த.மு.எ.ச. மாநாடு : கோலிவுட்டை வளைக்க நடந்த கூத்து !
சென்னை கோடம்பாக்கம் பகுதி முழுவதும் டிசம்பர் மூன்றாவது வாரத்தில், “வேற்றுமையில் ஒற்றுமை; அதுவே நமது வலிமை” என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. மைய அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்காக நடத்தும் பிரச்சாரமோ என்று நாம் கருதிக்கொண்டு அருகில் போய் பார்த்த பிறகுதான், அது சி.பி.எம். கட்சி சார்பு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டு விளம்பரம் என்பது தெரிந்தது. மாநாடு நடைபெற்ற கோடம்பாக்கம் ராம் தியேட்டர் அரங்குக்கு உள்ளேயும் வெளியேயும் கலை நுணுக்கம் மிக்க பல கருத்தோவியங்களையும், கவிதை வீச்சுக்களையும் பார்வைக்கு வைத்திருந்தனர்.
“எல்லாப் பேன்களையும் நசுக்கியாச்சு. அட்டைகளை?” என்று அவர்களின் கவிதை தெருவெங்கும் கேள்விகேட்டது. தமிழகத்தையே உறிஞ்சும் அட்டையான பாசிச ஜெயாவோடு கூட்டணி கட்டியிருக்கும் சி.பி.எம். செயலாளர் என்.வரதராசன் மட்டும் இதைப் பார்த்திருந்தால்…..?
இன்னொரு கருத்தோவியம் நடைபாதைப் பழவியாபாரியுடன்; “நேற்று வண்டியில் விற்றாய். இன்று கூடையில்; நாளை….? தூரத்தில் சிரிக்கும் வால்மார்ட்” என்று சொன்னது. கேரள மாநிலத்தில் ‘தோழர்களின்’ ஆசியுடன் நூற்றுக்கணக்கில் திறக்கப்பட்டிருக்கும் ‘ரிலையன்ஸ் பிரஷ்’ நமது நினைவுக்கு வந்து தொலைத்தது.
தெருவெங்கும் வைத்திருந்த ஓவியங்களில் சிறுமிகள் கிழிந்த துணிகளுடன் ஏங்கிக் கொண்டிருந்தனர். அதேநேரத்தில், சென்னையின் ஜவுளிக்கடலான ‘சென்னை சில்க்ஸ்’சின் முதலாளி நமது முற்போக்கு எழுத்தாளர்கள் ஊர்வழி போவதற்கென்று ஆளுக்கொரு கருப்பு ‘டிராவல் பேக்’ கொடுத்திருந்தார்.
தேர்ந்தெடுத்த முற்போக்குக் கவிதைகளைத் தியேட்டருக்கு உள்ளே கொடியில் துணி துவைத்துக் காயப்போடுவதைப் போலத் தொங்க விட்டிருந்தனர். அவற்றில் பிற்போக்குக் கழிசடை கண்ணதாசனும் இடம் பெற்றிருந்தார்.
அருகிலேயே ஒரு வண்ணப்படமும் இருந்தது. அதில் செங்கற்களைத் தலையில் சுமந்து கொண்டு நிற்கும் சித்தாள் பெண்மணியும், “நம்பிக்கையோடு இரு. நாளை உன் கனவும் வீடாகும்” என்ற வாசகமும் கீழே ‘மராட்டிய வங்கி’யின் பெயரும் இருந்தன.
நன்கொடை தந்த வங்கியின் வீட்டுவசதிக்கடன் விளம்பரத்தையே இங்கு வைத்துவிட்டார்களோ என்ற மயக்கம் எழுந்தது.
அரங்க வாயிலில் நமது கண்ணில் பட்டதோ யுனைடெட் இன்சூரன்சு, பி.எஸ்.என்.எல்., ரெப்கோ வங்கி விளம்பரங்கள். இந்தியப் பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்று கூடி ஜனநாயகப் புரட்சியை நடத்த த.மு.எ.ச.வுக்குக் கை கொடுக்க முன்வந்துவிட்டதை நினைக்கும்போதே நமக்கு மெய்சிலிர்த்தது.
வாழ்த்துரை வழங்க சகல தரப்பிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்திருந்தனர். மத்தியில் கூட்டணியை விட்டு விலகிவிட்டாலும், பெருநிதி புழங்கும் மைய அரசின் நிறுவனமான செம்மொழி ஆய்வு மையத்துடன் த.மு.எ.ச. இணைந்து சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருவதால், அந்த நன்றியுணர்வுடன் அந்த மையத்தின் முனைவர் ராமசாமியையும் ஆசிவழங்க அழைத்திருந்தார்கள்.
இ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் முதல் ‘கம்யூனிஸ்ட் கட்சி’ அரசைக் கவிழ்த்ததில் அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் பங்கு பற்றிய புதிய நூலை அரங்குக்கு வெளியே விற்றுக்கொண்டிருந்த இவர்களே, சி.ஐ.ஏ.வின் பிரதியான போர்டு பவுண்டேசன் நடத்தும் அம்பேத்கர் ஆய்வு மையம் (பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையம்) சார்பாக தர்மராஜனை ஆசிவழங்க அழைத்திருந்தனர் .
த.மு.எ.சங்கத் தலைவர் அருணன், சங்கத்துக்கும் கோடம்பாக்கத்துக்கும் உள்ள பாரம்பரியத்தை எளிமையாக விளக்கி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். மறைந்த கோமல் சுவாமிநாதன், சங்கத்துக்கும் சினிமாக்காரர்களுக்கும் பாலமாகத் திகழ்ந்தார் என்றார். என்ன இருந்தாலும் எழுத்தாளர் அல்லவா? புரோக்கர் வேலைன்னு மக்கள் மொழியில் கொச்சையாகவா சொல்ல முடியும்? “கோமலுக்குப் பின்னர் சினிமாவில் இருப்பவர்கள் நம்மோடு நேசத்தோடு இருக்கிறார்கள். நம்ம செயலாளரோட கதை கூட படமாக்கப்பட்டு வெற்றிநடை போடுகிறது” என்று அவர் சொன்னதும் அரங்கமே, கைதட்டலால் அதிர்ந்து போனது.
கருத்து வேறுபாடுகளையும் அனுமதிக்கும் அமைப்பு இது எனக் காட்டுவதாக, “மும்பையில் தீவிரவாதத்துக்கு எதிராகச் சண்டையிட்டு மடிந்தவர்களுக்காக நாம் மெழுகுவர்த்தி கொளுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாட்டுக்காகத் தினமும் சாக்கடையில் இறங்கி விஷவாயு தாக்கிச் சாகின்றவனை கவனக்குறைவால் இறந்ததாகச் சொல்லுகிறோம்” என்று மெழுகுவர்த்தி கொளுத்திய சி.பி.எம். கட்சியைக் கண்டித்தார், ஆதவன் தீட்சண்யா. அடுத்து அவர், நந்திகிராமில் தமது கட்சி செய்த படுகொலையைச் சாடிவிட்டு, அங்கே கொல்லப்பட்டவர்களுக்கு மெழுவர்த்தி ஏற்றச் சொல்லுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அதிலிருந்து ஒரே தாவாய்த் தாவி விளிம்புநிலை மனிதர்களான அரவாணிகள் பற்றியும் உதிரிகள் பற்றியும் நாம் அனுதாபம் கொள்ளவேண்டியதன் அவசியத்தைச் சொல்லிப் போய்விட்டார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சம்பத், “வன்கொடுமைக்கு எதிராகப் புகார் கொடுத்தால் மேல்சாதியினர் உடனே ‘கௌன்டர் பெட்டிசன்’ (எதிர் மனு) போடுகின்றனர். “கௌன்டர்” என்று நான் குறிப்பிடுவதை தயவு செய்து கோவைப் பகுதி தோழர்கள் தவறாக எடுத்துக் கோபித்துக் கொள்ளவேண்டாம்” என்று இன்னமும் கவுண்டர்களாக இருக்கும் கோவைத் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.
மாநாட்டின் மைய நோக்கங்களாக மதவெறி எதிர்ப்பு, தமிழ் மொழி வளர்ச்சி, பெண் விடுதலை, தலித் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என முன்னர் அறிவித்திருந்தனர். இன்றைக்கு உழைக்கும் மக்களை ஒன்றுபடவிடாமல் முனைப்பாக இயங்கி வருவது இந்துவெறிப் பாசிசம்தான் என்பதை வரையறுக்காமல், யார் மனமும் நோகாதபடி மொன்னையாக மதவெறி எதிர்ப்பு என முதலில் சொன்னவர்கள், சென்னைபோரூரில் இந்து முன்னணியினரிடம் அடிவாங்கி வந்தது நினைவுக்கு வந்ததாலோ என்னவோ, அதனையும் மாற்றி “வேற்றுமையில் ஒற்றுமை” என்று சொல் லி விட்டார்கள். கூட்டத்தில் பேசிய ஓர் எழுத்தாளரும் “இந்தியாவில் சமீபகாலமாக மதவெறியினால் மாண்டு போகிறவர்கள் அதிகமாகி விட்டனர்” என்று வருத்தப்பட்டார்.
எந்த மதவெறி என்று சொல்லவும் கூச்சம். இறுதியாக மதவெறியை ஒழிக்க காந்தி கொலை செய்யப்பட்ட ஜனவரி 30ஐ, “மதவெறி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக”க் கடைப்பிடிப்பதெனத் தீர்மானித்தனர்.
போகிறபோக்கில் புஷ் மீது காலணிகள் வீசப்பட்டதைப் பற்றிப் பேசிக் கைதட்டல் வாங்கிக் கொண்டதைத் தவிர, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் என எதையும் அறிவிக்கவில்லை. கோக்கோ கோலா விளம்பர நாயகன் அமீர்கானை மாநாட்டுக்கு அழைத்து வருவதாகத்தான் முதலில் திட்டம் இருந்தது என்பதில் இருந்தே, இவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
வர்க்கப் போராட்டத்தைச் சிதைத்து வருவது பற்றி எந்த ஒருவிமர்சனமும் இல்லாமல், தலித்தியமா அதையும் சேர்த்துக்குவோம்; பெண் உடலை, காமத்தை வெளிப்படையாகப் பேசுவதும், ஓரினப்புணர்ச்சி மூலம் பெண்விடுதலை என்றும் பேசும் கழிசடை பெண்ணியவாதம் மேலெழுந்து வந்தால் அதையும் சேர்த்துக்குவோம்; இதுதான் த.மு.எ.ச.வின் கொள்கையாக உள்ளது .
த.மு.எ.ச. செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கும் ‘ஆண்களுக்கான சமையல் குறிப்பு’ நூலில் ‘மிச்சம் மீதியாகும் எல்லாக் காய்கறிகளையும் பருப்பையும் அரிசியையும் ஒன்றாகக் கலந்து தயாரிக்கும் கதம்பக் கூட்டுச் சோறு’ பற்றிய சமையல் குறிப்பு ஒன்று உண்டு. அதே சமையல் குறிப்பை மாநாட்டுக்கும் பொருத்திப் பார்த்து கலவையான கொள்கைக் கூட்டு ஒன்றைச் சமைத்திருக்கிறார்கள். பத்தியம் கருதியோ என்னவோ மார்க்சியப் பார்வையை அஞ்சறைப் பெட்டிக்குள் மறக்காமல் ஒளித்து வைத்து விட்டார்கள்.
இந்த மாநாட்டில் த.மு.எ.ச. என்ற பெயரை, “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்” என மாற்றி இருக்கின்றனர். இதை மனதில்வைத்துத்தான் பொன்னீலன் தனது வாழ்த்துரையில் ‘நாம் ரொம்பப் பெரியதாய் வளர்ந்திருக்கிறோம்’ என்று மெய்சிலிர்த்தாரோ!
இலட்சக்கணக்கில் செலவு செய்து கோடம்பாக்கத்தில் கூட்டப்பட்ட மாநாட்டின் உண்மையான நோக்கம் என்ன என்பதை ‘இப்போது சினிமாக் கலைஞர்கள் பலரும், இயக்குநர்கள் பலரும் நம்மோடு வெகு நெருக்கமாயிருப்பதைப் பார்க்கும்போது நாம் எடுத்த முடிவு சரியானதுதான் என்பது உண்மையாகி இருக்கிறது’ எனத் தமிழ்ச்செல்வனும், ‘கோடம்பாக்கத்துக் கலைஞர்கள் பெருவாரியாக எங்கள் அமைப்பில் இணைய வேண்டும்’ என நன்மாறனும் இறுதி நாளில் குறிப்பிட்டனர். மேலும், அமைப்பின் பெயரில் கலைஞர்களையும் சேர்த்துக் கொண்டு விட்டதால், புரட்சிக்கு கோடம்பாக்கத்தில் ஆள்பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கப் போகிறார்கள். இனிவரும் கலை இரவுகளில் விஜய் முதல் நமீதா வரை பலரும் பங்கேற்கலாம். இனி, அடுத்த கலை இரவு எங்கே இருக்கும்? ஏவிஎம் ஸ்டுடியோவிலா?
இருந்தாலும், த.மு.எ.க.ச.வின் இந்தத் திட்டம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போலத்தான். 35 ஆண்டுகளுக்கு முன்னால் இதே வேலையை வெகு எளிதாகச் செய்துவிட்டார் போலி கம்யூனிசத் தலைவரான கல்யாணசுந்தரம். முன்னணி நடிகரான எம்.ஜி.ஆரை வளைத்துப் போட்டு, அவரையே புரட்சித் தலைவராக்கி விட்டார். இதற்காக அவர் மாநாடோ, கலை இரவோ நடத்தவில்லை.
புதிய ஜனநாயகம், ஜனவரி 2009 (அனுமதியுடன்)
“புரட்சிக்கு கோடம்பாக்கத்தில் ஆள்பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கப் போகிறார்கள். இனிவரும் கலை இரவுகளில் விஜய் முதல் நமீதா வரை பலரும் பங்கேற்கலாம். இனி, அடுத்த கலை இரவு எங்கே இருக்கும்? ஏவிஎம் ஸ்டுடியோவிலா?”
ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கு காம்ரேடுகள் எதற்காக போக வேண்டும்?.அதான் இருக்கவே இருக்கின்றதே ஒவ்வொரு ஊரிலும்கட்சி ஆபீஸ் எதுக்கு வச்சு இருக்காங்க?
கலகம்
“…சிபிஎம் காங்கிரசா மாறி போச்சுது…” அப்படீன்னு ஒரு மகஇக பாட்டு உண்டு.
ஆனா அதை விடவும் சீரழிந்து அனைத்து ஓட்டு கட்சியின் பிற்போக்குதனங்களின் வடிவமாக அம்மணமாக நிற்கிறது சிபிஎம்.
சிபிஎம் = சந்தர்ப்பவாதம் + பொறுக்கித்தனம் + ரவுடித்தனம் + கவர்ச்சி அரசியல்
சிபிஎம் = சந்தர்ப்பவாதம் + பொறுக்கித்தனம் + ரவுடித்தனம் + கவர்ச்சி அரசியல்+ முதலாளித் துவம் + ஏகாதிபத்திய மறைமுக ஆதரவு – “மார்க்சியம்”
இப்போது “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்” என பெயர் மாற்றம் செய்து உள்ளனர்.
“கலை இரவு” என்பது “கலை-காம இரவாக” மாறும் பரிணாம வளர்ச்சி அடைவதன் தொடக்கம் தான் இந்த பெயர் மாற்றம்.
காட்சிக்கு கம்யூனிஸ்ட், ஆட்சிக்கு பொறுக்கித்தனம், குறுக்குவழியாய் கோடம்பாக்கம் இவைகளைத்தான் புரட்சிக்கு திசைவழியாய் கொண்டுள்ளன போலிகள்.
மாநாடு மட்டுமா கட்சியே கதம்பக் கூட்டுச்சோறுதான்.
கடந்த தேர்தலில் சிம்ரன் கோவைசரளாக்களெல்லாம் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தார்கள். இனி அவர்களுடன் பாண்டியனும், வரதராஜனும் ஒரே மேடையில் எழுந்தருளுவார்கள். பின்னென்ன வெற்றியை அம்மாவின் பாதங்களில் சமர்ப்பணம் செய்து, சங்கராச்சாரியிடம் புரட்சிக்கு நாள் குறிக்கவேண்டியதுதான்.
தோழமையுடன்
செங்கொடி
அவிங்களுக்கு ரொம்ப வலிக்குது போலருக்கு கெஞ்சாத குறையா ஒருத்தர் அழுதுறுக்குறாரு….
CPM தலைமை மற்றும் அணிகள் இன்று பாசிஸ்டுகளாக, துரோகிகளாக, கங்காணி புரோக்கர்களாக படு மோசமாக சீரழிந்துள்ளதை பேசினால் அதே CPM/CPIல் உள்ள சிற்சில அப்பாவி அணிகளையும் அவர்களின் தியாகங்களையும் சேர்த்தே குறை கூறூவதாக திரித்து அழுகிறார் அந்த ‘ஓ’ ‘ஒ’ ‘ஓ’ நாய்…. ஸாரி சொறிநாய்.
ரொம்ப வலிச்சா ஜெயலலிதாகிட்ட மருந்து வாங்கி தடவிக் கோங்க… 🙂
புரட்சி
உங்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ பம்பாய் படம் எடுத்ததற்காக இவர்கள் மணிரத்தினத்துக்கு பாராட்டு விழா நடத்தியவ்ர்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களைப் பொறுக்கிப் பிழைப்பதற்காக ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ என்கிற பெயரில் செயல்படுவது ஒருபுறம். அதற்கு ஆதவன் தீட்சன்யா, சம்பத் போன்ற ‘தலித்’ அரசியல் பேசுபவர்கள் மேடைக்குமேடை கூப்பாடு போடுவார்கள்.
மறுபுறமோ, மேலாண்மை பொண்ணுசாமி போன்ற சாதிவெறியர்கள் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்களத்திலும் மேலவளவிலும் “மேல்சாதி மக்களின் நியாயமான உணர்வுகளை நாம் மதிக்கவேண்டும்” என்று போதிப்பார்கள். இந்த கேவலத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். காரன் கூட தமது அரசியலில் சரியாக நின்று நேர்மையாகப் பேசுகிறான்.
முத்துராமலிங்கம் என்கிற சாதி வெறியனுக்கு ஜீவா காலந்தொட்டு குடைபிடித்து வரும் போலிகள் தீண்டாமையை ஒழிப்பதாகச் சொல்லிக் கொள்வது கேவலத்திலும் கேவலமாக இருக்கிறது.
இவ்வாறிருக்க, பாப்பாப்பட்டியில் ஆதிக்கசாதி வெறியர்களின் ‘நியாயமான உணர்வுகளை’ மதிக்கத் துடித்த இந்த போலிக் கும்பல் உத்தபுரத்தில் ஏன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நின்று பேசுகிறார்களாம்? எந்த ஊரில் எந்த சாதிக்கு ஓட்டு அதிகமாக இருக்கிறதோ அந்த சாதிக்குச் சார்பாகப் போராடுவது என்பது முதலாளித்துவக் கட்சிகளுக்கே எட்டியிருக்கமுடியாத ஒரு சந்தர்ப்பவாதம். அந்த வகையில் சக ஓட்டுப் பொறுக்கி கட்சிகளையெல்லாம் விஞ்சும் வண்ணம் போலிகள் ‘பீடு’நடை போடுகிறார்கள்.
திருநெல்வேலி வரை இவர்களது தேவர் ஆதிக்க சாதிவெறிக் கண்ணோட்டம் கட்சிக்குள் நிறைந்திருப்பதை, இக்கூட்டத்திலிருந்து சமீபத்தில் வெளியேறிய திருநெல்வேலி நகர செயலலாளர் அம்பலப்படுத்தியிருப்பதுவும்கூட இவர்களது சாதிச் சார்பின்மை எனும் நாடகத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.
நீங்க இப்படியே பேசிக்கிட்டு கிண்டல் பண்ணிக்கிட்டு இருங்க…
கண்ணாதாசன் எழுதிய ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்..’ என்ற
ஒரு பாட்டு ஜனரஞ்சகமா எழுதுங்க பாக்கலாம்.. ஒங்களாள மக்களயும்
திரட்ட முடியாது.. எதையும் பண்ண முடியாது.. திண்ணையில ஒக்காந்து
போறவங்க வரவங்கள திட்டற பாட்டி மாதிரி ஆயிரம் நொட்ட சொல்லிக்கிட்டே
இருக்காதிங்க..
கந்தசாமி
சென்னை
//ஒங்களாள மக்களயும்
திரட்ட முடியாது.. எதையும் பண்ண முடியாது.. திண்ணையில ஒக்காந்து
போறவங்க வரவங்கள திட்டற பாட்டி மாதிரி ஆயிரம் நொட்ட சொல்லிக்கிட்டே
இருக்காதிங்க..
///
அப்படியா தம்பி… அப்புறம் ஏன் தம்பி தேவையில்லாம எங்கள பாத்து CPM பேயடிச்ச மாதிரி பீதியாவுறாங்க? நாங்கதான் ஒன்னுத்தக்கும் அத்தவுங்க ஆச்சே விட்டுட்டு போக வேண்டியதுதான? எங்களதான் மக்கள் கண்டுக்கவே இல்லையா உன் கருத்துப்படி, பிறகு ஏன் CPMக்கு மட்டும் பேதி… ஸாரி.. பீதி ஆகனும் எங்கள பாத்து?
பிரச்சாரம் செய்யப் போற ஒவ்வொரு இடத்திலும் CPM க்காரன் எங்கள் ஏன் தாக்கி அடிக்கனும்?
கீழே உள்ள பின்னூட்டத்தை முதலில் சந்திப்பு என்ற CPM கூலிப்படை தலைவனின் தளத்தில் இட்டிருந்தேன். அதனை அவர் பிரசூரிக்கவில்லை. பிறகு இரண்டாம் முறை இப்பொழுது இட்டுள்ளேன். அதனை அவ்ர வெளியிடுவார் என்ற நம்பிக்கைய்யில்லை எனவே இங்கும் ஒரு பிரதியிடுகிறேன்.
நன்றி
யோவ் சந்திப்பு ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியே நான் போட்ட ஆங்கில பின்னூட்டத்தை ஏன் வெளியிடவில்லை? அதனை மீண்டும் இங்கு பதிகிறேன். தைரியமிருந்தால், சூடு சொரனையிருந்தால் வெளியிடு.
XXXXXX
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த முதல் CPM அரசின் 4 அமைச்சர்களில் உயிருடன் இருப்பவ்ர்களில் ஒருவர் அசோக் மித்ரா. மற்றொருவரான ஜோதிபாசுவுக்கு இணையானவர். அவரே CPMயைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை கீழே உள்ளது.
காங்கிரசை விட சீரழிந்த கட்சியாக CPM உள்ளது என்கிறார் அவர். நீங்கள் எப்படி இருந்தீர்களோ அப்படி இப்போது இல்லை என்கிறார் அவர். புரட்சிக்கும், சோசலிசத்துக்குமான சித்தாந்த கடப்பாடு உங்களைப் பொறுத்தவரை தேய்ந்த பழைய கதை என்கிறார் அவர்.
அவரையும் நக்சல்பாரி என்றோ அமெரிக்க ஏஜெண்டு என்றோ செல்வபெருமாள் சொல்லக் கூடும். ஆங்கிலத்தில் ஒரு முது மொழி உண்டு: ‘நீ வாங்குகின்ற சம்பளத்தின் குரலாகத்தான் நீ பேசுகிறாய்’ என்று. சந்திப்பு அதைத்தான் நிரூபிக்கிறார்.
புத்தாண்டு புரட்சிகரமாக விடிய வாழ்த்துக்கள்.
சந்திப்புக்கு ஆங்கில தெரியும் என்று நம்புகிறேன்.
http://www.revolutionarydemocracy.org/rdv14n1/yournot.htm
You Are Not What You Were
Ashok Mitra
Till death I would remain guilty to my conscience if I keep mum about the happenings of the last two weeks in West Bengal over Nandigram. One gets torn by pain too. Those against whom I am speaking have been my comrades at some time. The party whose leadership they are adorning has been the centre of my dreams and work for the last sixty years. ……………….
Click here to return to the April 2008 index.
யப்பா கருத்து கந்தசாமி..நீயி விடுதலையாவே இருந்தாலும் நான் வேற ஆளுன்னே நினைச்சுகிறேன்….
உங்களை மேறி
நல்லா சோத்த துன்னுகினு…,
டாஸ்மாக்கில சரக்க அட்சிகினு …,
பாங்கில பாத்துகினு…,
ஜாதியில கலியாணம் பண்ணிகினு…, புள்ளைங்கள பத்மா சேசாத்திரீல சேத்துகினு…, ஜால்ரா கூட்டத்த வச்சிகுனு…,
கட்சியல பொறுக்கி தின்னுகினு….,
ரெண்டு தலைமுறைக்கு சொத்து சேத்துகினு…
தமிழ் நாட்டோட பரம ஏழையான ஜெயல்லிதாவ….கினு….
”எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்..
உயர்வு தாழ்வில்லா நிலை வரவேண்டும்”
அப்டீன்டு பாட்டு எய்துற தெறமயெல்லாம் எங்களுக்கு இல்ல நைனா…
நீ வேணுமின்னா எங்க்கூட வந்து ‘தங்கி’ இருந்து சொல்லி குட்துட்டு போறியா???????????????
அய்யா,
கந்தசாமி அவர்களே இங்கு யாரும் சீபிஎம் ஐ கிண்டல் செய்யவில்லை.ஒரு துரோகத்தின் விளை நிலமான கம்பெரியை விமர்சிக்கின்றோம் மிகவும் கடுமையாக.எதற்காகவெனில் கம்யூனிசம் என்றால் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் ஸ்டாலின் மாவோ போன்ற தலைவர்களின் கருத்துக்களை புறந்தள்ளி பாட்டாளி வர்க்கத்தை அடிமைவர்க்கமாக மாற்றும் ஒரு பாசிஸ்ட் கட்சி இன்னும் தன்னை கம்யூனிஸ்ட் கட்சி என சொல்லுவதால் தான்.நீங்கள் உங்கள் பெயரை மாற்றுங்கள் மற்ற நாயகர்களை விமர்சிப்பது போல விமர்சிக்கின்றோம்.
லெனின் சொன்னார்”ஒரு கம்யூனிடுக்கு(பாட்டாளிக்கு) நாடு மொழி மதம் இனம் எல்லை இல்லை “என்று ஆனால் இங்கு நடப்பது என்ன? கேரள் மார்க்ஸ்டுகள் தண்ணீர் தருவதில்லை,குறுகிய இனவெறியை கிளப்பிவிடுகிறார்கள்.சென்னையில் கடல் சார் பல்கலை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து பாலுவின் கையிலிருந்த கோப்புக்களை கிழிக்கின்றார்கள்,
மேவ அமைச்சரோ நான் பிராமணன் என்கிறார்,னந்திகிராம் சிங்குர் என மக்களை கொன்று குவிக்கின்றார்கள்.இதஒயெல்லாம் பார்க்கும் போது என்ன……..இதுக்கு கம்யூனிஸ்டுன்னு சொல்லுற என்ற கேள்விதான் பலவகையிலும் எழுகிறது.
கீற்றில் கலகம் கேட்ட கேள்விக்கு சுத்தமாய் பதில் சொல்லாது கள் குடித்த குரங்கை போல் உளறுகிறார் விடுதலை .இப்படி கழிசடையே கட்சியாகிவிட்டபோது,இன்னும் மாற்ற முடியும் என கூறும் புரட்சிகராணிகளை வெளியேறச்சொல்வதிலும்,அக்கட்சியை விமர்சிப்பதிலும் என்னதவறு இருக்கின்றது.
ஒரு உண்மையான கம்யூனிஸ்டு கட்சி புரட்சிக்காக எல்லா தடைகலையும் தூக்கி எறிய வேண்டியது அவசியம்,போலிகளின் ஓட்டாண்டிதலத்தை மார்க்ஸ்கூட பலமுறை அம்பலப்படுத்தியிருக்கின்றார் அந்த அடிப்படையில் வினவோ,மற்ற தோழர்களோ கண்டிப்பாய் துரோகிகள் மறைந்து போகும் வரை தன் பணியை செஇதுகொண்டேஇருப்பார்கள்
கலகம்
போர்டு பவுண்டேசன் நடத்தும் அம்பேத்கர் ஆய்வு மையம் (பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையம்) சார்பாக தர்மராஜனை ஆசிவழங்க அழைத்திருந்தனர்
வர்க்கப் போராட்டத்தைச் சிதைத்து வருவது பற்றி எந்த ஒருவிமர்சனமும் இல்லாமல், தலித்தியமா அதையும் சேர்த்துக்குவோம்; பெண் உடலை, காமத்தை வெளிப்படையாகப் பேசுவதும், ஓரினப்புணர்ச்சி மூலம் பெண்விடுதலை என்றும் பேசும் கழிசடை பெண்ணியவாதம் மேலெழுந்து வந்தால் அதையும் சேர்த்துக்குவோம்; இதுதான் த.மு.எ.ச.வின் கொள்கையாக உள்ளது .
தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ என்கிற பெயரில் செயல்படுவது ஒருபுறம்.
தலீத் விரோதபோக்கு என்பது மகஇகவிற்கு புதிதுஅல்ல மேற்கண்ட அவர்களின் வயிற்றேச்சலில் தலித் விரோத மனப்பாங்கை எளிதாக உணர்ந்துகொள்ளாம் .
இது அவர்களின் பார்ப்பன தலைமையின் வெளிப்பாடுதான் .
அவர்களின் தமுஎகசவின் மாநாடு குறித்த பார்வையில் எவ்வளவு விசமத்தனம் உள்ளது என்பதையும் அதை ஆதரித்து அவர்களின் அம்பி எக்காலம் இடுவதையும் பார்க்கும் போது திட்டமிட்டு கருத்துகளை தினிக்கும்அவர்களின் முயற்சி புரிந்து கொள்வதற்கு பெரிய அறிவு வேண்டும் என்பதில்லை..
அவர்களின் கேள்வி என்ன ?
அம்பேத்கர் ஆய்வு மையம் , தலித்தியம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி
ஏண் ஆதரிக்கவேண்டும் , நடத்தவேண்டும் என்பதுதானனே.
பல்லாண்டுகளாக இந்திய ஜாதியடிமைத்தனத்தின் விளைவாக ஒடுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டு தீண்டத்தகாதவர்களாக மாற்றிய தலித் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காக அன்றாடம் உயிர்ப்பலிக் கொடுத்து, தியாகம் செய்து வருகையில் அவர்களைப் பற்றி ம.க.இ.க. மறைமுகத் தலைமையான எஸ்.ஓ.சி.யின் திட்டம் கீழ்கண்டவாறு கூறுவதை ஆழ்ந்து படியுங்கள். அப்போதுதான் தெரியும் இவர்களது உண்மை முகம் என்னவென்று?
“…. தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும், கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளாகக் கருதப்பட வேண்டும். இவைகள் அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத வெறிகளைத் தூண்டி சலுகைகளுக்காகப் போராடும் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகும். ”
தாழ்த்தப்பட்டோரின் துயரமான வாழ்க்கைக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக டாக்டர் அம்பேத்கார், ஜோதிபா பூலே, இரட்டை மலை சீனிவாசன் உட்பட தலித் மக்களின் விடுதலைக்காக போராடிய தலித் தலைவர்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள். அவர்களது வழிவந்த அமைப்புகள் இன்றைக்கும் நாடு முழுவதும் தலித் எழுச்சிக்காக பெரும் குரலெழுப்பி வருகின்றன. மேலும், சுதந்திர இந்தியாவில் குறைந்தபட்சம் கிடைத்த கல்வியறிவால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் உந்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அமைப்பாக திரள்கின்றனர். இவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை மையமாக வைத்து பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததிய மக்கள் நல அமைப்புகள்… பழங்குடியின அமைப்புகள் என பல கட்சிகள் நாடு முழுவதும் தோன்றியுள்ளன. இந்த கட்சிகளின் தோற்றம் பல்லாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது.என்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அப்படிப்பட்ட அறிவுகெட்ட அறிவுஜிவிகள் மகஇக அம்பிகள்
யப்பா அர டிக்கெட்டு..நீயி ஒரே ஆளாவே இருந்தாலும் நான் வேற ஆளுன்னே நினைச்சுகிறேன்….
உங்களை மேறி
நல்லா சோத்த துன்னுகினு…,
டாஸ்மாக்கில சரக்க அட்சிகினு …,
பாங்கில பாத்துகினு…,
ஜாதியில கலியாணம் பண்ணிகினு…, புள்ளைங்கள பத்மா சேசாத்திரீல சேத்துகினு…, ஜால்ரா கூட்டத்த வச்சிகுனு…,
கட்சியல பொறுக்கி தின்னுகினு….,
ரெண்டு தலைமுறைக்கு சொத்து சேத்துகினு…
”எப்பவும் இடது சீர்குலைவு செய்ய வேண்டும்..
அமெரிக்கா பணம் தடையிலலாம தரவேண்டும்”
அப்டீன்டு பாட்டு எய்துற தெறமயெல்லாம் எங்களுக்கு இல்ல நைனா…
நீ வேணுமின்னா எங்க்கூட வந்து ‘தங்கி’ இருந்து சொல்லி குட்துட்டு போறியா???????????????
குறிப்பு : கந்தசாமி அவர்களுக் எனது நன்றிகள். மேற்கண்ட வார்த்தைகளை இடதுசாரி என்ற வகையில் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை
//யோவ் சந்திப்பு ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியே நான் போட்ட ஆங்கில பின்னூட்டத்தை ஏன் வெளியிடவில்லை? அதனை மீண்டும் இங்கு பதிகிறேன். தைரியமிருந்தால், சூடு சொரனையிருந்தால் வெளியிடு.
XXXXXX
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த முதல் CPM அரசின் 4 அமைச்சர்களில் உயிருடன் இருப்பவ்ர்களில் ஒருவர் அசோக் மித்ரா. மற்றொருவரான ஜோதிபாசுவுக்கு இணையானவர். அவரே CPMயைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை கீழே உள்ளது.
காங்கிரசை விட சீரழிந்த கட்சியாக CPM உள்ளது என்கிறார் அவர். நீங்கள் எப்படி இருந்தீர்களோ அப்படி இப்போது இல்லை என்கிறார் அவர். புரட்சிக்கும், சோசலிசத்துக்குமான சித்தாந்த கடப்பாடு உங்களைப் பொறுத்தவரை தேய்ந்த பழைய கதை என்கிறார் அவர்.
அவரையும் நக்சல்பாரி என்றோ அமெரிக்க ஏஜெண்டு என்றோ செல்வபெருமாள் சொல்லக் கூடும். ஆங்கிலத்தில் ஒரு முது மொழி உண்டு: ‘நீ வாங்குகின்ற சம்பளத்தின் குரலாகத்தான் நீ பேசுகிறாய்’ என்று. சந்திப்பு அதைத்தான் நிரூபிக்கிறார்.
புத்தாண்டு புரட்சிகரமாக விடிய வாழ்த்துக்கள்.
சந்திப்புக்கு ஆங்கில தெரியும் என்று நம்புகிறேன்.
http://www.revolutionarydemocracy.org/rdv14n1/yournot.htm
You Are Not What You Were
///
அம்பி விடுதலை,
குவார்ட்டர் அடிச்ச கிறு கிறுப்பு கொறைஞ்ச புறவு மேலே உள்ள் புண்ணூட்டத்துக்கும் பதில் சொல்லுபா… அதுல அசோக் மித்ரான்னு உங்கப்பனுக்கு அப்பன் எழுதுன மேட்டரு இருக்கு. படிச்சு அதையும் உன் பாணிலேயே மாத்தி, மடக்கி, கடிச்சி, குத்றி எழுத ட்ரை பன்னு. ஆனா ஒரு விசயம் அசோக் மித்ரா சொன்னத நீ எப்படி குதறினாலும், அது CPMயைத்தான் அம்பலப்படுத்தும். 🙂
கொய்யால1: ரொம்ப பாவம் இல்ல விடுதலை…
கொய்யால2: அட நீ வேற அவரோட திறம என்ன, மவுச என்ன… அசோக் மித்ரா எல்லாம் ஜுஜுபி…. அடுத்த புண்ணூட்டத்துல பாரு நம்ம விடுதலையோட திறமய…
//எழுதிய ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்..’ என்ற
ஒரு பாட்டு ஜனரஞ்சகமா எழுதுங்க பாக்கலாம்.. //
அய்யா கா. கந்தசாமி,
இப்படி ஜனரஞ்சகமா பாட்டு எழுத தெரியாமத்தான் ம க இ க பாட்டுக்கள திருடி பாடினாங்களோ தமு எச கும்பல்… ?
இப்படி திருடிப் பாடுனத அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தின பிறகுதான் திருடுறதையே விட்டானுங்க CPM புண்ணாக்குங்க.
டேய் விடுதல உனக்கு தண்ணியடிச்சுட்டா கண்ணூம் தெரியாதாடா?
வினவுல கேட்டிருந்த கேள்வி கீழே இருக்குறத பத்தி.
//போர்டு பவுண்டேசன் நடத்தும்…//
அதாவது NGO சீரவு கும்பல பத்தியும், விமர்சனமற்ற முறையில் சமரச சக்திகளுடன் உறவாடுவது பற்றியும். நீ அதை அப்படியே மாத்தி போட்டு அடிக்கிறயே…
கிரகம் உங்கிட்ட போயி இத சொல்றன் பாரு.. உனக்குத்தான் இந்த மாதிரி விசயமெல்லாம் பிரியாதே…. யார்ட்டயாச்சும் கேட்டாவது தெரிஞ்சுக்கோடா ராசா…
என்ன விடுதலை,
அம்பின்னு எங்களை சொல்லுற.கோண புளியங்கா மாதிரியே பேசுறியே,முன்னாடியே நான் சொன்னேன்.ம க இக அ கிட்ட பார்ப்பனீயம் இருக்குன்ன்ன காட்டு? இப்படி பார்ப்பனீயம் பார்ப்பனீயம்ன்னு பேசுனா கட்சியவிட்டே தூக்கிடுவாங்க அம்பி,
அடேங்கப்பா நீங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமிச்சு பண்ணுன புரட்சி என்னனு பட்டியலிடுப்பா,,ம க இக அ க்கு சாம்பிள் வேண்டுமின்ன பண்ணபுரம் போயி பாரு, மறுக்கா
மறுக்கா நீனு அட்ரஸ் கேக்குற உன்னோட அட்ரஸ் கொடு நான் ஊட்டுக்கே வர்ரேன் இல்ல கொரியருல அட்ரஸ் அனுப்பி வைக்குறேன்.
எல்லாரு நம்புங்க சீபீஎம் மீசையில மண்ணு ஒட்டலயாம்
கலகம்
என்னப்பா விடுதலை,
உன் தளத்துக்கு போனாஎன்னமோ புரட்சி பண்ணப்போறவன் மாதிரியே பேசுறீயே,அது சரி புரட்சி பண்ணபோனீங்க சரி,எது போயஸ் கார்டனுக்கு புல் புடுங்க போனீங்க,விசயகாந்து கிட்ட புல் அடிக்க போனீங்களா சரி என்னமோ பண்ணுங்ககொடிடியமட்டும் மாத்திடுங்க அப்பு.நாங்க வெளிய மக்கள் கிட்ட பேசும் போது எங்கலையும் போலின்னு நினைக்குறாங்க,இத்த பேசவே கொஞ்ச நேரம் ஆகுது.கொஞ்சம் உங்க கமிட்டில சொல்லி சிபாரிசு பண்ணுங்க.ஆமா தமுஎச பேர மாத்திட்டீங்களே எதாவது நமீதா கிமீதா வருவாங்கன்னு தான் மாத்தீட்டீங்ன்னு பேசிக்குறாங்க
சாதி ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை இணைந்து நடத்துவதன்
கலகம் ஏதோ பெரிய புடுக்கி மாதிரி சிதம்பரம் கோயில் விவகாரத்தில் போஸ்டர் ஒட்டினோம்
பண்ணபுரத்தில நாளுபேர் நாண்டுகினு செத்தம் இப்படி திரும்ப திரும்ப எத்தனை வாட்டி சொல்லி நீயே பெருமைபட்டுக்குவ.
தினம் தினம் போராட்டங்களையும் அடக்குமுறைகளையும் சந்தித்து சாதிக்க கூடிய ஒரே அமைப்பு தீண்டாமை ஒழிப்பு முண்னனி கீழ செம்பிளுக்கு சில செய்தி பொருமையாக படிச்சி பார்த்துட்டு சிபிஎம் கட்சிக்கு வந்துடாத அங்கே இரு.
மூலமே மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காண முடியும். தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய ஒரு விரிந்து பரந்த மேடையாகச் செயல்பட்டு வருகிறது. 45 வர்க்க- வெகுஜன அமைப்புகளும் மாநிலம் தழுவிய 15 தலித் -மனித உரிமை அமைப்புகளும், மாவட்ட அளவில் 40க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகளும் இதில் இணைந்துள்ளன. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட வர்க்க-வெகுஜன அமைப்புகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியுடன் இணைந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களில் 29 மாவட்டங்களில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ஓராண்டுக் காலத்திற்கு முன்புதான். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் பல ஆண்டுகளாகவே தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது இப்போராட்டங்களின் திருப்பு முனையாக அமைந்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் தீண்டாமை பல வடிவங்களில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகள் மூலம் 22 மாவட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தீண்டாமை வடிவங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளோம். தேநீர் கடைகளில், பொதுப்பாதைகளை பயன்படுத்துவதில், ஆலய வழிபாட்டில், சலவையகங்களில், சலூன்களில், கிராமப் பொதுச் சொத்தைப் பங்கிடுவதில், ரேசன் கடைகளில், தபால்கள் வழங்குவதில், அரசு அலுவலகம் அமைப்பதில், பள்ளிக் கூடங்களில், பொது மயானத்தில், தனி மயானத்திற்கான பாதையில், அரசு நிர்வாக அணுகுமுறையில், காவல்துறை செயல்பாட்டில் என 163க்கும் மேற்பட்ட தீண்டாமை வடிவங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இன்னும் கண்டறியப்படாத ஏராளமான தீண்டாமை வடிவங்கள் இருக்கக் கூடும்.
இவற்றை ஆய்வு செய்வதன் மூலமே கண்டறிய முடியும். தலித் மக்கள் மட்டுமல்ல அவர்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளும் அமுக்கப்பட்டுள்ளன. தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு குற்ற உணர்வு இல்லை. இதை அனுபவிக்கும் தலித்துகளோ நீண்ட நெடுங்காலமாக இதுவே வாழ்க்கையாக இருப்பதால் உணர்வுகள் மரத்துப்போய் உள்ளனர். சமீபகாலமாக தலித்துகளிடையே எழுச்சி ஏற்பட்டு வருவது வரவேற்கத்தக்க மாற்றமாகும். சமீபத்தில் உத்தப்புரம் என்ற மதுரை மாவட்டக் கிராமத்தில் தலித்துக்கள் பொதுப்பாதைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் தீண்டாமைச் சுவர் இருப்பதை கண்டறிந்தோம். ஒரு கிராமத்தில் தலித்துக்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது என்ற கொடுமையும் நிலவுகிறது.
ஆய்வில் கண்டறிந்த தீண்டாமை வடிவங்களை அரசின் கவனத்திற்கும், பத்திரிகை, டி.வி. மூலம் மக்களின் கவனத்திற்கும் கொண்டு சென்று களையுமாறு வற்புறுத்தி னோம். அரசு நிர்வாகம் தலையிடாத நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில கிராமங்களைத் தேர்வு செய்து தீண்டாமை ஒழிப்பு நேரடி போராட்டங்களில் இறங்கினோம். தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளில் 267 நேரடி நடவடிக்கைகள் மேற்கொண்டோம். சில கிராமங்களில் தீண்டாமையை முற்றிலும் ஒழிக்க முடிந்தது. பல கிராமங் களில் தற்காலிக வெற்றி கிடைத்தது. அங்கெல்லாம் நிரந்தர வெற்றிக்கு தொடர் கவனம் செலுத்தி வருகிறோம். பல போராட்டங்களில் தலித் அமைப்புகளுடன் இணைந்து அல்லது ஏக காலத்தில் நேரடி நடவடிக்கை களில் ஈடுபட்டு உள்ளோம்.
திராவிட இயக்கம் சாதிக்காததை….
தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. பெரியார் பாதையில் நடைபோடுவதாகக் கூறிக் கொள்ளும் இக்கட்சிகள் தீண்டாமையை ஒழிக்க உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மாறாக, பல சந்தர்ப்பங்களில் சாதி ஒடுக்குமுறைச் சக்திகளுடன் இதன் தலைவர்களும் அணிகளும் இணைந்து நிற்கின்றனர். இத்தகு சூழலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்பட 4 ஊராட்சிகளில் தேர்தல் நடத்த வைத்து தலித்துகளைத் தலைவர்களாக செயல்பட வைத்தது, பல ஆலயங்களில் தலித்துகள் நுழைவதை உத்தரவாதப்படுத்தியது. பல தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறையை ஒழித்தது, பல சலூன்களில் தலித்துகளுக்கு முடிவெட்ட வைத்தது. பல கிராமங்களில் மயான உரிமையை உத்தரவாதப்படுத்தியது, தனி மயானத்திற்குப் பாதை பெற்றுக்கொடுத்தது, பல பொதுப்பாதைகளில் தலித்துகளை நுழைய வைத்தது போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளோம்.
தமிழ்நாடு சமூக சீர்திருத்த போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பை முன்னுரிமைக் கடமையாக நிறைவேற்றி வருகிறோம். சமீபத்தில் நமது தலையீட்டால் உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைக்கப்பட்டதும், தலித்துகளுக்கு ஊருக்குள் நுழைய ஒரு பொதுப்பாதை உருவாக்கி தரப்பட்டதும் தமிழ்நாட்டில் – ஏன் இந்திய நாடு முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கமாக அமைந்தது.
அருந்ததியர் போராட்டம்
தமிழ்நாட்டில் அருந்ததியர் என்ற பிரிவினர் ஆந்திராவில் உள்ள மாதிகா பிரிவினரைப் போல தலித்துகளிலும் தலித்துகளாக உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் இவர்கள் 5 சதம் வரை இருந்த போதிலும் கல்வி – வேலைவாய்ப்பில் இவர்களுக்கு 1 சதம் கூட கிடைக்கவில்லை.
இவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க சென்னை கோட்டை நோக்கி 20 ஆயிரம் பேர் பேரணி, மறியல் உள்பட பல கட்ட போராட்டங்களை நடத்தியதால் தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்க ஏற்றுக் கொண்டு ஒருநபர் கமிஷன் அமைத்துள்ளது. இதன் முடிவை அமலாக்கவும் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மிக கணிசமான அருந்ததியர் அமைப்புகள் எம்முடன் இணைந்து நின்று போராடின. தமிழ்நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டமாக இது அமைந்தது.
“தமிழ்நாட்டில் அருந்ததியர் என்ற பிரிவினர் ஆந்திராவில் உள்ள மாதிகா பிரிவினரைப் போல தலித்துகளிலும் தலித்துகளாக உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் இவர்கள் 5 சதம் வரை இருந்த போதிலும் கல்வி – வேலைவாய்ப்பில் இவர்களுக்கு 1 சதம் கூட கிடைக்கவில்லை.
இவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க சென்னை கோட்டை நோக்கி 20 ஆயிரம் பேர் பேரணி, மறியல் உள்பட பல கட்ட போராட்டங்களை நடத்தியதால் தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்க ஏற்றுக் கொண்டு ஒருநபர் கமிஷன் அமைத்துள்ளது. இதன் முடிவை அமலாக்கவும் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மிக கணிசமான அருந்ததியர் அமைப்புகள் எம்முடன் இணைந்து நின்று போராடின. தமிழ்நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டமாக இது அமைந்தது.”
உங்க முன்னணியோட செயல் பாடு நாங்களும் பாத்திருக்கோம்.தேவர் ஜெயந்திக்கு முன்னாடி போய் மாலை போட்டுட்டு அப்பாலதெருவுல தலித் மக்களோட நின்னு போராடுவீங்களா?
யப்பா, நினச்சாலே புல்லரிக்குதுப்பா? அப்புறம் எல்லாரும் நம்புங்க அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காகத்தான் இவங்க சங்கரன அரசு விருந்தாளி ஆக்கியிருந்தாங்க கேரளாவுல,அப்புடியே ப்ரட்சி வருதுன்னு சங்கரன் காலையில வாழ இலை கேப்பானே அதுக்கும் போய் நின்னுடுங்கோ.அப்பத்தான் உங்க குரு சொன்னாரே வேதங்களின் நாடுன்னு அத செயல் படுத்துன மாதிரியும் இருக்கும்.இல்லேன்னா சீபீஎம் ஆக முடியுமா?
போலி விடுதலை அவர்களே!
ம.க.இ.க. வை திட்டுவது மட்டுமே உம்முடைய நோக்கமாக இருக்கிறது.
நியாயாமாக சீப்பீஎம்-மீது விமரசனம் வைத்தால் அதற்கு பதில் சொல்லவேண்டியது தானே? அதை விட்டு விட்டு ம.க.இ.க. மீது ஏன் சேற்றை வாரீ இறைக்கிறீர்கள்?
சரி! மார்க்சியம் மக்களை தலித்தியம் என்று பிரிப்பதை ஏற்று கொள்கிறதா? அல்ல
வர்க்கமாக பார்க்கவேண்டும் என்கிறதா?
“…. தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும், கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளாகக் கருதப்பட வேண்டும். இவைகள் அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத வெறிகளைத் தூண்டி சலுகைகளுக்காகப் போராடும் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகும். ”
மேலே சுட்டி காட்டியுள்ளதில் தாழ்த்தபாட்டோர் என்பத்துக்கு முன்னாள் என்ன எழுதியிருந்தது என்பதையும் வெளியிடமுடியுமா?
பொதுவாக சாதி(அனைத்து) அமைப்புகளும், கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளாகக் கருதப்பட வேண்டும். இவைகள் அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். சாதி, மத வெறிகளைத் தூண்டி சலுகைகளுக்காகப் போராடும் கட்சிகள் எதிரிக் கட்சிகளாகும் என்பதில் என்ன தவறு இருக்கிறது. இந்த ஒரு வார்த்தையிலே ம.க.இ.க.வின் உண்மையான முகம் தெரிந்துவிட்டது ஆம்! உண்மையான கம்யூனிஸ்ட் அமைப்பு இதுதான் என்பது! சமரசம் இல்லாமல் உழைக்கும் வர்க்கத்தை ஒரே அணியில் திரட்டி போராடும் அமைப்பு இதுதான்.
திருவரங்கம் கோவில் கருவறையில் அம்பேத்கர் படத்தை மாட்டியது தலித் விரோத மனப்பாங்கா?
——————————————-
சரி வார்த்தைக்கு வார்த்தை தலித் தலித் என்று எழுதும் போலி விடுதலை அவர்களே! தேவர் ஜெயந்திக்கு சீபீஎம் தலைவ்ரகள் மரியாதை செலுத்துவது ஏன்?
———————————————
இதற்கு யோக்கியமான முறையி பதில் சொல்லவும்!
—————————————————————-
சீபீஎம் பற்றி கருத்து படம் வெளியிட்டுளோம் தோழர்கள் கருத்து தெரிவிக்கவும்
http://vitudhalai.wordpress.com/
It has been a long time since the meetings of Tamil Nadu Progressive Writers’ Association were turned up into mere talk shows. Its annual conference is nothing more different than a ritual. The so-called progressive writers have shown their inconsistency in fighting the enemies in the cultural front. Tamil Selvan their secretary simply delve into nostalgic feelings in his Uyirmai coloumns. Their past soldier Kandarvan was a great admirer of Jeyamohan. What more can we expect from others.? Their acquaintance with cinema people would bring some personal gains to the office bearers of the organisation by which their works being translated into movies. It is grotesque to see the word Progressive lying upon them as dead weight.
டேய் யாரோ, உனக்கு தண்ணியடிச்சுட்டா கண்ணூம் தெரியாதாடா?
மக்கள் போர் படை (PWG) கணபதி போன்றவர்கள் மகஇக தலைமையை இந்திய ஏஜென்சிகளின் கையாட்கள் என்றே விமர்சித்துள்ளதாகவும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருப்பதாகவும் படித்திருக்கிறேன், அது தொடர்பான கட்டுரைகள் எங்கேயாவது கிடைக்கிறதா என்று நண்பர்களிடம் கேட்டுள்ளேன்.என்று குழலி சொல்லி இருக்கிறார் .
நீங்களும் அமெரிக்க அதரவு பெற்ற என்.ஜி.ஓதான்
நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும்!
யப்பா இந்த போலி விடுதலை
எப்டி அடிச்சாலும் தாங்கறாம்பா
எதுல அடிச்சாலும் தாங்கறாம்பா
எங்க அடிச்சாலும் தாங்கறாம்பா
சூப்பர் ஐயர் & கோ
Allo Pooli Viduthalai, You purgot to respond to pelow coment as well. Pulees respond….
////
//யோவ் சந்திப்பு ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியே நான் போட்ட ஆங்கில பின்னூட்டத்தை ஏன் வெளியிடவில்லை? அதனை மீண்டும் இங்கு பதிகிறேன். தைரியமிருந்தால், சூடு சொரனையிருந்தால் வெளியிடு.
XXXXXX
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த முதல் CPM அரசின் 4 அமைச்சர்களில் உயிருடன் இருப்பவ்ர்களில் ஒருவர் அசோக் மித்ரா. மற்றொருவரான ஜோதிபாசுவுக்கு இணையானவர். அவரே CPMயைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை கீழே உள்ளது.
காங்கிரசை விட சீரழிந்த கட்சியாக CPM உள்ளது என்கிறார் அவர். நீங்கள் எப்படி இருந்தீர்களோ அப்படி இப்போது இல்லை என்கிறார் அவர். புரட்சிக்கும், சோசலிசத்துக்குமான சித்தாந்த கடப்பாடு உங்களைப் பொறுத்தவரை தேய்ந்த பழைய கதை என்கிறார் அவர்.
அவரையும் நக்சல்பாரி என்றோ அமெரிக்க ஏஜெண்டு என்றோ செல்வபெருமாள் சொல்லக் கூடும். ஆங்கிலத்தில் ஒரு முது மொழி உண்டு: ‘நீ வாங்குகின்ற சம்பளத்தின் குரலாகத்தான் நீ பேசுகிறாய்’ என்று. சந்திப்பு அதைத்தான் நிரூபிக்கிறார்.
புத்தாண்டு புரட்சிகரமாக விடிய வாழ்த்துக்கள்.
சந்திப்புக்கு ஆங்கில தெரியும் என்று நம்புகிறேன்.
http://www.revolutionarydemocracy.org/rdv14n1/yournot.htm
You Are Not What You Were
///
அம்பி விடுதலை,
குவார்ட்டர் அடிச்ச கிறு கிறுப்பு கொறைஞ்ச புறவு மேலே உள்ள் புண்ணூட்டத்துக்கும் பதில் சொல்லுபா… அதுல அசோக் மித்ரான்னு உங்கப்பனுக்கு அப்பன் எழுதுன மேட்டரு இருக்கு. படிச்சு அதையும் உன் பாணிலேயே மாத்தி, மடக்கி, கடிச்சி, குத்றி எழுத ட்ரை பன்னு. ஆனா ஒரு விசயம் அசோக் மித்ரா சொன்னத நீ எப்படி குதறினாலும், அது CPMயைத்தான் அம்பலப்படுத்தும்.
கொய்யால1: ரொம்ப பாவம் இல்ல விடுதலை…
கொய்யால2: அட நீ வேற அவரோட திறம என்ன, மவுச என்ன… அசோக் மித்ரா எல்லாம் ஜுஜுபி…. அடுத்த புண்ணூட்டத்துல பாரு நம்ம விடுதலையோட திறமய…
///
யப்பா டுபாக்கூர் விடுதலை
எங்க ஆளயே காணோம்!!!!!!
எங்கண்ணா போனீங்க?
எங்கயா போன?
எங்கடா போன?
சூப்பர் ஐயர்&கோ
சூப்பர் ஐயர்
பயந்து போன போலி விடுதலை இனி மேல் வர மாதிரி தெரியலை.
எஸ்கேப் பார்ட்டி டுபாக்கூர் விடுதலைக்கு
கண்ணீர் அஞ்சலி
சூப்பர் ஐயர் & கோ
I do not have computer with font in my home I have to come to some cafe and do work. Sorry I am a simple kanthasamy. Do not drag viduthalai who is an unknown person to me. We are not same. I will soon write reply in tamil font in this web . Pl wait Do not confuse
K Kanthasamy
No one in India has eligible to criticise CPM. They were ruling West Bengal for the past 31 years and they may rule another 20 years without any difficulty. The reason is very simple. They have done many good things to the people and people choose them again and again and again…….Who ever bark on CPM will go to bed for taking rest, so that they can bark again at different place for getting Bun and Biscuit.
They were not made money like M.Karunanidhi and Co.,.
They never developed family politics.
They were not corrupted like Cong or BJP
They were not pushed down any Govt for getting posts
They were not mixed Religion with Politics….
What else you are looking more? More than that they were not like TMES,, just barking…..
>>”…சிபிஎம் காங்கிரசா மாறி போச்சுது…” அப்படீன்னு ஒரு மகஇக பாட்டு உண்டு.
திருத்தம்:
“…இப்போ கம்யூனிஸ்டு கட்சி தேய்ஞ்சி, தேய்ஞ்சி, காங்கிரசா போனதுங்க…”
>>சிபிஎம் = சந்தர்ப்பவாதம் + பொறுக்கித்தனம் + ரவுடித்தனம் + கவர்ச்சி அரசியல்
திருத்தம்:
முக்கியானத வுட்டேன்.
சிபிஎம் = பார்ப்பனீயம் + சந்தர்ப்பவாதம் + பொறுக்கித்தனம் + ரவுடித்தனம் + கவர்ச்சி அரசியல்
மகஇக என்.ஜி.ஓவா மாறி போச்சுது…” அப்படீன்னு ஒரு பாட்டு உண்டு.
திருத்தம்:
“…இப்போ மகஇக தேய்ஞ்சி, தேய்ஞ்சி, இரண்டு கோஷ்டியா போனதுங்க…”
,,மகஇக = குழப்பவாதம் + பொறுக்கித்தனம் + ரவுடித்தனம் + கவர்ச்சி வார்த்தை அரசியல்
திருத்தம்:
முக்கியானத வுட்டேன்.
மகஇக = பார்ப்பனீயம் + குழப்பவாதம் + பொறுக்கித்தனம் + ரவுடித்தனம் + கவர்ச்சி வார்த்தை அரசியல்
சூப்பர் ஐயர்
அரை லூசு போலி விடுதலை!
தோழர் vitudhalai கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம ஏன் நழுவுற
நண்பர்களே இந்த போலி விடுதலை ஒரு கைதேர்ந்த பித்தலாட்டகாரன்
தெளிவான ஓட்டு பொறுக்கி மோசடி பேர்வழி!
தோழர் vitudhalai கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்
கூட கூட பேசி கூட……….ய திங்கறான் (புரியலனா யாரவது கோயமுத்தூர்காரன்கிட்ட கேளு)
இவ்வளவுதான் ச்சீ.ப்பீ.எம் .
இந்த நாய்களுக்கு எத்தன தடவ சூடு வச்சாலும் உரைக்காது.
திருந்தாத திருட்டு நாயீ இருந்தென்ன லாபம்! வருந்தாத திருட்டு நாயீ வாழ்ந்தென்ன லாபம் !
சூப்பர் ஐயர் & கோ
நியாயமாக நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் ரமேஷ் பாபு அவர்களே!
இதெல்லாம் ஒரு பொழப்பா
——————————
போங்கயா
நீங்களும் உங்க அரசியலும்
“…இப்போ மகஇக தேய்ஞ்சி, தேய்ஞ்சி, இரண்டு கோஷ்டியா போனதுங்க…”
அப்படியா அந்த ரெண்டு கோஷ்டி யார்? பதில் சொல்லுங்கள் CPM விடுதலை
எங்களை போன்ற இடது சாரிகளுக்கு வசதியாக இருக்கும்.
No one in India has eligible to criticise CPM. They were ruling West Bengal for the past 31 years and they may rule another 20 years without any difficulty. The reason is very simple. They have done many good things to the people and people choose them again and again and again……. //நீங்க MGR ரசிகரா. அவரு கூடத்தான் எம். கல்யாணசுந்தரம் பேச்சக் கேட்டு பு.தலைவரு ஆனாரு// Who ever bark on CPM will go to bed for taking rest, so that they can bark again at different place for getting Bun and Biscuit. //பாசிஸ்டுகளுக்குதான் விமர்சனம் யாராவது பண்ணுனா கோவம் வரும். தங்கள அவுங்க கூட சோசலிஸ்ட்டுனுதான் சொல்லிக்குவாங்களாம்.
They were not made money like M.Karunanidhi and Co.,.
They never developed family politics.
They were not corrupted like Cong or BJP
They were not pushed down any Govt for getting posts
They were not mixed Religion with Politics….
என்ன ரொம்ப நல்லவன்னு சொன்னாங்க..அதான் அடி வாங்கிட்டு கம்முன்னு வந்தேன்னு வடிவேலு சொல்ற காமெடி நினைவுக்கு வருது. ஏப்பு.. கெட்டவங்களை எப்டி நல்லவனாக்குவ அல்லாங்காட்டி அழிப்பன்னு கேட்டா ‘நான் நல்லவன் நான நல்லவன்னு’ கத்துற
What else you are looking more? More than that they were not like TMES,, just barking…..
யப்பா டுபாக்கூர் விடுதலை
மறுபடியும் ஆளயே காணோம்!!!!!!
எங்கண்ணா போனீங்க?
எங்கயா போன?
எங்கடா போன?
சூப்பர் ஐயர்&கோ
இப்போ மகஇக தேய்ஞ்சி, தேய்ஞ்சி, இரண்டு கோஷ்டியா போனதுங்க…”
அப்படியா அந்த ரெண்டு கோஷ்டி யார்?
1.SOC
2.TNOC
“இப்போ மகஇக தேய்ஞ்சி, தேய்ஞ்சி, இரண்டு கோஷ்டியா போனதுங்க…”
அப்படியா அந்த ரெண்டு கோஷ்டி யார்?
1.SOC
2.TNOC
”
வரலாறே தெரியாத அல்பையிடம் கேள்வி கேட்டதற்கு வருந்துகிறேன்!
“………………”
//வரலாறே தெரியாத அல்பையிடம் கேள்வி கேட்டதற்கு வருந்துகிறேன்//
அடப்பாவிகாள … என்ன காந்தி செத்துட்டாரா ரேஞ்சுக்கு அரத பழசான நீயூஸ் போடுறான் இந்த சீ.. பீ.. ம்ம்ம்ம்ம் ஆதரவாளன். … நீ சொல்ற கத நடந்த சில பத்து வருசம் ஓடிருச்சு தம்பீ….
அப்புற்ம் ஏண்டா அம்பி ‘இப்போ’ அப்படிங்கற வார்த்தைய கவுஜல போட்டுறக்க? ‘இப்போ’ அப்படிங்கற வார்த்தைக்கு அர்த்தம்…. அட போங்கப்பபா இவன் அக்கப் போர் தாங்கல.. நம்மளயுமில்ல அல்பயா மாத்துறான்.
மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கும் சிபிம் கும்பல் தான் தமிழினத்தின் முதல் எதிரிகள்.முல்லை பெரியாறு,பாலக்காடு ரயில்வே கோட்டம் ஆகிய பிரச்சினைகளில் செய்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது…
ம.க.இ.க ஆதரவாளன் என்ற பெயரில் போலி பொறுக்கி கம்யூனிஸ்டு எழுதியதற்கு பதிலாக
சிபிஎம் ஆதரவாளன் என்ற பெயரில் எழுதி கேள்வி கேட்டேன் அதற்கு போலி எழுதிய பதிலுக்குதான் // வரலாறே தெரியாத அல்பையிடம் கேள்வி கேட்டதற்கு வருந்துகிறேன்! \\
என்று கூறியிருந்தேன். மறுபடியும் போலிக்கு சொல்வதென்னவென்றால்
வரலாறே தெரியாத அல்பையிடம் கேள்வி கேட்டதற்கு வருந்துகிறேன்!
இன்னும் 20 ஆண்டுகள் ஆள்வோம் என்று எந்த நம்பிக்கையில் எழுதினார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் 2019 பாராளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் டெபாசிட் வாங்கியுள்ளனர். இன்னும் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.