the barber: “You know what? Barbers do not exist.”
“How can you say that?” asked the surprised barber. “I am here, and I am a barber. And I just worked on you!”
“No!” the customer exclaimed. “Barbers don’t exist because if they did, there would be no people with dirty long hair and untrimmed beards, like that man outside.”
“Ah, but barbers DO exist! ” answered the barber. “What happens is, people do not come to me.”
“Exactly!” affirmed the customer. “That’s the point! God, too, DOES exist! What happens is, people don’t go to Him and do not look for Him.
That’s why there’s so much pain and suffering in the world.
மனிதனுக்கு உள் இருக்கும் கடவுள் என்ற அறியாமையை சாடுங்கள் கடவுளை சாடாதீர்கள்…
மனித அறிவு விசாலமாகும் போது,போலிகள் முற்றுப்பெறும்.