முகப்புஉலகம்ஈழம்ஈழம்: ப.சிதம்பரம் என்றோரு ஓநாயின் ஊளை ! கருத்துப்படம் !

ஈழம்: ப.சிதம்பரம் என்றோரு ஓநாயின் ஊளை ! கருத்துப்படம் !

-

p_chidambaram_t

தமிழக அரசியல்வாதிகளிடம் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடு படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஈழத்திற்காக உண்மையாக குரல் கொடுப்பதை தவிர்த்து வருகின்றன என்ற போதிலும் அதையே திரித்து தாங்கள் வெட்டிக் கிழிப்பது போல காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. செத்து விழும் ஈழத்து மக்களின் பிணம் கணக்கின்றி செல்வது போல இவர்களின் நாடகமும் முடிவின்றி செல்கின்றது. தாங்கள் ஈழத்து மக்களை நினைத்து கண்ணீர் உருகுவது போல காட்டுவதற்காக நடத்தப்படும் காட்சிகள்தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் மேடையை ஆக்கிரமித்து வருகிறது.

அதனால்தான் தன்னெழுச்சியாக வளரும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் இவர்களின் கைபட்டு நீர்த்துப் போகின்றன. இந்தியாவின் ஆயுத உதவியும், ஆள் உதவியும் இலங்கை இராணுவத்திற்கு அளவின்றி வழங்கப்படுகிறது என்ற உண்மை இப்போது மக்களுக்கு தெரியும் என்பதால் தி.மு.க கூட்டணி கட்சிகள் அதை மறைப்பதற்கு தேவையான நாடகத்தை நாள்தோறும் நடத்தி வருகின்றன. மத்திய அரசுக்கு தந்தி, மனிதச் சங்கிலி, பிரணாப் பயணம், மீண்டும் மனிதச் சங்கிலி என்று  தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறது தி.மு.கவின் சுற்று அரசியல். இதில் வில்லன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் காங்கிரசு கட்சி கூட ஈழத்திற்காக போராடுகிறது என்று வெட்கமில்லாமல் தங்கபாலுவின் தலைமையில் அறிக்கைகள் விட்டு வருகிறது.

ஆனால் இலங்கைக்கு உதவும் மத்திய அரசின் கொள்கை சரியானது என்று மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் கொக்கரித்திருக்கிறார் ப.சிதம்பரம். போர் நிறுத்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரும் எந்த கோரிக்கையையும் வைக்க முடியாது என்றும், அவர்கள் ஆயுதங்களைத் துறந்துவிட்டு சரணடைவு மூலம் பேச வேண்டுமெனவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதைத்தான் ராஜபக்க்ஷே அரசு பேசி வருகின்றது. இந்த முகாந்திரத்தில்தான் முல்லைத்தீவில் சிக்கியிருக்கும் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றனர். ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசின் போர் நிறுத்தப் படவேண்டும் என்று நாம் கோரினால் இல்லையில்லை விடுதலைப்புலிகளை வீழத்தும் வரை போர் தொடரும் என்று இனப்படுகொலையை நியாயப் படுத்துகிறார்கள். மேலும் புலிகளை ஒழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் அழிக்கப்படுகிறது.

ஆயுதங்கள் வைத்திருக்கும் எந்தப் பிரிவினரோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு பேச முடியாது என்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார் ப.சிதம்பரம். ஆனால் இவர்கள் அரசு ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகளோடு பேச்சுவாரத்தை நடத்தியதும், எட்டு ஆண்டுகளாக நாக விடுதலைப்படையோடு நாகலாந்தில் பேச்சு வார்ததை நடத்தி வருவதும் எப்படி நடந்தது? இதுதான் நீதி என்றால் பாலஸ்தீனத்து மக்களோடு எவரும் பேச முடியாது என்றாகிறதே? இசுரேல் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதும், ஈராக்கில் அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதும் உண்மையாக இருந்தாலும் இவர்களை எதிர்த்துப் போராடும் மக்கள் பிரிவினர் ஆயுதங்களை ஏந்தினால் அது தவறு என்றால் எதுதான் சரி?

பிரச்சினை விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வைத்திருக்கிறார்களா, துறந்தார்களா என்பதல்ல. ஈழத்த் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சினை. இந்தப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் பல தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்றாலும் அது ஈழத்து மக்களின் பிரச்சினை. புலிகள் போரை நிறுத்தட்டும் ஈழத்திற்கு சுய நிர்ணய உரிமை அளிக்கிறோம் என்று பேசலாமே? முப்பது ஆண்டுகளாக ஈழத்திற்காக நடந்து வரும் போராட்டம் அகதிகளின் அலைவு எல்லாம் வேலை வெட்டியில்லாமலோ அல்லது ஆயுதங்களை விரும்பித் தூக்கவேண்டும் என்பதற்காகவா நடந்தது? ஏதோ துப்பாக்கி மீதான காதல்தான் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரிக்கும் கயமைத்தனத்தை என்னவென்பது?

ஆக அரசியல் ரீதியாக ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பதுவதோடு புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அம்மக்கள் சொந்த நாட்டிலேயே இலட்சக் கணக்கில் அகதிகளாக அலைவதும் போரில் மாட்டிக்கொண்டு உயிரைத் துறப்பதும், ஊனமாவதும்தான் இதுவரை உலகம் கண்டறிந்திருக்கிறது. இதற்காகத்தான் முத்துக்குமாரும், முருகதாஸூம் மற்றவர்களும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கி உலக நாடுகளை போரை நிறுத்துமாறு கெஞ்சுகிறார்கள். இவர்கள் யாரும் புலிகளுக்கு ஆயுதம் தூக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்பதற்காக உயிர் துறக்கவில்லை. உயிர் துறக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகத்தான் தங்கள் உயிர்களை அழித்திருக்கிறார்கள்.

பல ஆயிரம் பேரை களப்பலி கொடுத்திருக்கும் ஈழத்தின் போராட்டத்தை முடித்து விடுதற்கு இந்தியாவும், இலங்கையும் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் ப.சிதம்பரத்தின் திமிரான பேச்சு வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் இத்தனை பெரிய மக்களின் எழுச்சிக்குப் பிறகும் காங்கிரசு கட்சி தனது துரோகக் கொள்கையை கூட்டம் போட்டு பேசுகிறது என்றால் தமிழ் மக்கள் என்ன இளித்தவாயர்களா? எதிரிகளைக் கூட போரில் சந்தித்து வெல்ல முடியும். ஆனால் உள்ளிருந்தே துரோகம் செய்யும் இந்தக் கருங்காலிகளை ஈவிரக்கமின்றி வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது சுரணை இருக்கிறது என்று நீருபிக்க முடியும்.

காங்கிரசின் இந்த அடிவருடிக் கொள்கைதான் எல்லாக் கட்சிகளும் வெவ்வேறு அளவுகளில் ஏற்றுக் கொண்டு நடித்து வருகின்றன. கருணாநிதி ஈழத்திற்காக ஒன்றும் செய்யவில்லை என்று கூப்பாடு போடும் பா.ம.க ராமதாஸூ தற்போது மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து டெல்லிக்கு விரைந்து சோனியாவிடம் தாங்கள் நல்ல பிள்ளைகள் என்று உறுதி மொழி அளிக்க போயிருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் மந்திரி பதவியைக் கூட துறப்பதற்கு மனமில்லாத மருத்துவர் ராமதாஸூ தி.மு.க கூட்டணிக்கு எதிராக இலங்கைக்காக தனி கூட்டணி வைத்து ஆவர்த்தனம் செய்கிறார். தற்போது ப.சிதம்பரத்தின் மிரட்டல் பேச்சில் அய்யா நடுநடுங்கி தான் இந்திய அரசின் கொள்கையை எதிர்க்கவில்லை என்று தோப்புக் கரணம் போடுகிறார். அய்யாவின் கூட்டணியில் குஜராத்தின் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவும் உண்டு. டெல்லி ம.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் ஆட்சில் இல்லை என்ற தைரியத்தில் அத்வானியும் ஈழத்திற்காக முழக்கமிடுகிறார். நாளை இவர்களது ஆட்சி வந்தாலும் இதுதான் நடக்கப்போகிறது. இந்திய அரசின் கொள்கை என்பது கட்சிகளின் நலனுக்கு அப்பாற்பட்டு இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்காக தீர்மானிக்கப்படுகிறது. இதில் காங்கிரசு ஈழத்திற்கு துரோகம் புரிகிறது, பா.ஜ.க நன்மை புரிகிறது என்று நினைப்பது அறிவீனம்.

ப.சிதம்பரத்தின் பேச்சை வைத்துப் பார்க்கும் போது அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் வந்தால் விளக்குமாறு வரவேற்பு கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

( இந்தக் கருத்துப் படத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளோம். ஆங்கிலத்தில் வந்துள்ள கார்ட்டூனை நண்பர்களுக்கும் தமிழ் அறியாதவர்களுக்கும் அவர்களுது தளங்களுக்கும் அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

 


p_chidambaram_e

 1. எருமைக்கு பிறந்த சிதம்பரம் நாயே ஒழுங்கா உண்ட குடும்ப வள்ளல பாருடா….

 2. இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என சொல்லிக்கொண்டேயிருந்த தமிழின குழுக்கள், மாநில ஓட்டுக்கட்சிகளுக்கு நேற்று அழுத்தந்திருத்தமாக, திமிராக ராஜபக்சே மொழியில், தொனியில் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

  இந்திய அரசை அம்பலப்படுத்துவது தான், உண்மையில் பாதிக்கப்படுகிற ஈழத்தமிழர்களுக்கு நாம் செய்யும் தலையாய கடமை.

 3. எதுக்குத்தான் இந்தப் பாழாய்ப் போன வெள்ளைக் காரன் விட்டிட்டு போனானோ? இருந்திருந்தால் இந்தத் தறுதலைங்க தொல்லையும் மிச்சம். வெள்ளிக் கார பிகர சைட் அடிக்கவும் முடிந்திருக்கும்.

 4. முப்பது ஆண்டுகளாக ஈழத்திற்காக நடந்து வரும் போராட்டம் அகதிகளின் அலைவு எல்லாம் வேலை வெட்டியில்லாமலோ அல்லது ஆயுதங்களை விரும்பித் தூக்கவேண்டும் என்பதற்காகவா நடந்தது? ஏதோ துப்பாக்கி மீதான காதல்தான் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரிக்கும் கயமைத்தனத்தை என்னவென்பது?
  P Chidambaram thinks it is a game because he can’t earn money from Ealam people. He should br brushed away in the upcoming elections.

 5. பம்மாத்து(p)சிதம்பரம் பேச்சை
  கைமாத்து செருப்பால் அடிப்போம்!
  காங்கிரசு கசுமாலங்களை
  விரட்டியடிப்போம் ஓட ஓட!

  ஓட்டுப்பிச்சை கேட்டு இந்த நாய்கலெல்லாம்
  உங்கள் வீதிக்கு வருவார்கள்.
  சாணியைக் கரைத்து அடித்து விரட்டுங்கள்!

  ஏனென்றால் சாணியென்பது ஒரு நல்ல கிருமிநாசினி
  என்பது அனைவரும் அறிந்ததே!

 6. Hi

  உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

 7. இந்திய அரசை அம்பலப்படுத்துவது தான், உண்மையில் பாதிக்கப்படுகிற ஈழத்தமிழர்களுக்கு நாம் செய்யும் தலையாய கடமை.

 8. இவங்களுக்கும் ஒருத்தி பொண்டாட்டி என்ற பேரில் வடிச்சுக் கொட்டி, முந்தானையும் விரிக்கிறாலே. தூ! உன் படிப்பு என்ன, தகுதி என்ன? ராகுல் காந்திக்கு பிரதமர் பதவிக்கு நீ உன் இனத்தையே கொல்றாயா?

 9. அருமையான படம் ரவி,
  உங்கள் பாணி ஆருமை. சிறப்பான உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

 10. “Pirabaharan should lay down arms”.

  Bhiramana “BHIRAMMA’HATHI”, P.C, either he doesn’t have enough money in Swiss Bank Account or he thinks Pirabaharan is impeding the process of Tamil ethnic cleansing in Eelam. Obviously, Tamils know what P.C will gain if Pirabakaran lays arams down!!!

  Let us, Eelam Tamils, make the decision whether Pirabaharn should lay arms down or not.

  WE DO NOT WANT ANY CAPITALISTS’ WELL WISHER DECIDES WHAT PIRABAHARAN SHOULD DO.

  No matter how much we criticize about these unscrupulous people like P.C, S.Swamy, Congress etc., they continue to act the same repeatedly for their personal and family’s sake only. Every true tamil knows who is the perfect role model in Tamil Nadu for these ruthless people.

  I am sorry. I am not writing any fact that the Tamil Commuity is not aware of. I am just venting my anger in an acceptable manner. That’s all.

 11. ஆரம்ப காலத்தில் இலங்கை இனப்பிரச்சினையில் தலைமறைவாக இலங்கை அரசுக்கு உதவி வந்த இந்தியா இப்போது கொஞ்ச நாட்களாக தங்கள் சுய ரூபத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.சிதம்பரம் போன்று இன்னும் பலரின் கோர முகம் இப்போது தெரிய ஆரம்பித்துவிட்டது.
  தினமும் நூற்றுக் கணக்கான தமிழர்களை கொலை செய்தும் அங்கம் இழக்கச் செய்தும் காயப் படுத்தியும் கோர தாண்டவம் ஆடும் இலங்கை அரசுக்கு வெளிப்படையாகவே இவர்கள் வக்காலத்து வாங்கத் தொடக்கி விட்டார்கள்.
  காந்தியின் நாடு என்றும் காந்தியின் கட்சி என்றும் பாரத நாடு பண்புடைய நாடு என்றும் சொல்லி ஊரை ஏமாற்றி இவர்கள் இனி கதை பேச வேண்டியதில்லை.
  மிக மோசமான, மனிதாபிமானம் இல்லாத ,பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காகவும் அரசியல் பூகோள நலனுக்காகவும் பழி வாங்கும் நோக்கத்துக்காகவும் ஒரு இனத்தையே வேரோடு அழிப்பதற்கு இந்தியா துணை போகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
  அது மட்டுமல்ல ,தமது நாட்டுக் குடிமக்களான தமிழ் நாட்டு மக்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதும் எல்லோருக்கும் புரிகிறது.
  என்ன செய்வது, தமிழ் நாட்டு மக்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை.
  கீழே உள்ள செய்தியைப் படிக்கவும் இப்படி ஒரு ராணுவத் தலைமைக்குத்தான் இந்திய அரசு உதவி செய்கிறது.
  இந்திய மக்கள் வெட்கப் படவேண்டும்.

  வன்னியில் உள்ள மக்களை இலக்கு வைத்து சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றது. வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களை தெரிவு செய்து இளம் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் குழந்தைகள் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றனர்.

  இவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

  முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெருமளவு ஆண்களும் இளம் பெண்களும் விசாரணைகளுக்காக என படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு கதறியழுதபடி உள்ளனர்.

  இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ள பெண்கள் மீதான கொடுமைகள் ஒரு புறம் வேகமாக நடபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் வன்னியிலுள்ள மக்களை இலக்கு வைத்து பெருமளவு தினமும் படுகொலைகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்தவாரம் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உளரீதியாக சோர்வடைந்துள்ள படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில்

  “இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்”

  என்றும் கூறி படையினரை உசுப்பேத்தியுள்ளார்.

  இதனைக் கேள்வியுற்று வவுனியா முகாமுக்குள் அடைபட்டுள்ள மக்கள் பதறிப் போயிருப்பதாக வவுனியாவில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது அவர் இதனை எம்மிடம் தெரிவித்தார்.

  http://www.sankathi.com/index.php?mact=New…nt01returnid=51

 12. Who is this Chidambaram? Does he know anything about FINANCE? Its India’s fate, that Crucial Post’s are given to IDIOTS like Chidambaram. He’s a total failure as FINANCE MINISTER. Now he has been adored with HOME MINISTRY. Only GOD can save India from these type of MORONS.

  HOMO Chidambaram should be kicked off.

 13. Who broke the ceasfire and started the war? Tigers are only on the defensive. So the Sri Lankan Government should stop the war ! This ignorant view of Cithaipambaram shows that the Congress does not want the war against the tamils to stop, because he knows that the tigers will never stop defending! There is no other reason for proscribing LTTE in India except that elusive argument called Rajiv Khan (his father’s real name).

 14. தோழரே வணக்கம்.
  கீழ் உள்ள லிங்கில் போய் பாருங்கள்.
  வினவு கருத்து படம்
  அனுமதி இல்லாமல் எடுத்த்காளப்பட்டுள்ளது.
  அதை சுடிக்காட்டி நான் அங்கே இட்டுள்ள பின்னுடத்தை இங்கே கீழே கொடுத்துள்ளேன்.

  சுட்டி
  http://eerththathil.blogspot.com/2009/02/blog-post_8982.html

  இந்த கேலிசித்திரத்தை எங்கேயிருந்து
  எடுத்துள்ளீர்கள்?
  இது வினவு தளத்தில் வெளியிடப்பட்டது ஆனால் இங்கே எந்த விபரமும் இல்லை, எந்த‌ லிங்கும் கொடுக்கப்படவில்லை இல்லை! ஏன் இப்படி
  தெளிவுபடுத்துங்கள் நிலவன்.

 15. ரஜா மீதான இ.பி.டி.பியின் விமர்சனம்
  விபச்சாரம் ஆண்பால் பெண்பால்:
  இதற்கு சமூகம் கொடுக்கும் அர்த்தம் என்பது பலவகைப்படுகின்றது. ஆண்பெண் உடல்வியாபாரம் என்பதற்கு அப்பால் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அறியாதவர்களாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பது என் கருத்து. இருப்பினும் உங்களது சிந்தனை மிக ஆழ்ந்ததாக காட்டுவதற்காக இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது என நம்;புகின்றேன்.

  எடுப்பது துடக்கென்று விலக்கிவிட்டு இரயாகரனின் கூற்றின் படி இந்தியாவின் கைகூலிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்திருந்த வரலாற்றை மறந்துதான் போனாரா?… (இவ்வாறு பயிற்சி எடுத்தார்களா எனத் தெரியவில்லை இருப்பினும்) ஒரு விடுதலைப் அமைப்பில் பலவிதமான சக்திகள் இருந்திருக்கின்றது. அவ்வாறே அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் பரட்சிகர சக்திகள் இருந்திருக்கின்றனர். இவர்களின் ஒன்றிணைப்பு என்பது அவசியமானதாகும். இவ்வாறான சக்திகள் மத்தியில் தொடர்புகள் உதவிகள் பெறுவதில் என்ன தவறிருக்கின்றது. நீங்கள் பயிற்சியைப் பற்றி கதைக்கப் போய் தோழமை பற்றி கதைப்பதாக நீங்கள் எண்ணத் தேவையில்லை. அன்றைய காலத்தில் பல திசைப் பிரிவுகள் இயக்கத்தினுள் இருந்தன. இவர்களிடையேயான ஒற்றுமை என்பது தலைமைகளின் சுயநலப் போக்கிற்கு அப்பாற்பட்டு இருந்தது. சுயநலமற்றவர்களின் கூடாரமாகவும் இருந்தது. இதனைத் தவிர வரதர்> டக்கிளஸ்> சுரேஸ் போன்றவர்களின் பதவிவெறி குழிபறிப்;பு இவைகளும் இருந்தன. இந்த முரண்பாடுகளுக்கு நடுவே இருந்து நட்புறவு செயற்பாடுகள் உங்களுக்கு துடக்காக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

  “சமூக ஏகாதிபத்தியம் என்றும்இமுதலாளித்துவத்தை நோக்கிய சீனா என்றும் அன்று ஒருவருக்கொருவர் முரண்பட்டு கொண்ட பாரம்பரிய இடது சாரிகள் பலரும் இன்று தம்மை சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்தி வருகிறார்கள். ” இவ்வாறான முரண்பாடுகள் வரலாற்றில் இருந்தது. இதனை அறியாது நீங்கள் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்வாறான முரண்பாடுகளிடையேதான் புலிகளுக்கு ஏகாதிபத்தியம் எம்.ஜி.ஆர் மூலமாக நிதிவழங்க> இந்திய ஆட்சியாளர்கள் மற்றைய இயக்கங்களுக்கு உதவி புரிந்தனர். சமூக ஏகாதிபத்திய வரையறையானது 1990 பிற்பட்ட காலத்தில் உலகப் பிரிப்பதற்கு அந்த வரைவிலக்கணம் அவசியமற்றதாகி விட்டன.
  நுனிப்புல் மேயவில்லை:
  ரயாகரன் நுனிப்புல் மேயவில்லை. அவருக்கு ஆழந்த மார்க்சீய படிப்பு பரீட்சயம் இருக்கின்றது. முடிந்தால் மார்க்சீயம் பிழையானது என்பதை நிரூபியுங்கள்.
  ரயாகரன் கதைப்பது மார்க்சீயம் தான் அது ஏன் மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகின்றது என்றால் மார்க்சீய புரிதல்களை தனிநபர் அபிலாசைகளின் பொருட்டான புரிதலில் அடிப்படையில் இருந்து வந்தவையல்ல. மாறாக மார்க்சீய வரலாற்று பொருள் முதல்வாத> இயங்கியலில் இருந்து புரிந்து கொள்ளப்பட்டதாகும்.
  தம் இருப்பை பேணிக் கொள்ள புலிஆதரவு என்றும்> புலியெதிர்ப்பென்றும் மார்க்சீயம் பேசியவர்கள் குடிகொள்ள ரயாகரன் போன்றவர்கள் தனித்தனி தீவுகளாக இருந்து ஈழத்தில் மார்க்சீயத்தை திரித்துக் கூறுபவர்களுக்கு எதிராக கடந்த 20 வருடங்களாக எழுதிவருகின்றார்.
  “மாக்சிச சித்தாந்தம் என்பதும் ஒரு இயங்கியல் நோக்குடையது.அந்த வகையில் காலம்ää சூழல். இவைகள்தான் எவ்வாறு மாக்சிச சித்தாந்தத்தை பிரயோகிப்பது என்பதை கற்றுத்தர வேண்டும்” … இவற்றை புரிந்து வைத்திருக்கும் நீங்கள் ஈழப் போராட்டவரலாற்றில் நடைபெற்ற எதிர்ப்புரட்சிகரமான நடவடிக்கைகளை சீர்து}க்கிப் பாருங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஈ.பி.ஆர்.எல்.எவ் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டங்களை எடுத்துப் பாருங்கள். இந்தியாவில் இருக்கின்ற போது நக்சல்பாரி அமைப்புக்களின் வெளியீடுகளை நீங்கள் மறைத்துப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தடைசெய்யும் நிலைக்கு இருந்த போது இந்தியாவின் பக்கம் சார்ந்தீர்கள்எ என்பதை மறந்து விட்டீர்களா?
  நீங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிந்தவர்கள் உங்களால் என்ன புரட்சியை சாதிக்க முடிந்தது. ஆனாலும் நீங்கள் கூறும் உலகப்புரட்சி என்ற கருத்தியலுக்கு இங்கு யாரும் எதிரனாவர்கள் என்பது அர்த்தமல்ல.
  நம்பிக்கை கொண்ட நீங்கள் புலிகளிடம் சென்று நாமும் சேர்ந்து போராடுவோம் என்று து}து அனுப்பியிருக்கமாட்டீர்கள்.
  பின்னர் பிக்குணி சுட்டுக் கொல்லப்பட்டதும்>
  பிரேமதாசாவின் அன்பு கிடைத்தது. வரலாறு. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். மக்களை நம்பி அல்லவா போராட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும். எந்தப் போராட்டமும் எதிரிகளின் தயிவில் நடைபெற முடியாது. எமது பலத்தில் தங்கிநின்றே போராட்டத்தை கொண்டு செல்ல முடியும். இதை

  “அதில் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதான பாத்திரம் வகித்திருந்தவர் என்பதும் உண்மை. ” தனிநபர் வழிபாடை அன்று எந்த இயக்கத்தவரையும் விடஈ.பி.ஆர்.எல்.எவ் இனர் எதிர்த்துவந்தனர். இவற்றிற்கு நேர் எதிராகத் தான் இன்று டக்கிளஸ் வழிபாடு இருக்கின்றது. இன்று புலிகள் தலைவனுக்கு நிகரான N

  ஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப போராளிகளின் தானும் ஒருவர் என்பதால் இன்று மக்கள் அனுபவித்து வரும் அவலங்களுக்கு தானும் தார்மீகப்பொறுப்பை எடுப்பதாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்கமாகவே கூறி வருகின்றார். ”
  சரி இது உண்மையாயின் வையுங்கள் பிரச்சனைக்கான தீர்வை
  யுத்தத்தை நிறுத்தக் கோருங்கள்.
  சில பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அதிகார வர்க்கத்திற்காக ஒரு மக்கள் கூட்டம் அழிய வேண்டுமா? இவைகள் நீங்கள் படித்த மார்க்சீயப் புத்தகத்தில் இல்லையா? டக்கிளஸ் வசதிக்காக மறைத்துவிட்டாரா?
  புரட்சி பேசிய ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்கள் தமது உயிருக்காக தப்ப வேண்டிய நிலை இருக்கவில்லையா? டேவிட்சன்> ரமே9; போன்றவர்கள் கடத்தப்படவில்லையா?
  ஈழப்போராட்டத்தின் சிந்தரவதைகளின் பக்கத்தை கொண்டுவந்த கேசவன் புளொட்டின் கொலை வெறிக்கு உள்ளாகவில்லையா?
  நெப்போலியன் கொல்லப்படவில்லையா?
  புலிகளால் செல்வி> மணியண்ணன்> கேசவன்> ரமணி> விசு> போன்றவர்கள் கொல்லப்படவில்லையா? இவ்வாறு இருந்திருந்தால் ரயாவும் மண்ணில் தான் புதைந்திருப்பார். மேலும் தனிமனித பாத்திரம் என்பது ஒரு எல்லைக்குள் தான் மட்டுப்படுத்தப் படுகின்றது. இவைகள் ஒரு மக்கள் சக்திகள் தமது அடக்குமுறையை உணர்கின்ற போது வெளியில் இருந்து கொடுக்கப்படுகின்ற சிந்தனை வடிவமும் முழுநிறைவடைகின்றது. ஆகவே ரயாவெளிநாட்டில் இருப்பதால் உங்கள் துப்பாக்கிகளின் குண்டு மிகுதியாகியிருக்கின்றது.
  “தானும் வெளிநாடொன்றிற்கு வந்து புத்தகங்களை புரட்டிப்பார்த்து விட்டு நிறம் நிறமாக கட்டுரைகள் வரைந்திருக்கலாம். “இவற்றைப் பார்க்கின்ற போது புதுவை ரத்தினம் வெளிநாட்டவர்களைப் து}ற்றியெழுதிய கவிதைதான் நியாபகம் வருகின்றது. பரவாயில்லை அதிகாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் வெளிநாட்டில் உள்ளவர்களைப் பற்றி இழிவாக கருத்துக் கூற ஜனநாயகம் இடம்கொடுக்கின்றது.
  இவர்கள் கொண்டிருப்பது அரச சார்பு நிலைப்பாடு என்பதற்கு அப்பால் அரசோடு ஒரு பொது உடன்பாடு என்பதுதான் இதன் அர்த்தம். ”
  சொந்த மக்கள் சாகக் கண்டும் காணாது இருப்பதா?
  “குறிப்பிட்ட தமிழ் தலைவர்கள் எவரும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டாம் என்று எப்போதாவது கூறியிருக்கிறார்களா?….அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்விற்கு குறுக்காக இவர்கள் யாரும் விழுந்து படுத்த வரலாறு உண்டா?… இல்லை!
  அதனைத் தான் நாமும் சொல்கின்றோம் எதிரி வைக்கின்றான் இல்லை ஏமாற்றுகின்றான் என்று நாம் கருதுகின்றோம். புலியெதிர்ப்பாளர்களாகிய நீங்கள் தீர்வுத் திட்டத்தை வையுங்கள். தீர்வுத் திட்டத்தில் முன்வைத்து உங்களை நிரூபியுங்கள். இன்றைய நிலையில் இதுகூட அவசியமானதுதான். வையுங்கள் தீர்வுத் திட்டத்தை…….!
  “யாருடன் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமோ அவர்களுடன்தான் அவர்கள் பேசி வருகின்றார்கள். ”
  இது எவ்வாறு சாத்தியமாகின்றது.? குறிப்பாக ராஜபக்சகுடும்பத்தின் ஆதிக்க முகம் என்பது சந்திரிக்காவின் ஆதிக்க முகத்தை விட மாறுபட்டது. இவர்கள் இன்று ஜனநாயக விழுமியங்களை நசுக்குவதில் ஒப்பிட்ட ரீதியில் கடுமையாக செயற்படும் ஒரு அரசாங்கம். இந்த அரசாங்கத்திடம் இருந்து உங்கள் கிழக்கு சகா கோரிக்கை விடுகின்றார். பொலீஸ்படை வேண்டும்> காணி> வரி விதிப்பு போன்ற உரிமை வேண்டும் எனக் கூறுகின்றார் என்ன நடந்தது. மறுபடியும் பிரித்தாளும் தந்திரம் கருணா எதிர் பிள்ளையான் என்ற நிலைக்கு மாற்றம் கட்டுள்ளது. (இவர்களுக்குள் இருக்கும் உட்பூசல் ஒருபுறமிருக்க) உங்களால் சாத்தியமாகின்றவைகள் ஏன் கிழக்குவிடிவெள்களிகளால் முடியவில்லை. இது என்ன மாயாஜாலம் எனக் கூறுவீர்களா?

  யாழில் நடைபெற்ற கொலைகள் இருக்கின்றன .
  தீவுப்பகுதியில் இடம்பெறும் பலவிரோதச் செயல் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். நாமும் தீவுப் பகுதி மாத்திரம் அல்ல இலங்கையில் பலபாகங்களில் உள்ள மக்களின் உணர்வலைகளைப் புரிந்துதான் எழுதுகின்றோம். புலியெதிர்ப்பு அணி> புலிகள்> அரசபடை இவைகளுக்கிடையோன உறவு எவ்வாறு இருக்கின்றது என்ற கள நிலையை சரியாக புரிந்து கொண்டுதான் எழுதப்படுகின்றது. மக்களுடன் பேசாதவர்கள் அல்ல. மக்களுடன் அன்றாடம் அவர்களின் அவலநிலையை அறியாது எதனையும் எழுதவில்லை.
  “தயாகத்தில் வாழும் உங்கள் உறவுகளிடம் ஒரு முறை பேசிப்பாருங்கள். அந்த மக்கள் நீங்கள் கற்பனை செய்யும் உலகப்புரட்சிக்காகவா ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்?.. மக்களின் அழிவை போக்கத்தான் யுத்த நிறுத்தத்தைக் கோருகின்றோம்.

  “சோவியத்தில் நடந்த 5 ஆம் ஆண்டு புரட்சியில் இருந்து 17 ஆம் ஆண்டு புரட்சி வரை பாராளுமன்றத்தில் தங்கியிருந்த விளாதிமிர் இலியிச் லெனின் உங்களுக்கு சந்தர்ப்பவாதி.யப்பனை எதிர்த்து போராடுவதற்காக சீனத்து தேசிய முதலாளித்துவ சக்திகளோடு கரம் கொடுத்து நின்ற மாவோ சேதுங் அவர்களும் உங்கள் பார்வையில் சந்தர்ப்பவாதி! அதற்காக எமது தேதசத்து சூழலோடு இவைகளை ஒப்பீடு செய்து விட முடியாதது. ” முன்னர் பிரேமதாசாவுடன் குடித்தனம் நடத்திய புலிகள் இதைத்தான் சொன்னார்கள். குடித்தனம் நடத்த வேண்டும் என்றால் நீங்களும் மாவோ> லெனின் என உதாரணம் காட்டலாம்.
  மக்கள் சலுகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா?
  ஒரு அரசாங்கம் மக்களுக்கான பாதுகாப்பு> வேலை> உணவு வழங்குவது அவசியமானதாகும். இவற்றை கொடுக்கத் தகுதியில்லாத நிலையில் இருக்கின்ற போது பிச்சை எடு என்று கூறுவது என்ன நியாயம். அரசாங்கம் என்பதே ஒரு ஒடுக்குமுறைச் நிறுவனம் அது மக்களை அடக்கும் அதனிடம் கேட்டு வாங்குவதால் சில பணக்கட்டுகள் தனிநபர்கள் பக்கம் மாறுகின்றது. இதனை சரியாகத் தெரிந்துதான் கூறுகின்றேன்.
  “புலிகள் உட்பட தமிழ் பேசும் தலைமைகள் ஒரு ஆராக்கியமான சூழலை நோக்கி நகர்த்த முற்பட்டிருந்தார்களா என்பதுதான் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கேள்வி. ”
  “1.இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!
  2.புலிகளே! மக்களை விடுவி!
  3.சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!
  4.புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!
  என்பவை உள்ளடங்கியது. இதை புலிகள் இன்ற ஏற்பது> காலம் பிந்திய ஒருநிலை. இதனால்இ யுத்தத்தை நிறுத்தாது அல்லது தற்காலிமான நிலைக்குள் இவை நிறைவேறியுள்ளது.
  தவறான காலத்தில்இ சர்வதேச நெருக்கடிக்குள் இந்த நிலைக்குள் புலிகள் வந்தது என்பதுஇ தவறான கோசத்தினதும்இ அதன் மூலமாக முன்னெடுத்த போராட்டத்தின் ஒரு விளைவாகும். தமக்குத்தாமே விலங்கை போட்டனர்.(hவவி://றறற.வயஅடைஉசைஉடந.நெவ/னைெநஒ.pரி?ழிவழைnஃஉழஅ_உழவெநவெரூஎநைறஃயசவiஉடநரூனைஃ5287:2009-02-25-09-13-19ரூஉயவனைஃ277:2009)
  தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சர்வதேச சதி பற்றிய எச்சரிக்கையை உணர்கின்றோம். இதனை மக்களிடத்தில் கூறுகின்றார். ஆனால் சர்வதேச சதியில் எமது உரிமைகள் நசுக்கப்படப் போகின்றது என்பதை நீங்கள் உணரவில்லை. இவைகள் உங்களுக்கும் ரயாகரனுக்கும் உள்ள பெரும் வித்தியாசம்.
  இந்தக் கோரிக்கைகள் எல்லாம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுவதற்காக அல்ல. அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்வது என்பது பற்றிய தேவையில் இருந்து வருகின்றது.
  ஒடுக்குபவர்களிடம் இருந்து எமக்கு எதுவும் சும்மா கிடைக்கப் போவதில்லை. எமக்கு வேண்டியது சில சலுகைகள் அல்ல. உரிமை!
  இன்று மக்கள் யாருடனாவது சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலை இந்த பரிதாபகரமான நிலையானது ஒன்று அவர்கள் விரும்பி ஏற்றது அல்ல. நிர்ப்பந்தம் அரச அடக்குமுறையாலும்> புலிகளின்> ஏன் உங்களின் அடக்குமுறையாலும் ஏற்பட்டதே. உங்களை பயம் கொள்ளாது இருக்க முடியுமா? மக்கள் உங்களைப் பார்த்தும் பயப்படுகின்றார்கள். இதனை நாம் கண்ணால் கண்டோம்.
  மேலும் ரயாகரன் மீது அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிமனித தாக்குதல்கள் உங்கள் எழுத்துக்களில் தெரிகின்றது. இவைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. ரயாகரன் நாட்டில் இருந்திருந்தால் உங்கள் துப்பாக்கிக்கு இரையாகியிருப்பார்.
  ஒரு அமைப்பு உருவாக்கம் என்பது தனி ரயாகரன் அல்லது எக்ஸ் என்ற நபர்களை தங்கியிருப்பதில்லை. வரலாறு தனது தேவையின் நிமித்தம் உருவாக்கிக் கொள்ளும். வாரும் வந்து அமைப்புக் கட்டும் என ஏளனமாக எழுதுவதன் மூலம் உமது உளவியல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
  புலியெதிர்ப்பணிகளே தீர்வை முன்வையுங்கள். இதுதான் எம்முடைய தீர்வுத் திட்டம் என முன்வைக்கின்றது கூட இன்றைய நிலையில் அவசியமானது. வையுங்கள் நாமும் நியாயத்தின் பக்கம் நிற்போம்.
  எமக்கு வேண்டியது பிச்சை அல்ல உரிமை!
  வாழும் உரிமை வேண்டும் எனவே யுத்த நிறுத்தத்தை அறிவி!
  உணவு வேண்டும் நிவாரணம் கொடு!
  எமக்கு தெரிவு செய்யும் உரிமை வேண்டும் புலிகளே ஏகக் கொள்கையை விடு!
  தீர்வு வை> பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரி!
  ஆயுதங்களை காட்டி எம்மை பயமுறுத்தாதே – முடக்கு ஆயுதங்களை !
  எம்உறவுகளைப் பிரிக்காதே எமது உறவுகளுடன் இணையவிடு!

 16. போர் நிறுத்தம் என்று பிரணாப் கூறி உள்ளார். ஆனால் எப்போது போர் நிறுத்தம், எத்தனை நாளில் என்று முதல் அமைச்சர் கேட்க வேண்டும். இலங்கை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்கிறார்கள்.
  அப்படியானால் சீனா, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தால், அது இந்தியாவுக்கு ஆபத்து இல்லையா?, தனி ஈழம் மலர்ந்தால் நமக்கு நட்பு நாடாக இருக்கும். எனவே இந்தியா வெளியுறவு கொள்கையை மாற்றி கொள்ள வேண்டும்.

  காங்கிரஸ் பணம் இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறியது ஆனால் உண்மை நிரூபிக்கபட்டவுடன் ஒத்து கொண்டது .
  காங்கிரஸ் ஆயுதம் இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறியது ஆனால் உண்மை நிரூபிக்கபட்டவுடன் ஒத்து கொண்டது .
  காங்கிரஸ் இந்திய ராணுவம் இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறியது ஆனால் உண்மை நிரூபிக்கபட்டவுடன் ஒத்து கொண்டது .

  இப்பொது பாகிஸ்தான் பிரச்சனைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்கிறது இது உண்மையா? இல்லை வழக்கம் போல் புலுகல . பொய், பித்தலாட்டம் புழுகல் எல்லாம் சந்தையில் தான் பார்த்தோம். இப்போது பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் சரளமாக புளுகுகிறார்கள். எது எப்படியோ இது இந்தியாவிற்கு நல்லது அல்ல

 17. Thamilnaddu Kankirasukkararkale Ninkalellam
  Nakkiththan Pulaikkanuma?
  Unkalukku Bondaddi,Billaikal Allam irukkuthane
  Athukalaiyum Enkenka Nakkavidukirirkal. Naykale
  Thirunthamaddirkala.Kanthiyin Baratha thesam inru
  Iththaliyin Bannithesamaka Marividdathe?
  Eda Thonkabalu, Eda Sithambara, Eda Sutharsana,
  Thippori Sonna Thamilnaddu Peymakan Vasa,Ada
  Alponsu, Unkalukkellam Vellaveddi Ethukkada?
  Naykala, Urinsuboddu Nillunkada.

 18. ஈழ தமிழர்கள் இனி இந்தியாவை தந்தையர் தேசம் என்ற உயரிய அந்தஸ்தை குடுக்க வேண்டாம். இங்குள்ள தமிழனுக்கும் அடிமை வேஷம் தான் மிஞ்சயுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க