Friday, August 19, 2022
முகப்பு உலகம் ஈழம் ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள் !

ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள் !

-

இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன. கை கால்களை இழந்து, முடமாகி, படுகாயமுற்று,மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் வதைபடும் மக்களை பார்த்த வண்ணம் இருக்கிறோம். பாலஸ்தீன் போல உலகநாடுகளின் கவலைக்குரிய பிரச்சினையாக ஈழம் இருக்கவில்லை. இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன. புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தங்களால் இயன்ற அளவு போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் எல்லா தேசிய இன மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இது இல்லை. தமிழன் செத்தால் தமிழன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற அவல நிலை நீடிக்கிறது. இந்தியாவில் கூட மற்ற மாநில மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்வதில்லை. தேசிய ஊடகங்களும் ஈழத்திற்கான செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதில்லை.

சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். அதனால்தான் வீரர்களையும், ஆயுதங்களையும், அதிகாரிகளையும் இறக்கி இந்தப் போரில் இந்தியா பங்கேற்கிறது. தமிழ்நாட்டின் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் ஈழத்திற்காக போரை நிறுத்துமாறு பலவீனமான குரலில் வற்புறுத்தினாலும் கூட இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை. தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்ற அளவில் கூட ஈழப் பிரச்சினை குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை. அதன் தலைவர்களும், இராணுவத் தளபதிகளும் ஈழ மக்களை பூண்டோடு அழிக்கும் இலங்கையின் போரை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். ஊடகங்களுக்கும் அப்படித்தான் பேட்டி கொடுக்கின்றனர்.

எனவே ஈழத்தின் அப்பாவி தமிழ் மக்களைக் காப்பாற்றும் முயற்சி என்பது இந்தியாவை உலக நாடுகளில் அம்பலப்படுத்துவதன் மூலமே செய்யமுடியும். ஏதோ மனிதாபிமான பிரச்சினைக்காக ஈழத்தின் மக்களுக்கு குரல் கொடுப்பதை விட அரசியல் ரீதியான இந்த கோரிக்கைக்குத்தான் வலு அதிகம். புலம்பெயர்ந்த தமிழர்களும், வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களும், இந்தப் பிரச்சினையை அறிந்த பல்தேசிய இன மக்களும் இலங்கையில் மறைமுகப்போரில் ஈடுபடும் இந்திய இராணுவத்தையும் இந்திய அரசையும் கண்டித்து வெளியேறுமாறு முழக்கமிடவேண்டும். இந்தியாவின் ஆதரவு துண்டிக்கப்பட்டால் ராஜபக்க்ஷேவின் திமிர் பெருமளவு அடக்கப்படும். இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் ஆதிக்கத்தை நேபாளின் மாவோயிஸ்ட்டுகள் புரிந்து கொண்டே அரசியல் பாதையை அமைத்தனர். அதனால்தான் கடைசி நேரத்தில்கூட மன்னராட்சிக்கு முட்டுக்கொடுத்து வந்த இந்திய அரசு பின்னர் வேறு வழியின்றி நேபாள் மக்களின் போராட்டத்தால் தனது நிலையை மாற்றிக் கொண்டது.

ஈழம் தொடர்பாக நாம் செய்யவேண்டியதும் இதுதான். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிறபகுதிகளிலும் உலகநாடுகளிலும் நடக்கவேண்டும். அப்போதுதான் இந்திய அரசை நாம் பணியவைக்க முடியும். இதன் மூலமே ஈழத்து மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியும். குறைந்த பட்சம் முல்லைத்தீவில் கொல்லப்படும் அப்பாவி மக்களின் உயிர்களையாவது காப்பாற்ற முடியும். வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து கொண்டு குறிப்பாக மற்ற தேசிய இன மக்களை அணிதிரட்டி இந்தியாவை அம்பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோருகிறோம். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இருக்கும் உலக ஆதரவு அல்லது கவனத்தை நாம் ஈழத்திற்காகவும் பெறவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய கோரிக்கையுடன் இந்தியாவை அம்பலப்படுத்தி நடந்த லண்டன் ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். முத்துக்குமாருக்கு நாம் அஞ்சலி செலுத்துவதற்கு இணையாக இந்திய அரசை தனிமைப்படுத்துவதும் முக்கியம். அப்படி நடத்தப்படும் போராட்டங்களின் செய்திகள், புகைப்படங்களை அனுப்பித் தந்தால் வினவில் வெளியிடுகிறோம்.

131

141

0408

05

06

07

 

09

03

02

10

01

 

 1. //சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். அதனால்தான் வீரர்களையும், ஆயுதங்களையும், அதிகாரிகளையும் இறக்கி இந்தப் போரில் இந்தியா பங்கேற்கிறது.//

  இதுதான் உண்மை!!!!!

 2. ஈழ தமிழர்களுக்கு ஒரு வேண்டு கோள்,சிங்கள இனவெறி தாக்குதலால நம்மில் பல்ர் இறந்துவிட்டார்கள்.நம் இனத்தை அழிக்க பார்க்கிறது சிங்கள அரசு.நம் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.
  ஆகவே,ஈழதமிழர்களே,இனி நீங்கள் அதிக குழந்தைகலை பெற்று கொள்ளுங்கள்.நம் இந்த்தின் மக்கள் தொகையை அதிகபடுத்துங்கள்.இதன் மூலம்,நம் உரிமை வருங்காலத்தில் காக்கபயன்படும்.
  நம் மக்கள் தொகை அதிகரித்தால்,வருங்காலத்தில்,சனநாயக முறைப்படியே,தேர்தலில் நின்று அதிக இடங்களில் வெற்றி பெறலாம்.அதன் மூலம் சிங்கள அரசை நிர்பந்திக்கலாம்.

 3. இந்திய ஆளும் வர்கத்தின் முகத்திரையை கிழிப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமை.
  0000
  சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பாரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
  சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் படையெடுப்பில் இருந்து ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவற்கு இன்று உலகத் தமிழ் மக்கள் ஒரே நேர் கோட்டில் ஆர்பரித்து எழுந்திருப்பது ஆறதல் தரும் மாற்றமேயாகும்.
  இன்றைய உலகமயமாதல் சூழலில் சந்தைப் பொருளாதார நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் மேற்குலகமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐநா சபை முதலான இன்னோரன்ன பிற அமைப்புக்களும் உடனடியாக தலையிட்டு தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்தி நமது உறவுகளை காப்பாற்றும் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது.
  ஆனால் உலகத் தமிழர்களுடைய இந்தப்பேரெழுச்சியையும் ஒன்றுமையும் நாம் துறை சார் ரீதியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதன் மூலமே மேற்குலகை எம்மை நோக்கி திருப்ப முடியும்.
  இந்தியாவின் சந்தைப் பொருளாதர நலனை தாண்டி இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு விரேதமாக மேற்குலகம் மனிதாபிமான அடிப்படையில் எமக்கு உதவுதற்கு உடனடியாக ஓடோடிவரும் என்று நாம் கனவுலகில் மிதக்கக் கூடாது.எங்களுடைய பலமும் அந்தப்பலத்ததை தக்க வைப்பக்காக நாங்கள் செய்யக் கூடிய உயாந்த பட்ச அர்ப்பணிப்பும் தான் தாயகத்திலே அல்லலுறும் உறவுகளை காபபாற்றும் நாம் மறந்துவிடக் கூடாது.
  இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் உலகத் தமிழர்களுடைய முக்கியமான பணி இந்திய ஆளும் வர்க்கத்தை வர்க்கத்தை உலகமக்கள் மத்தியல் அம்பலப் படுத்துவதும் அதனுடைய அகிம்சா முகமூடியை கிழித் தெறிவதுமாக இருக்க வேண்டும்.
  இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சியையும் ஒன்றுமையையும் இந்தியாவுக்கு எதிரானதாக காட்டுவதற்கு சிலர் முயல்கின்றனர்.இது கூட இந்திய ஆளும் வர்க்கத்தின் சதிப் பரப்புரையின் ஓரங்கமாகும்.
  உலகத்தமிழர்களோ ஈழத் தமிழர்களோ இந்தியா என்ற நாட்டுக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானவர்களல்ல. இந்திய ஆளும் வர்க்கமே உலகத் தமிழர்களின் எதிரிகள் என்பதை நாம் தெழிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும்.இன்றைக்கு உலக மக்கள் மத்தியில் இந்தியா பற்றிய புனித பிம்பமாக மகாத்மா காந்தியும் அவருடைய அறவழிப்போராட்டமும் தான் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது.இன்றைக்கு இந்திய ஆளும் வர்க்கமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட கட்சி என்றும் இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கட்சி என்றும் அகிம்மை மக்கள் நலன் மற்றும் விடுதலை உணர்வுகளை மதிக்கும் பண்பு அந்தக் கட்சிக்கு இருக்கிறது என்றும் உலக மக்கள் மத்தியில் ஒரு மாயை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
  இந்த மாயையை கலைத்து இந்திய ஆளும் வர்க்த்தின் அதிகார வெறியையும் மக்கள் விரோதப் போக்கையும் உலக மக்களுக்கு அம்பலப்படுத்துவது தான் நமது உடனடிப் பணியாகும்.
  அதற்கு தியாகி திலீபன் அன்னை பூபதி ஆகியோருடைய வரலாற்றையும் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைகளையும் உலக மக்கள் அறியும் படி அவர்களுக்கு புரியும் மொழியில் எடுத்துச் சொல்லவேண்டும்.
  இன்று உலக மக்களுக்கு சுலபமாக புரியும் மொழி என்கிற போது அது சினிமா மொழிதான்.எனது உலகத் தமிழர்கள் குறிப்பாக திரைப்படைத்துறை சார்ந்த தமிழர்கள் இனைந்து சர்வதேச தரத்துக்கு எந்தவித புனைவும் இல்லாமல் இந்த மூன்று விடயங்களையும் தனித்தனி பதிவுகளாக்கி படங்களாக்கி உலகப் பெரு மொழிகளில் வெளியிடவேண்டும்
  இந்தியா தழுவிய அளவில் செயற்படும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள் இந்திய ஆளும் வர்க்கம் ஈழத் தமிழர்களுக்கு செய்த செய்து கொண்டிருக்கிற துரோகத்தை ஏனைய மாநில மக்களுக்கு தெளிவு படுத்தி அவர்களையும் ஈழத் தமிழப் படுகொலைக்கு எதிரான கூட்டணியில் ஒருங்கிணைக்க வேண்டும்.
  அடுத்து ராஜிவ் காந்தி கொலை விடயத்தில் இந்திய ஆளும் வாக்கம் தனது பிராந்திய நலன்களுக்காக உண்மைகளை திட்டமிட்டு மறைத்த விடயத்தையும் இந்தக் கொலை தொடர்பான நியாயமான சந்தேகங்களுக்கு விட தேட முற்படாமல் விடுதலைப்புலிகளை குற்றவாளிகள் ஆக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே செயற்பட்டதையும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த போது சக்திவாய்ந்த நபராக இருந்த கருணாவை சிறிலங்கா அரசால் விலைக்கு வாங்க முடியும் என்றால் தமிழீழ விடுதலை போராட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்காக அதற்கு எதிரான சக்திகள் ஏன் ராஜிவ் கொலையாளிகளை பயன்படுத்தியிருக்க முடியாது என்ற சந்தேகம் இந்திய மற்றும் உலக மக்கள் மத்தியில் எழும்பும் படி செய்ய வேண்டும்.உலகத் தமிழர்கள் மேற்குலக பெருந் தெருக்களில் ஆர்பாட்டங்கள் பேரணிகளை செய்துவரும் அதே நேரத்தில் மேற்குலக மக்களை எம்பக்கம் ஈhப்;பதற்கான வேலைகளையும் நாங்கள் துறைசார் ரீதியில்; மேற்கொள்ள வேண்டும்

 4. மேலாதிக்க இந்திய வெறிநாய்க்கு நாம் சாவு மணி அடிப்பதன் மூலம் மட்டுமே
  ஈழ மக்கள் தப்பமுடியும்,நேற்று போலி தலைவர் பாண்டி தனது ப்ர்ர்ட்டியில் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்கிறார்,இப்படி எல்லா ஓட்டு பொறுக்கி நாய்களுகு மேலாதிக்க ஓநாய்க்கு உறுதுணையாகவே இருக்கின்றன,
  தமிழக மக்களே உண்மையை சொல்லுங்கள் உங்கள் கண்ணீர் உண்மையானால் நீங்கள் எக்டிக்க வேண்டியது முதலில் இந்திய அரசினைத்தான்.
  ஏப்பா பாண்டி “இந்திய அமைதிப்படய இலங்கைக்கு அனுப்பறது இருக்கட்டும் சிபிஐ சிபிஎம் படய எப்ப போயஸ் தோட்டத்து அனுப்பிவீங்க சின்னம்மா போன் மேல போன் போடுறாங்களாமே

  கலகம்

 5. இடம் சீ.பீ.எம் அலுவலகம்
  கூலிக்கு மாரடிக்கும் அதாவது காசு வாங்கிட்டு பிளாக் எழுதும் பொந்திப்பு, இன்றாவது நமது பிளாகுக்கு ஆள் வறாதா என ஏக்கத்தோடு கம்ப்யூட்டர் மானிடர்ரை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்….

  ;;;அம்மாவென்றழைக்காத உயிரில்லையே:::
  செல்ஃபோன் அலறுகிறது. போனில் தறுதலை

  இனி உரையாடல்

  தறுதலை
  தோலர், வினவு சைட் பாத்தீங்களா

  பொந்திப்பு

  ஏன் தோலர் காலங்காத்தால வயத்தெறிச்லை கொட்டுரீங்க

  தறுதலை;
  அதுக்கில்ல தோலர் இன்னிக்கு அவங்க ஈழப் பிரச்சனையில இந்தியாவ எதிர்க்கனுமின்னு போட்டிருக்காங்க.

  பொந்திப்பு
  அதுக்கென்ன.

  தறுதலை:
  என்ன தோலர், நம்ம இப்ப திமுக கூட்டனியில்ல அதிமுக கூட்டனி நம்ம நாட்ட ஒருத்தன் குறை சொல்றத அனுமதிக்கலாமா அப்புறம்

  பொந்திப்பு
  ஆமா ஆமா, நான் போய் நாலு பேருல பின்னூட்டம் போடறேன் நீங்க ஒரு நாலு பேருல போடுங்க. அப்படியே நானே பதிவெழுதி நானே பின்னூட்டம் போடுற அனானிக்கு கண்ணோட்டம் பதிவுலயும் ஒரு அனானி பின்னூட்டம் போடறேன். நீங்களும் உங்க சைட்டுல எல்லாம் போடுங்க. பிரிவினைவாதி, இனவாதின்னு கிழிச்சுடலாம்

  தறுதலை
  அய்யோ தோலர் என்னய பேச உடுங்க. இன்னிக்கு அவங்க போட்ட பதிவுல வழக்கம்போல போராட்ட போட்டோ போட்டிருக்காங்க, அதுவும் லண்டன்ல நடந்த போராட்டம்

  பொந்திப்பு

  சரிங்க எப்பவும் போடறதுதானே, வேணுமின்னா அடுத்தவன் போராட்ட படத்தை திருடி போடறாங்கன்னு ஒரு பின்னூட்டம் போடலாம் போதுமா

  தறுதலை
  ஒரு நிமிசம் தோலர் அந்த போட்டோல ம.க.இ..க தமிழ்நாடுன்னு இருக்கு.

  பொந்திப்பு
  என்னது?

  தறுதலை
  ஆமாம் தோலர், எப்பிடி தோழர், நம்ம கட்சி எவ்வளவு பழசு, எவ்வளவு பெருசு, நம்மாளுங்க யாரும் லண்டன்ல இல்லயா? நீங்க எதுக்கும் மேலிடத்துல கேட்டு நாம வெளிநாட்டுல செஞ்ச போராட்ட படத்த எதனா போடுங்க.

  பொந்திப்பு
  நீங்க வேற நாம என்னத்த பண்ணோம். இத இப்படி டீல் பண்ண கூடாது. நான் ஒரு தனி பதிவே போடறேன்

  தறுதலை
  தோலர் வேணாம் தோலர் அதெயெல்லாம் படிச்சு பின்னூட்டம் போடறது நமக்கு கஸ்டம்.

  பொந்திப்பு
  அது எனக்கு தெறியாதா. நான் அவங்க எழுதுனதையே பிரிச்சு பிரிச்சு போட்டு அப்படியே எதிரா எழுதிடுரேன். நீங்க அதையே காப்பி பண்ணி பின்னூட்டமா போடுங்க

  தறுதலை
  ரைட்டு தோலர் வச்சுடரேன்

  பொந்திப்பு
  ஓகே தோலர்.

  போனை வைக்கிறார்…..

  பதிவை எழுதுகிறார்…………………………………………………………………………..

  இதோ அந்த பதிவு

  ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!
  என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளியான கட்டுரையில் உள்ள முரண்பாடுகள் இங்கே விமர்சிக்கப்படுகிறது.

  முதல் பொய்: புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன.

  ம.க.இ.க. இனவாதிகளே உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு மேற்கண்ட வரிகளே உதாரணமாக திகழ்கிறது. உண்மையை மக்களிடம் மறைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். முதலாளித்துவ கட்சிகள் கூட உங்களிடம் இனிமேல் பிச்சை வாங்க வேண்டும். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இதனை இனஅழிப்பு என்று கோயபல்ஸ் போல பிரச்சாரம் செய்வதின் நோக்கம் என்ன? கம்யூனிச வேடம் இப்போதுதான் கலைய ஆரம்பித்துள்ளது. போகப் போக புரியும் தமிழ் மக்களுக்கு இதுஒரு இலங்கை ஆதரவு என்.ஜீ.ஓ. என்று.

  இரண்டாவது பொய்: இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன.

  தற்போது இலங்கை அரசின் இராணுவம்தான் புலிகளுக்கு எதிராக மோதல் தொடுத்து வருகிறது. அங்குள்ள சிங்கள மக்களுக்கும் – தமிழ் மக்களுக்கும் எந்தவிதமான மோதலும் நடைபெற்றதாக எந்தச் செய்தியும் வராத நிலையில் இப்படி கயிறு திரித்து தமிழ் இனவாத குளிரில் பிழைப்பு நடத்தலாமா? பெரும்பான்மை சிங்கள மக்கள் சோராம் போயிருந்தால் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களும் அல்லவா தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியிருக்கையில் அங்குள்ள யாழ்பாணத் தமிழர்கள் எல்லாம் ஏன் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று போராட வேண்டும். உண்மையை பேசுங்கள் அய்யா!

  மூன்றாவது பொய்: புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.

  அங்கே சிங்கள பேரினவாதம் தூண்டப்பட்டது என்றால் இது சிறுபான்மை தமிழ் இனவாதம். அப்படியிருக்கையில் புலிகள் எப்படி சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவை கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது புலிகள் மீதான விமர்சனம் அல்ல. கரிசனம். அதாவத புலிகளை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம். தமிழகத்தில் எழுந்துள்ள இனவாத இரைச்சலில் குளிர் காயும் ஓநாய்த்தனம் என்றுதான் இதனை உரைக்க முடியும்.

  நான்காவது பொய்: இந்தப் போராட்டத்தில் எல்லா தேசிய இன மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இது இல்லை. தமிழன் செத்தால் தமிழன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற அவல நிலை நீடிக்கிறது. இந்தியாவில் கூட மற்ற மாநில மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

  தமிழ் இனவாதத்தின் அப்பட்டமான – மலிவான – இழிவான குரலின் பிரதிபலிப்பு மேற்கண்ட வரிகள். ம.க.இ.க. சி.பி.ஐ.(எம்-எல்) எஸ்.ஓ.சி. கும்பலின் உண்மை முகம் இதுதான். அதாவது, இந்தியாவின் இதர மொழிவாரிய இன மக்கள் குரல் கொடுக்கவில்லை என்று கவலைப்படுவது தெரிகிறது. அதுசரி ஏதோ நீங்கள் இந்தியா முழுவதும் புரட்சியை கொண்டு வந்து கிழிக்கப் போவதாக ஏமாற்றுகிறீர்களே தமிழகத்தை தாண்டி உங்களுக்கு வேற்று மாநிலங்களில் அமைப்பு இருந்தால் அவர்களை வைத்து போராடியிருக்கலாமா? குரல் கொடுக்க வைத்து இருக்கலாமே? ஏதோ லண்டனில் ம.க.இ.க. இருப்பதுபோல் போஸ்டர் வெளியிட்டு பெருமையடிக்கும் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கருநாடக, ஆந்திர உழைக்கும் மக்களைக் கூடவா அணித்திரட்ட முடியவில்லை. அதனால்தான் சொல்கிறோம் உங்களது குழு வெறும் தமிழக அளவில் சீர்குலையை மட்டுமேன முன்னிறுத்தும் குழு என்று. அது மட்டுமா? வெறும் இனவாதக்குழு! இது படிப்படியாக வளர்ந்து சிங்கள இனவாதத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டும் அளவிற்கு வளர்ந்து விடும். புலிகளுக்கும் உங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. அதனால்தான் உங்களால் மற்ற மாநில மக்களை அணிதிரட்ட முடியலி்லை. புலிகளுக்கு அட்வைஸ் செய்வதற்கு முன்னால் ஒருமுறை உங்கள் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. பாவம் இணையவாதிகளை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது. உங்கள்ம முகம் கிழிய ஆரம்பித்துள்ளது.

  ஐந்தாவது பொய்: சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.

  நீங்கள் வக்காலத்து வாங்கும் புலிகள் பிரேமதாசா அரசாங்கத்தோடு இணைந்து இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்த சுயநிர்ணய உரிமை எங்கே போனது! புலிகள் ஒன்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துக் கொள்ளாதவர்கள் இல்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணம் மிக முக்கியமானது. அதுசரி! தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகளிடம் மாட்டிக் கொண்டுள்ள மக்களை விடுவிப்பது சம்பந்தமாக ஒரு வார்த்தைக்கூட – முனகல்கூட வரமாட்டேங்குதே இது என்ன இலங்கை தமிழ மக்கள் மீது உள்ள பாசமா? அல்லது புலிகள் மீதான கரிசனமா? ம.க.இ.க. செய்யப்போகும் புரட்சி இந்தியாவில் அல்ல என்பது மட்டுமல்ல. செய்ய விரும்புவது இலங்கையில் உள்ள முல்லைத் தீவில் மட்டும்தான் என்பது புரிகிறது.
  புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். என்று சொல்லும் ம.க.இ.க. (சி.பி.ஐ.-எம்)எஸ்.ஓ.சி. தலைமை புலிகளை வெறும் புல்லு தின்னும் புலிகளாக நினைப்பது சூப்பர் காமெடி. அதாவது இவர்கள் நோக்கில் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் புலிகளால்தான் முடியும்! மற்ற இலங்கைத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குதான் லாயக்கு! ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க இரயாகரன். இனவாதத்தின் உச்ச கட்டத்தில் ம.க.இ.க.

  பொய் ஆறு: தமிழ்நாட்டின் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் ஈழத்திற்காக போரை நிறுத்துமாறு பலவீனமான குரலில் வற்புறுத்தினாலும் கூட இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

  தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளில் முக்கியமான கட்சியான தி.மு.க. – அதிமுக – சி.பி.எம். – காங்கிரசு போன்றவைகள் புலிகளை ஆதரிக்கவில்லை. மாறாக அங்கு பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று ஒரே குரலில் நிற்கின்றன. ஆனால் தமிழ் இனவாதம் நடத்தும் சிறு கட்சிகள்தான் இந்த வேடத்தை தற்போது ஏற்று நடத்துகிறத. அதில்கூட தாங்கள்தான் புரட்சிகரமான முன்னிணியில் இருப்பதாக பீத்திக் கொள்கிறது ம.க.இ.க. இனவாதமே உன்பெயர்தான் சந்தர்ப்பவாதமா?

  பொய் ஏழு: தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்ற அளவில் கூட ஈழப் பிரச்சினை குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை.

  உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை அறிவுப் பூர்வமாக அணுக மாட்டோம் என்ற ஒரே புரட்சிகர சீர்குலைவு அமைப்பின் உன்னத குரல் இதுதான். இதைத்தான் இரயாகரன் கேள்வி கேட்டார் இதுவரை அவருக்கு எந்தவிதமான பதிலையும் வினவு அளிக்கவில்லை. சந்திப்பு கேள்வி எழுப்பினால் ம.க.இ.க. இனவாதிகள் தனிநபர் அவதூறுகளை அள்ளித் தெளித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். கொள்கை குன்றுகளாய் மிளிர்கிறார்கள்.

  பொய் எட்டு: இந்தியாவின் ஆதரவு துண்டிக்கப்பட்டால் ராஜபக்க்ஷேவின் திமிர் பெருமளவு அடக்கப்படும்.

  இந்தியா கைவிட்டு விட்டால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அதாவது இவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கதான் இலங்கையின் உற்ற நன்பனாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்களோ என்னவோ? பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நட்பாயிருப்பதால் நமக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களை நாம் அறிவோம்! இவர்கள் புரட்சிகரவாதிகள் அல்லவா? அதன் இப்படியெல்லாம் சிந்தித்து – சீர்தூக்கி வர்க்க ஆராய்ச்சி செய்கிறார்கள்….

  பொய் ஒன்பது: வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து கொண்டு குறிப்பாக மற்ற தேசிய இன மக்களை அணிதிரட்டி இந்தியாவை அம்பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

  பரவாயில்லை இந்தியாவில்தான் ஓட்டுக் கட்சிகள் – பாராளுமன்றம் பன்னித் தொழுவம் என்று கூறி ஜனநாயகம் இல்லை என்று மாரடிக்கும் இந்தக் கூட்டம். வெளிநாட்டில் எல்லாம் சோசலிச ஜனநாயகம் நிலவுவதாகவும் அந்தக் கட்சிகள் எல்லாம் இவர்களைப் போலவே வர்க்கத்தை கடந்து நிற்பதாகவும் கூத்தடிப்பது வேடிக்கையானது. இவர்கள் அணிகள் எல்லாம் இதனைப் படித்து விட்டு புல்லரித்துப் போவார்கள்.

  http://santhipu.blogspot.com/2009/02/blog-post.html

 6. மனித அவலத்தை விதைத்து, அதில் அறுவடை செய்யும் பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும், தற்கொலையையும் தம் பிழைப்புக்காகத் தான் ஊக்குவிக்கின்றனர். இந்திய விஸ்தரிப்புவாத பொருளாதார நலனை கேள்விக்குள்ளாக்காத பிழைப்புவாத நாய்களுக்கு, முத்துக்குமரன் போன்ற அப்பாவிகள் மரணம் அரசியல் ரீதியாக அவசியமாகிவிட்டது. புலிகளுக்கு தமிழ் மக்களின் மரணங்கள் எப்படி அரசியல் ரீதியாக அவசியமாகி அதுவே அவர்கள் அரசியலாகிவிட்டதோ, அப்படியே முத்துக்குமரன் மரணம் இந்திய போலி தமிழினவுணர்வு பிழைப்புவாத கழிசடைகளுக்கும் மகஇக அயோக்கியர்களுக்கும் அவசியமாகிவிட்டது.

 7. Lot to read but I really dont have time now.
  I would like to share my views.

  Many freedom fighters like Bose and Bhagat Singh fought for India’s independence. They were called as terrorist in the beginning. Gandhi got a chance to talk and release Bhagat Singh but he didnt as he wanted to proof that ahimsa is better. I will send the old “anadavikatan” link about the article.

  Its like many people died for the country and Gandhi got the name. I really dont know why he has to be know as father of India.

  Bhagat Singh died when he was 21 for his country. Gandhi drank his urine to live longer. He even tortured his wife. He wanted to test himself if he can control himself. He made his wife to me naked and made her sit infront of him for 3 days.

  I really hate Gandhi. I respect Bhagat Singh / Bose / Barathi / Thilakar. I put their pic in my room. Even Gandhi;s too. To remind me not to be bastard like Gandhi.

  And about the indian troop that went to sri lanka. They raped many young girls. I am a witness. I saw them raped and shot our next door acca in her privates. I was a small girl.

  The president of sri lanka (Late.Mr.Premadasa) gave weapons to tigers and asked them to chase indian army from sri lanka.

  Indian gave “Zero” chess and many others things to the world. but now there is a very clear proof to show how they are dumb by letting sonia to be in politics. because she married rajiv does not mean she is indian. she is an outsider. I would never let an outsider to rule my country. She is not even educated well. She preformed well with white saree and made so many statements like she wont enter politics this and that. but ended up in politics.

  I know Parampara plays big role in indian community.

 8. /////////////////ம.க.இ.க. இனவாதிகளே உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு மேற்கண்ட வரிகளே உதாரணமாக திகழ்கிறது. உண்மையை மக்களிடம் மறைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். முதலாளித்துவ கட்சிகள் கூட உங்களிடம் இனிமேல் பிச்சை வாங்க வேண்டும். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். ////////////////////

  மேற்கண்ட வரிகள் சிபிஎம் கட்சியின் இணையக் கோமாளியும் கோயபல்சுமான பொந்திப்பு மன்னிக்கவும் சந்திப்பு எழுதியிருப்பது.

  ஈழ மக்கள் யாரும் சாவின் விளிம்பிலோ, சாகடிக்கப்படவோ இல்லையாம், சத்தியமா நம்புங்க. நம்ம சந்திப்பு சொன்னா உண்மையில்லாம இருக்குமா? ஏன்னா, நேர்ல பாத்தவஞ்சொன்னா அது சத்தியவாக்குதானே!

  ”அட, இவன் எப்படா அங்க போயி, நேர்ல பாத்திருக்கப் போறான்”ன்னு நீங்க முனகுவது எனக்கு இப்பவே கேக்குது. இருந்தாலும் நம்புங்க. ஈழத்து மக்கள சாகடிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ள சிங்கள-இந்திய ராணுவத்தினருக்கு காண்டம் அதாவது நிரோத் சப்ளை பன்ற ஏஜெண்ட்டா நம்ம அண்ணாத்தைங்க, செல்வப்பெருமாள், ஹிந்துராம், சோ, சுப்பிரமணியசாமி போன்ற அம்மாவின் தளபதிகள்தான் இருக்காங்க. அந்தக் கூட்டத்துல ஒருத்தரா இருக்கும் செல்வப்பெருமாளோ தீக்கதிரின் புண்ணாக்கு தடியனுகளோ சொன்னா அப்பீலே இருக்கக் கூடாது.

  இந்த அண்ணப்பறவை, பால்ல கலந்திருக்கும் தண்ணியத் தனியாப் பிரிச்சிட்டு பாலமட்டும் அருந்துமுன்னு சொல்லுவாகளே ஒரு கதை, அதே போல அங்குள்ள தமிழ் மக்கள் கூட்டத்திலிருந்து புலிகளைத் தனியாகப் பிரித்து வேட்டையாடுதாம் இனவெறி இராணுவம். அத நடுவுல நின்னுக்கிட்டு, நம்ம சந்திப்பு, ஹிந்துராம், சோ, சுப்பிரமணிய சாமி வகையறாக்கள் லைட் அடிச்சு பாத்துத்தான் சொல்றாங்க. அதப் புரிஞ்சிக்காம நாம அவனுகள இந்த விலாசு விலாசுனா என்னாவறது?

  ”போருன்னு ஒன்னு நடந்தா பொதுமக்கள் கொல்லப்படுவது சாதாரனமானதுதானே…”ன்னு அக்கா சொன்ன வசனத்த, அக்காவோட ஆசனவாயாக இருக்கும் இவனுகளத் தவிர வேறு எவன் தெளிவா உச்சரிக்க முடியும்?

  இவனுக வாசிக்க வாசிக்க நம்ம வேலை சுலபமாகிடுது. இவனுக கட்சியில் இருக்கும் நேர்மையானவர்கள் உண்மையினை அப்பட்டமாக அறிந்து கொண்டு வெளியேறுவதற்கு இவனுகளோட பொலம்பல் நமக்கு உதவி செய்யுது.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 9. அர டிக்கெட்டு, நீங்கள் எழுதியதை பார்த்தால் ஏதோ வைகோ, நெடுமாறன் ,திருமாவளவன் பாணியில் உள்ளது.

 10. ///////////////முழு டிக்கெட், மேல் பெப்ரவரி 5th, 2009 இல் 18:09 சொன்னார்:
  மனித அவலத்தை விதைத்து, அதில் அறுவடை செய்யும் பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும், தற்கொலையையும் தம் பிழைப்புக்காகத் தான் ஊக்குவிக்கின்றனர். இந்திய விஸ்தரிப்புவாத பொருளாதார நலனை கேள்விக்குள்ளாக்காத பிழைப்புவாத நாய்களுக்கு, முத்துக்குமரன் போன்ற அப்பாவிகள் மரணம் அரசியல் ரீதியாக அவசியமாகிவிட்டது. புலிகளுக்கு தமிழ் மக்களின் மரணங்கள் எப்படி அரசியல் ரீதியாக அவசியமாகி அதுவே அவர்கள் அரசியலாகிவிட்டதோ, அப்படியே முத்துக்குமரன் மரணம் இந்திய போலி தமிழினவுணர்வு பிழைப்புவாத கழிசடைகளுக்கும் மகஇக அயோக்கியர்களுக்கும் அவசியமாகிவிட்டது./////////////////

  ஈழ அரசியல் எந்த அளவுக்கு சீரழிந்துவருகிறது. என்பதனை நாம் இத்தருணத்தில் தெளிவாக உணரமுடிகிறது.

  ஈழத் தமிழ் மக்களின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள சிங்கள பேரினவாத – இந்திய மேலாதிக்கவெறி ரானுவத்தாக்குதலை நாம் எதிர்த்துப் பேசினால், நாம் ”புலியரசியலின் ஆதரவாளர்கள்…” என்று முத்திரை குத்தும் போலிகம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாத விமர்சனங்களைச் சந்திக்கவேண்டியுள்ளது.

  அதேபோல, தருணம் கருதி, ஒடுக்கியழிக்கக் கொக்கறித்து நிற்கும் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் ஒடுக்கப்படுகின்ற இனமாக தமிழினமும் அதன் ’அத்தாரிட்டி’களாக இருக்கும் புலியரசியலை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்தாலும், நாம் புலிப்பாசிசத்தை ஆதரித்துப் பேசாவிட்டால், நம்மை “ஈழ மக்கள் விடுதலைக்கு எதிரானவர்கள்….” என்று முத்திரை குத்துகிறார்கள் புலியாதரவு-தமிழ் தேசிய அமைப்பினர்.

  சிங்கள பேரினவாத வெறி அரசு, அதற்கு தூண்டுகோலாகவும் அரணாகவும் இருந்து வரும் இந்திய மேலாதிக்க பாசிச அரசு, இந்திய தேசியம் எனும் மோசடி பார்ப்பன தேசிய நிலைப்பாட்டிலிருந்து ஈழப்பிரச்சினையினை அனுகும் போலிகம்யூனிஸ்டு-பாஜக-காங்கிரசு கூட்டணி; என பாசிசப் பட்டாளம் ஒருபுறம் இருந்து கொக்கரிக்கிறது.

  மறுபுறமோ, மேற்கண்ட பாசிஸ்டுகளின் வியூகத்தைச் சமாளிக்க முடியாமல் அழிவின் விளிம்பில் தம்மையும் ஈழ மக்களையும் நிறுத்தியிருக்கும் புலிகளும், புலிகள் எதைச் செய்தாலும் கைகொட்டி ரசிக்கும் தமிழ்த்தேசிய ரசிக மாமணிகளும் மறுபுறத்திலிருந்து பிதற்றுகிறார்கள்.

  பாஜக பூச்சாண்டியைக் காட்டி காங்கிரசையும், காங்கிரசு மோசடிகளைக் காட்டி பாஜக (அதிமுகவும் பாஜகவும் அடிப்படையில் ஒன்றுதானே…) வையும் ஆதரித்து ஓட்டுப் பொறுக்கும் சந்தர்ப்பவாத போலிகம்யூனிச கும்பல், ஈழப் போராட்டத்தில் எதிரிக்கும் துரோகிக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் மக்களின் அவலநிலை குறித்து கேள்வியெழுப்பினால், தமது பார்ப்பன-இந்து தேசிய அரிப்போடு அவதூறு பரப்புகிறது.

  இந்த பார்ப்பன பேடித்தனத்தைத் திரைகிழித்து ஒரு விரிவான பதிவை வினவு தோழர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 11. ஸ்கை செய்திக்கு கோட்டபாய ராஜபட்சி கொடுத்த செய்தியில் வன்னி நிலைகள் எல்லாமே தாக்குதலுக்கான தெரிவு செய்யப்பட்ட இலங்கு என அந்த பாசீச பட்சி கூறினார். இவ்வாறாக திமிராக பேச இடம் கொடுத்தது இந்திய ஆழும் வர்க்கமும் மேற்கு வல்லரசுகளின் ஆசியின் மூலம் தொடரப்படும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடர்கின்றனர்.

  இதனை விளங்கிக் கொள்ளும் நிலையில் புலியினால் வளர்க்கப்பட்ட மக்கள் விளங்கிக் கொள்ள அரசியல் ரீதியாக வர்க்கப்படவில்லை. இதேபோல புலிகளின் ஊடகங்களில் இருப்பவர்களுக்கும் புதியாதா புதிராக இருப்பதாக கூறுகின்றனர்.

  புலிகளைப் பொறுத்தவரையில் தமக்கு உதவிபுரிகின்றவர்கள் எல்லோருமே நண்பர்களாகும் என்ற நிலையைதான் கொண்டிருந்தார்கள். உதவிபுரிபவர்களை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நலனைப் பெறுவதும் பின்னர் தேவையில்லை எனில் அவர்களை அகற்றுவதுமே கடந்த 25 வருட கால நடைமுறையாகும். இவ்வாறு உதவிகளை கொடுப்பற்கு பின்னரான நலன்கள் இருப்பதை எவரும் அறிந்து கொள்வதற்கு புலிகள் மக்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. இதனால் இன்று எல்லோராலும் தாம் கைவிட்டிருப்பதை ஏற்க முடியாது மனவிரக்திக்குள் இருக்கின்றனர்.
  மனவிரக்திக்குள் இருக்கின்ற மக்களை தற்போதைய நிலையைப் பயன்படுத்தி புலிகள் அல்லாத பொதுவிடயம் என்ற நிலையில் ஊர்வலம் உண்ணாவிரதம் என வரும் மக்களிடையே புலிமீதான நம்பிக்கையை வளர்க்கின்றனர்.
  இங்கே தான் புலிகளின் பின்வாங்கல் மீதான அரசியல் விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அதாவது முன்னரும் புலிகள் பின்வாங்கி மறுபடியும் தளங்களைக் கைப்பற்றியுள்ளனர் எனக் கூறுகின்றனர்.
  தொடர்ச்சியாக எதிரிகளை மக்களுக்கு அறியப்படுத்துவதிலும் ஏதிரிகளை அம்பலப்படுத்வதிலும் அக்கறையற்று இருக்கின்றனர்.
  ஆக மக்களின் தன்னெழுச்சிகளை தமக்கு சாதகமான நிலைக்கு கொண்டுவருதில் திமைறையில் செயற்படுகின்றனர்.
  இவ்வாறே தமிழக மக்களின் அனுதாப அலையை தமது இருப்புக்காக பயன்படுத்துவதில் புலிகள் இரண்டைவேடம் போடுகின்றனர்.
  இந்திய எதிரிகளை நேடிடையாக எதிர்ப்பதில்லை. மற்றைய இந்திய தரகுவர்க்கமும் புலிகளின் செயற்பாட்டை எச்சரித்தே முதலாளிய வர்க்க காவலாளியான கருணாநிதியின் துரோகத்தன்தை நேரிடையாக விமர்சிக்காது ஒதுங்குகின்றனர்.
  இங்கு தமிழக மக்களின் ஆதரவு நிலை
  புலம்பெயர்ந்த மக்களின் தன்னெழுச்சி
  இவை இரண்டையும் எவ்வாறு தொடர்ந்தும்; போராட்டத்தின் சேமிப்பு சக்தியாக பங்குவப்படுத்துவது என்பதான செயல்வடிவம்
  ஈழத் மற்றும் தமிழக புரட்சிவாதிகளின் கைகளில் இருக்கின்றது. இதற்கு என்ன செய்யவேண்டும்?

 12. //அர டிக்கெட்டு, நீங்கள் எழுதியதை பார்த்தால் ஏதோ வைகோ, //

  நன்றி தோழர் , ஆனா நீங்க என்ன சொல்ல வற்றீங்கன்னு புரியல!

 13. சிவந்த மண்

  தோழர்கள் அறிவது,

  தர்மபுரியில் கடந்த 31-ம் தேதி விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் ஈழமக்களை கொல்லும் இந்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற்றது,கலந்து கொப்ண்ட 60 பேரில் 39 பேரை கைது செய்த போலீசு பிணையில் வெளிவர முடியாத வழக்குகளில் சிறையில் தள்ளியது,மேலும் தோழர்களை பரமத்தி வேலுர்,சேலம் , வேலுர் எனப் பிரித்து சிறையில் தள்ளியது, கடந்த இரு நாட்களாக மட்டுமே பிணை பெற்று வருகின்றனர் இன்னும் மூவருக்கு பிணை கிடைக்கவில்லை.

  இந்திய மேலாதிக்க அரசை அம்பலப்படுத்துவோம் , அதற்கு ஊதுகுழலாய் செயல் படும் பார்ப்பன பயங்கரவாதிகளை மோதி வீழ்த்துவோம், இந்திய ஓநாயின் வாயில் கவ்வியிருக்கும் ஈழத்தை மீட்டெடுப்போம்.

 14. //இந்த பார்ப்பன பேடித்தனத்தைத் திரைகிழித்து ஒரு விரிவான பதிவை வினவு தோழர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்.//

  அவனுக்கு ஏற்கனவே கிழிந்த டவுசர்,
  பரவாயில்லை
  தோழர் களமிறங்குங்க அவனுங்க அம்மனாத்தான செயா வீட்டுக்கும் கர்ணாவீட்டுக்கும் போறாங்க, அப்புறம் பாண்டி கம்பெனி பத்தி மட்டும் பேசாதீங்க அவருதான் தளபதி விஜயோட ப் ஈஆர் ஓ.

  கலகம்

 15. அட்டே பொந்திப்பு கதையுல ஒரு ஆண்டி கிளைமாக்ஸ்.. கொஞ்ச நாளாய் இந்த போலி கம்மூனிஸ கொளுகை குன்றுகள் எதுக்கெடுத்தாலும் தோழர் இரயாவை சாட்சியா வச்சு ம.க.இ.க வ திட்டிகிட்டிருந்தாங்க, ஆனா இரயா வச்சாரு பாரு ஒரு ஆப்பு…….

  இதுக்கு மேல நீங்களே படிச்சுகங்க…

  ஈழமக்கள் மேல் மலம் கழிக்கும் சந்திப்பு : இந்திய மேலாதிக்கத்துக்கு கம்பளம் விரிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள்

  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4934:2009-02-05-15-37-58&catid=277:2009

 16. ம.க.இ.க வினரின் ஒடுக்குமுறையாளர்களின் செயற்பாட்டினை கொச்சைப்படுத்தி கருத்தினை விட்டிருக்கும் பிரிவினர். பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கடமையில் இருந்து சிந்திக்கவில்லை. மாறாக அரசாங்கங்களில் அங்கம் வகித்துக் கொண்டும் ஒடுக்குமுறை அரசயந்திரத்தை பாதுகாத்துக் கொள்ளும் அரசியல் போக்கைக் கொண்டவர்களால் கொச்சைப்படுத்தி கருத்தூட்டம் விடப்பட்டுள்ளது.
  தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம் பாசீச ஜெயலலிதாவின் கூட்டில் தற்பொழுது இருக்கின்றார்கள். முன்னர் தரகுமுதலாளிகளைக் கொண்ட கருணாநிதியின் அரசாங்கத்தை பாதுகாத்து வந்தார்கள்.
  இவர்கள் செய்வது என்ன காலத்துக்கு காலம் ஒடுக்குமுறையாளர்களுடன் தேர்தலுக்காக கையோர்த்துச் செயற்படுபவர்கள். இவர்கள் ஒடுக்குமுறை யந்திரம் என்பது தற்கால அல்லது முன்னைய ஆட்சியாளர்கள் அடங்கமாட்டார்களா? அரசு என்பதே ஒரு வர்க்கம் சார்ந்தல்லவா இருக்கும் இது மார்க்சீயத்தின் அரிவரிப்பாடமல்லவா? இதனை மறந்து ஒடுக்குமுறையாளர்களுடன் கூடிக் கும்மாளம் அடிப்பது உழைக்கும் வர்க்கத்திற்கு இழைக்கும் துரோகம் அல்லவா?
  சிபிஎம் இந்திய தலையீட்டை எதிர்க்கவில்லை. இவர்கள் இந்திய தரகு வர்க்கத்தை அம்பலப்படுத்தியல்லவா இருக்க வேண்டும். அதனை விடுத்து தரகு முதலாளிகளைக் கொண்ட கூட்டத்தையும் அரவணைத்து ஈழத்தமிழருக்காக போராட வேண்டும் எனக் கூறுகின்றது.
  இன்று கருணாநிதி தரகுமுதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டே ஈழப்பிரச்சனையில் மத்தியில் ஆழும் தரகு வர்க்கத்தின் ஊதுகுழலாளாக இருக்க வேண்டிய நிலைக்கு நிலைப்பாடு எடுத்துள்ளார்.
  இத்துடன் இவருடைய குடும்ப நலன்களும் முக்கியமாக இருக்கின்றது. சண்சகோதரர்களின் நலனும் கலைஞரின் முடிவில் தாக்கத்தை கொடுக்கின்றது.
  ஆக சொந்த நாட்டில் உள்ள ஆழும் வர்க்கத்தை அம்பலப்படுத்துவது சர்வசேதியமாகும். இதனை மகஇக தோழர்கள் செய்கின்றனர். இவைகள் முக்கியமான அம்சமாகும்.

 17. ஒரு ஊரில் ஒருவனுக்கு 100 ஏக்கர் சொந்தமாக இருந்தது.மற்றவனுக்கு 1 ஏக்கர் சொந்தமாக இருந்தது.அந்த ஊருக்கு வந்த ஒரு முரடன்,இருவரின் நிலத்தையும் பிடிங்கி கொண்டான்.அவர்களையே அடிமையாக ஆக்கி அந்த நிலத்தை அனுபவித்து வந்தான்.

  ஆண்டுகள் பல ஓடின.ஒரு நாள் அந்த முரடன் அவன் அனுபவித்த நிலம் (101ஏக்கர்)முழுவதையும் ,அந்த 100 ஏக்கர் சொந்தகாரனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

  அவன் மொத்தமாக 101,நிலத்தையும் தன் பொறுப்பில் வைத்து கொண்டான்.அந்த 1 ஏக்கர் சொந்த காரன் தன் நிலத்தை தனக்கே கொடுத்துவிடும் படி கேட்டான்.அதற்கு,அவன் இத்தனை ஆண்டுகள் 101 ஏக்கர் மொத்தமாக தானே இருந்தது அதனால்,நானே 101 ஏக்கர் நிலத்தையும் பார்த்து கொள்கிறேன்.உனக்கு தேவையானதை நான் செய்துவிடுகிறேன்.ஆகவே ஓன்றாக இருக்கலாம் என்றான்.அதற்கு 1 ஏக்கர் சரி என்று ஒத்து கொண்டான்

  சில ஆண்டுகள் தான் போயிருக்கும்,100 ஏக்கர் சொந்தகாரன் இவனை அடிமை போல் நடத்த ஆரம்பித்தான்,இவனுக்கு கொடுக்கவேண்டியதை கொடுக்காமல் துன்பபடுத்தினான்.

  மேலும் அவனை ஊரைவிட்டு ஓட வைத்து 101 ஏக்கர் நிலத்தையும் தானே அடைய திட்டம் தீட்டினான்.

  இந்த நிலை,தான் இலங்கையில் இப்போது நடைபெறுகிறது.1 ஏக்கர் நிலம் என்றாலும் அது அவன் சொந்த நிலம்.

  அது போல் தான்,இலங்கையில் ,தமிழர்கள் வாழும் பகுதி இலங்கையில் சிறிதென்றாலும்,அது அவர்களுடைய சொந்த பூமி.

  பிரிட்டிஷ் அரசு என்ற முரடன் போகும் போது விடுதலை என்ற பெயரில் மொத்த இலங்கையை,சிங்களவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டன்.
  பெரும்பாண்மை என்ற ஒரே காரணத்திற்காக இவன்(ஈழ தமிழனின் நிலத்தையும்) நிலத்தையும் தனக்கே சொந்தம் என்று சொல்கிறது சிங்களம்.

  அனால்,சொந்த பூமியில்,தன் சொந்தங்களோடு,தன் மொழி பேசி வாழமுடியாமல் ,சொந்த நாட்டிலேயே நாளும் உயிருக்கு பயந்து,அகதியாக காடுகளில்அலைகிறான்.உயிரோடு கொளுத்தபடுகிறான்.

  இது என்ன நியாயம்.

 18. ‘நோய் நாடி’ என்பதை புறந்தள்ளி விட்டு, ஆண்டாண்டு காலமாய் தமிழக ஏகாதிபத்தியவாதிகள் நடத்தும் உணர்வுப் போராட்டத்தால் இதுவரை உலகத் தமிழன் முதல் உள்ளூர் தமிழன் வரை யாரும் பாதுகாக்கப்பட்டதாக வரலாறு கூறவில்லை.
  யுத்தத்தாலோ, பட்டினியால் வயிறு பொருமும் சத்தத்தாலோ எங்கும் எப்போதும் மனிதன் செத்துமடியக்கூடாது என்பதுதான் மார்க்சியவாதிகளின் ஒட்டுமொத்த கவலை ஆனால் இந்த போலி மகஇக நாய்களுக்கு பிழைப்புவாத நலன் மட்டுமே.
  நரம்புகள் புடைக்க பேசுவதும், நாடிகள் அதிர ஆடுவதும், சாமியாடிகள் மாதிரி தங்களுக்கு தாங்களே தேடும் வடிகால் போன்றதாக இருக்குமே அன்றி, பிரச்சனைகளை உண்மையில் தீர்க்க உதவாது என்பதையே வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்துள்ளது. உணர்ச்சிகள் மட்டுமே மேலிட்டால் நாம் முத்துக்குமரன்களைத்தான் இழக்க வேண்டியதிருக்கும். இந்த முத்துக்குமரன்களுக்கு யார் பொறுப்பேற்பது? அறிவும், உணர்வும் ஒருங்கே சேர்ந்தாலன்றி விடிவு வெகுதூரமே.

 19. //உணர்ச்சிகள் மட்டுமே மேலிட்டால் நாம் முத்துக்குமரன்களைத்தான் இழக்க வேண்டியதிருக்கும்.//

  ஐயா, நீங்கள் உணர்ச்சிகளைப் பற்றி பேசலாமா அது சொரணை துளியேனும் இருப்பவ்ர்கள் பேச வேண்டிய வார்த்தை. கருணாநிதியிடமும், இப்பொழுது ஜெயலலிதாவிடமும் சீட்டு பிச்சை வாங்கி ஓட்டுப் பொறுக்கும் நீங்கள் மார்க்ஸியவாதிகள் அல்ல இந்த சமூக வியாதிகள்.

 20. தமிழர்களே தயவு செய்து இந்தியாயவை பழி காதீர்கள் ! சில ராஜா செயல்களுக்கத்தான் ! இந்தியா மௌனன் சாதிக்கிறது !

  இப்போது உங்கள் பிரபாகரன் இருப்பது போல! இந்தியாயவை தவிர யாரும் உங்களுக்கு அடைக்கலம் தர மாட்டார்கள்!

  இந்தியாவிடம் ! கேளுங்கள் ! கண்டிப்பாக ! அது உங்களுக்கு சமயம் பார்த்து உதவி செய்யும்.

 21. தமிழர்களே தயவு செய்து இந்தியாயவை பழி காதீர்கள் ! சில ராஜா செயல்களுக்கத்தான் ! இந்தியா மௌனன் சாதிக்கிறது !

  இப்போது உங்கள் பிரபாகரன் இருப்பது போல! இந்தியாயவை தவிர யாரும் உங்களுக்கு அடைக்கலம் தர மாட்டார்கள்!

  இந்தியாவிடம் ! கேளுங்கள் ! கண்டிப்பாக ! அது உங்களுக்கு சமயம் பார்த்து உதவி செய்யும்.

 22. தமிழர்களே தயவு செய்து இந்தியாயவை பழி காதீர்கள் ! சில ராஜா செயல்களுக்கத்தான் ! இந்தியா மௌனன் சாதிக்கிறது !

  இப்போது உங்கள் பிரபாகரன் இருப்பது போல! இந்தியாயவை தவிர யாரும் உங்களுக்கு அடைக்கலம் தர மாட்டார்கள்!

  இந்தியாவிடம் ! கேளுங்கள் ! கண்டிப்பாக ! அது உங்களுக்கு சமயம் பார்த்து உதவி செய்யும்.

 23. Ezham tamils are deprived of the right to live. Food, shelter and medical care come next.
  Indian Congress govt. supports singala govt. for the genocidal killings in Ezham. So, It is the duty of each and every tamil to make the world know about Congress’ govt.’s true nature.

  But, I think Vinavu team and its comrades in London, England should take the initiative to gain the support of non-tamil community for Ezham Tamils in India and Europe.

  It would be really nice if every one stops writing critic about LTTE immensely. I believe LTTE is the only group who can represent and protect Ezham Tamils.

 24. //t would be really nice if every one stops writing critic about LTTE immensely. I believe LTTE is the only group who can represent and protect Ezham Tamils.//

  ஒன்று கண்மூடித்தனமாக ஆதரிப்பது இல்லை எதிர்ப்பது என்பதைதவிர வேரெதும் தெறியாத அளவிற்கு நம்மை இந்த சமூகம் மாற்றியுள்ளது!

 25. தோழர் ஒருவர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது !

  ம.க.இ.க போன்ற அமைப்புகள் ஏதாவது போராட்டம் நடத்தினால் சீபிஎம் காரன் அங்கு வந்து குலைப்பது, இடையில் தாக்கு பிடிக்கமுடியாமல் அம்பலபட்டு ஒடுவது.

  இதியே வினவிலும் செய்கிறார்கள்.

  //யுத்தத்தாலோ, பட்டினியால் வயிறு பொருமும் சத்தத்தாலோ எங்கும் எப்போதும் மனிதன் செத்துமடியக்கூடாது என்பதுதான் மார்க்சியவாதிகளின் ஒட்டுமொத்த கவலை\\

  போதுண்டா யோக்கியா சிகாமணி, உங்க லட்சண்த்ததான் பாத்துட்டமே!
  எத்தன நாள்தான் வெளிவேசம் போடுவிங்க? பேசாம பாதி பேர் காங்கீரசுலயும் மீதி பேர் ஆர்.எஸ்.எஸ் லயும் சேர்ந்துடுங்க

  (விஜய காந்து, செயலல்லிதா, விஜய் – இதுங்க கூடயும் கொஞ்பேரு சேந்துகோங்க தப்பில்ல)

  //உணர்ச்சிகள் மட்டுமே மேலிட்டால் நாம் முத்துக்குமரன்களைத்தான் இழக்க வேண்டியதிருக்கும்.//

  முத்துக்குமரன் வீட்டு பக்கம் போய்டாத சீபிஎம் காரன் வந்தா காலுல கடக்குற செருப்ப கழட்டி எதயோ நனைச்சி அடிக்கறாங்களாம்.

 26. // இந்தியாவிடம் ! கேளுங்கள் ! கண்டிப்பாக ! அது உங்களுக்கு சமயம் பார்த்து உதவி செய்யும். \\

  ஏன்! நீதான் போயீ கேளேன் !

 27. தோழர் இலங்கை பிரச்சனையில் நம்ம நிலை என்னன்னு விரிவா ஒரு பதிவு போட்டாத்தான் இந்த சிபீஎம்காரங்க அடங்குவாங்க!

 28. ///////////At 4:58 PM, NATPUTAN RAMESH said…
  முத்துக்குமாரின் மரணம் சொல்கிற சேதி ஒன்றே ஒன்றுதான் அது புலிகளை ஆதரியுங்கள். இது இலங்கையில் நிராகரிக்கப்பட்ட ஒன்று. ஆனாலும் இங்குள்ள பிண அரசியலை என்னசொல்வது. இன்னும் பலரை (தற்)கொலைக்கு தூண்டும் வேலை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது தமிழக இளைஞர்கள் ஜாக்கிரதை

  At 12:11 PM, சந்திப்பு said…
  Thanks Ramesh////////////

  தோழர்களே!

  மேலேயுள்ள வரிகள், சிபிஎம் கட்சியின் dyfi என்கிற இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவன் ரமேசுபாபு என்பவன் சந்திப்பு வலைதளத்தில் பின்னூட்டமாகப் பதிந்து (கழிந்து)வைத்தது.

  அதற்கு நன்றி தெரிவித்திருக்கும் கோமாளி சந்திப்பின் பதில் அதற்குக் கீழேயுள்ளது.

  தான் சார்ந்திருக்கும் அமைப்புக்காக ஒரு குவாட்டரைக்கூட விட்டுக் கொடுக்கமுடியாத இவனுகளுக்கு முத்துக்குமாரின் தியாகத்தைப் பற்றிப் புரியவாபோகிறது?

  பகத்சிங்கை உணர்ச்சியோடு அனுகாமல் பிழைப்புக்காக பயன்படுத்தும் கூட்டம், இந்த போலிகம்யூனிசக் கூட்டம். அதனால்தான் காந்தி என்கிற துரோகியோடு பகத்சிங்கையும் சேர்த்துவைத்து கொண்டாடுகிறானுங்க இவனுக. மாவீரன் பகத்சிங்கின் தியாகம் குறித்த நேர்மையான பார்வை இவர்களுக்கிருந்திருந்தால் காந்தியைத் தூக்கி எறிந்திருப்பார்கள்.

  பகத்சிங், சேகுவேரா போன்ற போராளிகளை வைத்துப் பிழைக்கும் இக்கும்பல் முத்துக்குமாரையும் இப்படித்தான் மதிப்பிட முடியும்.

 29. //தோழர் இலங்கை பிரச்சனையில் நம்ம நிலை என்னன்னு விரிவா ஒரு பதிவு போட்டாத்தான் இந்த சிபீஎம்காரங்க அடங்குவாங்க//

  நான் என்ன சொன்னேன் எந்த பேருல வேணுமின்னாலும் வா ஆனா டவுசர மாட்டிகிட்டு வான்னு சொன்னேனா இல்லையா! ஏன்யா இப்படி இருக்க, உன்னைய மாதிரி ஒரு தற்குறியோட வாதம் பன்றது அவமானமா இருக்குய்யா!!! நீங்க இப்படி ஜோக்கரா இருக்கறதனாலதான் திமுக அதிமுக ரெண்டு பேரும் உங்கள சேத்துக்கராங்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க