privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதிருமங்கலம் இடைத்தேர்தல்: மக்கள் பிழைப்புவாதத்திற்கு ஒரு திருப்புமுனை !

திருமங்கலம் இடைத்தேர்தல்: மக்கள் பிழைப்புவாதத்திற்கு ஒரு திருப்புமுனை !

-

karuna-jayaalagiri

தி.மு.கவின் வெற்றி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னரே மூன்று இடைத்தேர்தலிலும் ஹாட்ரிக் அடித்த சாதனை நாயகன் அழகிரி என்று உடன்பிறப்புகள் மதுரையின் மூத்திரச் சந்துகளைக்கூட விட்டுவைக்காமல் கட்டவுட்டை எழவைத்தார்கள். இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவில் சுமார் 90% வாக்குப் பதிவு நடந்ததுமே சாதனை நாயகன் அழகிரி தி.மு.கவின் வெற்றியை ஊடகங்களுக்கும், உலகிற்கும் அறிவித்துவிட்டார்.

மற்ற கட்சிகளுக்கும் இதுதான் முடிவென்று தெரிந்திருப்பதால் தி.மு.க மோசடி செய்து வென்றிருப்பதாக பாடும் வழக்கமான பல்லவியை சுரத்தின்றி சொல்லிவிட்டு அதே மோசடியை எப்படி அடுத்த தேர்தலில் செய்ய முடியுமென்பதை ஆராயப் போய்விடுவார்கள். ஊடகமோ இது அழகிரி பாணி அரசியலின் வெற்றி என அட்டைப்படக் கட்டுரைகள் வெளியிட்டு அது தொடர்பான அரசியல் கிசுகிசுக்களை அதாவது அழகிரியின் வளர்ச்சியை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளுவார், இனி மாறன் சகோதரர்கள் அழகிரி பக்கம் சாய்வார்களா இல்லை அவரை முந்துவதற்கு ஸ்டாலினையும் கனிமொழியையும் அதிகமாக ஃபோகஸ் செய்வார்களா, என்று பிய்த்து உதறும்.

புரட்சித் தலைவியோ தனது பாணியை கையிலெடுத்துக் கொண்டிருக்கும் அழகிரியை எப்படி வீழ்த்துவது, அதற்கு தேவைப்படும் கோடிகளை எப்படி அமுக்குவது அல்லது ஏற்கனவே அமுக்கியதில் எவ்வளவு செலவழிப்பது என பணக்கணக்குகளை மனக்கணக்காய் போட்டுக் கொண்டிருப்பார். அம்மாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் போலிக்கம்யூனிஸ்டுகள் தி.மு.கவின் இந்த ‘இமாலய’ வெற்றியை வைத்து கூட்டணி மாறியதில் தப்பு செய்துவிட்டோமோ என சுயவிமர்சனம் செய்து சுய குழப்பத்தில் இருப்பார்கள். மதில் மேல் பூனையாக நிற்கும் இராமதாசோ தனது சந்தர்ப்பவாதத்திற்கு புதிய பொழிப்புரை எழுதி பழைய கூட்டணிக்கே திரும்புவோமா என்று தைலாபுரத்தில் தீவிர டிஸ்கஷினில் இருப்பார். வை.கோ போன்ற அரசில் அனாதைகள் நிலைமை இன்னும் மோசம் என்பதால் அவர்கள் என்ன யோசிப்பார்கள் என யாராலும் அறுதியிட முடியாது.

திருமங்கலத் தேர்தல் அறிவித்திருக்கும் நிலவரப்படி தமிழகத்திற்கு ஒதுக்கவேண்டிய தொகையை தலைமையிடம் வாங்கவேண்டிது குறித்து ‘தேசியக்’ கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.கவின் தமிழ்நாட்டு தலைமைகள் தமது விண்ணப்பத்தை வெயிட்டாகத் தயாரித்துக் கொண்டிருக்கும். இப்போது இரு கூட்டணிகளிலும் இடமில்லையென்பதால் பா.ஜ.கவிற்கு வேண்டுமானால் தேவைப்படும் அந்தத் தொகை தேர்தலுக்கு பின்பு பயன்படலாம். மற்றபடி திருமங்கலம் இடைத்தேர்தல் வழிகாட்டும் ஒரே விசயம் பணம் எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதுதான்.

திருமங்கலத்தில் வாக்களிக்கும் தகுதி உள்ள 1,55,000 பேருக்கும் அதாவது ஒவ்வொரு ஒட்டுக்கும் தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளும் கொண்டு சேர்த்த தொகை ஐந்தாயிரம் ரூபாயாம். இது போக போனசாக செல்போன், கிரைண்டர், மிக்ஸி, திருநெல்வேலி அல்வா என பலபொருட்கள் விநியோகப்பட்டிருக்கின்றன. இப்படிப் பணம், பொருள் வாங்குவதை ஒரு கட்சி செய்யும்போது மற்றகட்சி இதை புகார் தெரிவித்தால் மக்கள் அப்படி புகார் தெரிவித்த கட்சியின் மீது காய்ந்து வையும் அளவுக்கு இந்த பணநாயக உ ணர்வு தலைவிரித்தாடியிருக்கிறது. இரு கட்சிகளும் மக்களுக்கு பணமாய் கொடுத்த அளவு எழுபத்தியெட்டு கோடிக்கும் அதிகம் என இந்தியா டுடே எழுதுகிறது. இது உண்மையானால் லதா அதியமான்தான் தமிழ்நாட்டிலேயே காஸ்ட்லியான எம்.எல்.ஏ.

இதுதான் போட்டியின் இலட்சணமென்றால் இனி தேர்தலையை யார் மக்களுக்கு அதிகம் பணம் கொடுக்க முடியுமென தேர்தல் கமிஷன் ஏலமே நடத்தி அதிலிருந்து முடிவை அறிவிக்கலாமே? சில கிராமங்களில் இப்படி ஏலம் விட்டு யார் அதிக பணத்திற்கு ஏலம் எடுக்கிறார்களோ அவர்களின் கட்சிக்கு வாக்களிப்பது வழக்கம். இதை சட்டப்பூர்வமாக அறிவித்து விட்டால் பிரச்சினையில்லை. திருமங்கஙலத்தில்   இந்த பணநாயகத்தின் மகிமையால் கிட்டத்தட்ட 90 சதவீதம் வாக்குப் பதிவு நடந்திருக்கிறது. அந்த அளவு ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு பணம் காரணமாயிருக்கிறது. வழக்கமாக வாக்குப்பதிவு மந்தமென்றால் மக்களிடம் ஜனநாயக உணர்வில்லை என்று சலித்துக் கொள்ளும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் இனி திருமங்கலத்தின் வகையில் ஜனநாயகம் தழைத்தோங்குவதால் பெருமையடையலாம்.

திருமங்கலத்தின் தேர்தல் வெற்றிக்கு தி.மு.கவின் பணபலமும், அதை சாத்தியமாக்கிய அழகிரியின் தந்திரமும் காரணம் என்பது முதன்மையானதல்ல. இந்த பணவசதியும், தந்திரமும் ஜெயலலிதாவுக்கும் உண்டு என்பதால் இது அரிதான விசயமும் அல்ல.

திருமங்கலம் தேர்தல் உலகிற்கு அளித்திருக்கும் முக்கியமான விசயம் என்னவென்றால் ஒரு தொகுதியின் முழுமக்களையும் விலை கொடுத்து வாங்கமுடியும் என்பதுதான். ஒரு சிலரை ஊழல்படுத்துவது போய் ஒரு ஊரையே ஊழல் படுத்தி வெற்றியை சாதிக்க முடியும் என்பதையே இந்த இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இது போலிஜனநாயகத்தை அமல்படுத்தும் தேர்தல் என்றாலும் இப்படி பணத்தை இறைத்து மக்களின் வாக்குகளை கைப்பற்றமுடியும் என்றால் அந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. பொதுவாக தேர்தல், அரசியல் பற்றி அவையெல்லாம் சாக்கடை என்று அரசியல்வாதிகளை ஊடகங்கள் கேவலப்படுத்துவது நாமறிந்தது. ஆனால் இப்பொது அதையெல்லாம்  ஒன்றுமில்லையென ஆக்கிவிட்டது மக்களின் இந்த விலைபோன சங்கதி.

இப்படி சில ஆயிரங்களுக்கு மக்கள் விலைபோவது என்பது எல்லாவகை அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்திவிடும். பணத்திற்கு விலைபோகும் இந்த மக்கள் சாதிவெறிக்கும், மதவெறிக்கும் ஏன் ஆட்பட மாட்டார்கள்? கல்வியும் சுகாதாரமும் தனியார் மயமாகிவிட்ட நிலையில் இப்படி ஊழலில் மூழ்கியிருக்கும் மக்கள் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு வர மாட்டார்கள். பொருளாதாரச் சுரண்டலில் சிக்கியிருக்கும் மக்களை இப்படி விலை போகும் ஊழல் பண்பு மேலும் அடிமைகளாக்குவதற்குத்தான் உதவி புரியும். உலகமெங்கும் வரலாற்றில் பல சர்வாதிகாரிகள் இப்படித்தான் எலும்புத் துண்டுகளை வீசி தங்களுக்கென ஒரு சமூக அடிப்படையை உருவாக்கியிருக்கிறார்கள். திருமங்கலமும் அப்படி ஒரு அத்தியாத்தை தமிழகத்தில் துவங்கியிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் எந்த வேட்பாளர், கட்சி வென்றனர் அல்லது தோற்றனர் என்பது முக்கியமல்ல. மக்கள் விலை போயிருக்கிறார்கள் என்பதுதான் கவலைப்பட வேண்டிய சேதி.

மக்களிடம் நிலைகொள்ளத் துவங்கியிருக்கும் இந்த பிழைப்புவாதத்தை  எதிர்த்துப் போராடுவதுதான் நம் முன் உள்ள கடமை. தி.மு.க, அ.தி.மு.க இன்ன பிற ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் எந்த ஒரு அநீதிக்காகவும் தமிழகத்தை விலைக்கு வாங்கலாம் என்பது நிலைநிறுத்தப்படும்.

  1. Vinavu,

    If money is being given out, the common man should take it. Is there any other way of getting even a naya paisa out of the crores that have been taken from him by DMK & ADMK? Take the money and vote for whoever you want…

  2. மக்கள் என்று இலவசங்களுக்கு வாய் பிளந்தார்களோ அன்றே பிழைப்புவாதம் துவங்கி விட்டது. 60000ம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, வீட்டிற்கு 5000ம் ரூபாய் இரண்டுமே ஓட்டுக்காக செய்யப்பட்ட விபச்சாரம்.

  3. திருமங்கலத்தில் 40ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி என்பதும், நீங்கள் சொல்கிறபடி மக்களின் மனநிலை தான் கவலைகுரியதாக பட்டது.

    ஜனநாயக தேர்தலின் லட்சணத்தை இந்தியா முழுவதும் ஏற்கனவே நாறி சந்தி சிரித்த விசயம் தான்.

    புதிய ஜனநாயக தொழிலாளர் முன்ணணி 25.01.2009 அன்று அம்பத்தூரில் நடத்தப்போகும் மாநாட்டுக்காக பகுதிகளில் மக்களிடம் பிரச்சாரத்துக்கு போகும் பொழுது, மக்களோடு பேசும் பொழுது, இந்த பிழைப்புவாதம் வெளிப்பட்டது.

    மக்களிடையே மாற்று அரசியலை எடுத்து கொண்டுப் போகும் புரட்சிகர அமைப்புகளுக்கு கூடுதல் போராட்டம் தான் இந்த நிலைமை.

  4. //மக்களிடம் நிலைகொள்ளத் துவங்கியிருக்கும் இந்த பிழைப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதுதான் நம் முன் உள்ள கடமை. தி.மு.க, அ.தி.மு.க இன்ன பிற ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் எந்த ஒரு அநீதிக்காகவும் தமிழகத்தை விலைக்கு வாங்கலாம் என்பது நிலைநிறுத்தப்படும்.///

    இது உண்மையிலேயே கவலையளிக்கும் விசயம். ஜெயலலிதா தனது கட்சி அணிகளையும் ஊழலில் பங்கெடுக்க வைத்து புதிய அத்தியாயம் தொடுங்கினார் என்றால் திமுக ஒரு ஊரையே ஊழல்படுத்தி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

    இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரும் பகுதி கணக்கில் வராத கருப்புபணம்(லஞ்சம், ஊழல், மோசடி வழியாக) மூலமாகவே நடக்கிறது என்று எங்கோ படித்த ஞாபகம். அது இன்னும் விரிவாக நடைபெறும் போல உள்ளது.

  5. நறுக்குன்னு எழுதியிருக்கீங்க. கருப்பு எம்.ஜி.ஆரையும், சமத்துவ நாயகனையும் விட்டுட்டீங்களே? அவங்களையும் ரெண்டு வரி எழுதி கிள்ளியிருக்கலாம்.

  6. தங்களது ப்ளாக் ஸ்பாட் தளத்தில் வாக்களிக்க முடியவில்லை. பதிவுகளை தனியாக திறந்தால்தான் வாக்களிக்கும் பெட்டி கண்னுக்கு புலப்படும். அப்படி திறக்க ஏதுவாக தலைப்பிலோ அல்லது வேறு எங்காவது கிளிக் செய்தால் அது வேர்ட் பிரஸுக்கு வருகிறது. சரி செய்யவும்

  7. The history of buying votes from the electorate goes back to the period of Jeyalalitha.Thirumangalam is just the copycat of Kancheepuram where election held when Jayalalitha was in power. So it seems to be of inappropriate to attribute everything called eloctoral malpractice started only with this election. The condition of CPM and CPI in the alliance of ADMK is going to be pathetic as their contribution in the total no. of votes of ADMK is insignificant. They fear as Parliament election approaches they may not be given enough seats. There are chances for these people being used by Puratchi Thalaivi to make scathing attacks on Karunanithi just like what Vaiko did so far.

  8. // There are chances for these people being used by Puratchi Thalaivi to make scathing attacks on Karunanithi just like what Vaiko did so far.//

    யு மீன் அரசியல் அனாதைகள்… ஹா…. ஹா… ஹா… அல்ரெடி தெ லுக் லைக் அரசியல் அனாதைகள்…. வலைப்பூவிலும் அவ்ர்கள் அ.அதான்…

  9. //யு மீன் அரசியல் அனாதைகள்… ஹா…. ஹா… ஹா//

    ஷ்ஷ்ஷ்ஷ்
    கொஞ்ச நாளா அந்த டவுசர் தொல்ல இல்லாம இருக்கு….
    தந்தியடிச்சு வர வப்பீங்க போலிருக்கே!!!!

  10. :(((((

    //இப்படி சில ஆயிரங்களுக்கு மக்கள் விலைபோவது என்பது எல்லாவகை அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்திவிடும். பணத்திற்கு விலைபோகும் இந்த மக்கள் சாதிவெறிக்கும், மதவெறிக்கும் ஏன் ஆட்பட மாட்டார்கள்? கல்வியும் சுகாதாரமும் தனியார் மயமாகிவிட்ட நிலையில் இப்படி ஊழலில் மூழ்கியிருக்கும் மக்கள் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு வர மாட்டார்கள். பொருளாதாரச் சுரண்டலில் சிக்கியிருக்கும் மக்களை இப்படி விலை போகும் ஊழல் பண்பு மேலும் அடிமைகளாக்குவதற்குத்தான் உதவி புரியும். உலகமெங்கும் வரலாற்றில் பல சர்வாதிகாரிகள் இப்படித்தான் எலும்புத் துண்டுகளை வீசி தங்களுக்கென ஒரு சமூக அடிப்படையை உருவாக்கியிருக்கிறார்கள். திருமங்கலமும் அப்படி ஒரு அத்தியாத்தை தமிழகத்தில் துவங்கியிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் எந்த வேட்பாளர், கட்சி வென்றனர் அல்லது தோற்றனர் என்பது முக்கியமல்ல. மக்கள் விலை போயிருக்கிறார்கள் என்பதுதான் கவலைப்பட வேண்டிய சேதி.//

    100% உண்மை. இது தான் எனது கவலையும் கூட 🙁

  11. மாற்றங்கள் தலையில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும்…
    இந்திய அரசே பிழைப்பு வாதத்திற்காக அமெரிக்க, ரிலையன்ஸ், டாடா, கோக்…. இன்னும் பிற முதலாளிகளுடன் இணைந்து இந்திய வளங்களை பங்கிடுவது குறித்த உணர்வு இல்லாதபோது, இந்தியாவை குப்பை தொட்டியாக்கி பிழைப்பு வாதம் நடத்தும்போது, இந்திய மக்களுக்குமட்டும் எங்கிருந்து வரும்? ஓட்டளிப்பதில் மட்டும் இல்லை பிழைப்புவாதம், எல்லா இடத்திலும் பிழைப்புவாதம் தலைவிரித்து ஆடுகிறது. மக்களை மட்டும் குறைகூறி பயனில்லை. இங்கு ம‌க்க‌ளுக்கு ப‌ண‌ம் கொடுத்த தலைவர்கள் தாம் த‌வ‌று… ம‌க்க‌ள் அவர‌வர் எண்ண‌த்திற்கு எதிராக வாக்க‌ளித்திருதால் அது பெரும் த‌வ‌று.

    \\உலகமெங்கும் வரலாற்றில் பல சர்வாதிகாரிகள் இப்படித்தான் எலும்புத் துண்டுகளை வீசி தங்களுக்கென ஒரு சமூக அடிப்படையை உருவாக்கியிருக்கிறார்கள்\\

    வரலாறே இங்கு த‌வ‌றாக (இருக்கிறது)சொல்லிகொடுக்க‌ப்ப‌டுகிறது, அடிப்ப‌டையில் இருந்து மாற்ற‌ப்ப‌ட‌ வேண்டும்.

    பிழைப்புவாத‌ம் = அறிவாளித்த‌ன‌ம் என்ற கருத்து உடைக்கப்பட வேண்டும்.

  12. மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு காசு-பண உறவாக மட்டுமே மாறும் என கார்ல் மார்க்ஸ் கணித்தது இதைத்தானா….
    சுகன்

  13. 90% சுமார் 25% கள்ள ஓட்டு, பண ஓட்டு என்றே வைத்துக்கொண்டாலும், தி.மு.க 5,000 என்ற அளவில் ஜெயித்திருக்குமே!

  14. //பிழைப்புவாத‌ம் = அறிவாளித்த‌ன‌ம் என்ற கருத்து உடைக்கப்பட வேண்டும்//

    சமூக அவலத்தை எதிர்க்கும், அதை மாற்றத் துடிக்கும் அனைவரும் சந்திக்கும் வசவு பிழைக்க தெறியாதவனென்று….

    உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்களே பிழைக்கும் வழியை தெறிந்தவர்கள்…அது தெறிந்த்தனால்தான் அதை வெல்ல போராடுகிறார்கள்…!!!

  15. “சமூக அவலத்தை எதிர்க்கும், அதை மாற்றத் துடிக்கும் அனைவரும் சந்திக்கும் வசவு பிழைக்க தெறியாதவனென்று….

    உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்களே பிழைக்கும் வழியை தெறிந்தவர்கள்…அது தெறிந்த்தனால்தான் அதை வெல்ல போராடுகிறார்கள்…!!!”

    சிறப்பான கருத்து

  16. ///////////புரட்சித் தலைவியோ தனது பாணியை கையிலெடுத்துக் கொண்டிருக்கும் அழகிரியை எப்படி வீழ்த்துவது, அதற்கு தேவைப்படும் கோடிகளை எப்படி அமுக்குவது அல்லது ஏற்கனவே அமுக்கியதில் எவ்வளவு செலவழிப்பது என பணக்கணக்குகளை மனக்கணக்காய் போட்டுக் கொண்டிருப்பார். அம்மாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் போலிக்கம்யூனிஸ்டுகள் தி.மு.கவின் இந்த ‘இமாலய’ வெற்றியை வைத்து கூட்டணி மாறியதில் தப்பு செய்துவிட்டோமோ என சுயவிமர்சனம் செய்து சுய குழப்பத்தில் இருப்பார்கள். மதில் மேல் பூனையாக நிற்கும் இராமதாசோ தனது சந்தர்ப்பவாதத்திற்கு புதிய பொழிப்புரை எழுதி பழைய கூட்டணிக்கே திரும்புவோமா என்று தைலாபுரத்தில் தீவிர டிஸ்கஷினில் இருப்பார். வை.கோ போன்ற அரசில் அனாதைகள் நிலைமை இன்னும் மோசம் என்பதால் அவர்கள் என்ன யோசிப்பார்கள் என யாராலும் அறுதியிட முடியாது./////////////

    கூட்டுக்களவானிக் கட்சிகளின் உளவியலை இவ்வரிகள் நிறுவுகின்றன. அதுவும் போலிகளின் நிலையோ அந்தோ பரிதாபம்!

    அம்மாவின் புகழ் பரப்ப சைக்கிள் பேரணி நடத்தி, தமிழகமெங்கும் கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களைத் திருப்திப்படுத்த வகுப்புகள் நடத்தி, அணுசக்தி ஒப்பாறியும் வைத்து அத்தனையும் எடுபடாமல் போனதை எண்ணி வெம்பித் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தமது கட்சியின் கொடியைக் கொண்டு மூடி மறைத்துவைத்தும் இந்த தேர்தல் ஜனநாயகம் கிழிந்து அம்மனமானதை எண்ணி அழுது புலம்புகிறார்கள்.

    இனி எதைச் சொல்லி வாக்காளர்களைச் சந்திப்பது என்று பரிதவிக்கின்றனர். அட வாக்காளர்களை விட்டுத்தள்ளுங்கள், கட்சிக்குள் இருக்கும் அணிகளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று குழம்பித் தவிக்கின்றனர்.

    என்னதான் மக்கள் ஊழல் பட்டுவிட்டார்கள் என்று நாம் கவலை கொண்டிருந்தாலும், அதற்கெதிராகப் போராடியே ஆகவேண்டுமென்பது அவசியமென்றாலும், இத்தேர்தல் போலிகளுக்கு அளித்திருக்கும் பாடம் குறித்து மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

  17. >>வாக்குப்பதிவு மந்தமென்றால் மக்களிடம் ஜனநாயக உணர்வில்லை என்று சலித்துக் கொள்ளும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் இனி திருமங்கலத்தின் வகையில் ஜனநாயகம் தழைத்தோங்குவதால் பெருமையடையலாம்

    நடுத்தர வர்க்க “அறிவாளிகள்” பணநாயகத்தை தான் எதிர்பார்க்கிறார்கள்… 🙂

    தனக்கு காசு கிடைத்தால் போதும், மற்றவன் எக்கேடு கெட்டால் என்ன, தற்கொலை செய்தால் என்ன, செத்தா என்ன? என்ற மனப்பான்மையில் தான் நடுத்தர ஜீவிகள் உள்ளனர்.

    ஆனால் ஒரு தொகுதி முழுவதையும் பிழைப்புவாதத்திற்கு தள்ளியுள்ளது வெட்ககேடான நிலைமை.

  18. if taking money from them becomes ok, then giving money would also become ok. the way to make them payback what they took from us would only be by making them accountable- and afraid of us. how to go about it would vary with the individual’s strengths and weaknesses..
    let us atleast talk tough even if we dont act that way.

  19. Jegan
    திருமங்கலம் இடை தேர்தல்
    ************************

    ஒரு தொகுதி – 65 கோடி செலவு – பிரியாணி பொட்டலம் – இலவச வேட்டி சட்டை – இரண்டாயிரம் பணம் – இலவச குடங்கள் – மிச்சர் / அல்வா பாக்கேட்டில் தங்க மோதிரம் – 80+% ஒட்டு பதிவு…..

    *************************

    திருமங்கலம் இடை தேர்தலின் மூலம் நாம் கற்றுகொண்டது என்ன?

    இந்த இடை தேர்தல் நமக்கு கற்று கொடுத்தது என்ன?

    அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை நாம் எப்படி எதிர் கொள்ள போகிறோம்?
    Jan 11 (4 days ago)
    வனஜாசெல்வராஜ்.
    நேர்மையாக இருப்பவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என்று அரசியல்வாதிகள் எண்ணுகிறார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
    எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு எண்ணியதை மட்டுமே செயல்படுத்துபவர்களும் உண்டு. இதற்கு விலை போய் முதுகெலும்பே இல்லாமல் வளைபவர்களும் உண்டு. எதுவுமே வேண்டாம் என்று புறக்கணித்து நிலையாய் நிற்பவர்களும் சிலருண்டு.

    ஆனால் 80% வாக்குப்பதிவு என்பது நிறைய பேர் விலை போயுள்ளதையே காட்டுகிறது. தானாக முன் வந்து இதுவரை இத்தனை சதவீத வாக்குகளை யாரும் , எப்போதும் பதிந்ததில்லை. இதன் பின்னணியில் பணம் மட்டுமே இருக்கிறதா? இல்லை இன்னும் ஏதேனும் இருக்கிறதா? என்று சந்தேகம் ஏற்படுகிறது. அண்ணாவும், காமராஜரும் ஆண்ட போது கூட இவ்வளவு வாக்குகள் கிடைக்கவில்லையே…?

    ஊகியுங்கள் …பின் விவாதியுங்கள்…தேர்தலுக்குள் ஒரு மாற்றம் கொணர்வோம்…
    Jan 12 (3 days ago)
    பூபாலன் தாட்டி
    //65 கோடி செலவு – பிரியாணி பொட்டலம் – இலவச வேட்டி சட்டை – இரண்டாயிரம் பணம் – இலவச குடங்கள் – மிச்சர் / அல்வா பாக்கேட்டில் தங்க மோதிரம் – 80+% ஒட்டு பதிவு…..//

    ரூ. 61 கோடிக்கு 80 சதவிகித வோட்டு பதிவென்றால், ரூ. 81.25 செலவு செய்திருந்தால் 100 சதவிகிதம் வோட்டு பதிவு விழுந்திருந்தாலும் விழுந்திருக்கலாம்… அரசியல் வாதிகள் இங்கயும் தங்கள் கடமையை சரிவர செய்யாததே இப்படியொரு வரலாறு காணாத வோட்டு பதிவு இழந்ததற்கு காரணம்.

  20. */ ஒரு சிலரை ஊழல்படுத்துவது போய் ஒரு ஊரையே ஊழல் படுத்தி வெற்றியை சாதிக்க முடியும் என்பதையே இந்த இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது */

    ஆம். என்னுடைய பதிவில் ஒருவர் சொல்லியிருந்தார், ‘மக்களுடைய எண்ணங்களைத்தான் அரசியல்வாதிகள் பிரதிபலிக்கிறார்கள்’ என்று!. உண்மைதான் போலும் கையூட்டு பெற்று வாக்களிக்கலாம் என்ற மக்களின் மன நிலையைத்தான் அம்மக்களிலிருந்து வந்த அரசியல்வாதிகளும் பிரதிபலிக்கிறார்கள். ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’???

  21. இது கண்ணாடி
    மக்களின் மதிப்பீடுகளில், விழுமியங்களில் பிழைப்புவாதம் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதற்கு திருமங்கலம் ஒரு கண்ணாடி.
    கடும் பணி எதிருள்ளது சோர்வடையாதே என்றவகையில் நமக்கும்தான்.

    தோழமையுடன்
    செங்கொடி

  22. Tirumangalam result will all probability sees the end of POLITICAL CAREER OF Jayalalitha,now the big question is what will happen to few supporters of AIADMK, i think some of them will go with Vijayakanth,others will join the Permanent Ruling Party Of Tamil Nadu (The DMK), in that case there wont be any opposition party in Tamil Nadu,because DMDK is considering joining the UPA,which leaves only with PMK, it is a question mark over next move, probably they will join DMK Alliance again (then it is problem of plenty for UPA and its leader karunanidhi).Any way one good news is the end of Jayalalitha’s political career.which is a new year or pongal gift for the people of Tamil Nadu

  23. […] This post was mentioned on Twitter by karthick and karthick, ஏழர. ஏழர said: இந்த நேரத்தில் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை http://j.mp/cctmHB திருமங்கலம் இடைத்தேர்தல்: மக்கள் பிழைப்புவாதத்திற்கு ஒரு திருப்புமுனை ! […]

Leave a Reply to அன்பளிப்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க