Wednesday, December 4, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!

ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!

-

highcourt-01

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

நீதிபதிகளை இவ்வாறு சித்தரிப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகிவிடுமோ? ஆகலாம். “நீதிபதியை அடிப்பது அவமதிப்பில்லை. அடித்ததை சொன்னால் அவமதிப்பா?” என்று கேட்கிறீர்களா – அது அப்படித்தான். சாக்கடைப் பிரச்சினை, குப்பைத் தொட்டிப் பிரச்சினைகளை suo moto வாக (யாரும் மனுச்செய்யாதபோதிலும தானே முன்வந்து) எடுத்துக் கொண்டு நீதி வழங்குபவர்கள் நீதியரசர்கள்.

பிப் 19 அன்று தானே அடிபட்ட பிரச்சினையில் “தானே முன்வந்து’ போலீசாரைக் கைது செய்யும்படி அவர்கள் ஆணை பிறப்பிக்கவில்லை. அப்படிப் பிறப்பித்திருந்தால் வழக்குரைஞர் போராட்டம் தேவையில்லை. இரகசியமாக அடி வாங்கியிருந்தால் கூட பரவாயில்லை. டி.வி காமெரா முன் உலகறிய அடிவாங்கியும் நீதித்துறை தன் ஆதிகாரத்தை செலுத்த மறுக்கிறது. சு.சாமியை முட்டையால் அடித்த பிரச்சினையில் வழக்குரைஞர்கள் மீது “கொலை முயற்சி” வழக்கு போட்டிருக்கிறது போலீசு. ஆனால் நீதிபதிகளைக் கட்டையால் அடித்த பிரச்சினையில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இதெல்லாம் கற்றுணர்ந்த நீதிபதிகளுக்குத் தெரியாதா? உச்ச நீதிமன்றத்துக்குப் புரியாதா? இந்த மவுனத்தை என்னவென்று புரிந்து கொள்வது? போலீசுக்கு நீதித்துறை பயந்துவிட்டது என்று சொல்லலாம். அது ஓரளவு உண்மை. ஆனால் முழு உண்மை அல்ல. சட்டமன்றம், நிர்வாகம், போலீசு, நீதித்துறை, சுதந்திர ஊடகங்கள் என்ற “ஜனநாயகத்தின் தூண்கள்” தனித்தனி நிறுவனங்கள் போலவும், ஒன்றை ஒன்று கட்டுப்படுத்துவதன் மூலம்,  இந்தத் தூண்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் கூறிவருகிறது ஆளும் வர்க்கம்.

உண்மை அதுவல்ல, அவை அனைத்தும் ஒரே அரசு எந்திரத்தின் பல கரங்கள்தான் என்பது இப்போது விளக்கமாகியிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்காகத் தொடங்கிய வழக்குரைஞர் போராட்டம் ‘வரம்பு மீறுவதை’ அரசின் எந்தக் கரமும் விரும்பவில்லை. அதன் விளைவுதான் தாக்குதல். தாக்குதலில் தாங்களே அடிபட்ட போதும் கூட நீதிபதிகள் சாதிக்கும் பெருந்தன்மையான மவுனத்திற்குக் காரணம், நாளை அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய பதவிகளோ, பதவி உயர்வுகளோ மட்டும் அல்ல. அவர்களுடைய மவுனத்திற்குக் காரணம் பொதுநலன். இந்த மோதல் ஒரு அரசமைப்பு நெருக்கடியாக மாறிவிடாமல் தடுப்பதன் மூலம் இந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவர்களுடைய ‘பொதுநலனக் கண்ணோட்டம்’.

இந்தப் பொதுநலக் கண்ணோட்டத்தின் உண்மையான பெயர் போலீசு இராச்சியம். சீமான் என்.எஸ்.ஏவில் கைது, கொளத்தூர் மணி கைது, சோனியாவை சேலை கட்டிய முசோலினி என்று பேசியதற்காக நாஞ்சில் சம்பத் கைது, வினவு கருத்துப் படத்திற்காக கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்களுக்கு பிணையில்லை, கல்லூரி மாணவரிடம் பிரச்சாரம் செய்ததற்காக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் கைது… இவையெல்லாம் ஈழ ஆதரவுப் போராட்டங்களின் மீதான ஒடுக்குமுறைகள் மட்டுமல்ல. போலீசு இராச்சியம் தொடங்குவதன் அறிவிப்புகள்.

உயர்நீதி மன்றப் பிரச்சினையில் போலீசைத் தண்டிக்கவேண்டும் என்ற வழக்குரைஞர்களின் கோரிக்கையை எந்த ஓட்டுக் கட்சியும் ஆதரிக்கவில்லை. கருணாநிதியைத் திட்டுவது என்பதற்கு மேல் ஒரு படி கூட யாரும் தாண்டிக் கால் வைப்பதில்லை. அரசின் மற்றெல்லா உறுப்புகளுடைய செயல்பாடுகளையும் மெல்லமெல்ல போலீசு கைப்பற்றிக் கொண்டு வருகிறது. கடைசியாக நீதித்துறையை மேலாதிக்கம் செய்யும் நடவடிக்கையும் இனிதே நிறைவேறியிருக்கிறது.

சிங்கள இராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராக தமிழகம் நடத்திய போராட்டத்தின் முடிவில், போலீசு கொடுங்கோன்மை நிலைநாட்டப் பட்டிருக்கிறது. அங்கே தன்னுரிமைக்காகப் போராடும் குற்றத்துக்காக மீது குண்டுவீச்சு. இங்கே தன்னுரிமையை ஆதரித்துக் குரல் கொடுக்கும் குற்றத்துக்கே தடியடி. அதற்குப் பெயர் இராணுவ ஆட்சியாம்! இதற்குப் பெயர் ஜனநாயகமாம்!

இன்று உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை எதிர்த்து வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தில் இடம் பெறும் முழக்கங்களையும், கேலிச்சித்திரத்தையும் இங்கே உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இந்தப் போராட்டத்தை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

 

 

 

 

1 – Sometimes context is everything….”

THE HINDU editorial  dtd 7th March 8, 2009 hailing Srikrishna report.

விசாரணைக்கு வந்த ஸ்ரீகிருஷ்ணா, தி.மு.க சார்பு முன்னாள் நீதிபதி மோகன் வீட்டில் விருந்துண்டது ஏன்?

அறிக்கை வெளிவருவதற்கு முன்பே,  “ஸ்ரீகிருஷ்ணா எனது நண்பர்” என்றும்”ஐகோர்ட் சம்பவத்தில் வக்கீல் – போலீஸ் இரண்டு பேர் மீதும்தான் தவறு” என்றும் முன்னாள் நீதிபதி மோகன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது எப்படி?

தாமிரவருணிப் படுகொலையை “ஆற்றில் விழுந்து செத்தார்கள்”என்று கூறி நீதிபதி மோகன் அன்று கொடுத்த அறிக்கையும்,இன்று ஸ்ரீகிருஷ்ணா கொடுத்திருக்கும் அறிக்கையும் ‘அசப்பில்’ ஒரே மாதிரி இருப்பது ஏன்?

Yes, SOMETIMES CONTEXT IS EVERYTHING !

2 – “Sometimes context is everything….”

THE HINDU editorial  dtd 7th March 8, 2009 hailing Srikrishna report.

2006 முதல் 2008 வரை இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் 20 பேர். அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள் அதைவிட அதிகம்.

உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் முதலிடம் இராக். இரண்டாவது இடம் இலங்கை.

ஸ்ரீலங்கா மாஸ்  மீடியா சொசைட்டி என்ற அரசின் அடிவருடி அமைப்பு 2008 இல் வழங்கிய விருதை இலங்கைப் பத்திரிகையான சண்டே டைம்ஸ் புறக்கணித்தது. அதே அமைப்பு வழங்கிய ‘ஆசியாவின் சிறந்த பத்திரிகையாளர்’ என்ற விருதை
‘இந்து’ ராம் வாங்கிக்கொண்டார்.

சமீபத்தில் இந்து ராமின் பாட்டி இறந்ததற்கு ராஜபக்சே இரங்கல் செய்தி அனுப்பினார்.

Yes, SOMETIMES CONTEXT IS EVERYTHING !

3-“Sometimes context is everything….”

THE HINDU editorial  dtd 7th March 8, 2009 hailing Srikrishna report.
சுப்பிரமணிய சாமி முட்டையடி பட்டால் ….. சோ  தலையங்கம்

சோ வை மொழிபெயர்த்தால் …….  இந்து வின் ஆவேசக் கட்டுரைகள்

இந்து செய்திகளைத் தொகுத்தால் …….   ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை

” I feel personally vindicated by the factual narration in the Srikrishna report” -Subramanian Swamy, Indian Exp, March, 7

Yes, SOMETIMES CONTEXT IS EVERYTHING !

4

உயர்நீதிமன்ற காவல் நிலையத்தை எரித்தது யார்?
அங்கிருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள்
வெடிக்காத மர்மம் என்ன?
எரித்தவர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தி விட்டார்களா?

5

முட்டை அடித்ததற்கு 5 நீதிபதி விசாரணை!
நீதிபதியையே அடித்தால்
எத்தனை நீதிபதிகள் விசாரணை?

6

சு.சாமியின் முகத்தில் முட்டை வழிந்தால் … 356 !!!
வக்கீல்களின் முகத்தில் இரத்தம் வழிந்தால்….
விசாரணைக் கமிஷனா???

 

 

  1. //உயர்நீதிமன்ற காவல் நிலையத்தை எரித்தது யார்?
    அங்கிருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள்
    வெடிக்காத மர்மம் என்ன?
    எரித்தவர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தி விட்டார்களா?//

    அதையெல்லாம் இலங்கைக்கு அனுப்பிட்டாய்ங்களாம்…

  2. ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் – மறுமொழியில் ரஹமத் அலி கூறியவையின் ஒரு பகுதியை நீதிபதிகளின் யோக்கியதைக்கு சான்றாக தருகிறேன். “the magistrates were told by the higher judiciary not to bother about miscarriage of justice by disposing cases wihtin a timeframe. the lower judiciary was also told not to bother too much about the innocence of the accused and the higher judiciary will correct any mistake. they were mere words, higher judicary increasingly became overloaded and eventually the higher judicary also failed in its duty to render justice. i have seen innocents getting convicted by the trial court and the conviction getting confirmed by even by the supreme court. to add to all this some pliable magistrates, who depended solely on the police, did whatever the police asked.”

  3. முக்கி முக்கி தமிழ் பேசும் எவனுமே, பக்கத்து இலையைதான் நக்குறான். அட நம்ம இந்து ராமையும், சு சாமியையும் தான் சொல்கிறேன்.

  4. சாமிங்களா, தொடங்கியதை(ஈழ மக்களுக்கானது) விட்டுட்டீங்களே?
    யாருக்கு வெற்றி? சொதப்பீட்டீங்களே?

  5. போலீஸ் அராஜகம், ஒரு தலைப் பட்ச interim report, ஈழப் பிரச்சினையில் வக்கீல்கள் தலையிட வேண்டுமா என்பதைப் பற்றிய என் கருத்துக்களைத் தவிர்த்து வக்கீல்களின் approach பற்றி மட்டுமே இங்கு எழுதுகிறேன்.

    ஈழ ஆதரவுக் கொள்கையை ஒழுங்காக எடுத்து சொல்ல ஒரு statesman கூட வக்கீல்கள் பக்கம் இல்லாமல் போனது வெட்கக்கேடு. அரை வேக்காடுகள் அழுகிய முட்டையை சு. சாமி மீது வீசி தாங்களே தங்களைப் பாராட்டிக் கொண்டுவிட்டு அடுத்த நாள் கைதாவதைத் தவிர்க்க முயற்சித்ததால்தான் போலீஸ் காரர்களால் அத்து மீற முடிந்தது. உண்மையாகவே ஈழத்தமிழர்கள் நலனைப் பற்றிப் பேசுவதற்கு யாரும் இல்லாமல் இப்போது வக்கீல்கள் எல்லோரும் தன் பிரச்சினையப் பார்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஒரு சில முட்டாள்கள் உணர்ச்சிவசப் பட்டு எல்லை மீறியதால் மொத்தப் போராட்டமும் திசை மாறி விட்டது. மொத்தத்தில் இது வக்கீல்களுக்குத் தோல்விதான்.

    வினவு கூட இந்த நடத்தையால் இவர்களது அடிப்படையான வாதம் அடிபட்டுப் போகும் என்று உணறாமல் முட்டை அடியை பெருமைப் படுத்திக் கொண்டாடியது வருந்தத் தக்கது.

    வக்கீல்கள் தற்காலிக சந்தோஷத்தை ஒதுக்கி, எடுத்துக் கொண்ட கொள்கைக்குத் தேவையான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடு பட்டிருக்க வேண்டும்

  6. The government has suppressed the students’ struggle by closing the colleges indefinitely. The lawyers’ struggle has been put to an end by unleashing violence of police on them. All these measures recall the previous Jaya government where the DMK bore t he brunt of damage. Karunanithi during the ADMK regime said Jaya had turned Tamil Nadu into dark by giving power to police.The irony here is the same person five years after in his granddaughter’s wedding described police as one of his eyes–which are considered to be the light of our body.

  7. வித்தகனின் கருத்து பொருத்தமானது.

    தமிழின உணர்வு முதன்மை பெறவேண்டும், உணர்ச்சியல்ல.

    உணர்வுதான் மெல்லென ஒடும் தண்ணீர். அது கல்லையும் ஊடறத்துப் பாயும்.

  8. கடந்த காலங்களில், நீதியையும், நீதிபதிகளின் மரியாதையயும் காப்பதற்கு என்னென்ன “மைலார்டுகள்” செய்தார்கள் என்பதை மலரும் நினைவுகளாக ஒட்டிப்பார்க்கும் பொழுது, உங்கள் கார்ட்டூன் சிரிப்பை வரவழைத்தாலும் ஆழமானதாக படுகிறது.

    //அனைத்தும் ஒரே அரசு எந்திரத்தின் பல கரங்கள் தான்//

    ஒரு நிகழ்வு பல புரியாத விசயங்களை புரியவைத்துவிடுகிறது

  9. // ஆனால் நீதிபதிகளைக் கட்டையால் அடித்த பிரச்சினையில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. //
    இது ரொம்பவே ஓவர். போலீஸ் தடியடிக்காக எந்த வழக்கும் எப்போதும் எந்த ஆட்சியிலும் எந்த நாட்டிலும் எந்த இசத்திலும் பதிவு செய்யப்படுவதில்லை.

    // இவையெல்லாம் ஈழ ஆதரவுப் போராட்டங்களின் மீதான ஒடுக்குமுறைகள் மட்டுமல்ல. போலீசு இராச்சியம் தொடங்குவதன் அறிவிப்புகள். //
    மீண்டும் மீண்டும் மிகைபடுத்துகிறீர்கள். போலீஸ் அத்து மீறி இருக்கிறது. இதை ஸ்ரீகிருஷ்ணா உட்பட யாரும் மறுத்து நான் இது வரை பார்க்கவில்லை. போலீசை ஆதரித்து பேசுபவர்களும் போலீஸ் செய்தது சரி என்று போலீஸ் துறையைத் தவிர ஒருவரும் சொல்லி நான் பார்க்கவில்லை. அவர்கள் தவறுக்கு காரணங்கள் இருக்கின்றன, அவர்கள் அத்து மீறி விட்டார்கள், வக்கீல்கள் மீது அதிக தவறு இருக்கிறது, வக்கீல்கள்தான் முதல் தவறு செய்தவர்கள் என்றுதான் வாதிடுகிறார்கள். ஆனால் இங்கே பலரும், சீமானின் கருத்துரிமைக்காக போராடும் ம.க.இ.க. மருதியன் உட்பட பலரும், இங்கே வக்கீல்கள் ஒரு பிழையும் இல்லாதவர்கள் போல பேசுகின்றனர். வினவு, நீங்களும் வெளிப்படையாக சொல்லுங்கள் – நானும் மீண்டும் ஒரு முறை என்னடைய பதில் கிடைக்காத கேள்விய நினைவூட்டுகிறேன் – இந்த நீதமன்ற சம்பவங்களில் வக்கீல்கள் குற்றமற்றவர்களா?

  10. குறிப்பிட்ட இந்த பிரச்சனையில் வக்கீல்கள் குற்றமற்றவர்கள் என்பது இன்னும் உங்களுக்கு புரியவில்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

  11. வக்கீல்கள் குற்றமற்றவர்கள் என்ற வாதம் சரியல்ல. நீதி மன்றத்தில் வைத்து சு. சாமியின் மீது முட்டை வீசியது தவறு. அவரை சாதிப் பேர் சொல்லித்திட்டியது தவறு. அவனைக் கைது செய் அதன் பின் தான் நாங்கள் வருவோம் என்று போலீசிடம் சொன்னதும் தவறு. இது வக்கீல்கள் செய்த தவறுகள். போலீஸ் செய்த குற்றப் பட்டியல் தனி.

    வேடிக்கை என்னவென்றால் எனக்கு் எள்ளளவும் மரியாதை இல்லாத என்றுமே நான் விரும்பாத சு.சாமி நாம் கை நீட்டிக் குறை சொல்லும் படி எந்தக் குற்றமும் செய்யாததே. மற்ற வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் இருக்கும் போது சிதம்பரம் கோவில் வழக்குக்கு ஆஜராக வந்தது தர்க்க ரீதியாக தவறுதானே தவிற அதற்கு முட்டை எறி தண்டனை தானாகவே ஒரு சில வக்கீல்கள் வழங்கியது அடி முட்டாள்தனம். சிந்திக்காமல் எடுத்த இந்த முடிவால் இன்று கவனம் திசை மாறி போராட்டம் பிசுபிசுத்துக் கொண்டிருக்கிறது.

  12. அதெல்லாம் இருக்கட்டும் ஆர்.வி

    சுசாமி எதுக்கு அங்கே வந்தார். ஏதாவது கருத்து உரிமையைப் பாதுகாப்பதற்காகவா வந்தார். இல்லையே… ஏற்கனவே அரசு போலீசு சட்டம் இதெல்லாம் வசதி உள்ளவனுக்குதான் என்று தெரிந்து கொண்ட மக்களுக்கு இருக்குற ஒரே புகலிடம் கடவுள் நம்பிக்கை. அதக் கூட காசு இருந்தாதான் பார்க்க விடுவேன் என்று சொல்லியும் அவங்க நம்பிக்கைய நோகடிக்கும் விதமாக அங்கே கோவிலில் மது மாது என் இருந்து கொண்டு நகை பணம என ஊழல் பேர்வழிகளாக இருந்த ஜெயா நிகர் தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஒரே சாதி என்பதற்காகத்தானே அந்த மாமா வந்தார். ஆகவே அவரது மனதில் இயல்பாக பிராமணரல்லாதோர் மீதான வன்மம் ஏகலைவன் மீது துரோணனுக்கு இருந்தது போல இருந்து தானே இருக்கும் அந்த சூழலில் ஏற்கனவே நடைபெறும் ஈழ ஆதரவு போராட்டத்தில் ஈடுபடுபவர்க்ள பற்றிய கோட்டா என்ற இழிவுபடுத்தும் கண்ணோட்டம் இருக்கும் ஒரு நபர், பொதுவாக அதிக அலம்பலுடன் வடிவேலு டைப்பில் பேசும் ஒரு நபர் வழக்கறிஞர்கள் பற்றி கமாண்ட் எதுவும் அடிக்காமல் போயிருப்பார் என்பதை உங்களாலாவது நம்ப முடிகின்றதா? எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ததுடன் கைது செய்யாமல் விட்டது தவறுதான்… இன்று வரை அதனை நடைமுறைப் படுத்த முடியவில்லையே ஏன்… தன்னை சிபிஎம் உறுப்பினராக அடையாளப்படுத்தும் இந்து பத்திரிக்கை இவனுக்காக தலையங்கம் எழுதிய காரணம் கருத்து சுதந்திரமா.. அது என்ன கருத்து … பார்ப்பன் அடிமைத்தனத்தை மறறவர்கள் ஏற்க வேண்டும் என்ற மரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதுதானே… இது கருத்து சுதந்திரம் என்றால் பார்ப்பனரல்லாதோரின் தாயின் பாலியல் ஒழுக்கத்தை பற்றிய பழைய சுசாமி மனுவை ஏற்றுக் கொண்டது போல தான் இப்போது ம் ஏற்க வேண்டும் என சொல்ல வருகின்றீர்கள்… கருத்து சுதந்திரம் மற்றவர்களின் மனித உரிமையை மீறியுள்ளதே அதற்கு என்ன பரிகாரம் செய்யப் போகின்றீர்கள்… .இங்கு…
    ஒரு வக்கீலை விட சுசாமி எப்படி முக்கியமானவர் அல்லது கைது செய்யப்படுவதை விட உயர்ந்த அல்லது சட்டத்திற்கும் மேலே நிற்பவர்…. ஒரு பார்ப்பன விழுமியத்திலிருந்தே கேட்கிறேன் ஓரு சங்கராச்சாரியை விட உயர்ந்தவரா… அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் என்ற பயமா… அப்படி என்றால் கூட யாரிடம் அனுமதி பெற்று அவரைக் கைது செய்ய வேண்டும்… சிபு சோரனை கைது செய்ய முடியுமென்றால் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத காபந்து அமைச்சரவையில் சிஐஏ வின் கண்ணசைவிற்கு ஏற்ப பல கோமாளிகள் ஆண்ட உலகமயமாக்கலுக்கு வித்திடுவதற்காக மாமா வேலை பார்த்த இந்த மாமா விற்கு ஒரு டிராபிக் ராமாசாமி அளவிற்கு கூட பாதுகாப்பு தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கேவலம் ஒரு கூமுட்டை அடித்ததற்காக 356 எனப் பேசுபவனை ஒரு கிராமத்து பிரசிடெண்டாக வைத்தால் கூட அறிவுளள் தமிழகத்து மக்கள் கொதித்து போவார்கள். எனவே இவன் போன்ற நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு சிறப்பாக செய்வது என்ற பெயரில் மக்களது வரிப்பணம் வீணடிக்கப் படுகின்றது. இதுபோல மைனாரிட்டியாக தேர்வான முன்னாள் அமைச்சரவையினர் அனைவருகக்கும் இதனை ரத்து செய்ய ஒரு தனிச்சட்டம் தேவை.
    சாதியை பற்றி திட்டியதாக சொன்னீர்கள் என்ன சொன்னார்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்… கொழுப்பெடுத்த பார்ப்பன கூட்டம் இதுதானே… என்ன தவறு உள்ளது … கட்சி அதன் கொள்கை என்ற வேறுபாடு எல்லாம் மீறி அந்த சாதிதான் ஒன்று திரண்டது திரண்டும் வருகிறது அப்புறம் எப்படி சொல்ல வேண்டும்… புரியவில்லை… சுசாமி சொன்ன கோட்டா விற்கு என்ன அர்த்தம் அதத்தானே திருப்பி சொன்னார்கள்… எல்லாவற்றுக்கும் மேல் ஒரு ஜனநாயக மறுப்புக்காக மட்டும்தானே சாதி என்பதற்காக கூட்டணி அமைத்தார்கள்… அதனை கருத்து சுதந்திரத்தை மதிகக்கும் தாங்கள் ஆதரிப்பது முரண் இல்லையா..
    உலகறிந்த அந்த மாமா அன்று சிஎன்என் டிவிக்கு பேட்டி தர்றான். இவங்க எல்லாம் மாமா பசங்க என்று வக்கீல்களை… விடுதலைப் புலிகளிடம் காசு வாங்கி என்னை அடித்தார்கள் என்று … கனிமொழியோட சுவிஸ் கணக்கு தொடங்க பட்டத ஸமெல் பண்ணத் தெரிந்த, பூங்கோதைக்கு ஆப்பு வைக்க கேஸட் போட ஆள்களை போலீசில் வைத்திருக்கும், பின்னாடியே சிஎன்என் ஐ வரவைத்து முன்னாடி போய் கோட்டா பசங்க என்று உளறி இஷ்யூ ஆக்க தெரிந்த, சம்பந்தமே இல்லது சந்திரசேகர் மாமாட்ட போய் காபினட் ஆகத் தெரிந்த, …. இப்பிடி எல்லாத்துக்குமே பாப்பு வேல பாக்காமலா அவரு போக முடியும்.. அதுக்காகவே அவருக்கு பாப்பான் என்று பேர் வைக்கலாமே…. இதெல்லாம் இருக்கட்டும்… வாதி ஒரு புகார் தருகிறான் பிரதிவாதி ஒரு புகார் தர்றான். இருவரையும் கைது செய்துதானே போலீஸ் விசாரிக்கும் அதுதானே நாட்டில் நடப்பில் உள்ளது.. 20 பேருமே முட்டை அடித்தார்கள் என்றால் கூட பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேஸ்வரன் மீது விழந்த பிரம்படி மக்கள் மீது மட்டுமல்ல அடித்த பாண்டிய மன்னன் மீதும்தானே விழுந்தது. அனைத்து வக்கீல்களுக்கும் விழுந்த அடி அடிக்க காரணமான சுசாமி மீது விழாத மர்மம் என்ன… கொலையே செய்தாலும் பார்ப்பானுக்கு தண்டணை கிடையாது என்ற மனுநீதியா… அல்லது லத்தியின் விளையாட்டு சுதந்திரமா…

    என்னை கேட்டால் இதெல்லாம் உண்மை இல்லை என நீங்கள் வாதிட்டாலும் சாதி அபிமானத்திற்காக ஒருவன் ஒரு அநீதியான காரியத்திற்கு ஆதரவாக வாதிட வந்தால் அதுவும் படித்தவனாக இருந்தால் கழுதையில ஏற்றி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி சாணியக் கரைச்சு ஊற்றி விளக்குமாற்றால் வெஞ்சாமரப் பார்வை பார்த்திருக்க வேண்டும். இதெல்லாம் கோட்டு சூட்டு போட்டு படிக்க வந்ததால மத்தவங்களுக்கு மறந்து போச்சுன்னு நினைக்கின்றேன். தே… பையா என்று என்னை அழைப்பதற்கு உங்களுக்கு கருத்து இருப்பதாகவும் அக்கருத்துக்கு நான் மதிப்பளித்து உங்களைப் பேச வைக்க அனுமதிக்க வேண்டுமென்றால் அதை அப்படியே vice versa ஆக நீங்கள் ஒத்துக கொள்வீர்களா… வக்கீல்கள் போலீஸ ஸ்டேஷனக் கொளுத்துனத்துக்கு என்ன ஆதாரம் இருக்கு…

  13. சட்டத்தின் கண்ணோட்டத்தில் தவறுகள் இருபக்கமும், அதாவது, ஒரு வக்கீல், அல்லது பல வக்கீல்கள். ஒரு போலீஸ், அல்லது பல போலீஸ்காரர்கள் என இருக்கிறது. இதை யாரும் மறுக்கமுடியாது. எத்தனை வக்கீல்கள் முட்டை எறிந்தார்கள்? நீங்கள் எதற்காக அங்கு கூடியிருந்த அத்தனை வக்கீல்களும் குற்றமற்றவர்களா? எனக் கேட்டு அத்தனைத்து வக்கீல்களும் குற்றவாளிகள் போன்ற கேள்விகளை தொடுக்கிறீர்கள்? ஒரு குற்றவாளியை தனித்து இனம்காண முடியாத போலீஸா தமிழ்நாட்டில் உள்ளது. இது போலீஸ் இலாகாவுக்கே வெட்கக்கேடானது இல்லையா? சுவாமிகள் தன்மீது முட்டை எறியும்படி ஒரு சில வக்கீல்களையும், பின்பு போலீஸ் தடியடிக்காக, ஒரு சில போலீஸ்காரர்களை அங்கு கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும்படி ஏற்பாடுகள் செய்திருக்கவும் வழிகள் உண்டா இல்லையா?.

  14. சென்னை: தங்களை குறை சொன்ன நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை வழக்கறிஞர்கள் எரித்து போராட்டம் நடத்தினர்.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்றும் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தங்களையும் குறை சொன்ன நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் நகலை எரித்தும் வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.

    அதே போல தமிழகத்தின் வேறு சில இடங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோரின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

    வீரமணி கண்டனம்:

    இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இப்போது நடைபெறும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் அரசியல் நுழைந்து விட்டது என்று அச்சம் பொதுவானவர்களுக்கு இருக்கிறது. அதைப் போக்க வேண்டிய கடமை வழக்கறிஞர் சகோதரர்களுக்கு உண்டு என்று நேற்றும் நாம் விடுத்த அறிக்கை நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை இப்போது நடந்துள்ள சம்பவங்கள் நிரூபித்துள்ளன.

    ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை எரிப்பதைக் கூட, அவர்கள் அதிருப்தியைக் காட்ட செய்தனர் என்று ஒரு சமாதானம் சிலர் கூறலாம்.

    ஆனால், முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் உருவப்படங்களை அங்கே எரிக்க வேண்டிய அவசியம் என்ன? எந்தவிதத்தில் அவ்விரு தலைவர்கள் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைக்குப் பொறுப்பாவார்கள்?

    தங்கள் போராட்டத்துக்கு காவல்துறை வரக்கூடாது என்று கூறிவிட்டு இப்படி நடந்துள்ளது. இது அப்பட்டமான அரசியல். திமுக-காங்கிரஸ் வழக்குரைஞர்களே, இதற்குப் பிறகும் உங்கள் கடமை என்ன? இது கண்டு ஆத்திரம் வர வேண்டாமா? வழக்கம்போல் கோஷ்டி கானம் பாடுவதுதானா?.

    நீங்கள் இந்த ‘அரசியல் நடத்துவோருடன்’ இல்லை என்று காட்டிட நீதிமன்றப் புறக்கணிப்பை கைவிட்டு விட்டு வழக்குரைஞர்களுக்குரிய கடமைகளை பணிகளைச் செய்வதோடு, இதற்கு அறவழியில் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டாமா?.

    இது பற்றி திராவிடர் கழக வழக்குரைஞர்களின் அவசரக் கூட்டம் நாளை எனது தலைமையில் பெரியார் திடலில் நடைபெறும்போது இதற்கென சில முடிவுகளை மேற்கொள்வோம். திமுக, காங்கிரஸ் வழக்குரைஞர்களே, உங்கள் கட்சித் தலைவர்கள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இழிவுபடுத்தப்படுவதை எப்படி பொறுத்துக் கொண்டிருக்கலாம்?.

    முதல்வர் கருணாநிதி நீதிமன்றங்களுக்கு இதுவரை இல்லா அளவுக்கு ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி, பற்பல ஊர்களில் புதிய புதிய கட்டங்களைக் கட்டித் திறந்து, பல வழக்குரைஞர்களுக்கு தொழிலகம் பெருக வசதி செய்து கொடுத்தவர். அதற்கு வழக்குரைஞர்கள் காட்டும் நன்றியா இது, வேதனை, வேதனை.

    வழக்குரைஞர்களே, பொதுமக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். பொது ஒழுக்கச் சிதைவு எவ்வளவு காலம் நீடிப்பது? என்று கூறியுள்ளார் வீரமணி.

  15. நீதிமன்ற புறக்கணிப்பைக் கைவிட்டு
    சட்ட ரீதியான வழியில் பரிகாரம் தேடிடவேண்டும்!

    தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

    சென்னை உயர்நீதிமன் றத்தில் கடந்த சில வாரங்களில் பல்வேறு விரும் பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டதன் விளை வாக, வழக்கறிஞர்களின் நீதி மன்றப் புறக்கணிப்பு தொடர் கிறது.

    உச்சநீதிமன்றத்தால் நிய மிக்கப்பட்ட (வெளி மாநில) ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலை மையில் விசாரணை நடை பெற்று – புயல் வேகத்தில் அவர் சென்னை வந்து 2 நாள்கள் விசாரித்து, உச்சநீதிமன்றத் தில் 5 ஆம் தேதி அறிக்கை யைத் தாக்கல் செய்து அது 6.3.2009 அன்று உச்சநீதிமன் றத்திற்குத் தரப்பட்டுள்ளது. அவ் வறிக்கை இணைய தளத்திலும், செய்தி ஏடுகளிலும் வெளி வந்துள்ளது.

    அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

    1. சென்னை உயர்நீதிமன் றத்தில் சுப்பிரமணியசாமி வந்து, சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தன்னை ஒரு கட்சி ஆடுபவராக இணைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக வந்த போதிலிருந்து தொடங்கி யுள்ளது என்பது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

    மூல காரணங்கள்

    2. சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி பொறுப்பு வகித்தவர் மற்றும் சில நீதிபதிகளின் மெத்தனம் அல்லது மென்மையான போக்கே இதற்கு மூல காரண மாகவே – அந்நிலை தொடர்வ தற்குக் காரணமாகவே அமைந் துள்ளது.

    3. வழக்குரைஞர்களில் பலர் – சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டவர்கள்போல் நடந்துள் ளனர் என்பது வேதனைக் குரியது. தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற நினைப்புடன் சிலர் செயல்பட் டுள்ள விரும்பத்தகாத நிலை இச்சிக்கல் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது!

    வரம்பை மீறலாமா?

    4. காவல்துறையினர் தங் கள் கடமையை ஆற்றுவதற்குச் சென்றிருந்தாலும் அவர்கள் தங்கள் வரம்பை மீறி அதீதமாக ஏதோ வெறிபிடித்தவர்களைப் போல, அப்பாவிப் பொதுமக் களை, நீதிமன்ற அறைகளில் இருந்த வழக்குரைஞர்களை – பெண் வழக்குரைஞர்கள் வரை எவரையும் விட்டு வைக்காமல் வெறித்தனமான, கண்மூடித்தன மான தாக்குதலில் ஈடுபட்டு, மிகப்பெரிய சேதத்தினை உரு வாக்கியுள்ளனர். தனியார் சொத்துக்கள் (கார்கள்) நீதிமன்ற உடைமைகள் இவைகளுக்கும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    5. சென்னை – காவல்துறை ஆணையர், டி.ஜி.பி. போன்ற தலைமை அதிகாரிகள்பற்றி குற்றம் சுமத்தி, அவர்கள்தான் இத்தகைய நிலைக்குக் காரணம் என்று சொல்லத்தக்க வகையில் ஏதும் சரியான காரணம் இல்லை!

    சாட்சியங்கள்

    நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா அவர்களிடம் தரப்பட்ட வாக்கு மூலங்கள், வீடியோ காட்சிகள், போலீஸ் வீடியோ காட்சிகள், அவர் நேரில் பாதிப்பு அடைந்த பகுதிகளைப் பார்த்தது – சேதா ரங்கள்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.

    உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்ட நிகழ்வுக் கார ணங்களும், சூழ்நிலைகளும், தீயணைப்பு வண்டியும், அதி காரிகளும் வந்த பிறகும் அவர் களைத் தடுத்து செயல்படாமல் செய்வித்து, எரிந்து சாம்பலாகும் வரை அருகிலேயே நின்று தீயணைப்புத் துறையினர் வேடிக்கை பார்க்கவேண்டிய நிர்ப்பந்தச் சூழ்நிலை உருவாக் கப்பட்டது.

    இவைபற்றி நீதிபதி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வறிக்கையை – பரிந் துரையை நாங்கள் ஏற்கமாட் டோம்; நிராகரிக்கிறோம் என்று அறிவித்து நீதிமன்றப் புறக் கணிப்பைத் தொடருவோம் என்று பேட்டிகளில் கூறுகின் றனர் வழக்கறிஞர்கள்.

    இதில் பொதுமக்கள், வழக் காடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, வேதனைக்கு உள்ளாகும் நிலை யில் உள்ளனர்!

    இடர்ப்பாடுகள்

    நீதிமன்றங்களுக்குக் காவல் துறையினர், கடும் குற்றவாளி களை ஜாமீனுக்கு அழைத்து வந்து, விசாரணையை நீதி மன்றம் நடத்த இயலாத நிலை இருப்பதால், காவல்துறையி னரே – நீதிமன்றத்திற்குக் கொண்டு வராமலேயே – சொந்தப் பொறுப்பில் வெளியே விடும் நிலை ஏற்பட்டுள்ளது!

    திணறுகிறது சிறைச்சாலை!

    சிறைச்சாலையோ அதன் கொள்ளளவுக்குமேல், குற்ற வாளிகளின் எண்ணிக்கையால் திணறிக் கொண்டுள்ள நிலை வேறு!

    சில கோர்ட்டுகளில் நீதிபதி கள் அமர்ந்து அவர்களே ஜாமீ னில் விடும் நிலையும் உள்ளது!

    தாக்கப்பட்டவர்களில் அடி பட்ட அப்பாவி வழக்குரைஞர் களுக்கு ஏற்பட்ட கொடுமையை நினைத்தால் வேதனை பல மடங்கு பெருகியுள்ளது!

    என்றாலும், வழக்குரைஞர் கள், நீதிமன்றங்களுக்கு உதவிட வேண்டிய கடமையாளர்கள் – சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை நன்கு உணர்ந் தவர்கள்.

    இருதரப்பிலும் தவறுகள்

    அதுபோலவே, காவல்துறை என்பது நம் அனைவருக்கும் பாதுகாப்புத் தரும் துறை; அவர் கள் நமக்கென்ன? என்ற அலட்சிய மனப்பான்மையைப் பெற்றால் அது பொது அமைதிக் கும், பொதுமக்களுக்கும், பொது நலத்திற்கும் மிகவும் கேடாய் முடியும்!

    தவறு செய்பவர்கள் சிலர் இரு தரப்பிலும் உண்டு.

    சில நேரங்களில் தங்களது எல்லை மீறிய நிகழ்வுகள் காவல்துறையில் உண்டு.

    முதலமைச்சர் கருத்து

    நேற்று தமது இல்லத் திரு மணத்தின்போது, நமது முதல மைச்சர் அவர்கள் மிகுந்த கவ லையோடு ஒன்றை வேண்டு கோளாக விடுத்தார்கள்.

    தம்மைப் பொறுத்தவரை வழக்குரைஞர்களும், காவல் துறையினரும் இரண்டு கண் களைப் போன்றவர்கள், தான் யார் பக்கத்தில் என்றால், நீதி யின் பக்கம்தான் நிற்பேன் என்று உருக்கமாகத் தெரிவித் தார்கள்.

    இந்த நல்லெண்ண வேண்டு கோளினை இருசாராரும் புரிந்துகொண்டு தத்தம் நிலைப் பாட்டில் தகுந்த மாற்றம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவேண் டும் என்பதே நம்மைப் போன்ற பொதுவானவர்களின் விழைவு ஆகும்!

    வேண்டாம் மனக்கசப்பு!

    தற்போதுள்ள கசப்பு இரு சாராரிடமும் ஏராளம் உள்ளது.

    இருசாராரும் ஒருவரை மற்றவர் எப்போதும் நிரந்தரமாக வெறுப்புடன், மனக்கசப்புடன் பார்க்கவே முடியாது; கூடாது!

    ஒரு நல்லெண்ணச் சூழல் உருவாக்கப்படல் வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு இடர்ப் பாடு இல்லாத நிலையை உருவாக்க முன்வரவேண்டும்; நடந்தவைகளை இனி நடக்கக் கூடாதவைகளாக ஆக்கிட வேண்டும்.

    பொதுமக்களின் மரியா தையை – நம்பிக்கையை இரு தரப்பும் பெறும் நிலை நாளும் வளர்ந்து, ஒருவருக்கொருவர் பகைவர்கள் அல்லர்; சமுதாய நலன் காக்கும் இரண்டு பிரிவு கள் என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் உணர்வுக்கு விரைந்து வரவேண்டும் என்பதை எண்ணித் துணியவேண்டும்.

    அரசியல் நுழைவா?

    இதில் அரசியல் நுழைந் துள்ளது என்ற அச்சத்தைப் போக்கவேண்டிய பொறுப்பு வழக்கறிஞர் சகோதரர்களுக்கு உண்டு.

    நீதிமன்றப் புறக்கணிப்பை உடனடியாகக் கைவிட்டு வேறு சட்ட ரீதியான வழியில் பரிகாரம் தேடிட புதிய தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கோகலே அவர்களின் அறிவுரைக்கேற்ப நடப்பதும் அவசர அவசியமாகும்!

    சமூக நீதியால் விளைந்த பயிர்கள் இரு சாராரிலும் உண்டு; அவை பாழ்பட்டுவிடக் கூடாதே என்ற பொதுக் கவலையால் தான் நாம் இதனை எழுதுகி றோம் – அனைவரும் சிந்திப் பார்களாக!

  16. Sunasami தன்மீது முட்டை எறியும்படி ஒரு சில வக்கீல்களையும், பின்பு போலீஸ் தடியடிக்காக, ஒரு சில போலீஸ்காரர்களை அங்கு கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும்படி ஏற்பாடுகள் செய்திருக்கவும் வழிகள் உண்டா இல்லையா?.Makendra kuriyathu sariyanathuthan.

    Eela Atharavai Kulabpuvathuthan SUNASAMIYIN
    Nokkamethavira Veronrumillai.

    ITHUTHAN UNMAI.

  17. தண்டிக்கவேண்டும் என்ற வழக்குரைஞர்களின் கோரிக்கையை எந்த ஓட்டுக் கட்சியும் ஆதரிக்கவில்லை. கருணாநிதியைத் திட்டுவது என்பதற்கு மேல் ஒரு படி கூட யாரும் தாண்டிக் கால் வைப்பதில்லை. அரசின் மற்றெல்லா உறுப்புகளுடைய செயல்பாடுகளையும் மெல்லமெல்ல போலீசு
    சு.சாமி மீது அழுகிய முட்டைகள் வீசப்பட்டன.நான்தான் தி.மு.க. ஆட்சியை கலைத்தேன் என்று தமிழ்நாட்டிற்குள் பேசி திரிந்த அந்த சு.சாமி மீதுதான் அழுகிய முட்டைகள் வீசப்பட்டன.கருணாநிதிக்கு ஏன் பதற்றம் வரவேண்டும்.போலீசு அதிகாரிகளை அனுப்பி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.அவ்வளவு பெரிய ஜனநாகவாதியா? கருணாநிதி.அப்படியென்றால் பேச்சுக்கு பேச்சு நீதித்துறையை மதிக்கிறேன் என்று பீற்றிக் கொள்ளும் கருணாநிதிக்கு அந்த நீதிபதிகள் போலீசின் குண்டாநதடியால மண்டையுடைபட்டது தெரியாதா?ஜெ..ஆட்சியில் நீதித்துறை மிரட்டப்பட்டதாக நீலிக்கண்ணீர வடித்த கரு…..இப்போது வாயை இறுக முடிக்கொண்டதேன்.அப்போது வக்கீலகளும் நீதிபதிகளும் தனிதனியாக தாக்கப்பட்டாரகள்.இபபோது நடந்தது என்ன?உயர;நீதிமன்ற வளாகத்தில 1000கணக்கான வக்கீலகளும் நீதிபதிகளும் அப்பாவி பொது மக்களும் மிருகத்தனமாக 3 மணி நேரத்திற்கும் மேலாக ஓடஒட விரட்டி குண்டாந்தடியால் அடித்து நொறுக்கப் பட்டனர;. குண்டாந்தடிகளுக்கு போலீசு எஙகேயும் போகத்தேவையில்லை.குண்டாந்தடிகளுடனெ பிறந்தவரகள் போலீசு.அதாவது எபபோதும் ஆயுதபாணியாக இருப்பவரகள்.
    கருணாநிதிக்கு ஆட்சி பிழைக்க காங்கிரசின் கருணை தேவை.ரூடவ்ழப் பிரசனையில தனிமைபட்டு கிடந்தார; கரு… காங்கிரசுக்கு ரூடவ்ழப் பிரச்னை எதிர;ப்பூ குடாது. ரூடவ்ழப் பிரச்னையில் வக்கீலகளின் போராட்டம்.ரூடவ்ழப் பிரச்னையில் தமிழர;களுக்கு ஆதரவாக வாயை திறந்தாலே சிறை.வக்கீலகள் செய்த தவறு ரூடவ்ழத்தமிழர;களுக்கு ஆதரவாக போராடியதுதான்.அதன் ஒரு பகுதிதான் சு.சாமி மீது முட்டை வீச்சு.அதை பெரியதாக்கி உடனே மு.த.அ…தேடுதல் வேட்டை…வக்கீல்கள் கைது…..ஒரு கொள்கை பிரச்னையை வேண்டுமென்றே கோணலாககி தங்களுக்கு சாதகமாக்கி கொண்டது கரு…காங்…போலீசு அதுவும் தங்களுக்கேற்றபடி.போலீசின் அடியை பற்றி வக்கீலகளுககு வைத்தியம் பார;த்தவ டாகடர; சொன்னாராம்”வெளிக்காயம் ஆறிடும்.உள்காயம் கொஞ்ச நாளில தன் புத்தியை காட்டும்”எனறாராம்.

    உயர்நீதி மன்றப் பிரச்சினையில் போலீசைத் கைப்பற்றிக் கொண்டு வருகிறது. கடைசியாக நீதித்துறையை மேலாதிக்கம் செய்யும் நடவடிக்கையும் இனிதே நிறைவேறியிருக்கிறது.
    சிங்கள இராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராக தமிழகம் நடத்திய போராட்டத்தின் முடிவில், போலீசு கொடுங்கோன்மை நிலைநாட்டப் பட்டிருக்கிறது.

  18. //Sunasami தன்மீது முட்டை எறியும்படி ஒரு சில வக்கீல்களையும், பின்பு போலீஸ் தடியடிக்காக, ஒரு சில போலீஸ்காரர்களை அங்கு கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும்படி ஏற்பாடுகள் செய்திருக்கவும் வழிகள் உண்டா இல்லையா?//

    SJR! இந்த conspiracy theory ரொம்பவும் நகைப்புகிடமாக உள்ளது. ஒரு வேளை அத்தைக்கு மீசை முளைத்தால், இந்தக் கற்பனை நிஜமாகவே இருந்து விட்டால் கூட, எந்த வகையில் பார்த்தாலும் போலீஸ் அராஜகமும் தவறுதான், வக்கீல்கள் முட்டை எறிந்ததும் தவறுதான்.

    சு.சாமி சொல்லி நடந்திருந்தால் மட்டும் முட்டை எறி சரியாகி விடுமா? அது நீதி மன்ற அவமதிப்புதான். அந்தக் காரியத்தை செய்த முட்டாள் வழக்கறிஞர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்தான். சாமி சொன்னால் இவர்களுக்கு அறிவு எங்கே போச்சு?

    தயவு செய்து இதைப் போயி புத்திசாலித்தனமான வாதம் என்று நினைத்துக் கொண்டு திரும்பச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அப்படி சு.சாமியின் கைங்கரியம்தான் இந்த சம்பவம் என்றால் அடுத்த நாள் வினவு உட்பட அதை கொண்டாடியவர்களைப் பற்றி ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். சு.சாமி அவர்களை எல்லாம் அடி முட்டாளாக்கிவிடவில்லையா? அவரை போயி அத்தனை பெரிய ராஜ தந்திரியாகக் காட்ட விரும்புகிறீர்களா?

  19. வழக்குரைஞர்கள் செய்தது சட்டத்தின்படி தவறு, நியாயத்தின்படி சரி. காவல்துறை நியாத்தின்படியும் தவறு, சட்டத்தின்படியும் தவறு. நியாயமாக போலீஸ் காவல் நிலையத்தைவிட்டு வெளியேறியது தவறு. காவல் நிலையத்தை வழக்குரைஞர்கள் எரிக்கும்போது ஏன் அங்கு ஒரு காவலர்கூட இல்லை? காவல் நிலையத்தை ஏன் அனாதையாக விட்டு சென்றனர்? இருந்திருந்தால் எரித்த வழக்குரைஞர்களை அடையாளம் காட்டி இருக்கலாம். போலீஸ் எப்பொழுதும் சட்டத்தைபற்றி கவலைப்படுவது கிடையாது. காலில் சுடனும் என்று சட்டம் சொன்னால் காவல்துறை கழுத்தில்தான் சுடும், பொதுமக்களுக்கு மருந்திற்கு கூட மரியாதை கொடுக்காது. காலில் அடிக்கவேண்டும் என்றால் தலையை உடைக்கும், தலையில் அடித்தால் கொலை முயற்சி… இங்கு எத்தனை கொலை முயற்சி, நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. நீதியை கொல்ல முயற்சித்துவிட்டது காவல்துறை, இவர்களுக்கு மட்டும் சட்டம் கிடையாதா? சட்டம் எல்லோருக்கும் பொது என்பதில் கேள்விக்குறிதான்?..

  20. தி.மு.க வின் அடிமட்ட மட்டமான முட்டாள் தொண்டனாகவே மாறி நாறிப் போன திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது. இவர் பொதுவானவராம், அதனால் இவர் சொல்வதை நாம் கேட்டுக்கொள்ள வேண்டுமாம்! தமது இல்லத் திரு மணத்தின்போது, நமது முதலமைச்சர் அவர்கள் மிகுந்த கவலையோடு ஒன்றை வேண்டுகோளாக விடுத்தார்களாம்,

    தம்மைப் பொறுத்தவரை வழக்குரைஞர்களும், காவல் துறையினரும் இரண்டு கண்களைப் போன்றவர்களாம், தான் யார் பக்கத்தில் என்றால், நீதியின் பக்கம்தான் நிற்பேன் என்று உருக்கமாகத் தெரிவித்தார்களாம்.

    இந்த நல்லெண்ண வேண்டுகோளினை இருசாராரும் புரிந்துகொண்டு தத்தம் நிலைப் பாட்டில் தகுந்த மாற்றம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்பதே நம்மைப் போன்ற “பொதுவானவர்களின்” விழைவாகுமாம். “என்னே இவர்களின் அறிவு! என்னே இவர்களின் பொது நலன்!” நான் திரு கி(கிறுக்கு). வீரமணி அவர்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன், “ஐயா, தாங்கள் தயவு செய்து தி.க காரன் என்று இனியும் சொல்லிக் கொண்டு திரிய வேண்டாம். போய் தி(திருட்டுப்பய).மு.க வுல ஐக்கியமாகிடுங்க! தி.க வை நடத்துவதற்கும் பெரியாரது கொள்கைகளை பரப்புவதற்கும் பகுத்தறிவாளர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்! -வெறுப்புடன் ஒரு தமிழன்.

  21. http://abidheva.blogspot.com/2009/03/blog-post_10.html

    வக்கீல்கள் போராட்டம் -சரியா? தவறா?

    சமீபத்தில் நடந்த உயர்நீதிமன்ற நிகழ்வுகள் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதில் நாம் சிந்திக்கவேண்டிய விசயங்கள் சில உள்ளன. அவற்றில் என் கருத்துக்கள் சிலவற்றை கீழே அலசுகிறேன்!!சரியா தவறா என்று தவறாமல் சொல்லவும்!

    1.போலீஸ் துறை செய்தது சரிதானா?

    போலீஸ் துறை செய்தது சரிதான் என்றால் போலீஸார் அமைதியான முறையில் கைது செய்து இருக்கலாம்.

    இதே போலீஸ் சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதலில் அமைதியாக வேடிக்கை பார்த்ததே! எல்லா நேரமும் ஒரே போல் நடவடிக்கைகளை எடுத்தால் அவர்களை நாம் பாராட்டலாம். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் முன்னரே திட்டமிட்டார்போல் அல்லவா தெரிகிறது!!

    2. போலீஸ் ஒரு வளாகத்தில் நுழையும் போது அத்துறையின் தலைவருடன் பேசிவிட்டே நுழைவர். இது ஒரு பொதுவான கருத்து!

    கல்லூரி வளாகங்களில் கூட முதல்வரிடம் போலீஸ் உயர் அதிகாரி கலந்து ஆலோசித்த பிறகே உள்ளே வருவர்.அதிலும் அடிதடி இருக்காது!!

    3.தற்போது சில வருடங்களாக போலீஸ் துறை தட்டிக்கேட்க ஆளில்லாத துறையாக மாறிவருகிறது!!

    அவர்கள் வன்முறையை ஏவி விடுவதும் அதிகமாகவே உள்ளது! எந்த துறையையும் விட அதிக ஊழல் இதில்தான்.ஏனெனில் கேட்க ஆளில்லை!!அவர்களைக் கேட்கும் உரிமை நீதிதுறைக்கு மட்டுமே இருக்கிறது!

    நான் மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போது வளாகத்தில் நுழைந்து பைக்கில் சென்ற மருத்துவரை சோதனை செய்தார் காவலர் ஒருவர். வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டு காவலரை கல்லூரி தூணில் கட்டிவைத்து விட்டார் மருத்துவர். பின் டி.எஸ்.பி. எஸ்.பி. வந்து விசாரித்ததில் போலீஸ் மது அருந்தி வசூலில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மாற்றப்பட்டார்..

    இதுபோல் இப்போது நடக்குமா என்று தெரியவில்லை!

    பாகிஸ்தானில் முஷ்ரஃப் அரசு நீதிபதிகளைக் கைது செய்தது. அப்போது வக்கீல்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்! ஆயிரக்கணக்கான வக்கீல்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.20000 வக்கீல்களை சிறையில் அடைத்தது அரசு. நடந்த்து என்ன? அவசர நிலை பிரகடனம் செய்தார் முஷ்ராப்!

    கடைசியில் சர்வதேச அமைப்புகள்,நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளானார். அமெரிக்காவின் தலையீட்டில் பதவி இறங்கினார்..

    ஒரு நாட்டின் சரித்திரத்தியே நீதித்துறை மாற்றி எழுதியது!!

    4.போலீஸை எதிர்க்க தற்போது யார் இருக்கிறார்கள்?

    பொதுமக்கள்-முடியாது

    பொறியாளர்கள்-முடியாது

    மருத்துவர்கள்-முடியாது

    தனிதொழில்துறையினர்-முடியாது

    அரசு அதிகாரிகள்-முடியாது

    கட்சிகள்–முடியும்

    வக்கீல்கள்-முடியும்!!!

    வக்கீல்கள் போல தொடர்ந்த போராட்டத்தில் யார் ஈடுபடுகிறார்கள்?

    இரண்டு மாதகாலம் தங்கள் வருமானத்தை விட்டு யாராவது போராடுவார்களா?

    மேலும் வழக்கறிஞர்கள் தங்கள் சொந்தப்பிரச்சினைக்காகவா போராடினார்கள்?

    இல்லையே!! இவற்றையெல்லாம் பார்க்கும்போது வழக்கறிஞர்கள் செய்வது சரி என்றுதான் தோன்றுகிறது!!

    சட்டத்தையும் நீதி ஒழுங்கையும் ஒரு துறை கையில் எடுக்கும்போது அதனைத்தட்டிக்கேட்பது மிக அவசியம்! நமக்காக அந்த வேலையைச் செய்யும் வழக்கறிஞர்கள் செய்வது சரிதான்!

    இது என் கருத்து!!

    உங்கள் கருத்துக்களை தாராளமாகச்சொல்லலாம்!!!

  22. ஆர்.வி உணர்ச்சிவசப்படுகின்றீர்கள்

    சுப்பிரமணியசாமி கோர்ட்டுக்கு வந்தது நீங்கள் போற்றித் தொழும் ஜனநாயக உரிமையை காப்பாற்ற வரவில்லை மறாக அதனுடைய கடைசி நூலை அறுப்பதற்குத்தான் வந்தார் எனப் புரிய வைக்க முயன்றேன்.
    பார்வர்ட் பிளாக் னு ஒரு கட்சி வந்த பிறகு இங்கு சாதி உணர்வோ அல்லது சாதி ஆதிக்கமோ தோன்றவில்லை. அதனை தோற்றுவித்து அதற்கு ஒரு தத்துவ அடிப்படையை உருவாக்கி இன்றளவும் அதாவது நாகரீகம் வளர்ந்த காலத்திலும் மற்றவர்களை அடிமைத்தனத்தில் திளைக்க வைத்த ஒரு சாதி என்ற முறையில் அந்த தத்துவத்திற்கு சாதிய பெயர் தரப்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பார்ப்பன சாதியினர் ஜனநாய நடைமுறைக்கு வரமுடியாத சாதிய சூழலை அவர்களே வைத்திருப்பதால் 95 சதவீதம் கன்சர்வேடிவ் களாகவே உள்ளதால் அவர்கள் இயல்பாகவே சாதிய அபிமானிகளிடம் அறிவுஜீவி அந்தஸ்தையும் அவர்கள் பிறசாதி பார்வையாளர்களாக இருந்தாலும் பெற்று விடுகின்றனர். அடிபட்டவுடன் போலீசை பார்க்கும் முன்னர் சோ வைப் பார்க்க அவர் முனைந்ததற்கு காரணம் அதுதான். தனீப்பட்ட முறையில் அவர் செய்த மாமா வேலைகளை என்னால் பட்டியல் இட முடியும்.
    பொதுவான தேவர் சாதி வெறி, வன்னியர் சாதிவெறி, கவுண்டர சாதி வெறி இருந்தாலும் அவற்றை தோற்றுவித்த பிரம்மனின் மூத்த மகன்கள் தண்டனை அனுபவிக்க மாட்டேன் என்பது மனித உரிமை மீறல் என உங்களுக்கு படவில்லையா..
    நண்பரே … போலீஸ் கைது எல்லாம் விசாரித்து நடைபெறும் என்ற உங்களது நம்பிக்கையை யாராவது போலீஸ் ஸடேஷன் போய் வந்தவர்களிடம் விசாரித்துப் பாருங்களேன். புகார் இருதரப்பிலும் வந்தால் இருவரையும் கைது செய்யும். பெரும்பாலும் செல்வாக்குள்ள உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்களைக் கண்டால் நாய் போல குலையவும் செய்து நடவடிக்கைகளை மாற்றி செயய்யும் போலீஸ். சுசாமிக்கு நீதிபதியே புகார் தந்தார் ஆதரவாக என்பதுதான் மீதமுள்ளது. ஆதித்தனை அடித்த லத்தி நீதிபதி ஐ மாத்திரம் எப்படி தனிவகையாக மதிக்கும் என கேட்கின்றீர்கள்.
    அதெல்லாம் இருக்கட்டும்… அது என்ன நீதிபதி புகார் தந்தா மட்டும் 100 காரட் உண்மை. அவிங்க பண்ணின ஊழல எடுத்துப் போட்டா இந்த நாடே தாங்காது. அது தனிக்கதை… அந்தப் புனிதம் காக்கப்படாததுதான் உங்களது அவஸதையா..
    தே…பையா என்ற சொல்லை வேண்டுமென்றேதான் பயன்படுத்தினேன். மனு ஸ்மிருதியைப் படித்த போது ஒவ்வோரு பார்ப்பனரல்லாத சாதியும் எப்படி கூடா ஒழுக்கத்தால் பிறந்தது என விவரிப்பார் மனு. அதைப் படித்த போது என்னுடைய சாதியாக இல்லாத போதும் பலருடைய சாதியின் தோற்றம் என அந்த தா…ளி எழுதி வைத்ததைப் படித்த போது என்னுடைய உடம்பிலேயே கம்பளிப் பூச்சி ஊர்ந்தது போல உணர்ந்தேன். 2000 வருடமாக அதனைக் காதால் கேட்டும் அடிமைப்படுத்தப்பட்டும் இருந்த சாதிகள் பதிலுக்கு அப்படி பார்ப்பன சாதியின் பிறப்பை இழிவுபடுத்தும் வகையில் நடந்தால் ஒத்துக் கொள்வீர்களா… அந்த தரகன் எனப்படும் மாமா அங்கு வந்தது 2000 இன்னும் தொடரும் என்பதை நிரூபிப்பதற்காக… எனவே கருத்து சுதந்திரம் மனித உரிமைகள் பாதுகாப்பு ஜனநாயகம் இவற்றின் மீது நம்பிக்கை உடைய தாங்கள் எங்கள் பக்கமல்லவா நின்றிருக்க வேண்டும். மாறாக அவனை அடித்தது தவறு என்றால் அது மனித உரிமை மீறல் இல்லை ஏழை கூலி விவசாயிக்கு… அவன் வந்தது தீட்சிதர் கொள்ளையடிப்பதற்கான சுதந்திரத்திற்கு… முட்டை ஏன் விழுந்தது எனத் தெரியும் முன்னே புலிகளையும் வக்கீல்களையும் திட்டியதற்கு காரணம் ஒரு காலத்தில் தேசியப் போராட்டத்தில் வந்த காங்கிரசு பஞ்சகச்சங்களும், வக்கீல் பஞ்சகச்சங்களும் இன்று மாறி விட்ட ஆதங்கம் இல்லையா…. எனவே நீங்கள் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் விமர்சிக்கவில்லை.. மூளையாலும் பார்ப்பனராக இருக்கின்றீர்கள்…

    ஆனால் ஆர்வி ஐ இயக்கும் மனநிலை என்ன எனப் புரிந்து கொள்ள முடிகின்றது. தங்களது அடிமைத்தனத்தை விடுவிக்க மக்களுக்கு கம்யூனிஸ்டுகள் பல்வேறு தளங்களில் போராட கற்றுத்தந்தும் போராட்டங்களில் பங்கெடுப்பதன் மூலம் கற்றுக் கொண்டும் வருகின்றனர். ஆகவேதான் சாதி ஒழிப்பு போன்றவற்றில் தமது சொந்த ஆதிக்க சாதியாக இருந்தால் அதனை விமர்சித்து அதற்கு எதிராக போராடி தங்களை கூர்தீட்டுகின்றனர். மெக்காலே இன் புதல்வர்களுக்கோ ஒரு தேதி குறித்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இன்றிலிருந்து ஜனநாயக்ம் என அனைவருக்கும அமுல்படுத்துகின்றனர். 2000 வருடத்தில் ஒடுக்கப்பட்டதற்கான compensation ஐ எல்லா தளங்களிலும் கேட்பதற்கு கூட எதிரி ஒருவேளை ஆயுதமேந்தியிருந்தால் கூட கோரிக்கைதான் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தங்களது இத்தனை ஆண்டுகளும் மற்றவர்களுக்கு மறுத்த கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம்…..என அனைத்தையும் அந்தஸ்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் இந்த ஜனநாயகத்தின் யோக்கியதை….. என் அப்பன் சொத்து வேணும் ஆனால் அவன் பட்ட கடனை தீர்க்க மாட்டேன் எனச் சொல்லும் பிள்ளையை ஊரில் விட்டா வைக்க முடியும். அது தான் உங்கள் போன்ற கருத்து சுதந்திர கர்த்தாக்களின் நிலைமை.
    நீங்கள் இப்படி சிந்திக்க மற்றொரு காரணம் சமூக வேலைகளில் ஈடுபடாதது என நினைக்கின்றேன். உடனே நீங்கள் எப்போது எங்கே என்ன செய்தீர்கள் என்ன பயின் விளைந்தது சமமூகம் அதனால் மாறி விட்டதா என வினவுவீர்கள். இதுவும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்என நினைத்துக் கொள்ளும் மூளையால் பார்ப்பனராக சிந்திப்பவர்கள் செய்யும் விதண்டாவாதம்.

    மற்றொரு காரணம் இப்படி பேசுவது மட்டுமே கொண்ட வாழ்வு மக்களின் வாழ்வா சாவா பிரச்சினையை கூட extra curricula activities ஆகத்தான் உங்களைப் பார்க்க வைக்கும். ஏனெனில் நிங்கள் பார்வையாளர்… பங்கேற்பாளர் இல்லையே

  23. ஓடுமீன்ஓடி உறுமீன் வரும்வரையில் வாடியிக்குமாம் கொக்கு,

    உலகப்பந்தில் தமிழர்களுக்கான ஓர் அரசு உருவாகும் சாத்தியம் இலங்கை என்னும் நாட்டிலேதான் இன்று உருவாகியுள்ளது. அதற்கு ஆதரவு தரக்கூடிய மிகப்பெரும் சக்தியான இந்தியாவில், வஞ்சனை நிறைந்த அரசியல்வாதிகள் வளர்ந்திருப்பதுதான் தமிழர்களின் தூரதிஸ்ட்டம்.

    தமிழீழம் என்னும் ஓர் அரசு உருவாகும் சாத்தியங்கள் சிறிது சிறிதாக ஓடிக்கொண்டிருக்கும் வேளைகளில் இந்தியா வாடியிக்கும். எப்போது அது கூர்மையடைந்து, உரம்பெற்று பெரிதாகி வருகிறதோ அந்த வேளைகளில் பிடித்து குதறித் தின்றுவிடும். ஈழத்தமிழர் சிறீலங்கா இராணுவத்தை அடித்து துரத்தி வெற்றியின் விளிம்பிற்கு வந்தபோதெல்லாம் இது நடந்துள்ளது,

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்த, அவரது இரு கண்களான போலீசையும், வக்கீல்களையும் இன்று தமிழ்நாட்டு மக்களைக்கொண்டே குற்றவாளிகளாக்கி குதறப்படுவது கனவல்ல, கற்பனையல்ல, நிஜம். தமிழீழம் என்னும் ஓர் அரசு உருவாக போராட்டம் தமிழ்நாட்டில் கூர்மையடைந்த போதில்தான் இந்த திருப்புமுனை இடம்பெற்றுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    அத்தனை வக்கீல்களும் அத்தனை போலீசும் குற்றவாளிகள் என்ற தொனியில் கேள்விகள் அமைவதாக நான் முன்பு குறிப்பிட்டது திரு. ஆர்வி அவர்களிடம் குற்றம் காணவோ, அவரைக் குறைகூறவோ அல்ல. இந்திய அரசியல் என்னும் மாபெரும் சக்தியை தங்களுக்குள் அடக்கி வைத்து மக்களை மிரட்டிவரும் கேடுகெட்ட அரசியல் காட்டுமிராண்டிகளின் கை அங்கே உள்ளது என்பதை காட்டுவதற்கே. இதனால் அவர் மனம் புண்பட்டிருந்தால் நான் வருந்துகின்றேன்.

    இந்த நேரத்தில் திரு. தராக்கிராம் அவர்கள் எழுதிய சமகால அரசியலை படிப்பதற்கான நுளைவு கீழே உள்ளது. படிக்காதவர்கள் ஒருமுறை படிப்பதனால் பல உண்மைகளை விளங்கிக்கொள்ளலாம்.

    http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2653:2009-03-10-17-03-44&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

  24. ஆர் வி
    எல்லா மேல்சாதிகளையும் மூளையில் இயக்குவது பார்ப்பன மூதாதையர்கள் கண்டுபிடித்த பார்ப்பனீயம். அதனால் இன்றும் அம்மூளைகளை இயக்க முனையும் பார்ப்பன அல்லது பார்ப்பன சார்புள்ள மேல்சாதிகளை முட்டை அல்ல மலத்தால் அடித்தால்தான் சமூகம் முன்னோக்கி செல்ல முடியும். பாப்பாபட்டியை மேலவளவை திண்ணியத்தை எந்த சித்தாந்த அடிப்படையில் மேல்சாதிகள் செய்தார்கள் என்றால் அது பார்ப்பனிய இந்து மதம் என்ற மனு வகுத்த நீதியின் அடிப்படையில்தான். எனவே மேல்சாதியை கண்டிப்பதற்கு முன் அனைத்து மேல்சாதிகளையும் இயக்குகின்ற பார்ப்பனியத்தின் மீது ஒரு தாக்குதல் தொடுப்பதன் மூலம் அனைவரை முன்னோக்கி யோசிப்பதற்கு உதவ முடியும். அந்த பார்ப்பனிய விழுமியங்களை மீட்டுக் கொண்டுவர வந்த சுசாமி அல்லது ஜெயா மாமி அல்லது சோ ராமசாமி அல்லது போலி கம்யூனிஸ்டு ராம் என பலர் பல இடங்களில் இருந்து கொண்டு வேலை செய்கின்றனர். அன்றைக்கு சுசாமி கிடைத்ததால் அடித்துள்ளனர். அது ஒரு அடையாள தாக்குதல்தான். அதாவது இத்தனை காலம் தன்னை கடவுளின் பெயரால் அடிமைப்படுத்திய பார்ப்பனியத்தை எதிர்த்து பார்ப்பனரல்லோதோர் நடத்திய எழுச்சிமிகு நடவடிக்கை. மேலே சொன்ன ஊர்களில் நடந்த பார்பபன அல்லாத மேல்சாதி வன்முறைக்கு கூட அதனை அவர்களது மூளையில் ஏற்றிய 2000 ஆண்டுகளாக மற்றவர்களுக்கு கல்வியை மறுத்ததன் மூலம் தன்னை அறிவாளிகளாக்கி கொண்ட ஒருவன்தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டும். அதாவது குற்றம் செய்தவனை விட அதைத் தூண்டியவன்தான் முதல் குற்றவாளி என்ற நீதியின்படி…
    அப்படி கற்றவர்கள் மூடநம்பிக்கையை மற்றவர்கள் மத்தியில் தங்களது கையில் இருந்த மத நிறுவனங்கள் மூலம் பரவிய போது தடுக்காத பொறுப்பின்மையால்தான் பிரேமானந்தா போன்ற மற்ற சாதியைச் சேர்ந்த … உழைக்காமல் பிழைக்க முடியும் என்று பார்ப்பனர்களைப் பார்த்து தெரிந்து கொண்ட ஊதாரி சோக்கு பேர்வழிகள் இப்படி தறிகெட்டு வந்தனர். இதிலும் ஏ1 பார்ப்பனர்கள்தானே.. சமூக பொறுப்பை தட்டிக்கழித்ததுதான் குற்றம்…
    இந்த ரிவர்ஸ் காஸ்டிஸம் பற்றி சொன்னீர்கள். அதை நான் தீர்வாக முன்வைக்கவில்லை. சலுகைகள் உங்களுக்கு தராமல் மற்றவர்களுக்கு தருவதை கூட உங்களால் சகிக்க முடியவில்லையே.. பழிவாங்கும் உணர்ச்சி இருக்க கூடாதா.. அதனை யார் முடிவு செய்ய வேண்டும் பாதித்தவனா அல்லது பாதிக்கப்பட்டவனா… இது இல்லாத சாதி எதிர்ப்பு என்பது நான் இப்போ சாதி பாக்கல் எங்க அப்பா பாத்ததுகக்கு நான் பொறுப்பு கிடையாது என்பதுதானே..
    நான் இப்படி நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட அதாவது கல்வி பெறும் உரிமை, ஊதியம் என்று ஏதாவது சொந்தமாக பெறும் உரிமை, சொந்த நிலம் வைத்துக் கொள்ளும் உரிமை, பெண்களுக்கு மாராப்பு அணியும் உரிமை, செருப்பு, துண்டு அணியும் உரிமை, மேல்சாதி ஆண்களுக்கு அல்லாமல் தனக்கு மட்டுமே உரித்தான வாழ்க்கைத் துணையைப் பெறுவதற்கான உரிமை, மேலத்தெருக்களில் நடந்து செல்ல உரிமை … என நாகரீக சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்வர்கள் மீண்டு வருவதற்கு ஒடுக்கியவர்கள் உதவினால்தானே மனித சமூகம் தன்னை முன்னோக்கி சென்றிட முயன்றிட இயலும். அப்படி ஒரு ஊனப்படுத்தப்பட்ட குழந்தையை நடக்க பயிற்றுவிக்கும்பொது பயிற்றுவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஊனப்படுத்தியவன் தன்னுடைய மனம் கோணாதவாறு அக்குழந்தை நடக்க பயில வேண்டும் என எதிர்பார்ப்பது சுத்த அயோக்கியத்தனம் இல்லையா…
    for your kind information எவண்மணி சாதி ஒழிப்பு போராட்டம் அல்ல.. நீஙக் சாதி எதிர்ப்பை ஆதரிக்கின்றீர்கள் ஆனால் சாதி ஒழிப்பை பேச மறந்து போகின்றீர்கள். ஏன் என எப்போதாவது யோசித்து பாருங்கள்… சொல்லி சொல்லி கை வலிக்கின்றது…
    பார்ப்ன சாதி வெறிதான் மற்ற சாதிவெறிகளை தோற்றுவித்த தாய். தாயை அடித்தால் புள்ளைங்க தானா சப்போர்ட்டுக்கு வரும். திரும்ப அவங்களுக்கும் ஒன்னு புரியவைக்கலாம் இல்லன்னா அடிச்சுதான் புரிய வைக்கணும்.
    நான் இன்ன சாதியில் பிறந்தேன் என சொல்ல விரும்பவில்லை என்றாலும் பார்ப்ன விழுமியங்களோடு வளர்ந்தவன் என்பதால் சொல்கின்றேன். 15 20 சதவீதம் என்று சொல்வதன் மூலம் நீங்கள் கண்ணைக் கட்டிக் கொள்கின்றீர்கள். உண்மையில் நான் அறிந்த சில ஆயிரம் பார்ப்பன குடும்பங்களின் சில பத்தாயிரம் மெம்பர்களில் இவ்விழுமியங்களில் இருந்து விடுபட்ட அமெரிக்கா கூட சென்ற எவரும் எனது கண்ணில் படவே இல்லை.
    ஹிட்லரால் ஒரு பத்தாண்டுக்ள்தான் மக்கள் சிரமப் பட்டனர் அதற்காக அவனை நான் ஆதரிப்பதாக நினைக்காதீர்கள். மனுவால் பாதிக்கப்பட்டது 2000 ஆண்டு மற்ற சாதிகள் மட்டுமல்ல.. மொத்த இந்திய நாகரீக வளர்ச்சியையும் பின்னுக்கு இழுத்தான் பார்ப்ன நலனுக்காக.. இதற்கு யாருக்கு எப்படி நட்ட ஈடு தருவது அல்லது அப்படி கேட்பதே அபத்தமா…
    பெரியார் சொன்னதால் யாரும் பார்ப்பனர்களை அடித்து விடவில்லையே… முட்டை அடிச்சதுக்கே அணுகுண்டு போட்ட மாதிர் பார்ப்பனர்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வரும் இந்தக் காலத்தில் பெரியார் பேச்சை திக காரர்கள் கூட பின்பற்றாத போது உங்களுக்கு ஏன் உங்களது மகளை அல்லது மகனைப் பார்த்தால் கோபம் வருகினறது. மனு சொன்னதை நீங்கள் மட்டுமா கடை பிடித்தீர்கள். மற்ற மேல் சாதிகளையும் அல்லவா பின்பற்ற வைத்திருக்கின்றீர்கள் கடவுளின் ஏஜெண்ட் என்ற பதவியைப் பயன்படுத்தி…
    மற்ற மக்களை பார்ப்பன இந்துமதம் அடிமைப் படுத்தி தினம் தினம் 2000 ஆண்டுகளாக சக மனிதர்களாக கருத மறுத்த கொடுமைக்கு காம்பன்சேஷன் என பிச்சைபாத்திரம் ஏந்தினால் அதற்கு காரணமான பார்ப்பனர்கள் திமிராக நாதிர்ஷா வுக்கு என்ன தண்டனை தந்தீர்கள் …. தைமூருக்கு என்ன தண்டனை… மாலிக் காபூருக்கு என்ன தண்டனை என் பகடியம் பேசுகின்றார்கள். இவர்கள் எல்லாம் முசுலீம் மன்னர்களாகவே இருப்பது தற்செயலாக நிகழ்ந்து விட்டது என்றே நினைத்துக் கொள்ள சொல்கின்றீர்களா… ராஜராஜனும், நந்த வம்சமும், குப்தர் காலமும், பல்லவ காலமும் மக்கள் அரசாட்சியின் சிற்ப்பால் மகிழ்ந்தா இருந்தார்கள். அந்த மகிழ்ச்சியின் விளைவாக பெரிய பெரிய கோயில்கள் கட்டப்பட்டதா அல்லது அந்த ஊதாரி ராசாக்களின் தத்பரியத்தால் ஏற்பட்ட போலிப் பஞ்சங்களின் விளைவாக எழுந்தனாவா அந்த கோபுரங்கள்…..அதற்காக் நீங்கள் ஒரு ஆர் எஸ் எஸ் சார்பாளர் என்றெல்லாம் முடிவு செய்ய மாட்டேன். நீங்கள் நடுநிலை தவறாத நன்னெறியாளர்தான்… நம்புகிறோம்….
    எல்லாரும்தான் ஒடுக்குகின்றான். எல்லோரும்தான் கடன் அடைக்க வேண்டும். அது எப்படி கடன் பட்டு செழிப்பாக வாழ்ந்தவனுக்கும் அப்படி வாங்காமல் சிரமப்படு வாழ்ந்தவனும் இன்னையில இருந்து ஒன்னு தான் என்றால் ஒன்னு கேக்குறவன் கேணயனா இருக்கணும் இல்லன்னா சொல்லுறவனா இருக்கணும்…..
    காம்பன்சேஷனை பணத்தால் அளவிடுகின்றீர்கள்…. நீங்கள் சாதி ஒழிப்பை விட சாதி பார்க்காதவர் என்பதை நம்புகின்றேன்… உங்களது திருமணத்தை உங்கள் சாதியில் செய்தீர்களா அல்லது வேறு சாதியில் செய்தீர்களா… உங்களது மகன் அல்லது மகளது திருமணத்தை உங்களது சாதியில் செய்ய மாட்டேன் என முடிவு எடுத்து அமுல்படுத்துவீர்களா… உங்களது சகோதரிஅல்லது சகொதரனை காதல் போனறன இல்லாத போதும் பிறசாதியில் திருமணம் செய்ய வலியுறுத்தினீர்களை… இது உங்களது பெர்சனல் மேட்டர் என்பதால் பதில் நேரடியாக வேண்டும் என நான் வலியுறுத்த மாட்டேன். இவற்றில் எத்தனை சதவீதம் நீங்கள் சாதி பார்க்கவில்லை என்பதை சொல்லுங்கள்…. அதற்கு பின் பேசலாம்

  25. padiththathum siriththathum…
    (ithuvum contempt of court agalam)
    —————————————————–

    A new teacher was getting to know the kids by asking them their name
    what their father did for a living.

    The first little girl said: “My name is Mary and my Daddy is a postman.”

    The next child, a little boy said: “I’m Andy and my Dad is a mechanic.”

    And so it went until one little boy said: “My name is Johnny and my father is a striptease artist in a gay club.”

    The teacher gasped and quickly changed the subject. Later, in the school yard, the teacher approached Little Johnny privately and asked if it was really true that his dad danced nude in a gay bar.

    Little Johnny blushed and said, “No, he’s really a judge at Madras HC, but I’m just too embarrassed to tell anyone..”

  26. பழிவாங்கும் உணர்ச்சி இருப்பவர்களை ஆதரித்ததற்காக பல நேர்மையான கேள்விகளுக்கு நேர்மறையில் பதில் சொல்லி விவாதிக்க மறுக்கும் ஆர்.வி அவர்களே… இப்படி நழுவுவது அறிவின் நேர்மையான செயல் என நினைக்கின்றீர்களா … ஆனால் வரலாற்றில் கேள்வி கேட்பவர்களை இல்லாமல் செய்த ஒரு காலத்திய ஜனநாயகவாதிகளிடமிருந்து நீங்கள் வளர்ந்து சிறிது நழுவுவது என்ற நடைமுறையை கடைபிடிப்பதால் பாராட்டுகின்றேன். என்னை இயக்கியது எது என நான் உங்களை இயக்கியது எது என குறிப்பிட்டது போல குறிப்பிடாத உங்களது நேர்மை புல்லரிக்க வைக்கின்றது. பழிவாங்குவது ஹமுராபி காலத்துக்கு இட்டு செல்லும் தான் என நீங்கள் நம்புகின்றீர்கள்.. ஆனால் அமைதியாக இருந்து கொண்டு கூட பழிவாங்க முடியும் அதைனை பலர் பல தளங்களில் செய்து கொண்டுதான் உள்ளனர். அவர்களெல்லாம் யோக்கிய சிகாமணிகளாகவும் பெயர் பெற்று விடுகின்றனர்.
    பழிவாங்கும் நடவடிக்கை ஒரு இயற்கை நிகழ்வு. அதனை மீறி வருவதற்கு மனம் பண்பட வேண்டும் என நீங்கள் நினைக்கலாம் அதற்கு உகந்த நோகாத சமூக பொருளாதார அடிப்படை உங்களுக்கு அமைவதால் மாத்திரமே சமூகம் மொத்தமும் அப்படித்தான் சிந்திக்க வேண்டும் என நினைப்பது யோக்கியமானதாக கூட நீங்கள் கருதக் கூடும்…
    பேசுவதற்கு எனக்கு கூடத்தான் விருப்பமில்லை…. ஆனால் இந்த சமூகம் மாறும் சூழலில் விழும் நச்சுக்களை அவர்கள் அறிவாளிகளாக இருந்தும் புரிந்து கொள்ள இயலாத அல்லது புரியாதது போல நடிக்கின்ற தன்மையில் கொஞ்சம் மாற்றத்தை கொணர முடியும் என்ற நம்பிக்கையில் இவற்றை எழுதினாலும் பல நேர்மையாளர்களுக்கு திரைவில்ககி உண்மையை உணர்த்த முடியுமா என்ற பயிற்சயிம் என்க்கு இதில் கிடைப்பதால் நான் இன்னும் பல் ஆர்.வி க்களை விவாதிக்க அழைக்கிறேன்.

  27. திரு. வித்தகன் அவர்களுக்கு!

    திரு. ஆர்வி அவர்கள் கூறியதுபோல் உங்களுக்கு பதிலளிப்பது வீண் என்றாலும், ஏனையவர்கள் எங்கள் கருத்துக்களின் தன்மையை அறிவதற்கு, எனது பதில் தேவைப்படுகிறது.

    தமிழீழ அரசு என்பதை அதன் ஓர் அங்கமான மொழிக்குள் மட்டும் இழுத்துக் குழப்பும் முயற்சிதான் உங்களில் தெரிகிறது.

    தமிழ் ஈழம் என்பது, பெரும் ஜனநாயகவாதியும், ஈழத்தின் தந்தை என அழைக்கப்பட்டவரும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, திரு. செல்வநாயகம் அவர்களால் பிரகடணப்படுத்தப்பட்டது. சிங்களத்திடம் மனிதம் இல்லையென அவர் கண்டுகொண்டபின் செய்யப்பட்டது.
    அந்தவேளையில் அங்கு புலியுமில்லை, பூனையுமில்லை. உலகத்திடமே மனிதம் இல்லையென அவர் கண்டுகொள்ள முன்பே அமரராகிவிட்டார்.

    அமிர்தலிங்கமோ, அவருக்கு இணையான தலைமையோ ஐ.நா. வரை இந்தப் பிரச்சினையை ஜனநாயக முறையில் கொண்டு சென்றிருந்தால் பல நாடுகளில் இருந்து வரும் பண உதவியை இவ்வளவு சுலபமாக இலங்கை அரசால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. இது பாலசிங்கமோ தமிழ்செல்வனோ சாதிக்க முடியாத காரியம். இந்தியாவிலும் இலங்கைத தமிழர் ஆதரவு புலி ஆதரவாக மட்டுமே அறியப் படாமல் இன்று வரை வெளிப் படையாகத் தொடர்ந்திருக்கும் என்ற உங்கள் வாதமானது, நித்திரை கொள்வதுபோல் நடிப்பவனை எழுப்பமுடியாது என்பதற்கு ஒப்பாகும்.

    இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து 1983 புலிகளின் போராட்டம் தோன்றும்வரை தங்கள் உரிமைக்காக போராடிய நூறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களில் அநேகர் எப்படிக் கொல்லப்பட்டார்கள் தெரியுமா? உயிரோடு உறுப்புகளை வெட்டி எடுத்து, கண்களை தோண்டியெடுத்து, சிறுகச்சிறுக சித்திரவதைசெய்து கொல்லப்பட்டார்கள். அந்த சம்பவங்கள் வசதியாக மறக்கப்பட்டுவிட்டன. தற்போது கொல்லப்படும் தமிழர்களில் பெரும்பாலானோர் புண்ணியம் செய்தவர்கள், கண்ணால் பார்ப்பதற்கு முடியாத கொடூரமாக இருந்தாலும், கொல்லப்படுபவர்கள் வேதனை தெரியாது நொடியில் கொல்லப்படுகிறார்கள். இதுதான் உங்களைப் போன்றோரின் விவாதத்தின் ஆசீர்வாதங்களுடன் சிங்களத்திடம் வளர்ந்துள்ள மனிதாபிமானம் என்றுகூடக் கொள்ளலாம்.

    தலைவர் பிரபாகரன், தேசத்தின்குரல் பாலசிங்கம், பிரிகேடியர் தமிழ்செல்வன் என இவர்களை அழைப்பதிலே நான் பெருமைகொள்கிறேன். ஏனென்றால் இவர்களின் ஆயுதப்போராட்டம் தொடங்கிய பின்புதான் தமிழர் என்றால் யார்? அவர்கள் பாரம்பரியம் என்ன? எங்கே வசிக்கிறார்கள்? என்பதெல்லாம் உலகநாடுகளுக்கு தெரியவந்தது. இங்கு ஐரோப்பாவில், சிறீலங்கா என இன்று அழைக்கப்படும் சிலோன் எங்கே இருக்கிறது? தமிழர் இந்தியாவில் எந்தப்பகுதியில் வசிக்கிறார்கள்? என்பதை என்னுடன் பழகிய சில ஐரோப்பியர்களுக்கு, பூகோளப்படத்தில் அன்று காட்டிய அனுபவம் எனக்கிருக்கிறது. சிலோன் என்றால் சிலோன்தேயிலை என்பதுதான் அவர்களுக்கு அன்று தெரிந்தது. இன்று தலைவர் பிரபாகரன் என்று சொன்னால், தமிழர் பூர்வீகத்தையே அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். இதில் அமிர்தலிங்கமும் அவருக்கு இணையான தலைமையும்!!!. அந்த அரசியல்வாதியைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? தெரியாவிட்டால்! அவருடைய பூர்வீகத்தை வெகு நுட்பமாக அறிந்த கவிஞர் காசிஆனந்தன் உங்கள் அருகிலே இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

    என் கைவிரலைக்கொண்டே என்கண்ணையே குத்தவைக்கும் சாதுரியம் நிறைந்ததுதான் ஆரியம். ஆரியம்தான் இந்தியா. இதற்கு சான்று இன்றைய பல தமிழ் அதிகாரிகளும் தமிழ் அரசியல்வாதிகளும்.

  28. திரு.மணீ அவர்களூக்கு,
    உங்கள் விவாதங்களீ கூர்ந்து கவனித்து வருகிறேன். என்னுடய கருத்து இந்த சம்பவத்தில், அனாவசியமாக, ஒரு joker ய் (சு.சாமி ஊர் அறீந்த PIMP)பெரிய ஆளாக்கிவிட்டீர்கள். அடையாள எதிர்ப்பை பல விதங்களீல் நாகரிகமான வழிகளீல் நடத்தியிருக்கலாம். சமீபத்தில் நடந்த சட்டக்கல்லூரி தகராறூ, இந்த சம்பவம் எல்லாம் சேர்ந்து பொதுமக்கள் மத்தியில் வழக்கறிஞர்கள் பற்றீ ஒரு மோசமான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டது. IT SHOULD HAVE BEEN HANDLED MORE DIPLOMATICALY. போலிஸ் அராஜகம் ஊர் அறீந்த விஷயம். இந்த சம்பவத்தில் போலிஸ் மோசமான கீழ்த்தரமான THUG ஆக நடந்து கொண்டார்கள். ஆக இந்த சம்பவத்தால், ஈழம் பிரச்சினை பின் தள்ளப்பட்டு, இப்போது வழக்கறிஞர்கள் vs போலிஸ் என்பதாகிவிட்டது. இன்னொரு முக்கியமான விஷயம், ஈழம் பிரச்சினை பற்றீ சலுப்பூட்டும் வகையில் உணர்ச்சி கோஷங்கள், வறட்டூ கத்தலாக (CLICHE) ஆகிவிட்டன.
    இந்த பிரச்சினை தேசிய அளவிலும், மற்ற பிராந்திய கட்சிகளூக்கும் புரிய வைக்க தவறீவிட்டோம்.அதனால்தான் மற்ற தேசிய பத்திரிக்கைக்களூக்கும், ARUNDHATHI ROY போன்றவர்களூக்கும் ஆழமான புரிதல் இல்லை. ஆச்சிரியமான் விஷயம், chomsky க்கே ஈழம் பிரச்சினை பற்றீ ஆழமாக தெரியவில்லை.
    எனக்கு 2 சந்தேகங்கள்.
    (1) உங்கள் வலி புரிகிறது. வரலாற்றீல் நடந்த தவறூகளூக்கு பதிலடி கொடுக்கலாம் என்கிறீர்கள். இதே கருத்தின் அடிப்படையில்தான், சங்பரிவார்களூம்,வலது சாரிகளூம் வரலாற்றாஈ மீட்டெடுக்க முயலுகிறார்கள்.( உதாரணமாக, பாபர் மசூதி இடிப்பு, இராம ராஜ்யம்)ETC.
    எங்கணம் உங்க கருத்து, சங்பரிவார்களோடு வேறூபடுகிறது? என்னை பொறூத்தவரையில், உங்கள் STAND POINT, VIOLENT ஆக இருக்கிறது.

    (2)எந்த விஷயத்திலும் பங்கேற்பாளர் மட்டும் கருத்து கூறவேண்டும் என்றூ சொல்கிறீர்களா? அப்படியானால், நாம் எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாதே?

  29. நண்பர் வாஸ்

    பங்கேற்பாளர்கள்தான் பேச வேண்டும் என்பது பங்கேற்பின் வலி மற்றும் இயக்கப்போக்கில் அதுபற்றிய செயல்முறைப் பயிற்சி கிடைப்பதால அனுபவ அறிவு அது எந்த துறையாக இருந்தாலும் அவசியமாகின்றது. அதனை பிரயோகிப்பதற்கான அறிவு கிடைக்காமல் அதனை மனனம் செய்த அனுபவம் மாத்திரம் எஞ்சியிருந்தால் பங்கேற்றுதான் சமூக அறிவைப் பெற முடியுமே தவிர இல்லாவிடில் அன்றாட சாதி ஒடுக்குமுறை பற்றி பேசினால் ஏதோ கணக்கு பாடம் போல மாலிக்காபூருக்க எப்போ கணக்கு தீர்ப்பது அல்லது நஸ்ருதீன் ஷாக்கு எப்போ கணக்கு தீர்ப்பது என்று பேசத்தான் இயலும். அந்த வலியை இன்றும் அனுபவிகக்கும் மக்களைப் பார்த்து பேசியாவது புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
    சாதி ஒடுக்குமுறை ஒரு வரலாற்று தவறு என்று பொறுப்பற்ற முறையில் சொல்ல முடியாது ஒருவேளை பாபர் ராமர் கொயிலை இடித்திருந்தால் கூட சாதியை அதற்கு பதிலாக ஒப்பிடுவது எப்படி சரி எனக் கூறமுடியுமா.

    சங்க பரிவாரத்துக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் பழிவாங்குவதா இல்லையா என்ற புள்ளியில் வேறுபாடு இல்லை. இன்னும் சரியாக சொன்னால் இந்த வேறுபாடு ஒரு அரசியலற்ற வாதம்தான். பழிவாங்குதலில் வரலாற்றில் ஒரு இடம் உண்டு. பழிவாங்குவது எனபது இதுவரை ஒடுக்கப்பட மட்டுமே செய்த அனைத்துப் பிரிவினரின் மேலாதிக்கம் குறித்தது. இது இதுவரை உலகம் கேட்டு கூட அறியாதது. ராமருக்கு முன்னர் அங்கு கண அரசு இருந்து அதனை அழித்துதான் உற்பத்தி முன்னோக்கி வந்தது. இன்றைக்கு ஜமீனதார்களுக்கு பிறகு பண்ணைகள் வந்தார்கள் இப்போது உலக முதலாளிகளுக்கு பழத்தோட்டமும் மலர்தோட்டமும் வைத்து பரிமாறுகிறோம். இதனை பின்னுக்கு இழுத்து ராமன் ஆட்சியை கொண்டு வர நினைப்பது வளர்ச்சியை நோக்கிய செயலோ அல்லது முயற்சியோ அல்ல. அப்படி அன்றைய கணங்களின் பிரதிநிதிகள் இன்று தங்களை யார் மரபு எனத் தெரிந்து கொள்ள முடியாததால் ராமன் முன்னிறுத்தப் படுகின்றான். இல்லாவிடில் ஏதாவது விலங்குகளாக மாறுவது என்று கூட பரிவாரம் முடிவு எடுக்கும். எல்லாவற்றுக்கும் மேல் பழிவாங்குதல் என்பது மேடுபள்ளத்தை சமப்படுத்தி சமூக ஒழுங்குமைவுக்காகத்தான். இருக்கும் மேடு பள்ளங்களை அப்படியே வைத்துக கொண்டு அதன் மீது எல்லா இடத்திலும் சமமாக மண்ணை ஒரே அளவு மாத்திரமே அனைத்து நிலப்புள்ளிகளிலும் நிரப்ப சொல்லுகிறீர்கள் … புதிய மண் தேவையில்லை பழைய கடினப்பட்ட மேடுகளை வெட்டி எடுத்துதான் பள்ளத்தை நிரப்ப வேண்டும். அப்போதுதான் உயர்த்தப்பட்ட குழியும் தன்மை ரீதியாக சமமாக இருக்கும்.

    ஒரு மாமா அல்லது ஜோக்கரை அடித்த அடையாளப் போராட்டத்தை எப்படி நாகரீகமாக நடத்துவது அல்லது போராட்டம் நாகரீகமில்லாதது என நீங்கள் கருதினால் ஒவ்வோரு பிரச்சினையிலும் நாகரீகமாக போராடுவது என்பது என்ன என்று உதாரணத்துடன் எழுதுங்கள். அது உங்களது கள அனுபவமில்லாததால் ஏற்படும் பொறுப்பின்மையை நீங்களே அறிந்து கொள்ள உதவும்.

    ஈழத்தை நீங்கள் மற்ற மாநிலத்துக் காரர்களிடம் எடுத்து செல்லாமல் போலீஸ்-வக்கீல் என மாற விட்டு விட்டோம் என சொல்ல வருகிறீர்கள். இரண்டிலுமே ஜனநாயகத்திற்கான போராட்டம்தான் நடக்கின்றது. இதனைப் புரிந்து கொண்டால் ஈழத்தை நாம் மற்ற மாநிலத்தின் மக்களிடம் எடுத்து சென்றுதான் புரியவைக்க் வேண்டியதில்லை என்பதையும் ஜனநாயத்திற்கான போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அவர்களை விமர்சனம் செய்வது அவசியம். தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் தங்களது கட்சிக்குள் முதலில் இதனை துவக்க வைக்க விமர்சிக்க வேண்டும்.

    ஆனால் ஜனநாயகத்தை ஒரு ஓட்டு சீட்டுக்கு மேல் புரிந்து கொள்ள அல்லது அனுபவிக்க முடியாத ஒரு போலி ஜனநாயக அமைப்பில் இதனை சாத்தியமாக்க இயலாது.. அதற்கு இந்த சந்தர்ப்பம் கம்யூனிசம் அளவிற்கு வேண்டாம் ஒரு ஜனநாயக அளவிற்கு உண்மையை புரிந்து கொள்ளவும் அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி அமைப்புகளில் இணைந்து ஒரு புதிய அரசியல் மேலாண்மையை சமூக அரசியல் தளங்களில் நிறுவுவதும் உங்களுக்கு சாத்தியமாக்கும்.
    அறிவுஜீவிகளுக்கு புரியாத இந்த ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ரெக்கமண்டேஷன் பண்ணி புரிய வைக்க முடியாது. க்ரிடிசைஸ் பண்ணிதான புரிய வைக்க முடியும்.

  30. நண்பர் மணீ,
    களப்பணீயாற்றூம் உங்கள் போன்றவர்கள் மேல் எனக்கு மதிப்பு உண்டு. களப்பணீயாற்றூகிறீர்கள் என்பதால் உங்கள் வழி எனக்கு இப்போதுதான் புரிகிறது. ஒரு joker அடித்ததால் உங்கள் முக்கிய பிரச்சினை (ஈழம்) இப்போது பின் தள்ளப்பட்டு விட்டது. அப்படியே ஒரு வாதத்திற்காக, முட்டை அடிக்கவேண்டும் என்றால், சு.சாமிக்கு மேல், நச்சுக்கருத்துக்களீ உமிழும் ஜெ,சோ,ராம் போன்றவர்கள் உங்கள் இலக்காக இருக்க வேண்டும். களப்பணீயாற்றூம் உங்களூக்குத்தானே மிகுந்த பொறூப்புணர்வு தேவை. எது நாகிறீகம்/அநாகரிகம் என்பது ஒவ்வொருவறூக்கும் அவர்கள் பார்வையை பொறூத்து மாறூம். இந்த முட்டையடி உங்களூக்கு நாகரீகமாக செயலாக இருந்தால், நான் மீண்டும் சொல்ல விரும்புவது, இதனால் நடந்தது என்னவென்றால்,ஈழப்பிரச்சினை முக்கியமிழந்து விட்டது. மற்ற தேசியக்கட்சிகள்/பிராந்திய கட்சிகளூக்கு இந்தப்பிரச்சினை பற்றீ போதிய புரிதல் இல்லாதபோது, களப்பணீயாற்றூம் உங்கள் போன்றவர்கள், அந்த கட்சிகளூக்கு புரியவைக்ககும் கடமை இருக்கிறது அல்லவா? அந்த மாதிரி செய்து இருந்தால், இந்திய அரசின் மேல் ஒரு நெருக்கடியை உருவாக்கி இந்த போரை நிறூத்தியிருக்கலாம். இந்த கட்சிகள் எந்த பிரச்சினைக்கு தாமாகவே முன் வந்திருக்கிறார்கள்? எனக்கும்தான் இந்த ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இல்லை. இந்த கட்சிகள் வரும் வரைக்கும் பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியாதே? இதை நான் அறீவு ஜீவித்தனமாக எழுதவில்லை,ஆதங்கத்தில் எழுதுகிறேன்.

  31. ஈழப்பிரச்சினையை நீங்கள் இன உணர்வு என்ற சிறிய வட்டத்திற்குள் நின்று பார்ப்பதால் சுசாமி தாக்கப்பட்டது பிரச்சினையை திசை திருப்பி விட்டது போல மட்டுமே தோன்றுகிறது பலருகக்கு. ஆனால் சுசாமி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அதன் நேர் நல்விளைவாக ஜனநாயக மறுப்பு நம்முடைய நாட்டில் எப்படி இருக்கிறது என்பதை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி என எடுத்துக் காட்டி விட்டது. நமது நாட்டில் நாம் போலீசுக்கு எதிராக வக்கீல்களுடன் இணைந்து போராடி மக்களையும் திரட்ட கிடைக்கும் மையப்புள்ளி ஈழத்தை விட ஜனநாயகம்தான் சரியானது. இன்னும் சொல்லப் போனால் அங்கும் ஜனநாயகத்திற்கான போராட்டம்தான் நடக்கின்றது. இந்த அடிப்படையில் மக்களைத் திரட்டினால் அனைத்து மாநில மக்களையும் திரட்டுவதும் உண்மையான் ஜனநாயகத்தை போராடித்தான் பெற முடியும் எனபதை மக்களுக்கும் நமக்கும் அனுபவ ரீதியாகவே புரிந்து கொள்ள உதவும்.

    களப்பணி ஆற்றுவது கற்றறிந்த அனைவரின் கடமை. இந்த தேசத்தின் கோடிக்கணக்கான சாதாரண வாழ வழி மறுக்கப்பட்ட மக்களின் கண்ணீரை நிரந்தரமாக துடைப்பதற்கு அவர்களது வரிப்பணத்தில் படித்த வாழ்ந்த அவர்களது உழைப்பில் சுரண்டப்பட்ட சொத்துக்களை அநுபவிகக்க தெரிந்த நாம் வழிகண்டு பிடித்து அதற்காக களப்பணியாற்றுவது நமது கடமை. ஏழைக் கூலி விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய உலகமயமாக்க்கலை எதிர்த்து போராட ஏன் செத்தோம் என்று கூட தெரிந்து கொள்ள முடியாதபடி அவனை கற்க மறுத்த பார்ப்பனியத்தை எதிர்த்து போராட வேண்டும்.

    இந்த கடமையில் தவறிவிட்டு தனது அப்பா, அம்மா, மாமா, மாமி, அண்ணன், அத்திம்பேர், ஆத்துக்காரி என வாழுபவர்களை நாகரீகமடைந்த civilized society என்று எப்படி ஏற்க முடியும்

  32. என்ன Mr. மணி, உங்கள் வாதங்களில் தெளிவே இல்லையே! ரொம்பவே குழப்பிவிடுகிறீர்கள். மீண்டும் மீண்டும் படித்தாலும் ஒரே இழுபறியாகவே இருக்கிறது.

    //சுசாமி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அதன் நேர் நல்விளைவாக ஜனநாயக மறுப்பு நம்முடைய நாட்டில் எப்படி இருக்கிறது என்பதை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி என எடுத்துக் காட்டி விட்டது//

    இதன் அர்த்தம் என்ன? முட்டை எறிந்தவர்களைக் கைது செய்ய வந்தபோது நிகழ்ந்த வன்முறையை ஜனநாயகப் படுகொலை என்கிறீர்களா?

    நீங்கள் சு.சாமியை மாமா என்றோ கோமாளி என்றோ நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர் மேலோ, அல்லது வேறு யார் மேலோ முட்டை எறிந்தால் வழக்கு தொடரப் படும். அப்போது கைதாக மறுத்தால் போலீஸ் கை ஓங்கும். போலீஸ் மேல் கல்லெறிந்தால் மண்டை உடையும். இதில் யார் எந்த சாதிக்காரனாக இருந்தாலும் ஒரே நிலைதான். இதிலே நீங்கள் என்ன புதிதாகக் கண்டு விட்டீர்கள். எது உள்ளங்கை? எது நெல்லிக்கனி? டிக்கெட் வாங்காமல் ரயிலில் போயி அபராதம் கட்ட மறுத்தால் போலீஸ் அறைவதற்கும், இதற்கும் என்ன வித்தியாசம் கண்டு பிடித்தீர்கள்? உங்களுக்குப் பிடிக்காத ஒரே காரணத்தால் சாமி மீது முட்டை எறிந்தவர்களை எல்லோரும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பார்கள் என்று நினைத்தீர்களா?

    சாதி வெறி தலித்துக்கு வந்தாலும் தவறுதான். அந்த வெறி முற்றியதால்தான்,
    நிராகரிக்கப் படவேண்டிய ஒருவர் மேல் குருட்டுத்தனமான கோபத்தைக் காட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினையை இப்போது கோட்டை விட்டு விட்டார்கள். போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராடும் ஒவ்வொரு நாளும் இலங்கையை பற்றிப் பேசும் குரல்கள் இன்னும் மெலிதாகிக் கொண்டே வருகின்றன. இந்த வக்கீல்களைப் போன்ற கோமாளிகள் உல்கத்திலேயே கிடையாது. இதுதான் குரங்கு கைப் பூமாலைக்குச் சரியான உதாரணம் (குரங்கு = வக்கீல்கள்; பூமாலை = இலங்கைப் பிரச்சினை; தலித் வக்கீல்கள் என்ற அர்த்ததில் நான் பேசியதாக நீங்கள் வாக்குவாதத்தைத் திசை மாற்றிவிடாமல் இருக்கவே இந்த தேவையற்ற விளக்கம்).

    நீங்கள் செய்த களப் பணிகள் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? நான் இந்தத் தளத்திற்குப் புதியவன். உங்களுக்கு எழுத நேரமில்லாவிட்டால் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் பதிவுகளுக்கு சுட்டிகள் தர இயலுமா? ஒரு வேளை உங்கள் செயல்பாடுகள் தெரிந்தால் அவை உங்களது கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். உங்கள் வார்த்தைகளிலிருந்து உங்களுக்கு பிராமணர்களையும், இலங்கைப் பிரச்சினையில் புலிகளைத் திட்டுபவர்களயும் பிடிக்காது என்று மட்டும் புரிகிறது. என் புரிதல் சரியா?

  33. அய்யா வித்தகன், மணியின் விளக்கம் தெளிவாகத்தான் இருக்கிறது. அது அவர் வாசு கேட்ட கேள்விக்கு பதிலாக அமைந்திருக்கிறது. இடையில் நீர்தான் குழப்பமாக பேசுகிறீர்கள். உங்கள் எழுத்திலிருந்து புரிவது என்னவென்றால் வக்கீல்களால்தான் ஈழப்பிரச்சனை இழிநிலைக்கு போனது போலவும். மற்ற தமிழின அரசியல் கும்பலெல்லாம் அதை தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடுவது போலவும் உள்ளது. மணி யார் என்பது இருக்கட்டும், தொடர்ந்து கேள்வி மட்டும் கேட்டு வரும் நீங்கள் யார்? எந்த அமைப்பு? ஈழத்துக்கான உங்கள் பங்களிப்பு என்ன என்பதை விளக்குவீர்களா… உங்கள் விவாத முறை வெளிப்படையாக இல்லை, ஏதோ உள்நோக்கம் உள்ளது போல இருக்கிறது.

  34. இல்லை Mr. முருகன். எனக்கும் எந்த அரசியல் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் தனி மனிதன் தான். ஈழத்திற்கு என் நேரடி பங்களிப்பு எதுவும் இல்லை.

    எனக்கு சாதி மத கடவுள் நம்பிக்கை சுத்தமாகக் கிடையாது. வன்முறை பிடிக்காது. இலங்கைப் பிரச்சினை பற்றியும், சு.சாமி பற்றியும், வக்கீல்கள் பற்றியும் நான் இந்தப் பக்கத்திலேயே எழுதியிருக்கிறேன் (இலங்கயில் தமிழர்களுக்கு தனி நாடு தரப் பட வேண்டும். சு.சாமியை நம்பக் கூடாது. மதிக்கக் கூடாது. வக்கீல்கள் உணர்ச்சி வசப் பட்டு சொதப்பி விட்டார்கள்).

    களப் பணி என்பது வெறும் பேச்சா அல்லது நடைமுறையில் ஏதேனும் நடக்கிறதா என்று எனக்குத் தெரியாமல்தான் நான் கேட்கிறேன். இப்போது சொல்ல முடியுமா?

  35. //உங்கள் எழுத்திலிருந்து புரிவது என்னவென்றால் வக்கீல்களால்தான் ஈழப்பிரச்சனை இழிநிலைக்கு போனது போலவும். மற்ற தமிழின அரசியல் கும்பலெல்லாம் அதை தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடுவது போலவும் உள்ளது.//

    ஒரு தமிழ்த் தலைவர் கூட சரியில்லை. அவசரத் தேவை ஒரு நாணயமான statesman என்றுதான் நான் எழுதியிருக்கிறேன். பிரச்சினை திசை திரும்பக் காரணமானதால் வக்கீல்கள் எல்லோரையும் விட வேஸ்ட் என்பதும் என் கருத்து.

  36. வக்கீல்கள் பற்றி நம் கருத்து ஒத்துப் போவதற்கு வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது. Let us agree to disagree and leave it as it is.

  37. வினவு தளத்தில் ஒரு கவலை தரும் மனப்பான்மை வளர்ந்து வருகிறது.

    வாதங்களுக்கு பதில் தரலாம். இல்லை நம் வேறுபாடுகள் பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியவை அல்ல என்று விலகி போகலாம். இல்லை வேறுபாடுகள் பேசி தீர்க்கக் கூடியவை அல்ல என்றாலும் தம் தரப்பு கருத்துக்களை பதிவு செய்யலாம். ஆனால் இப்போது இந்த வாதத்தை அதிகம் பார்க்கிறேன்:
    நான் சொல்லும் கருத்துக்கள் களப் பணி செய்பவர்கள்/கட்சிக்காரர்கள்/பங்கேற்பவர்கள்/நாங்கள் கை காட்டுபவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியவை. மற்ற யாருக்கும் இதைப் பற்றி பேச தகுதி இல்லை. முதலில் உங்கள் பங்களிப்பு என்ன என்று விளக்குங்கள்.

    இந்த ட்ரெண்டை ஆரம்பித்ததே வினவுதான். அதற்கு பிறகு மணி இப்படி பேசுகிறார். இப்போது யாரோ முருகன்.

    இது சரி இல்லை. ஏனென்றால்:

    1. வினவு கம்யூனிசம் பற்றி எழுந்த விவாதத்தின்போது இப்படி சொன்னார். – உலகில் எல்லா விஷயங்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. கம்யூனிசம் பற்றி குறை சொல்ல ஒரு பயிற்சியும் இல்லாதவர்கள் வந்து விடுகிறீர்கள். இரண்டு வருஷம் கட்சியில் சேர்ந்து உழைத்துவிட்டு பிறகு குறை சொல்லுங்கள். உங்களுக்கு கம்யூனிசம் பற்றி டெஸ்ட் வைக்கிறோம், அதில் பாஸ் செய்தால்தான் இனி கேள்வி கேட்கலாம். அதை படித்து சிரித்து விட்டு நான் சொன்னது மீண்டும் ஒரு முறை.
    a. காபிடலிசம் பற்றி உங்களுக்கு என்ன பயிற்சி இருக்கிறது? ஏதாவது இருபது கோடி முதல் போட்டு பிசினெஸ் நடத்தி இருக்கிறீர்களா?
    b. கம்யூனிசத்தை கரைத்து குடித்தவர்கள் மட்டும்தான் பேசலாம் என்றால் உங்கள் வீட்டு திண்ணையில் உங்கள் சக நிபுணர்களோடு அல்லவா பேச வேண்டும்? எதற்கு இந்த தளம்? வேண்டுமானால் பாஸ்வோர்ட் வைத்து ஒவ்வொரு முறையும் டெஸ்ட் பாஸ் செய்தவர்கள்தான் உள்ளே வர வேண்டும் என்று வைக்கலாமே?

    சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் நினைக்கும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே உங்களோடு வாதிட வேண்டுமென்றால் நீங்கள் அப்படிப்பட்ட தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு மட்டுமே பேச வேண்டும். அந்த தகுதி களப் பணியோ, கட்சியில் உழைப்போ, நக்சல்பாரி இயக்கத்தில் பங்கோ, இல்லை புண்ணாக்கு வியாபாரமோ எதுவாக இருந்தாலும் சரி. இங்கே வித்தகனும், ஆர்வியும், ராமுவும், சோமுவும், மீனாவும், லீனாவும் கேட்க வேண்டும் என்று ஆரம்பித்து – பல சமயம் அவர்களோடு விவாதம் நடத்தி விட்டு – பிறகு இந்த மாதிரி பேசுவது எனக்கு யாக்னவல்கியர் பற்றிய ஒரு புராணக் கதையை நினைவு படுத்துகிறது. ஜனக சபையில் கார்க்கி பிரம்மம் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் இதெல்லாம் உனக்கு புரியாது, இதை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும் என்றும் முடித்து விட்டாராம். அதனால் அவர் வெற்றி அடைந்துவிட்டாராம். கார்க்கி இனி இந்த மனிதரிடம் பேசுவது வீண் என்று ஓடி விட்டிருப்பாள் என்று நினைக்கிறேன்.

    2. மணி கேட்டார், இப்போது முருகன் கேட்கிறார். உங்கள் பங்களிப்பு என்ன என்று. நல்ல கேள்விதான். ஆனால் தங்கள் தங்கள் பங்களிப்பையும் விளக்கிவிட்டு பிறகு கேள்வி கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதைப் பற்றி மணியும் இது வரை பேசவில்லை, கேள்வி கேட்கும் முருகனும் தம்மையே கேள்வி கேட்டுக் கொள்ளவில்லை.

  38. RV! என்னிடம் இதுவரை யாரும் சாதிப் பெயர் கேட்டு அவமானப் படுத்தவில்லை, மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஆனால் களப்பணி என்ற சொற்பிரயோகம் எனக்கு விளங்காத காரணத்தால் அதைச் சொல்பவர்கள் மேல் லேசான எரிச்சல் வர வழைப்பது உண்மைதான். ஒரு சுமோவில் கட்சிக் கொடி கட்டிக் கொண்டு போக்குவரத்தை கன்னாபின்னாவென்று திசை திருப்பியபடி போகும் கூட்டம்தான் “களப் பணியாளர்”களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு!

  39. நண்பர்களே

    நான் எழுதியவற்றில் களப்பணி ஆற்றுபவர்கள் மட்டுமே பேசுவதற்கு தகுதியானவர்கள் என்றோ, நீங்கள் என்ன சாதி, வர்க்கம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் விவாதிப்பேன் என்றோ எங்கேயும் எப்போதும் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருப்பதாக புரியும்படி எழுதப்பட்டவைகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்ளவும் கடமைப் பட்டவன் நான்.

    மற்றபடி அனுபவமின்மையாலும், வெறும் படிப்பை மாத்திரம் நம்பி விவாதிக்க வருபவர்களுக்கு சில விசயங்களை கிரகிப்பது சாத்தியமில்லாமல் இருப்பதை அனைத்து துறைகளிலும் நீங்கள் காண முடியும் எனக் கருதுகிறேன். களப்பணியின் அவசியம் பற்றியும் அதில் படித்த நாம் பங்கேற்பது அவசியம் என்ற எனது கருத்திலும் இருந்து நான் விலகி விட்டதாக எவரும் நினைக்க கூடாது.

    ஒஏனெனில் தலித் மட்டுமதான் தலித் பிரச்சினையை பேச முடியும், பெண்கள் மட்டும்தான் பெண்களது பிரச்சினையைப் பேச முடியும் என்ற வறட்டுவாதத்தை நிராகரித்துதான் மக்களை அணிதிரட்ட முடியும். அதுபோல களப்பணி ஆற்றுபவன்தான் பேச முடியும் என்றால் பெரியாரை விடவும் நமது களப்பணி விஞ்ச முடியும் எனத் தோன்றவில்லை. அதற்காக அவரது கருத்துக்களில் உள்ள தவறை சுட்டிக் காட்ட கூடாதா என்ன…

  40. மணி,

    வீண் வேலை செய்கிறாய் என்று என் மனது சொன்னாலும் ஒரு முயற்சி செய்து பார்க்கிறேன்.

    // நண்பர் வாஸ்
    பங்கேற்பாளர்கள்தான் பேச வேண்டும் என்பது பங்கேற்பின் வலி மற்றும் இயக்கப்போக்கில் அதுபற்றிய செயல்முறைப் பயிற்சி கிடைப்பதால அனுபவ அறிவு அது எந்த துறையாக இருந்தாலும் அவசியமாகின்றது. //
    இங்கே பங்கேற்பாளர்கள்தான் பேச வேண்டும் என்பது அவசியமாகிறது என்கிறீர்கள்.

    இப்போது
    // நான் எழுதியவற்றில் களப்பணி ஆற்றுபவர்கள் மட்டுமே பேசுவதற்கு தகுதியானவர்கள் என்றோ, நீங்கள் என்ன சாதி, வர்க்கம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் விவாதிப்பேன் என்றோ எங்கேயும் எப்போதும் சொல்லவில்லை. //
    களப்பணி ஆற்றுபவர்கள் மட்டுமே பேச தகுதியானவர்கள் என்று எங்கேயும் எப்போதும் சொல்லவில்லை என்கிறீர்கள்.

    நீங்கள் சாதி, வர்க்கம் ஆகியவற்றை தெரிந்து கொண்டுதான் விவாதிப்பேன் என்று சொல்லவில்லைதான். அப்படி பொருள் வரும்படி நான் எழுதவில்லை என்றுதான் நினைக்கிறேன், ஆனால் உங்களுக்கு அப்படி பட்டிருந்தால் மன்னிக்கவும். ஜாதி பற்றி சொன்னவர்கள் பலர். சமீபத்தில் பார்த்த ஒன்று – சாமியை எதிர்க்க காரணங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருந்தார். முதல் காரணம் சாமி ஒரு பார்ப்பனர். அவருக்கு மிச்ச எல்லாம் இரண்டாம் பட்சம்தான். யார் சொன்னது என்று நினைவுக்கு வரவில்லை.

  41. //நண்பர் வாஸ்

    பங்கேற்பாளர்கள்தான் பேச வேண்டும் என்பது பங்கேற்பின் வலி மற்றும் இயக்கப்போக்கில் அதுபற்றிய செயல்முறைப் பயிற்சி கிடைப்பதால அனுபவ அறிவு அது எந்த துறையாக இருந்தாலும் அவசியமாகின்றது. அதனை பிரயோகிப்பதற்கான அறிவு கிடைக்காமல் அதனை மனனம் செய்த அனுபவம் மாத்திரம் எஞ்சியிருந்தால் பங்கேற்றுதான் சமூக அறிவைப் பெற முடியுமே தவிர இல்லாவிடில் அன்றாட சாதி ஒடுக்குமுறை பற்றி பேசினால் ஏதோ கணக்கு பாடம் போல மாலிக்காபூருக்க எப்போ கணக்கு தீர்ப்பது அல்லது நஸ்ருதீன் ஷாக்கு எப்போ கணக்கு தீர்ப்பது என்று பேசத்தான் இயலும். அந்த வலியை இன்றும் அனுபவிகக்கும் மக்களைப் பார்த்து பேசியாவது புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
    //

    இந்த பத்தி முழுமையாக புரிய வைக்கும் என நம்புகிறேன்

  42. நண்பர் மணி,
    உங்கள் மறூ மொழியையும் மற்றூம் பல நண்பர்களீன் மறூமொழிகளூம் படித்தேன். உங்கள் பதிலில்,நான் அறீவு ஜீவித்தனமாக பேசுவதாக தொனி தெரிகிறது. இதற்கு நான் என்ன சொல்வது என்றூ தெரியவில்லை. நான் ஏற்கனவே கூறீயதுபோல், உங்கள் மேலும்,நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் மேலும் எனக்கு மதிப்பு உண்டு. இது நான் தனிப்பட்ட மனிதனாக பல இயக்க தோழர்களோடு பேசி/விவாதித்து வந்ததால். சு.சாமி தாக்குதலில்,”ஜனநாயக மறுப்பு நம்முடைய நாட்டில் எப்படி இருக்கிறது’ என்றூ தெளீவாக புரிந்தது என்றூ சொல்கீறீர்கள். எனக்கு இது நகைச்சுவையாக இருக்கிறது. இந்த நாட்டில் ஜனநாயக மறுப்பும்,போலீஸ் அராஜகமும் இந்த நிகழ்ச்சியால்தான் உங்களூக்கு ” உள்ளங்கை நெல்லிக்கனி” போல் தெரிவது ஆச்சிரியமாக இருக்கிறது. மற்றபடி, நீங்கள் சார்ந்திருக்கும் கோட்பாடுகளீனால்,இந்த நிகழ்ச்சியை நியாயப்படுத்த உங்களூக்கு நிர்பந்தங்கள் இருக்கலாம். ஏனெனில், உங்கள் பாதை வேறூ. உங்கள் மாற்றூ கருத்தையும் உள்வாங்கி கொண்டுதான் இதை எழுதுகிறேன். மற்றபடி, ஒரு நண்பர், சொன்னது போல்,Let us agree to disagree and leave it as it is.

  43. கருத்தெழுதி முடிவதற்குள் ஈழத்தில் தமிழனுக்கு கருமாதி முடிந்துவிடும். முடித்துவிட்டு தலைவாழை இலைபோட்டு வடை பாயாசத்துடன் சாப்பிடுவோம். தண்ணீர் தெளித்து சீமான் போன்ற வீரத் தமிழர்களுக்கும் அஞ்சலி செலுத்த மறந்துவிடாதீர்கள்.

    நன்றி.

  44. //கருத்தெழுதி முடிவதற்குள் ஈழத்தில் தமிழனுக்கு கருமாதி முடிந்துவிடும். முடித்துவிட்டு தலைவாழை இலைபோட்டு வடை பாயாசத்துடன் சாப்பிடுவோம். தண்ணீர் தெளித்து சீமான் போன்ற வீரத் தமிழர்களுக்கும் அஞ்சலி செலுத்த மறந்துவிடாதீர்கள்.

    நன்றி.//

    சீரியசாக ஏதோ சொல்கிறீர்களே என்று பார்த்தால் சீமானை வீரத் தமிழன் என்று சொல்லி குபீர் சிரிப்பு வர வழைத்து விட்டீர்களே! அது சரி, இந்தப் பிரச்சினையால் ஒரு சுமாரான சினிமா இயக்குனருக்கு அரசியல் வாழ்க்கை அமைக்க முயற்சி நடக்கிறது என்று தெரிகிறது. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னுமொரு திருமா அல்லது ராமாதாஸாக வருவாராக இருக்கும். சினிமா பிழைத்தது என்று நினைத்து தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

  45. ஒரு தமிழனுடைய துணிவில் வீரத்தைக்கண்டு இன்னொரு தமிழன் பாரட்டக்கூடாது. அதற்கு ஓர் உதாரணம்:

    தமிழனை பார்த்து நீ ஒரு நாயைப்போன்றவன் என்று ஒருவர் கூறினார். நாய் நன்றியுள்ளது, நான் பெருமைப்படுகிறேன் என்று தமிழன் பதில் கூறினான். அந்த ஒருவர் சொன்னார், அப்படியல்ல, தனது எஜமான் எத்தனை கேடுகெட்டவனாக இருந்தாலும் நாய் அவனைக்கண்டதும் வாலை ஆட்டி காலை நக்கும். ஆனால் தன் இனத்தைக் கண்டால் உறுமி கடிக்கப் பாயும்.

    நாங்கள் கருத்துகள் எழுதி சிரிப்பு வர சிரிக்கிறோம். கருத்துகளை துணிவுடன் செயல்படுத்த முனைந்தவர்கள் சிறையிலிருந்து மரிக்கிறார்கள்.

    இங்கு யாராவது தற்போதுள்ள வீரத் தமிழர்களை பட்டியலிட்டு தரமுடியுமா? அவர்களை அரசியல் தலைவர்களாக்கி அவர்கள்மூலம் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதை பார்க்கமுடியுமா என்றொரு நப்பாசை.

  46. வீரர்கள் அரசியல் தலைவர்களாகி ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன? இன்னும் காட்டு மிராண்டிகளாக வாழ்கிற கூட்டமா இந்திய சமுதாயம்? யார் அதிக பட்ச வீரனோ அவன் தான் பெரியவன் என்று சொல்லும் காலம் அழிந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன.

    சீமான் போன்ற மூன்றாம்தர மேடைப் பேச்சாளரையெல்லாம் அவர் அடி முட்டாள் என்பதை மறைத்து வீரன் போராளி என்று கொம்பு சீவிவிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

    வீரம் வெங்காயம் என்று வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு திரியாமல் நேர்மை, நாணயம், மனித நேயம், உலக அறிவு உள்ள யாராவது கண்ணில் பட்டால் அவரைத் தலைவராக்குங்கள்.

  47. வீரர்கள் அரசியல் தலைவர்களாகி ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன? இன்னும் காட்டு மிராண்டிகளாக வாழ்கிற கூட்டமா இந்திய சமுதாயம்? என்ற கருத்து வாழ்க்கையை புரிந்துகொண்டுதான் எழுதப்பட்டதா! எனக்கு தெரியவில்லை.

    ஆனாலும், நான் இதனை மறுக்கவில்லை. இன்றைய தலைமுறையிலும் காட்டு மிராண்டிகள் இந்திய சமுதாயத்தில் வாழ்கிறார்கள். இதை நான் கருத்துக்காகவோ, கற்பனையிலோ எழுதவில்லை. இந்திய அமைதிப்படைமூலம் ஈழத்தமிழர்கள் நிறையவே அனுபவித்துள்ளார்கள். மதறாஸ் ரெஜிமென்டில் உள்ள தமிழர்களுடன் இணைந்திருந்த வேறு ரெஜிமென்டை சேர்ந்த சிலர் மட்டுமே, சுத்த இராணுவ வீரர்களாக செயல்பட்டார்கள். ஏனையோர் காட்டு மிராண்டிகளைவிடவும் மோசமானவர்களாக நாங்கள் இந்திய சமுதாயத்தில் இருக்கின்றோம் என்பதை எந்தவித மனக்கூச்சமும் இன்றி வெளிப்படுத்தினார்கள். இன்றும் நாங்கள் இந்திய சமுதாயம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழ்நாட்டில் காட்டு மிராண்டிகள் வாழந்துகொண்டிருப்பதை போலீஸ் அராஜகம் மிகவும் துல்லிமாக காட்டுகிறதே!!. ஒருவரை காவல்துறைக்கு தேர்ந்தெடுப்பதற்கு அவரை எப்படியெல்லாம் புரட்டி, உரசி, சோதனைசெய்து நியமனம் அளிக்கப்படுகிறது! இதெல்லாம் போலியா?

    வினவுப் பதிவில் வந்த குறிப்பொன்றை உங்கள் கவனத்திற்கு தருகிறேன்:

    நீதிமன்றத்தை நம்பிப் பயனில்லை என்பதை தம் சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்ட வழக்குரைஞர்கள், வீதியில் இறங்கி மக்கள் மன்றத்துக்கு வந்திருக்கிறார்கள். போலீசு இராச்சியம் என்பது அவர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை. வழக்குரைஞர்கள் இதில் தோற்றுவிட்டால் போலீசு இரத்தம் சுவைத்த மிருகமாகிவிடும்.வக்கீலையும் நீதிபதியையுமே அடித்தவனுக்கு ஆட்டோ ஓட்டுனரும், தள்ளு வண்டி வியாபாரியும், மாணவனும், தொழிலாளியும், விவசாயியும் எம்மாத்திரம்?

    நான் திரும்பவும் எழுதுகிறேன். நாங்கள் கருத்தெழுதி முடிவதற்குள் ஈழத்தில் தமிழனுக்கு கருமாதி முடிந்துவிடும். அடுத்த கருமாதி தமிழ்நாட்டு தமிழனுக்கு ஆரம்பமாகும். ஆரம்பமாகிவிட்டதென்றே கொள்ளலாம். இதனை தடுக்கவேண்டும். செயலில் இறங்கி செயல்படுபவர்களை தரம்பாராது, பல்லைப் பிடித்துப்பாராது உடனே கைகொடுங்கள். அல்லது அதற்குரிய தரம், தகுதி இருப்பதான துணிவு உங்களுக்கு ஏற்படுமானால், நீங்களாகவே இறங்கி செயல்படுங்கள்.

  48. //நான் திரும்பவும் எழுதுகிறேன். நாங்கள் கருத்தெழுதி முடிவதற்குள் ஈழத்தில் தமிழனுக்கு கருமாதி முடிந்துவிடும். //

    மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன்.

    //செயலில் இறங்கி செயல்படுபவர்களை தரம்பாராது, பல்லைப் பிடித்துப்பாராது உடனே கைகொடுங்கள். //

    இல்லை. தவறான தலைமையிடம் இத்தகைய பொறுப்பை ஒப்படைப்பது எதிகாலத்திலும் இதே பிரச்சினை தொடரக் காரணமாக இருக்கும்.

    //வக்கீலையும் நீதிபதியையுமே அடித்தவனுக்கு ஆட்டோ ஓட்டுனரும், தள்ளு வண்டி வியாபாரியும், மாணவனும், தொழிலாளியும், விவசாயியும் எம்மாத்திரம்?//

    போலீஸ் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஆனால் நான் மீண்டும் மீண்டும் சொல்வது வக்கீல்கள் முட்டை எறிந்ததும் மகா முட்டாள்தனம். அதை புகழ்வது இந்தப் பிரச்சினையில் உங்கள் நிலைப்பாடை பலகீனமடையவே செய்யும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க