ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை இழப்பிருந்தும் சிங்கள இராணுவம் எப்படி தொடர்ந்து முன்னேறுகிறது என்பதற்கு முக்கியமான காரணம் இந்திய அரசு செய்து வரும உதவிதான். இதை உதவி என்பதை விட போரை வழிநடத்துவதே இந்தியாதான் என்றால் கூட மிகையில்லை. நவீன ஆயுதங்கள், வீரர்கள், வழிகாட்டும் தளபதிகள் என்று இந்தியா செய்து வரும் உதவியை சிங்களப்பத்திரிகைகளும், சிங்கள அரசியல்வாதிகளும் ஒத்துக் கொள்வதை 29.03.09 தேதியிட்ட ஜூனியர் விகடன் வெளியிட்டிருக்கிறது.
சமீபத்தில் இந்திய அரசால் அனுப்பப்பட்ட இராணுவ மருத்துவக் குழு கூட போரில் காயமுற்ற இந்திய வீரர்களுக்கு சிகிச்சை அளிப்தற்குத்தான் என்ற செய்தியும் இப்போது வெளிவந்திருக்கிறது. போரில் காயமுறும் இந்த வீரர்களை தமிழ் மருத்துவர்களை வைத்து சிகிச்சை கொடுத்தால் விசயம் அம்பலமாகிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு. மேலும் இந்தியாவில் தேர்தல் முடித்து விடுவதற்குள் புலிகளை முடித்து விடவேண்டுமென இந்தியா விரும்புவதாகவும், அதனால் இன்னும் பல நூறு வீர ர்களையும், போபார்ஸ் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும், போர்க்கப்பல்களையும் உடனடியாக அனுப்பப் போவதாகவும் தெரிகிறது. இது நடைபெறும் பட்சத்தில் முல்லைத்தீவில் இருக்கும் மக்களில் பாதிப்பேர் கொல்லப்படுவது உறுதி.
இந்தியாவின் உதவியை வைத்துத்தான் சிங்கள ராணுவம் பலரைப் பலிகொடுத்தும் களத்தில் நிற்க முடிகிறது. இதுநாள் வரை தமிழ்நாட்டின் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் நொடிக்கொரு தடவை ஈழத்தின் துயரை பேசி நாடகமாடி வந்தார்கள். தற்போது அனைவரும் கூட்டணி, தொகுதிப்பங்கீடு, என பொறுக்கித்தின்ன போய்விட்டதால் எல்லாக் கூட்டணிகளிலும் ஈழத்திற்கு எதிரான துரோகிகளும், எதிரிகளும், சந்தர்ப்பவாதிகளும் நிறைந்திருக்கின்றனர். இதனால் எந்த கூட்டணியும் எதிரிக் கூட்டணியைப் பற்றி ஈழப்பிரச்சினைக்காக புகார் தெரிவிக்க இயலாது.
ஈழத்திற்காக போராடிய வழக்குரைஞர்களை தடியடியாலும், மாணவர்களுக்கு பலநாட்கள் விடுமுறை விட்டும் ஒடுக்கியிருக்கிறது அரசு.
இந்நிலையில் ஈழத்திற்காக இன்றும் குரல் கொடுப்பதும், மக்களிடம் பிரச்சாரம் செய்வதுமான வேலைகள் ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகள்தான் செய்து வருகின்றன. அதனுடைய அங்கமாக 25.03.09 அன்று சென்னையில் நடந்த ம.க.இ.க பொதுக்கூட்டத்தில் தோழர் முகிலன் வரைந்த கருத்தப்பட கண்காட்சி பலநூறு மக்களை ஈர்த்தது. அந்தக் கருத்துப்படங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இந்த ஒவியங்கள் புகைப்படங்களாக எடுத்து எமக்குதவிய நண்பர் முத்துக்குமாருக்கு எங்கள் நன்றி.
இந்த ஒவியங்களை முடிந்த அளவு எல்லோரிடத்திலும் சேர்ப்பதற்கு முயலுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் கூச்சலின் நடுவில் ஈழத்திற்கான தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்புவதற்கு நமது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.
(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)
ஓவியக் கண்காட்சி சிறப்பாக இருந்தது.
ஈழப்போராட்டம் சு.சாமி மீது முட்டை எறிந்து, திசைதிரும்பிவிட்டதாக பலர் பேசுகிறார்கள். மற்ற வர்க்கங்கள் என்ன செய்தார்கள்? அவர்களை போராட வேண்டாம் என யார் சொன்னது?
நேற்று மருதையன் பொதுக்கூட்டத்தின் ஆவேசமான நீண்ட உரையில் ஒரு இடத்தில் கேட்டார்.
மற்ற அரசு ஊழியர்கள் சங்கம், பொதுத்துறை ஊழியர்கள் சங்கம், ஆசிரியர்கள் சங்கம் ஈழப்போராட்டத்திற்கு என்ன செய்தது?/வழக்கறிஞர்கள் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என சொல்ல வேண்டியது தானே? என்றார்.
அனைத்து படங்களையும் வெளியிட்டிருக்கலாம்
முடிந்தால் வெளியிடவும்….
நாற்காலிக்காரர்கள்!
நாசமாக போகட்டும்!
பதிவுக்கும் , படங்களுக்கும் நன்றி.
வினவு, தொடரும் ஈழத்தமிழருக்கான உங்கள் ஆதரவுக்கு ஒரு ஈழத்தமிழரின் பல கோடி நன்றிகள். நீங்கள் சொல்வது சரிதான். தமிழ்நாட்டு அர்சியல்வாதிகளை ஈழத்தமிழர்கள் நம்பினால், நாங்கள் நட்டாற்றில் தான் நிற்போம். ஆனாலும், ஈழத்தமிழர்கள் அரசியல்வாதிகளை நம்பியதை விட தமிழ்நாட்டு உறவுகளைத்தான் அதிகம் நம்புகிறோம்.அவர்கள் எங்களை ஒருபோதும் கைவிடமாடார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஈழத்தில், வன்னியில் கொல்லப்படும் ஈழத்தமிழனுக்காக தொடர்ந்து உங்கள் குரல்கள் ஒலிக்கட்டும்.அதற்கு நாங்கள் என்றைக்குமே உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
ஈழத்தமிழர்கள் நனைகிறார்கள் என்று ராஜபக்ஷேக்களுடன் சேர்ந்து சோனியாவும் அவரைத்தாங்கும் காங்கிரசும் அழுத துரோகத்தைதான் எங்களால் தாங்கமுடியவில்லை. இது போதாது என்று சீனா வேறு. ஈழத்தில் நடப்பது உள்நாட்டு யுத்தமாம். அதனால் அதை UN தனது விவாதப்பட்டியலில் இலங்கை விடயத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாதாம். ஈழத்தமிழனை ஏப்பம் விட சீனாவும் காங்கிரஸ் இந்தியாவும் தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற்ன. இதற்கெல்லாம் எதிராக ஈழ்த்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தொடரந்து போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
தேர்தல் பிரச்சார நாடகங்கள் ஏகபோகமாக நடந்து கொண்டிருக்க, தொடரட்டும் வினவின் பணி. போலி அரசியல்வாதிகளையும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இரட்டை வேடம் போடுபவர்களின் வேஷத்தையும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு அடையாளம் காட்டுங்கள். தேர்தல் பிரச்சார பீரங்கிகளை உங்கள் எழுத்துக்கள் தகர்த்து எறியட்டும்.
dear brother,i want to thank toyou,your support to tamil people and help to tamil people.thanks agian. elango.
மயிலை மாங்கொல்லையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் பொதுக்கூட்டம் நடக்கிறதாம்.
ஈழத்தமிழர்கள் செய்த தமிழக அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும் செய்த பச்சை துரோகத்திற்காக, தேர்தலை புறக்கணிக்க போகிறார்களாம்.
நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.
எங்களிடம்
சொல்வதற்கு பதில் இல்லை
சப்பை கட்டுத்தலைவர்களின்
வாய்மொழியே பொன்மொழியாய்
வைத்திருக்கிறோம்
“என்னை கடலில் தூக்கி போட்டாலும்”
வரும் போதெல்லாம் கண்ணீர்
விடுகிறோம்….
செயா செரிக்காமல்
உண்ணாவிரதமிருந்ததற்காக
பல்லில் தண்ணீர் படாமல் காத்திருந்தோம்….
ஈழத்துக்காக அணிமாறிய
கேப்புமாரி அய்யாவுக்கு
பூமாரி பொழிகின்றோம்…..
துப்பாக்கியோடு சீன் காட்டும்
திருமாவின் கட்டளைக்கு காத்துக்கிடக்கிறோம்
சிறுத்தைகளாய் வீறு கொண்டு எழ…..
சிபிஎம் சிபிஐ விசயகாந்து
விசய் ரஜினி கமல்
நமீதா எல்லோரும் ஈழத்துக்காக
கவலையுற்ற போது
கலங்கிப்போனோம்…..
எங்கள் சுயநலத்தினை
மூடிமறைக்க ஒவ்வொரு
பச்சோந்தியையும் காட்டி
தப்பிக்கிறோம்
உண்மை
இப்படி இருக்க
கண்டிப்பாய் ஓட்டு போடுவோம்
யார் ஈழத்துக்காக நாடாளுமன்றத்தில்
பேசுவார்களோ அவர்களுக்கு.
வாழ்த்துக்கள் தோழர் முகிலன்! உங்கள் ஓவியக்காட்சி பெரும்பான்மை மக்களின் மனிநிலையை பிரதிபலிக்கிறது. இந்த தேர்தல் காலம் முழுவதும் இந்த ஓவியங்கள் தமிழகமெங்கும் உலாவரட்டும். இதன் மென் பிரதிகள் அகிலமெங்கும் பரவட்டும். துரோகிகளைஅடையாளம் காட்டும் இந்தப்படங்கள் நம்மிடையே தியாகிகளை உறுவாக்கட்டும்.
தொடர்ந்து எமது மக்களுக்காக வினையாற்றி வரும் வினவுக்கு வணக்கங்கள். சுய லாபத்திற்காக அல்லாமல் ஒரு பொது பிரச்சனைக்காக ஓவியம் எழுதும் தோழர் முகிலன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
Great work Friends mukilan and vinavu. I have sent these images to my entire mailing list. I support your cause and I am not going to vote to any anti tamil politicians this elections
நன்றி தோழர் முகிலன், உங்கள் ஓவியங்களை பிரச்சார படங்களாக இணையத்தில் பரவ்விடுவது எங்கள் வேலை. இப்படி ஒரு வாய்ப்பை நீங்கள் அடிக்கடி ஏற்படுத்தி தர வேண்டும்!
http://www.eurotvlive.com/
http://www.vakthaa.tv/c/19/documentary
[…] ஈழம்: எதிரி – துரோகிகளுக்கெதிரான […] ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி […] […]
//வாழ்த்துக்கள் தோழர் முகிலன்! உங்கள் ஓவியக்காட்சி பெரும்பான்மை மக்களின் மனிநிலையை பிரதிபலிக்கிறது. இந்த தேர்தல் காலம் முழுவதும் இந்த ஓவியங்கள் தமிழகமெங்கும் உலாவரட்டும். இதன் மென் பிரதிகள் அகிலமெங்கும் பரவட்டும். துரோகிகளைஅடையாளம் காட்டும் இந்தப்படங்கள் நம்மிடையே தியாகிகளை உறுவாக்கட்டும்.//
இதை நான் வழிமொழிகிறேன். இந்த படங்கள் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தமிழகமெங்கும் உலா வர வேண்டும். (கோக்குக்கு செய்தது போல)
vaztthukkal thozhar mugilan avargale!
puratchikkana ungal porattam innum valimaiyana muraiyil thodarattum.
Very good and i appriciate your good work
சிறப்பான படைப்புகள், தோழர்கள் எல்லாப்பகுதிகளுக்கும் இதை எடுத்துச் செல்லவேண்டும். நானும் இதை செங்கொடி தளத்தில் தொடர்காட்சியாக (ஸ்லைடு ஷோ) வெளியிட அனுமதிக்குமாறு கோருகிறேன்.
தோழமையுடன்
செங்கொடி
ஈழம் (நீலிக்)கண்ணீர் + தலைவர்கள் = தேர்தல் 2009
அலைகள்
ஓயாது விளையாடும்
அழகான தீவு!
குண்டுகள் விழுந்து
நொடிக்கொருமுறை
பூமி அதிர்கிறது.
திரும்பிய திசையெல்லாம்
பிணங்கள்!
பரம திருப்தியுடன்
பறக்க முடியாமல்
கழுகுகள்
புதிய பிணங்களுக்காய்
ஆவலாய்
காத்துக்கொண்டிருக்கின்றன.
****
வானம் வெறித்துப்
பார்க்கிற கண்கள்
தீயில் வெந்த உடல்கள்
பிளாட்பாரத்தில் – வரிசையாய்
கிடத்தப்பட்டிருக்கின்றன
பிணங்களை காட்டி காட்டி
சிலர்
ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள்
அருகில் போய்
உற்றுக்கேட்டேன்
“ஓட்டு”
***
grate job…best wishes and keep it up…..thanks
புலம்பலாக ஒலித்தாலும், சற்று உறைக்கும் என நம்பி எழுதியுள்ள கொடியோனின் வரிகள்…
கருத்தோவியங்கள்.
கயவர்களைக் கண்டிக்கும் கலைப்போர்,
வேதனையில் வெந்துகிடக்கும் மனதை மெல்லியதாக வருடிவிடுகிறது.
எழுதுகோலை எடுத்து ஒவியர்களை வாழ்த்தி எழுத முயன்றேன். அது
எழுதமறுத்து புள்ளடிதான் போடுகிறது.
எழுதுகோலைப் பார்த்தேன்.
தமிழக அரசினால் இலவசமாக வழங்கப்பட்ட எழுதுகோல்.
ஈழத்தமிழர் விவகாரம் பற்றி தமிழ்நாட்டில் எல்லோரும் மௌனம் சாதிக்கத் தொடக்கி மக்களின் எழுச்சி அடக்கப் பட்டுவிட்டதே என்று கவலை கொண்டிருக்கும் வேளையில் உங்கள் பதிவுக்கு நன்றி.
ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது.ஒன்று மட்டும் உண்மை ,ஈழப்போர் பல உலக நாடுகளின் இரட்டை வேடங்களை எல்லோருக்கும் அப்பட்டமாகத் தெரிய வைத்துவிட்டது.
அமரிக்கா எப்படி ஈராக் விடயத்தில் நடந்து கொண்டதோ,அப்படியே இந்தியா ஈழ விடயத்தில் மோசமாக நடந்து கொண்டிருக்கிறது.
ஒருவேளை எதிர்கால வல்லரசுக்கனவில் இருக்கும் இந்தியா இனிமேல் பல விவகாரங்களில் இப்படித்தான் அநியாயத்துக்கு துணை போய்,அடாவடித்தனமாக நடந்துகொள்ளுமோ?
இந்தியா,இலங்கை இருநாடுகளுமே தாங்கள் ஒன்றை ஒன்று தங்களுக்கு சாதகமாக வளைத்து விட்டதாக எண்ணுகின்றன .
ராஜபக்ச நினைக்கிறார்,சீனாவையும் ,பாகிஸ்தானையும் காட்டி, தான் இந்தியாவை தனக்கு சாதமாக்கி தமிழ் மக்களை அழிக்க பயன்படித்திக் கொண்டிருப்பதாக .
இந்தியா நினைக்கிறது,இலங்கை அரசு கேட்பதையெல்லாம் கொடுத்து உதவி செய்வதால் அந்தக் குட்டிநாடு தங்களுக்கு அடங்கி இருக்கும் என்று.
உலக அரசியலில் கடந்த இருபத்தைந்து வருடங்களில் பல மாற்றங்கள் நடந்து விட்டன
பெர்லின் மதில் உடைந்து ,ரசியா துண்டு துண்டாக உடைந்துவிடும் என்று கால் நூற்றாண்டுக்கு முன் யாரும் நினைக்கவில்லை.
அதே மாதிரி ,ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியில் அமேரிக்கா சிக்கும் என்றும் நினைக்கவில்லை.
அதேபோல கீழே சொல்லும்
இந்த இரண்டு நிகழ்வுகளும் இன்னும் ஒரு இருபது ,இருபத்தைந்து வருடங்களில் நடக்கலாம்.
1.இந்தியாவின் மேலாதிக்கம் பெருகி ,இலங்கை இந்தியாவின் இரண்டு மாநிலங்களாக வரலாம்-. சிங்கள் ஸ்ரீலங்கா மாநிலம் -தமிழ் ஈழ மாநிலம்
2.அல்லது இந்திய மத்திய அரசினது எதேச்சிகராகப் போக்கினால் அதிருப்தி அடைந்து முதலில் தென் மாநிலங்களும் பின்பு வடகிழக்கு மாநிலங்களும் ஒவ்வொன்றாகத் தனி நாடுகளாகப் பிரியலாம் ,
ஒரு இனத்தை அழிப்பதற்காகத் புத்திசாலித்தனமாக நடப்பதாக இந்தியாவும் இலங்கையும் நினைத்தாலும் அதன் பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே தீருவார்கள்.
-வானதி
ருத்ரன் கட்டுரை என்ன ஆச்சி… சாமியார்கள் பத்தி அவர் எழுதுறத படிக்க ஆவலோட காத்திருக்கிறோம்.
இன்று எழுத்தாளர் அருந்ததிராய் லயோலா கல்லூரி திறந்த வெளி அரங்கில், மாலை 5.30 மணிக்கு ஈழம் குறித்து பேசுகிறாராம்
http://www.srilankaguardian.org/2009/04/catholic-church-ally-of-tamil-tiger.html
ஈழதமிழனின் மக்கள் தொகை பெருகவேண்டும்
வேடிக்கையாக இருக்கும்,ஈழதமிழர்க்கு ஒரு வேண்டு கோள்.ஈழத்தில் வாழும் தமிழர்கள் ,ஒன்று இரண்டு குழந்தைக்ளோடு நிறுத்தி விட கூடாது.நீங்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்.
அடுத்த பத்து ஆண்டுகளில் ஈழதமிழரின் மக்கள் தொகை மூன்று மடங்கு ஆக வேண்டும்.
அகிமசை வழி போராட்டம்,ஆயுத போராட்டம் பெறாத வெற்றியை நீங்கள் மக்கள் தொகை பெருக்கத்தின் மூலம் உங்கள் வாழ்விடங்களில் சிங்களவர்கள் குடியேற்ய்வதை தடுக்கலாம்,மேலும் உங்கள் அதரவு அரசியல் கட்சிகளுக்கு தேவை படும்,அப்போது நீங்கள் விரும்பும் மாற்றத்தை ,சுய அதிகாரத்தை பெறலாம்.
தேவை ஈழதமிழரின் மக்கள் தொகை.ஈழதமிழர்கள் இதை கவனிக்க வேண்டுகிறேன்
இலங்கை அரசின் ,சிங்கள இராணுவத்தின் திவிரவாதம்.
இலங்கை அர்சின் ,சிங்கள இராணுவ திவிரவாதிகள்,ஈழத்தில் தன் நாட்டு குடிமக்கள் மீதே குண்டுகளை வீசி கொன்று வருகிறது.குழந்தைகள் ,பெரியவர்கள் என்று பாராமல் ,அவர்கள் மீது விஷ வாயு குண்டுகளை வீசி கொன்று வருகிறனர்,சிங்கள இராணுவ தீவிரவாதிகள்.
இலங்கை அரசே,தீவிரவாத்தை ஆதிரிக்கிறது.தீவிரவாத செயலில் ஈடுபடுகிறது.
இத்தகைய ,இலங்கை அரசின் தீவிரவாதத்திற்கு ,ஆதரவாக இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி ஆதரித்து வருகிறது.
சிங்கள இராணுவ தீவிரவாதத்தை ஆதரிக்கும் ,இந்திய அரசின் செயல் கண்டிக்க தக்கது.மனித தன்மை அற்றது.
அடித்து கொண்டிருப்பவன் (இலங்கை இராணூவம்) தீவிரவாதி அல்ல என்றும்,அடி வாங்குபவன்(ஈழதமிழன்) வலிபொருக்காமல் திருப்பி அடித்தால் அவன் தீவிரவாதி என்றும் ,இலங்கை அரசும்,இந்திய அரசும் விளக்கம் கூறுவது வேதனையாக உள்ளது.
எதை தீவிரவாதம் என்கிறோம் பொதுமக்களை ,குழந்தைகளை ,முதியவர்களை கொல்பவர்களை தானே.அப்படி என்றால் இந்த செயலை எல்லாம் செய்யும் இலங்கை அர்சின் சிங்கள இராணுவம் தான் தீவிரவாத செயல் புரிகிறது.
புலிகள் யாரும் குழந்தைகளை ,சிங்கள பொது மக்களை தாக்க வில்லை.அவர்கள் தங்களை தாக்க வரும் சிங்கள இராணுவ தீவிரவாதிகளை தாக்குகிறார்கள்.
ஈழதமிழனும்,சிங்களவர்க்கு சமமாக நடத்தபட்டால் ,தமிழ்மக்கள் ,ஆயுத போராட்டத்தை விட்டுவிடுவார்கள்.அதை செய்யாத இலங்கை அரசு,ஈழதமிழ்ர்கள் மீது திவிரவாதத்தை கட்டவிழுத்து விட்டுள்ளது.
இலங்கை இராணுவ தீவிரவாதமும்,அந்த தீவிரவாதத்திற்கு துணை போகும் இந்திய அரசும் மனம் மாறவேண்டும்.
இலங்கை அரசும்,இந்திய அரசும், தீவிரவாத வழியை கைவிட்டும் அமைதி வழியில் ஈழதமிழர்க்கு சுய அதிகார உரிமையை வழங்கி அவர்கள் வாழ வகைசெய்யவேண்டும்.