முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை எடுத்துக் கூறுகிறது. வண்டிகளில் அள்ளிப் போடப்படும் பிணங்கள், குண்டு வெடித்த புகையினூடே கேட்கும் அலறல்கள், அகப்பட்டதை வாரிக்கொண்டு இடம் பெயரும் குடும்பங்கள், படுகாயமுற்று சிகிச்சை வசதிகளற்று படுத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள், தமிழ்நாட்டிடம் உதவிகேட்கும் மக்கள்……
இந்தப்படம் தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் நேரத்தைக் கொடுத்திருக்கும் தமிழ் மனங்களின் மனசாட்சியை தொட்டு எழுப்ப முயல்கிறது. எங்களுக்கு உங்களை விட்டால் உதவுதற்கு வேறு யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறது.
ஆனால் இந்த உதவியை தமிழ் மக்கள் செய்யமுடியுமா ? இலங்கைக்கு ஆயுத உதவி தொடர்ந்து செய்வோம், இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை நிறுத்த இயலாது, இலங்கை இறையாண்மையில் இந்தியா தலையிடாது என்றெல்லாம் பாரளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாக அறிவித்துவிட்டார். இந்தப் போரில் சிங்களப் பேரினவாத அரசு வெற்றிபெற வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். தெற்காசியாவில் மேலாதிக்கம் செய்யவிரும்பும் இந்தியாவிற்கும் அதன் முதலாளிகளுக்கும் ஒன்றுபட்ட இலங்கையின் சந்தை தேவைப்படுவதால் ஈழத்தமிழர்கள் சாவதைப்பற்றிக் கவலையில்லை. அதற்காக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவது குறித்தும் அக்கறையில்லை.
இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டினைத்தான் தேசிய ஊடகங்களும் அநேக கட்சிகளும் கொண்டிருக்கின்றனர். ஈழம் என்று பேசினாலே கைது செய்யவேண்டுமென ஜெயலலிதாவும், காங்கரசு அனாமதேயங்களும், பா.ஜ.கவும் ஊளையிடுகின்றன. கருணாநிதியும் அதற்கு செவி மடுத்து நானும் அதற்கு இளைத்தவனல்ல என்று கைது செய்கிறார். கூடவே மனித சங்கிலிப் போராட்டமும் நடத்துகிறார். எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற உதார் வேறு.
தமிழ்நாட்டில் ஈழத்தை வைத்து இப்படித்தான் நாடகம் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில் ஈழத் தமிழ் மக்களுக்காக தார்மீக ஆதரவைக்கூட தரக்கூடாது என்ற நிலை மெல்ல மெல்ல மீண்டும் உருவாக்கப்படுகிறது. பொதுவில் தமிழகத்து மக்கள் ஈழத்தின் துயரில் பங்கெடுக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் அதை தலைமை ஏற்று நடத்த வேண்டிய கட்சிகள் எல்லாம் இந்திய அரசின் துரோகத்துக்கு துணை போகின்றன.
ஆகவே நமது கடமை என்ன? தெற்காசியாவில் நாட்டாமையாக உருவெடுத்து வரும் இந்திய அரசு சிங்களப் பேரினவாத அரசுக்கு செய்யும் உதவியை அம்பலப்படுத்தி முறியடிக்கவேண்டும். ஈழத்தமிழருக்கு இலங்கை அரசு மட்டுமல்ல இந்தியாவும்தான் எதிரி. இதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவில்லை. ஆனாலும் புலிகளும், தமழின ஆர்வலர்களும் இந்தியா தங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் அந்தப் புரிதலை தமிழ்நாட்டு மக்களின் போராட்டம் எடுத்துச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் நடிகர்களும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஈழத்தின் அவலத்தை வைத்து நாடகம் நடத்துகிறார்கள். உண்மையில் இந்த நாடக்தத்தை அம்பலப்படுத்துவதோடு, இந்தியாவின் திமிரை அடக்குவதும்தான் நம் முன் உள்ள கடமைகள். அந்தக் கடமையை வலியுறுத்தும் நோக்கில் இந்த அவலச்சுவை நிரம்பிய குறும்படத்தை பார்க்குமாறு கோருகிறோம்.
அருமையான விவாதம்! முழு இந்தியாவிலே தமிழ்ர்களாகிய நாம் தான், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படும் அவதிகளைப் பார்த்து, குறைந்த பட்சம் உதவி செய்யவாவது நாடுகிறோம். இங்கே வட இந்தியாவிலே மக்களும், பிற ஊடகங்களும் தங்கள் கண்களை மூடிக் கொண்டு, தமிழர்கள் வீண் பிரச்சனை செய்கின்றனர் என ”தெனாவட்டாக” இருக்கிறார்கள்.
hi
Its really sorrowful.
We must do something to the people of tamil elam
நடக்கிறத பேசுங்கப்பா! தமிழனுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாம் காணாமல்போய் பலகாலம் ஆச்சு! வீரத்தமிழர் வாழ்ந்த காலம் மலையேறிப்போச்சு ,
இப்போ கூலித்தமிழர் வாழும் காலம்! நம்மகிட்ட உதவி கேட்ட ஈழத்தமிழன் மகா கேனயன்! கசாப்புக்கடையில சின்ன கடா பெரிய கடாவைப் பார்த்து உதவி கேட்டிச்சாம் காப்பாத்துங்கப்பா என்று! இரண்டுமே கறியாகப்போவது என்னமோ நிச்சயம்தானுங்க!!!
ஒருவொருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்வது (Caring for each other ) என்ற தத்துவத்தை என்றோ மறந்து விட்டோம்… வினவு முந்தைய கட்டுரையில் எழுதியதை போல உறவுகள் ஒரு நுகர் பொருளைப் போலவே பார்க்கப் படுகின்றன.. பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்து விடுவது. தன்னுடைய சொந்த தாய், தந்தையையே வீண் சுமை என்று முதியோர் காப்பகத்தில் விடும் தமிழன் வாழும் இந்த நாட்டில் … ஈழத்தில் நமது சகோதரனும், சகோதரியும் படும் துன்பங்களுக்காக அவன் கவலைப் படுவானா? இந்த நேரத்தில் எவ்வளவு இளைய தலைமுறை தீபாவளிக்கு வெளியாகும் தனது அபிமான தலைவரின் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டு இருப்பர்…
ஒவ்வொரு ஒட்டு கட்சியும், சில நல்ல உள்ளங்களின் அனுதாபத்தை தனது ஒட்டுகளாக்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபட்டு உள்ளன…
இந்த செயல்கள் நமது ஈழத்து மக்களுக்கு ஒரு போதும் உதவாது.. தமிழனுக்காக, நம் மக்களுக்காக.. முக்கியமாக மனித நேயத்திற்காக இடியென முழங்குவோம்.. ஒட்டு கட்சிகளின் கபட நாடகத்தை முறியடிப்போம்.. நம் மக்களுக்காக நாம் ஒன்றிணைத்து போராடுவோம்..
வீரத் தமிழன்
“தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!
வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்! ”
– பாவேந்தர் பாரதிதாசன் பாடல்
அண்ணே! நீங்க கவிதை கவிதையா சொல்றீங்க, ஆனால் நாம ஈழத்தில அன்னதானம் நடத்துறமில்ல! 800 டண் உணவு அனுப்பிச்சாம் மத்திய அரசு! இதைப்பற்றி ஈழத்து இணையங்களில் என்னா பேசிக்கிறானுக?
” 1.தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தென்னிலங்கையில் இருந்து உணவுப் பொருட்களை அனுப்பத்தடை.
2. தனியார் நிறுவனங்கள் உணவு மருந்து வகைகளை தென்னிலங்கையில் கொள்வனவ செய்து வன்னிக்கு அனுப்பத் தடை.
3. ஐநாவின் உலக உணவுத்திட்டம் உணவு அனுப்பாததால் அல்ல ஓமந்தையில் சிறீலங்கா படையினர் அனுமதிக்காததால் செல்லவில்லை.
இந்தப் பின்னணியில் இந்தியா சிறீலங்கா ஊடாக உணவு அனுப்புவதாக நாடகம் நடத்துவது இனவாத சிறீலங்காவை விட மோசமான ஒரு வஞ்சனை.
”
————————————————————-
இதுகூட தெரியாத கூழ்முட்டைகளா நம்ம பயலுகள்? அதுதான் “திருத்த முடியாத கழுதைகள்” என்னு கட்சிப்பெயர் வைச்சிருக்கானுகளோ?!
தமிழகத்தில் மட்டும் தன் வசமுள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 45யை மூட முடிவு செய்துள்ளது பிரமிட் சாய்மிரா நிறுவனம்.
இவை தவிர கர்நாடகத்தில் 20 திரையரங்குகளையும், மேற்கு மாநிலங்கள் மற்றும் வடக்கு மாநிலங்களில் இருந்த தனது அனைத்து திரையரங்குகளையும் மூடிவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த திரையரங்குகளின் நிர்வாகச் செலவை சமாளிக்கும் அளவுக்குக் கூட வருவாய் வராததால் இவற்றை மூடுவதாக பிரமிட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் நிர்வாகத்தில் குளறுபடிகளை ஏற்படுத்தியதாக தனது நிர்வாகிகள் சிலரையும் இந்நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
குசேலன் படத்தை விநியோகம் செய்யததில் பெரும் ஊழல் புரிந்ததாக ஒரு முக்கியப் புள்ளியையும் விலக்கி வைத்துள்ளது சாய்மிரா.
அதேநேரம், தனது மலேஷியா, சீனா மற்றும் அமெரிக்க திரையரங்குகள் மற்றும் விநியோக அலுவலகங்களை மேலும் மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாக இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்
🙁
dear comrade, Iam wishing u to disclose the problems of our tamil people. pls continue…….
இலங்கை அரசின் ,சிங்கள இராணுவத்தின் திவிரவாதம்.
இலங்கை அர்சின் ,சிங்கள இராணுவ திவிரவாதிகள்,ஈழத்தில் தன் நாட்டு குடிமக்கள் மீதே குண்டுகளை வீசி கொன்று வருகிறது.குழந்தைகள் ,பெரியவர்கள் என்று பாராமல் ,அவர்கள் மீது விஷ வாயு குண்டுகளை வீசி கொன்று வருகிறனர்,சிங்கள இராணுவ தீவிரவாதிகள்.
இலங்கை அரசே,தீவிரவாத்தை ஆதிரிக்கிறது.தீவிரவாத செயலில் ஈடுபடுகிறது.
இத்தகைய ,இலங்கை அரசின் தீவிரவாதத்திற்கு ,ஆதரவாக இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி ஆதரித்து வருகிறது.
சிங்கள இராணுவ தீவிரவாதத்தை ஆதரிக்கும் ,இந்திய அரசின் செயல் கண்டிக்க தக்கது.மனித தன்மை அற்றது.
அடித்து கொண்டிருப்பவன் (இலங்கை இராணூவம்) தீவிரவாதி அல்ல என்றும்,அடி வாங்குபவன்(ஈழதமிழன்) வலிபொருக்காமல் திருப்பி அடித்தால் அவன் தீவிரவாதி என்றும் ,இலங்கை அரசும்,இந்திய அரசும் விளக்கம் கூறுவது வேதனையாக உள்ளது.
எதை தீவிரவாதம் என்கிறோம் பொதுமக்களை ,குழந்தைகளை ,முதியவர்களை கொல்பவர்களை தானே.அப்படி என்றால் இந்த செயலை எல்லாம் செய்யும் இலங்கை அர்சின் சிங்கள இராணுவம் தான் தீவிரவாத செயல் புரிகிறது.
புலிகள் யாரும் குழந்தைகளை ,சிங்கள பொது மக்களை தாக்க வில்லை.அவர்கள் தங்களை தாக்க வரும் சிங்கள இராணுவ தீவிரவாதிகளை தாக்குகிறார்கள்.
ஈழதமிழனும்,சிங்களவர்க்கு சமமாக நடத்தபட்டால் ,தமிழ்மக்கள் ,ஆயுத போராட்டத்தை விட்டுவிடுவார்கள்.அதை செய்யாத இலங்கை அரசு,ஈழதமிழ்ர்கள் மீது திவிரவாதத்தை கட்டவிழுத்து விட்டுள்ளது.
இலங்கை இராணுவ தீவிரவாதமும்,அந்த தீவிரவாதத்திற்கு துணை போகும் இந்திய அரசும் மனம் மாறவேண்டும்.
இலங்கை அரசும்,இந்திய அரசும், தீவிரவாத வழியை கைவிட்டும் அமைதி வழியில் ஈழதமிழர்க்கு சுய அதிகார உரிமையை வழங்கி அவர்கள் வாழ வகைசெய்யவேண்டும்.
இதயத்தை அறுக்கும் ஈழத்து வீடியோ படம் தெரியவில்லை
பர்க்கவே முடியவில்லை கீ போர்டு நனைந்து விட்டது இதில் எங்கோ பதிவிறக்கம் செய்வது ஒவ்வேருவரயிம் எனது பிள்ளையாக சகோதரியாக பர்க்கும் மனது வலிக்கிறது