ஈழப் பிரச்சினைக்காக தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளும், சினிமா உலகினரும் போராடிக்கொண்டிருப்பதைப் போல தோற்றம் கொண்டிருக்கும் சூழ்நிலையைத்தான் ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. ஆனால் உண்மையிலேயே ஈழத்தின் துயரத்தையும், அதற்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தையும் மக்களிடையே கொண்டு செல்லும் வேலையினைத் தமிழகத்தில் செயல்படும் புரட்சிகர அமைப்புக்கள்தான் செய்துவருகின்றன.
மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் கடந்த ஒருமாதமாகத் தமிழகமெங்கும் நடத்திவரும் பிரச்சார இயக்கத்தின் செய்திகளை இங்கே புகைப்படத்துடன் வெளியிடுகிறோம். இந்தியாவின் மேலாதிக்கத்தை முறியடிக்காமல் ஈழத்தின் துயரத்தை துடைக்க முடியாது என்பதோடு சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்போம் என்ற முழக்கத்துடன் இந்தப் பிரச்சார இயக்கம் வீச்சாகக் கொண்டு செல்லப்பட்டது.
இன்னொரு நாட்டில் மத்திய அரசு இதற்கு மேல் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்ட கருணாநிதி தற்போது கையேந்தி வசூலித்து வரும் வேளையில் ஈழத்திற்கு நிவாரணத்தை விட போர் நிறுத்தமும், அரசியல் ரீதியான ஆதரவுமே தேவை என்பதையும் இந்தப் பிரச்சார இயக்கம் மக்களிடையே வலியுறுத்தும் வண்ணம் மேற்கொள்ளப்பட்டது. ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படும் இம்முயற்சிகளை நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கே அந்தச் செய்திகளை வெளியிடுகிறோம்.
ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிப்போம்!
ஈழத்தமிழர் படுகொலைக்குத் துனைபோகும்
இந்திய அரசை முறியடிப்போம்!!
நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் தமிழகம் தழுவிய போராட்டங்கள்.
சிங்கள இனவெறி பாசிச அரசு நடத்திவரும் ஈழத் தமிழிட படுகொலையைக் கண்டித்தும்; இந்த இன அழிப்புப் போருக்குகத் துணை நிற்கும் இந்திய அரசின் சதிகளையும், மேலாதிக்க நோக்கங்களையும் அம்பலப்படுத்தியும் தமிழகமெங்கும்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
“ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்”, “கொலைவெறி பிடித்த மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா?” விண்ணதி ரும் முழக்கங்களை எழுப்பி, செங்கொடிகளையும், கண்டன முழக்கத் தட்டிகளையும் ஏந்தியபடி கடந்த 8.10.08 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை அண்ணாசாலையை மறித்து, நந்தனம் இராணுவம் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கைதாயினர், ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள்.
ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இறுதித் தாக்குதலுக்குரிய மூர்க்கத்துடன் இனப்படுகொலையை நடத்திவரும் சிங்கள இனவெறி அரசுக்கு, இந்திய அரசு கூட்டாளியாகவே செயல்படுகிறது என்பதை நாடே அறிந்த போதும்;
கசாப்புக்காரனிடமே காருண்யம் கோரும் கதையாக, கொலைகாரன் மன்மோகனிடமே, இங்குள்ள ஓட்டுக் கட்சிகள் ‘கோரிக்கை’ வைத்துக் கொண்டிருந்த சூழலில், மக்களின் போராட்டங்கள் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமென்பதை அறிவிக்கும் வகையில் அமைந்தது சென்னை நந்தனம் இராணுவம் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம்.
சென்னையில் மட்டுமின்றி, ம.க.இ.க, பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த 8.10.08 அன்று தமிழகம் தழுவிய அளவில் திருச்சி பாலக்கரையிலும்; கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாகவும்; தஞ்சை இரயிலடி எதிரிலும்; ஓசூர் ராம்நகர், அண்ணாசாலை அருகிலும்; தருமபுரி ராஜகோபால் பூங்கா முன்பாகவும்; கடலூரில் உழவர் சந்தை அருகிலும் திரளான மக்கள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
போலீசின் அனுமதி மறுப்பு மற்றும் மழை காரணமாகத் தடைபட்ட பகுதிகளில் பேருந்து, ரயில் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்கின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 17.10.08 அன்று துறையூர் பேருந்து நிலையம் எதிரிலும், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும்; குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் தெருமுனைக் கூட்டத்தையும் நடத்தின.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கடந்த 20.10.08 அன்று “ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்! பார்ப்பன இந்து மதவெறியைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பார்ப்பன பாசிஸ்டுகளின் சதியை முறியடிப்போம்” என் கிற முழக்கத்தின் கீழ் மாபெரும் பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இனப்படுகொலையின் சூத்திரதாரியான இந்திய அரசின் குரல் வளையைப் பிடிக்கும் விதமாக தோழர் துரை. சண்முகம் அவர்களும், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட இப்பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராய் உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கும் வகையில் பேரா.பெரியார்தாசன் அவர்களும் இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
பெருந்திரளான மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளது ஊக்கமான ஆதரவைக் கொண்டு தமிழகமெங்கும் இவ்வமைப்புகளின் பிரச்சார இயக்கங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிரச்சார இயக்கத்தின் முழக்கங்கள்:
கொலைகாரன் மன்மோகன் சிங்கே,
உன் டாடாவும், அம்பானியும்
இலங்கையில் கொள்ளை லாபம் அடிக்க
எங்கள் ஈழத்தமிழர்கள் சாக வேண்டுமா?இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய
மேலாதிக்கத்திற்காக,
டாடா-அம்பானி போன்ற தரகு முதலாளிகள்
இலங்கையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக,
சிங்கள இனவெறி இராணுவத்திற்கு
ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து ஏவிவிடும்
கொலைகார மன்மோகன் சிங் அரசை
எதிர்த்துப் போராடுவோம்!ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக்
குரல் கொடுப்போம்!
________________________________________________________
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008, (அனுமதியுடன்)
__________________________________________________
thanks
இன்னலில் உழலும் ஈழத்தமிழர்களின் மீட்சிக்காய் இதய சுத்தியோடு போராடும் அனைத்துப் புரட்சிகர உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
Nanri Thozha…
lot of thanks / i support your aim
தமிழக உறவுகளெ எம் இன்னல் கண்டு துடித்தெழுந்து குரல் கொடுத்தமைக்கு நன்றிகள். உங்கள் எழுச்சியால் நாம் அநாதைகள் உலகில் தனிமைப்படுத்தப்பட்வர்கள் அல்ல என்பதனை நிரூபித்து விட்டீர்கள்.
நன்றி
ஜானா
This is the time to disclose the real ambitions of Indian central government. For the central government, profit is more important than pledge of Eelam people. Tamil national parties will try their best until a limit, and frustrate very soon.
we thanks for your support ,Eelam tamil
will never forget
எம் உறவுகள் படும் இன்னல்களைக்கண்டு அதனை போக்குவதற்கு தங்களின் கரங்களை எம்மை நோக்கி நீட்டி அரவணைக்கத்துடிக்கும் எம் தாய்த்தமிழக உறவுகளுக்கு எம் உறவுகள் சார்பாக எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி சொல்றீங்க!
சரிங்க!
அடுத்தது என்னா? நைட் சோ சினிமா தானுங்க!
எதுவும் மாறப்போவதில்லை!
7 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் 70 பேர் கொடிபிடித்து போராட்டம் நடத்தினால் அது புரட்சியாகுமா? சும்மா போங்கப்பா!!!
thozhargal annai varrukum veera vanakam.
Nandri thozr
Kindly supply the talks of Prof. Periyardasan and other anti-hindu revolutionaries. The web managements are against their charisms and so too they are not publishing their vigors. Please make use of the youtube for the probagations of such important personalities. I am the great favorite of this revolution, so please help me by websites with the audio and video of the great speeches of my tamil patriarchs. I am really proud of this rise. Congratulations!
Nam tamil ina makkalukkaka poradum en ella uravukallukkum en Nanri.
by
alaguraj
Dear my Tamilnadu boithers and sisters, the two words Thank you is not enough to express our gratitude for your support and enthusiasm to raise our voices. We will fight untill we get freedom.The duty of preventing any uprising agaist Indian support for the genocide of Tamil is given to Mr Karunanithy.
Yours net service is a part of revolution. We apriciate yours manhood works.
” NEVER FAILS PEOPLE WARS”
elam viduthalai poralikal enaththaimattum parthathi naa l