Friday, June 2, 2023
முகப்புசமூகம்சாதி – மதம்சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

-

மிகுந்த வேதனையுடன் இப்பதிவை எழுதுகிறோம். “சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதல்” என்ற தலைப்பில் இன்றைய காலைத் தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. தலித் மாணவர்களுக்கும் தலித் அல்லாத மாணவர்களுக்கும் இடையிலான மோதல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு தனது செய்தியில் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. தலித் அல்லாத மாணவர்களின் சாதி என்ன என்பது பற்றி மட்டும் வாசகரின் ஊகத்துக்கு விட்டுவிட்டது.

“ஒரு மாணவன் பிணம் போலக் கிடக்க வேறு சில மாணவர்கள் அவனை ஆத்திரம் தீர கட்டையால் அடிக்கும் காட்சியை” சன் செய்தி திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. காணும் எவரையும் பதைக்கச் செய்கிறது அந்தக் காட்சி. இந்தக் காட்சியின்படி “ஈவிரக்கமில்லாமல் அடிக்கும் அந்த மாணவர்கள்தான் குற்றவாளிகள்” என்ற முடிவுக்கே பார்வையாளர்கள் வரமுடியும். அடிக்கும் மாணவர்கள் எந்தச் சாதி, அடிபடும் மாணவர்கள் என்ன சாதி என்பது பற்றி பத்திரிகைகளோ தொலைக்காட்சியோ எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்நேரம் மாணவர் உலகத்துக்கும் சாதிச்சங்கத் தலைவர்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மாணவர்களின் “சாதி அடையாளம்” பற்றிய தகவல் போய்ச் சேர்ந்திருக்கும். யார் நம்மாளு என்பதைத் தெரிந்து கொண்டபின் மேற்கூறிய புகைப்படங்களும் காட்சிகளும் புது வீரியம் பெற்றுத் தமிழ் நாட்டை எரிக்கத் தொடங்கும். ஏற்கெனவே சென்னை எருக்கஞ்சேரியில் ஒரு அரசுப்பேருந்து எரிக்கப்பட்டுவிட்டது. இப்படங்களினால் வர இருக்கும் நாட்களில் 1998 இல்  தென் மாவட்டங்களில் நடந்தது போன்ற ஒரு சாதிக் கலவரம் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்தால் அது அதிசயம்.

அந்த அதிசயம் நடக்கவேண்டும் என்பதே எமது விருப்பம்.

இனி சம்பவத்திற்கு வருவோம்.

சமீபத்தில் பசும்பொன் தேவர் ஜெயந்தியைக் கொண்டாடிய, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த தேவர் சாதி மாணவர்கள், அதற்காக வெளியிட்ட சுவரொட்டியில் சட்டக் கல்லூரியின் பெயரில் இருந்த “அம்பேத்கர்” என்ற சொல்லைக் கவனமாகத் தவிர்த்து விட்டு வெறுமனே சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று வெளியிட்டதாகவும், இதனால் தலித் மாணவர்கள் கோபம் கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து சிறு சிறு பூசல்களாக உருவாகிப் புகைந்து கொண்டிருந்த முரண்பாடு நேற்றைய மோதலில் வெடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த விவரம் பற்றிய முழு உண்மை அல்லது மேலும் பல புதிய தகவல்கள் இனி வெளிவரலாம்.

ஆனால் நடைபெற்றுள்ள இந்த துயரச் சம்பவத்தை விளங்கிக் கொள்ள இப்படிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை. தேவர் சாதியினர் தலித் மக்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமையும் தமிழகம் அறிந்ததுதான். அதன் வடிவங்கள் வேறாக இருக்கலாம், சம்பவங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் அதன் சாரம் இதுதான். தென்மாவட்டங்களில் நடைபெறும் பல கலவரங்களுக்கு சிலை உடைப்புகள்தான் துவக்கப் புள்ளிகளாக இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அவை வெறும் கற்சிலைகள் பற்றிய பிரச்சினைகள் அல்ல.

அம்பேத்கரை சட்டமேதை என்று இந்தியா மேலுக்குக் கொண்டாடினாலும், அவருக்கு பாரத் ரத்னா விருது கொடுத்து கவுரவித்திருந்தாலும், அவரது பிறந்த நாளில் சர்வ கட்சித் தலைவர்களும் சிலைக்கு மாலை மரியாதை செய்தாலும், அவை எல்லாம் தேர்தலுக்காக பாரதிய ஜனதா தலைவர்கள் “ரம்ஜான் கஞ்சி” குடிப்பதைப் போன்ற நிகழ்வுகள்தான்.

மராத்வாடாவின் மராத்தா சாதியினரிலிருந்து தமிழகத்தின் தேவர் சாதியினர் வரை எல்லா ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் அம்பேத்காரின் பெயர் வேப்பங்காயாக கசக்கிறது என்பதே உண்மை. எனவே தேவர் ஜெயந்திக்கு போடும் சுவரொட்டியில் “அம்பேத்கர் பெயர் இடம் பெறக்கூடாது” என்று  சாதி கௌரவம் அந்த மாணவர்களைத் தடுத்திருக்கும். இதனை புலனாய்வு செய்தெல்லாம் கண்டுபிடிக்கத் தேவையில்லை. இது உள்ளங்கை நெல்லிக்கனி.

தங்களைத் தீண்டத்தகாதவனாக நடத்தும் ஆதிக்க சாதியினர் தங்கள் தலைவரையும் அவ்வாறே நடத்துவதை தலித் மாணவர்கள் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. தட்டிக் கேட்டிருக்கிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக இரு பிரிவு மாணவர்களுக்கும் உரசலும், மோதலும் நடந்திருக்கிறது. இந்த உரசல் அடுத்தடுத்து சிறு சிறு சம்பவங்களால் தீப்பிடித்திருக்கலாம். அத்தகைய ஒவ்வொரு சம்பவத்திலும் தேவர் சாதி மாணவர்கள்தான் தவறு செய்திருப்பார்கள், தலித் மாணவர்கள் தவறே செய்திருக்க மாட்டார்கள் என்று நாம் ஊகிக்க வேண்டியதில்ல்லை. தலித் மாணவர்களும் தவறிழைத்திருக்கலாம். ஆனால் இந்த மோதலின் அடிப்படை அத்தகைய சிறு சம்பவங்களிலிருந்து வரவில்லை என்பதே முக்கியம். சொல்லப்போனால், “சுவரொட்டியில் அம்பேத்கர் பெயர் இல்லை” என்ற காரணம் கூட இந்த மோதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணம் அல்ல. மோதலின் அடிப்படை என்பது தம் அன்றாட வாழ்க்கையில் தலித் மக்களும் தலித் மாணவர்களும் அனுபவிக்கும் சாதிக் கொடுமையில் இருக்கிறது; புதிய தலைமுறை தலித் இளைஞர்கள் அதை எதிர்ப்பதால், ஆதிக்க சாதியினருக்கு வரும் கோபத்தில் இருக்கிறது இந்த மோதலின் அடிப்படை.

புகைப்படங்களின் பிந்தைய பிரேம்களில் கட்டையால் அடிவாங்கும் மாணவன், சற்று நேரத்துக்கு முன் கையில் ஒரு அடி நீளக் கத்தியுடன் பாய்ந்து வருவதையும் பார்க்கிறோம். இந்தக் கத்தி ஒரு தலித் மாணவனைப் பதம் பார்த்திருக்கிறது. விளைவு நாம் தொலைக்காட்சிகளில் கண்ட அந்தக் காட்சி.

சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் விடுதியில் தங்கிப் படிக்கும் பெரும்பாலானோரில் தலித் சமூகத்தைச சேர்ந்தவர்கள். டே ஸ்காலர்ஸ் மாணவர்களில் சாதி இந்துக்கள் அதிகம். மற்ற கல்லூரிப் பட்டங்களை படிப்பதற்கும் வழக்கறிஞர் கல்விப் படிப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. பொறியியல், மருத்துவம் போன்ற  வசதியான படிப்புகளைப் படிக்க வைக்க வாய்ப்பில்லாத ஏழை நடுத்தர வர்க்கத்தினர்தான் தம் பிள்ளைகளை சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார்கள். பி.ஏ, பி.எஸ்.ஸி படிப்பதை விட இது பரவாயில்லை என்று வருபவர்களும் அதிகம். நிச்சயமற்ற வருவாய், நிச்சயமற்ற வாழ்க்கை என்பதை மட்டுமே வழங்கும் வழக்குரைஞர் தொழிலை கொஞ்சம் வசதி படைத்தோர் யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த வகையில் சென்னை கல்லூரியில் மோதிக்கொள்ளும் இரு தரப்பு மாணவர்களும் சாதாரண வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

வசதி இல்லை என்பதால் சாதி உணர்வு குறைந்து விடுவதில்லையே. ஆதிக்க சாதி மாணவர்கள் என்னென்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்று நமக்குத் துல்லியமாகத் தெரியாது. இந்தப் பிரச்சினையில் தேவர் ஜெயந்தி சம்பந்தப்பட்டிருப்பதால் தேவர் சாதி மாணவர்களின் பாத்திரம் முக்கியமானது என்று ஊகிக்க முடிகிறது. தேவர் சாதியினர், சாதிய ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னிலை வகிப்பதால் பிறரைக் காட்டிலும் இவர்களிடம் ஆதிக்க மனோபாவம் தூக்கலாகவே இருப்பதைக் காண்கிறோம்.

தலித் மாணவர்களோ மற்ற படிப்பு படிப்பதற்கு வசதியில்லாதவர்கள். இதையாவது படித்து முன்னுக்கு வரவேண்டுமென ஆர்வம் கொண்டவர்கள். சென்னை விமான நிலையத்திற்கு எதிரே இருக்கும் திரிசூலம் மலையில் கல்லுடைக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் வசிக்கின்றனர். எந்த வசதியுமில்லாமல் படிக்க வரும் பல மாணவர்களை இக்குடும்பங்கள் ஆதரிப்பது வழக்கம். ஏழ்மை விதிக்கப்பட்டிருக்கும் தம் சமூகத்தில் இந்தப் பையன்களாவது படித்து முன்னுக்கு வரட்டுமே என்று அம்மக்கள் இவர்களை ஒரு லட்சியத்துடன் பராமரிப்பதை இன்றும் பார்க்கலாம்.

தென்மாவட்டங்களில் இருக்கும் எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் சாதி இந்துக்களுக்குச் சொந்தமானவை என்பதால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இங்கே நவீன அடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். “கோட்டா மாணவர்கள், சத்துணவு கோஷ்டி”, என்று பலவிதங்களில் அங்கே தலித் மாணவர்கள் கேலி செய்யப்படுவது வழக்கம். வகுப்பறைக்குள் தலித் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் சுற்றறிக்கை வந்தாலே மேல்சாதி மாணவர்கள் ஏளனப்பார்வையுடன் சிரிப்பது வழக்கம். இப்படி பல்வேறு வகைகளில் தலித் மாணவர்கள் அநீதியாக நடத்தப்படுவதால் மாணவர்கூட்டம் தெளிவாக சாதிய ரீதியாக பிரிந்திருப்பதும் அவர்களுக்குள் பல சர்ச்சைகள், சண்டைகள் வருவதும் வழக்கம். தென் மாவட்டங்களைப் போல வெளிப்படையாக இல்லையென்றாலும், சென்னைக் கல்லூரியிலும் சாதி உணர்வு நீறு பூத்த நெருப்பாகவே இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

90களின் இறுதியில் நடந்த தென்மாவட்டக் கலவரத்தில் வாழ்க்கை இழந்த ஒரு தலித் மாணவனின் கதை இது. பதினெட்டு வயது கூட நிரம்பாத அந்த தலித் மாணவன் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டான். பிறகு குண்டர் சட்டத்தில் சிறைவாசம் தொடர்ந்தது. பாளையங்கோட்டை சிறையில் தேவர் சாதி கைதிகள் அவனைப் பழி வாங்குவதற்குத் திட்டம் தீட்டியிருக்கின்றனர். இதை அறிந்த அந்த மாணவன் முந்திக் கொண்டான். சாப்பிடும் அலுமினியத் தட்டை உடைத்துக் கத்தியாக்கி தேவர் சாதிக் கைதி ஒருவரைக் குத்தி விட்டான். இப்போது அந்த மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? அவனைப் படிக்க வைக்க விரும்பிய பெற்றோரின் கனவு என்னவாக இருக்கும்?

கொடியன் குளம் கலவரத்தை ஒட்டி பல தலித் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை விட்டு நீக்கம் செய்யப்பட்டார்கள். இதனாலேயே பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி பறிபோனது. இன்றைக்கும் அவர்கள் கலவர வாய்தாவுக்காக நீதிமன்றத்திற்கு அலைந்தவாறு வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். சாதி இந்துக்களுக்குச் சொந்தமான தனியார் கல்லூரிகள் மட்டும்தான் இப்படி அவர்களை நடத்துகின்றன என்பதில்லை. சென்னையில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் அனைத்திற்கும் நீங்கள் சென்று பார்த்தால் இந்த அரசு தலித் மாணவர்களை எப்படி தொழுவத்தில் இருக்கும் மாடுகளைவிட கேவலமாக நடத்தி வருகிறது என்பதைப் பார்க்கலாம். இப்படி சமூக ரீதியிலும், அரசாங்க ரீதியிலும் பல்வேறு தடைகளை தாண்டித்தான் தலித் மாணவர்கள் தலையெடுக்க போராடி வருகிறார்கள்.

இப்போது மீண்டும் சட்டக்கல்லூரிக்குத் திரும்புவோம்.

ஒரு விபரீதத்தை விதைக்கிறோம் என்று தெரிந்தே ஊடகங்கள் சட்டக்கல்லூரிக் காட்சிகளை விலாவரியாகப் பதிவு செய்திருக்கின்றன. “போலீசு கைகட்டி வேடிக்கை பார்த்தது” “கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று ஏதேனும் ஒன்றை நிரூபிப்பதே தங்கள் நோக்கம் என்று அவர்கள் கூறிக்கொள்ளலாம். சில போலீசார் பணிநீக்கம், மாற்றல், ஒரு சட்டசபை வெளிநடப்பு என்பதற்கு மேல் இவர்கள் யாருக்கும் எதுவும் நடக்கப் போவதில்லை.

ஆனால் தமிழகத்துக்கு என்ன நடக்கப் போகிறது? மீண்டும் பல கொடியன்குளங்கள் துவங்கலாம். தமிழகமெங்கும் அடுத்த சுற்று கலவரத்தை இச்சம்பவம் ஆரம்பித்து வைக்கலாம். மீண்டும் பல தலித் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையினை இழந்து ஆயுள் கைதியாக சிறைக்குள் செல்லலாம். கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் சாதி கௌரவத்தை விட முடியாத ஆதிக்க சாதி மாணவர்களும் தங்கள் வாழ்க்கையினைச் சிறைக்குள் தொலைக்க நேரிடலாம். பிறகு அவர்கள் தாதாக்களாகவோ, சாதிச் சங்கத் தலைவர்களாகவோ பதவி உயர்வு பெற்று தமிழக்தைத் தொடர்ந்து சாதிவெறியின் பிடியில் இருத்தி வைக்கலாம்.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சாதி ரீதியாக பிரித்து பயிற்றுவித்திருக்கும் பார்ப்பனியத்தின் விளைவாக நடக்கும் இந்தக் கொடுமைகளுக்கு இதுவரை விடிவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு அடுத்து வர இருக்கும் கலவரச் செய்திகளுக்காக அச்சத்துடன் காத்திருக்க வேண்டும். அல்லது இந்த வெறித்தனத்தைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி நம்மால் இயன்றதனைத்தையும்  செய்ய வேண்டும்.

களத்தில் இறங்கிச் செய்வது என்றால் அதற்கு கையில் தடியை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தில் தீண்டாமை என்னும் அநீதிக்கு எதிராக உரத்துப் பேசவேண்டும். செயல்படவேண்டும். சாதி எதிர்ப்புப் பதிவுகளால் பதிவுலகம் நிறைய வேண்டும். பதிவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

__________________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011
__________________________________________________

 

1

2

3

 

5

tbltopnews_51757013798

6

7

8

9

10

11

12

13

15

16

17

19

21

20


 1. //களத்தில் இறங்கிச் செய்வது என்றால் அதற்கு கையில் தடியை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தில் தீண்டாமை என்னும் அநீதிக்கு எதிராக உரத்துப் பேசவேண்டும். செயல்படவேண்டும். சாதி எதிர்ப்புப் பதிவுகளால் பதிவுலகம் நிறைய வேண்டும். பதிவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.//

  Well Said Vinavu… I request the Blog community to raise their Voice against Caste opperssion which is the breeding ground for all the Violence.

  Prognostic sage

 2. //அந்த அதிசயம் நடக்கவேண்டும் என்பதே எமது விருப்பம்.//

  ஆனால் நீங்கள் எழுதி உள்ள பதிவு… சாதி கலவரத்தை தூண்டுவது போல் அல்லவா உள்ளது

 3. Now we have tha clear picture. இந்த கடமை தவறாத காக்கிசட்டை கார்மேகங்கள், ஜாதி வெறி பிடித்த மாணவர்களை என்ன செய்வது? இவர்களை பெற்ற பெற்றோரினை என்ன செய்வது?

 4. //களத்தில் இறங்கிச் செய்வது என்றால் அதற்கு கையில் தடியை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தில் தீண்டாமை என்னும் அநீதிக்கு எதிராக உரத்துப் பேசவேண்டும். செயல்படவேண்டும். சாதி எதிர்ப்புப் பதிவுகளால் பதிவுலகம் நிறைய வேண்டும். பதிவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.//

  இதை நான் வழி மொழிந்து, தேவர் ஜாதியில் பிறந்த நான், தீண்டாமை எனும் அரக்கனுக்கு எதிராக குரல் கொடுக்கிறேன்.
  முருகேசன்

 5. ஜாதிக்காக சண்டை போடுபவர்களை எதிர்க்கும் குரலில் என் குரல் முதல் குரலாக இருக்கும்.
  முருகேசன்

 6. “ஜாதி என்ற வார்த்தையே தமிழ் கிடையாது” என்றார் பெரியார். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், உழைக்கும் வர்க்கத்தை பிரித்து வைத்து, வயிறு வளர்க்கும் பார்ப்பனிய கும்பல், அதற்கு அடுத்தப் படியான (சுரண்டல்) சமூகமான மற்ற மேல் ஜாதிகள் ஆகியோரே இந்தமாதிரியான இழிநிலைகளுக்குக் காரணம். பார்ப்பனியத்திற்கு அடுத்தப்படியாக தாம் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் மற்ற சுரண்டல் சமூகங்கள், தாங்கள் காலகாலமாக மிக கேவலமான முறையில், தந்திரமான மறைமுக கருவிகளாகப் பார்ப்பனியத்திற்குப் பயன்படுகிறோம் என்பதை உணர வேண்டும்.

  தாங்கள் தற்போது அனுபவித்து வரும் (அழுகி வரும்) நிலபிரபுத்துவ நலன்களும், சிறு மற்றும் குறு தொழில்கள், மற்ற தொழில்கள், நிதி மூலதனம் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து போய் விடுமே என்ற பயமுமே, இந்த சரண்டல் முதலாளிகளையும், அவர்களால மூளைச்சலவைச் செய்யப்படுகின்ற, இந்த ஜாதியைச் சார்ந்த மக்களும், இவ்வாறு வன்முறை செய்யத்தூண்டுகிறது. இந்த பயத்தின் காரணமாக அவர்கள் எடுக்கின்ற ஒரு பாதுகாப்பு வேலியே, தாழ்த்தப்பட்டோரின் மீதான அவர்கள் அடக்குமுறை வடிவம் என்பதை அவர்கள் உணரவேணடும். தற்போது உள்ள தாராள மயத்திற்கு எதிராகப் போராட, உழைக்கும் வர்க்கம் ஒன்றுப்பட்டுப் போராட வேண்டும். இல்லாவிட்டால், இந்த வேற்றுமைகள், தாராளமயம் மிக நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும். உதாரணமாக, தனியார் நிறுவனங்களில் மிக உயர் பதவிகளில், பார்ப்பனியர்களே அமர்த்தப்படுகிறார்கள். தமிழர்கள், ஜாதியத்தால் பிரிந்துப் போய்கிடைக்கிறார்கள். சில பார்ப்பனியர் அல்லாத சுரண்டல் சமூகங்களுக்கும் இந்தமாதிரியான பணி கிடைக்கிறது என்பதும் உண்மையே. ஆனால், அது அந்த சமூக மக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது மிக குறைவு என்பதை உணரவேண்டும். “திருந்துங்கள் !! இல்லாவிட்டால், அழிந்துப் போவீர்கள்”

  அறிவுடைநம்பி
  http://purachikavi.blogspot.com

 7. வினவு நீங்கள் நன்றாக எழுதியுள்ளீர்கள் என்று சொல்லி பாராட்டுவதை விட, நன்றாகவும் – ஆழமாகவும் இதனை அலசியுள்ளீர்கள். சாதிய மற்றும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராடுவது என்ற களத்தை இன்றைக்கு இழந்து நிற்கிறது தமிழகம். குறிப்பாக பெரியார் இந்துத்துவ பார்ப்பனீயத்திற்கு எதிராக போராடியதை அவர் வெறும் பார்ப்பனர்களுக்கு எதிராகத்தான் போராடினார் என்பது போல திராவிட இயக்கங்களே திரித்து விட்டதும். அதனை சுருக்கி விட்டதும். வாக்கு வங்கி அரசியலுக்காக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை தாஜா செய்து தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. மேலும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் சிந்தனைகளும் தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. பெரியாரின் சிந்தனை வளர்ச்சிக்கு தூண்டு கோலாக இருந்தவர் சிங்காரவேலர். அந்த அடிப்படையில் சிங்காரவேலரின் ஜாதியம் குறித்த சிந்தனைகள் அறிவியர் பூர்வமானது. அத்துடன் இன்றைய இந்துத்துவவாதிகள் இந்த ஜாதியத்தை இறுகிப்பிடிக்கும் பார்ப்பனீயத்தை கடை விரித்து வருவது இன்னொரு புதிய ஆபத்து. எனவே இந்த பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக ஒரு விரிவான பண்பாட்டுத் தளத்தில் போராட வேண்டியுள்ளது.

  இறுதியாக நன்பர் பாலன் தனது பார்வையை விசலாப்படுத்த வேண்டியிருக்கிறது. இடஒதுக்கீட்டுச் சிந்தனை அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்குமோ என்றுத் தோன்றுகிறது. இங்கே அனைவருக்குமான இடத்திற்கான போராட்டத்துடன் – சாதி கொடுமைக்கு எதிரான போராட்டத்தையும் மிக வலுவாக கொண்டுச் செல்ல வேண்டும்.

 8. இந்த வன்முறையில் தலித், தலித் அல்லாத
  என்று பிரித்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை.
  மாணவர்களிடையே சாதி அரசியலை எந்த விதத்தில் புகுத்தினாலும் அது இறுதியில்
  வன்முறையில் முடியும்.

 9. ‘தென்மாவட்டங்களில் இருக்கும் எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் சாதி இந்துக்களுக்குச் சொந்தமானவை என்பதால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இங்கே நவீன அடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். ‘

  சந்தடி சாக்கில் பொய்களை வீசும் வினவே,
  அரசு,மைனாரிட்டி பள்ளிகள்,கல்லூரிகள் யாருக்கு சொந்தம்?.

 10. ‘புகைப்படங்களின் பிந்தைய பிரேம்களில் கட்டையால் அடிவாங்கும் மாணவன், சற்று நேரத்துக்கு முன் கையில் ஒரு அடி நீளக் கத்தியுடன் பாய்ந்து வருவதையும் பார்க்கிறோம். இந்தக் கத்தி ஒரு தலித் மாணவனைப் பதம் பார்த்திருக்கிறது. விளைவு நாம் தொலைக்காட்சிகளில் கண்ட அந்தக் காட்சி.’
  அடுத்து இண்டர்வெல்லுக்குப் பின் சண்டை
  காட்சி தொடரும் என்பது போல் எழுதுகிறீர்கள் :(.

 11. நான் இன்று முதல் ஜாதி வெறி கொண்டவனாய் மாறிவிட்டேன்….தேவர்கள் தாக்கப்படும்போது நீதி சொல்ல ..யாருமில்லை.. பாவப்பட்ட தேவர்கள் ஒன்றுபடுவோம்…

 12. //களத்தில் இறங்கிச் செய்வது என்றால் அதற்கு கையில் தடியை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தில் தீண்டாமை என்னும் அநீதிக்கு எதிராக உரத்துப் பேசவேண்டும். செயல்படவேண்டும். சாதி எதிர்ப்புப் பதிவுகளால் பதிவுலகம் நிறைய வேண்டும். பதிவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.//

  முழுக்க முழுக்க வழிமொழிகிறேன். பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட பதிவு. தொடர்விளைவுகளை அரசாங்கமும் முன்னுணர்ந்து அணைபோடவேண்டும்.

 13. நான் இன்று முதல் ஜாதி வெறி கொண்டவனாய் மாறிவிட்டேன்….தேவர்கள் தாக்கப்படும்போது நீதி சொல்ல ..யாருமில்லை.. பாவப்பட்ட தேவர்கள் ஒன்றுபடுவோம்.. I am too ready to act for our thevars… here after Do or die… thevars dont foolish your selves.. see this writer how narrated it as story evevn donot have a humanity… yes they will get fruit soon…

 14. நல்ல வேளை, இந்த ஜாதி வெறி தாக்குதல்களுக்கும் காரணம் பார்பனர்கள் தான் என்று திராவிட குஞ்சுகள் வழக்கம் போல பிதற்றவில்லை.

 15. தடி எடுப்பதிலும் தலித்துக்கு சலுகை, தாக்கப்பட்ட தேவர் இனத்தவனுக்கு காப்பாற்ற யாரும் இல்லை – எம் பலம் தவிர. வேடிக்கை பார்க்கும் காவலர் கருணாநிதியிடமும் திருமாவளவனிடமும் போன் கால் எதிர்பார்த்து அழைக்கும் காட்சிகளையும் நாங்கள் தொலைக்காட்சிகளில் கண்டோம். தென்மாவட்ட ஜாதி கலவரம் எம்முள் தைத்த வலி யாருக்கு தெரியும். இழந்த உறவுகள் அடைந்த வேதனை யாருக்கு புரியும். சலுகை காட்ட நாங்கள் தலித்தாக பிறக்காததுதான் காரணமா.

 16. தலித்துகளின் மேல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வரும் தேவர் மற்றும் அனைத்து சாதியினரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  காவல் நிலையங்களும், காவல் அதிகாரிகளும் தலித்துகளுக்கு எதிராகவே பெரும்பாலும் நடக்கின்றனர். இதற்கு அரசு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். காவல் நிலையங்களில் அந்தந்த வட்டாரங்களில் பெரும்பான்மையாக இருக்கும் சாதியினரை நியமிப்பதைத் தடுக்க வேண்டும். காவலர்களைப் பிற பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். தலித்துகள் கணிசமான பங்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காவல் அதிகாரி பதவிக்கு திறமையாகவும், நேர்மையாகவும் செயல்படும் வேற்று மாநிலத்து அதிகாரிகளை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

  கல்வி நிலையங்களில் தலித்து மாணவர்களை இழிவாகப் பேசுவதும் கிண்டல் செய்வதுமே கல்விநிலையங்களில் நிகழும் அனைத்து சாதிக்கலவரங்களுக்கும் மூலக்காரணம். இதில் தேவர்கள் மட்டுமல்லாமல் அனைத்துச் சாதியினரும் ஈடுபடுகின்றனர். ஆசிரியர்களும் இவ்வாறு நடந்து கொள்வதுண்டு. இதற்குத் தகுந்த தண்டனைகள் அளிக்க வேண்டும்.

  கல்வியிலும் அடிப்படையில் மாற்றம் ஏற்படவேண்டும். ஆரம்பப் பள்ளியிலிருந்தே சாதியைப் பற்றியும், சாதிப்பிளவுகளைப் பற்றியும், கொடுமைகளைப் பற்றியும் மூடிமறைக்காமல் வரலாற்றைச் சொல்லிக் கொடுத்து சாதியமைப்பை எதிர்க்கும் குணம் உருவாக்கப் படவேண்டும். பெரும்பாலான வீடுகளில் சாதியமைப்பு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கற்பிக்கப் படுகின்றது. கட்டியமைக்கப் படுகின்றது. பெற்றோர்களை வைத்தே பள்ளிகளில் சாதிக்கெதிரான பாடங்களை நடத்தச் சொல்லவேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் இரட்டைவேடமும் புரிய வரும்.

  நன்றி – சொ. சங்கரபாண்டி

 17. If fishing in trobuled waters is the intention this post has done that well. Where is the need at this stage
  to indicate the castes of the students who clashed
  among themselves. Dont add fuel to fire in the name
  of your revolutionary politics.The responses show that this post has sown seeds of discord.

 18. ‘ஆதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தில் தீண்டாமை என்னும் அநீதிக்கு எதிராக உரத்துப் பேசவேண்டும். செயல்படவேண்டும். சாதி எதிர்ப்புப் பதிவுகளால் பதிவுலகம் நிறைய வேண்டும். பதிவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.’

  If the issue is that of dalit students vs non-dalit students, then what can bloggers do. The students
  who have been misguided should be made to realise their mistakes first. For that first peace should prevail.
  Then both sides should talk with each other.

 19. கட்டுரை சரியான திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. சாதிகளை நாம் விட்டொழிக்க முடியாது. அது நாம் இரத்தின் சிவப்பணுக்காய் மாறிவிட்டன. எனினும் சாதி வெறியை ஏற்காது இருப்போம்.
  – நிலவன்

 20. சாதிவெறி கட்டுரை
  தேவையான பதிவு
  முடிந்தால் கலகத்தினுள் வந்து எங்கள்
  கட்டுரையை
  விமர்சிக்கவும்

  நன்றி
  கலகம்
  http://kalagam.wordpress.com/
  http://kalagam-therebellion.blogspot.com/

  தேவை : சாதிக்கெதிராய் கலகம்
  “காலேஜுல படிக்கறவனுங்க மாதிரியா நடந்துக்கிறானுங்க, ரவுடிமாதிரியில்ல
  நடந்துக்கிறானுங்க”,பாவம் அந்த பையன் கீழ விழுந்துட்டான்,ஒரு மனுசாள
  அத்தன பேரு அடிச்சாங்களே மிருகம் மாதிரியில்ல யஇருக்கு” இதெல்லாம்
  நேற்று சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த அடிதடி குறித்து வெளியில் மக்கள்

 21. தமிழன் என்ற உணர்வு எப்பொழுதெல்லாம் தலைதூக்குகின்றதோ அப்போதெல்லாம் சாதிக் கலவரங்களை தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பது அரசுகளின் தந்திரம். வ.உ.சி. சிறைப்பட்டபின் ஏற்பட்ட திருநெல்வேலி கலவரத்திற்குப் பின்னர் அங்கு சாதிக்கலவரங்களை ஆங்கிலேய அரசு தூண்டி விட்டதும், தமிழ்நாடு விடுதலைப் படையின் எழுச்சியைத் தணிக்க தென்னார்க்காடு பெரம்பலூர் மாவட்டங்களில் சாதிக்கலவரங்களைத் தூண்டி விட்டதும் கடந்த கால வரலாறுகள். இதோ ஈழத்தமிழரின் இன்னல் துடைக்க தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த மோதல். தேவர் செயந்தி முடிந்து பதினைந்து நாளுக்குப் பின்னர் …..?

 22. மனதில் மிக வேதனையோடு ஒட்டு போட்டேன். இன்று மதியம், NDTV யில் பார்த்து உறைந்து போய்விட்டேன். மாணவர்கள் மனதிற்குள் இவ்வளவு வன்மமா? யார் இதை இவர்களிடம் விதைத்தது. ஜாதி இவ்வளவு தீவிரவாதம் காட்டுமா? இவர்கள் படித்து, சமுதாயதிற்கு என்ன நன்மை செய்வார்கள். வேதனைதான் மிஞ்சுகின்றது. இராகவன், நைஜிரியா

 23. கட்டுரை முடிவில் நன்றாக இருந்தாலும்.. கட்டுரையாளர்
  ஆரம்பித்த தொனி
  நடுவுநிலைமையோடு இருப்பதாகத் தெரியவில்லை. இம்மாதிரிக் கட்டுரைகள்

  மேலும் பிரச்சினைகளை உருவாக்குமேயன்றி பிரச்சினைக்குத் தீர்வுக்கு வழிவகுக்காது. இடையில் கலகம் என்பவர் வேறு கலகத்தை உண்டுபண்ணும் சுட்டியை இட்டிருக்கிறார்.. யாரை யார் அடித்தாலும் வலிக்கும் நண்பரே.. அவரவர் திருந்தினாலன்றி எந்த முன்னேற்றமும் வரப்போவதில்லை… சோற்றுக்கு வழியில்லாத நிலைமை வந்தால் மட்டுமே, சாதியும் மதமும் எந்த மூலைக்குப் போகும் எனத் தெரியும்..

 24. வினவு எழுதியதைப்படித்தபின் நடந்த நிகழ்வைப்பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. மிகப்பெரும் பிரச்னையை இந்த சம்பவம் மூலம் எல்லோரும் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விரைவில் முழுமையாக அமுல்படுத்தவேண்டும்.

  வன்முறைக்காட்சிகளை 100% இனி திரைக்குவரும் தமிழ்ப்படங்களில் இருந்து தணிக்கைக்குழு வெட்டவேண்டும்.

  சாதி ஒழியாமல் தமிழ் வளரமுடியாது என்பதை தமிழ் உணர்வாளர் அனைவரும் புரிந்து கொண்டு முழு வீச்சாகப்பாடுபடவேண்டும்.

  தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் சாதி ஒழிப்புக்கு எப்படிப் பாடுபட்டார்கள் என்பதை தொடர்ந்து கருத்தரங்குகள், புத்தக வெளியீடுகள், ஒலி, ஒளி தட்டுகள் மூலம் பரப்பவேண்டும்.

  சாதி மறுப்புத்திருமணங்களை மிகவும் அதிகமாக நடக்க செய்யவேண்டியவற்றை செய்யவேண்டும்.

  சாதிக்கலவரமானாலோ, சேது திட்டம், முல்லைப்பெரியாறு, காவிரி, கிருஷ்ணா நதி திட்டமானாலோ – எவ்வளவுதான் தமிழ்ச்சமுதாயத்திற்கு சீரழிவு ஏற்பட்டாலும் – சோ, சுப்ரமணியசாமி, RSS, இந்து முன்னணி வாயே திறப்பதில்லையே ஏன் என்பதையும் தமிழர்கள் அனைவரும் உணரச்செய்யவேண்டும்.

  சாதி ஒழியும் நாளே – தமிழர் உயரும் நாள்

 25. இந்த வன்முறையில் தலித், தலித் அல்லாத
  என்று பிரித்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை.
  மாணவர்களிடையே சாதி அரசியலை எந்த விதத்தில் புகுத்தினாலும் அது இறுதியில்
  வன்முறையில் முடியும்.

 26. இப்படி ஒரு பதிவைத்தான் தேடிகொண்டிருந்தேன். இந்த முக்கியமான பதிவுக்கு மிகவும் நன்றி.

 27. நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல…

  தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ….

  யாரவது எதாவது சாதித்தால்.. தமிழுக்கே.. தமிழருக்கே பெருமை என்று சொல்லி கொள்கின்றோமே…

  இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது…

  மேம்போக்காக பார்த்தால், எதோ மாணவர்கள் வெறிபிடித்து சண்டை போட்டதாக தோன்றுகின்றது..

  இதற்கு யார் காரணம்…?

  ஜாதி யா?

  தமிழ் நாட்டில் யாரும் ஜாதி பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..

  பெயரில் இல்லை … ஆனால்..

  ஜாதி தமிழனின் குருதியில் கலந்து விட்டது..

  வோட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளால்..

  வேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி வெறி அதிகம்…

  என்ன செய்வது…

  ௧.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..

  ௨.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..

  ௩. ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் …

  ௪ . வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்…

  ௫ . அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, “ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் ” … “அடங்க மறு ” என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..

  ௬ . கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் …

  இதெல்ல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும்…

  ஆனால்…கண்டிப்பாக இவை எதுவும் நடக்க போவதில்லை ….

  மூன்று வருடங்களுக்கு முன், ஒரு சமூகத்தின் தலைவரின் ஜெயந்தி விழாவை ஒட்டி, என் கல்லூரி மாணவர்கள் திடீர் என்று இரண்டு பட்டதை என் கண்களால் பார்த்தேன்..

  பொறியியியல் படிக்கும் வசதி படைத்த நகரத்து மாணவர்களே உருட்டு கட்டைகளுடன் திரிந்தனர்..

  அன்று நடந்தது பெரிதாக வில்லை / பெரிதாக வெளியில் தெரியவில்லை…

  இன்று ஊடகங்களின் கண் முன் நடந்து விட்டது..

  நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல…

  தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ….

  Maayoan @gmail.com

 28. உலகிலேயே மிகவும் மோசமான் நிறவெறி ஆப்பிரிக்காவிலும்,அமெரிக்காவிலும் அடங்கி விட்ட போதும் தமிழன் மனிதனாக வாழ மாட்டேன் என்பது வெட்கமும் வேதனையும் பட வைக்கின்றது.
  ஆரம்பப் பள்ளி முதலே அனைத்து ஆண்,பெண் பிள்ளைகள் கல்ந்து அமர்ந்து,விளையாடி,பாடி,பேசி ஒன்றாக வள்ர்க்கப் பட வேண்டும்.சாதிக் கொடுமைகள் அலசப் பட வேண்டும்.பிஞ்சு உள்ளங்களிலே மனித நேயம் வளர்க்கப் பட வேண்டும்.
  ஒவ்வொரு பள்ளியிலும் அனைவரும் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு நிகழ்ச்சிகள் பாடத்திட்டத்துடன் இணைந்து இருக்க வேண்டும்.திருச்சி,தஞ்சை
  பெரியார் கல்வி நிறுவணங்களைப் பாருங்கள்.
  மாணவர்கள் கலந்து பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
  அவர்களின் திறமையை வெளிப்படுத்தி ஒற்றுமையை
  வளர்க்கும்.மிகவும் நன்றாகப் பாடும்,நடிக்கும்,விளையாடும் யாரையும் மற்ற சாதியினரும்
  நட்புடனும்,அன்புடனுந்தான் பழக முயல்வார்கள்.
  அங்கங்கே கலவர ஆர்வமுள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கவுன்சலிங் எனும் அறிவணைப்பு
  குழுக்கள் மாணவர்களாலேயே நடத்தப் பட வேண்டும்.

  இந்தியா கொண்டு வர இருக்கும் அடையாள் எண்ணைச்
  சரியாக உண்டாக்கினால்,அதில் படிப்பு,வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு மட்டும் பயன் படும் படி சாதியைப் பயன் படுத்தி மற்ற சாதிக் குறிப்புகள்,சான்றிதழ்கள் தேவையில்லாமல் செய்து விடலாம்.அதை முதலில் தமிழ்நாட்டிலே படைத்துக் காட்டலாம்.
  மெல்ல இனி சாதி சாகட்டும்,வேகமாகச் செத்தால் மிகவும் மகிழ்வோம்.

 29. Thirumaran,
  நான் இன்று முதல் ஜாதி வெறி கொண்டவனாய் மாறிவிட்டேன்….தேவர்கள் தாக்கப்படும்போது நீதி சொல்ல ..யாருமில்லை.. பாவப்பட்ட தேவர்கள் ஒன்றுபடுவோம்.. I am too ready to act for our thevars… here after Do or die… thevars dont foolish your selves.. see this writer how narrated it as story evevn donot have a humanity… yes they will get fruit soon…

  aamam na namlam manidhargal illaiya?avargal mattum thana?edathai kuduthal madathai pudipargal enru solvargal…neegal yar urimai tharuvarthirku yaenru sila paer inga kaetal ingae “idam” yaenpathu sema urimaiyae…. sema urimai kuduthal nam sangathi pullu poondu kuda illamal alithu veduvargal pola….

 30. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் இறைவனிடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக இறைவன் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
  திருக்குர்ஆன்49-13

 31. Stop talking about these issues and start thinking of your own development and country’s develpoment which will automatically raise the levels of the life you are living where in no partition will be found in the future. It is a SHAME for our state. See where you are standing now and do something useful for your parents and the nation. Nothing is going to change..Only one thing can change that is EDUCATIOn and you are screwing up on that and fighting…That is so unhuman. Go for jobs in some other state, they will call us cannibals. Stop prancing about Jaathi and stuff and start thinking about how to change it. Screw the students whovever has involved in the altercation. NO MERCY. I love my Nation and i dont care a damn about others and i will work for the prosperity of this nation. JAI HIND.

 32. Intha katturaiyai patikkum varai.. thaakkap patta nabar enna jaathi thaakiyavarkal enna jaathi nu theriyaathu.. aanaal ippo oralavukku therithu.. pillayaar pidikka poyi koranga mudinja kathai ithu thaan..

  ithai puratchi endru niruvum vithathil ungkal katturaiyin thoni amainthu irukkiRathu..

  puratchiyin nokkam jaatheeyam illaatha nilai yai uruvaakkuvathu .. athai viduthu un jaathikku en jaathi samam enbathai niruvuvathu alla…

  ma.ka i.ka engo thadumaarukirathu… thozharkal chinthippathu nallathu..

 33. வினவு,

  தேவர் ஜாதியினரின் ஆதிக்க வெறி குறித்து நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை..அப்படியே நாடார், முதலியார், செட்டியார், வன்னியர், அருந்ததியர், பறையர், பள்ளர் என்று இன்னும் பல நூறு ஜாதிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. ஜாதி வெறி என்பது இந்தியர்களின் தனிப்பட்ட சொத்து..அது எந்த ஜாதியாக இருந்தாலும்!

  மற்றபடி, சட்டக்கல்லூரி மாணவர்களின்(???) கொலைவெறி பற்றி ஆச்சரியப்பட எதுவுமில்லை..பொதுவாக எல்லாப் பள்ளிகளிலும் உருப்படாத கோஷ்டி என்று உண்டு. இதில் ஜாதி பேதமில்லை. பெரும்பாலும் இந்த உருப்படாத கோஷ்டி தான் சட்டக் கல்லூரியில் சேருகிறது..பி.எஸ்.ஸி எல்லாம் இவர்கள் படிக்க முடியாது, ஏனெனில் இவர்கள் +2வில் படிப்பது ஹிஸ்டரியாக இருக்கும்..

  இப்படி பட்ட ஒரு கோஷ்டி கல்லூரியில் கொலை வெறியில் ஈடுபடுவதில் என்ன ஆச்சரியம்??

  இரண்டு பொறுக்கி கும்பல்கள் மோதிக் கொள்வதற்கு இத்தனை மீடியா கவரேஜா? இது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!

 34. In noway the Brahmins came in to the picture.
  உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சாதி ரீதியாக பிரித்து பயிற்றுவித்திருக்கும் பார்ப்பனியத்தின் விளைவாக நடக்கும் இந்தக் கொடுமைகளுக்கு இதுவரை விடிவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு அடுத்து வர இருக்கும் கலவரச் செய்திகளுக்காக அச்சத்துடன் காத்திருக்க வேண்டும். அல்லது இந்த வெறித்தனத்தைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி நம்மால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும்.
  Please tell me who are all the Brahmins enaged in this?
  How many Iyers Iyer Dahdhas are took their stick in their hands?
  Ok if you say that Brahmins taught untouchablity 1000 years back, why all the people in Tamil Nadu follows that?
  Don’t they have their own sense?
  Brahmans in this population is hardly 2.5%.
  By telling that Brahmans directed the Caste Hindus to attack Dalith it is laughable.
  Do you meant to say that there are people to hear Brahmans?

  Dear friends
  No Brahmans are involved in this. So before uploading a sentence against a community think twice. You may the owner of the web and may remove my postings. But truth is the truth. By deleting my post it is not going to hide its’ face.

 35. கல்வி நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களாக
  செயல்பட வேண்டும். அங்கு சாதி,மத,கட்சி அரசியலை யாரும் எக்காரணம் கொண்டும்
  நுழைக்கக் கூடாது என்பதை வினவு போன்றவர்கள் ஏற்கிறார்களா.வன்முறை
  என்பதை யார் செய்தாலும், அதற்கு பதில்
  இது என்று நியாயப்படுத்த வேண்டாம்.
  கத்தியால் குத்தினான் இவன் அதற்கு பதிலைத் தான் நீங்கள் பார்த்தீர்கள்
  என்று எழுதுவதை தவிர்க்கலாமே.

 36. சட்டக் கல்லூரி விவகாரம் பொறுத்தவரை, ஆதிக்க சாதிகள் தலித் மாண்வர்களை எப்பொழுதும் சீண்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

  பலமாய் எங்கிருக்கிறார்களோ, சேர்த்து சேர்த்து வைத்த கோபம் ஒரு நாளில் வெடிக்கிறார்கள்.

  இந்த பிரச்சனையில் யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பது விசாரணையில் தான் தெரியவரும்.

  சாதி வெறி, சாதி ஒழிந்தால் தான், இதற்கு நிரந்தர தீர்வு. உங்கள் கட்டுரை கோருவது சமூகப் பொறுப்பு. விபரீதம் உணர்ந்து சகலரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

 37. Caste conflicts and caste based politics are part and parcel of Tamilnadu Politics, thanks to people like Ramaswamy Naicker, Karunanidhi, Veeramani, Thirumavalan and the likes..
  Long Live Tamilnadu !!

 38. குறிப்பிட்ட ஜாதியினரை மட்டும் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை

  எல்லோரிடம் தவறு உள்ளது
  ரத்தம் சதை எல்லோருக்கும் ஒன்று தான்

  ரத்த வெறி கொண்டு விளையாடிய வெறி நாய்களிடம் தனியாக சிக்கிக்கொண்டு தவித்த, இந்த பாழைப்போன மானிட ஜென்மம் தன்னை காப்பாற்றி கொள்ளவும் தன் நண்பனை விடுவிப்பதற்கு கத்தி எடுத்ததில் எந்த தவறும் இல்லை என்பது என் கூறு

  இதை அதிகாரமும் பலமும் கொண்ட போலீஸ் (உங்கள் நண்பன்) என்று சொல்லி கொள்ளும் கேடு கெட்ட ஜென்மங்களை நினைக்கும் போது மனம் வருந்துவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது

  நானும் தேவர் இனத்தை சேர்ந்தவன் தான்

  சாதியின் பெயரால் என்னை என் பெற்றோர்கள் வளர்க்க வில்லை

  ஒரு தலித் நண்பனுடைய திருமண விழாவில் கலந்து கொண்டு உதவி செய்திருக்கிறேன் / சாப்பிட்டு இருக்கின்ற்றேனி எனது முக்கால் வாசி நண்பர்கள் தலித் நண்பர்கள் தான்

  இதில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற வேற்றுமைக்கு எள்ளளவும் நுழைந்ததில்லை

  என்னையும் தலித் இன நண்பர்கள் சீண்டியிருக்கின்றனர்

  அவர்களையும் எனது இன சொந்தங்களும் தாக்கி இறுக்கினர் எல்லோரிடம் தவறு உள்ளது

  ஒரு இன மனிதர்களை மட்டும் கண்டிப்பது மிகப்பெரிய தவறு

  ரத்த வெறி கொண்டு விளையாடிய வெறி நாய்களை பெற்றார்களே பெற்றோர்கள் ..
  சா(தீ) என்னும் தீயில் குளிர் காயும் அரசியவாதிகள், காவல்துறையினர் மற்றும் வெறி கொண்டு திரியும் நாய்களை கல் கொண்டு எரிய வேண்டாம் தடுக்க முயற்சி கூட செய்யாத பொது ஜனம் இவர்களை விட பாவம் செய்தவர்கள் எவரும் இருக்க முடியாது

 39. நாட்டின் நீதித்துறைக்கு வர இருக்கும் இளைஞர்களே இப்படி என்றால் பாமர மக்களின் நிலை என்ன?

  அதிர்ச்சியாக இருக்கிறது?

  http://www.ajeevan.ch

 40. காந்தியும் புத்தரும் பிறந்த நாட்டில் இது போன்ற காட்டு மிராண்டிகளும் பிறந்துள்ளர்கள் என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது , அமெரிக்காவில் கூட வெள்ளை கறுப்பின சண்டைகள் முடிவின் அடையாளமாக அந்நாட்டு மக்கள் ஒபாமாவை அதிபராக தேர்ந்து எடுத்து உள்ளனர் , இது உலகே வியக்கும் விஷயம் அனால் நம் நாட்டில் சாதி வெறி இன்னும் சாகவில்லை என்பதை சட்ட கல்லூரி (காட்டு மிராண்டி) மாணவர்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளனர்.

  அகிம்சை மண்ணிலா இது போன்ற கொடூர செயல்கள் , அரசு ………….. கல்லுரிகள் மட்டும் அல்லாமல் அணைத்து துறைகளிலும் சில கட்டுபாடுகளை கொண்டுவரவேண்டும்.

  குடிநீருக்கும், நல்ல சாலைகளுக்கும் போராட்டம் நடத்தும் போது பொது மக்களை அடித்து விரட்டும் காவல் துறை நேற்று கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது……

  இந்த உருட்டுக் கட்டை அடி, என் மேல் விழுந்தது போல உணர்கிறேன்! இந்த தாக்குதல் நம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்! இந்த தாக்குதல் நாகரீக சமுதாயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

  நம் மனசாட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

  இந்த நிலமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

  நாம் அனைவரும் வெட்க பட வேண்டிய நிகழ்வு…

 41. உங்கள் மூலம் உண்மை நிலையை அறிந்தேன். முதல்வர் அவர்களும் அவருடன் கூட்டணி வைத்துக்கொண்டு தலித்துக்கான கடவுள் என்று தன்னை பாறை சாற்றிக் கொள்ளும் திருமாவளாவன் என்ன அறிக்கை விடுவார். கூட்டணியில் உள்ள ராமதாஸ் இதப்பற்றி என்ன சொல்லுவர், மார்க்ஸ் சொன்னது
  போல ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் பலன் உள்ளது என்பது மீண்டும் உண்மையக்கிரது. பாவம் இதில் அப்பாவி மக்கள் மாட்டிக் கொள்வது வேதனை அள்ளிகிறது.

 42. தக்கப்படுபவன் தலித் என்றால் இந்நேரம் அனைத்து உடகங்களும் வரிந்து கட்டி எழுதும், இந்தியாவே பற்றி எரிந்திருக்கும் தேவர் என்பதால் வாய் மூடி அனைத்தும் பொத்தி அமைதி காப்பதன் மர்மம் என்ன? ஆயுதம் ஏந்திய கும்பல்களை தொலைக்காட்சிகளில் பார்த்தோம். இங்கு வினவு கூட கடைசியாக அடிபடுபவன் கைகளில் கத்தியோடு காட்டி தலித் தாக்கப்பட்டதால் நடந்ததாக நிறுவ முயற்சிப்பதென்ன… வன்முறைக்கு காரணம் தேவர் மட்டுமே என்று நிறுவ முயற்சிக்கும் உங்களின் முகத்திரையை கிழிப்பது யார். தலித் வன்முறையாளர்களை எவரும் கண்டிக்க மறுப்பதேன். முடிந்தால் அரசு அடக்கட்டும் இல்லையேல் அகன்று இருக்கட்டும். கருணாநிதி ஆட்சியில் மட்டுமே இத்தகைய கூத்து… இன்று ஆதிக்க சாதி தேவரினம் அல்ல மக்களே…. வன்முறைக்கும் சாதி சலுகை பெரும் அனைவரும்தான்..