Friday, March 31, 2023
முகப்புஉலகம்ஈழம்முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!

முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!

-

மூண்டெழுமா முத்துக்குமார் இட்ட தீ?

அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

இப்பதிவை எழுதும் இந்த நேரத்தில் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் கொளத்தூரிலிருந்து பெரம்பூரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்பினரும் அமைப்பு சாராத தமிழ் உணர்வாளர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு செல்ல, அந்த வெள்ளத்தின் மீது மிதந்து செல்கிறான் முத்துக்குமார்.

பேரணியின் துவக்கத்தில் பாதையெங்கும் மலர் தூவிச்செல்லும் ஒரு வாகனம். அதனைத் தொடர்ந்து எமது  தோழர்கள் ( ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ) முழக்கமிட்டுச் செல்கிறார்கள். இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான முழக்கங்கள். மேலாதிக்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவான முழக்கங்கள். இரண்டு நாள் போர் நிறுத்தம் எனும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். காஷ்மீரிலும் வட கிழக்கிந்தியாவிலும் தேசிய இனங்களை நசுக்கும் இந்திய இராணுவத்துக்கு எதிரான முழக்கங்கள். தமிழின விரோத பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான முழக்கங்கள்.

அடுத்த வரிசையில் வருகிறார்கள் கட்சித் தலைவர்கள். முன்னே அணிவகுத்துச் செல்லும் முழக்கங்கள் பலவற்றின் கருத்துடன் முரண்படும் தலைவர்கள். இந்த தன்னெழுச்சியின் வெள்ளத்தில் தம்மையும் தம் அடையாளத்தையும் பேணிக் கரைசேர்வதெப்படி கொள்வதெப்படி எனும் சிந்தனையில் ஆழ்ந்தபடி நடைபோடும் தலைவர்கள்.

அவர்களைத் தொடர்ந்து வருகிறது கருத்துகள் ஏதும் எழுப்பாத பாண்டு வாத்தியம்.

அதன் பின்னே முத்துக்குமாரைத் தாங்கிய வாகனம். தமிழகத்தின் மவுனத்தையும், கட்சிகளின் துரோகத்தையும் கண்டு மனம் வெதும்பி, தீப்பாய்வது என்ற முடிவில் முத்துக்குமார் எழுதிய கடிதம் அவனுடைய சிந்தனையோட்டத்தின் தடயங்களைக் காட்டுகிறது. மரிக்குமுன்னர் தன் இறுதி யாத்திரையை அவன் மனக்கண்ணில் ஓட விட்டிருப்பான். ஐயமில்லை. அந்தக் காட்சி இதுதானா, இதனினும் வலிதா?… யாரறிவார்? மரணம் விட்டுச்செல்லும் புதிர்களில் இதுவும் ஒன்று.

முத்துக்குமாரின் பின்னே பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம். பல்வேறு அமைப்பினர்…. பல்வேறு முழக்கங்கள்…. குமுறி வெடிக்கும் கதறல்கள்…. கோபங்கள்.

“ராஜபக்சே ஒழிக! பொன்சேகா ஒழிக! காங்கிரசு ஒழிக! ஓட்டுக்கட்சி துரோகிகள் ஒழிக! பிரபாகரன் வாழ்க! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்! சோனியாவே இத்தாலிக்கு ஓடு! ஜெயலலிதா ஒழிக! போர்நிறுத்தம் செய்! தமிழர்களைக் கொல்லாதே!”

ஒழுங்கமைக்கப்படாத இரைச்சலாக, ஒழுங்கமைக்கப்பட்ட கோபமாக, தன்னை முன்னிறுத்தும் நடிப்பாக, தன்னுணர்விழந்த கதறலாக.. முத்துக் குமாரைத் தொடர்கிறது மக்கள் வெள்ளம். கட்சிக் கொடிகளோ பதாகைகளோ வேண்டாம் என்பதை எல்லோரும் ஆரம்பத்தில் கடைப்பிடித்திருப்பதாக கூறுகின்றனர் பேரணியில் சென்று கொண்டிருக்கும் எமது தோழர்கள். ஆயினும் பின்னர் பல்வேறு அமைப்புக்களின் பதாகைகள் ஊர்வலத்தை வண்ணமயமாக்கின.

கொடிகள் இல்லையெனினும் கட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன? பதாகைகள் இல்லையெனினும் கொள்கைகள் இருக்கத்தானே செய்கின்றன? “என்னுடைய உயிரை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று தன் உயிலில் குறிப்பிட்டிருந்தான் முத்துக் குமார்.

ஆயுதம் ஒன்று இல்லாததனால்தான் தமிழகத்தில் போர் தொடங்கவில்லை என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அல்லது தன் உடல் எனும் ஆயுதமே போரையும் போர்க்குணத்தையும் தமிழகத்தில் தோற்றுவித்துவிடுமென்று அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதுதான் கேள்வி.

நேற்று முன்தினம் இரவு முத்துக்குமாரின் உடலை கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்குக் கொண்டு வந்தார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். நேற்று காலை 9 மணி முதல் தலைவர்கள் வரத்தொடங்கினர். மருத்துவர் ராமதாசு, திருமா, நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், நல்லகண்ணு  என பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த அனைவரும் வந்து அஞ்சலி செலுத்திய பின் வணிகர் சங்கக் கட்டிடத்தினுள் சென்றனர். வெளியே முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பச்சையப்பன் கல்லூரி வாயிலில் காலை மறியல் போராட்டம் செய்த பு.மா.இ.மு தோழர்கள் ஊர்வலமாக முழக்கமிட்டபடி வந்து கொண்டிருந்தனர்.

அஞ்சலி செலுத்துவதற்காக இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் சகிதம் மேடையில் ஏறினார் புரசை திமுக எம்.எல்.ஏ பாபு. போலீசை மேடையை விட்டு இறங்கச் சொன்னார்கள் எமது தோழர்கள். “என் பாதுகாப்புக்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார் எம்.எல்.ஏ. “எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போலீசு பாதுகாப்பா?” என்று மக்கள் கூட்டம் கொந்தளிக்க அந்த இடத்திலிருந்து ஓடினார் எம்.எல்.ஏ. ஆள் படை சகிதம் பந்தாவாக வந்து இறங்கிய அதிமுக மதுசூதனன் நிலைமையைப் புரிந்து கொண்டு, படை பரிவாரங்களை ஓரமாக நிற்க வைத்துவிட்டு, தனியாக வந்து மாலையைப் போட்டுவிட்டு அவசரம் அவசரமாக இடத்தைக் காலி செய்தார்.

இறுதி ஊர்வலத்தை எப்படி நடத்துவது என்ற ஆலோசனை உள்ளே நடக்கத் தொடங்கியிருந்தது. இன்றைக்கே, (அதாவது 30ம் தேதி வெள்ளிக்கிழமையன்றே) அடக்கம் செய்து விடலாம் என்பது தலைவர்களின் ஒருமனதான கருத்து. “குறைந்த பட்சம் ஒரு நாளாவது வைத்திருந்து மக்களை ஏராளமாகத் திரட்ட வேண்டும். அவருடைய மரணத்தின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பது ம.க.இ.க தோழர்கள் முன்வைத்த கருத்து. வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். “இங்கிருந்து ஊர்வலமாக தூத்துக்குடி எடுத்துச் செல்லலாம்” என்று முத்துக்குமாரின் உறவினர் சிலர் கருத்து கூறினர்.

இது தொடர்பான விவாதத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகள் கண்ணாடிப் பேழைக்குள் உறங்கிக் கொண்டிருந்த முத்துக் குமாரின் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

“உடனே எடுக்காவிட்டால் கூட்டம் அதிகமாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகிவிடும் என்று எச்சரித்தார் ஒரு தலைவர். “நேரம் ஆக ஆக கூட்டம் உணர்ச்சிக்கு ஆட்பட்டு நிலைமை கட்டு மீறிவிடும்” என்று வழிமொழிந்தார் இன்னொருவர். “உடல் தாங்காது” என்றார் ஒரு தலைவர். “சனிப்பிணம் தனிப்போகாது என்பது மக்கள் நம்பிக்கை. அதைக் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார் இன்னொரு தலைவர். இன்றே எரியூட்டி விட்டு அஸ்தியை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துப் போகலாமே என்ற மாற்று வழியையும் சிலர் முன் மொழிந்தார்கள்.

“தனது உடல் எதிரிகளைத் துன்புறுத்தும்” என்ற நம்பிக்கையில் தீக்குளித்தான் முத்துக்குமார். ஆனால் அவ்விருப்பத்துக்கு விரோதமாக அவன் உடல் “நண்பர்களை” துன்புறுத்திக் கொண்டிருந்தது. வணிகர் சங்கத்தின் அறைக்கு வெளியே அனல் பறக்கத் தொடங்கி விட்டது. உள்ளேயோ புழுக்கம் கூடிக் கொண்டிருந்த்து.

தலைவர்கள் முன்கூட்டியே தீர்மானித்து இறுதி யாத்திரைக்கான வண்டிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் போலும்! அலங்கரிக்கப்பட்ட வண்டி உள்ளே நுழைந்தது. உடனே வண்டியை மறித்தார்கள் எமது தோழர்கள். “வண்டி மிஞ்ச வேண்டுமானால் உடனே இடத்தைக் காலி செய்” என்று எச்சரித்தார்கள். எதுவும் புரியாமல் பயந்து போன ஓட்டுனர் மறுகணமே இடத்தைக் காலி செய்தார்.

சேரன், வடிவேலு, அமிர், சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி என திரையுலகத்தினர் வந்திறங்கினர். “இறுதி யாத்திரையை எப்படி நடத்துவது, எப்போது நடத்துவது என்று எந்த தலைவரும் முடிவு செய்ய முடியாது. இங்கே கூடியிருக்கும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார் சேரன். பேச முடியாமல் கண்ணீர் விட்டார் சத்யராஜ். “ஓட்டுக் கட்சிகள்.. துரோகிகள்” என்று சரமாரியாக வெடித்தார்கள் திரையுலகப் பேச்சாளர்கள்.

தாங்கள் உணர்வு பூர்வமாகப் பேசினோமா  அல்லது சூழலால் உந்தப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட்டோமா என்ற கேள்விக்கான விடை இந்நேரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். எவ்வாறாயினும் அந்தப் பேச்சு கூட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது.

ஆலோசனை முடிந்து முடிவை அறிவிக்க மேடையேறினார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். “இரண்டு கருத்துகள் இருக்கின்றன. நாளை அடக்கம் செய்யலாம் என்பது ஒரு கருத்து” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அதனை ஆமோதித்த்து கூட்டம். “இரண்டாவதாக தலைவர்களின்  கருத்து என்னவென்றால்..” என்று அவர் பேச முயன்றார். கூட்டம் அதனை அனுமதிக்கவில்லை. “துரோகிகள் ஒழிக” என்று முழக்கமிடத் தொடங்கியது. “நீங்கள் என்னைப் பேச அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள். தலைவர்களுடைய கருத்தை அவர்களே சொல்லட்டும்” என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

எந்த தலைவர் பேசுவது? திருமா கையில் மைக்கை கொடுத்தார்கள். அவரைப் பேசவிடாமல் கூட்டம் கூச்சல் எழுப்பியது. ஒரு மோதல் சூழ்நிலை ஏற்படவே அதனை அமைதிப் படுத்த வேண்டியதாயிற்று. மீண்டும் மைக் சேரன் கைக்கு வந்த்து. “நாளை அடக்கம்” என்ற கருத்தில் திருமாவும் உடன்பட்டார். மற்ற தலைவர்களுக்கு… வேறு வழியில்லை.

தலைவர்கள் புறப்பட்டனர். உரைகள் தொடர்ந்தன.. சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படவேண்டும். கொளத்தூர், பெர்ரம்பூர், ஜமாலியா, பின்னி குக்ஸ் ரோடு, ஒட்டேரி, புரசவாக்கம் ஐ ரோடு, டவுட்டன், சூளை, யானைக்கவுனி வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைய வேண்டும் என்பது முடிவு.

ஆனால் முத்துக் குமாரின்  இறுதிப் பயணம் தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்லவில்லை.

தொடரும்…

 1. மக்கள் திரள் போராட்டம் வெடிக்கட்டும்,
  இந்திய மேலாதிக்க அரசை மோதி வீழ்த்துவோம்,

  தன் உடலையே ஆயுதமாக்கிவிட்டார், முத்துக்குமார், அவரை எரிப்பதோடு மட்டுமல்ல,அந்தச்சாம்பல் சூடு சொரணையற்ற மக்களுக்கு உயிர் கொடுக்கட்டும், தமிழகம் முழுக்க கொண்டு செல்வோம், இனி அந்த சாம்பலும் ஆயுதமே,

  அவரின் ஆயுதம் ஏந்துவோம்,

  மேலும் ம க இ க ,பு.மா.இ.மு ஆகிய புரட்சிக அமைப்புக்கள் போர்க்குணத்தை ஓட்டு கட்சிகளும் மாணவர்களும் புரிந்து கொண்டிருப்பர்,

  மேலும் பு.ம.இ.மு அங்கு செய்த போரைக்காண நக்கீரனில் ….

  http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=118

  கலகம்

 2. முத்துக்குமரனுக்கு இறுதி அஞ்சலி.

  புரட்சி பொங்கி வெடிக்க வேண்டிய பொழுது, குறைந்த பட்சம்…. தமிழகத்திலாவது திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து புரட்சி வெடிக்க வேண்டும். மானமுள்ளவர்கள் இந்த மூன்று கட்சிகளையும் கட்டாயம் புறக்கணிக்க வேண்டும்.

 3. மீண்டும் ஒரு முத்துக்குமாரைப் பறிகொடுக்கக்கூடாது.
  வீரத் தமிழனுக்கு எங்கள் வீரவணக்கங்கள்.

  ஈழத் தமிழர்கள்

 4. தன்னுயிரை ஈந்த முத்துக்குமரனை மெச்சுகிறோம் ……ஆனால் உயிரை விட நீங்கள் செய்யவேண்டியது நிறையவே உள்ளதால் தமிழக உறவுகளே மீள கிடைக்காத உயிரை வீணாக்காதீர்கள் .ஒரு முத்துக்குமரன் போதும.உங்கள் தியாகத்தை போற்றுகிறோம் .நம் ஈழத்தில் செல் மழை ,விமான குண்டு வீச்சு நிறுத்த ஏதாவது செய்யுங்கள் . அங்கு பத்திரிகைத்த்டை தொண்டு நிறுவனக்கள் செல்லதடை எது வித உண்மையுமே உலகுக்கு வரவில்லை. ஈழமக்கள் துயர் தீர வழி செய்யுங்கள். . நிலாமதி , .

 5. hai all iam periyar t.k,,,,, puthiya jananayagam 13 varusama padikiran aanalum avinga ampalapattathu muthukumar matterluthaN,,, MUTHUKUMARA avangaloda varrkaparvaila randu naala varuthu eduthuthaanga,,, thedeernu paasam pongi eeruthi oorvalam varai poiddanga

 6. ஹாய் விஜய்,
  யுவர் ஸ்டொமக் பர்னிங் டூ மச்
  டு யூ வான்ட் ஜெலுசில் ஆர் ஈனோ…
  எனிதிங் அவெய்லபில் ரெடிலி
  24 அவர்ஸ் நான் ஸ்டப் சர்வீஸ்
  ஒன் ரெக்வஸ்ட்…!

  உங்களால் முடிந்தால் முத்துக்குமாருக்கு உரிய முறையில் அஞ்சலி செலுத்துங்கள்…அதை விடுத்து ஏன் இப்படி…?

 7. எத்தனையோ சாதனைகள் செய்யவேண்டிய நேரத்தில் எங்கேயோ பறந்து சென்றுவிட்டாயே முத்துக்குமார.

  பதிவிற்கு நன்றி .

  தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

  http://www.newspaanai.com/easylink.php

 8. முத்துகுமாரின் தியாகம்,நம்மில் மேலும் ஒற்றுமையை வளர்க்கட்டும்.தமிழர்கள் ஒன்றூபடுவோம்.மத்திய அரசை எதிர்த்து போராடுவோம். 6 கோடி தமிழ்ர்களின் உண்ர்வுகளை மதிக்காத காங்கிரஸையும்,சோனியாவையும் தமிழகத்தில் இனி அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் கொள்வோம்

  வரும்,பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களை அணைத்து தொகுதிகளீலும் தோற்கடிக்க வேண்டும் என்று உறுதி கொள்ளவேண்டும்.

  இனி தேசிய கட்சிகள்,நமக்கு தேவையில்லை.தமிழர்களின் உயிர்கள் அவர்களுக்கு பெரியதாக படவில்லை.இன்று ஈழ தமிழன் ,நாளை நமக்கும் அந்த நிலைவரலாம்.தமிழர்களே ஒன்றுபடுங்கள்.

  வேறு மாநிலங்களில்,தேசியகட்சிகள்,அந்த மாநிலத்தின் நலனை முன் வைத்து போராடாமல் அங்கு அவர்கள் கட்சி நடத்தமுடியாது.
  ஆனால்,இங்கு,காங்கிரஸ்,தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டே, அரசியல் செய்கிறார்கள்.இந்த தைரியம் அவர்களுக்கு யார் கொடுத்தது.
  முத்துகுமார் தியாகத்தில் விளைந்த இவ்வெழுச்சியை தமிழகத்தின் மூலை முடுக்கல்லாம் கொண்டு செல்வோம்
  காங்கிரஸை இனி தமிழகத்தில் வளர விடகூடாது.
  தமிழக மீனவர்கள்,பல்லாயிரம் பேர் ஆண்டு முழுவதும் கொல்லபடுகிறார்கள்.அதற்கு இலங்கை மீது போர் தொடுக்காமல் ,அவர்களுக்கே ஆயுதம் தந்து நம் தமிழ் சகோதரர்களை கொன்று குவிக்க உதவுகிறது.

  ஆனால்,மும்பை தாக்குதலில் சில நூறு பேர் இற்ந்ததற்கு ,பாகிஸ்தான் மீது போர் தொடுப்போம் என்று அச்சுருத்துகிறது நம் இந்திய அரசு.

  வட மாநில மக்கள் என்றால் ஒரு நிலை,தமிழக மீனவர்கள் என்றால் ஒரு நிலை.தமிழனின் உயிருக்கு அவ்வள்வு தான் மதிப்பு.தமிழக மீனவர்களை காப்பாற்றாத ,ந்ம் இந்திய அரசு,ஈழ தமிழனை காப்பாற்றும் என்று எதிர்பார்ப்பது.
  காங்கிரஸ் ஒழிக,தமிழர்களை கொன்று குவிக்கும் சோனியாகாந்தி ஒழிக்.

 9. புலிகளுடன் அரசியல் தீர்வு பற்றி பேசவேண்டும் என்பதை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

  அதுமட்டுமல்ல, இந்தியா இலங்கையிடம் கேட்டுக்கொண்டு இலங்கையில் வாழும் எல்லா தமிழ்

  மக்களையும் புலிகளிடம் கொடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். பிரபாகர்னின் கீழ்

  இருக்கும் போராளிகள் விடுதலை வீரர்கள். அவர்கள் ஈழத்தவரின் விடுதலைக்காக ஓயாது உழைத்து

  வருகிறார்கள். அவர்களுக்கு இலங்கை ஈழத்தையும் ஈழத்தவர்களையும் கொடுக்க எல்லாவிதமான

  உதவிகளும் செய்யவேண்டும். எந்த ஈழத்தவராவது பிரபாகரனை விட்டுவிட்டு இலங்கை அரசாங்கத்திடம்

  வந்தால் அவர் கைது செய்யப்பட்டு பிரபாகரனிடம் ஒப்படைக்கவேண்டும். கருணா, டக்ளஸ்

  ஆகியோரை கைது செய்து பிரபாகரனிடம் ஒப்படைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, சந்திரிகா, ராஜபக்ச

  ஆகியோரின் உறவினர்களாக இருக்கும் தமிழர்களையும் இதே போல கைது செய்து பிரபாகரனிடம்

  ஒப்படைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கை தமிழர்களும்

  திருப்பி அனுப்பப்பட்டு அவர்களும் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும்

  வலியுறுத்துகிறேன். பல்கலைக்கழகங்களிலும் மற்ற வேலைகளிலும் இருக்கும் எல்லா ஈழத்தமிழர்களும்

  கட்டாயமாக அந்தந்த நாட்டினரால் வேலை பிடுங்கப்பட்டு பிரபாகரனிடம் அனுப்பி வைக்கப்படவேண்டும்

  என்பதையும் வலியுறுத்துகிறேன்.

  அதே போல மும்பையில் பயங்கரவாதம் செய்த பயங்கரவாதிகளுடனும் இந்திய அரசு போரிட்டு

  அவர்களை கொன்றதை கண்டிக்கிறேன். அவர்களுடன் அரசியல் தீர்வு பற்றி பேசவேண்டும். அவர்கள்

  இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பினால் அதனை அவர்களுக்கு

  செய்து தரவேண்டும். அது மட்டுமல்ல, அவர்கள் இந்தியாவை பாகிஸ்தானின் அடிமை நாடாக ஆக்க

  விரும்பினால், அதற்கும் அவர்கள் கோரிக்கை படி நடந்து பாகிஸ்தானின் அடிமை நாடாக

  எழுதித்தரவேண்டும். அவர்களை கொல்லக்க்கூடாது. அது இஸ்லாமியர்களது உரிமைகளை பறிப்பதாகும்.

  எவ்வளவு சிறிய சமூகமாக இருந்தாலும் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்பதால்,

  இந்தியாவிலுள்ள எல்லா சமூகத்தினருக்கும் தனி நாடு கொடுக்க ஆவன செய்யவேண்டும். தமிழ்நாட்டில்

  வாழும் தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் தனி நாடு கொடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் வாழும்

  கன்னடத்தினருக்கு தனி நாடு கொடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் வாழும் வன்னியர்களுக்கு தனி நாடு

  கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் கோமுட்டி செட்டிகளுக்கும் தனி நாடு கொடுக்கப்பட

  வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் இலப்பை முஸ்லீம்களுக்கு தனி நாடு கொடுக்கப்படவேண்டும்.

  தமிழ்நாட்டில் வாழும் உருது பேசும் முஸ்லீம்களுக்கு தனி நாடு கொடுக்கப்படவேண்டும். தமுமுகவுக்கு

  ஒரு தனி நாடும், தவ்ஹீத் ஜமாத்துக்கு ஒரு தனி நாடும் கொடுக்கப்படவேண்டும்.

  இஸ்லாமிய பயங்கரவாதிகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அவர்கள் அப்பாவிகளை கொல்வது

  பற்றி யாரும் பேசக்கூடாது. உரிமைப்போராட்டத்தில் அப்படி சில கொலைகள் நடப்பது இயல்பானதுதான்

  என்று எல்லோரும் பேசவேண்டும். அவ்வாறு கொலைகள் செய்வது தவறு என்று பேசுபவர்கள் உடனே

  கொளுத்தி கொல்லப்படவேண்டும். இல்லையேல் முத்துக்குமார் போல இஸ்லாமியர்களும் தற்கொலை

  செய்து கொள்வார்கள் என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். ஆனால், எந்த உரிமைப்போராளிகளையும்

  இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ கொல்லக்கூடாது, அவர்கள் பொதுமக்களையும்

  கொல்லக்கூடாது. அது மிகவும் தவறானதாகும் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.

  புலிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுகள் ஆகியோர் இந்திய போர்வீரர்களையும் இலங்கை

  போர்வீரர்களையும் போலீஸையும் அப்பாவி பொதுமக்களையும் கொல்ல எல்லா உரிமையும் உள்ளது

  என்பதை இங்கே மீண்டும் வலியுறுத்துகிறேன்.

  வாழ்க புலிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நக்ஸைலைட்டுகள்.
  ஒழிக அரசாங்கம், ஒழிக பொதுமக்கள்

 10. முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்

  இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்று திட்டமிட்ட வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது. இரண்டாவது உணர்வுகளின் அடிப்படையில் தற்செயலானது. இவை இரண்டும், அரசியல் ரீதியாகவே தற்கொலைதான்.

  புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.

  சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது. இதேபோன்று, தமிழ்நாட்டு போலி தமிழ் தேசிய உணர்வாளர்களில் நம்பிக்கை இழந்து, தனிமனித தற்கொலை மூலம் தனிமனிதர்கள் தீர்வை நாடுகின்றனர். அது அனுதாப அலையாக மாறி வடிகின்றது. இப்படி இவை தனித்தனி அவலமாக வெடிக்கின்றது.

  சமூகத்தை அணிதிரட்டி அவர்கள் போராடுவதன் மூலம் தான், எதையும் சாதிக்க முடியும் என்ற அடிப்படையான விடையத்தை நிராகரித்து, தனிமனிதன் தன்னைத்தான் மாய்த்துக் கொள்வதன் மூலம், சொல்லும் செய்தி கூட சமூக அதிர்வை ஏற்படுத்துகின்றது. ஆனால் அது தீர்வைத் தருவதில்லை. அனுதாப அலையாக, பிழைப்புவாதிகளிள் பிழைப்புக்கு அனுகூலமாக மாறுகின்றது.

  தனிநபர் பயங்கரவாத தாக்குதல் சொல்லும் அதே செய்தியைத்தான், தற்கொலைத் தாக்குதல் தருகின்றது. ஆனால் இவ்விரண்டையும் ஒரு அரசியல் வழியாக, தீர்வாக யாரும் முன்வைக்க முடியாது.

  தனிமனிதன் எல்லையில் அது கலகமாக இருந்தாலும், தனிமனிதன் இந்த சமூகத்துக்கு எதிராக தன் உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அவை சமூகத்தின் விடுதலையை வழிகாட்டுவது கிடையாது.

  அனுதாபம், கண்மூடித்தனமான உணர்ச்சி சமூகத்தை அறிவியல் பூர்வமாக வழிநடத்துவதில்லை. முத்துக்குமாரன் வெளிப்படுத்திய செய்தியை, பிழைப்புவாத புலிப்பாசிச எடுபிடிகளின் சொந்த சுயநலத்துக்கு ஏற்ப அது அம்மணமாகிவிட்டது. அந்த எல்லைக்குள் முத்துகுமாரனின் அறிவு சுருங்கி கிடந்தது. வெறும் உணர்ச்சி, நம்பிக்கை மீதான கீறல், அங்குமிங்கும் ஏற்பட்ட சொந்த சிதைவு தற்கொலையாக மாறுகின்றது.

  இப்படி சமூகத்தில் நம்பிக்கையற்ற இந்திய விஸ்தரிப்புவாத பொருளாதார நலனுக்கு உட்பட்ட விசுவாசிகளிள் அரசியல் எல்லைக்குள், அவை மாரடிக்கின்றது. அந்த வகையில் அந்த இளைஞனின் உணர்ச்சிவசப்பட்ட அறியாமை, சமூகத்தின் ஓட்டுமொத்த பிற்போக்கு சமூகக் கூறுகளை இனம் காணத் தவறிவிடுகின்றது. இந்த அரசியல் மூலம், இந்தியாவின் தமிழர் சார்பு தலையீpட்டின் மூலம் தீர்வு காண முடிகின்றது.

  இந்திய அரசின் தலையீட்டை தமிழர் சார்பாக கோரும் அரசியல் எல்லையில், மக்கள் போராட்டத்தை நிராகரிக்கும் எல்லைக்குள், இந்த தற்கொலை அரசியல் சாரம் அமைந்துள்ளது. மக்கள் விரோத புலி அரசியல் மீதான விமர்சனமின்றிய, ஓரு தலைப்பட்சமான வழிபாடு, அந்த அரசியல் கண்ணோட்டம் மொத்த தமிழ் மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது.

  இந்திய ஆளும் வர்க்கங்கள், அதன் எடுபிடி பார்ப்பனிய கும்பல் வரை பேரினவாதத்தை ஆதரிக்கின்றது என்ற எடுகோள், மறுபக்கத்தில் உள்ள பாசிசத்தின் மக்கள் விரோத கூறை அரசியல் ரீதியாக முன்வைத்து அரசியல் ரீதியாக அணிதிரட்ட தவறுவது, நிலைமைக்கும் உணர்ச்சிக்கும் பின்னால் வால்பிடித்து செல்லும் அரசியலாகும். தமிழ் மக்கள் பேரினவாதம் மற்றும் புலிக்கு எதிராக வாழ்கின்ற எதார்த்தத்தை இனம் காணத்தவறுவது, அதை அம்பலப்படுத்த தவறுவது, படுமோசமான அரசியல் தவறுகளுக்கு தமிழக இளைஞர்களை எடுத்துச்செல்லுகின்றது.

  வலதுசாரி பாசிசம் இலங்கை முழுக்க இலங்கை அரச வடிவிலும் புலிகள் வடிவிலும் மக்களுக்கு எதிராக இருப்பதை கவனத்தில் எடுக்காது, ஒரு தலைப்பட்சமாக பேரினவாத அரசுக்கு எதிராக காண்பது, ஓட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரானதாக பயன்படுத்துவதாகும். இதில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் மற்றொரு பக்கத்தை மூடிமறைத்து அதை பாதுகாப்பது மன்னிக்க முடியாது. இதில் இடதுசாரிகள் பலர், தமிழ் குறுந்தேசிய இன உணர்வுடன் ‘சிங்களவன்” என்று ஒருமையில் அடையாளப்படுத்தி கூறுவது, சிங்கள பாட்டாளி வர்க்கத்தை தம் எதிரியாக முத்திரை குத்தும் அரசியல் அபத்தம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட இனவாத உணர்வாகும்.

  தமிழன் என்ற குறுந்தேசிய இன உணர்வை விமர்சமின்றி அங்கீகரித்து அதை தூக்கி முன்னிறுத்துவதும், மறுபக்கத்தில் சிங்களவன் என்று தூற்றுவதும் பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வல்ல. எம்முடன் நெருங்கிய இந்திய தோழர்கள் மத்தியில், இதை கண்டு அதிர்ந்து போகின்றோம். வால்பிடித்தல், உணர்ச்சிவசப்படல், பெரும் அலைக்கு பின்னால் ஒடுதல் எல்லாம் பாட்டாளி வர்க்க உணர்வை மறுதலிப்பதாக உள்ளது. இலங்கையில் தமிழ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்யவேண்டும் என்ற கருதுகோள்களை, எமது போராட்டத்தின் அடிப்படையை தகர்த்து தனிமைப்படுத்தி கூனி கூறுக வைத்துள்ளது. சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் துணையற்ற தனித்த எதிர்நீச்சலாக இருப்பதும், அதை துணிச்சலுடன் எதிர் கொள்வதும் நாம் சந்திக்கும் சவால்தான்.

  இதன் பின்னணியில் தான், இந்த தற்கொலையின் பின்னுள்ள அரசியல் வெற்றிடமாகும். இந்த வகையில் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் வெளியில், அறிவியல் பூர்வமாக வழிகாட்டி எடுத்துச்செல்லும் அரசியல் தலைமையின் இன்மைதான், வெம்பி தற்கொலையாகின்றது. ஈழத்தமிழ் மக்கள் எதார்த்த உண்மையில் புரிந்து கொண்ட செயல்பாடு, அதை அடிப்படையாக்கிய அரசியல் முன்முயற்சி, இந்த தற்கொலையை தடுத்து நிறுத்தும். வெறும் அற்ப உணர்ச்சிக்கும், பொது அலைக்கு பின்னால் வால் பிடித்து ஒடுவதும், அப்பாவி இளைஞர்களின் தற்கொலைக்கு உதவுகின்றது.

  போலியான தேசியவாத அரசியல் பித்தலாட்டங்களில் கருணாநிதி முதல் நெடுமாறன் வரை, நம்பிய இளைஞர்கள் வெம்பி மடிவது அரசியல் தற்கொலையாக நிகழ்கின்றது.

  புலித்தேசியம் அரசியல், இராணுவ வழியின்றி பேரினவாதம் மூலம் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடும் மனித அவலத்தை, ஒரு தலைப்பட்சமாக ஊதிப்பெருக்கி விடும் உண்மைக்கு வெளியில் தற்கொலை அரங்கேறுகின்றது. புலிகள் தம் அரசியல் வழியில் தேர்ந்தெடுத்த அதே தற்கொலையை, மற்றவன் மீது திணிக்கின்றது.

  மனித அவலத்தை விதைத்து, அதில் அறுவடை செய்யும் பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும், தற்கொலையையும் தம் பிழைப்புக்காகத் தான் ஊக்குவிக்கின்றனர். இந்திய விஸ்தரிப்புவாத பொருளாதார நலனை கேள்விக்குள்ளாக்காத பிழைப்புவாத நாய்களுக்கு, முத்துக்குமரன் போன்ற அப்பாவிகள் மரணம் அரசியல் ரீதியாக அவசியமாகிவிட்டது. புலிகளுக்கு தமிழ் மக்களின் மரணங்கள் எப்படி அரசியல் ரீதியாக அவசியமாகி அதுவே அவர்கள் அரசியலாகிவிட்டதோ, அப்படியே முத்துக்குமரன் மரணம் இந்திய போலி தமிழினவுணர்வு பிழைப்புவாத கழிசடைகளுக்கு அவசியமாகிவிட்டது.

  பி.இரயாகரன்
  31.01.2009

 11. ரயாகரன் தோழரே,
  நீங்கள் இந்த பிரச்சனையை மிகவும் வறட்சியாக‌ பார்க்கிறீர்கள் என்று நான் விமர்சிக்கிறேன்.

 12. முத்துக்குமரன் தற்கொலை செய்யத் தூண்டிய கருத்தின் பின் அவனின் அறியாமையும் உள்ளது. அவன் தமிழினத்தை காப்பற்ற நம்பும் தலைமை எது? அவன் கூறுகின்றான் ‘களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே… அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.” தமிழகம் உதவ தமிழீமம். இங்கு அவன் கோருவது தலையீடு. அது தமனுக்கு சார்பாக. இப்படி அவன் நம்புகின்ற அரசியல் எல்லைக்குள்ளா?, சர்வதேசியவாதிகள் உள்ளனர்.

  அவன் நம்பும் தலைமை ஈழத்தமிழனத்தை அழித்துவிட்டது. அது அவனுக்கு தெரியாமல் பொய்யிருக்கின்றது. இப்படி தமிழ் நாட்டுக்கே தெரியாமல் போய்யிருக்கின்றது. இன்றைய தலைமுறைக்கு சர்வதேசியவாதிகள் இதை தெளிவபடுத்தவில்லை என்பதுதான் இங்கு உண்மை.

  அவன் நம்பும் தலைமை பத்தாயிரத்துக் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. வடக்கில் இருந்து ஒரு லட்சம் முஸ்லீங்களை 24 மணி நேரத்தில் போட்டு இருந்த உடுப்பைத் தவிர அனைத்தையும் உருவிய பின் வடக்கில் இருந்து துரத்தியவர்கள். இன்றம் அவர்கள் அகதி முகாமில்தான் வாழ்கின்றனர். பள்ளிவாசல் முதல் பல கிராமங்களில் வாழ்ந்த அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் வெட்டியும் சுட்டும் கொன்றவர்கள். தமழ் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சதந்திரம் கொடுத்;தால் புலிகள் ‘அரசியல் அனைதையாகிவிடவார்கள்” என்று கூறி, அதை தமிழ் மக்களுக்கு மறுத்தவார்கள். போரட்டத்தின் ஐக்கியத்தை மறுத்து, அவர்களை கொன்றவார்கள். இப்படி பல. இனறுற மக்களை தம் கேடயமாக்கி பலியிடுகின்றனர். இவர்கள் எப்படி தமிழனத்தைக் காப்பாற்றும் தலைவனாவன்.

  இப்படி நம்பும் அப்பாவித்தனம், அதை தெளிவபடுத்த தவறிய அரசியல் பொது அரசியல் தளம் சர்வதேசிய அரசியல் அடிப்படை ஆட்டுகின்றது. இப்படி தலைவனாக நம்பும் எல்லைக்குள் சமூகம். இதை விழிபுற வைக்காமை அடிப்படையான அரசியல் தவறல்லவா!?

  அங்கு புலிகள் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை நடத்தவதாக நம்புவதும், தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் பற்றி மதிப்பீடுகளும், தற்கொலைகான குறுகிய அரசியலாக உள்ளது. மரணத்தில் உள்ள நோக்கம் எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும்;, அவனின் அரசியல் அடிப்படை தெளிவற்றது. இந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளனர் என்பதும், இதை தெளிவுபடுத்தும் அரசியல் அவர்களின் உணர்வுக்குள் இல்லை என்பதும் வெளிபடையான உண்மை. அதை சர்வதேசியம் தன் கடமையாக முன்னிலைப்படுத்தி செய்யவில்லை.

  அவர்களின் இயலாமை தற்கொலையாகின்றது.

 13. பி.இரயாகரன் பார்வை நியாயமானது, வினவு புலிகளின் பிரசார தளமானவே மாறியது ஆச்சரியம்.
  கருணாநிதி முதல் நெடுமாறன் வரை என்பதில் கருணாநிதி முதல் வினவு வரை என்று இனி எழுதலாம்.

 14. வறட்சியாக பார்க்கின்றோம் என்பது, உணர்ச்சின் பின்னால் ஒடுவதல்ல. எழுச்சிக்கு பின்னால் வால்பிடிப்பதல்ல. தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஒடுவதல்ல.

  ஈழத் தமிழ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்வது? இந்த தற்கொலையை மற்றவர்கள் பார்பதில் இருந்து எப்படி நீங்கள் வேறுபாடாக பார்க்கின்றீர்கள்.

  முத்துக்குமாரன் வைத்த அறிக்கையில் எதில் முரண்பாடுகின்றீர்கள்? அதை எங்கே எப்படி விளங்கப்பபடுத்தியுள்ளீர்கள்?

  இதைச் செய்யாமல் போற்றுவது, கூட்டத்துடன் கூட்டமாக நிற்பது சர்வதேசியமல்ல. இது ஈழத்து அரியலை தீர்மானிக்கின்றது. வர்க்கம் கடந்த தேசியத்தை எமக்கு திணிக்கின்றது தோழர். தனி விமர்சனம் இன்று வெளியிட உள்ளோம்.

 15. ஒரு தற்கொலை என்ற அளவில் முத்துக்குமாரின் மரணம் ஒரு புலி ஆதரவாளனின் இயலாமை அல்லது ஏதாவது செய்தாகவேண்டும் என்ற உந்துதல் என்பதாக குறுக்கிவிடாமல் அந்த மரணத்தின் பின்னணியில் இந்திய அரசின் கொடூரத்தனத்தை அம்பலப்படுத்தும் திக்கில்தான் முத்துக்குமாரின் தற்கொலையை பார்க்கவேண்டுமென கருதுகிறேன். நிச்சயமாக இது புலி ஆதரவு இயக்கமோ, பிரச்சாரமோ அல்லது புலிகளுக்கான தார்மீக பலம்தரும் நிகழ்வுப்போக்கோ அல்லவெனக் கருதுகிறேன்.

  தோழமையுடன்
  செங்கொடி

 16. ‘ஒரு தற்கொலை என்ற அளவில் முத்துக்குமாரின் மரணம் ஒரு புலி ஆதரவாளனின் இயலாமை அல்லது ஏதாவது செய்தாகவேண்டும் என்ற உந்துதல் என்பதாக குறுக்கிவிடாமல் அந்த மரணத்தின் பின்னணியில் இந்திய அரசின் கொடூரத்தனத்தை அம்பலப்படுத்தும் திக்கில்தான் முத்துக்குமாரின் தற்கொலையை பார்க்கவேண்டுமென கருதுகிறேன். – தோழமையுடன் செங்கொடி”

  அதை நாம் மறுக்கவில்லை.

  ‘நிச்சயமாக இது புலி ஆதரவு இயக்கமோ, பிரச்சாரமோ அல்லது புலிகளுக்கான தார்மீக பலம்தரும் நிகழ்வுப்போக்கோ அல்லவெனக் கருதுகிறேன்.”

  இதில் நீங்கள் கருதுகின்றீர்கள். பொதுத்தளத்தில் அப்படியல்ல. இதற்கு வெளியில், ஈழப் போராட்ட அரங்கில் ‘புலி ஆதரவு இயக்கமோ, பிரச்சாரமாக” இருக்காத வண்ணம் போராட்டம் அமையவில்லை. பொதுக் கோசம் சரியாக உள்ளது. ஆனால் ஒரு எல்லைக்கு உட்பட்டது. புலிப்பாசிசம் மீதான, அதன் மக்கள் விரோத கூறுகள் மீது உங்கள் போராட்டம் நடக்கவில்லை. 10 வருடத்துக்கு முந்தை பழைய பு.ஐ, பு.க இதழ்கள் இதை செய்துள்ளன. ஆனால் இன்று அதை செய்யவில்லை. குறிப்பான இன்றைய போராட்டச் சூழலில், இதில் ஒரு மௌனம்.

 17. திமுக, அதிமுக, காங்கிரசு, பா.ஜ.க, அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆகிய அனைவரும் ஓரணியில் திரண்டிருந்தனர். முத்துக்குமார் ஓரங்கட்டப்பட்டிருந்தார்.//

  :(((((((((((

 18. அவன் தமிழினத்தை காப்பற்ற நம்பும் தலைமை எது? அவன் கூறுகின்றான் ‘களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே..

  ஆமா, அந்தத் தலைமை, நம்ம இராயகரன் தானு முத்துக்குமார் எழுது வைத்துடு போயிருந்தா. நம்ம இராயா கம்முனு இருபாரு.

 19. Muthu Kumaran by his death evoked the real sentiments of people in Tamil Nadu. His martyrdom defeated the influence of the views of Indian Intelligence on Tamils here that India is not supporting the cause of Elam since the perpetrators of Rajiv’s death are LTTE. No more people in Tamil Nadu are ready to subscribe to these views. It also exposes the Congress party and erodes its root in Tamil Nadu. While brushing aside the martyrdom of Muthu Kumar, it is unfortunate Rayakaran disguises himself as a Muslim fanatic and narrates the suffering of Muslims alone. Comparing the mistakes of Muthu Kumaran’s statement with the faults LTTE is ridiculous. His death is primarily directed to Tamils in Tamil Nadu. Once the awareness is created which was hitherto silenced by the compromising ways of mainstream politicians it is up to the genuine parties to regulate the struggle through their uncompromising views. So ridiculing his martyrdom would echo only the perception of Karunanidhi that Muthu Kumaran’s deah is politicised

 20. >>சே குவேராவையும், மாவோவையும், ஹோ சி மின்னையும் காட்டிலும் தலை சிறந்த இராணுவத்தலைவன் பிரபாகரன்” என்று சம்மந்தமே இல்லாமல் மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார் வைகோ. அவருக்கு நேர் எதிரில் நின்று கொண்டிருந்த மாணவர் கூட்டமோ ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரிப்பதில் தீவிரமாக இருந்தது.<<<> பிரபாகரன் ஆயுதம் தூக்க விரும்பவில்லை. தூக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்”
  சே குவேராவையும், மாவோவையும், ஹோ சி மின்னையும் காட்டிலும் தலை சிறந்த இராணுவத்தலைவன் பிரபாகரன்”<<<

  அட ஈழ மக்களுக்கு போராட்டம் நடத்திட்டு அங்க நீங்கள் நின்னு பூர்சுவா, தரகு முதலாளி அது இதுன்னு தொடர்பில்லாமக் கத்தலயா? அது போல தான்னு வச்சுக்கோங்க.

  முத்துக்குமார் இறுதியாக மருத்துவமனையில் சொன்னதும் புலிகள் தலைவர் பிரபாகரனின் பேரத் தான், ஆகையால இதெல்லாம் இங்க சொல்ரடு ஒண்ணும் தப்பா தெரியல.. நீங்க தான் கண்டுக்கலன்னு சொல்றிங்க. அங்க வந்த மதவங்க வேற மாறி சொல்றாங்க. எல்லாமெ உங்க பார்வையில உங்களுக்கு சார்பானத நல்லா வளைச்சு எழுதி இருக்கீங்க. வைகோ, இராமதாஸ், திருமா அரசியல் ஆதயம் தேடுவாங்கன்னு தெரியும், ஆனா இந்த பெரிய எழுச்சில ‘ தமிழ்ப் பாட்டாளிகளும், சிங்களப் பாட்டாளிகளும் சேர்ந்து போராடணும்.." என்ற தோரணையில சோவின் எதிர்வடிவான இனோரு சோ அ.மார்க்ஸ், இந்து ராமின் எதிர்வடிவான இன்னொரு ராமான இராயகரன் போன்றோரின் அரைவேக்காட்டு ஒற்றைத்தனமான கருத்துக்களைப் பிடித்துக் கொண்டு பேசிட்டிருந்த நீங்கலாம் இப்போ தமிழீள விடுதலைக்காய்த் தன்னை அர்ப்பணித்த முத்துகுமரனின் வித்துடல் வழியனுப்பலில் போய் கிடைக்குற சந்திலும் அரசியல் பண்ணிற்று வந்திருக்கீங்க என்பது தன் புதிய செய்தி.

 21. தோழரே வணக்கம்.

  முத்துக்குமாரை தற்கொலைக்குத் தூண்டிய கருத்தின் பின் அவருடைய‌ அறியாமை உள்ளது என்று கூறுகியிருக்கின்றீர்கள்.
  அது ஈழத்தமிழ் மக்களுக்கு இது தான் சரியான தலைமை என்பதை பற்றிய‌ அறியாமையாக இருக்கலாம். உண்மைதான். ‌நாமும் அதைப்பற்றி நியாயப்படுத்தவில்லையே,
  அவருடைய அந்த தலைமை பற்றிய சாகசவாத கருத்து தமிழ்நாட்டில் தேசியவாதிகள் உருவாக்கி வைத்துள்ள தவறான‌ கருத்தாகும்.அதை சரியானது என்று நாம் எங்கேயும் கூறிட‌வில்லையே.

  மேலும் நீங்க‌ள் இட்டுள்ள‌ பிண்னூட்டங்கள் மூன்றிலும் அவ‌ர‌து த‌ற்கொலையை புலி ஆத‌ர‌வாள‌னின் த‌ற்கொலை என்றே குறிப்பிடுகிறீர்க‌ள்.த‌மிழ‌க‌த்தில் புலி ஆத‌ர‌வு த‌மிழ்தேசிய‌ பித்த‌லாட்ட‌க்கார‌ர்கள் ப‌ல பல ர‌க‌ங்களில் நிறைய இருக்கிறார்க‌ள்.
  ம‌ர‌பு தேசிய‌ வெறிய‌ர்க‌ளும் உள்ளார்கள்,தேசியத்தை மார்க்சிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக கூறிக்கொண்டு இனவாத வெறியர்களாக இருப்பவர்களும் உள்ளார்கள்‌.
  முத்துக்குமார் இந்த இனவாதிகளின் அச்சாக நமக்குத் தெரியவில்லை தோழரே ஆனால் இனவாதிகளின் பல போலி நம்பிக்கைகள் அவரிடமும் இருந்துள்ளது உண்மை.
  அவருடைய கடிதத்தை வாசிக்கின்ற போது அவற்றை கான முடிகின்றது.
  உதாரண‌மாக‌ பிரபாகரனை நாயகனாக வழிபடுவது,கருணாநிதியை நம்பியிருந்தது பிறகு அவன் கழுத்தை அறுத்ததும் அவனை துரோகி என்று நெடுமாறனைப் போல ஜெயலலிதாவை விட கருணாநிதியை கூடுதலாக‌ திட்டித்தீர்ப்பது [நெடுமாறன் அந்த வேலையை பார்ப்பன கும்பலின் பத்திரிகையான தினமணியில் கூட‌ வெட்கமின்றி செய்து வருகிறார்]ஒபாமாவிடம் கோரிக்கை வைப்பது இவை அனைத்தும் அவரை அவர்களுடன் அடையாளப்படுத்துகின்றது என்றாலும் முத்துக்குமார் முழுக்க முழுக்க‌ தமிழினவாத சந்தர்ப்பவாதிகளை போல இல்லை என்றே கருதுகின்றேன்,
  ஏனெனில் அவர் அவ்வாறு இருந்திருப்பாரெனில் இப்படி துணிச்சலாக தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார்.அவரைப்பற்றி நமக்கு விமர்சன‌ம் இருக்கலாம் ஆனால் அவருடைய நடவடிக்கையில் தமிழினவாதிகளிடம் இல்லாத‌ ஒரு நேர்மை இருக்கிறது.
  ஆனால் அவரும் தொடர்ந்து தமிழ்தேசிவாதிகள் ஏற்றிப்போற்றும் அதே கருத்துக்களோடும், கற்பனைகளோடுமான‌ அரசியலில் பயணித்திருந்தால் பின்னாட்களில் அவரும் அவர்களைப் போல மாறியிருக்கக்கூடும்.

  தமிழ்தேசியவாதிகளின் விமர்சனமற்ற அரசியல் சந்தர்ப்பவாத கருத்துக்களால் பிரபாகரனை கதாநாயகனாக தூக்கிப்பிடிக்கும் சாகசவாத ஆட்டத்திற்கு தமிழ் உணர்வுள்ள நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான‌ இளைஞர்கள் பலியாகியிருப்பது உண்மை அப்படி நாம் முத்துக்குமாரைப்போன்ற‌
  துடிப்பும்,வேகமும் கொண்ட ஏராளமான

  [எந்த ‌இயக்கம்,அமைப்புகளையும் சாராத மற்றும் சார்ந்த‌]

  இளைஞர்களை கான முடியும் தமிழினவாதிகள் அவர்களை[‌இயக்கம்,அமைப்புகளை சாராதவர்களை]அமைப்பாக்குவதுமில்லை விமர்சன முறைகளை கற்றுத்தருவதுமில்லை. புலிகளை விமர்சிக்கும் அமைப்புகள் எதிரி என்பதை மட்டும் ஆழப்பதியவைத்துவிட்டு[இதோ அதற்கு மேலே உள்ள‌ பிண்னூட்டத்தை பாருங்கள்
  அதற்கு இது ஒரு வகை மாதிரி]
  அவர்களை தமிழுணர்வு என்கிற வட்டத்திற்குள்ளேயே சுற்றி சுற்றி வரும்படி பழக்கி அப்படியே திரியவிட்டுவிடுகிறார்கள். அவர்களை சரியான திசைவழியில், மார்க்சிய வழியில் கம்யூனிஸ்ட் கட்சி தான் அழைத்து வந்து வழி நடத்த வேண்டும். எனவே அப்படிப்பார்த்தால் இங்கே நிறைய பேர் அது போலத்தான் தோழரே இருக்கிறார்கள்.ஆனால் நாம் இப்போது அதற்கெல்லாம் போக வேண்டியதில்லை அவருடைய தற்கொலை ஈழத்தில் இந்திய அரசின் பயங்கரவத்தை அம்பலப்படுத்துவதைத் தான் நோக்கமாக கொண்டிருந்தது அதற்காகத் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
  நாம் அவருடைய தற்கொலைக்கான‌ நோக்கத்தை,இந்திய அரசின் துரோகத்தை மேலும் பிரச்சாரம் செய்கின்றோம்.
  இது தான் இங்கே நடப்பது.
  இது செய்யக்கூடாத காரியமா ?
  இது தான் நாங்கள் இங்கிருந்து ஈழ மக்களுக்கு செய்யக்கூடிய ஒரே காரியம்.இந்திய அரசை அம்பலமாக்குவது தான் முக்கிய வேலை அது தான் இங்கே யாரும் செய்யாத வேலை.

  முத்துக்குமார் எதிர்பார்த்த முழு அளவிலான‌ நோக்கத்தை அவருடைய‌ தற்கொலை நிறைவு செய்துள்ளதா என்று தெரியவில்லை ஆனால் அது தமிழ் இளைஞர்களிடையே ஒரு உணர்ச்சி அலையை கிளப்பியுள்ளது நிச்சயமாக நாம் அந்த அலையில் மூழ்கி காணாமல் அடித்துக்கொண்டு போய்விடவில்லை.
  நாம் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து எந்த தேசிய உணர்ச்சிக்கும் பலியாகிவிடவில்லை.

  நீங்கள் எதிர்பார்ப்பது அவரைப்பற்றிய விமர்சனத்தையும் கூடவே செய்திருக்க‌ வேண்டும் என்பது
  ஆனால் அதை இப்போது செய்வது சரியா என்று என்ணிப்பாருங்கள் தோழரே.

  தோழமையுடன்
  சூப்பர்லிங்ஸ்

 22. தோழமையுடன் சூப்பர்லிங்க்கு

  உங்கள் இந்த கருத்துடன் நாம் உடன்படுகின்றோம். இதில் முரண்பாடு கிடையாது. முரண்பாடு எங்கே என்றால், தொடர்ச்சியாக நடக்கும் போராட்டத்தில், இந்த வேறுபாட்டை வேறுபடுத்த தவறியதுதான். முத்துக்குமாரன் நிகழ்வு, இதில் குறிப்பிடத்தக்க ஒன்று.

  தனிபட்ட உரையாடல்களில் இந்த முரண்பாட்டை செய்கின்றீர்களா என்பது எமக்கு தெரியாது. ஆனால் எழுத்தில் இது செய்யப்படவில்லை.

 23. ”இப்போ தமிழீள விடுதலைக்காய்த் தன்னை அர்ப்பணித்த முத்துகுமரனின் வித்துடல் வழியனுப்பலில் போய் கிடைக்குற சந்திலும் அரசியல் பண்ணிற்று வந்திருக்கீங்க என்பது தன் புதிய செய்தி.” மக்களை பலியிட்டு அரசியல் செய்யும் புலியிசத்தின் எச்சம் இது.

  தன் இறுதிகாலத்தில் தன் வழியில் அனைத்தையும் சிந்திக்கின்ற முளைச்சலவை அரசியல், தன்னைப்போல் அனைத்தையும் சிந்திக்கின்றது.

 24. >>விமர்சன முறைகளை கற்றுத்தருவதுமில்லை. புலிகளை விமர்சிக்கும் அமைப்புகள் எதிரி என்பதை மட்டும் ஆழப்பதியவைத்துவிட்டு[இதோ அதற்கு மேலே உள்ள‌ பிண்னூட்டத்தை பாருங்கள்
  அதற்கு இது ஒரு வகை மாதிரி]<>தன் இறுதிகாலத்தில் தன் வழியில் அனைத்தையும் சிந்திக்கின்ற முளைச்சலவை அரசியல், தன்னைப்போல் அனைத்தையும் சிந்திக்கின்றது.<<
  Hehehe… சீரியசான பதிவுல உங்க காமெடி தேவையா! உங்களுக்குனு தனியா காமெடி டைம் இருக்குல… அங்க வச்சுக்கோங்க பாஸ்

 25. >>> >>விமர்சன முறைகளை கற்றுத்தருவதுமில்லை. புலிகளை விமர்சிக்கும் அமைப்புகள் எதிரி என்பதை <<<

  அட, அறிவுசீவியே, உங்கள விமர்சிச்சா அத விட்டுருவீங்களா? இதுல நீங்க என்ன புலிகள் என்ன, எல்லாரும் ஒன்று தான். அவங்க யாரையும் குறை சொல்லி புலம்பிட்டு இருக்காம, செயல்ல காட்டறாங்க, அர்ப்பணிப்போட, உங்க மாதிரி ஆளுங்க கிட்ட அது இல்ல. இராயகரன் பதிவுல மாற்றுக் கருத்து பின்னூட்டம் போட்டாலே அந்த ஆளு வெளியிடுறதில்ல, இந்த இலட்சணத்துல
  விமர்சனம் அது இதுன்னு, ஓவரா காமெடி பண்ண வேணாம். நாம தான் ஒழுக்க சீலர்கள், நம்ம பண்ணறது தான் அரசியல், நம்ம தான் கொள்கை பிடிப்பு, வாயுப் பிடிப்போட இருக்கறோம்னு பேசிட்டிருக்றது நீங்க தான்.
  அவங்க இல்ல! புலிகள் பத்தி நேரடியா விமர்சனம் செஞ்சிருக்கேன், அவர்கள் பலரிடமும் சொல்லி இருக்கேன்.
  விமர்சனம் பொது நிலைல , நடு நிலைல இருந்து செய்யப் படனும்.

  தமிழ்த் தேசியம் லாம் அற்பம், எங்க கொள்கை தான் பெரிய புண்ணாக்குனு நீங்க தான் சொல்லி பினாத்திட்டு இருக்கிங்க. முடிஞ்சா தியாகு, சு.ப.வி, மணியரசன் போன்றோரிடம் வாதிட்டு உணமைய நிலைநாட்டி வென்று வாங்க, பேசலாம்.

 26. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மக்கள் சக்தியைத் திரட்டும் பணியை முத்துக்குமார் செய்திருக்கலாம். விலை மதிக்க முடியாத தன் உயிரை மாய்த்து பலருக்கும் தவறான முன்னுதாரணமாக ஆனது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இவரைப் பார்த்து மேலும் பலரும் தற்கொலைக்கு முயற்ச்சிப்பதாக செய்திகள் வருவது வேதனையிலும் வேதனை.

  முத்துக்குமாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படும் பொதுமக்களின் நிலை மிகவும் அதிர்ச்சிக்குரியது. இந்திய அரசு இனியும் தாமதிக்காது இலங்கைத் தமிழர்களை காக்க முடிந்ததை செய்ய வேண்டும்.

 27. முத்துகுமாரின் தியாகம் தற்பொழுது மக்கள் மத்தியில் ஒரு உணர்வு அலையை ஏற்படுத்தி இருந்தாலும், பல கேள்விகளுக்கு விடை எனக்கு தெளிவாகவில்லை..
  1. இம்மாதிரியான தனி மனிதனின் உடலை ஆயுதமாக்கும் செயல்களை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆதரிப்பது சரியா..?
  2. இது மக்களை ஒன்றிணைத்து போராட முடியாத இயலாமையின் வெளிப்பாடா? அல்லது முத்துகுமார் உயிரோடு இருந்து மக்களோடு இணைந்து செயலாற்றி இருந்தால் இந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பாரா?
  3. பாலஸ்தீனத்தில் எல்லா வழிகளிலும் அடக்கி, ஒடுக்கப் படும் மக்கள் சில சமயங்களில் இம்மாதிரி தனது உயிரை ஆயத்தமாக பயன்படுத்துகின்றனர்… சில நேரங்களில் சுயமாக, சில நேரங்களில் மத ரீதியாக… இவற்றையும் நாம் ஆதரிக்கலாமா? கூடாதா?
  4. இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் நாம், புலிகளின் பாசிசத்தையும் எதிர்ப்பது அவசியம் இல்லையா? நம்மில் பலர் புலிகளின் நடவடிக்கைகளின் பேரில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்ற நேரத்தில் இது முக்கியம் இல்லையா..?

  இந்த மாதிரியான கேள்விகளுக்கு வினவோ அல்லது மற்ற தோழர்களோ விளக்கம் அளித்தால், என்னை போன்ற பலருக்கும் உதவியாய் இருக்கும்…

  நான் தோழர் ராயகரனுடைய கருத்துக்கு உடன்படுகிறேன்… அதாவது, புலி பாசித்தையும், இந்திய அரசின் மேலாதிக்கத்தையும் ஒரு சேர எதிர்க்க வேண்டும் .

 28. தோழர் ரயாகரன் அவர்களுடைய நியாயமான கேள்விகளை தமிழரங்கத்தில் போய் படித்து விட்டு பதில் சொல்லவும். அதை விட்டுவிட்டு Raya_unaku _aapu என்ற பெயரில் தோழர் ரயாகரன் அவர்களை இழிவுபடுத்துவது கோமாளித்தனமான செயல் ஆகும்.
  இதை வன்மயாக கண்டிக்கிறேன். பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்து அதற்காக போராடி கொண்டிருப்பவர் என்பது தோழருடைய நூல்களையும், tamilcircle.net -யும் தொடக்கத்தில் இருந்து படிப்பவர்களுக்கு நன்றாக தெரியும். இங்கே நடக்கும் விவாதத்தை பயன்படுத்திகொண்டு சில விச பாம்புகள் கொம்பு சீவலாம் என்ற நப்பாசையில் நெளிகின்றன.

  ஆனால் இவர்களின் பருப்பு இங்கே
  (தோழர் ரயாகரன், வினவு,சூப்பர் லிங்க் ஆகியோரிடம்) வேகாது

  ————————————————————

  தோழர் ரயாகரன் அவர்களுக்கும்
  சூப்பர் லிங்க் கும் நடப்பது ஆரோக்கியமான விவாதம் இதில் தேவையில்லாமல் சில பார்ப்பன கும்பல்கள் உள்ளே புகுந்து கொண்டு உளறி கொண்டு இருக்கின்றன

  விடுதலை

 29. //1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. ///

  முத்துக்குமாரின் கடிதத்தில் இருந்து

 30. Mr.vijay tiruppur,

  //dear all,, pulikalai facistta sollvathum , muthu savai thirippathaiyum sari ma ka e ka SOL seithu parthathu,,,,purinthu kollungal,,,, parppanar sathi,,\\

  //enda, neenga muthukumara facist nu sonneega mai ularthukulla enda maarninga???? kooddam serntha zaisang poduveengala??????
  vijay fm tirupur\\

  // tamillarangam seithi kaddurAI POIYA? neenga poiya?
  ennada visayam? aall pidikka ponneengala???? \\

  // hai all iam periyar t.k,,,,, puthiya jananayagam 13 varusama padikiran aanalum avinga ampalapattathu muthukumar matterluthaN,,, MUTHUKUMARA avangaloda varrkaparvaila randu naala varuthu eduthuthaanga,,, thedeernu paasam pongi eeruthi oorvalam varai poiddanga\\

  ஈழ மக்களின் மீதான பச்சை படுகொலையை தடுத்து நிறுத்த கோரியும் , இதில் இந்தியாவின் நேரடியான பங்கை அம்பலப்டுத்தியும்
  போரடிகொண்டுருக்கும் மக இக
  தியாகி முத்துகுமார் ஊர்வலத்திலும் அப்படியே நட்ந்துகொண்டனர், இதில் பெரியார் தீ.க. விற்கு என்ன இழப்பு வந்து விட்டது?

  சாவு வீட்டில் வந்து சண்டை போடும் உங்களை யெல்லாம் என்னவென்று சொல்வது?

  ஆள் பிடிக்கும் வேலை என்பது என்ன? சாமி கும்பிடும் ஒருவனை தந்தை பெரியாரின் கொள்கைகளில் சேர சொல்வதை ஆள் பிடிக்கும் வேலை என்பீர்களா?

  நல்ல விசயத்திற்கு ஆள் பிடிப்பது தப்பு இல்ல கண்ணு!

  மூட நம்பிகைகளிலும் , கடவுள் நம்பிகைகளிலும் மூழ்கி கிடந்த தமிழ் நாட்டு மக்களை திருத்த அவர்களிடமே
  ஆள் பிடிக்கதான் சென்றார் தந்தை பெரியார். அதை தனது இறுதி மூச்சு வரை செய்தார்.
  நாமும் அதை செய்வோம் வருங்கள்!

  மக இக என்றுமே பெரியார் தி.க.வை போட்டி அமைப்பாக பார்ப்பது இல்லை
  ஆனால் விஜய் தோழர்களை வாடா போடா என்று எழுதுவது , வயிற்றெரிச்ச்ல் படுவதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.
  காரனுக்குதான் சாதகமாய் அமையும்.

  எங்களுக்கும் பதிலுக்கு எதையாவது ஆதாரத்தை காட்டி திட்ட முடியும் ஆனால் எழவு வீட்டில் காசு பொறுக்கும் கழிசடைதனத்தை நம் செய்ய விரும்பவில்லை.

  விடுதலை

 31. இராயகரன் தனக்கு பதில் சொல்லக் கஷ்டமா இருக்கும் கேள்விகளை, உவப்பில்லாத பின்னூட்டங்களை தமிழரங்கத்தில் அனுமதிப்பதில்லை. அது தெரியாதா? என் பருப்பு வேகுதா வேகாதா என இதை படிக்கும் நடுநிலைத் தோழர் அறிவர். இராயகரன் போன்ற கீழ் உத்தி படைத்த கற்பனைவாதக் கலகக்காரர் இது தான் ஈழத்தின் வரலாறு எனப் பினாத்துவதைக் கேட்காமல் , முடிந்தால் ம.க.இ.க தங்கள் பிரதிநிதிகள் சிலர் அனுப்பி ஈழத்தில் என்ன நடக்கிறது, யார் போராடுறார்கள், யார் வாய் கிழியப் பேசுகிறார்கள், போராடும் சக்திகள் எங்ஙனம் போராடுகிறார்கள் எனப் பார்த்து வந்து தம் கருத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும். புலிகள் அழிந்தாலும் அழியாவிட்டாலும் இராயகரன் ஒன்றும் செய்யப் போவதில்லை,
  கனவு கண்டு நன்றாகக் கற்பனைவாத உளறல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பார், மக்கள் அவர் பக்கம் போக போவதுமில்லை. கி.பி. 2020லும் யாரையாவது பாசிச சக்தி, பன் சாப்பிட்ட சக்தி என உளறிக் கொண்டு தான் இருக்கப் போகிறார். அவ்வளவு தான் அவர்!

  இதைச் சொல்வதால் என்னை இங்கு பார்ப்பனிய சக்தி எனச் சிலர் சொல்லலம், இது தான் அவர்கள் விமர்சனங்களை எடுத்துக் கொள்ளும் விதம் என்பேன் நான். இராயகரன் போன்ற அரைவேக்காடுகளை எதிர்த்து யாராவது
  ஏதும் சொல்லி விட்டால் உடனே அவர்கள் பார்ப்பனியர், என்ன கதைய்யா இது? தமிழினம் ஒன்றுபட்டு தம் தேசியத்தை அடைய வேண்டும் என்பதை எதிர்த்து இன்னும் ஒன்றுபட்ட இந்தியா, சிங்களப் பாட்டாளி, தமிழ் பாட்டாளி, ஐக்கிய இலங்கை என பார்ப்பான் சொல்லும் அதே சொத்தை வாதங்களுடன் வேறு முனையில் இருந்து வரும் நீங்கள் எல்லோரும் தான் பார்ப்பனியத்தின் குரலை ஒத்து இருக்கிறேர்கள்?!!? இராயகரனை விமர்சித்தால் யாருமும், அவர் மார்க்சியரா, பெரியாரியரா, இடதுசாரித் தமிழ்த் தேசியரா இருப்பினும் பார்ப்பனியக் குடுவைக்கு அடைக்கபடுவர்! எப்படி இருக்கிறது இது? இதுக்குள்ள மத்த இயக்கங்களப் பத்தி நொள்ளைப் பேச்சு வேற!

 32. தோழர் ரயாகரனிடைய கேள்விகள் உணர்ச்சிவசப்படாமல் விசயத்தை பரிசீலிக்க கோருகின்றன. அது நல்லதுதானே.

 33. >> மக இக என்றுமே பெரியார் தி.க.வை போட்டி அமைப்பாக பார்ப்பது இல்லை
  ஆனால் விஜய் தோழர்களை வாடா போடா என்று எழுதுவது , வயிற்றெரிச்ச்ல் படுவதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.
  காரனுக்குதான் சாதகமாய் அமையும். <<

  டவுட்டு தனபால் கேட்கிறாரு:
  புலிகள் மேல் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அவதூறுகளை புனைவது
  சிங்கள பேரினவாதிகளுக்குச் சாதகமாய் அமையாதோ?

 34. >> எங்களுக்கும் பதிலுக்கு எதையாவது ஆதாரத்தை காட்டி திட்ட முடியும் ஆனால் எழவு வீட்டில் காசு பொறுக்கும் கழிசடைதனத்தை நம் செய்ய விரும்பவில்லை.<<

  இந்தப் பதிவுல இது வரை அதைத்தான் செஞ்சு வந்தீங்கனு உணரலையா?

 35. ஒரு கடைந்தெடுத்த வலதுசாரிய பாசிச புலிகளுக்கும் சிங்கள பேரினவாத போர்வெறியர்களுக்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுக்கும் இரத்தப்பலியாகிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மேலான எல்லா அடக்குமுறைகளும் கொன்றழிப்புகளும் இன்றல்ல நேற்றல்ல ஆரம்பம். இதுவே நாங்கள் வாழ்ந்த வாழும் சூழல்.

  இந்திய இராணுவ நடவடிக்கையின் போது :

  – சிதறிக்கிடந்த அப்பாவி பொதுமக்களின் பிணங்களை தெருநாய்கள் குதறுவதிலிருந்து மீட்டெடுத்த வேளை.

  – புலிகளுக்கு எதிரான (தமிழ்மக்களுக்கு) கண்மண் தெரியாத எறிகணைத்தாக்குதலில் குற்றுயிரும் குலையுயிருமாய் சதைக் குன்றுகளாய் கை கால் அவயவங்கள் சிதைக்கப்பட்டு ஊனப்பட்டு எழுந்து நகரமுடியாதபடி இரத்தக் காயங்களுடன் புழுதியில் அழுந்திக் கிடந்த குழந்தைகளை பெண்களை முதியவர்களை இளைஞர்களை மழையாய் பொழிந்த துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் அப்புறப்படுத்திய பின்னாலும் தகுந்த மருத்துவ வசதியின்றி அவர்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையிலிருந்த வேளை

  – மீட்கப்பட்டவர்கள் உயிர் ஊசலாடியபடி கண்முன்னே அவர்கள் கிடந்து மரணித்துப் போனவேளை அவர்களின் கைகளை வெறுமனே பற்றிக் கொண்டு உடனிருப்பதைப் தவிர காப்பாற்றும் மார்க்கங்கள் யாவும் அடைபட்டிருந்த வேளை.

  திலீபன் என்ற உண்ணாநிலைப் போராளி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கெதிராய் உயிர்ப்பலியான வேளை.

  ஒரு அந்திய இராணுவமாய் இந்திய “அமைதிப்படை” வந்து அழிக்கும் படையாய் தமிழ் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட போது, வீடுவீடாய் உருவாக்கிய இழவுகளும் செய்த அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் கட்டுக்கடங்காது போன வேளை.

  கருணா பிளவின் போது கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொத்துக் கொத்தாய் தங்களிடமிருந்து பிரிந்து சென்ற முன்னைநாள் போராளிகளை கொடுமையிலும் கொடுமையாய் கொன்றழித்த புலிகள் பாசிட்டுக்களாய் கோரத் தாண்டவமாடிய வேளை.

  முத்துக்குமரன்களுக்கு முன்னமேயே ஈழத்துத் தெருக்களில் மாற்று இயக்கப் போராளிகள் உயிரோடு தீயில் வெந்து சாம்பலாகும் கோரத்தை நடாத்தி யாருக்காக போராடுவதாக கூறினார்களோ அந்த மக்களின் மனங்களில் அச்சத்தை உறைய வைக்கும் நோக்குடன் தம்மை எதிர்ப்பவர்களுக்கு தண்டனை எவ்வாறமையும் என்று கற்பிப்பதற்காக சொந்தமக்களையே எச்சரிப்பதற்காகவே இவ்வாறு தெருவோரங்களில் நாம் இவர்களை தீயிலிட்டு அழிக்கின்றோம் என்ற நியாய குதர்க்கம் கூறிக்கொண்டே நரபலி வேட்டையாடிய கொடிய பாசிட்டுக்கள் தெருவெங்கும் கோலோச்சிய வேளை.

  யாழ்குடாநாட்டிலிருந்து முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டு போக்கிடம் இன்றி உடமைகள் எதுவுமின்றி துரத்தியடிக்கப்பட்ட அவலம் நடந்தேறிய வேளை.

  உள்ளியக்கத்தினுள் எழுந்த முரண்பாடுகளால் ஜரோப்பிய நாடுகள் வரை தேடியழிக்கப்பட்ட கொலைகள் பல போராளிகளின் உயிர்களை காவு கொண்ட வேளை

  சிங்கள கிராமங்களில் பொதுமக்கள் மேல் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என்ற எதுவித பாகுபாடுமின்றி வெட்டியும் குத்தியும் கொலைக்கரங்களை ஏவிவிட்டு போராட்டத்தின் மீதான நியாயப்பாட்டை சிங்களப்பாட்டாளி மக்கள் புரியாத வண்ணம் களங்கப்படுத்திய வேளை.

  முஸ்லீம்களின் வணக்கத்தலங்களில் (புத்தளம், காத்தான்குடி பள்ளிவாசல்கள்) தொழுகைநேரத்தில் புகுந்து “விடுதலைப் போராளிகள்” இரத்த ஆற்றில் அவர்களை மிதக்கவிட்டு உயிர்ப்பலி கொண்ட வேளை.

  இந்திய கைக்கூலிகளாய் அநுராதபுரப்படுகொலையை நிகழ்த்தி “விடுதலைப் போராளிகள்” கூலிப்படைகளாய் விலைபோன வேளை.

  சிங்கள கடற்படை நெடுந்தீவு குமுதினிப்படகுப் பயணிகளை இடைமறித்து வெட்டிச்சாய்த்து இனவெறிக் கொடுங்கரங்களால் கொன்றழித்த வேளை

  தமிழ்மக்கள் மேல் இனவெறிப்போர் தொடுத்து இராணுவ அடக்குமுறைகளை நாளும் பொழுதுமாய் பேரினவாதிகள் ஏவிவிட்டு கொக்கரித்து நின்று இன்றுவரைக்கும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை தனது காலில் போட்டு மிதித்து இனத்த