ஈழத்தமிழ் மக்கள் மீத இலங்கை அரசால் ஏவிவிடப்பட்டிருக்கும் போர் நடவடிக்கைகள் எட்டாம் தேதியோடு நிறுத்தப்படவேண்டும், இல்லையேல் 9ஆம் தேதி வழக்கறிஞர்கள் முல்லைத்தீவு நோக்கி பயணம் செல்வோம் என தூத்துக்குடி மற்றும் கரூர் வழக்கறிஞர்கள் சங்கங்களில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தார்கள். இதன்படி இன்று கரூரில் எட்டுவழக்கறிஞர்களும், தூத்துக்குடியைச்சேர்ந்த ஆறு வழக்கறிஞர்களும் முல்லைத்தீவு நோக்கி காலை பத்து மணிக்கு கிளம்பினர். இந்த வழக்கறிஞர்களில் முருகேசன் கருர் (மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) ம.உ.பா.மையத்தின் அமைப்பாளர், ராமச்சந்திரன் தூத்துக்குடி ம.உ.பா.மையத்தின் செயலாளர், ஹரி ராகவன் தூத்துக்குடி ம.உ.பா.மையத்தின் தலைவர் மற்றும் செல்வம்,வேலு ம.உ.பா.மையத்தின் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சற்று முன்னர் கிடைத்த தகவலின் படி இந்த வழக்கறிஞர்கள் சுமார் ஐம்பது கி.மீட்டர் வரை கடலுக்குள் சென்றுள்ளனர். ஒன்றரை நாளில் முல்லைத் தீவு அடைந்து விடுவதாக திட்டம்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜூ படகில் சென்று கொண்டிருக்கும் வழக்கறிஞர்களிடம் செல்பேசியில் பேசினார். அவர் நமக்குத் தந்துள்ள தகவலின் படி எப்படியும் முல்லைத் தீவு செல்வது என அவர்கள் உறுதியுடன் உள்ளதாகவும் இதை வைத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு தங்களது இந்த சாகசப் பயணம் வழிவகுக்கும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை வழக்கறிஞர்கள் இன்று ஈழப்பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கும் அரங்கில் படகில் சென்று கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் செல்பேசி ஸ்பீக்கர் மூலம் உரை நிகழ்த்தி அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாளை நீதிமன்ற பணிக்கு வழக்கறிஞர்கள் திரும்புவதாக இருந்த திட்டமும் இந்தப் படகு பயணத்தின் மூலம் ரத்தாகலாம் என்றும் தெரிகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தப் படகு பயணத்தைப் பற்றி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. தமது உயிரைப் பற்றி கவலைப்படாமல் சில வழக்கறிஞர்கள் ஏதாவது செய்து போரை நிறுத்த வேண்டும் என துடிப்பது ஓட்டுக்கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் கேட்கப்போவதில்லை. அப்படி கேட்கும் அளவு பெரும் எழுச்சியை தமிழக மக்கள் எழுப்புவார்கள் என்ற நம்பிக்கையோடு சில வழக்கறிஞர்கள் தம் உயிரைப் பணயம் வைத்து இந்த சாகசப்பயணத்தை துவக்கியிருக்கிறார்கள். மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள்தான் சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு வசம் ஆக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
//மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள்தான் சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு வசம் ஆக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//
வாழ்த்துக்கள்… வாழ்த்துக்கள்….. வெற்றி பெரும் ஈழத் தமிழ் மக்களின் மீதான கோடூர தாக்குதலை நிறுத்தக் கோரும் போராட்டம்.
ஓட்டு கட்சி பொறுக்கிகளின், படகுகளில் செல்வோம் செல்வோம் என்று ஜூ காட்டிய சாக்கடைகளின், காடுகளிலே வலம் வந்தோம் என்று உறுமிய காகித எலிகளின் முன்பு இந்த நெஞ்சுறுதி மிக்க, நேர்மைமிக்க வழக்கறிஞர்களின் சாகச பயணம் வரலாற்றில் பெருமிதத்துடன் நிற்கும்.
ஈழ விடுதலையின் புதிய அத்தியாயத்தை, ஒரு நேர்மையானதொரு அரசியல் தலைமைக்கான போராட்டத்தையும் ஆரம்பிப்பதாக இந்த நடவடிக்கை இருக்கட்டும்.
தோழர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
பெருமிதத்துடன்,
அசுரன்
சற்றுமுன் கிடைத்த தகவலின்படி, வழக்கறிஞ்ர்களின் படகை கடலோர காவல்படை மறித்து அவர்களை கைது செய்து மீண்டும் தூத்துக்குடிக்கு அழைத்து வருகிறது.
உண்மையிலேயே படகில் சென்று உயிருக்கு அஞ்சாமல் தமிழர் உயிர்காக்கச் சென்ற புரட்சியாளார்கள் இவர்கள்.. வாழ்த்துகள்.
ஓட்டைப்படகு எனத் தெரிந்தே வாடகைக்கு எடுத்து ஈழம் போகிறேன் என உதார் விட்டுப் பிறகு படகில் ஏறியதும், படகில் தண்ணீர் நுழையவே ‘சீக்கிரம் கைது செய்யுங்க’ எனப் போலீசிடம் கெஞ்சிய ‘மாவீரன்’ உலாவும் மண்ணில் நெஞ்சில் துனிவை ஏந்தித் தமிழர் உயிர்காக்கச் சென்றவர்கள்தான் உண்மையான புரட்சியாளர்கள்..
புரட்சிகரவாழ்த்துகள்.
தியாகு
http://www.proletarian-news.blogspot.com
தோழர்களே,
இப் பயணத்தின் அரசியல் பயன், பரபரப்பை மட்டுமே நோக்கமாக கொண்டதாக உணர்கிறேன். ஒரு அடையாளப் போராட்டம், சாகசம் என்பதைத் தாண்டி இதில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இருப்பதாக கருத இயலவில்லை. மக்களை அணிதிரட்டுவதற்கோ, ஆளும் வர்க்கத்தை உண்மையிலேயே நெருக்குதலுக்கோ உள்ளாக்காத இந்தப் போராட்டம், குட்டி முதலாளித்துவ சாகசவாதம் என்பதாக மட்டுமேப் படுகிறது.
போராடும் சக்திகளை ஒருங்கிணைத்து, இந்திய அரசின் மேலாதிக்கம், சதிகளை அம்பலப்படுத்த வேண்டிய நமது கடமைக்கு இது சற்றும் பயனளிக்காது. இலங்கையில் உள்ள ஜனநாயக சக்திகள், நமது நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் ஆகியோரை அணிதிரட்டி, போராட்ட கட்டங்களுக்கான ஒரு குறைந்த பட்ச திட்டத்தை முன்வைத்து, படிப்படியாக திட்டமிட்ட முறையில் போராடுவதே ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் நடைமுறையாக இருக்க முடியும் என்று கருதுகிறேன்.
Eamathu uravukalukkaaka unkalathu thunichchalana payanaththukku manamaarntha vaalththukkal
வாழ்த்துகிறோம் ! வணங்குகிறோம் !
குமுறும் எரிமலையாய் கொதித்தெழும் தமிழகமே, தொப்புள் கொடி உறவுகளே. உயிர்விதைத்து ஈழப்பயிர் வளர்க்கும் மானக் கடனிணைய நீரில்தானிறங்கி நெடும்தூரம் போகத் துணிந்தவரே இனி எங்கும் ஈழக் கொடிபறக்கும். தமிழகம் மாறட்டும் தரணியெங்கும் நாமே எமக்காய் எழுவோம். எமது விதியை நாமே எழுதுவோம்.
எங்களுக்காக உங்கள் உயிர்களைத் துச்சமாகக் கருதும் தமிழக உறவுகளே! உங்களுக்குத் தலை வணங்குகிறோம். நீங்கள் மேற்கொண்ட பயணம் சாதாரணமானதல்ல முத்துக்குமாரன் தீக்குளித்த செயலைப் போன்றது தெரிந்தே துணிந்திருந்தீர்கள். உறவுகளே! எங்களிடமிருந்து உங்களுக்குத் தருவதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. நன்றியில் பனிக்கும் கண்ணீர்த் துளிகளைத் தவிர எதுவுமே இன்றைய உலகில் எமக்கானதாக இல்லை. உங்கள் புரட்சிதான் எங்களுக்கான சின்ன ஆறுதலாக இருக்கிறது. நன்றி உறவுகளே.
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven’t registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
மிகத் துணிச்சலான நடவடிக்கை…!
இந்தப் போராட்டத்தின் நோக்கம் நிறைவேற – தூக்கத்தில் இருந்து தமிழகம் விழித்தெழ – வாழ்த்துக்கள்…
தோழர்களே
இந்த பயணம் தொடர்பான விமர்சன கருத்துக்களில் நான் தோழர் சின்னசாமியின் கருத்துடன் ஒன்றுபட்டு உள்ளேன். இதற்கும் அரசியல் கட்சிகளின் விளம்பரத்திற்காக செய்யும் நிகழ்வுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும் வித்தியாச முயற்சிக்கு வாழ்த்துக்கள். – சித்ரகுப்தன்.
தொடரும் மனித அவலம்….
இன்று தொடர்ச்சியாக மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்¨.
பாதுகாப்பு வலயத்தினுள் வந்தவர்கள் வடிகட்டி காணாமல் போகின்றனர்.
புலிகளின் குடியிருப்பு என்ற போர்வையில் வெளிநாட்டின் தொடர்பு கொண்டவர்களின் வசதியான வீடுகளும் தாக்கப்படுகின்றன.
கொல்லப்பட்ட நபர்கள் ஆங்காங்கே புதைக்கப்படுகின்றனர்.
காயப்பட்டவர்கள் தனித்தே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வெள்ளைக் கொடியுடன் வருபவர்களையே அரசபடை சுட்டிருக்கின்றது.
இவைகள் வெறும் தரவுகள் அல்ல மாறாக ஒரு கிராம மக்கள் எதிர்கொள்ளும் அவலம்.
புலிகளைக் கொல்கின்றோம் எனக்கூறிக் கொண்டு இனவழிப்பை மேற்கொள்கின்றது சிறிலங்கா பாசீச அரசு.
தமது உறவுகளை அடைக்கலம் கொடுத்த வீடுகூட இனவெறி அரசின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது. ஆக பெரிய வீடுகள் வைத்திருப்பதும் புலிகள் எனக் கூறப்படுகின்றது. இதனை எம்மவர்களும் புலிகள் இலங்குதான் தாக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்கின்றனர்.
அரசபடையின் யுத்த தந்திரம்
புலியெதிர்ப்பாளர்களின் அரசியல் தந்திரம்
புலிகளின் யுத்த தந்திரம் இவைகள் மக்களை காவு கொள்வதில் தான் முடிகின்றது.
மீண்டும் வலியுறுத்துவோம்
யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்து
நிவாரணம் வழங்கு
படைகளை முடிக்கு
புலிகளே மக்கள் குடியிருப்புகளை விட்டு உங்களால் முடிந்த முறைகளில் போராடுங்கள்
Manasu Romba Kazthatama Irukirathu. Enna Seirathu Endrey theriyavaillai, I really wish to help our brothers and Sisters in Eazham.
LTTE continues targeting Tamil civilians:
Suicide bomb attack at IDP rescue centre – Kilinochchi
Click on the following link to see the video:
http://www.defence.lk/videos/20090209_Blast.wmv
courtesy: http://www.defence.lk/new.asp?fname=20090209_06
amam, adeppadida, mothham 14 tamil nattu vakkeel poi illangai ranuvathoda (> 50000 armed soldiers) modhi purchi panna mudium? yenda, vunnga moolai thalaila irukka illa vunga soothila irukka?
Another useless action by a bunch of unemployed/ unemployable lawyers, trying to supporta terrorist organisation called Tamil Tigers. The Lankan army is not fighting Tamils,they are fighting the terrorist outfit LTTE, who are using poor, innocent tamils including women and children, as HUMAN SHIELD. If you want peace, then get rid of LTTE.
The action by these useless lawyers reg Chidambram temple is deplorable. Have they got the guts to do the same against any Church or any Mosque? Only Hindus are”Illichavayans” and you have all these pathetic mob, including Vinavu, supporting this.
அன்பான இந்திய உடன் பிறப்புகளே
நன்றி என்னும் வார்த்தையை விட வேறு
எதுவும் சொல்ல இயலவில்லை
என் தமிழுக்கு நேர்ந்த கதியை என் சொல்வேன்
தமிழனாய் பிறந்ததையன்றி வேறென்ன செய்தார் அந்த மழலைகள்
இலங்கை என்னும் நாட்டில் வாழ்ந்ததை அன்றி வேறென்ன செய்தார் அந்த முதியோர்கள்
அண்ணன் என்றும தம்பி என்றும் அன்புக்காக உயிர் கொடுத்ததை அன்றி வேறென்ன செய்தார் அன்புச்சோதரர்கள்
இந்த ஏழைகளின் கண்ணீரில் குளிர் காயும் சிங்கள ஏகாதிபத்தியம்
தமிழ் நாட்டு சோதரர்களே நீங்கள் எமக்காக உயிர் கொடுக்க வேண்டாம்
ஏனெனில் உயிருக்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை
உங்கள் உறுதியான ஆதரவில் எங்கள் தமிழ் வாழ வழி செய்யுங்கள்
நன்றி
வணக்கம் நண்பர்களே
சாகசப்பயணம் சென்ற வழக்கறிஞர்களை விட அவர்களை அழைத்துச்சென்ற மீனவர் செந்தில்வேல் தான் பாராட்டுக்குரியவர். தனது குடும்பமே நம்பி இருந்த ஒரே தொழிலான அப்படகினை ம.உ.பா. கேட்டார்கள் என்பதை விட ஈழ மக்களை கொலை செய்வதை தடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தனது படகினை எடுத்துச்சென்றார். அம்மீனவரிடம் இருந்த ஒரு உணர்வு ம.உ.பா. விடம் இல்லை என்பது அவ்விடத்தில் இருந்த பொதுமக்களின் கருத்து. 15 கடல் மைல் தொலைவு சென்றுவிட்டு படகினை நிறுத்த சொல்லிவிட்டார்கள் ம.உ.பா. மக இக வினர். சர்வதேச கடல் எல்லைக்கு செல்லவேண்டாம் , இந்திய கடல் எல்லைக்கே இருப்போம் என்று வழக்கறிஞர்கள் சொல்லிவிட்டார்கள் படகோட்டியிடம். உண்மை இவ்வாறு இருக்க தேவையில்லாமல் நீங்கள் பீற்றிக்கொள்ள வேண்டாம் நண்பரே
ஈழத்தமிழர்களுக்காக முல்லைத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக உறவுகளே ஈழத்து தமிழர்களின் வலியை உணர்ந்து உங்கள் உயிர்களைத் துச்சமாகக் கருதிய உங்களுக்குத் தலை வணங்குகிறோம். நீங்கள் மேற்கொண்ட பயணம் சாதாரணமானதல்ல சாவின் திகதியை தெரிந்து கொண்டு களத்தில் இறங்குவது போன்றது. ஈழத்து தமிழரிடம் எதுவுமேயில்லை உங்களுக்குத் தருவதற்கு நன்றியுடன் நனைந்த கண்ணீரைத்தவிர. சர்வதேசமே கைவிட்ட நிலையிலும் உங்கள் புரட்சியும் ஊக்கமும்தான் எங்களை மீண்டும் எழச் செய்யும். நன்றி உறவுகளே.
“”””
மூடாத குழிகளில்
அம்மா அப்பா மட்டுமன்றி
ஐயோ எம்
எதிர்காலச் சோளக் கதிர்களெல்லாம்
சிதறிப் போய்க்கிடக்கிறது…
“””
http://sownthary.blogspot.com/2009/02/blog-post_10.html
நவஜோதி ஜோகரட்னம் எழுத்தில் வந்த கவிதை ஒன்றை வாசித்தேன். கசக்கின்றது காலம் என்ற வரிகளுக்குள் எல்லாமே அடங்கும்.
குத்தும் குளிரிலும் – என்
குருதி மிதமான சூடு
உரிமையிழந்த மண்ணின்கோலம்
பார்வையில் படியும்போது
உடல் இறுகி உதிரம் உறைகிறது
சரித்திர வட்டத்தில்
நெருப்பு இடி பூகம்ப வெடிகள்…
மூடாத குழிகளில்
அம்மா அப்பா மட்டுமன்றி
ஐயோ எம்
எதிர்காலச் சோளக் கதிர்களெல்லாம்
சிதறிப் போய்க்கிடக்கிறது…
இளவேனில் மழைத்தூறல்
சிவப்பாகி பெருக்கெடுக்கிறது…
இரும்பு இதயங்களின் வேற்றுமை படர்ந்து
மண்ணும் வெடுக்கெடுக்கிறது…
இனவாதச் சகதிக்குள் மனிதக் கருகல்கள்…
மனிதத்துக்குக் கண்ணீர் அஞ்சலி!
நாமோ மண் எங்கும் ஓடுகின்றோம்…
கனத்து கரைந்து கசக்கிறது காலம்…
எரிகிறது இதயம்…
ஒளி செத்த தேசம்…
சிவப்பாகும் கோபம் உங்களை திரட்டி விழுங்காதா? – எம்
குருதியைச் சீராக்கி
சிரிப்பைக் கண்டெடுத்து
சுதந்திரம் விரைந்து விரைவில்
மாலைகளாய் எம்
கழுத்தில் வீழாதா?…
அட அடிமுட்டாள்களே உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் செய்யும் பித்துக்குளி வேலைகளுக்கு அப்பாவி தமிழ் உணர்வாளர்களை பலிகொடுக்க வாழ்த்துபா எழும் நாய்கள் முதலில் போய் தீ குளிங்கள், இலங்கை சிங்கள வெறிநாய்களோடு படகில் சென்று செத்துப்போங்கள். பகுத்தறிவும், தன்மானம் கொண்ட தமிழன் யாரும் இப்படிப்பட்ட அராஜக நாடகத்தையோ, முட்டாள்தனமான முடிவுகளையோ எடுக்கமாட்டார்கள்.
// தன்மானம் கொண்ட தமிழன் யாரும் இப்படிப்பட்ட அராஜக நாடகத்தையோ, முட்டாள்தனமான முடிவுகளையோ எடுக்கமாட்டார்கள்.//
சரியார் சொன்னீங்க விடுதலை அவங்கெல்லாம் நீங்க காட்டுற ரெக்கார்டு டான்ஸ பாத்துகிட்டு இருக்காங்களாம்! 🙂
டைஃபியின் (DYFI) குத்தாட்டப் புரட்சி !
http://vinavu.wordpress.com/2009/02/09/cpim6/
யாரங்கே !!
சீபீ எம் அரசை கோமாளி வந்திருக்கிறார்,அவருக்கு தக்க உபசரிப்புகள் செய்து
அனுப்பவேண்டும். என்ன யானை பூனை நாய் நொல்லக்கண்ணு,காரட்டு,பேட்ரூட் பேய் எல்லாம் தயாரா
ஈழப் பிரச்சனையில ம.க.இ.கவின் செயல்பாட்டால் மிகவும் பாதிக்கபட்டுள்ளவர்கள் 3 பிரிவினர் ஒன்று திருப்பூர் விஜய் முதலான தமிழ் தேசியவாதிகள்
இரண்டு பாண்டிச்சேரி விஜய் முதலிய போலி கம்யூனிஸ்டுகள் இவர்கள் முறையே மீனவன் என்றும் விடுதலை என்றும் இங்கு பின்னூட்டமிட்டுள்ளனர், இவர்களைத்தவிர மூன்றாவதாக ஒரு பெயரில்லா பிச்சை அவ்வ்வபோது போடாங்கு, பாப்பான் போன்ற பெயர்களில் வந்து பொருமுகின்றது.
இவர்களுடைய பிரச்சனை ஒன்றுதான் அது கடந்த செப்-அக்டோபர் முதல் ம.க.இ.கவினரும் அவர்களுடைய தோழமை அமைப்புகளும் ஈழத்துக்கான சரியான அரசியல் முழக்கங்களுடன் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி மக்களை சென்றடைகின்றனர், அது இவர்களின் போராட்டத்தை காரணம் காட்டி புரவலரிடம் பொறுக்கி தின்னும் அரசியலை முன்பு போல செய்யவிடாமல் தடுத்துவிட்டது . அதனால் வயிற்றெறிச்சலில் வந்து புலம்புகின்றனர்.
ம.க.இ.கவினர் என்ன செய்தனர் என்பதற்கு வினவிலேயே ஆதாரம் இருக்கின்றது, இவர்களும் புலம்புவதை விடுத்து மக்கள் முன்னர் இவர்கள் செய்த போராட்டங்களை பட்டியலிட வேண்டியது தானே. அட, அது போயஸ் தோட்டத்தில் புல் புடுங்கியதாக கூட இருக்கட்டுமே !!!!!
இப்புடீன்னு நான் மட்டும் கேக்கல!!!
வணக்கம்,
தமிழக உணர்வா? தமிழின உணர்வா? எது தேவை?
இலங்கையில் எதற்காக போர்?
தமிழீழம்தான் அவர்களது தீர்வு என்பதை மற்ற நாடுகள் உணர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய போது இந்தியா மட்டும் அதை ஏற்காதது ஏன்?
தமிழீழம் என்ற வார்த்தை ஏதோ தடை செய்யப்பட்ட வார்த்தை போல் எண்ணி இலங்கை தமிழர் என்ற பதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்தியா இதற்குமுன் தலையிட்டு இலங்கை பிரச்சனையில் கண்ட பலன் என்ன? ஏதும் நடைமுறைக்கு வந்ததா? இந்தியாவை மதிக்காத இலங்கைக்கு வலியச் சென்று உதவுவது ஏன்?
இந்தியாவின் ஒரு மாநிலம் தமிழகம். இங்கிருக்கும் அணைத்து கட்சியினரும் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இந்தியா செவி சாய்ததா?
இறுதியாக ஒரு தீர்மானம் போட்ட பிறகு இந்திய வெளியுறவு மந்திரி ஏதோ கடமைக்கு என இலங்கை செல்கிறார். அவர் என்ன பேசினார் என்பதை எதிர்பார்போடு இருக்கிற தமிழக அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற பண்பாடு மறந்து அடுத்த வேலையை தொடர்கிறார். இலங்கை அரசு இப்போது அறிவிக்கிறது இரண்டு நாள் யுத்த நிறுத்தமென்று. தமிழ் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கான ஏற்பாடாம் இது.
இதற்குத்தான் இந்திய வெளியுறவு மந்திரி இலங்கை சென்றாரா? இதிலே தீர்வு ஏற்பட்டுவிட்டதா? இதன் மூலம் இந்தியாவின் வேலை முடிந்துவிட்டதா? பேச்சு வார்த்தை மூலமே காண முடியும் என முழங்கும் இந்திய அரசு அதற்கான அழைப்பை விடுக்க வேண்டாமா? பேச்சு வார்த்தையில் எதை முன் வைப்பீர்கள்? முன்னர் கண்ட முடிவுகளை யார் மீறினார்கள் என்பதை உலகம் அறிந்துகொள்ள வேண்டாமா?
இலங்கையில் வாழும் தமிழின மக்களின் உண்மையான கோரிக்கை என்ன என்பதை இந்தியா அறிய முற்பட்டதுண்டா? அதற்கான வழி என்ன? இங்குள்ள தமிழக மக்களின் மன உணர்வை எழுச்சியை புறந்தள்ள நினைக்கும் இந்திய அரசை நாமும் நம் இன உணர்வோடு புறக்கணிக்க இயலாதா? ஏன் இயலாது?
இதோ வருகிறது நாடுளுமன்ற தேர்தல். இதில் அணைத்து கட்சியும் (எல்லோரும் தமிழர்கள் எனபது உண்மையானால்) இணைந்து இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் செய்து பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து இப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தால் இந்திய அரசு திரும்பி பார்க்காதா? ( நாற்பது எம் பி என்பது சாதரணமா?)
எனவே தமிழக அரசியல் கட்சிகள் வருகிற நாடுளுமன்ற தேர்தலில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தாமல் தேர்தலை புறக்கணித்து தங்களது தமிழின உணர்வை நிலை நாட்டுவார்களா?
உணர்வுடன்,
சொ. பன்னீர் செல்வம்
(Please forward my opinion to wherever/whomsoever possible or necessary. Thanks)
இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ?
எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?
அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள்.
எங்குமே இல்லாத “தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்” இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.
நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே…
உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ?
நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள்.
பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்
உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள்.
கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை.
சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே !
இதுதான் உங்கள் மனித நாகரீகமா ?
அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ?
அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும்
அதையே, அமை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈாத்தது.
ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ???
குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது “உண்மையை” ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ???
வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ???
நீங்கள் “மானாட மயிலாடுங்கள்” அங்கே “மனிதர்களை வேட்டையாடுகிறது” சிங்களப் பேரினவாத பேய்கள்.
உங்களுக்கு “அரசி” தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு “வாய்கரிசி” போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.
உங்கள் “ஜோடி நம்பர் வண்” கலக்குது, அங்கே எத்தனை “ஜோடிகள்” கலையுது ?
உங்கள் “ராமாயணம்” பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.
உங்களுக்கு “நீயா நானா ?” எங்களுக்கு “வாழ்வா சாவா ?”.
உங்களுக்கு “கோஃபி வித் அனு” எங்களுக்கு “பச்சைத்தண்ணி வித் செல்லு”.
உங்களுக்கு “சிரித்து வாழ்வோம்” எங்களுக்கு “சாவிலும் வாழ்வோம்”.
உங்களுக்கு “ஓடி விளையாடு பாப்பா” எங்களுக்கு “ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா”.
உங்களுக்கு “ராக மாலிகா” எங்களுக்கு “சாக முகாரி ராகமா?”.
உங்களுக்கு “அசத்தப் போவது யாரு!” எங்களுக்கு “அடுத்துப் போகப்போவது யாரு!”.
உங்களுக்கு “நடந்தது என்ன?” எங்களுக்கு “நடக்கிறது என்ன?”.
உங்களுக்கு “நீ பாதி நான் பாதி” எங்களுக்கு “உயிர் பாதி உடல் பாதி”.
உங்களுக்கு “ச ரி ங ம” எங்களுக்கு “சா நீ தமிழா”.
உங்களுக்கு “திரை விமர்சனம்” எங்களுக்கு “தெரு தரிசனம்”.
உங்களுக்கு “அதிரடி சிங்கர்” எங்களுக்கு “அதிரடி ஆட்லறி”.
உங்களுக்கு “அரட்டை அரங்கம்” எங்களுக்கு “கொலை அரங்கம்”.
உங்களுக்கு “சின்னத் திரை” எங்களுக்கு “வெற்றுத் தரை”.
உங்களுக்கு “ராணி மஹா ராணி” எங்களுக்கு “சா நீ தினம் சா நீ”.
அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.
உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.
அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.
மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.
உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.
Vinavu editor and staff should get a real job.They are wasting everyone’s time. All the efforts by the rabid Tamils/ DK/ Seriyar Kumbal will not save LTTE. Get over it, start doing something useful for humanity instead of dividing the society, blaming Brahmins for everything. Have you guys ever done an honst day’s work in your entire life instead of being a pain in the arse for the entire Tamil community? If Lankan army can wipe out the the TERROTIST LTTE, Tamils in Srilanka will have peace.
ada veenapona vidu thalai eathukku vazhthanum eathukku thittanum koda theriyala nee ellam karutthu sollalanu evan aluthan
தமிழின் என்று சொல்பவன் சிங்களவனுக்கு வக்காளத்து வாங்கமாட்டான். அவனது உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுமாயின். இல்லையென்றால்…. யாமறியோம் ராம ராமா அந்தக் கடவுளுக்கே வெளிச்சமாக்கும்……!! ?
அறிவாளிகளே ! வினவு தளம் உங்களைக் கூப்பிட்டுக் கூப்பாடு போடச் சொல்லவில்லையே.அது தனக்கு முடிந்ததை, தமிழ்த் தேசியத்திற்காக எதையோ செய்கிறதாக விட்டுவிட்டு போவதுதானே.ஒரு இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த இனத்தின் இருப்புக்காகப் போராட்டத்தையே வாழ்க்கையாக திணிக்கப்பட்டுள்ள நிலையிலே உயிரீகம் புரிந்தவாறு உலகமெங்கும் வாழும் தன்மாமுள்ள தமிழர்கள் , குரல்கொடுக்கும் வேளையிலே எமது இனத்துக்குள்ளேயே (?) சிலர் குசும்புத்தனமாக இருப்பதானது சிங்களவனை விஞ்சியதாக உள்ளதாகவே கொள்ளப்பட வேண்டும்.
Please sign this petition and FWD it
Appeal to Security Council to End the Humanitarian Crisis in Sri Lanka
http://www.petitiononline.com/sgsl159/petition.html
last 25 years Narayanamoorthy earned money from tamils blood.Now he is trying to drink tamils blood