முகப்புஉலகம்ஈழம்ஈழம்: கிரிக்கெட் நீரோக்கள் ! கருத்துப்படம் !!

ஈழம்: கிரிக்கெட் நீரோக்கள் ! கருத்துப்படம் !!

-

india-wins

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)

முல்லைத் தீவில் உயிரிழந்த, படுகாயமுற்ற ஈழத்தமிழ் மக்களின் புள்ளிவிவரங்கள் தினசரிகளின் ஏதோ ஒரு பக்கத்தின்    மூலையில் ஒதுங்கி நீர்த்துப்போன செய்தியான போது கொழும்பில் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்த இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகள் படோபடமாக வெளியிடப்பட்டன. முல்லைத்தீவில் ஓரே நாளில் 300 பேர் படுகொலை! இந்திய கிரிக்கெட் அணி 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வெற்றி ! மனித உயிரிழந்த புள்ளி விவரத்தின் அருகில் ரன்களுக்கான புள்ளி விவரம். இரண்டிலும் புள்ளி விவரம்தான், எனினும் ஆபாசமாக இல்லையா?

இந்தியாவின் தேசிய ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்காக செய்த கவரேஜில் நூற்றில் ஒரு பங்குகூட ஈழத்தின் அவலத்திற்காக ஒதுக்கவில்லை. கேப்டனாக தோனியின் சாதனை, இந்திய அணி தொடர்ந்து பெறும் ஒன்பதாவது வெற்றி, யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்டது எல்லாம் ஆர்வமாகவும், பெருமையாகவும் அலசப்படுகின்றன. ஆனால் முத்துக்குமாரின் தியாகத்தை எந்த ஊடகமும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சில நூறு கிலோமீட்டர்களுக்கு அருகில் ஒரு இனமே பூண்டோடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது கொழும்பில் கிரிக்கெட் போட்டி நடப்பதும், அதை இரசிகர்கள் அளவளவாவுதும், ஊடகங்கள் அதற்கு முதுகு சொறிவது எல்லாம் பார்க்கையில் எரிந்து கொண்டிருக்கும் ரோமாபுரியில் பிடில் வாசித்த நீரோ பரவாயில்லை!

 1. //எரிந்து கொண்டிருக்கும் ரோமாபுரியில் பிடில் வாசித்த நீரோ பரவாயில்லை!//

  உண்மைதான் வினவு. எப்போதும் கிரிக்கெட் போட்டிகளின் போது எனக்கிருக்கும் ஆர்வம் இந்த முறை சுத்தமாக இல்லை. நிறைய பேருக்கு அப்படித்தான். ஒரு தொடரின் போது டீக்கடைகளில் கிரிக்கெட் அலசப்படாத்து எனக்கு தெரிந்து இதுதான் முதல் முறை… மக்கள் உணர்வோடு இருந்தாலும், ஊடகங்கள் சொரணையற்று போயின…

 2. //நிறைய பேருக்கு அப்படித்தான். ஒரு தொடரின் போது டீக்கடைகளில் கிரிக்கெட் அலசப்படாத்து எனக்கு தெரிந்து இதுதான் முதல் முறை… மக்கள் உணர்வோடு இருந்தாலும், ஊடகங்கள் சொரணையற்று போயின//

  அப்பட்டமான உண்மை!

 3. //நிறைய பேருக்கு அப்படித்தான். ஒரு தொடரின் போது டீக்கடைகளில் கிரிக்கெட் அலசப்படாத்து எனக்கு தெரிந்து இதுதான் முதல் முறை… மக்கள் உணர்வோடு இருந்தாலும், ஊடகங்கள் சொரணையற்று போயின//

  ஆம் ஓரளவு உண்மைதான். சில அல்பைகள் கிரிக்கெட் லோசனை பூசிக் கொண்டு திரிநதது தவிர்த்து அதாவது சாலையின் குறுக்கே வரும் சாக்கடைப் பன்றிகள் போல நிறைய பேர் கிரிக்கெட் குறித்த விசயத்தில் ஆர்வமின்றியே இருந்ததாகவே படுகிறது.

 4. //மனித உரிமை பாதுகாப்ப மய்யத்தின் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன்//
  http://periyaarpaasarai.blogspot.com/2009/02/14.html
  முல்லைத்தீவை நோக்கி 14 வழக்கறிஞர்கள் படகில் பயணம்

  இந்த செய்தி உண்மையா? மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் ஈழம் செல்கிறார்களா?

 5. //இந்த செய்தி உண்மையா? மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் ஈழம் செல்கிறார்களா?//

  உண்மைதான் தோழர். விரிவான தகவல்களை விரைவில்
  தருகிறோம்.

 6. ஆம் மிகவும் மனதிற்கு வருத்தம் அளித்த செயல்.

  பதிவு உலகில் கூட ஒரு அனுபவ பதிவர் கிரிக்கெட் பற்றி பதிவு எழுதி இருந்தார்.

  என் பின்னூட்டம்- முத்துகுமரங்கள் இருந்தால் என்ன இறந்தால் என்ன, முரளிதரனின் பந்தை சிக்ஸர் அடித்தோமா , இல்லையா என்பதே .

  குப்பன்_யாஹூ

 7. தவல்களை ஆங்கிலத்தில் கொடுக்காமல் தமிழிலேயே நமக்குள்ளேயே பகிர்ந்து கொள்வதும் மிகப் பெருந் தவறு. முடிந்தால் ஆங்கிலத்திலும் வெளியிட்டு அனைவரையும் அடைய முயலுங்கள்.

 8. Cricket is a sport. why do you want to mix up politics and other events with it?

  Should we stop all our activities for condemning every single thing? Country will come to a standstill

  PARAMS

 9. அய்யா பரம பிதா, கிரிக்கட்டையும் அரசியலையும் போட்டு குழப்புவது நாங்களல்ல. இன்று பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயனிக்காத்தையும், ஐபிஎல்லுக்கு பாகிஸ்தான் வீரர்கள் வராத்தையும் பற்றி உங்கள் கருத்து என்ன?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க