முகப்புஉலகம்ஈழம்ரகுமானுக்கு ஆஸ்கார்! ஆழ்ந்த அனுதாபங்கள் !!

ரகுமானுக்கு ஆஸ்கார்! ஆழ்ந்த அனுதாபங்கள் !!

-

இந்து தேசியவெறியும்
இசுலாமியர் எதிர்ப்பு வெறியும்
பூத்துக்குலுங்கும் ‘ரோஜாவின்’
பார்ப்பன மணம் பரப்பி,

சிவசேனையின் செய்திப்படம்
மணிரத்தினத்தின் கரசேவை
பம்(பா)பொய்க்கு ஒத்து ஊதி,

இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழாவில்
வந்தே மாதிரத்தை
காந்தியின் கைராட்டை சுதியிலிருந்து
கழற்றி வீசி
சோனி இசைத்தட்டில் சுதேசி கீதம் முழக்கி,
ஒரு வழியாக இசைப்புயல்
அமொரிக்க கைப்பாவைக்குள் அடங்கிற்று.

மும்பைக் குடிசைகளின் இதய ஒலியை
ரகுமான் “ஜெய் ஹோ! ஜெய் ஹோ!” என பிய்த்து உதறிவிட்டார் என
தெருவில் வந்து கூத்தாடும் தேசமே!
பீகார் தொழிலாளிகளை ராஜ்தாக்ரே கும்பல்
பிய்த்து உரித்தபோது.. ” அய்யகோ..!” என்று அலறியபோது
எங்கே போனது இந்தியப் பாசம்?

அல்லா ரக்கா ரகுமானின்
ஆர்மோனிய சுரப்புகளை அலசி ஆராய்ந்து
உள்நுணுகி உருகி விவாதிக்கும் அன்பர்களே,
இசுலாமியர்களின்
ஹார்மோன் சுரப்பிகளையும் கருவறையிலேயே தாலாட்டுகளையும்
திரிசூலங்கள் குதறி எடுத்தபோது,
இந்த அளவு இறங்கி வந்து விவாதித்ததுண்டோ நீங்கள்?

இசையிலே கொண்டுவந்து ஏன்
அரசியலை நுழைக்கிறீர்கள் என்று ஆதங்கப்படுகிறீர்களோ!
ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் பாடலுக்கு மட்டுமல்ல
அவர் மௌனம் காக்கும் அரசியலுக்கும் சேர்த்தே
ஆடுகிறது உங்கள் தலை.

மழலைச் சொல்லை தீய்த்த எறிகணை…
கருச்சிதைந்த பெண்ணோடு தெறித்த கரும்பனை..
இறந்த பின்னாலும் பெண்னை புணர்ந்திடும் இனவெறி…
ஈழத்தின் துயரத்தை இசைக்க முடியாமல்
காற்றும் மூர்ச்சையாகும்…. இந்தச் சூழலில்
ஒரு தமிழனென்ற முறையில் தமிழில் பேசிய இசைப்புயல்
ஈழமக்கள் எரியுமிந்த வேளையில்
விருது வேண்டாமென்று கூட அல்ல…
வருத்தத்தோடு வாங்கிக்கொள்கிறேன் என்றாவது
பேசியிருக்கலாம்தானே!

“எல்லா புகழும் இறைவனுக்கே” என்பவர்
ஆஸ்கார் புகழுக்காக அடக்கி வாசிக்காமல்
“வராக நதிக்கரையோரம்” உருகும் இசைப்புயல்
இசுரேல் இனவெறியால் மேற்கு கரையில்
உயிர் உருகி உருக்குலையும் பாலஸ்தீன மக்களுக்காக
அமெரிக்க மேலாதிக்கத்தால்
நரம்புகள் அறுக்கப்பட்ட இசைக்கருவிகளாய்
தமது மூச்சையும் இசைக்கமுடியாமல் பலியாகும்
ஈராக்கிய மக்களுக்காக….. ஒரு இசுலாமியன் எனுமடிப்படையில்
ஆஸ்கர் விருதை வேண்டாம் என்று கூட அல்ல…
ஆழ்ந்த சோகத்தோடு ஏற்கிறேன் என்றாவது
சொல்லலாம் தானே?

இந்த… சாதி, , இனம், அரசியலுக்கெல்லாம்
அப்பாற்பட்டது ரகுமானின் இசை அனுபவம் என்போரே!
சரிதான்!
இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு
உலகமயத்தின் சரக்காக இசைப்புயல்…
சரக்கு சந்தையைப் பற்றியல்லாமல்
வேறு எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை
உண்மைதான்!

– துரை சண்முகம் –

 

 1. Rahman is a middle-class upper caste Indian. It is general knowledge that this section of the community tries to please all and stays out of controversy. I can’t say that to be right or wrong. As an individual, he has many responsiblities.

  But he has used his music to spread harmony. He has used his music to show that Islam is not like the west portrays it. He has tried his best to be secular.
  He has done his best to remain anonymous, yet give charity.

  Right now, there is a crowd around Rahman. But when he falls, all will run and leave. That is what he has said happened to his father. Rahman knows the tricks and trades of the world since age 9. Even those around him, other than his family, he will be able to judge. Including the upper class that wants to use his name and fame to portray themselves and the country.

 2. //இந்த… சாதி, , இனம், அரசியலுக்கெல்லாம்
  அப்பாற்பட்டது ரகுமானின் இசை அனுபவம் என்போரே!
  சரிதான்!//

  அடிமைக்கு
  சாதியில்லை
  மதமில்லை
  ஏன் வெட்கம் கூட இல்லை

  அப்பாற்பட்டது இசை மட்டுமல்ல
  அந்த இசையை எழுப்ப
  உதவிய அடிமைத்தனமும்தான்.

 3. Dei machchaan kalakittey.. sema po.. pirichchu maenjuttey.. aamaam.. nee vaazhkai la ennaththa pidunginaadha.. idhai ezhutharey??? naalu blog ippadi ezhuthinaa booker prize kidaikkum nu evanaachchum sonnanaa??? 😛 😛 😛 😛 kaila keyboard wordpress la account um irundhaa ennaththa vaena ezhuthalaam nu sollirukkaangalaa???

 4. அடிமைக்கு
  சாதியில்லை
  மதமில்லை
  ஏன் வெட்கம் கூட இல்லை
  அப்பாற்பட்டது இசை மட்டுமல்ல
  அந்த இசையை எழுப்ப
  உதவிய அடிமைத்தனமும்தான்.

 5. Great words from Durai Shanmugam. Giving a complete different perspective. But it is quite hard for Rahman or his fans to think that way. I feel Rahman’s music always lacks emotions and sound metallic, artifical with no life and so is the taste of his fans too, so they thinking this way is ruled out.

  I greatly appreciate the resitation and it is a real blow to his fans…..

 6. அருமயையான கவிதை
  தொடர்ந்து தோழர் துரை.சண்முகத்தின் கவிதைகளை வெளியிடுமாறு கோருகின்றேன்.
  ——————————————-

  ஈழத்தில் ரத்த ஆறு ஓடி கொண்டு இருக்கிறது.
  காசாவில் இஸ்ரேலின் மனித படு கொலைகள் தொடர்கின்றது
  வறுமையில் விவசாயி வாழ்க்கை புதைக்கபடுகின்றது

  “எல்லா புகழும் இறைவனுக்கே”
  “ஜெய் ஹோ! ஜெய் ஹோ!”

  • ஏய் ம க இ க ! உன் ஜென்ம புத்தி, செருப்பால அடித்தாலும் போகாது டா

 7. ஸ்ரிரம் , டேய் பரதேசி, நாய் சோறு திங்கறவனே, ஆகாவளி நாரடிச்சிட்டடா!

  ஆமாம் இப்டியெல்லம் வினவுல போயி எழுதுனா செருப்படி கிடைக்கும்னு யாராவது சொன்னங்களா?
  டேய் இண்டம் புடிச்சவனே !
  நீ வாழ்க்கையில் என்ன புடுங்குனன்னு மொதல்ல சொல்லுடா ?
  அப்புறம் தோழர் துரை.சண்முகமும் ம.க.இ.கவும் என்ன பண்ணுனாங்கனு நான் சொல்றேன்?
  சோறு திங்கற ஆளா இருந்தா பதில் சொல்லு உன் போன் நம்பரும், அட்ரசும் கொடு நேர்ல நான் “விளக்கம்” கொடுக்கறேன்.

  கம்ப்யூட்டர் இருந்தா என்ன வேணா எழுதிடுவியா???????????
  ——————————————————————

  ரகுமானின் இந்த அவார்டு வாங்குனதுக்கு இவனுங்களுக்கு எதுக்கு இவ்ளவு சந்தோசம்,
  எல்லாம் ஒரு பேஷன்,

  எங்கேயோ நாலஞ்சு வெள்ளைக்காரன் அவனுக்கு புடிச்சமாதிறி பாடுனதுக்கு ஒரு சிலைய பரிசா கொடுத்துருக்கறான். இதுக்கு துள்ளி குதிக்கறவனெல்லாம்
  ஒன்ணு முட்டாள் இல்லைனா திருட்டுபசங்க!

  ரகுமானோட “ஜெய் ஹோ! ஜெய் ஹோ!” பாட்ட தெருவுல பாடுனா பத்து ரூபா கூட வசூல் ஆகாது!
  இதெல்லாம் நம்ம ரசனைக்கு ஒத்து வராதுப்பா! நமக்கு பறை இசைதான் சரி! அதுவே நம்மை ஈர்க்கும் உயார்ந்த இசை! கஷ்டப்பட்டு “ஜெய் ஹோ! ஜெய் ஹோ!” பாட்டை ரசிக்காதீர்கள்.
  அது நம்மை நாமே ஏமாற்றும் சுய இன்பம்.

 8. சரி தான்… நானும் யோசிச்சு யோசிச்சு பாக்கிறேன்… எதுக்காக இந்த ஆசுகர் பட்டம்ன்னு தெரியவே இல்லை… இதுக்கு முன்னாடி ஏ.ஆர் இரகுமானே போட்ட பல பாட்டுக்கள் இதை விட பல மடங்கு நல்லபடியா வந்திருக்கு… ஆனா அதுக்கெல்லாம் கிடைக்காத பரிசு இதுக்கு கிடைச்சிருக்குன்னா என்ன பொருள்…. யாராவது சொல்லுங்களேன்…

 9. அன்பு, இதெல்லாம் அரசியல்மா! இப்ப அமெரிக்கா திவாலானப்புறம் அமெரிக்கா சினிமா கம்பெனிகாரனெல்லாம் மூட்டமுடிச்சோட பம்பாய் பக்கம் வந்திட்டானுங்க..அவனுங்க எடுக்குற படமெல்லாம் ஓடனுமின்னா உள்ளூரு ஆளுங்க துணை வேணுமில்லையா அதுதான் மேட்டரு. இப்ப ஐஸ்வரியா ராயி, சுசுமிதா சென்னுக்கு பின்னாடி லாஒரியல்ல ஆரமிச்சு எப்ஃடிவி வரைக்கும் ஒன்னென்னா வந்திச்சே அதுமாதிரிதான் இதுவும். சும்மா மாடலா இருந்தா இவங்களுக்கு ஏது மவுசு ஆஸ்கார் ரகுமான்னு சொன்னா ஒரு இது இருக்கில்ல… இது புரியாம பம்பாய் சேட்டுங்க என்னமோ ரகுமான போட்டு படமெடுத்தா ஹாலிவுட்ட வளைச்சுடலாமின்னு திட்டம் போடர காமெடிதான் சூப்பர்.

 10. ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்திருப்பது மாபெரும் வெற்றிதான்.சந்தேகமில்லை ஆனால்,இந்த வெற்றியைக் கொண்டாடும் லூசுகள் ஆஸ்கார் அளவிற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் விருதுகளை கொண்டாடுவதில்லை.
  அதற்கு காரணம் அடிமைத்தனம் என்பதன்றி வேறில்லை. இவர்களை எழுதித் திருத்த முடியாது. வேண்டுமானால் கீழ்ப்பாக்கம் அல்லது ஏர்வாடிக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும். அடுத்து ரஹ்மானைப்பார்ப்போம், “யாழ்” என்றால் நமக்கு நினைவில் வருவது “யாழ்பாணமும் அங்கே வாடும் தமிழர்களும்தான். ரஹ்மானிடம் “யாழ்” என்றால் “அது அற்புதமான இசைக்கருவி” என்பார். அது தவிர அவருக்கு ‘ஒக்காந்து யோசிக்க’ நேரமும் இருக்காது. வேறென்னத்தச் சொல்ல……………………….

 11. Its ridiculous…. How come a word from A.R.RAHMAN would cure r clear the issues happening in afghanistan r sri lanka…
  only an illeterate would think like this…. an individual could do nothing…..
  குறை கூறுவதை நிறுத்திவிட்டு அவரின் சாதனையை பாராட்டுவோம்

 12. What is so ridiculous about this Murali?
  Even Sachin condemned the Mumbai Terror Attack during the prize distribution ceremony of a match that was played after. Nobody is belittling Rehmans Achievement here Only Questioning Why he did not open his mouth to talk about the suffering of Tamil when he spoke எல்லா புகழும் இறைவனுக்கே in Tamil. Why did he not talk about the Iraqi and Palestinian Muslims, his brothers dying when he blabbered that throughout his life he chose love over hate. There are many examples of People even not receiving Nobel Prizes and returning awards. In your words they should be crazy isn’t it. As a human being one is expected to have some human values, otherwise you become a commodity. Rehman IS a commodity. He is least bothered about the people who fed him accross the globe and If you cannot face the reality of these questions then you are THE one this article/poem addresses to. THINK

 13. ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டதும், இனிமேல் ஹாலிவூட் இந்தியாவில் நிரந்தரமாக கால் பதிக்கலாம் என்று மேற்குலக சினிமா விமரிசகர்கள் கூறினார்கள். இனிமேல் அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியில் படங்கள் தயாராகும். கொஞ்சக் காலத்தில் அமெரிக்க நிறுவனங்களே தமிழ், இந்தி படங்களை தயாரித்து வெளியிடும். “எல்லாப் புகழும் இறைவனுக்கே. எல்லாப் பணமும் அமெரிக்காவுக்கே.”

 14. . “எல்லாப் புகழும் இறைவனுக்கே. எல்லாப் பணமும் அமெரிக்காவுக்கே.”
  ——– அவ்வளோதான்.

 15. //அவரின் சாதனையை பாராட்டுவோம்//

  ஏப்பா சினிமாவுக்கு போட்டி வைச்சு பரிசு கொடுக்கறது சாதனையா?

  ஏப்பா திமிரெடுத்து திரியாரிங்க

 16. ராமன் பெற்ற ஆஸ்கர் விருது!

  அமெரிக்காவில் தமிழில் பேசியபோதும்,
  உங்கள் கவிதையைப் படித்தபோதும்தான் தெரிந்துகொண்டேன்
  ஏ.ஆர்.ரகுமான் ஒரு தமிழன் என்று.

  எல்லாப் புகழும் இறைவனுக்கே . என்று
  திருவாய் மலர்ந்த போதுதான் தெரிந்துகொண்டேன்
  அவர் ஒரு இசுலாமியன் என்று!

  எதுவாக இருந்தாலும்
  நாம் மனிதனாகப் பார்ப்போம்…

  ஈராக், பாலஸ்தீனம் இன்னும் இன்னும்
  நீண்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் கொலைக்களங்கள்…

  ஒரு இருபது இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில்
  கண்ணுக்கு முன்னே
  ஒரு இனமே வேரோடு அழிக்கப்படும் கொடூரம்!

  இந்தத் தருணத்தில்
  ஆஸ்கர் விருதிற்காக விழா கொண்டாடி
  ஊரையே தன்பால் ஈர்த்து கொக்கரிக்கும்
  பார்ப்பனீயப் பத்திரிகைகள், ஊடகங்கள்

  காரணம் என்ன?

  ஏ.ஆர்.ரகுமான் சிறீ ராமன் அல்ல
  ஈழத் தமிழர்கள் மனிதர்களுமல்ல…!

 17. A different view point. If he mentioned anything about the sufferings of Tamil or Muslim people, he would have raised above the average.

  He is a talented person, but I don’t think we can argue he is a bad person because he didn’t say anything about that. We don’t know what he is doing silently.

  I think we should be cautious when criticizing others. He is not a traitor. But think about all the politicians out there…. they are traitors, they say one thing and do the opposite.

  Compared to them, Rahman is a talented guy trying to achieve something personally in a noble way without cheating anyone.

  I don’t think most of us would talk about controversial topics in the work place. Its his career. Let the person succeed in his career.

 18. Che, FYI the poem doesn’t criticize Rehman, It criticizes his fans who thinks he is god, It just points out he is just another opportunistic fellow for whom career is more important than people who has supported him in his career…. no wonder his fans too think in same wavelength. That is why when there is bloodshed in Eelam, they celebrate his Oscar… without Eelam tamil diaspora how did his Audio sell overseas? He can choose to be selfish and lick his lips for work on hollywood flicks but does that mean that he should not be exposed. When people bask in glory their dark shades are seen too…

 19. I had a good opinion about Oscar till now. The Oscar lost all the reputation it had, by giving Oscar to an useless movie “slumdog”. Its just an ordinary and third rate movie. Even the music is worse. There are lot of Indian movies which are far better and outstanding than the English movies.

  Americans, most of the time behave in a foolish way. They are the real Idiots.

 20. True, there is no value for OSCAR, they just keep boasting it for nothing. If only America could appreciate his work, it is nothing to do with his talent, it is just a selfish motto of doing movies here for much cheaper rate, and to turn over more profit just by saying it is a hollywood and RAHMAN brand movie and nothing more. It is not for his great work…yet another TARGET/PLAN they would have set for their
  growth/ expansion in cinema filed in India…

 21. // I had a good opinion about Oscar till now. The Oscar lost all the reputation it had, by giving Oscar to an useless movie “slumdog”. Its just an ordinary and third rate movie. Even the music is worse. There are lot of Indian movies which are far better and outstanding than the English movies.
  Americans, most of the time behave in a foolish way. They are the real Idiots.

  I agree with this 100%.

 22. இந்தியா எவ்வளவு பெரிய நாடு… இதுல எத்தன மொழி பேசுராங்க…தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம்னு எத்தன சினிமா வருது…இதுலேந்து நல்ல படத்த தேர்ந்தெடுத்து தேசிய விருது கொடுக்கறாங்க… அதோட ஒரே மொழியில எடுக்குற அமெரிக்க சினிமா எக்ஸ்பிரஸ் விருதான ஆஸ்கர ஒப்பிட கூட முடியாது…
  நம்ம ஊர் ஒரு வெள்ளக்காரனுக்கு அப்படி ஒரு விருது குடுத்தா அவன் இந்த ரகுமானிய ஆட்டமா ஆடுவான் இல்ல அமெரிக்கா பத்திரிக்கையில ஒரு வரிதான் எழுதுவாங்களா? நம்ம ஊரோட அடிம புத்தி இருக்கே அது தான் இப்படி சுய மரியாத இல்லாம ஆடவைக்குது. நம்ம வீட்டு நடுவுல வெள்ளக்காரன் ஒன்னுக்கு அடிச்சுட்டு போனாகூட அத கொண்டாடுவானுங்க போல இருக்கு.. நூறு பெரியார் வந்தாலும் இவனுங்கள திருத்த முடியாது…

 23. //it is just a selfish motto of doing movies here for much cheaper rate, and to turn over more profit just by saying it is a hollywood and RAHMAN brand movie and nothing more//

  You got that Right MS

 24. hi guys, I respect your feelings and the justified look towards the OSCAR celeberations where as the way the nation responded even towards the Bombay attack.
  Do not forget the basic human psychology is when you laugh the whole world will join with you eben though feels jealous, when you cry you will be left alone.

  This is common everywhere, but ofcourse the Indians have very thick skin when it comes towards their basic issues to be tackled, like agriculture is treated as if no skill needed zone and the ha ha towards the IT , but with no rice to eat the brains will not work ….. i am not sure how many of the IT geniuses will start bad mouthing about this.

 25. ஐஸ்வர்ய, சுஸ்மிதாக்களுக்கு அழகிப்பட்டம் கொடுத்து அழகு சாதனப்பொருட்கள் சந்தையை கைப்பற்றியது போல் ரகுமானுக்கு ஆஸ்கார் பட்டம் கொடுத்து இசைச்சந்தையை வளைக்கிறார்கள். ஆனால் இவர்கள் பெருமைப்படச்சொல்கிறார்கள். நம்மை கொள்ளயடிப்பதை கண்டு நாம் சினப்பதா? பெருமைப்படுவதா?

  ஆஸ்காருக்கு முன்பு இடப்பட்ட இடுகை இது. இதையும் இணைக்கலாம் எனக் கருதுகிறேன்.
  http://senkodi.wordpress.com/2009/02/13/இசை-சந்தைக்கு-இசையும்-ஏ-ஆ/

  தோழமையுடன்
  செங்கொடி

 26. Can people please first identify this. Slumdog Millionaire is NOT an INDIAN film. It is a British film, produced by the British, directed by a British man, acted by Indians and with a few Indian technicians.

  How winning an oscar makes everyone claim it is Indian is a huge joke.

 27. //வீட்டு நடுவுல வெள்ளக்காரன் ஒன்னுக்கு அடிச்சுட்டு போனாகூட அத கொண்டாடுவானுங்க போல இருக்கு.. நூறு பெரியார் வந்தாலும் இவனுங்கள திருத்த முடியாது…//

  Super

 28. நீங்கள் இரண்டு பிரிவுகளில் தமிழ்மணத்தில் விருது பெற்றுள்ளீர்கள்:

  ரிவு: அரசியல், சமூக விமர்சனங்கள்
  தலைப்புப் பட்டையிலுள்ள + குறியை அழுத்தி இடுகைகளைக் காணலாம்

  1. – வினவு

  சீமான் கைது : கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!

  பிரிவு: பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள், தலித்திய சிக்கல்கள்

  வாழ்த்துக்கள்

 29. //வீட்டு நடுவுல வெள்ளக்காரன் ஒன்னுக்கு அடிச்சுட்டு போனாகூட அத கொண்டாடுவானுங்க போல இருக்கு.. நூறு பெரியார் வந்தாலும் இவனுங்கள திருத்த முடியாது…/

  nachunnu irukku nanba…

  • நீங்க இருக்குற இதே நாட்டுல காவேரி பிரச்சனை ஆடுது! வருசத்துக்கு 2 குடும்பம் பட்டினியால சாகுது! விவசாயிகள் தற்கொலை வேற, இன்னைக்கு நீங்க கேவலமா திட்டுற காங்கிரஸ் கூடத்தான் 3 வருசமா இருந்தீங்க அப்போ உங்க அறிவு பல்பு மங்கி இருந்துச்சு போல! இதோ இப்போ கூட ஈழ தமிழர்கள் பாடு மறந்து போச்சு! தொகுதி பங்கீடு ஆரம்பிச்சாச்சு! சும்மா மக்கள் மேல அக்கறை இருக்குற மாதிரி நடிச்சுகிட்டு செயல் திறமை இல்லாத உங்களுக்கும் ஒரு ” ஜெய் ஹோ!!”

 30. பசங்களா உங்கள மாதிரி அபத்தமா சிந்திக்கிற கேனையன்கள் யாரும் இல்ல உருப்படாம போனும்னா உங்ககூட சேந்தா போதும் இதுலவேற பறைதான் பெரிய இசைன்னு உங்களுக்கு நீங்களே பெருமை அடிக்கிறீங்க. ரஹ்மான் உழைப்பால் உயர்ந்தவர் உழைக்காமலே உண்டியல் மூலமா காசு பாக்குற உங்களுக்கு இதெல்லாம் தெரியாது. 10 பெரியார் வந்தாகூட நீங்க உருப்பட போறதில்ல. ஆறுமுகக் கடவுள் பேர வச்சிருக்குற சண்முகம் முதல்ல அந்த பேர மாத்திட்டு இங்க வந்து கவிதை எழுதட்டும்.

  • என்னடா இது …. கொடுமையா இருக்கு. பட்டு போட்டவனுக்கு பாராட்டு கெடச்சா குத்தமா
   ஏன், உங்க பறை இசைக்கு சுத்தி பாக்க வந்த வெள்ளக்காரன் தலையாட்டும்போது எல்லாரும் மருந்த குடிக்க வேண்டியதுதானே? அஞ்சு காசு பத்து காசு படடு எல்லாம் நீங்க வசூல் பன்றதுக்கு வச்சிருக்கிற பாட்டு. உண்மையிலேயே நீங்க எல்லாம் முட்டாளா இல்ல முட்டாள் மாதிரி நடிக்கீரீங்களா ?

 31. //ஒரு தமிழனென்ற முறையில் தமிழில் பேசிய இசைப்புயல்
  ஈழமக்கள் எரியுமிந்த வேளையில்
  விருது வேண்டாமென்று கூட அல்ல…
  வருத்தத்தோடு வாங்கிக்கொள்கிறேன் என்றாவது
  பேசியிருக்கலாம்தானே!//

  இந்த ஆதங்கமும் ஆத்திரமும் எனக்கும் இருக்கிறது. இராக் படுகொலைகளைக் கண்டித்து முன்னர் ஒரு ஆஸ்காரில் ஒரு அமெரிக்க கலைஞர் விருதை ஏற்றுக் கொள்ளாமல் பேசியது நினைவுக்கு வருகிறது. எல்லாம் பண மயம். அடிமைத்தனம். இளிச்சவாய் இந்தியா… ஆளப் போவது அமெரிக்கா ..

 32. யெப்பா அரிவாலி கொஞ்சம் வாயா மூடுப்பா! நாத்தம் தாங்க முடியல !

  உண்டியல் மூலமா காசு பாக்கறவனுங்க பாப்பானுங்க அவனுங்க கிட்ட போயி ஊளையிடுடுடுடு!

  முதல்ல உன் பேர மாத்து

  ரகுமானு உலைப்பால உயர்ந்தவரா? அப்டீனா அவங்கூட சேந்து நீய்யும்
  ஏதாவது பாஸ்கர் , ராஸ்கல் , அவார்டு வாங்கி பொழச்சுக்கோ????(இங்க வராத)

  உன்ன மாதிறி மட்டம சிந்திக்கிற லூசு யாருமில்ல!

 33. தோழர் துரை ஷண்முகத்தின் சிறப்பான கவிதை. பாராட்டுக்கள். மன்மோகன் ஆஸ்பத்திரியில் படுத்த பின்பும் மக்கள் ஈழத்தையே பேசுகிறார்களே என கருணாநிதியும் ஆஸ்பத்திரிக்கு சென்றார். வக்கீல் போலீஸ் போராட்டத்தை மக்கள் மறக்க வேண்டும் என அனைத்து செய்திகளிலும் ஆஸ்கர் ரஹ்மான். அதற்க்கு பின்னரும் மறக்கவில்லையா நயன்தாராவுக்கும் நடிகைகளுக்கும் நூற்றுகணக்கில் கலைமாமணி விருது. தமிழர் என் சகோதரர்கள் என்று ஒருபுறம் முழக்கம் மறுபுறம் தேர்தல் அறிவிக்கும் நேரத்திற்கு முந்தய மணி வரை ஒஉட்டு பொறிக்கி களின் அடிக்கல் நாட்டு விழாக்கள். தாய் மண்ணே வணக்கம்.
  சித்ரா குப்தன்.

 34. யதாரத்தத்தை பேசுகின்ற கவிதை.

  சுயமரியாதைன்னு ஒரு எளவும் கிடையாது. இதே அவார்ட சீனாகாரனோ ரசியாக் காரனோ பெற்றிருந்தா இப்டியா நாக்க தொங்க போட்டுகிட்டு அலைவான்?

  வெள்ளைக்காரன் நாட்ட அடிம படுத்த தேவையில்ல, நாங்களே அடிமையாகிட்டோம். ஜஸ்ட் ஒரு அவர்டா ஏன்யா இவனுகளால நினைக்க முடியல? கடவுள் கொடுத்த வரத்த விட மேலா ஆட்டம் போடுறாங்களே.

  ஆஸ்கார் கிடைச்சா தான் தமிழன்ட இசை மேலானது இல்லேன்னா குப்பை என்னு ஒரு தாழ்வான புத்தி, அடிமைக்குணம், பார்க்கவே கேவலமா இருக்கு.

  81 வருசாமா இந்த அவார்டு வாங்க இந்தியாவுல நல்ல இசை இருந்ததில்ல? திறமயானவன் எவனும் இல்ல? சுயமரியாத உள்ளவனா இருந்தா, தன்னோட இசைய உயிரா மதிக்கிறவான இருந்தாக்க இந்த அவார்ட மறுத்திருக்கணும்.

  ஒளைப்பு பத்தி பேசுறாங்க, ஆமா ஒளைச்சிருக்காரு, அது காக்க பிடிக்கிற ஒளைப்பு, சுப்பிரபாதம் ரீமிக்ஸ். தேசிய கீதம் ரீமிக்ஸ். கிந்திகாரனுக்கு காக்கபிடிக்கிறது. பார்ப்பானுக்கு காக்க பிடிக்கிறது. நம்ம அப்துல்கலாம் தினமும் காலைல பகவத்கீத படிக்கிறவரு. இவரு சுப்பிரபாதம் ரீமிக்ஸ் பண்ணுறவரு.

  ஸ்லாம் டோக்கில நடிச்ச சேரிச் சனங்கள தொட்டாக்க தீட்டாயிடும் அவுங்களோட வாழ்க்கய சினிமா எடுத்து அதுக்கு இசை அமைச்சு அவார்டு வாங்கி அதுக்கு ஒரு பூணூல் போட்டு புஜா பண்ணுறதுக்கும் கோடிக்கணக்க சம்பாதிக்கிறதுக்கும், சம்பாத்திக்கிறத வெள்ளக்காரனும் இவனுகளும் பங்குபோடுறதுக்கும் அச்சாரம் தான் இந்த அவார்டு. மத்தபடி இந்த அவார்டால என்ன நடக்கப்போகுது? சேரி எல்லாம் நகரமா மாறப்போகுதா? தீண்டாமை ஒழியப்போகுதா? எதுவும் இல்ல. ரீமிக்ஸ் சுப்பிரபாதத்த ரசிச்சு ரசிச்சு வறுமைப்பட்ட மக்களோட குருதியையும் வேர்வையையும் குழாபோட்டு உறிஞ்சி குடிச்சுக்கிட்டே இருப்பானுங்க. நாங்க பாடுவோம் “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்னு,

 35. சரி போனது போகட்டும். தவறை உணார்ந்து இனிவரும் பாராட்டுக் கூட்டங்களிலாவது ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கத்தவறியதை உலகுக்கு வெளிப்படுத்தட்டும்.

  மாரியதாசன்-கனடா

 36. செங்கொடி,
  I think you got the point.
  They are not stupid. They think way more ahead of us. Now they created a buzz about movies about Indians in English.

  Hindi movie industry is the second largest one after Hollywood. Now, they put the first step to grab a share out of that market.
  Its all about our money. our hard earned money……

 37. தோழர் துரை சண்முகம் அவர்களுக்கு,

  கவிதை நன்றாக இருக்கிறது.
  படிக்கும் போதே தமிழ் இரத்தங்கள் கொதிப்படையும் விதத்தில் இருக்கிறது கவிதையின் நடை.

  ஆனால் எனக்குத்தான் ரொம்ப புரியவில்லை. கொஞ்சம் விளக்க முடியுமா? தவறாக நினைக்க வேண்டாம்.
  இரண்டிரண்டு பத்திகளாக விளக்கினால் கூட போதும். என் அறியாமை இருட்டு அகல உதவுங்கள்.

 38. Don’t you know ARRahman can not and need not express his openion openiy on all issues under the earth.Why do you want to put your words into his mouth. And if anyone differs with you ie vinavu you are threatening them with dire cosequences. First of all try to be democratic in accepting the fact that one can have his own openion and free yourself of this Fasistic charecter.

 39. Dear Vinavan, When you have a pseudonym at least try to understand its meaning. Your name means one who asks questions but you are advocating not to ask questions.
  //Don’t you know ARRahman can not and need not express his openion openiy on all issues under the earth//

  When you can talk on behalf of Rahman that he need not talk about anything, Why can’t Vinavu talk on behalf of the dying people?

  //Why do you want to put your words into his mouth. //
  So, whats wrong in asking why Rahman did not do his part for the fellow tamils? After all it is only the tamil speaking population of the world who has made Rahman a star. We are having a Genocide here and the entire world is ignorant about that, A person who knows about it that too a Tamilian, can’t he just say He feels bad for the genocide. Even the dumbheaded beauty peagents talks about Mother Teresa. Have you heard Marlon Brando and Micheal Moore speak at the Oscars. Search in You tube.

  //And if anyone differs with you ie vinavu you are threatening them with dire cosequences. //

  This is real BULL, can you prove it?

  //First of all try to be democratic in accepting the fact that one can have his own openion and free yourself of this Fasistic charecter.//

  Then why don’t you sit back and allow Vinavu to have it’s opinion, why do you jump to comment…Are you a Fascist?

 40. Dear Vinavu,

  My friend, who is in London, he has fowarded your blog with above poet. I read, but I could not accept your anquish negative views. I read comments also. but, some comments and replies are narrate poor style. Then I gothrough some of your articles; finally I concluded It is not a blog; It echoes some organisation’s voice. What is your background I don’t have intrest. But, my kind opinion is you are spoiling the blogsphere. Because blog is a single man views and aspirations. If may be you are from any other organisation, why don’t you convert website.

 41. இவங்களயெல்லாம் கோர்டுகுள்ள விடக்கூடாது , வக்கீல் தொழிலோட புனிதத்தையே கெடுக்கறாங்க!

  இவங்களயெல்லாம் தமிழ்ல பாட விடக்கூடாது , கோவிலோட புனிதத்தையே கெடுக்கறாங்க!

  இவங்களயெல்லாம் கேம்பஸ்குள்ள விடக்கூடாது , ஐ.ஐ.டி படிப்போட புனிதத்தையே கெடுக்கறாங்க!

  இவங்களயெல்லாம் பிளாகுகுள்ள விடக்கூடாது , பிளாகோஸ்பியரோட புனிதத்தையே கெடுக்கறாங்க!

  ஜனங்களே ஏதோ புரியற மாதிரி இல்ல!!!!!

 42. @sundar…
  finally I concluded….//

  Why ? Anybody with commonsense will look at the about us page first… Why are you fooling yourself and others. Do you think We don’t know your intentions…. Using a Jargon won’t take you anywhere? There is nothing but s**t in your “blogosphere” We are overwhelmed that atleast there are guys like Vinavu who provides us some quality stuff to read. I too have disagreement with vinavu on some points but I ALSO HAVE A SPINE If I am not happy with something I tell it openly, and fellow viewers give their feedback…I will never ask Vinavu to shut its doors just because I can’t stand it. Look at the Traffic in this blog dude.. GET REAL…

 43. I do not know wether Vinavu and Suresh are one and the same person. Anyhow he has responded to my reply and therefore I have to respect him. Your logic that Rahman has to say sorry for the genocide {though he would feel bad for the genocide} is Facistic in charecter. Everyone who follows Vinavu would know that you are threatening anyone who differs from you with dire consequence. Or you would respond in filthy language. No proof is necessary.

 44. அய்யா வினவன், உங்கள் இரண்டு பின்னூட்டங்களுமே தவறு. உண்மையில் நீங்கள்தான் ஒரு பாசிஸ்டை போல கதைக்கின்றீர்கள். மேலும் நீங்கள் மாற்றுக்கருத்து சொன்னால் உங்களை மிரட்டுவதாக சொல்வது பச்சை பொய். வினவு தளத்தில் கருத்து பரிமாற்றம் மிக ஆரோக்கியமாக உள்ளது. அதை நீங்கள் அசுத்தம் செய்ய வேண்டாம். உங்கள் மனம் கவர்ந்த ரஹ்மானுக்கு காவடியெடுப்பதில் உங்கள் பொன்னான நேரம் கழியட்டும். தமிழன் இருந்தால் என்ன செத்தால் என்ன. ஆஸ்கார் இருக்கே…ஆஸ்கார் தமிழனை விட உயர்ந்த்து. அதை வாங்கியவர் ஆஸ்காரை விட உயர்ந்தவர்.. நாளை ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர் ரஹ்மானை விலைக்கு வாங்கி அவர்தான் உலகத்திலேயே உயர்ந்தவர் என நிரூபிப்பார்.. அப்பொழுது நீங்கள் அவருக்கு வக்காளத்து வாங்குவீர்களோ? இருக்கட்டும்…காற்றுள்ள பக்கம் தானே தூற்ற முடியும்.

 45. இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்:ஏ.ஆர். ரஹ்மான்.
  By இனி • Feb 28th, 2009 • Category: செய்திகள்/ஆய்வுகள்
  28.02.2009.

  “இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் எவரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்” என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
  இலங்கையில் தமிழர்கள் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘ஸ்லம்டொக் மில்லியனர்’ என்ற திரைப்படத்திற்காக அண்மையில் நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை ஏர்.ஆர்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

  மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில், “இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று நிருபர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ரஹ்மான், “இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளைப் பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன். ‘ஒஸ்கார்’ விருது வழங்கும் விழாவோ அல்லது இந்த மேடையோ அரசியல் விடயங்களுக்கான இடமல்ல. இருந்த போதும், எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படக்கூடாது என்றே நான் விரும்புவது உண்டு.

  இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன்; நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் ” என்றார்.

 46. I don’t know why people are supporting Rahmaan on this. When Muthukuamr killed himself we were proud as a Tamilian, When Rahman did not talk about Lankan Genocide we are still proud as a Tamilian, I don’t get this point at all

 47. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

  இதுவரை இந்த http://www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  nTamil குழுவிநர்

 48. இவரு பெரிய இவரு… கொமென்ட் அடிக்காரு
  ஆஸ்கார் வங்க வக்கில்லாதவன் பொதிக்கு இரு…
  உங்களுக்கு எங்க போனாலும் ஈழத்த பத்தித்தான் பேசணும்
  ஈழத்துல இருக்குறவன் கச்டப்பர்றான் எண்டு அமெரிக்கால இருக்குறவன் மனைவியோட கூடக்கூதுன்னா என்னய்யா நியாயம்…
  அவனவன் தவமிருக்கான், கிடக்கும்போது வருத்தத்தோட வாங்குறேன்னு சொல்லனுமாம்.. அவ்வளவு வருத்தம் தர நாங்க விரும்பல்லனு பறிச்சு எடுத்த்துருவான்…

  த்தூ… எடுத்ததுக்கெல்லாம் பார்பனன்… சூர்ப்பனன்னுக்கிட்டு…. என்னய்யா இது… இதுக்கு நாற்பது பேரு வக்காலத்து வேற

 49. Thozar Durai.Shanmuagathin Kavithai Arumai. ithaiyae Antha Viruthu vangum vizavil AR.Rahumanum urthipaduthum vidamaga paesi ullar. ” En munnal Anbu,Veruppu Irandu mattumae irunthathu. Naan (America Meethaana) Anbai thearnthu yaeduthan, Viruthu Kidaithathu”

 50. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதால், அமிதாப் பச்சன், அவருக்கு கிடைக்கவிருந்த ஆஸ்திரேலிய பல்கலையின் டாக்டர் பட்டத்தை நிராகரித்தார்….

 51. வணக்கம் வினவு வலைப்பக்க தோழர்களே!
  நான் மலேசியாவில் வசிக்கும் தமிழன். தினமும் உங்களது வலைப்திவில் இருக்கும் கட்டுரைகளைப் படித்து கொண்டு வருகிறேன். வாழ்த்துகள். அனைத்தும் ரசித்து படிக்கும் படி உள்ளது. ஆனால், நான் உங்களுடைய சில கருத்துகளுக்கு உட்பட்டவன் அல்ல. எப்பொழுதும் எல்லாவற்றிலும் குறைகளை மட்டும் பார்ப்பது கம்யூனிஸ சிந்தனைவாதிகளுக்கு அழகல்ல.
  ஒரு விடயத்தைப் பற்றி விமர்சிக்கும் நீங்கள் அதுக்கு மாற்று வழி தெரிவிக்க வேண்டும். இதுதான் உண்மையான கம்யூனிஸ வாதிகளின் கொள்கை.
  முதலில் நான் கம்யூனிஸ் கொள்கை உடையவன் என்பதை கூறிக்கொள்கிறேன். ஏ.ஆர் ரகுமான் ஈழப்பிரச்சனை குறித்து பேசவில்லை என்று கூறும் அதற்காக என்ன செய்தீர்கள்? தினமும் வலைப்பக்கத்தில் எழுதினால் போதுமா? நீங்கள் இருப்பது எங்கள் தாய் வீட்டில். ஆமாம், உலகத் தமிழர்களின் தாய் வீடு தமிழகம். ஆனால், அங்கே நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள். வெறும், 20இலட்ச மக்கள் தொகையைக் கொண்ட மலேசிய தமிழர்களாகிய நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஈழப் பிரச்சனையை மலேசிய நாடாளுமன்றத்தில் விவாதக் கூட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளோம். ஆனால், நீங்கள்?

 52. Why vinavu always take a pro-islam stance? Why there are no articles about terror grooming madarasas? Why there is no outcry about freedom of women in islamic countries?

  A church or temple can’t be built in saudi arabia, but here muslims are building thousands of mosques and free to shout five times a day. But the same muslims forbid hindus to use drums (thaara, thappatta, thavil, murasu etc) which are traditional Tamil instruments. I have personally seen how they used gulf money to convert an entire area (colony) to islam and when someone in the next colony died (the dead person is a dalit), these new muslims opposed their funeral vigil with thaarai and thapattai. Is that colony ruled by muslims of India? who are they to make new laws?

  Why vinavu is silent about issues like polygamy (palathaaram), child marriage, forced conversion in love marriages etc in islamic community? I am not a hindu. Don’t assume I am a high caste hindu and bash me. I hate all religions. I hate gods. I am a proud atheist.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க