Saturday, July 13, 2024
முகப்புசெய்திபுத்தகக் கண்காட்சியில் முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி : கீழைக்காற்று!

புத்தகக் கண்காட்சியில் முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி : கீழைக்காற்று!

-

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் முற்போக்கு மற்றும் மார்க்சிய நூல்களை விற்பனை செய்யும் கீழைக்காற்று அரங்கத்தின் எண் 99 – 100. அரங்கில் கிடைக்கும் சிறப்பு நூல்கள்:

1. லெனினியத்தின் அடைப்படைக் கோட்பாடுகள்

ஆசிரியர்: ஸ்டாலின், பக்கம்: 172 விலை: ரூ.75

len2

மார்க்சியம் என்பது படித்து மறப்பதற்கான ஏட்டுச் சுரைக்காய் அல்ல என ரஷ்யாவில் புரட்சியை நடத்திக்  காண்பித்தர்கள் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியினர். லெனினின் தலையாய மாணவரான ஸ்டாலின் இங்கே லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எளிமையாக விளக்குகிறார்.

2. முரண்பாடு பற்றி

ஆசிரியர்: மா சே துங்., பக்கம்: 80 விலை: ரூ.40

mao1

லெனினியத்தைப் பின்பற்றி சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்திக்காட்டினர் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியினர். மார்க்சியத்தின் தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் சாரமான முரண்பாடு பற்றி மாவோ புரியும் விதத்தில் இந்நூலில் விளக்குகிறார். இந்நூல் மாவோவின் புகழ் பெற்ற படைப்புக்களில் ஒன்று.

3. கம்யூனிஸ்டு அறிக்கையின் கதை

தொகுப்பு நூல், பக்கம்: 24 விலை: ரூ.7

cak1

மார்க்சும், ஏங்கெல்சும் 1848 இல் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையை கூட்டாக எழுதி வெளியிட்டனர். இது சர்வதேச கம்யூனிஸ்டு கூட்டமைப்பின் ஆணைக்கேற்ப செய்து முடிக்கப்பட்டது. இந்நூல் கம்யூனிஸ்டு அறிக்கையின் வரலாற்றுப் பின்புலத்தை சுவாரசியமாக விளக்குகிறது. பலரும் அறிக்கையைப் படித்திருப்பார்கள். ஆனால் இந்த வரலாற்றுப் பின்னணியை அறியும் போது அறிக்கையின் சிறப்பை மேலும் தெரிந்து கொள்ளலாம்.

4. அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவில் அதன் பாதிப்புகளும்

தொகுப்பு நூல், பக்கம்: 64 விலை: ரூ.30

ame1

கடந்த சில மாதங்களில் அமெரிக்காவில் முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பிரச்சினையின் காரணங்கள், சதிகள், சூழ்ச்சிகளைக் குறித்து புதிய ஜனநாயகத்தில் வந்த கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

5. காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?

தொகுப்பு நூல், பக்கம்: 56 விலை: ரூ.25

kash1

காஷ்மீரில் சில இலட்சம் துருப்புக்களை நிறுத்தி அப்பிரதேசத்தையே திறந்த வெளிச் சிறையாக மாற்றியிருக்கும் இந்திய அரசின் துரோகம் பலருக்கும் தெரியாது. காஷ்மீரின் இயற்கை அழகு தெரிந்த அளவுக்கு அதன் விடுதலைப் போராட்ட வரலாறு பெரும்பாலானோருக்குத் தெரியாது. இதில் காஷ்மீரின் உண்மையான வரலாறும்,  மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் நியாயமும் இடம் பெற்றுள்ளன.

6. உலகைச் சூறையாடும் உலக மயம்

ஆசிரியர்: இராயகரன், பக்கம்: 176 விலை: ரூ.85

raya1

உலகமயத்தின் அச்சுறுத்தும் புள்ளி விவரங்களிலிருந்து ஏழைநாடுகளுக்கு என்னென்ன தீங்கிழைக்கப்பட்டிருக்கிறது என்பது இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

7. குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்பா.. பயங்கரவாதிகள்

தொகுப்பு நூல், பக்கம்: 24 விலை: ரூ.7

rss11

குண்டு வெடிப்பு என்றாலே இசுலாமியர்கள்தான் என நாட்டின் பொதுக்கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அலையில் உண்மையான பயங்கரவாதிகளான இந்து மதவெறியர்கள் மறைந்து கொள்வதை இந்நூல் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது.

 

8. சட்டக் கல்லூரி கலவரம்: சாதியம் எதிர்ப்போம் ! தமிழகம் காப்போம் !!

ஆசிரியர்: வினவு, பக்கம்: 88 விலை: ரூ.35

vbf11

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே கலவரம் என ஊடகங்களால் பேசப்பட்ட பிரச்சினை குறித்தும் முக்கியமாக தலித் மாணவர்களுக்கெதிராக வெளிப்பட்ட ஆதிக்க சாதி மனோபாவத்தைக் கண்டித்தும் வினவில் வெளியான இரண்டு கட்டுரைகள் மற்றும் அதன் மறுமொழிகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

9. மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்.

 

ஆசிரியர்: வினவு, பக்கம்: 88 விலை: ரூ.35

vbf2

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை பல்வேறு கோணங்களில் விளக்கி வினவில் ஆறு பாகங்களாக வெளியிடப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. இந்தக் கட்டுரைகளுக்காக     ஆதரித்தும், எதிர்த்தும் வந்த பின்னூட்டங்ளும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது தமிழில் புதிய முயற்சி.

10. ஜீன்சு பேண்டும் பாலியல் வன்முறையும்- முதலான கட்டுரைகள்.

 

ஆசிரியர்: வினவு, பக்கம்: 56 விலை: ரூ.25

vbf4

வினவுத் தளத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வெளிவந்த பண்பாட்டு பிரச்சினைகள் மற்றும் சமூக விமரிசனங்கள் இந்த நூலில் இடம்பெறுகின்றன. அரட்டை வெளியில் மூழ்கியிருக்கும் இணைய உலகில் சமூக அக்கறையை கிளர்ந்தெழச் செய்வதற்காக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் பதிவுலகில் பரவலாக வரவேற்பைப் பெற்றவையாகும்.

11. இலக்கிய மொக்கைகள்.

 

ஆசிரியர்: வினவு, பக்கம்: 56 விலை: ரூ.25

vbf5

ஜெயமோகன், சாருநிவேதிதா, காலச்சுவடு, உயிரோசை, சுகுமாரன் முதலான சிறு பத்திரிகை இலக்கிய பிம்பங்களை விமர்சனம் செய்து வினவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் நூலில் தொகுக்கப்ட்டுள்ளன.

12. ஐ.டி. துறை நண்பா..

ஆசிரியர்: வினவு, பக்கம்: 72 விலை: ரூ.25

vbf6

அமெரிக்க நிறுவனங்கள் திவாலானதை எளிமையாக விளக்கி புதிய கலாச்சாரத்தில் எழுதப்பட்ட கட்டுரையும், வினவில் ஐ.டி துறை நண்பர்கள் தொழிற்சங்கம் கட்டும் முயிற்சியில் ஈடுபடவேண்டுமென எழுதப்பட்ட கட்டுரையும் இங்கே நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. கூடவே இரு கட்டுரைகளுக்காக வினவுத் தளத்தில் நடந்த வாசகர் விவாதமும் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

13. கடவுள் கைது பக்தன் விடுதலை

தொகுப்பு நூல், பக்கம்: 72 விலை: ரூ.25

vbf3

விண்ணுலகில் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதத்தின் மூலம் மதம் குறித்த பிரச்சினை எப்போதுமே தீர்க்கப்படுவதில்லை. ஏனென்றால் கடவுள் மண்ணுலகில் இருந்து கொண்டு, பல்வேறு வகையான மனிதர்களின் மூலமல்லவா மக்களை மயக்கிக் கொண்டிருக்கிறார்? கடவுள் ‘குடியிருக்கும்’ அத்தகைய கோயில்களை ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்து அவை அனைத்திலிருந்தும் அவரை வெளியேற்ற வேண்டியிருக்கிறது. அத்தகைய சில மறைவிடங்களிலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியே இந்த வெளியீடு.

மற்றும் தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற

  • மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பத்து பாடல் தொகுப்புக்களின் ஒலிக்குறுந்தகடு
  • ம.க.இ.க தஞ்சையில் நடத்திய தமிழ் மக்கள் இசை விழாவின் கருத்தரங்க, கலைநிகழ்ச்சிகளின் குறுந்தகடுகள்
  • சிதம்பரம் கோவிலில் தமிழுக்காக நடந்த போராட்டத்தை விளக்கும் உரைகள், காட்சிகள்
  • தோழர் சண்முகத்தின் புரட்சிகரத் திருமணத்தின் அவசியத்தை விளக்கும் உரை

மற்றும் பிற முற்போக்கு பதிப்பகங்களின் நூல்களும் கீழைக்காற்று அரங்கில் கிடைக்கும்

அனைவரும் வருக!

கீழைக்காற்று வெளியீட்டகத்தின் அரங்கு வலது வாயிலின் அருகில் உள்ளது.  அதன் வரைபடத்தை கீழே உள்ள படத்தில் காண்க.

kkstall

பெரிதாக பார்க்க படத்தை சொடுக்கவும்

கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,

kklogoகீழைக்காற்று வெளியீட்டகம்,
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
தொலைபேசி: 044 – 28412367

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் vinavu@gmail.com , pukatn@gmail.com முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  1. இலக்கிய மேதாவிகளாக தங்களை காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் மதச்சிறுபாண்மையினருக்கு எதிரான ஃபாசிச வடிவம் எடுக்கும் காலத்தில் புரட்சிகரசக்திகள் மதச்சிறுபாண்மையினருக்கு ஆதரவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது. நன்றி! ‌

  2. //மார்க்சியம் என்பது படித்து மறப்பதற்கான ஏட்டுச் சுரைக்காய் அல்ல என ரஷ்யாவில் புரட்சியை நடத்திக் காண்பித்தர்கள் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியினர். லெனினின் தலையாய மாணவரான ஸ்டாலின் இங்கே லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எளிமையாக விளக்குகிறார்.///

    இந்த புத்தகத்தை CPM அணிகள் படிக்க வேண்டும். படித்தால் புத்தி வரும்…

  3. வணக்கம் நண்பரே இந்தத்திரட்டியிலும் உங்களது பதிவுகளையும் இனையுங்கள் இதன் வளர்ச்சிக்கு பங்காற்றி உங்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க