போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜெயலலிதாவின் பொன் முழக்கம் வரலாற்றில் இடம் பெற்றது போல இந்திரா காந்தி கொலையான 1984 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த சீக்கிய இனப் படுகொலையைப் பற்றி ” ஒரு ஆலமரம் விழுந்தால் பூமியில் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் ” என்று நியாயப்படுத்திய ராஜீவ் காந்தியின் திமிரும் வரலாற்றில் பதிவாக்கியிருக்கிறது. அந்தக் கலவரத்தில் டெல்லியில் உள்ள சீக்கிய மக்கள் காங்கிரசுக் கும்பல்களால் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள்.
இதுநாள் வரை அந்தக் கலவரத்திற்கு காரணமான பெரும்பான்மையான நபர்கள், தலைவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. இடையில் அந்தக் கலவரத்திற்கு சீக்கிய மக்களிடம் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டு நடித்ததும் நடந்தது. ஆனால் இந்தக் கலவரத்தில் கொலைகாரக் கும்பலை வழிநடத்திய சஜ்ஜன் குமார், ஜகதீஷ் டைட்லர் இருவரும் குற்றவாளிகள் என பல வழக்குகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்து வந்த சி.பி.ஐ இருவரும் குற்றவாளிகள் இல்லை என பொய்யாக நற்சான்றிதழ் வழங்கியது. இதனால் இந்தக் கயவாளிகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரசு தீர்மானித்திருக்கிறது. அன்றைக்கு ராஜீவ் கொழுப்பெடுத்து சொன்னதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
இந்த அநீதியை எதிர்த்துத்தான் தைனிக் ஜாக்ரன் எனும் தினசரியில் பணியாற்றும் ஜார்னைல் சிங் என்ற பத்திரிகையாளர் டெல்லி காங்கிரசு தலைமயகத்தில் வைத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சி.பி.ஐயை கட்டுப்படுத்தும் ப.சிதம்பரத்திடம் கேட்டார். கொலைகாரர்களை அங்கீகரிக்கும் காங்கிரசின் நயவஞ்சக்த்தை அதெல்லாம் ஒன்றுமில்லையென சிதம்பரம் பதில் கூற மறுத்த் போதுதான் அவர் சினமடைந்து செருப்பை வீசீனார். பின்னர் தனது நடவடிக்கை தவறென்றாலும் தான் எழுப்பிய பிரச்சினையும் கேள்வியும் இன்னமும் விடையளிக்கப்படாமல் உள்ளதென தெரிவித்தார்.
ப.சிதம்பரம் இந்த நிருபரை பெருந்தன்மையாக மன்னித்து விட்டாராம். சீக்கிய மக்களைக் கொன்ற கொலைகாரக் குற்றவாளிகளையே வேட்பாளர்களாக நியமித்த கட்சியின் நடவடிக்கை மட்டும் குற்றமாகத் தெரியவில்லை. நிச்சயம் சீக்கிய மக்கள் இந்தக் கயவாளிகளை மன்னிக்கமாட்டார்கள்.
ஈழத்திலும் இதுதான் நடந்து வருகிறது. தற்போது இந்திய இராணுவம் நேரடியாக வன்னிப்போரில் பங்கேற்றிருப்பது குறித்து பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும் போரில் பயன்படும் விசவாயு உட்பட நவீன நாசாகார குண்டுகளெல்லாம் இந்தியாவின் நன்கொடையாக இலங்கை இராணுவத்திற்கு அளிக்கப்பட்டு தமிழ் மக்களை கொன்று வருகின்றன. இந்தியா நடத்தும் இந்தப்போரை எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறந்து பேசுவதில்லை. மாறாக போரை நிறுத்துவதற்கு இந்தியாவிடமே தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும் மன்றாடுகிறார்கள். எனவேதான் இந்தத் தேர்தல் என்பது தமிழ் மக்களின் தன்மான உணர்வை எடுத்துக்காட்ட வேண்டுமென்றால் புறக்கணிப்பின் மூலமே அதைச் செய்ய முடியுமென கூறுகிறோம்.
ஈழத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் இருப்பவர்களும் பங்கேற்கும் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதுதான் நாம் செய்ய வேண்டிய சரியான செருப்படி!
எவ்வளவு திமிரான வார்த்தைகள். இந்த கலவரங்களுக்கான காரணகர்த்தாக்கள் என்று விசாரிக்கும் பொழுது, இந்த வார்த்தைகளுக்காகவே ராஜீவ்காந்தியையும் சேர்த்திருக்கவேண்டும். செத்துப்போவதால், சிலர் தப்பித்துவிடுகிறார்கள்.
இந்த படுகொலைகள் ஒரு அநியாயம் என்றால்… கடந்த 25 ஆண்டுகளில் இக்கொலைகளுக்கு கிடைத்த நீதி ஒரு பெரிய அநீதி. இதுவரை, சுமார் 2500 பேர் நேரடியாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். நானாவதி கமிசன் உட்பட 9 விசாரணை கமிசன் நியமிக்கப்பட்டிருக்கின்றன. கமிசன்கள் பக்கம் பக்கமாக நடந்த கொலைகளை விவரிக்கிறார்கள்.
“போலீஸ் குறித்த எந்த அச்சமும் இல்லாமல், இந்த குற்றங்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்கிற உறுதி கிடைத்தவர்களைப்போல (கொலைகாரர்கள்) செயல்பட்டனர்” என்கிறது நானாவதி கமிசன் அறிக்கை.
இந்த நிகழ்ச்சி எஸ்.எம்.எஸ்.ல் “சிதம்பரத்தின் மீது செருப்பு வீச்சு” என சுருக்கமாய் வந்த பொழுது, தமிழ்நாட்டில் தான் நடந்துவிட்டதோ என நினைத்தேன். பிறகு, செய்தி அறிந்தேன்.
இப்படியெல்லாம் தமிழ்நாட்டில் நடப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், ஓட்டுக்கட்சி தலைவர்கள் தமிழர்களை தீயிட்டு தற்கொலை செய்வதற்கு தான் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். புதிய போராட்டமுறைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஈழப்பிரச்சனையில் துரோகம் செய்யும் தமிழக ஓட்டுக்கட்சி தலைவர்களிடம் நாம் செய்துகாட்டவேண்டும்!
http://socratesjr2007.blogspot.com/2009/04/blog-post_08.html
சிதம்பரத்துக்கு போனை போட்டு, ‘இனி, கவனமாய் இருங்கள்’ என ஆறுதலாய் எச்சரிக்கிறார் கருணாநிதி.
கருணாநிதிக்கும் மற்ற தலைவர்களுக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்துகொண்டுதான் இருக்கும். நேற்று கூட வை.கோவை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் மானவர்கள். எல்லாம் மக்கள் கையில் தான் இருக்கிறது. மன்னிக்கவும். காலிலும் தான் இருக்கிறது.
Terrifc example of courage. Singh is King
செருப்புகள் காத்திருக்கின்றன……
என்ன செய்வது தெரியவில்லை
கலைஞருக்கோ எதுவும் புரியவில்லை
காண்பது கனவா இல்லை நனவா?
பசிக்கு போன் போட்டு
நிஜம்தானென புலம்புகிறார்
விசியும் சொல்கிறார்
“வருந்ததக்கது,கண்டிக்கத்தக்கது”……
ஈராக்கில் அடித்தார்கள்
பிரான்ஸில் அடித்தார்கள்
இந்தியாவிலும் அடிப்பார்களா?
பசிக்கு விழுந்த செருப்படியின்
வடுக்கள் கலைஞரிடத்தில் தெரிக்கிறது……
செருப்பாலடித்தும்
கலங்காமல் உட்கார்ந்திருந்தாராம்
பொறுமையினை
காத்தாராம் தீட்டுகிறது
தலையங்கம் தினமணி
செருப்புக்களின் தேவை முடிந்துவிடப்போவதில்லை……
பத்திரிக்கையாளர் கண்ணியத்தை
காற்றில் விட்டுவிட்டாராம்
மானத்தை விட்டு அடிமையாய்
நக்கிப்பிழைக்கும் கூட்டத்தில்
மனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்
நாங்கள் பெருமையாய் சொல்லுவோம்
கண்ணியத்தினை விட்ட மாவீரனென்று……..
யார் காலை யார் நக்குவது
நக்குவதற்கு போயஸ்தோட்டத்துக்கும்
கோபாலபுரத்துக்குமென
சிறுத்தையும் மாங்காயும்
புலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு
படையெடுக்க
ஈழத்திலோ
ரசாயன எரிகுண்டு
தமிழகத்திலோ
செயாவுக்கு பூச்செண்டு…..
“காங்கிரசை புறக்கணிபோம்”
காங்கிரசை புறக்கணித்து
இந்தியச்சாக்கடையில் விழச்சொல்கிறார்கள்
புறக்கணிக்கப்படவேண்டியது
காங்கிரசா இல்லை இந்தியமா?………..
செருப்புகள் காத்திருக்கின்றன
இப்போது தவறவிட்டால்
மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
பன்றிகளுக்கு செருப்புமழையை
பரிசாய்த்தருவோம் – பரிசோடு
கொசுறாக போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்.
கலகம்
http://kalagam.wordpress.com/
செருப்புகள் காத்திருக்கின்றன
என்ன செய்வது தெரியவில்லை
கலைஞருக்கோ எதுவும் புரியவில்லை
காண்பது கனவா இல்லை நனவா?
பசிக்கு போன் போட்டு
நிஜம்தானென புலம்புகிறார்
விசியும் சொல்கிறார்
“வருந்ததக்கது,கண்டிக்கத்தக்கது”……
ஈராக்கில் அடித்தார்கள்
பிரான்ஸில் அடித்தார்கள்
இந்தியாவிலும் அடிப்பார்களா?
பசிக்கு விழுந்த செருப்படியின்
வடுக்கள் கலைஞரிடத்தில் தெரிக்கிறது……
செருப்பாலடித்தும்
கலங்காமல் உட்கார்ந்திருந்தாராம்
பொறுமையினை
காத்தாராம் தீட்டுகிறது
தலையங்கம் தினமணி
செருப்புக்களின் தேவை முடிந்துவிடப்போவதில்லை……
பத்திரிக்கையாளர் கண்ணியத்தை
காற்றில் விட்டுவிட்டாராம்
மானத்தை விட்டு அடிமையாய்
நக்கிப்பிழைக்கும் கூட்டத்தில்
மனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்
நாங்கள் பெருமையாய் சொல்லுவோம்
கண்ணியத்தினை விட்ட மாவீரனென்று……..
யார் காலை யார் நக்குவது
நக்குவதற்கு போயஸ்தோட்டத்துக்கும்
கோபாலபுரத்துக்குமென
சிறுத்தையும் மாங்காயும்
புலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு
படையெடுக்க
ஈழத்திலோ
ரசாயன எரிகுண்டு
தமிழகத்திலோ
செயாவுக்கு பூச்செண்டு…..
“காங்கிரசை புறக்கணிபோம்”
காங்கிரசை புறக்கணித்து
இந்தியச்சாக்கடையில் விழச்சொல்கிறார்கள்
புறக்கணிக்கப்படவேண்டியது
காங்கிரசா இல்லை இந்தியமா?………..
செருப்புகள் காத்திருக்கின்றன
இப்போது தவறவிட்டால்
மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
பன்றிகளுக்கு செருப்புமழையை
பரிசாய்த்தருவோம் – பரிசோடு
கொசுறாக போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்
another 2 culprits ( criminals !!! ) missed in your report. ( reported in nanavathi commision to probe anti-sikh riots in 1984)
1. H.k.L. Bhaghat (died)
2.Kamal Nath (Alive)
கலகம் இங்க ஒரு சூப்பர் காமெடி ஓடுதே பாத்தீங்களா
http://pulithikkaadu.blogspot.com/2009/04/blog-post_08.html
சிதம்பரத்திற்கு விழுந்தது செருப்பு அடி அல்ல. செருப்பு எறி. எந்த சூடும், சொரைனயும் இல்லாத சிதம்பரத்தை செருப்பு எறி என்ன செய்து விடப் போகிறது? தன் காலடியில் இருக்கும் ( சிதம்பரத்தின் சொந்த தொகுதியான சிவகங்கை) மண்ணில் இருக்கும் கிராபைட வளத்தை எடுத்து அந்த மாவட்டத்தை செழிப்பாக்க வக்கற்ற சிதம்பரத்தை அந்த மண்ணின் மக்கள் பின்னஙகால் பிடறியில் பட செம்மையாக செ…செ…ப்பால் அடித்து விரட்ட வேண்டும். சீக்கியர்கள் எறிந்ததோடு நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் அடி விழுந்த இடம் என்பது தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்க வேண்டும். அது தான் தமிழர்களுக்கு அழகு.
நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க 🙂
தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.html
அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்…
http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html
இனியாவது ஈன இழிநிலை ‘கை’ கட்சியை மக்கள் கைவிடுவார்களா….
இதுவே அதன் சரிவிற்கும், பின்னர் அழிவிற்கும், ஆரம்பமாக இருக்குமா….
இல்லை வழக்கம்போல் மக்கள் மறந்து விடுவார்களா…..
இந்தியாவில், வருங்கால பிரதமர் கனவு காணும் பல தலைவர்களில் ஒருவரான மாய்வதி பத்திரிக்கையாளர் சந்திப்பை இருபது அடி தள்ளி வைத்தாராமே! கேள்விபட்டீர்களா!
சிதம்பரத்துக்கு நேர்ந்த அவமானத்தால் தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களுக்கெல்லாம், பாதுகாப்பு அதிகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.
நம்மலானா அட்வைஸ் : தேர்தல் பிரச்சாரத்திற்கு போகாமல், வீட்டிற்குள்ளேயே இருந்தால் யாரும் செருப்படி வாங்காமல் தப்பிக்கலாம்!
சென்னையில் ஒட்டப்பட்ட ம க இ கவின் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்து இருக்காங்களாம்.சாக்கடய மூடுங்கப்பா சனனாயக நாத்தம் தாங்கல…
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=6466
செருப்படி
செருப்பால் அடிப்பதால் நாளை செருப்புகள் தடை செய்யப்படலாம்
பிறகு பேனாவால் அடிப்பார்கள் பேனாவும் தடை செய்யப்படலாம்
பிறகு உடையை கழற்றி அடிப்பார்கள் உடைகளும் தடை செய்யப்படலாம்
பிறகு வாயால் எச்சிலை காறி துப்புவார்கள் எச்சிலை தடை?
வீரர்களின் ஆயுதங்களை தடை செய்ய முடியாது…
I don’t think this shoe hurling incident really perturbed Chitambaram or the Congress party. This is well understood by the fact that Chitambaram continued the press conference after the incident sitting cool and also the journalist was let off without being booked of any case. Moreover the journalist apoligised for his act in the evening. The impact was so light as it had just provided the breaking news for the news channels which they would long wait for any given day. The weightage which we try to mount on the incident could only explicit our desperation.
ஈராக்கில் மாவீரன் ஜெய்தி தொடங்கிவைத்தான், அதை இந்தியாவில் மறுபதிப்பு செய்தான் ஜார்னைல் சிங். நீங்கள்…..?
தோழமையுடன்
செங்கொடி
தேர்தல்
அடைத்து வைத்து
மூச்சு திணறி
வெளியே வந்த
காந்தி தாத்தாவின் முகத்தில்
மலர்ச்சி புன்னகை.
கரைவேட்டிகள்
விரைப்பாய்
சந்தோசமாய்
தெருக்களில் வலம் வருகின்றன
மண்டபங்களில்
மணக்க மணக்க
ஆடுகளும்
கோழிகளும்
உள்ளே தள்ளப்படுகின்றன.
தளர்ந்து கிடக்கிற
மக்களைப் பார்த்து
வெகுசீக்கிரத்தில் சிரிப்பாள்
லட்சுமி
யாருக்கும் கொள்கையுமில்லை!
வெங்காயமும் இல்லை!
வளரட்டும் ஜனநாயகம்(!)
வானம் தொடட்டும்
புதிய ஊழல்கள்!
பாவம் நாடு!