Friday, June 21, 2024
முகப்புஉலகம்ஈழம்தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !

தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !

-

உயர்நீதிமன்ற போலீசு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தந்துள்ள இடைக்கால அறிக்கை, வழக்குரைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “இதுதாண்டா போலீசு” பார்வையில் எழுதப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை ஆராய்வதுடன், இனி இப்போராட்டம் செல்லவேண்டிய திசையையும் சுட்டிக்காட்டி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இன்று வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகித்துக் கொண்டிருக்கும் துண்டறிக்கையை இங்கே தருகிறோம்.

மார்ச் 10 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இப்பிரச்சினை தொடர்பாக ம.க.இ.க நடத்தவிருக்கும் பொதுக்கூட்டத்தின் துண்டறிக்கையையும் வெளியிடுகிறோம். இக்கூட்டத்துக்கு போலீசு அனுமதி மறுத்த்தால் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தடியடிபட்ட உயர்நீதிமன்றம கருத்துரிமையை வழங்குமா? 9ம் தேதி தெரியும்.

*********************************************************

சட்டத்தின் ஆட்சி செயலிழந்து விட்டது!
போலீஸ் ஆட்சி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது!
இனி நாம் செய்யவேண்டியது என்ன?

அன்பார்ந்த வழக்குரைஞர்களே,

போராட்டத்தின் மிக முக்கியமான திருப்புமுனைக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் இடைக்கால அறிக்கை. இந்த அறிக்கையின் மீது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களை இங்கே விவரிக்கத் தேவையில்லை. 19 ஆம் தேதி நிகழ்வு குறித்த இந்த அறிக்கையின் அணுகுமுறை மற்றும் அதன் ஆய்வுமுறையைத் தான் நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

“யாருடைய உத்தரவின் பேரில் போலீசு படைகள் உயர்நீதி மன்றத்திற்குள் நுழைந்தன? எந்த அதிகாரியினுடைய உத்தரவின் பேரில் அன்று  தடியடி நடத்தப்பட்டது?” என்ற அடிப்படையான இரு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டு, போலீசு நடவடிக்கையை நியாயப்படுத்தும் ஒரு ‘திரைக்கதை’யை இடைக்கால அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா.

“பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற தடியடியைப் புரிந்து கொள்ள ஜனவரி 29 இலிருந்து தொடங்க வேண்டும்” என்று கூறி ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி நாம் நடத்திய போராட்டங்கள், அந்தப் போராட்டத்தின் போது குறிப்பிட்ட சில வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போலீசினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை விவரிக்கிறார். பிப் 19 அன்று முட்டை வீச்சு சம்பவம் தொடர்பாக சில வழக்குரைஞர்களை போலீசு கைது செய்ததாகவும், அந்தக் கைது நடவடிக்கையைப் பிற வழக்குரைஞர்கள் எதிர்த்ததாகவும், பொறுமையைக் கடைப்பிடித்த போலீசைச் சீண்டி, அவமானப்படுத்தி ஆத்திரமூட்டியதாகவும், கல்லெறிந்ததாகவும் … இத்தைகைய சூழ்நிலையில் வழக்குரைஞர் கும்பலைக் கலைக்க தடியடி அவசியமாகத்தான்  இருந்திருக்கிறது என்றும் கூறுகிறார் கிருஷ்ணா.

“அந்தத் தடியடியில் போலீசார் வரம்பு மீறிவிட்டார்கள்” என்று குறிப்பிடும்  ஸ்ரீகிருஷ்ணா, “படையினர்  அவ்வாறு வரம்பு மீறுவதைத் தடுக்க ஆணையரும் போலீசு அதிகாரிகளும் முயன்ற போதிலும் அவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை” என்றும் கூறுகிறார். இவை அனைத்திற்கும் போலீசு சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்களையே அவர் நம்பியிருக்கிறார். ‘அந்த வீடியோவில் நேரம் பதிவாகியிருந்தது என்றும், வழக்குரைஞர்கள் கொடுத்த வீடியோவில் நேரம் பதிவாகவில்லை’ என்றும் கூறி அதனை நியாயப்படுத்துகிறார். இறுதியாக, ‘ தலைமை நீதிபதிக்குக் கண்டனம், வழக்குரைஞர்களை ஒழுங்குபடுத்த சட்டமியற்றுதல்’ போன்ற சிபாரிசுகளுடன் முடிகிறது அவரது அறிக்கை.

“படைகளை உள்ளே இறக்க யாருடைய அனுமதியைப் பெற்றீர்கள், தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?” என்ற இரு கேள்விகளையும் எந்த போலீசு அதிகாரியிடமும் அவர் கேட்டதாகக் கூட அவரது அறிக்கையில் இல்லை. மாறாக “தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என்பதை வீடியோவிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறி அந்தப் பிரச்சினையை அத்தோடு முடித்துக் கொள்கிறார்.

அன்றைய சம்பவம் குறித்து கிருஷ்ணாவின் அறிக்கையில் கண்டுள்ள பல விவரங்கள் பல பிழையாகவும் முரண்பாடாகவும் இருக்கின்றன. அவற்றை நாம் ஆதாரபூர்வமாக நிரூபிக்க இயலும். இருப்பினும், அந்த விவரங்களுக்குள் செல்வதைக் காட்டிலும், இத்தகைய ஒரு தலைப்பட்சமான அறிக்கையை எழுதும்படி நீதிபதியைத் தூண்டிய சிந்தனைப் போக்கு எது என்பது குறித்துத்தான் நாம் அதிகமாக கவனம் செலுத்தவேண்டும் என்று கருதுகிறோம்.

“வழக்குரைஞர்கள் எல்லோரும் சட்டப்படிதான் நடக்கிறார்களா, அவர்கள் தவறே செய்யாதவர்களா, போலீசு மட்டும்தான் தவறு செய்ததா, போலீசை மட்டும்தான் தண்டிக்க வேண்டுமா, போலீசு – வக்கீல் இருதரப்பினரில் அதிகம் தவறு செய்தது யார் ?” என்ற கேள்விகளை விசாரிப்பதற்காக இந்தக் கமிஷன் நியமிக்கப்படவில்லை. 19ஆம் தேதி நடைபெற்ற கொலைவெறித்தாக்குதலை உலகமே பார்த்திருக்கிறது. இது சட்டவிரோதம் என்று உலகத்துக்கே தெரிந்திருக்கிறது. “அத்தகைய ஒரு சட்டவிரோத நடவடிக்கைக்கு சட்டப்படி யார் பொறுப்பு?” என்ற கேள்விக்கு விடை தேடத்தான் இந்தக் கமிஷன் அமைக்கப்பட்டது.

ஆனால் கமிஷனோ “காவல்துறை இந்த அளவு ஆத்திரம் கொள்வதற்கு வழக்குரைஞர்கள் எப்படி காரணமாக இருந்திருக்கிறார்கள்?” என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு ஆராய்ந்திருக்கிறது. இதைத்தான் இந்து, எக்ஸ்பிரஸ் முதலான பத்திரிகைகள் இத்தனை நாட்களாக இங்கே எழுதிக்கொண்டிருக்கின்றன.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையைப் பாராட்டி இன்று இந்து நாளேடு எழுதியுள்ள தலையங்கம் இப்படித் தொடங்குகிறது “சில சமயங்களில் சூழல் தான் எல்லாமுமாக இருக்கிறது. அந்த வகையில் 19 ஆம் தேதி நடைபெற்ற சம்பவங்களை எப்படிப்பார்க்க வேண்டும் என்பதற்கான பார்வையை உச்சநீதிமன்றத்துக்கு ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் வழங்கியிருக்கிறது”

ஊடகங்களின் பார்வையை தீர்மானிக்கும்  அரசியல் கருத்துகள் அவர்களை அவ்வாறு எழுதத்தூண்டலாம். ஆனால் ஒரு நீதிபதியும் பார்வையும் அப்படித்தான் இருக்கும் என்றால், அந்த இடத்தில் ‘சட்டத்தின் ஆட்சி’ முடிவுக்கு வந்துவிடுகிறது. இந்த அணுகுமுறைதான் நீதிவழங்கும் முறை என்று ஆகிவிட்டால், இந்திராவின் கொலையால் ஆத்திரம் கொண்ட இந்துக்கள் சீக்கியர்கள் மீது நடத்திய தாக்குதல் முதல் எல்லாத் தாக்குதல்களுக்கும் சூழலின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளலாம்.

ஸ்ரீகிருஷ்ணா குறிப்பிடுவதைப் போல ஜனவரி 29 முதல் சிலவழக்குரைஞர்கள் வரம்புமீறி நடந்து கொண்டதும், அதை தலைமை நீதிபதி கட்டுப்படுத்த தவறியதும்தான் போலீசின் வெறித்தனத்துக்குக் காரணமாக இருந்தது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக்கொள்வோம். இந்த ‘ஆய்வு முறை’ப்படி, “ சிங்கள இராணுவம் நடத்தும் இனப்படுகொலையும்,  அதற்கு இந்திய அரசு  துணை நிற்பதும்தான் இலங்கை வங்கி மீது கல்லெறியும் அளவு கோபத்தை தமிழகத்தின் வழக்குரைஞர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது” என்ற நியாயத்தை நீதிபதி ஒப்புக் கொள்வாரா?

அப்படி நடக்கவில்லை. அந்த வழக்குரைஞர்கள் மீது எல்லா அத்துமீறல்களுக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அதுதான் சட்டபூர்வமான அணுகுமுறை. வக்கீல்கள் விசயத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த சட்டபூர்வமான அணுகுமுறையை போலீசார் விசயத்திலும்  கடைப்பிடிப்பதில் என்ன தடை? சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பவர்கள் வழக்குரைஞர்களா காவல் துறையினரா? போலீசுதான் சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகப் பராமரிக்கப் படுகிறது. போலீசின் விசயத்தில் மட்டும் சட்டம் இயங்க மறுக்கிறது. இதுதான் உண்மை.

முட்டை வீச்சு உட்பட வழக்குரைஞர்கள் மீது போடப்பட்டிருக்கும் எல்லா வழக்குகளையும் அவர்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத்தான் போகிறார்கள். “100 வழக்கு இருக்கிறது, 150 இருக்கிறது” என்று ஊடகங்களில் பூச்சாண்டி காட்டுகிறது போலீசு. அந்த வழக்குகளை நடத்தவேண்டாம் என்று யார் தடுத்தார்கள்? “முட்டை வீச்சு தொடர்பாக இன்னின்ன வழக்குரைஞர்களைக் கைது செய்ய வேண்டும்” என்று தலைமை நீதிபதியிடம் போலீசு கேட்டிருக்கலாமே! உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் புகுந்து வளைத்துப் பிடிப்பதற்கு அவர்கள் என்ன ரவுடிகளா, முகவரி இல்லாத நாடோடிகளா? மிகச் சாதாரணமான இந்தக் கேள்விகளை பத்திரிகைகள் முதல் நீதிபதி கிருஷ்ணா வரையில் எல்லோரும் கேட்டிருக்க முடியும். ஆனால் கேட்கவில்லை. ஏனென்றால் மாநில அரசு, மத்திய அரசு, ஊடகங்கள், நீதித்துறையின் சிந்தனைப் போக்கு ஆகிய அனைத்தும் போலீசின் பக்கம் உறுதியாக நிற்கின்றன.

அரசியல் நடவடிக்கை, அத்துமீறல்கள் என்றெல்லாம்  புள்ளிவிவரங்களை வெளியிட்டு வழக்குரைஞர் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள். லாக் அப் கொலை, லஞ்சம் ஊழல், வழிப்பறி, மோசடி, பாலியல் வன்முறை போன்ற குற்றங்களுக்காக தமிழக போலீசார் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் எத்தனை என்பதை வெளியிடும் துணிவு போலீசுக்கு இருக்கிறதா? இத்தனை கிரிமினல் குற்றவாளிகளைத் தன்னிடம் வைத்திருக்கும் காவல் துறையிடம் சட்டத்தை நிலைநாட்டும் அதிகாத்தை ஒப்படைக்கலாமா என்பது குறித்து விவாதிக்க யாராவது தயாராக இருக்கிறார்களா?

“வக்கீல்கள் போலீசை ஆத்திரமூட்டினார்கள், கல்லெறிந்தார்கள் – அதன் விளைவுதான் தடியடி” என்ற போலீசு சார்பில் விளக்கம் சொல்கிறார் கிருஷ்ணா. இதே விளக்கத்தை ஆணையர் சொல்லட்டுமே. “வக்கீல்கள் இப்படி நடந்து கொண்டதால் நான்தான் தடியடிக்கு உத்தரவிட்டேன்” என்று ஒப்புக் கொள்ளட்டுமே. அல்லது “என்னுடைய ஆட்கள் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. வக்கீல்களின் நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்டு பாய்ந்து விட்டார்கள்” என்று சொல்லட்டுமே. வெறியாட்டம் ஆடிய போலீசார் மீதும் வழக்கு போடட்டும், கல்லெறிந்த வக்கீல்கள் மீதும் வழக்கு போடட்டும். தாக்கியது யார், தற்காத்துக் கொண்டது யார் என்பதை நீதிமன்றத்தில் பேசிக்கொள்வோம். போலீசு ஏன் பம்முகிறது?

போலீசின் நியாயத்தை கிருஷ்ணா பேசுகிறார். அரசு பேசுகிறது. ஊடகங்கள் பேசுகின்றன. ஆனால் போலீசு அதிகாரிகள் மட்டும் பேச மறுக்கிறார்கள். “போலீசை  நாங்கள் அனுமதிக்கவில்லை” தலைமை நீதிபதி கூறிவிட்டார். “வேறு யாரிடம் அனுமதி பெற்றீர்கள்?” என்ற கேள்வியை தன் முன் ஆஜரான ஆணையரிடம் கேட்க வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணாவுக்குத் தெரியவில்லயாம்!  நாடகம் என்றாலும் மிகவும் தரம் தாழ்ந்த நாடகம் இது.

நீதிமன்றப் புறக்கணிப்பு, ஊச்சநீதி மன்றத்தில் முறையீடு ஆகிய எல்லாம் முடிந்த பின் ஒரு எளிய உண்மை நமக்கு இப்போது விளங்குகிறது. “போலீசைப் பொருத்தவரை சட்டத்தின் ஆட்சி என்பதெல்லாம் கிடையாது. போலீசு வைத்ததுதான் சட்டம். அவர்கள் மீது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியாது” என்பதுதான் அந்த உண்மை.

இந்தப் போராட்டத்தை நாம் தொடங்கவில்லை. இது நம் மீது திணிக்கப்பட்ட போராட்டம். போராட்டத்தின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை இப்போது ஊடகங்கள் வெளியிடத்தொடங்கி விட்டன. ‘சமூகத்துக்கு எதிராக அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கும் ஒரு கும்பல் போல’ வழக்குரைஞர்களைச் சித்தரிக்கும் முயற்சி தொடங்கி விட்டது. இனிமேலும் நாம் பேசாமல் இருக்கக் கூடாது. பேசாமல் இருந்தால் நாம் மக்கள் மன்றத்தில் குற்றவாளிகளாக்கப் படுவோம்.

இதுவரை நீதிமன்றத்திடமும், அரசிடமும் முறையிட்டுப் பார்த்து விட்டோம். பயனில்லை. இனி மக்கள் மன்றத்துக்கு செல்வோம். “தவறு செய்த போலீசு மேல் நடவடிக்கை எடு” என்று அரசிடம் கேட்பதில் இனி அர்த்தமே இல்லை.  தாங்கள் போலீசின் பக்கம்தான் என்பதை அரசு தெளிவு படுத்தி விட்டது. ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை அரசின் அணுகுமுறைக்கு வலுச்சேர்த்திருக்கிறது.

போலீசு அத்துமீறல்களுக்கு எதிராக மக்கள் பலருக்கு நாம் நீதி பெற்றுத் தந்திருக்கிறோம். இப்போது நம் மீதே தாக்குதல். இதனை நாம் எதிர்கொண்டு நீதியையும், சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டாவிட்டால், நாளை யார் மீது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போலீசு பாயலாம் என்பது எழுதப்படாத விதியாகிவிடும். காவல்துறை இரத்தம் சுவைத்த மிருகமாகிவிடும். இது ஒரு அறிவிக்கப்படாத போலீசு ராச்சியமாகிவிடும். இந்த நிலைமையை மக்களுக்குப் புரிய வைப்போம். ‘இது போலீசு வக்கீல் பிரச்சினை அல்ல, பொதுமக்கள் அனைவரின் பிரச்சினை’ என்பதை எல்லாத் தரப்பு மக்களுக்கும் விளக்கிச் சொல்வோம்.

“நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல. போலீசு ஆட்சி. அரசியல் சட்டம் இங்கே செயலிழந்து விட்டது” என்ற உண்மையை நாம் மக்கள் மன்றத்தில் வைப்போம். தேர்தலுக்காக களத்தில் நிற்கும் கட்சிகள் இதற்குப் பதில் சொல்லட்டும். நமக்குத் தேவை கட்டைப்பஞ்சாயத்தோ சமாதானமோ அல்ல. நமக்குத் தேவை நீதி. குற்றவாளிகள் கோட்டு சூட்டு போட்டிருந்தாலும், கறுப்பு அங்கி அணிந்திருந்தாலும், காக்கிச் சட்டை போட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்பது மட்டும்தான் நம் கோரிக்கை.

இழுத்தடிப்பதன் மூலம் நம்முடைய போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து பிசுபிசுத்துவிடும் என்பதுதான் இப்போதைக்கு அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.  தேர்தல் சத்தத்தில் நாம் போடும் சத்தம் யார் காதுக்கும் கேட்காமல் போய்விடும் என்பதுதான் அவர்களின் கணக்கு.

உயர்நீதி மன்றத்தில் சட்டம் அடித்து நொறுக்கப் பட்டிருக்கிறது. ஜனநாயகம் கொலை செய்யப்பட்டிருக்கிறது.  இந்தப் படுகொலைக்குப் பதில் சொல்லிவிட்டுத்தான் தேர்தல் ஜனநாயகம் குறித்து யாரும் பேசமுடியும் என்ற நிலையை உருவாக்குவோம்.
ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை எதிர்த்து நாம் தொடங்கிய போராட்டத்தால் இனப்படுகொலையை நிறுத்த முடியவில்லை. மாறாக இன்னொரு படுகொலை நடந்திருக்கிறது. நீதித்துறை படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி படுகொலை செய்யப்பட்டிருக்கிறது.

இதோ,  நீதித்துறை பிணமாகக் கிடக்கிறது. இந்தப் பிணத்துக்குப் பதில் சொல்லி விட்டு ஓட்டு கேளுங்கள்! இந்தப் பிணத்துக்கு பதில் சொல்லிவிட்டு வாக்களிக்கச் செல்லுங்கள் என்று முழங்குவோம்.  அசாதாரணமான இந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்வோம்.   அதற்குப் பொருத்தமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்!

சென்னை,
07.03.09

மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
நிர்வாக அலுவலகம்: 702, ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு: வழக்குரைஞர் சி. ராஜு,  94432 60164

***********************************************************

உழைக்கும் மக்களே, இது போலீஸ் – வக்கீல் பிரச்சினை அல்ல!

போராடும் மக்கள் அனைவரின் பிரச்சினை!

பொதுக்கூட்டம்

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்

10.3.09 செவ்வாய்க் கிழமை
மாலை 6 மணி

தலைமை: தோழர் முகுந்தன்,
தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை: தோழர் மருதையன்,
பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

மற்றும்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,
மனித உரிமை அமைப்பினர்.

கலை நிகழ்ச்சி
ம.க.இ.க கலைக்குழு

அனைவரும் வருக!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

***************************************************************

விடை தெரியாக் கேள்விகளுக்கு விடை காண வாருங்கள் !
பிப்ரவரி 19 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது-
வக்கீல் – போலீசு மோதலா?
அல்லது போலீசின் திட்டமிட்ட தாக்குதலா?
“நான் வைத்ததுதான் சட்டம்” என்று நடப்பவர்கள் யார்?
போலீஸ்காரர்களா, வழக்குரைஞர்களா?
ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கும்
இந்த போலீசு  தாக்குதலுக்கும் என்ன தொடர்பு?
சுப்பிரமணியசாமி மீதான முட்டை வீச்சு
போலீசின் தாக்குதலுக்கு முழுக் காரணமா?
அல்லது … அது ஒரு முகாந்திரமா?
அரசாங்க முட்டை அம்மியை உடைக்குமாம்!
ஒரு அழுகிய முட்டை அரசாங்கத்தையே உடைக்குமா?
நீதிபதிகள் அடிபட்டனர்..
வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன..
நீதிமன்ற அறைகள் சூறையாடப்பட்டன ..
அனைத்தையும் தொலைக்காட்சிகள்  ஒளிபரப்பின.
ஆதாரம் இருந்தும் ஒரு காவலரைக் கூட
அரசாங்கம் பணிநீக்கம் செய்யாத காரணம் என்ன?
வாருங்கள்!
“தடி” ஆட்சித் திமிருக்கு முடிவு கட்ட ..
குடியாட்சி உரிமைக்குக் குரல் கொடுக்க ..
அணி திரண்டு வாருங்கள்!

தொடர்புக்கு;
அ.முகுந்தன் ; 94448 34519
வினவு : 97100 82506

 

 1. // நாடகம் என்றாலும் மிகவும் தரம் தாழ்ந்த நாடகம் இது.//

  அரச கைகூலிகளிடம்ருந்து இதைதான் எதிர்பார்க்கமுடியும்

 2. அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நான் அவதரிப்பேன் – இது பழைய கிருஷ்ணன்.

  இப்போ அறிக்கையோட (புதிய பக்வத் கீதையோட) வந்திருக்கிறவர் புதிய கிருஷ்ணன்.

  மொத்தத்தில் அவாளின் ஆட்சிதான் இங்கு நடக்கிறது.

 3. ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் ஒரு விஷயம் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தொடர் போராட்டம் மற்றும் குழப்பத்திற்கு காரணம் 50 பேர் கொண்ட சிறு குறுங்குழுவாத வக்கீல்கள்தான். மேலும், அதே அறிக்கை இவர்களது இந்த தொடர் நடவடிக்கையால் சட்டம் முடங்குவதற்கு எதிராக நடவடிக்கை கோரி இன்னொரு பகுதி மூத்த வக்கீல்கள் அரசிடம் முறையிட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில் இந்த குறுங்குழுவாத வக்கீல்களின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது அப்பாவி வக்கீல்கள்தான். அதாவது இவர்களது அரசியலுக்கு உடன்படாத வக்கீல்கள்தான். மேலும் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்ட – பெயர் குறிப்பிடப்பட்ட வக்கீல்கள் யாராவது இந்த தடியடியில் பாதிக்கப்பட்டார்களா? என்ற கேள்வியும் இங்கே எழுப்புவது நல்லது என்று கருதுகிறேன். அநேகமாக இவர்கள் எல்லாம் தப்பித்து விட்டிருக்கலாம். அதே சமயம் போலீஸ் தாக்குதலை மன்னிப்பது என்ற ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்து ஏற்கத்தக்கதல்ல. மேலும், குறுகிய சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த நீதிமன்றத்தையே தொடர்ந்து முடக்கி வைப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. இதனால் பாதிக்கப்படுவது வக்கீல்கள் அல்ல. அப்பாவி பாதிக்கப்பட்ட பொதுமக்கள்தான். இந்த நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் எல்லாம் சாதாரண மக்களின் வழக்குகள்தான் பெரும்பான்மையானது. கார்ப்பரேட் நிறுவனங்களினுடையதுதல்ல.எனவே, இனியும் இந்த குறுங்குழுவாதிகள் தங்களது சொந்த அரசியல் அஜண்டாவை முன்னிறுத்தி நீதியை முடக்குவதை பொதுமக்கள் அனுமதிக்க முடியாது. மக்களிடம் செல்வாக்கிழந்த அல்லது மக்களை அணிதிரட்ட முடியாதவர்கள் மறைமுகமாக – உணர்ச்சியூட்டும் சூழலுக்கு இரையாகியுள்ள உயர்நீதிமன்றத்தை முடக்கத் துடிப்பதும் நேர்மையான போராட்டமாக அமையாது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த போராட்டங்களை முடித்துக் கொண்டு தங்களது கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வையுங்கள். ஜனநாயகத்தில் இதற்கு தாராளமாக இடம் உண்டு. அதேபோல், எப்போதும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் என்று அவதூறு பொழியும் வினவு – மகஇக கும்பல் இந்த விசயத்தில் மரணப்படுக்கையில் உள்ளவர்களுக்கு பதில் சொல்லி விட்டு வாக்குகளை பெறட்டும் என்று தங்களது குரலில் மாற்றத்தை கொண்டு வந்திருப்பது நல்ல கொள்கை மாற்றம்தான். போலீஸ் தடியடியை கண்டித்து நடைபெறும் போராட்டத்தையும் – சொந்த அரசியல் அஜண்டாக்களுடன் உலா வரும் போலி அரசியல் அமைப்புகளையும் பெரும்பான்மை வக்கீல்கள் அடையாளம் கண்டு தங்களது வித்தியாசத்தை உணர்த்த வேண்டும். நீதியை அதன் இடத்தில் ஒப்படையுங்கள் – தீர்வை அங்கே காணுங்கள்.

 4. திரு.சந்திப்பு அவர்கள்

  ஒரு விசயத்தை விளக்க வேண்டும்.யார் அந்த குறுங்குழுவாத வக்கீல்கள்? திமுகவின் நிலையை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பால்.கனகராஜ் விலகியிருக்கிறாரே அவரும் சிபிஎம் இன் வைகை வழக்கறிஞரும் குறுங்குழுவாதிகளா?

  இந்த தொடர் போராட்டத்திற்கும் பிரச்சினைக்கும் சில வழக்கறிஞர்கள் தான் காரணமா?இல்லை போலீசு தடியோடு வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் மண்டையை பிளந்தது காரணமா?

  மன்றம் முடங்குவது குறித்து கவலைப்படும் சந்திப்பு அவர்கள்? முடங்குவதற்கான காரனம் குறித்து ஆராயாது பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.

  மக்கள் பாதிக்கத்தான் படுகிறார்கள் ஆம் இந்த போலீசு அராஜகத்தால் தினம் தினம் பாதிக்கத்தான் படுகிறார்கள்.

  போலீசு வன்முறை கண்டிக்கதக்கது என சும்மா உதார் விடாது

  இது பாசிசத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதன் ஒரு பகுதியே.. கம்யூ கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்க பாசித்தினை பாசிசத்தினை அம்பலப்படுத்துஅதும் எதிர்கொள்வதுமே அதன் தலையாய கடைமை.
  அதைத்தான் புரட்சிகர அமைப்புக்கள் செய்து வருகின்றன.

  இப்படித்தான் சீபீஎம் போல துரோகிகள் அதிலும் வந்து குழப்பத்தை விளைவிக்கிறார்கள்.

  ———————————————————————-

  என்னா விட்த்ல அண்ணன் வந்துட்டார் நீனு இன்னும் வர்லீயே

 5. போலீசு வன்முறையா? அதைத்தான் எந்திரம் என்று சொல்லிவிட்டார்களே! எந்திரத்தை தண்டிக்கமுடியுமா?

  என்னுடைய ஓட்டு இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 50.000 ரூபாய்…..ஜெய்கிந்.

 6. காலையில் கிருஷ்ணா கமிசனின் இடைக்கால அறிக்கை படித்து, மிக அபத்தமாக இருந்தேன். அப்படியே அரசு கருத்தை கிருஷ்ணா வாந்தியெடுத்திருந்தார். காவல்துறையின் அறிக்கையிலேயே, கமிசனர் ராதாகிருஷ்ணன் 4.30 மணிக்கே நீதிமன்றத்தில் இருந்ததாமே! கிருஷ்ணா 5.14 என்கிறார்.

  கடந்த காலங்களில், காவல்துறை பல இடங்களிலும் அத்துமீறி நடந்திருக்கிறது. இப்பொழுது, நீதிமன்ற வளாகத்தில், அதுவும் வழக்கறிஞர்கள் மீதே எனும் பொழுது, காவல்துறைக்கு குளிர்விட்டு போகும்.

  வழக்கறிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இது மக்கள் பிரச்சனையும் கூட.

  செல்வபெருமாள் நீதிமன்றங்கள் முடங்கி கிடப்பது குறித்து பதைபதைக்கிறார். நீதியே செத்துக்கிடப்பது பற்றி அவருக்கு கோபம் வர மறுக்கிறது.

  மற்ற கட்சிகளுக்கு “ஜனநாயகத்தின்” மேல் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, “ஜனநாயகத்தின்” மீது சிபிஎம் காரர்களுக்கு நிறைய மூடநம்பிக்கை இருப்பது மட்டும் தெரிகிறது.

 7. …if the lawyers are hooligans, mylord srikrishna, who are you (the judges) then?

  plz click the link below:

  http://www.judgesplot4plot.com/

  any chance of recommending guidelines for yourselves?

  “Let he who is without sin cast the first stone.”

  POLITICIANS BEWARE:

  few of you are throwing chapels etc each other on yourselves in assembly. mylord srkrishna would recommend the police to bark in to assembly and attack entire members and ransack the assembly.

 8. சம்பந்தம் இல்லாவிட்டாலும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது.

  சில வாரங்கள் முன்னால் பம்பாய் தாக்குதல்கள் பற்றி பல பதிவுகள் எழுதப்பட்டன. நான் உட்பட்ட பலரும் வரிந்து கட்டிக்கொண்டு மறுமொழிகள் எழுதி தள்ளினோம். அப்போது வினவு, சாதாரணமாக வினவுடன் ஒத்துப்போகும் கலகம் மற்றும் பலரும் இந்த தாக்குதல்களுக்கு மூல காரணம் என்ன என்று பார்க்கமால் பாகிஸ்தானிய தீவிரவாதிகளை கண்டிக்கக் கூடாது, முஸ்லிம் தீவிரவாதம் இந்து தீவிரவாதத்திலிருந்தே கிளம்புகிறது என்று வாதித்தனர். (இந்து தீவிரவாதம் எங்கிருந்து கிளம்புகிறது என்று கேட்டால் கலகம் வாயே திறக்கவில்லை, வினவு சமயம் கிடைக்கும்போது பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்)

  இப்போது இங்கு வினவு சொல்கிறார் // ஆனால் கமிஷனோ “காவல்துறை இந்த அளவு ஆத்திரம் கொள்வதற்கு வழக்குரைஞர்கள் எப்படி காரணமாக இருந்திருக்கிறார்கள்?” என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு ஆராய்ந்திருக்கிறது. // இது தவறு என்று வாதிடுகிறார். 🙂

  மூல காரணங்களை ஒரு கமிஷன் ஆராய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் கமிஷனுக்கு கொடுக்கப்பட்ட parameters என்ன என்று எனக்கு தெரியாது. வினவு சொல்வதை பார்த்தால் parameters மிகவும் குறுகியதாக இருக்கும் போல தெரிகிறது. வினவு, இதை உறுதிப்படுத்த முடியுமா? கொடுக்கப்பட்ட parameters-க்கு வெளியே போக வலிமையான காரணங்கள் இருக்க வேண்டும். இரண்டு நாளில் அப்படி எந்த காரணமும் கிடைத்துவிடாது.

  ஒரு கமிஷன், இரண்டு நாள் விசாரணை, ஒரு interim report, அதற்கு பிறகு ஸ்ரீகிருஷ்ணா தொடர மாட்டேன் என்று சொல்வது, சுப்ரீம் கோர்ட்டும் அந்த கமிஷன், interim report எதுவும் தேவையில்லை என்று சொல்வது – இது என்ன கேலிக்கூத்தாக இருக்கிறது? எதற்கு தேவை இல்லாமல் எல்லார் நேரத்தையும் அரசு பணத்தையும் வீணடிக்கிறார்கள்?

 9. வணக்கம் ஆர்.வி, உங்கைளப்போல் கொள்கை உறுதி கொண்டவர்களாக இந்த அரசியல் வாதிகளும் அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தால் நாடு உருப்படும்.
  ஒரு பிரச்சனைக்கு மூலம், மூலகாரணம் கண்டு அதில் இருந்து நீங்கள் உங்கள் நியாய தீர்ப்பை வழங்களாம். முஸ்லீம் தீவிரவாதிகள் உருவாவதற்கு இந்து தீவிரவாதிகளே காரணம், இந்து தீவிரவாதிகள் உருவாவதற்கு நான் அறிந்தவரை அரசியல்வாதிகளின் ஓட்டுப்பிச்சை, சானாதானிகளின் சாதி மற்றும் மதவெறியும்தான் காரணம், ரத ஓட்டமும் அதை தொடர்ந்த வன்முறை வெறியாட்டமும் அதற்கு மறுக்கப்பட்ட சமூக நீதியும்தான் தீவிர‌முஸ்லீம்களின் தீவிரவாத செயல்பாடுகளுக்கு காரணம். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு அதன் குடிமக்கள் இஸ்லாமியர்களாக‌வோ இல்லை கிருஸ்தவர்களாகவோ இருந்தால் அவர்களை வன்முறையால் அடக்குவது என்ன நியாயமோ? இங்கு காவல்துறையின் வன்முறைக்கு காரணம் வழக்குரைஞர்களின் அரசுக்கெதிரான போராட்டமும் அதன் விளைவாக அரசுக்கு ஏற்பட்ட தலைவலியும், முட்டையால் நாற்காலி உடைந்துவிடுமோ என்ற பயமும்தான் காரணம். நேற்று நடைபெற்ற மாநாட்டிற்கு வந்தவர்கள் போலீசைபார்த்து செய்த சைகைகள் போலீசுக்கு வெறியைதான் ஏற்படுத்தி இருக்க வேண்டும் ஆனால் இப்போது இருந்த இந்த பொறுமை!? வழக்குரைஞர்களை, அவர்கள் உடைமைகளை தாக்கும்போது ஏன் இல்லை?

 10. போராட்டம் சரியான திசைவழியை நோக்கி செல்லும் வரை காத்திருந்த, வழக்கு மட்டுமே போட்ட போலிசும், அரசும், மத்திய அரசையும், அதன் வெளியுறவு கொள்கையையும் நோக்கி போராட்டம் திரும்புவதை கண்டவுடன் தனது வழக்கமான அராஜகத்தை கட்டவிழித்து விட்டுள்ளது. உதாரணம், உயர்நீதிமன்ற தாக்குதல், சீமான் கைது, கொளத்தூர் மணி கைது, ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை. விளிம்பில் இருந்து போரட்டம் மையத்தை நோக்கி நகருகின்றது. தேர்தல் வந்துவிட்டது, எல்லா பசப்பு மொழியையும் எல்லா ஓட்டு கட்சியும் பேச ஆரம்பித்துவிட்டது. தற்பொழுது தேவை சரியான வழிகாட்டும் அரசியல் தலைமை மட்டுமே.

 11. ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் எப்படியோ போகட்டும், சுப்ரீம் கோர்ட்டே இடக்கையால் தள்ளிவிட்டது. இனி ஸ்ரீகல்கிஅவதாரம் (கோகலே) வந்துவிட்டது. டும்.. டும்.. டும்..

 12. I dont know how to use Tamil font for email therefore i am using english. It is like justifying Modi’s assault on the Muslims. The governments have been doing this and finally they have caught up with the advocates. The advocates do not claim any previleges as rightly discussed in your post. The question is, if they can behave in such a manner against advocates who question every misdeed of the police and government, what will happen to the common man. i am connected to criminal law for over 32 years now. I have seen so much atrocities by the police in my capacity as a criminal court staff for 22 years and as an advocate for the remaining period. The only force that was acting as a deterrent to the police was the fear for the advocates. The report seeks to remove that fear from the police.
  there is one other reason for the emboldening of the police. the refusal of the judiciary to exercise its powers on the pretense that they would be encroaching upon the executive. If you go through the “guidance to magistrates”, a handbook, even a magistrate is empowered to raid and search a police station, seize records and initiate action suo motu. there were magistrates in the old times who kept the police under a tight leash. Earlier, the investigating officer was held responsible for every acquittal and entries used to be made about his lapses. this acted as a protection in two ways. The police was afraid to file false cases and the invetigation was top notch. slowly the lower judiciary lost its independence. norms for disposal were fixed. the magistrates were told by the higher judiciary not to bother about miscarriage of justice by disposing cases wihtin a timeframe. the lower judiciary was also told not to bother too much about the innocence of the accused and the higher judiciary will correct any mistake. they were mere words, higher judicary increasingly became overloaded and eventually the higher judicary also failed in its duty to render justice. i have seen innocents getting convicted by the trial court and the conviction getting confirmed by even by the supreme court. to add to all this some pliable magistrates, who depended solely on the police, did whatever the police asked. I can say with confidence that every FIR in a murder case gets backdated by magistrates to help the police. there were many occasions such happenings were found out by the high courts. still they allowed the police to do this in the name of maintaining law and order. Now, the police has almost forgotten that they derive their powers from courts and the courts are guided by advocates in arriving at justice. the result is for everyone to see.
  Judiciary is the real culprit for the behaviour of the police. Government has its own reasons for its over dependence on the police, but the judiicary has no reasons, except ofcourse that it is dependent on the government. God save justice in this country.
  rahamath ali a.m.

 13. Now the report of Srikrishna is available. He is right in tracing the background of the events that led to the brutal police action on 19 / 2 . He is also right in stating that the politically motivated pro LTTE lawyers were responsible for the volatile atmosphere prevailing within the High court campus before 19 / 2 . As an average citizen I thing that the lawyers are failing in discharging the responsibility towards their clients when they went on strike for political reasons not dorectly connected to the profession. This has been confessed by many a lawyers when I went to court as a litigant public. And it is also said that the present boycot of courts before 18 / 2 /09 was forced on them. But whatever might have happened prior to 19 / 2 the police brutality can not be justified as has been done by Srikrishna, a retired judge of the Supreme Court. When he rightly names the erring lawyers he fails to name the police officers who were resonsible for beating lawyers , judges , litigants ,staff for obvious reasons. In fact he wants to protect them.

 14. இதில் வழக்கரைஞர்கள் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். கீழ் நிலை காவல்துறைக்கும் வழக்குரைஞர்களுக்கும் இடையே அடிப்படையில் எவ்வித சண்டையும் இல்லை என்பதை இருவரும் விளங்கிக்கொள்ளவில்லை என நான் நினைக்கிறேன். மேலதிகாரிகளின் கூத்திற்கு ஆடியவர்கள் தான் இவர்கள். கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அடிப்படையில் இவர்களுக்கும் வழக்குரைஞர்களுக்கும் எவ்வித விரோதங்களும் தேவையற்றது என எண்ணுகிறேன். இது பற்றி வழக்குரைஞர்கள் எதாவது அறிக்கை விட்டால் நல்லது. காரணம் ஓரு தனிமனிதனின் சுயநலமே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம். அதைவிடுத்து ஆர்வி போன்றவர்கள் திசைதிருப்புவதற்காகவே பதிலழிக்கிறார்கள். ஈழப்போரட்டத்திற்கு ஆதவரவாக செயற்றபட்டபடியால் தான் இவ்வளவு கூத்து நடந்துள்ளது என்பது அனைவரும் அறிந்தது.

 15. சிங்கள இனவாத அரசின் கொலை செயல்பாடுகள் இருக்கட்டும்; இந்திய மற்றும் தமிழ் அரசியல் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இந்த இனபடுகொலையே அரங்கேறிக்க்கொண்டிருக்கிறது. சாட்டிலைகளையும் தொலைகாட்சிகளின் மூலமும் உலகத்துடன் தனது தொண்டர் படையுடனும் தனது கொள்கைகளை சிலேடை வசனமாக எடுத்துரைக்கும் ஒரு தமிழ் தலைவர் “தமிழ் பற்று” வேண்டும் என்கிறார்; அங்கே இலங்கையில் “தமிழ் செல்வன்” மீது குண்டு விழுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள உழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஆயுத கொள்முதல் வியாபாரிகளும் சாட்டிலை தகவல்களுடன் தமிழர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து நடத்து தமிழ் இனபடுகொலை இது.

 16. A Lament for democracy
  A letter from a lawyer…

  February 19th was the start of the worst crisis this Bar has seen so far.
  It has also been the start of a phase of never-before-seen unity amongst
  the Bar. Let us face it, it also has shocked us to see the lack of public and media support we have……………………………………………………….

  Yet, the cause we are fighting for is one of the fundamentals that keep a
  democracy vibrant. For those amongst the public who talk of degradation of
  values and “advocates hooliganism”, we ask the Citizenry – and do not
  think ‘Citizenry’ comprises of just the well connected amongst you, who
  can pick up your phones and call a bureaucrat or a political player to
  help you when you are in trouble, but the real ‘Citizenry’, the common man
  who has no bureaucratic or political god-fathers – we ask you to sit back
  and think if any of you have ever been able to walk into a police station
  and come out with your dignity intact; we ask you to think of those times
  you felt helpless when the government of the day wanted to take your
  Marina beach and make it into a government building; we ask you to think
  of those times when your kids or maidservants families have been picked up
  for “questioning” and detained without an arrest for days together; we ask
  you to think of house demolition notices with 24 hours notice; cricket
  matches being held under huge wasteful wattage when your kids do not have
  the electricity to study for her exams; all your hard saved money
  invested in a small one-ground property somewhere which takes the fancy of
  the local politician who sends his men to squat on your property; of women
  visiting their husbands in jail being raped by the custodians – we ask you
  to think of those of us who have worn the black robes to keep asking the
  government questions, to challenge them into positive action, to ensure
  that power never becomes absolute because while power itself corrupts, god
  save us from a situation where absolute power corrupts absolutely.

  This is not an appeal for your sympathy for the cause we are fighting for
  – we can’t blame you for thinking it is “the lawyers cause’ – yes, it is
  difficult to think independently when leading Chennai newspapers actively
  and aggressively followed a “blame the lawyers” strategy. But you must
  know that 6 judges of the Madras High Court were assaulted, clients who
  had come to the High Court campus were beaten up, un-involved and innocent lawyers sitting inside their offices 500 metres away were beaten up, the judicial chambers were treated with contempt, the Acting Chief Justice’s
  calls to the Commissioner of Police were not responded to, women lawyers
  sitting inside the court halls on the second floor of the city courts were
  beaten up, lawyers who went to protect the judges were beaten up – now
  tell me, do you want the judges who decide your matters against the
  government to decide with the fear of punishment by the government? Do you want judges to start fearing the government? And do you want lawyers to meekly submit to all the Affidavits filed by the government in your cases?

  This is the Issue.

  Even the Srikrishna committee report that enquired into the incident categorically finds that the Police action was excessive,
  disproportionate, targeted at the entire community and not just the
  miscreants. The Report says that the Police action is “utterly
  despicable and needs to be roundly condemned”. The Report says “it was as
  if the police force, as a body went beserk… The Police did not spare the
  children’s crèche also from the hail of stones. Luckily however no child
  was injured though it did traumatize some of the children in the crèche
  and the ayah’s attending to them”. For some reason however, the media and
  public opinion choose to read selectively the Report as though the lawyer
  community is at blame.

  Believe me, for those of us used to cracking those ‘lawyer jokes’ let us
  think again before laughing at them. Because on 19th Feb I took a long
  look at my profession and felt a deep sense of pride. I belonged to a noble cause.

  Yes, there have been black sheep – pray, tell me where there have not
  been? Engineers who use substandard material to build bridges that
  collapse, doctors involved in sex rackets and organ-stealing, teachers
  involved in child abuse, bureaucrats who push the files that help people
  siphon off constituency funds, policemen who gangrape and collect hafta,
  bankers who give away public money to the undeserving business and never
  collect it back, chartered accountants who cause investors to lose money
  on a Satyam scam, stock brokers who can ruin families with their scams,
  NGO’s who use the pretence of public work to route in foreign money with
  an agenda; politicians who whip up mass hysteria for votes – tell me,
  where do you not have black sheep and degradation? And yes, we do need to
  clean up our act and set our own house in order, just like most
  professions do.

  Can we therefore condemn the entire class of those professions and beat them up? Now, that has been what has happened – “let us teach these lawyers and judges and the entire legal system a lesson” – with this
  agenda some men in uniform, and ordered by some politician, targeted an
  entire community. And like the Germans watched on while the Holocaust
  happened – are you sitting back and watching?

  Remember, somebody had said – “when they came to get someone down the
  street, I just watched; when they came to get my neighbour, I just
  watched; then they came to get me….”

  Remember Emergency has happened – in this very county – not too long ago.
  Remember democracy requires you to protect your judicial institutions –
  because that is the check and balance that ensures that absolute power
  does not corrupt absolutely.

  JaiHind!

 17. Inthiyavile, Intha Kurukedda Sila Arasiyalvathikalai
  Kaddivaththu koluththanum. Ivankalalathan Naddukke
  Avamanam. Ellapitachanaikkum Ivankathan Karanam.
  Iniyum 22 Nutrandile Makkalthan vilippayirukkanum.

  SEYTHUKADDU ILLA SETHTHUMADI:

  Inthiyana Irunthal Un Thamilenra adaiyalam Alinthidum

  Thamilanaka Muthlil Iru

  UTHARANAM:
  Nee Inthiyanaka Irunthal………
  SEMMOLI BORADDAM ETHUKKU?

  Sila padsonthikal Solluramathiri muthalil nan indian
  Appuramthan Thamilan.

  Utharanam._
  Rajani — Thamilnaddile Solluvar INDIAN.
  Karnadakavile Solluvar Karnadakan.

  Vanthan, Varaththankalin Sollukala Iniyum Keddinkalenral Thamilnadu Enra peyarai
  VANTHAN, VARATHTHAN NADU Enru maththidunka.

 18. PRESS RELEASE
  (obviously not going to be published by any media)

  The State Level Joint Action Committee of bar associations, on behalf of the lawyers of Tamil Nadu, does not accept the interim report of the Justice B.N. Srikrishna Commission. The report is riddled with factual contradictions and inconsistencies.
  The incidents in the State over the Srilankan Tamils issue and the caste dimensions of the Chidambaram Temple take over, seem to have clouded the Commission’s approach leading to his condoning the gross constitutional transgression committed by the State Police into the independence of the judiciary. No reason is offered by the Commission for not recommending any action against the police, who even according to the Commission went beserk using excessive force, raining lathi blows, targeting heads of judges, staff, lawyers and litigants and wantonly breaking court property. Even the police assault on a Hon’ble judge of the High Court is dismissed as having been invited by an “unduly brave” judge!
  The Commission’s remark that the entry of the armed police into the Court’s premises without the permission of the Chief Justice was merely ‘irregular’, instead of severely castigating such intrusion, makes one recall sadly the now infamous ‘habeas corpus’ judgment when the Supreme Court felt overwhelmed by the declaration of emergency to suspend the ‘right to life’ itself. No ‘provocation’ can provide justification for the police to enter and run riot into courts and the Report if accepted portends dangerous consequences similar to that witnessed in our neighbouring nation when courts were dictated to by a military ruler. The experiences in such countries show that even the gravest of situations cannot warrant an assault on Courts and Judges, independence of the judiciary is a basic feature of our Constitution and the legal community will not allow this to be compromised at any cost.

  By the same logic, the observations of the Commission that the Madras High Court has adopted a “Soft Policy” towards the Advocates is most unwarranted, when the High Court has taken all steps in accordance with law in taking action on specific complaints received against any Advocate. The commission consisting of a retired judge of a Supreme Court exceeded its limits in criticizing the

  functioning of the High Court, a Constitutional authority, which is in poor taste.

  The Commission’s justification of the presence of armed policemen in the Court campus and the use of force based on the order of the High Court dated 2/02/2007 in W.P.No.3197 of 2002, makes a mockery of the High Court’s order which actually directed police to ensure protection of the heritage building and its precincts by permanent security presence and not its desecration. The ghastliness of the police action is heightened by the fact that no public announcement was made that there was an unlawful assembly of lawyers and that they should disperse. The carnage in the High Court was similar to “Jalianwalabagh” and the Commission does not even advert to the absence of the mandatory “warning” by the police.

  The report relies entirely on the police version and video recordings on the specious reasoning that it had recording of the time while the evidence provided by the lawyers had no time line. No reference is made to statements given by judges, staff, litigants and lawyers, which admittedly the Commission had gathered. We understand that the video provided by the police was doctored.

  While TV channels all over the State showed Justice Arumuga Perumal Adityan pleading with the police not to assault the lawyers, the Commission refers only to the police version.

  The Commission says that the “official” video did not show the presence of the Commissioner of Police till about 05.14 p.m on 19/02/2009 and that there was lathi charge only at 5.46 pm. The Police has suppressed from the Commission F.I.R No.15/2009 registered on 19.02.2009 at the B-4 Police Station, High Court premises at about 7.20 p.m. on information provided by C.Jayakodi, Inspector of Police (Crime) Esplanade Police Station, which says that the police started the lathi charge at 3.30 p.m. on orders from the Deputy Commissioner of Police, Flower Bazaar. According to the FIR, the Commissioner of Police K. Radhakrishnan was in the High Court at 4.30 p.m. There is evidence to show the Commissioner of Police was present at the time Mr. Justice Arumugha Perumal Adityan was assaulted, which according to the police themselves is around 4.30 p.m. The Commission thus committed a grave error in exonerating the Commissioner of Police on the mistaken view that he was present only after 5.15pm.

  The observation of the Commission that the ‘mob of lawyers’ set fire to the Police station is clearly questionable, since the crowd at that time is clearly seen consisting of policemen in black and white uniform and coloured clothes and most lawyers had already taken shelter inside court-halls, having suffered severe lathi blows. The Commission makes no reference to the fact that there was no announcement by the police that there was an “unlawful assembly” of lawyers and that they should disperse.

  The Report reads as if the Lathicharge commenced only after the fire accident at the police station, but the whole world saw ‘live’ on TV channels that the lathicharge commenced at 3.30 p.m. and that the fire accident happened only after nearly two hours of lathicharge.

  The language used by Mr. B.N. Srikrishna to describe lawyers – “miscreants” “hooligans” ”minatory mob” “fat lawyer” does no justice to the gravity of the incidents and the seriousness of the enquiry. The lawyers confronted by a large posse of stone throwing armed police could hardly be expected not to retaliate in self defence.

  If the Commission had even noticed the video recording played to him by the lawyers, the “fat lawyer”, could be seen peacefully pleading with the police not to throw stones, pleading with his colleagues not to retaliate, waving his white shirt as a peace flag and ultimately approaching the police and arguing with them as only a true Gandhian could, he would not have remarked about his size alone but would have been impressed by the weight of his courage.

  Given the short time at his disposal, the Commission could not have come to any conclusive determination of the veracity of the evidence provided by the police which were not even provided to the lawyers. When the Commission did not intend to continue its enquiry, it should have refrained from making defamatory statements against lawyers gathered solely from the police video.

  Unfortunately, the State Government has evaded answering the question posed by the Supreme Court of India and the High Court “Who authorized the entry of armed policemen and who authorized the lathi charge”. The reluctance of the State government in answering this question before the High Court or the Supreme Court and before the Commission is a clear pointer to the complicity of the State and the fact that the assault on the judicial institution was a preplanned and predetermined one.

  The T.N. lawyers will continue to struggle to restore Rule of law and to oppose the Police raj in the State.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க